'மழலை’ பெய்கிறது

| June 5, 2016 | 0 comments |அன்று மாலை 
மழை பெய்து கொண்டிருந்தது
மகனை மழலைப் பள்ளியிலிருந்து
அழைத்து வரவேண்டும்
‘ரெண்டுபேரும் நனஞ்சுடாதீங்கய்யா’
என்றபடி அம்மா எடுத்துக்கொடுத்த
குடையின் உதவியில் இருவரும்
நனையாமல் வீடு வந்தோம்
வீட்டிற்க்கு வந்தபின்
வாசலில் நின்றுகொண்டு
மழையை வேடிக்கை பார்க்கிறான் மகன்
தெருவில் நாய்க்குட்டியொன்று
மழையில் நனைந்து கொண்டே
தலையை சிலிப்பியபடி சென்றுகொண்டிருக்கிறது
நாய்க்குட்டியை பார்த்தவாறே கேட்கிறான்
’’நாய்க்குட்டி வீட்டுல குடையில்லையாப்பா?’’

Post Comment