துப்பாக்கி சர்ச்சை பற்றி...?

| November 23, 2012 | |


அனைவருக்கும் வணக்கம்.. சும்மா கிடந்த சங்க ஊதிக்கெடுத்தமாதிரி ஜோ என்கிட்ட பேட்டி எடுக்க நான் பேட்டி கொடுக்க நீங்க படிக்க படிச்சு முடிச்சதும் கல்லெடுக்கன்னு ஆயிப்போச்சு என் நெலம Lets Continue...


துப்பாக்கி,   சுந்தரபாண்டியன்  என இவ்விரு  திரைப்படங்களையும்  கைதட்டி ரசித்துப் பார்த்தேன்...

விகடனில் தொடராக வந்த , வாசிக்க தவறவிட்ட கவிப்பேரரசு வைரமுத்துவின்  மூன்றாம்  உலகப்போர் ஒரே தொகுப்பாக கிடைக்க வாசித்து முடித்துவிட்டேன்.. இன்னொன்று விகடன் தீபாவளிமலர் அதில் உலக சினிமாவோடு இந்திய சினிமாவை ஒப்பிட்டு வந்திருந்த கட்டுரையொன்று மிக அருமை...அத்தனை கட்டுரைகளும் மூளையை கிளர்ச்சியடைய வைக்கின்றன...அவ்வளவு பக்கங்கள் புத்தகத்தில் சினிமா சம்பந்தப்பட்ட கட்டுரைகள் இரண்டே இரண்டுதான் மொத்தத்தில் கொடுத்த பணத்துக்கு வொர்த்..
அழகிகள் என்று வைத்துக்கொள்வோமே.. ராதிகா ஆப்தே வெற்றிசெல்வன் புகைப்படங்களிலும், சமந்தா நீதானே என் பொன் வசந்தம் புகைப்படங்களிலும் அசரடிக்கிறார்கள்...Waiting for those movies..விகடனின் டைம்பாஸ்ஸில் தெரு ஓவியம் உதயமாகுது பகுதியில்வந்திருந்த ஓவியங்கள் அட போட  வைத்தன கூடவே போட்டோ  கமெண்ட்ஸ்ம்  கிச்சுகிச்சு மூட்டுகின்றன...
தற்பொழுது வாங்கியிருக்கும் ஹோண்டா  யுனிகார்ன் உடன்  தான் நிறைய நேரம் செலவழிக்கிறேன்...
அஜ்மல்  கசாப்புக்கு தூக்கு தண்டனை நிறைவேறியது ...
பணிக்கு சேர்ந்த கடந்த ஏழுமாதங்களாக கேப் விடாமல் கெடா வெட்டினார்கள் கிடைக்கிற கேப்புல  எல்லாம் பின்னி பெடலடுத்துவிட்டனர்  இன்னும் சில நாட்கள் இருந்திருந்தால் கடும்  மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பேன் விளைவு ரிசைனேஷன்.  வரப்போகிற புது உறவுக்காக  வெயிட்டிங் என நிம்மதியாக மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

தொலைக்காட்சி சீரியல் டைரக்டர்களை [கில்லர்களை]
பேரரசு டைரக்ட் செய்து  எழுதியிருக்கும் திருத்தணி திரைப்படத்தில் வரும் யம்மா  யம்மா நீ ஒத்துகிறீயா என்ற பாடலில் வாழ்க்கை என்பது மேடு பள்ளம் நிறைஞ்சது என்றால் நீதானடி என் வாழ்க்கை என்ற வரிகள் பேருந்து நிலையங்களில் புறப்பட தயாராகும் பேருந்தின் ஜன்னல் ஓரத்திலிருந்து நடந்து செல்பவர்களின் மீது எச்சில் துப்புபவர்களை...


அகலமற்ற  சாலைகளின் ஓரங்களில் லாரி முதலான கனரக  வாகனங்களை நிறுத்திவிட்டு துங்கும் ஓட்டுனர்களை...

வண்டி நிறைய  மணல் ஏற்றிவிட்டு அதை மூடாமல் பல விபத்துகளுக்கு காரணமான ஓட்டுனர்களை

வயிறு முட்ட குடித்துவிட்டு சாலை ஓரங்களில் விழுந்துகிடக்கும் குடிமகன்களை... 

இன்னும் நிறையபேரை...தேனி பைபாஸ் ரோட்டில் டூவீலரில் விர்ரென்று பறப்பது அலாதியான சுகம் ஆனால் அங்கு சுற்றித்திரியும் பட்டாம்பூச்சிகளும் அதே வேகத்தில்  வந்து வண்டியில் மோதி விழுவது வருத்தத்தை தருகிறது...என்ன செய்வது ரூட்ட மாத்து....
கூகுள் கூகுள் பண்ணிப்பார்த்தேன்...

 விஜய் தொலைக்காட்சியில் வரும் கோலிவுட் கிங் திரைப்படங்கள் சம்மந்தப்பட்ட நிறைய விஷயங்கள் தெரிந்துகொள்ள முடிகிறது தொகுத்து வழங்கும் வெங்கட் பிரபுவை மாற்றிவிட்டு பிஆர்ஓக்களாக பணிபுரிபவர்களை போட்டால் இன்னும் நிறைய சுவாரஸ்ய  விஷயங்களை  தெரிந்து கொள்ள முடியும் - வெங்கட் பிரபுவின் தொகுப்பு ஒரே சுய பரம்பரை  விளம்பரமாக இருக்கிறது...Post Comment

8 comments:

Trackback by சாந்தி மாரியப்பன் November 23, 2012 at 3:26 PM said...

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்து கலக்கிட்டீங்க வசந்த்.

புது வரவுக்கும் வாழ்த்துகள். ஜோ திறமையான நிருபர்தான் :-))))

Anonymous — November 23, 2012 at 4:53 PM said...

Venkat Prabu vim suya vilambaramum Mankatha Padam patri perumai pesuvathaiyum, Ajith Puranam paduvathaiyume panni kondu irukkirar..

Trackback by வெளங்காதவன்™ November 23, 2012 at 4:53 PM said...

//புது வரவுக்கும் வாழ்த்துகள்.///

டேய் மச்சீ.... சொல்லவே இல்ல?

Trackback by திண்டுக்கல் தனபாலன் November 23, 2012 at 5:44 PM said...

ஓவியங்களும், பாடல் வரியும் மிகவும் பிடித்தது...

வாழ்த்துக்கள்...
tm2

Trackback by 'பரிவை' சே.குமார் November 23, 2012 at 7:17 PM said...

கலக்கல் வசந்த்...

Trackback by Zero to Infinity November 23, 2012 at 10:15 PM said...

Welcome Back!

Trackback by ஸ்ரீராம். November 24, 2012 at 5:06 AM said...

விட்டுப் போன கேள்வி..... இணையப் பக்கம் மறுபடி வரவைத்தது எது?!!

சுகமா வசந்த்?

Trackback by மாலதி December 1, 2012 at 1:15 PM said...

ஓவியங்களும், பாடல் வரியும்கலக்கல்