தீபாவளி வாழ்த்துகள்..!

| October 26, 2011 | 13 comments |
பதிவுலக நண்பர்கள், உறவுகள், வாசக வாசகியர்கள், ரசிக ரசிகைகள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்..!


Post Comment

இரத்தத்தின் இரத்தமே... இனிய உடன் பிறப்பே..!

| October 17, 2011 | 10 comments |
யாவரும் நலம் சுசி சாதாரணமா பிளாக்ல கமெண்ட் போட்டுதான் அறிமுகமானாங்க...ஆரம்பத்தில இருந்து இப்போ வரையிலும் ஒரே மாதிரி அதே சகோதர பாசத்தோட பழகுறவங்க, இவங்களுக்கு நிறைய ஃப்ரண்ட்ஸ் இருக்காங்க அதுல நானும் ஒருத்தன் அப்படின்றதில பெருமையெனக்கு பின்ன நார்வேல எனக்கு ஒரு அக்கா இருக்காங்க அப்படின்னு எல்லார்கிட்டயும் காலர் தூக்கிவிட்டு பெருமையடிச்சுகிடலாம் இல்லையா?...!

இவங்ககிட்ட பிடிச்சது என்னன்னா? என்னைப்போலவே எந்த ஒரு விஷயமானாலும் அது சந்தேகமா இருந்தாலும் சண்டையா இருந்தாலும், பிளாக் பற்றிய விஷயமானாலும் மெயில்லயோ சாட்லயோ ஸ்ட்ரெயிட்டா கேட்டிடுவாங்க..என்னோட பல மொக்கைகளை சூப்பர்ன்னு நிறைய தடவை சொல்லி பலரோட வயித்தெரிச்சலை வாங்கிக்கட்டிக்கிட்டவங்க...!இது வரைக்கும் இவங்களுக்கு பொறாமையோ இல்லை கோவமோ வந்து பார்த்ததில்லை. என்னோட பிளாக்குக்கு கமெண்ட் போட்டா உன் பிளாக்குக்கு கமெண்ட் போடுவேன் அப்படின்ற உள்குத்து வேலையெல்லாம் இவங்களுக்கு தெரியாது பிடிச்சுருந்தா கமெண்ட் போடுவாங்க...!

என்னோட மொக்கைகள், கவிதைகள், சில கிரியேட்டிவ் பதிவுகளின் வளர்ச்சியில இவங்களுக்கும் பங்கிருக்கு..( ஓ இவங்களைத்தான் தேடிட்டு இருக்கோம் அப்படின்னு யாரும் அட்ரஸ் கேட்டு ஆட்டோ பிடிச்சு போய்டாதீங்க பாவம் எனக்காக அவங்கள மன்னிச்சு விட்டுடுங்க ப்ளீஸ்).. முக்கியமா ஒரு விஷயம் கர்ப்ப கால காதல் அப்படின்ற ஒரு போஸ்ட் படிச்சுட்டு அதுபத்தி என்கிட்ட அவங்க கேட்டது தம்பி இவ்ளோ நாளா ஒன்னா மண்ணா பழகிட்டு கல்யாணம் ஆனதை என்கிட்ட சொல்லவேயில்ல பாரு அப்படின்னு ஒரு கேள்விய கேட்டு என்னை ஒரு வழி பண்ணிட்டாங்க அப்பவும் இப்பவும் நான் சொல்றது ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு கற்பனை அப்படின்ற விஷயம் .. அதுக்கப்பறம் அதுபத்தியெல்லாம் கேட்கமாட்டாங்க..

