தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...!

| January 27, 2018 | |
அன்பிற்க்குரிய வில்சனுக்கும் நண்பர்களுக்கும் நலம் நலமறிய ஆவல்

நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் எழுத ஒரு அவசியம்

இத்தனை நாள் இங்கு வராமலிருப்பதற்க்கு காரணம் பணி. இப்பொழுது வந்ததற்க்கும் அதுவே காரணம்.

கடந்த மூன்று வருடங்களாக என்னுடைய வாழ்நாளில் கண்டிராத பணி சம்பந்தமாக பிசியோ பிசி .. 2015 ஜனவரி முதல் 2018 ஜனவரி வரையிலான  இந்த காலகட்டத்தில் பணி தொடர்பாக இரண்டு ஆண்டுகள் ஊட்டியில் இருந்த இரண்டு ரெசார்ட்கள் ரெனொவேசன் , கடைசி ஆண்டு முழுவதும் கேரளாவிலிருக்கும் சுல்தான் பத்தேரியில் பணி (வயநாடு) கடைசி ஒருவருடம் மிகவும் பிசி ஒருவருடத்தில் கிட்டத்தட்ட 61 அறைகள் கொண்ட ஒரு புதிய ரெசார்ட் அனைத்து வசதிகளுடனும் உருவாக்கி தற்பொழுது நல்ல முறையில்  இயக்கத்துக்கு வந்து நன்றாக இயங்கிக்கொண்டிருக்கிறது.
ரெசார்ட் பணிகள் 99% நிறைவடைந்ததும் அடுத்த ரெசார்ட் தொடங்கும் நாளை எண்ணிக்கொண்டிருந்த எங்கள் ப்ராஜக்ட் டீமிற்க்கு  நாங்கள் சார்ந்திருந்த கம்பெனியிடமிருந்து அதிர்ச்சி தகவல் . கம்பெனி இனி ப்ராஜக்ட் தொடங்குவதாக இல்லை அனைவரும் வேறு பணி தேடிக்கொள்ளுங்கள் பிப்ரவரி 2018 வரை டைம் தருகிறோம் என்று கூறிவிட்டனர். தற்சமயம் வேலை தேடுகிறேன் .

கன்ஸ்ட்ரக்சன் மற்றும் இண்ட்டீரியர் துறையில் 14 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்கிறது இதில் 10 ஆண்டுகள் எலக்ட்ரிகல் மட்டும், 4 ஆண்டுகள் MEP எனப்படும் மெக்கானிக்கல் எலக்ட்ரிக்கல் ப்ளம்பிங் எனும் கூட்டு எஞ்சினியரிங் துறை அனுபவம் ஆக 14 ஆண்டுகள் , இதில் 5 1/2 ஆண்டுகள் வெளிநாட்டு அனுபவம் இருக்கிறது . புதிய கன்ஸ்ட்ரக்சன் அல்லது ரெனோவேசன்  அ முதல் ஃ வரை அத்துப்படி. இருந்து என்ன செய்ய கடந்த இரண்டு மாதங்களாக உள்நாட்டு வேலை வாய்ப்பிற்க்காக ஜாப் வெப்சைட்கள், தெரிந்தவர்கள் மூலம் என அத்தனை முறையிலும் தேடி பார்த்தாகிவிட்டது தற்பொழுது வாங்கிக்கொண்டிருக்கும் சம்பளத்தைவிட குறைவான சம்பளம் தருகிறேன் என்கிறார்கள் இப்படி ஏற்கனவே குறைவான சம்பளத்திற்க்கு பணிசெய்து மனம் அவ்வப்பொழுது வெதும்பிக்கொண்டிருக்கும் இனியும் அதுபோல தவறு செய்ய மனம் ஒத்துக்கொள்ளவில்லை.


நீங்கள் கொடுக்கும் சம்பளத்தைவிட அதிக உழைப்பை கொடுப்பேன் ஆதலால் என் அனுபவத்திற்க்கும் தகுதிக்கும் ஏற்றவாறு ஊதியம் கொடுங்கள் என்றுதான் கேட்கிறேன் (ஏனென்றால் இந்த மூன்று ஆண்டுகள் நான் ஒவ்வொரு வேலை நாளிலும் கிட்டத்தட்ட நாள் ஒன்றிற்க்கு 14 மணிநேரம் வேலை பார்த்திருக்கிறேன் , இனியும் அதுபோலவே உழைக்க தயாராக இருக்கிறேன்) . உள்ளூரிலே பணி எதுவும் அமையவில்லை என்றால் வெளிநாடு செல்லலாம் என்று நினைக்கிறேன்

வெளிநாட்டிற்க்கு செல்லலாம் என்றால் இனியும் வளைகுடா நாடுகளுக்கு செல்ல விருப்பமில்லை ஆனால் ஏனைய மாலத்தீவு, மொரீசியஸ், சிங்கப்பூர் , ஆஸ்திரேலியா, UK போன்ற நல்ல ஊதியம் கிடைக்கும் நாடுகளுக்கு செல்ல விருப்பம் . ஆசைப்படுவது மனித இயல்புதானே நான் உழைக்கவும் ஆசைப்படுகிறேன் அதற்க்குரிய ஊதியம் பெறவும் ஆசைப்படுகிறேன்.

என்னுடைய விரிவான பணிபுரிந்த சுய விபரங்கள் இங்கு இணைத்திருக்கிறேன் நண்பர்கள் தங்களுக்கு தெரிந்த இடங்களில் ,  வேலை வாய்ப்பு இருந்தால் தெரியப்படுத்துங்கள். இது எனக்கு மிகவும் உதவியாக இருக்கும் ,

தொடர்பு எண் 9787647411 / 9791931307

நன்றி

வசந்தகுமார்...

கொசுறு செய்திகள்

இரண்டாவதாக மகன் பிறந்திருக்கிறான் தணிக் பிரகாஷ் என்று பெயர் சூட்டியுள்ளோம், மூத்தமகன் தாசபிரகாஷ் யூகேஜி படிக்கிறார், மனைவி அரசு மருத்துவமனயில் ஒப்பந்தமுறை செவிலியராக பணிபுரிகிறார். அப்பா அம்மா அனைவரும் மிக்க நலம் . நன்றாக சென்றுகொண்டிருக்கிறது வாழ்க்கை.நன்றி

ப்ரியமுடன் வசந்த்...


Post Comment

0 comments: