தாழம்பூ

| April 2, 2012 | 24 comments |
திருமணம் 

கடந்த மாதம் நடந்த என்னுடைய திருமணம் சொந்தபந்தங்கள் , நண்பர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. பதிவுலகின் எஸ்ரா என்றழைக்கப்படும் நண்பர் கார்த்திகைபாண்டியன் நேரில் வந்திருந்து வாழ்த்தினார். ஏனைய நண்பர்கள் தொலைபேசியிலும் மெயிலிலும் முகப்புத்தகத்திலும் வாழ்த்தினார்கள் . தோழி ரேவதி தன் வலையில் பதிவொன்றிட்டு தன் அன்பினை வெளிப்படுத்தினார். அவருக்கும் வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மேலும் தேனி மற்றும் ஆண்டிபட்டி இன்ஸ்பெக்டர்கள் , தேனி டி எஸ் பி , ஆண்டிபட்டி டி எஸ் பி , கோவில்பட்டி டி எஸ் பி மற்றும் ஏராளமான காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு திருமணத்தை சிறப்பித்தனர் . மேலும் கவிஞர் ஞானபாரதி அவர்களும் கலந்து கொண்டு திருமணத்தை சிறப்பித்தார்.மாங்கல்யம் தந்துனானே.... 

என்னுடைய நட்புகள்....


கார்த்திகேய பாண்டியனுடன்..
அப்பா மற்றும் உறவினர்கள் எவ்வளவோ சொல்லியும் திருமணத்திற்க்கு கோட் சூட் அணிந்து கொள்ளவில்லை ..எனக்கு பட்டுவேஷ்டி பட்டுசட்டை அணிந்திருப்பதே பிடித்திருந்தது...


திருமணம் முடிந்து வேறொரு நாள் வைகை அணைக்கு சென்றிருந்த பொழுது எடுத்த புகைப்படம்..


ஜோவின் கலைத்திறன்...

நான் சொல்லித்தருகிறேன் கவிதை எழுதிப்பழகு என்றேன் ஒருமுறை, இன்னொருமுறை இல்லை இல்லை நீயே என் மீதான காதலில் கவிதை எழுதிவிடுவாய் என்றேன் இரண்டையும் வைத்து கார்ட்டூன் ஒன்று வரைந்திருக்கிறாள்


என்னை மாதிரி வரைந்தாளாம் அவ்வ்...


முதன்முறை அவளைப்பார்க்க அவள் ஊருக்கு சென்றபொழுது கிளியூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற வாசகத்துடன் கூடிய அவளே செய்த பொக்கேவை கொடுத்தாள்.. கிளியூர்ன்னா என்னாவாம்?கிளியூர் படிச்சீங்கன்னா புரியும்..


திருமணத்திற்க்கு பிறகொரு நாள் நான் தூங்கி கொண்டிருந்த பொழுது என் கையில் POOH கார்ட்டூனை வரைந்திருக்கிறாள். உடலிலும் முகத்திலும் ஓவியம் வரையும் கலையும் கற்றிருக்கிறாள்.இந்த கார்ட்டூனை பற்றி தெரியாதவர்கள் இந்த பதிவை படித்திடலாம்... என்ன பார்க்குறீங்க? ஆமா ஆமா பெட் கவர்லயும் அந்த கார்ட்டூன்தான் அவ்வ்வ் ...


திருமணத்திற்க்கு முதல்நாள் ஃபேசியல் பண்ணும்போது எடுத்தது த்ருஷ்டிக்கு ஹிஹிஹி...பயந்துடாதீக...ப்ரியமுடன் வசந்த்..


Post Comment