எனக்கு தெரிஞ்சு என்னைபத்தி எல்லா விஷயமும் இவங்களுக்கு தெரியும் அவங்களைப்பத்தி அவங்க பிளாக் வச்சே கண்டுகினலாம் அவ்ளோ அழகா ஒரு குடும்பத்தில நடக்குற விஷயங்களை சுவாரஸ்யமா எழுதுவாங்க , பதிவுகளுக்கு இவங்க வைக்கிற தலைப்புகளும், லேபில்களும் ரசனையா இருக்கும் கமெண்ட்ஸ் மத்தவங்களுக்கு போடறதும் சரியா இருக்கும் யாரோட மனசும் புண்படாம வாழ்த்தா இருந்தாலும் பாராட்டா இருந்தாலும் அள்ளி அள்ளி கொடுக்குற மனசு..(அக்கா மறக்காம நார்வேல என் பேர்ல ரெண்டு கிரவுண்ட் எழுதி வச்சிடணும் நீங்க சொன்ன மாதிரியே எழுதிட்டேன்)

பிளாக் நண்பர்கள் அப்படின்னா என்னை பொருத்தவரைக்கும் எல்லார்கிட்டயும் சொல்றது ரயில் சிநேகம் அப்படின்னுதான் ஆனா இவங்க மட்டும் என்னோட லைஃப் ஃபுல்லா சிநேகமா பாசமா இருக்கணும்ன்னு விரும்பறேன் நாளைக்கே ச்சே இன்னிக்கே அக்கா மெயிலுக்கு என்னைப்பத்தி இவன் ரொம்ப மோசமானவன் இவன்கிட்ட உனக்கென்ன பழக்கம் வேண்டியிருக்கு அப்படின்னு தப்பா பெட்டிஷன் ரிப்பீட் பண்றவங்க நோட் பண்ணிக்கங்க..நீங்க என்ன சொன்னாலும் என்னை உபி என்று அழைப்பதை அவங்க யாருக்காகவும் எதுக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டாங்க..

இன்னிக்கு அக்காவுக்கு பிறந்தநாள் ரொம்ப நாளைக்கு மாமா குணாவோடயும் குழந்தைகள் சதுர்ஜன்,அம்முவோடு பல்லாண்டு காலம் தீர்க்காயுசாக சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று பிறந்தநாள் வாழ்த்துகள் கூறி ஆசிகளையும் வாங்கிக்கொள்கிறேன்.. Many More Happy Returns Of The Day..!இவர்கள் விஜயின் தீவிர ரசிகை..!Post Comment

கற்பனை செய்யாமல் கட்டிலில் ஏறாதே..! (U/A)

| October 14, 2011 | 6 comments |

நாயகன் கிஷோருக்கும், நாயகி ஜமுனாவுக்கும் இடையில் நடக்கும் காதல் உரையாடல்கள்..!


ஹேய் கிஷோர் என்னப்பா நீ இன்னிக்கு நம்ம கல்யாண நாள் , நான் இங்க நம்ம வீட்டுல ரொம்ப நேரமா தனியா உனக்காக காத்துக்கிட்டு இருக்கேன் நீயென்னடான்னா ஆடி அசைஞ்சு வர்ற என்னைப்பார்த்தா உனக்கு பாவமா தெரியலியான்னு ஜமுனா கேட்கவும் , ம்ஹ்ஹும் ''உன்னைப்பார்த்தா எனக்கு பேரழகியாத்தான் தெரியுது, பாவமா தெரியலியேன்னு'' கிஷோர் சொல்லவும் ஏற்கனவே கோபத்தில் இருந்த ஜமுனாவின் முகம் சிவந்தது , ஹைய்யோ உனக்கு வெட்கப்படவெல்லாம் தெரியுமா? என்று கிஷோர் சொன்னதும் நீ என்னை எவ்ளோ ஐஸ் வச்சாலும் இன்னிக்கு உனக்கு தரவேண்டிய வழக்கமான லஞ்சம் கிடையவே கிடையாது ஐ ஹேட் யூ என்றவாறே விறு விறுவென்று சமையலறை நோக்கி நடக்க ஆரம்பித்த ஜமுனாவை பின் தொடர்ந்தபடியே சென்ற கிஷோர் ''ஓஹ் பார்ட்டி நல்ல பார்ட்டிதான் ஓஹ் பியூட்டியின்னா பியூட்டிதான் பின்னழகை காட்டி சின்ன பையனைத்தான் வாட்டி செல்லும் மஞ்சள் நிலா என்னைக்கொல்லாதே'' என்ற இதயம் திரைப்படத்தில் வரும் பாடலை பாடவும் எவ்வளவு வேகமாக நடந்தாளோ அவ்வளவு வேகத்தில் திரும்ப வந்து அவனை கட்டிப்பிடித்துக்கொண்டாள் இந்த சின்ன சந்தோஷத்திற்க்கு பாட்டெல்லாம் படிக்க வச்சுட்டியே செல்லம் என்று கிஷோர் சொல்ல, அதுக்கு பரிசா இந்தா வச்சுக்கோ வழக்கமா தர்ற லஞ்சம்தான் ஆனா இது கொஞ்சம் ஃப்ரஞ்ச் மெத்தட் என்று ஜமுனா சொல்லவும் ஓஹ் ''ஆனா இது கையூட்டு கிடையாது வாயூட்டு'' ஹ ஹ ஹா என்று சிரிக்க ஆரம்பித்தான் கிஷோர் அதிகப்படியாக வெட்கப்பட்டுக்கொண்டிருந்தாள் ஜமுனா..!!!!

ஹாலில் உட்கார்ந்திருந்த கிஷோர் ஹேய் ஜம்  இன்னிக்கு ஜம்ம்னு இருக்க என்னடி விசேஷம் என்றான் ஒன்னுமில்லை என்றவளிடம் இங்க பாரு நான் உன்னோட பெயரை சுருக்கி எவ்ளோ அழகா ஜம் ஜம்ன்னு கூப்பிடறேன் நீ என்னோட பெயரை செல்லமா சுருக்கி கூப்பிட மாட்டியா? ஓஹ் அப்படியா? சரி கூப்பிடறேன் கிஷ் என்று கூப்பிட்டு முடிந்ததும் நாக்கை கடித்துக்கொண்டு அய்யய்யோ நீ ப்ளான் பண்ணித்தான் என்னை அப்படி கூப்பிடச்சொன்ன இல்ல நான் கூப்பிட மாட்டேன்ப்பா இப்போவே உன் இம்சை தாங்கலை அப்படி கூப்பிட ஆரம்பிச்சா எத்தனை தடவை கூப்பிட்டேனோ அத்தனை கிஷ் கொடுத்து என்னை ஒரு வழி பண்ணிடுவ ஆள விடு சாமி என்று ஜமுனா ஓடி ஒழிய சரி சரி இப்போ இரண்டு தடவை கூப்பிட்டதுக்கு என்ன பண்றது என்று கிஷோர் கிண்டல் பண்ணியபடியே அவளை நோக்கி சென்று அந்த இரண்டு கிஷ்சும் பெற்றுக்கொண்டான்..!

ஒரு விளையாட்டு இருக்குஅதில் நான் ஜெயித்தால் நான் சொல்லுவதெல்லாம் நீ கேட்க வேண்டும் நீ ஜெயித்தால் நீ சொல்வதெல்லாம் நான் கேட்ப்பேன் என்று கிஷோர் ஜமுனாவிடம் சொல்லவும் என்ன விளையாட்டு என்று ஆர்வமாக கேட்டவளிடம் ''உனக்கு பிடிச்ச Munch சாக்லேட் இருக்கு இல்லியா அதை அப்படியே முழுசா வாய்ல இருந்து வெளிய எடுக்காம கைகளால் தொடாம கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட்டு முடிக்கணும் ரெடியா?'' என்றான் சரி என்றவளிடம் லேடீஸ் ஃபர்ஸ்ட் என்றபடி ஒரு சாக்லேட் எடுத்து  கொடுத்தான் வாயில் சாக்லேட் வைத்து சாப்பிட ஆரம்பித்தவள் ஒரு லெவலுக்கு மேல் சாப்பிட இயலாமல் முழித்தவளிடம் கேன் ஐ ஹெல்ப் என்றான் ம்ம்ம் என்ற சத்தம் மட்டும் வந்தது சாக்லேட்டின் மறுமுனையை கிஷோர் சாப்பிட ஆரம்பிக்க சாக்லேட் தீர ஆரம்பித்திருந்தது இருவரின் உதடுகளும் இணையும் வேளையில் அவர்கள் முத்த சாக்லேட் சாப்பிட ஆரம்பித்திருந்தார்கள்..! 

