இரத்தத்தின் இரத்தமே... இனிய உடன் பிறப்பே..!

| October 17, 2011 | |
யாவரும் நலம் சுசி சாதாரணமா பிளாக்ல கமெண்ட் போட்டுதான் அறிமுகமானாங்க...ஆரம்பத்தில இருந்து இப்போ வரையிலும் ஒரே மாதிரி அதே சகோதர பாசத்தோட பழகுறவங்க, இவங்களுக்கு நிறைய ஃப்ரண்ட்ஸ் இருக்காங்க அதுல நானும் ஒருத்தன் அப்படின்றதில பெருமையெனக்கு பின்ன நார்வேல எனக்கு ஒரு அக்கா இருக்காங்க அப்படின்னு எல்லார்கிட்டயும் காலர் தூக்கிவிட்டு பெருமையடிச்சுகிடலாம் இல்லையா?...!

இவங்ககிட்ட பிடிச்சது என்னன்னா? என்னைப்போலவே எந்த ஒரு விஷயமானாலும் அது சந்தேகமா இருந்தாலும் சண்டையா இருந்தாலும், பிளாக் பற்றிய விஷயமானாலும் மெயில்லயோ சாட்லயோ ஸ்ட்ரெயிட்டா கேட்டிடுவாங்க..என்னோட பல மொக்கைகளை சூப்பர்ன்னு நிறைய தடவை சொல்லி பலரோட வயித்தெரிச்சலை வாங்கிக்கட்டிக்கிட்டவங்க...!இது வரைக்கும் இவங்களுக்கு பொறாமையோ இல்லை கோவமோ வந்து பார்த்ததில்லை. என்னோட பிளாக்குக்கு கமெண்ட் போட்டா உன் பிளாக்குக்கு கமெண்ட் போடுவேன் அப்படின்ற உள்குத்து வேலையெல்லாம் இவங்களுக்கு தெரியாது பிடிச்சுருந்தா கமெண்ட் போடுவாங்க...!

என்னோட மொக்கைகள், கவிதைகள், சில கிரியேட்டிவ் பதிவுகளின் வளர்ச்சியில இவங்களுக்கும் பங்கிருக்கு..( ஓ இவங்களைத்தான் தேடிட்டு இருக்கோம் அப்படின்னு யாரும் அட்ரஸ் கேட்டு ஆட்டோ பிடிச்சு போய்டாதீங்க பாவம் எனக்காக அவங்கள மன்னிச்சு விட்டுடுங்க ப்ளீஸ்).. முக்கியமா ஒரு விஷயம் கர்ப்ப கால காதல் அப்படின்ற ஒரு போஸ்ட் படிச்சுட்டு அதுபத்தி என்கிட்ட அவங்க கேட்டது தம்பி இவ்ளோ நாளா ஒன்னா மண்ணா பழகிட்டு கல்யாணம் ஆனதை என்கிட்ட சொல்லவேயில்ல பாரு அப்படின்னு ஒரு கேள்விய கேட்டு என்னை ஒரு வழி பண்ணிட்டாங்க அப்பவும் இப்பவும் நான் சொல்றது ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு கற்பனை அப்படின்ற விஷயம் .. அதுக்கப்பறம் அதுபத்தியெல்லாம் கேட்கமாட்டாங்க..

எனக்கு தெரிஞ்சு என்னைபத்தி எல்லா விஷயமும் இவங்களுக்கு தெரியும் அவங்களைப்பத்தி அவங்க பிளாக் வச்சே கண்டுகினலாம் அவ்ளோ அழகா ஒரு குடும்பத்தில நடக்குற விஷயங்களை சுவாரஸ்யமா எழுதுவாங்க , பதிவுகளுக்கு இவங்க வைக்கிற தலைப்புகளும், லேபில்களும் ரசனையா இருக்கும் கமெண்ட்ஸ் மத்தவங்களுக்கு போடறதும் சரியா இருக்கும் யாரோட மனசும் புண்படாம வாழ்த்தா இருந்தாலும் பாராட்டா இருந்தாலும் அள்ளி அள்ளி கொடுக்குற மனசு..(அக்கா மறக்காம நார்வேல என் பேர்ல ரெண்டு கிரவுண்ட் எழுதி வச்சிடணும் நீங்க சொன்ன மாதிரியே எழுதிட்டேன்)

பிளாக் நண்பர்கள் அப்படின்னா என்னை பொருத்தவரைக்கும் எல்லார்கிட்டயும் சொல்றது ரயில் சிநேகம் அப்படின்னுதான் ஆனா இவங்க மட்டும் என்னோட லைஃப் ஃபுல்லா சிநேகமா பாசமா இருக்கணும்ன்னு விரும்பறேன் நாளைக்கே ச்சே இன்னிக்கே அக்கா மெயிலுக்கு என்னைப்பத்தி இவன் ரொம்ப மோசமானவன் இவன்கிட்ட உனக்கென்ன பழக்கம் வேண்டியிருக்கு அப்படின்னு தப்பா பெட்டிஷன் ரிப்பீட் பண்றவங்க நோட் பண்ணிக்கங்க..நீங்க என்ன சொன்னாலும் என்னை உபி என்று அழைப்பதை அவங்க யாருக்காகவும் எதுக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டாங்க..

இன்னிக்கு அக்காவுக்கு பிறந்தநாள் ரொம்ப நாளைக்கு மாமா குணாவோடயும் குழந்தைகள் சதுர்ஜன்,அம்முவோடு பல்லாண்டு காலம் தீர்க்காயுசாக சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று பிறந்தநாள் வாழ்த்துகள் கூறி ஆசிகளையும் வாங்கிக்கொள்கிறேன்.. Many More Happy Returns Of The Day..!இவர்கள் விஜயின் தீவிர ரசிகை..!Post Comment

10 comments:

Trackback by Unknown October 17, 2011 at 4:34 AM said...

சுசி அக்காவுக்கு
என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களும்

Trackback by Unknown October 17, 2011 at 4:35 AM said...

மாமாவோடும்
குழந்தைகளோடும்
எந்நாளும்
நலம் வாழ என் வாழ்த்துக்கள்
வாழ்த்து சொன்ன வசந்துக்கும் வாழ்த்துக்கள்

Trackback by நீச்சல்காரன் October 17, 2011 at 6:24 AM said...

அக்காவுக்கு இனிய பிறந்த நாள்
──────────────────╫─────────╫───────────────────────────────╫──────
───────────────────────────────────────────────────────────────────
──╫╫────╫─╫╫╫╫──╫───╫╫────╫╫╫╫╫─────╫╫╫╫╫───╫───╫╫╫╫╫────╫╫╫──╫╫╫╫─
─╫──╫───╫─╫─╫───╫──╫──╫───╫──╫──────╫──╫────╫───╫──╫────╫╫──╫╫──╫──
╫─╫──╫──╫─╫─╫───╫──╫──╫──╫╫╫╫╫╫╫───╫╫╫╫╫╫╫──╫─╫╫╫╫╫╫╫╫──╫─╫──╫──╫──
╫─╫──╫──╫─╫─╫───╫──╫──╫─╫────╫──╫─╫────╫──╫─╫─╫────╫──╫─╫─╫──╫──╫──
─╫──╫╫╫╫╫─╫─╫───╫╫╫╫╫╫╫──╫╫╫╫───╫──╫╫╫╫───╫─╫──╫╫╫╫──╫──╫╫───╫──╫──
───────────────╫───╫──────────╫╫────╫╫╫╫╫╫╫╫╫──────────────────────
────────────────╫╫╫╫╫╫───────╫────────╫╫╫╫─────────────────────────

Trackback by சாந்தி மாரியப்பன் October 17, 2011 at 8:54 AM said...

யாவரும் நலமாக இருக்க வாழ்த்தும் சுசிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் :-)

Trackback by 'பரிவை' சே.குமார் October 17, 2011 at 9:33 AM said...

//அக்காவுக்கு பிறந்தநாள் ரொம்ப நாளைக்கு மாமா குணாவோடயும் குழந்தைகள் சதுர்ஜன்,அம்முவோடு பல்லாண்டு காலம் தீர்க்காயுசாக சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று பிறந்தநாள் வாழ்த்துகள் கூறி ஆசிகளையும் வாங்கிக்கொள்கிறேன்.. Many More Happy Returns Of The Day..!//

நானும் இதையே சொல்லிக் கொள்கிறேன். அக்கா நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.

Trackback by சுசி October 17, 2011 at 4:37 PM said...

உ பி.. ரொம்ம்ம்மம்ம்ப நன்றிப்பா.. மனசே சரியா இல்லை.. முதல் தடவையா என் பிறந்தநாள் எனக்கு பிடிக்கலை :(((( மாம்ஸ் ஃப்ரெண்டுக்கு அடிபட்டு ஹாஸ்பிடல்ல இருக்கார்.. பஸ்ல சொல்லி இருக்கேன்.. பாருங்க.. ஆபீஸ்ல இருந்து எல்லாருக்கும் ஹாஸ்பிடல் போய் பாத்த அவரோட நிலமைய சொல்லி சொல்லி இன்னம் வலி கூடிட்டே இருக்கு.. திடீர்னு உங்க வாழ்த்து வந்திருக்குமேனு நினைவு வந்து இங்க வந்தேன்.. தலைப்பை படிச்சே கண் குளமா போச்சு பா.. இந்த பாடல் கேட்ட அன்னிலேர்ந்து உங்க பர்த்டேக்குன்னு தனியா வச்சிருந்தேன்.. நீங்க முந்திட்டிங்க :))

எங்க நண்பனுக்காக வேண்டிக்கோங்க உ பி.. நீங்க எழுதி இருக்கிறதெல்லாம் அப்டியே நினைவுப் பெட்டகத்தில சேமிச்சு வச்சிட்டேன்.. இப்போ நான் இருக்கிற மனநிலைக்கு ரொம்ப ஆறுதலாவும் இருக்கு.. ரொம்ப நன்றி.. எங்க ஆசீர்வாதமும் அன்பும் எப்போதும் உங்களுக்கும் ஜோவுக்கும் இருக்கும் :))

வாழ்த்திய சிவா, நீச்சல்காரன், அமைதிச்சாரல் & குமாருக்கும் நன்றிகள் :)

Trackback by சுசி October 17, 2011 at 4:50 PM said...

உ பி.. லேபல்.. வார்த்தை வரல.. :))))))))))))))))))))))))))))))))))))))))))

Trackback by கோபிநாத் October 17, 2011 at 10:23 PM said...

அழகான பிறந்த நாள் பதிவு வசந்த் ;-)

உங்களுக்கும் அக்காவுக்கும் வாழ்த்துக்கள் ;-)

\\\குடும்பத்தில நடக்குற விஷயங்களை சுவாரஸ்யமா எழுதுவாங்க , பதிவுகளுக்கு இவங்க வைக்கிற தலைப்புகளும், லேபில்களும் ரசனையா இருக்கும் கமெண்ட்ஸ் மத்தவங்களுக்கு போடறதும் சரியா இருக்கும் யாரோட மனசும் புண்படாம வாழ்த்தா இருந்தாலும் பாராட்டா இருந்தாலும் அள்ளி அள்ளி கொடுக்குற மனசு.\\\

வழிமொழிகிறேன் ;-)

Trackback by திவ்யாஹரி October 17, 2011 at 11:19 PM said...

"பிளாக் நண்பர்கள் அப்படின்னா என்னை பொருத்தவரைக்கும் எல்லார்கிட்டயும் சொல்றது ரயில் சிநேகம் அப்படின்னுதான் ஆனா இவங்க மட்டும் என்னோட லைஃப் ஃபுல்லா சிநேகமா பாசமா இருக்கணும்ன்னு விரும்பறேன்"

"உ.பி"-ன்னு சொன்னா தான் உடன் பிறப்பா நினைப்பிங்களா? அந்த ஒரு வார்த்தையை சொல்லாமலே நான் உங்ககிட்ட அப்டி நெனச்சி தான் பேசுனேன் வசந்த்..

அவங்க பதிவுகள் சில இப்போ தான் படிச்சு பார்த்தேன்.. ரொம்ப நல்லா எழுதியிருக்காங்க.. சுசி அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

Trackback by Thenammai Lakshmanan October 18, 2011 at 1:27 PM said...

சுசீக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்களும். நன்றி வசந்த் பகிர்வுக்கு:)