பேசுகிறேன்...

| October 10, 2011 | |
குடும்பம்


வீட்டில் பெண் பார்த்து நிச்சயம் செய்தபிறகு நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் அம்மா அப்டேட் செய்துகொண்டே இருக்கிறார்கள்..கேட்க கேட்க ஒருபுறம் மிக அதிக மகிழ்ச்சியாக இருந்தாலும் அந்த நிகழ்வுகள் அனைத்தையும் அருகிலிருந்து பார்ப்பதற்க்கோ கேட்பதற்க்கோ தவறுவதை நினைத்து மறு புறம் வருத்தமாகவே இருக்கிறது..ஆனாலும் திருமண நிகழ்வையொட்டி உறவினர்கள் மற்றும் நண்பர்களின் கிண்டல்களுக்கும் கேலிகளுக்கும் குறைவில்லை..!


அம்மாவும் அப்பாவும் இத்திருமணத்தினால் அதிக மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள் என்பது மட்டும் அவர்கள் தங்களுக்குள் செய்துகொள்ளும் கிண்டல் கேலிகளை என்னிடம் பகிர்ந்துகொள்ளும் தொணியிலே தெரிந்துவிட்டது..ஆனால் இருவருக்கும் திருமணத்திற்க்கு பிறகு நான் அவர்களை விட்டு பிரிந்துவிடுவேனோ என்ற பயமும் வந்திருப்பது அவர்களின் பேச்சில் அப்பட்டமாக தெரிகிறது..நான் அப்படியெல்லாம் உங்களை விட்டு போக மாட்டேன் என்பது போன்ற மறைமுக உத்திரவாதம் அளிக்கும்பொழுதுதான் ஓரளவு மனதிருப்தியடைகிறார்கள்..! நானிருக்க பயமேன்?


மிஸஸ்..வசந்த்


இவங்களைப்பற்றி என்ன கூறுவது ? சின்ன சின்ன கவிதைகளும் கதைகளும் கூறும்பொழுது சிரிப்பார், சில சமயம் நான் சொன்ன எளிய கவிதைகளுக்கு இரண்டு மணி நேர விளக்கம் கொடுக்க வேண்டியிருக்கிறது..ஆரம்பத்தில் பேசுவதற்க்கு மிகவும் கூச்சப்பட்டவர்கள் நாளாக நாளாக பேசுவதில் அதிக ஈடுபாடு காட்ட ஆரம்பித்திருக்கிறார்,விளைவு சென்ற மாத சம்பளத்தில் பாதி தொலைபேசி பில் தின்று தீர்த்துவிட்டது, ஒன்றைப்பெற மற்றொன்றை இழக்கத்தானே வேண்டும் ஆதலால் அதுபற்றியெல்லாம் இப்பொழுது கவலையில்லை என்னை பொறுத்தமட்டிலும் என் அளவுக்கு சரிசமமாக பேசவோ என்னை கிண்டல் செய்யும் அளவிற்க்கோ கொண்டுவந்துவிட்டு விடவேண்டும் அவ்வளவுதான்.. கிட்டத்தட்ட பேச ஆரம்பித்து ஒருமாத காலம் ஆகியிருக்கும் நிலையில் ஒரு கவிதை ஒன்று எழுதியிருக்கிறார்கள்..


''இதயம் துடிப்பதற்க்கு மறக்கலாம்
ஞாபகங்கள் மனதிலிருந்து விலகலாம்
பாலைவனம் கூட நதியாக மாறலாம்
உன் முகம் என் கண் முன் தோன்றும்போது வரும்
புன்னகையை எதனாலும் தடுக்க முடியவில்லை..!'' - ஜோ

இதுதான் அவர்கள் எனக்கு எழுதிய முதல் கவிதை.. கவிஞி இருக்க பயமேன்?


வேலை


திருமணம் பேசுவதற்க்கு முன்பே எடுத்த முடிவுதான் , திருமணத்திற்க்கு பின்பு இந்தியாவில்தான் பணிபுரியவேண்டுமென்று ஆதலால்  பணியை ராஜினாமா செய்ய இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில் நான்கு வருடங்களாக என்னிடம் பணிபுரிந்த தொழிலாளர்களிடம் இதுவரை காட்டிவந்த அந்நியோன்யத்தை குறைக்க ஆரம்பித்திருக்கிறேன்,ஏனென்றால் அவர்களைவிட்டு பிரியும்பொழுது என்னால் அவர்களோ ,அவர்களால் நானோ வருத்தமடைந்துவிடக்கூடாது என்பதனால் சிறிது விலகியே இருக்கிறேன்...அதற்க்கு முன் இங்கு இதுவரை வாங்கிய நற்பெயரால் என்னுடைய ராஜினாமாவை நூறுசதவீதம் ஏற்கமாட்டார்கள் கிட்டதட்ட நான்கைந்து மேலதிகாரிகளை பேசி சம்மதிக்கவைக்க வேண்டும் அவர்களை எப்படியெல்லாம் சொல்லி சம்மதிக்க வைப்பது என்பதில்தான் இப்பொழுது ஒரே சிந்தனையாய் இருக்கிறது. திருமண நாள் குறித்து திருமண மஹால் முன்பதிவு செய்தாகிவிட்டது பிரச்சினை எதுவும் இல்லாமல் அவர்கள் என்னை பணியிலிருந்து விடுவிக்க வேண்டும் இறைவா என்பதும் தின வேண்டுதலாகிவிட்டது.திருமணத்திற்க்கு பின்பு இந்தியாவில் பணிபுரிய வேண்டும் என்பதால் இந்தியாவில் இருக்கும் நல்ல கம்பெனிகளுக்கு விண்ணப்பங்கள் அளித்து காத்திருக்கிறேன் பார்க்கலாம்..திறமையிருக்க பயமேன்..?


உடல் நிலை..


இப்பொழுதெல்லாம் இரண்டு மூன்று மணி நேரம் கணிணியை பார்த்தாலே கண் சிவந்து தூக்கம் வந்துவிடுகிறது அல்லது கண் எரிய ஆரம்பித்துவிடுகிறது கணிணியை ஆன் பண்ணியபடி ஷட்டவுன் செய்யாமலே தூங்கிவிடுகிறேன்..முடிந்தவரையில் கணிணியை தவிர்க்க முயற்சித்துவருகிறேன் ஊருக்கு சென்றுதான் நல்ல கண் மருத்துவரை கலந்தாலோசித்து கண்ணை காக்கவேண்டும்..


காதிலோ மூக்கிலோ மயிருள்ளவர்களை பார்த்தால் எனக்கு ஒருவிதமான முகச்சுளிப்பு ஏற்படும் இப்பொழுது எனக்கும் காதில் நீண்ட மயிர் முளைக்க ஆரம்பித்திருக்கிறது எது நமக்கு வேண்டாமென்று விலகுகிறோமோ அதுதான் நம்மை ப்ரியத்துடன் ஆட்கொள்கிறது என்ன செய்ய? கத்தரிக்கோல் இருக்க பயமேன்? கட் த மயிர்..மயிரைப்போலவே பொறாமையோ காழ்ப்புணர்ச்சியோ உள்ள நட்புகளையும், உறவுகளையும் வெட்டிவிட புதுவித கத்தரிக்கோல் இருந்தால் தேவலாம்..!
சுபம்..!Post Comment

46 comments:

Trackback by Unknown October 11, 2011 at 2:29 AM said...

மாப்ள வாழ்த்துக்கள்...நம்பிக்கை இருக்க பயமேன்!

Trackback by ஸ்ரீராம். October 11, 2011 at 4:18 AM said...

வாழ்த்துகள் வசந்த்.

Trackback by Unknown October 11, 2011 at 4:47 AM said...

விரைவில் கண் மருத்துவரப் பாருங்கள். தாமதப்படுத்த வேண்டாம்.

Trackback by ♔ℜockzs ℜajesℌ♔™ October 11, 2011 at 5:44 AM said...

வாழ்த்துக்கள் வசந்த் , திருமணம் நிச்சியம் ஆனா பிறகு திருமணம் செய்தது கொள்ளும் பெண்ணுடன் பேசுவது மிகவும் சுவாரசியமானது . கண்டிப்பாக எந்த சுவாரசியதையும் விடாது முழுமையாக என்ஜாய் பண்ணுங்க .
உங்கள் திருமணத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் . .
நல்லபடியாக எந்த தடங்களும் இல்லாது உங்கள் திருமணத்திற்கு இந்தியா வர இறைவனை பிராத்திக்கிறேன் . .

Trackback by இந்திரா October 11, 2011 at 9:08 AM said...

வலையுலக காதல் மன்னருக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..

Trackback by இவன் சிவன் October 11, 2011 at 9:27 AM said...

வாழ்த்துக்கள் வசந்த்...

Trackback by 'பரிவை' சே.குமார் October 11, 2011 at 10:20 AM said...

வாழ்த்துக்கள் வசந்த்...

கண்ணுக்கு முதலில் மருத்துவம் பாருங்கள். தினமும் குளிக்கும் முன் சுத்தமான நீருக்குள் கண்ணை முழித்துப் பாருங்கள். எதாவது தூசு. அயர்ச்சி இருந்தால் கிளியராகும்.

Trackback by Unknown October 11, 2011 at 11:28 AM said...

வாழ்த்துக்கள். நண்பா

Trackback by ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) October 11, 2011 at 11:44 AM said...

வாழ்த்துக்கள் மச்சி

Trackback by அமுதா கிருஷ்ணா October 11, 2011 at 12:39 PM said...

வாழ்த்துக்கள் ...

Trackback by பாவா ஷரீப் October 11, 2011 at 1:53 PM said...

mapla vasanth

un manasukku nee nalla irupada

enjoy machan

Trackback by சுசி October 11, 2011 at 3:16 PM said...

எங்க வீட்டுக் கல்யாணம் போல அவ்ளோ சந்தோஷமா இருக்கு உ பி. பிள்ளையார் அருளால எல்லாம் நல்லபடியா நடக்கும்பா.

கவிதாயினி கலக்கறாங்க.. சீக்கிரமே ப்ளாக் ஒண்ணு தொடங்கிடுங்க..

அம்மா அப்பாவுக்கும் எங்க அன்பை சொல்லிடுங்க.

Trackback by Menaga Sathia October 11, 2011 at 3:27 PM said...

ஆஹா வசந்த் வாழ்த்துக்கள்!! எப்போ கல்யாணம்?? மிஸஸ் வசந்த் பெயர் என்ன??

Trackback by செ.சரவணக்குமார் October 11, 2011 at 5:21 PM said...

மிக்க மகிழ்ச்சி. மனமார்ந்த வாழ்த்துகள் வசந்த்.

இன்விடேஷன் கொடுப்பீங்கள்ள?

Trackback by middleclassmadhavi October 11, 2011 at 6:25 PM said...

வாழ்த்துக்கள்!

Trackback by Priya October 11, 2011 at 9:08 PM said...

வாழ்த்துக்கள் வசந்த்...:-)

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 11, 2011 at 10:14 PM said...

//விக்கியுலகம் said...
மாப்ள வாழ்த்துக்கள்...நம்பிக்கை இருக்க பயமேன்!//

நிச்சயம் நம்பிக்கைதானே வாழ்க்கை நன்றி மாம்ஸ் :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 11, 2011 at 10:16 PM said...

//ஸ்ரீராம். said...
வாழ்த்துகள் வசந்த்.//

நன்றி ஸ்ரீராம் எங்கள் பிளாக் சார்பில் ரெப்ரெசெடிவா வருவது போல் மேரேஜுக்கும் நீங்கள் மட்டும் வந்தால் மத்தவங்களை சாமி கண்ணைக்குத்திடும் முக்கியமா அட்டென்சன் கௌதமன் சார் வந்தே ஆவணும்ன்னு சொல்லிடுங்க ஹ ஹ ஹா :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 11, 2011 at 10:16 PM said...

//கலாநேசன் said...
விரைவில் கண் மருத்துவரப் பாருங்கள். தாமதப்படுத்த வேண்டாம்.//

ஸ்யூர் கலா நேசன் நன்றி பாஸ் :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 11, 2011 at 10:17 PM said...

// ♔ℜockzs ℜajesℌ♔™ said...
வாழ்த்துக்கள் வசந்த் , திருமணம் நிச்சியம் ஆனா பிறகு திருமணம் செய்தது கொள்ளும் பெண்ணுடன் பேசுவது மிகவும் சுவாரசியமானது . கண்டிப்பாக எந்த சுவாரசியதையும் விடாது முழுமையாக என்ஜாய் பண்ணுங்க .
உங்கள் திருமணத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் . .
நல்லபடியாக எந்த தடங்களும் இல்லாது உங்கள் திருமணத்திற்கு இந்தியா வர இறைவனை பிராத்திக்கிறேன் . .//

வாழ்த்துகள் மனமகிழ்வை தந்ததென்றால் பிரார்த்தனை நெகிழ்வை தருகிறது ராஜேஸ் மிக்க நன்றி :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 11, 2011 at 10:19 PM said...

// இந்திரா said...
வலையுலக காதல் மன்னருக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..//

ம்ம் இப்படிச்சொல்லி சொல்லியே பக்கத்து டிஸ்ட்ரிக்ட் வரைக்கும் பேர் பரவி அவங்களும் அப்படியே கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க நன்றி இந்திரா :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 11, 2011 at 10:19 PM said...

//இவன் சிவன் said...
வாழ்த்துக்கள் வசந்த்...//

நன்றி பாஸ் :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 11, 2011 at 10:21 PM said...

//சே.குமார் said...
வாழ்த்துக்கள் வசந்த்...

கண்ணுக்கு முதலில் மருத்துவம் பாருங்கள். தினமும் குளிக்கும் முன் சுத்தமான நீருக்குள் கண்ணை முழித்துப் பாருங்கள். எதாவது தூசு. அயர்ச்சி இருந்தால் கிளியராகும்.//

கண்டிப்பா தூசு எதுவும் இல்ல குமார் இது மானிட்டர் பார்த்துக்கொண்டே இருந்ததன் விளைவு ம்ம் சிறிது நாட்கள் கணிணியை தவிர்த்தாலே போதுமென்று நினைக்கிறேன்..!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 11, 2011 at 10:21 PM said...

//
வைரை சதிஷ் said...
வாழ்த்துக்கள். நண்பா//

நன்றி சதிஷ் :)

Trackback by Prathap Kumar S. October 11, 2011 at 10:22 PM said...

மொக்கை பதிவு போட்டுகிட்டுருந்தவன் இப்போ தத்துவப்பதிவு போட ஆரும்பிச்சுருக்கே...ம்ம்
அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்... :)

இதே அன்பும், காதலும் கடைசி வரைக்கும் இருக்கனும்டா....அவ்ளோதான்...

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 11, 2011 at 10:22 PM said...

//அமுதா கிருஷ்ணா said...
வாழ்த்துக்கள் ...//

நன்றி அமுதா மேடம் :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 11, 2011 at 10:23 PM said...

//பாவா ஷரீப் said...
mapla vasanth

un manasukku nee nalla irupada

enjoy machan//

நீ சொன்னது எவ்ளோ ஹேப்பியா இருக்கு தெரியுமா ம்ம் நன்றி மச்சான் :)

Anonymous — October 11, 2011 at 10:24 PM said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் வசந்த்...
சந்தோசமா இருக்கு....

By
மகேஷ்வரி

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 11, 2011 at 10:25 PM said...

// சுசி said...
எங்க வீட்டுக் கல்யாணம் போல அவ்ளோ சந்தோஷமா இருக்கு உ பி. பிள்ளையார் அருளால எல்லாம் நல்லபடியா நடக்கும்பா.

கவிதாயினி கலக்கறாங்க.. சீக்கிரமே ப்ளாக் ஒண்ணு தொடங்கிடுங்க..

அம்மா அப்பாவுக்கும் எங்க அன்பை சொல்லிடுங்க.//

நம்ம வீட்டுக்கல்யாணாம்ன்னு சொல்லுங்க சுசிக்கா

பிளாக்கா ஏன் ஊர் மக்கள் பொழைச்சுப்போகட்டும்..

அம்மா அப்பா ம்ம் கண்டிப்பா சொல்றேன்

வாழ்த்துகளுக்கு நன்றி உ.பி.

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 11, 2011 at 10:27 PM said...

// S.Menaga said...
ஆஹா வசந்த் வாழ்த்துக்கள்!! எப்போ கல்யாணம்?? மிஸஸ் வசந்த் பெயர் என்ன??//

மேனகா ம்ம் சீக்கிரமே அக்கா இன்வைட் பண்றேன் தாமரைசெல்வி அக்காகிட்டயும் சொல்லிடுங்க அவங்க ஊர்தான் பொண்ணுன்னு தெரிஞ்சா சந்தோஷப்படுவாங்க.. நன்றி

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 11, 2011 at 10:28 PM said...

//செ.சரவணக்குமார் said...
மிக்க மகிழ்ச்சி. மனமார்ந்த வாழ்த்துகள் வசந்த்.

இன்விடேஷன் கொடுப்பீங்கள்ள?//

நன்றி சரவணன் அண்ணா என்னண்ணா இப்படி கேட்டுட்டீங்க? கண்டிப்பா கொடுப்பேன் அண்ணா..!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 11, 2011 at 10:28 PM said...

// middleclassmadhavi said...
வாழ்த்துக்கள்!//

நன்றி மாதவி மேடம் :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 11, 2011 at 10:29 PM said...

//Priya said...
வாழ்த்துக்கள் வசந்த்...:-)//

நன்றி ப்ரியா :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 11, 2011 at 10:30 PM said...

//நாஞ்சில் பிரதாப்™ said...
மொக்கை பதிவு போட்டுகிட்டுருந்தவன் இப்போ தத்துவப்பதிவு போட ஆரும்பிச்சுருக்கே...ம்ம்
அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்... :)

இதே அன்பும், காதலும் கடைசி வரைக்கும் இருக்கனும்டா....அவ்ளோதான்...//

ஹ ஹ ஹா :-)))))

கண்டிப்பா அதுபோலதான் இருப்போம்ன்னு நம்பிக்கையிருக்கு பிரதாப் மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 11, 2011 at 10:32 PM said...

//sachin amma said...
மனமார்ந்த வாழ்த்துக்கள் வசந்த்...
சந்தோசமா இருக்கு....

By
மகேஷ்வரி//

மிக்க நன்றி மகேஷ்வரி :)

Trackback by சாந்தி மாரியப்பன் October 12, 2011 at 12:10 AM said...

மனமார்ந்த வாழ்த்துகள் வசந்து..

விக்கெட்டை வீழ்த்திய பௌலரின் பேரை முழுசும் சொல்லாம தப்ச்சிட்டீங்களே :-)

Trackback by Unknown October 12, 2011 at 8:15 AM said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் வசந்த்...நீ எதிர்பார்த்ததை விட சிறப்பான ஒரு வாழ்க்கை நீ வாழ அன்பெனும் ஆண்டவனை வேண்டுகிறேன்...நல்லவர்க்கு நிச்சயம் நல்லதே நடக்கும் வாழ்த்துக்கள் வசந்த்...

மயிரைப்போலவே பொறாமையோ காழ்ப்புணர்ச்சியோ உள்ள நட்புகளையும், உறவுகளையும் வெட்டிவிட புதுவித கத்தரிக்கோல் இருந்தால் தேவலாம்..!

இருந்தால் தேவலாம் தான்...நம் அன்பிற்கு தகுதியே இல்லாத ஒருத்தர் மீது நாம் வைக்கும் அன்பும் மரியாதையையும் கொஞ்சம் தள்ளி வைக்க பயன்படும் தான்....

சில சம்பவங்கள் அடையாளம் காட்டும் பலரை..வேறென்ன உன் எண்ணத்திற்க்கு நீ சிறப்பாய் இருப்பாய்.... வாழ்த்துக்கள் நண்பா :)

Trackback by நிலாமகள் October 12, 2011 at 10:59 AM said...

அட‌!! க‌ல்யாண‌ம் வ‌ந்தாச்சா...!! ரொம்ப‌ ச‌ந்தோஷ‌ம். அம்மா அப்பாவோட‌ குதூக‌ல‌த்தை க‌ற்ப‌னை ப‌ண்ணி பார்க்கிறேன். ம‌ன‌சு நிறைவா இருக்கு. த‌ம்பி, உன் ந‌ல்ல‌ ம‌ன‌சுக்கும் க‌ல‌க‌ல‌ப்பான‌ குண‌த்துக்கும் கொடுத்து வெச்ச‌ ம‌க‌ராசிக்கு எங்க‌ வாழ்த்தை தெரிவிச்சிடுங்க‌. க‌ண்ணுக்கு ரெஸ்ட் கொடுங்க‌. (வாய்க்கும்) இனி பொறுப்பும் உழைப்பும் அதிக‌மாகிடும்.உங்க‌ உட‌ல்ந‌ல‌த்துக்கும் ம‌ன‌ உற்சாக‌த்துக்கும் நாங்க‌ சேர்த்து சாமி கும்பிட்டுக்க‌றோம்.

Trackback by Nagasubramanian October 12, 2011 at 12:47 PM said...

//இருவருக்கும் திருமணத்திற்க்கு பிறகு நான் அவர்களை விட்டு பிரிந்துவிடுவேனோ என்ற பயமும் வந்திருப்பது அவர்களின் பேச்சில் அப்பட்டமாக தெரிகிறது..நான் அப்படியெல்லாம் உங்களை விட்டு போக மாட்டேன் என்பது போன்ற மறைமுக உத்திரவாதம் அளிக்கும்பொழுதுதான் ஓரளவு மனதிருப்தியடைகிறார்கள்..!//
கால மாற்றத்தினால் நல்லவர்களையும் சந்தேகிக்கும் மனநிலை நம் சாபக்கேடு- இந்த சம்பவத்தில் மட்டுமல்ல, எல்லா சம்பவதில்லும் பொருந்திப்போகும் உண்மை இது!
திருமணத்திற்கு நல்வாழ்த்துக்கள்

Trackback by இமா க்றிஸ் October 13, 2011 at 3:21 AM said...

என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வசந்த்.

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 14, 2011 at 10:36 AM said...

//அமைதிச்சாரல் said...
மனமார்ந்த வாழ்த்துகள் வசந்து..

விக்கெட்டை வீழ்த்திய பௌலரின் பேரை முழுசும் சொல்லாம தப்ச்சிட்டீங்களே :-)//

நன்றி சாந்தி மேடம் ம்ம்

முழுப்பெயர்தானே இன்விடேசன்ல கண்டிப்பா இருக்கும்.. :))

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 14, 2011 at 10:42 AM said...

//ரேவா said...
மனமார்ந்த வாழ்த்துக்கள் வசந்த்...நீ எதிர்பார்த்ததை விட சிறப்பான ஒரு வாழ்க்கை நீ வாழ அன்பெனும் ஆண்டவனை வேண்டுகிறேன்...நல்லவர்க்கு நிச்சயம் நல்லதே நடக்கும் வாழ்த்துக்கள் வசந்த்...

மயிரைப்போலவே பொறாமையோ காழ்ப்புணர்ச்சியோ உள்ள நட்புகளையும், உறவுகளையும் வெட்டிவிட புதுவித கத்தரிக்கோல் இருந்தால் தேவலாம்..!

இருந்தால் தேவலாம் தான்...நம் அன்பிற்கு தகுதியே இல்லாத ஒருத்தர் மீது நாம் வைக்கும் அன்பும் மரியாதையையும் கொஞ்சம் தள்ளி வைக்க பயன்படும் தான்....

சில சம்பவங்கள் அடையாளம் காட்டும் பலரை..வேறென்ன உன் எண்ணத்திற்க்கு நீ சிறப்பாய் இருப்பாய்.... வாழ்த்துக்கள் நண்பா :)//

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ரேவதி..

தேவலாம் அப்படின்னா திருடலாம்ன்னு ஒரு அர்த்தம் தெலுங்குல ஹ ஹ ஹா..

சரியா சொன்ன ரேவதி உன்னைப்போல எதையும் எதிர்பார்க்காம பழகுற ஃப்ரண்ட்ஸ் இருக்குறப்போ மத்தவங்களை பத்தி எனக்கென்ன கவலை ம்ம்

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 14, 2011 at 10:52 AM said...

//நிலாமகள் said...
அட‌!! க‌ல்யாண‌ம் வ‌ந்தாச்சா...!! ரொம்ப‌ ச‌ந்தோஷ‌ம். அம்மா அப்பாவோட‌ குதூக‌ல‌த்தை க‌ற்ப‌னை ப‌ண்ணி பார்க்கிறேன். ம‌ன‌சு நிறைவா இருக்கு. த‌ம்பி, உன் ந‌ல்ல‌ ம‌ன‌சுக்கும் க‌ல‌க‌ல‌ப்பான‌ குண‌த்துக்கும் கொடுத்து வெச்ச‌ ம‌க‌ராசிக்கு எங்க‌ வாழ்த்தை தெரிவிச்சிடுங்க‌. க‌ண்ணுக்கு ரெஸ்ட் கொடுங்க‌. (வாய்க்கும்) இனி பொறுப்பும் உழைப்பும் அதிக‌மாகிடும்.உங்க‌ உட‌ல்ந‌ல‌த்துக்கும் ம‌ன‌ உற்சாக‌த்துக்கும் நாங்க‌ சேர்த்து சாமி கும்பிட்டுக்க‌றோம்.//

இதைப்படிச்சப்பவே மனசு நிறைவா இருந்துச்சு அக்கா.. நிச்சயம் .. மிக்க நன்றி அக்கா ..!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 14, 2011 at 11:02 AM said...

//Nagasubramanian said...
//இருவருக்கும் திருமணத்திற்க்கு பிறகு நான் அவர்களை விட்டு பிரிந்துவிடுவேனோ என்ற பயமும் வந்திருப்பது அவர்களின் பேச்சில் அப்பட்டமாக தெரிகிறது..நான் அப்படியெல்லாம் உங்களை விட்டு போக மாட்டேன் என்பது போன்ற மறைமுக உத்திரவாதம் அளிக்கும்பொழுதுதான் ஓரளவு மனதிருப்தியடைகிறார்கள்..!//
கால மாற்றத்தினால் நல்லவர்களையும் சந்தேகிக்கும் மனநிலை நம் சாபக்கேடு- இந்த சம்பவத்தில் மட்டுமல்ல, எல்லா சம்பவதில்லும் பொருந்திப்போகும் உண்மை இது!
திருமணத்திற்கு நல்வாழ்த்துக்கள்//

இப்போ எல்லா பெற்றோரிடத்தில் பரவியிருக்கும் பயம்தான் இது என்ன செய்வது நாமிருக்கிறோம் என்ற துணிவை தருவதை தவிர?

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி நாகா :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 14, 2011 at 11:04 AM said...

// இமா said...
என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வசந்த்.//

மிக்க நன்றி இமா மேடம்

உடல் நிலையில் கவனம் ம்

Trackback by Unknown October 17, 2011 at 11:39 AM said...

அதிகம் பழக்கம் இல்லை
இருந்தாலும் எவ்ளோ நாள் மிஸ் பண்ணிட்டோமோ என்ற ஒரு ஏக்கம்
நண்பா
வாழ்க வளமுடன்
தொடர்கிறேன்