நீதானே என் பொன்வசந்தம் - விமர்சனம்

| December 14, 2012 | |
நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த படம் முக்கியமாக சமந்தாவுக்காகவேனும் பார்த்தே தீருவது என்று முதல் நாள் முதல் ஷோ பார்த்தாச்சு...பார்த்தாச்சு...

படம் எப்படிங்க இருந்துச்சு?

ஒன்னும் சொல்றதுக்கு இல்ல நல்ல வேளை டைரக்டர் கௌதம் இதுவரைக்கும் சொல்லாத கதை அப்படி இப்படின்னு எந்த பில்டப்பும் கொடுக்கலை அந்தளவுக்கு தப்பிச்சாண்டா சேகரு....சீ டைரக்டரு...

படத்தப்பத்தி சொல்லுங்கன்னா டைரக்டர் பத்தி சொல்றீங்களே??

யோவ் சொல்றேன்யா அதான் நெம்புகோல் தூக்கிட்டு வந்தாச்சு இல்ல நெம்பிடுவோம்.இந்த சமந்தாவும் ஜீவாவும் இஸ்கூல்ல இருந்தே பழகுறாங்கப்பா அப்பறம் பிரியுறாங்க இண்டர் காலேஜ் ஃபங்க்சன்ல திரும்பவும் சந்திக்கிறாங்க பழகறாங்க காதல் தொடருது ஜீவாவின் குடும்பத்துக்காக திரும்ப ஒரு பிரிவு அதுக்கப்பறம் சேர்றதுக்கு ஜீவா ட்ரை பண்றார் முடியலை, இதற்க்குப்பிறகு வேறொரு பொண்ணோட ஜீவாவுக்கு நிச்சயதார்த்தம் நடக்குது.கடைசியில சமந்தாவும் ஜீவாவும் சேர்ந்தாங்களா இல்லியா இதை எந்த ஒரு சுவாரஸ்யமும் இல்லாம ஒரு உணர்ச்சியே இல்லாம எடுத்துருக்கார்யா நம்ம டைரக்டரு....

ஜீவாவும் சமந்தாவும் ஏன் அடிக்கடி பிரியுறாங்க?

சமந்தாவும் ஜீவாவும் பிரியுறதுக்கு அவங்களும் அவங்க ஈகோவும்தான் ரீசன் வில்லன்களோ அப்பாக்களோ கிடையாது அந்தளவுக்கு சந்தோஷம் டைரக்டரே

அப்ப படம் தேறாதா?

பொதுவா காதல் படங்கள்ன்னா நம்மளுக்குள்ள ஒரு சந்தோஷத்தை ஏற்படுத்தணும் இல்லை உணர்ச்சிப்பெருக்கை ஏற்படுத்தணும் அட்லீஸ்ட் காதலை சின்ன சின்ன விஷயங்கள்ல அழகுபடுத்தி காட்டியிருக்கலாம் இதுல எதுவுமே இந்தப்படம் கொடுக்கலை...

ஜீவா சமந்தா எப்படி?

தன்னோட அதீத காதலை வெளிப்படுத்தும் பெண்ணாக சமந்தா கிரேட்டா பண்ணியிருக்காங்க..ஜீவாவும் சமந்தாவுக்கு ஈக்வலா பண்ணியிருக்கார்.
டைரக்டர் சொல்றமாதிரி ரெண்டு பேரும் நடிச்சிருக்காங்க சமந்தா ரொம்ப அழகா இருக்காங்க இவங்க ரெண்டுபேர் நடிப்பையுமே டைரக்டரு வீணடிச்சுருக்கார் தன்னோட சொதப்பலான திரைக்கதையால..சந்தானம்?

இரண்டு மூணு சீன்ல சிரிப்பை வரவழைக்கிறார் என்பதை தவிர சந்தானம் வேற எதையும் செய்யவில்லை...

இளையராஜா..

பின்னணி இசை கார்த்திக்ராஜா பண்ணியிருப்பார்ன்னு நினைக்கிறேன் ஏமாத்திட்டாங்க..பாடல்களில் என்னோடு வாவா மட்டுமே இன்னும் ரிப்பீட் ஆகிட்டே இருக்கு மனசுக்குள்...

படத்துல உங்களுக்கு பிடிச்ச விஷயங்களே இல்லியா?

இருக்கு சமந்தா, சமந்தாவோட கஸ்ட்யூம்ஸ் , ஜீவா,அந்த குண்டு பொண்ணு, சமந்தா வைத்திருக்கும் செல்போன் மாடலை வைத்து காலகட்டங்களை வேறுபடுத்தியிருக்கும் விதம்  இதை தவிர்த்து படத்தோட ஒளிப்பதிவு எடிட்டிங் எல்லாம் நல்லா பண்ணியிருக்காங்க
பிடிக்காத விஷயம்?

ஜீவாவோட காஸ்ட்யூம்ஸ், ஸ்க்ரீன்ப்ளே, கேஸ்டிங் செலக்சன், க்ளைமாக்ஸ்,   இன்னும் நிறைய இருக்கு...

படத்துக்கு போகலாமா வேண்டாமா?

ஃபீல் குட் மூவின்னு சொல்ல முடியாது விண்ணைத்தாண்டி வருவாயாவில் பத்து பர்சண்ட் கூட கிடையாது..அதுக்கப்பறம் உங்க இஷ்டம்..

இந்த படத்துக்கு என்னோட ரேட்டிங் 1.5/5Post Comment

6 comments:

Trackback by Prem S December 14, 2012 at 4:40 PM said...

என்ன இப்படி சொல்லி புட்டீக பாக்கலாம்னு நினைச்சேன் நல்ல விமர்சனம்

Trackback by ஸ்ரீராம். December 15, 2012 at 6:57 AM said...

சிடியில் கிடைத்தால் பார்க்கலாமா கூடாதா பாஸ்...

:))))))))))))))))))

Trackback by sajirathan December 15, 2012 at 9:52 AM said...

விமர்சனத்துக்கு நன்றி. அப்பிடியே எனது விமர்சனத்தையும் படியுங்கள் நண்பரே

http://sajirathan.blogspot.com/2012/12/blog-post.html

Trackback by 'பரிவை' சே.குமார் December 15, 2012 at 11:18 PM said...

போட்டுத்தாக்கிட்டீங்க...

Trackback by திண்டுக்கல் தனபாலன் March 30, 2013 at 7:29 AM said...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_30.html) சென்று பார்க்கவும்... நன்றி...

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்...

Trackback by இமா க்றிஸ் May 4, 2013 at 1:13 AM said...

படம் பார்க்குமுன்பே வசந்த் விமர்சனம் படிச்சு இருக்கணும் நான். :-)