அழகான விடியலுக்கு பின் நன்றாக தூங்கிக்கொண்டிருந்த ஜமுனாவின் அருகில் அமர்ந்து அவளின் முகத்தில் விழுந்திருந்த தலை முடியை ஒதுக்கிவிட்டபடி இருந்தான் கிஷோர் ஜமுனாவோ விசும்பியபடியே இருந்தாள் , அறையில் ''இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ'' பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது பாடலின் இடையில் ''மானிடப்பிறவி என்னடி மதிப்பு உன் கால் விரல் நகமாய் இருப்பதே சிறப்பு'' என்ற வரியோடு தானும் பாடினான் கிஷோர் அதெப்படி முடியும் என்று சிணுங்கலாய் கேட்டவளிடம் போர்வையை விலக்கி உன் கால்களைப்பார் என்றான் அவளின் இரண்டு கால்களின் பெருவிரல் நகங்களிலும் அவனுடைய சின்ன ஸ்டாம்ப் சைஸ் பாஸ்போர்ட் புகைப்படத்தை ஒட்டியிருந்தான் அதைப்பார்த்து ஹைய்யைய்யோ என்றபடியே ஏன் இது மாதிரிலாம் பண்ற கிஷோர் ப்போ எனக்கு வெட்கமா இருக்கு என்றபடி அவன் கன்னங்களில் செல்ல முத்தமிட்டு தோள்களில் சாய்ந்து கொண்டாள்..!

கிஷோர்  ஜமுனா இருவரும் ஹாலில் உள்ள சோஃபாவில் அமர்ந்து அலை பாயுதேவில் வரும் சிநேகிதனே சிநேகிதனே பாடல் பார்த்துக்கொண்டிருந்தனர் அதில் ஷாலினி பாடும் பாடல் வரிகளை அவளிடம் சொல்லி விளக்கிக்கொண்டிருந்தவன் ''உப்பு மூட்டை சுமப்பேன்'' என்ற வரிகளை சொன்னதும் சிரிக்க ஆரம்பித்தாள் ஜமுனா என்னால முடியாதுப்பா நீ என்னை விட 30 கிலோ ஜாஸ்தி என்றாள், நீ சுமக்காட்டின்னா என்ன நான் உன்னை உப்பு மூட்டை சுமப்பேனே என்றான் பதிலுக்கு வீ வில் ட்ரை என்றான் ஜமுனாவைப்பார்த்து ம்ஹ்ஹும் மாட்டேன்ப்பா நீ தூக்கி கீழ டொம்முன்னு போட்டாலும் போட்ருவ, இல்லம்மா அப்டிலாம் பண்ண மாட்டேன் என்றவனின் ஆசைக்கு கட்டுப்பட்டவளை உப்பு மூட்டை சுமந்து நேராக பெட்ரூம் சென்றவன்  டொம்மென்று பெட்டில் விட்டான் செல்ஃபில் இருந்த ஆலிவ் ஆயிலை எடுத்தவனிடம் எதுக்கு இப்போ அது என்றாள், ''ஐவிரலிடுக்கில் ஆலிவ் எண்ணை பூசி சேவகம் செய்ய வேண்டும்'' என்று பாட ஆரம்பித்திருந்தான் அவள் ஹைய்யைய்யோ என்றபடி அவனிடமிருந்து விலகி ஓடி கண்ணாமூச்சி காட்டிக்கொண்டிருந்தாள்...!


Post Comment

பேசுகிறேன்...

| October 10, 2011 | 46 comments |
குடும்பம்


வீட்டில் பெண் பார்த்து நிச்சயம் செய்தபிறகு நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் அம்மா அப்டேட் செய்துகொண்டே இருக்கிறார்கள்..கேட்க கேட்க ஒருபுறம் மிக அதிக மகிழ்ச்சியாக இருந்தாலும் அந்த நிகழ்வுகள் அனைத்தையும் அருகிலிருந்து பார்ப்பதற்க்கோ கேட்பதற்க்கோ தவறுவதை நினைத்து மறு புறம் வருத்தமாகவே இருக்கிறது..ஆனாலும் திருமண நிகழ்வையொட்டி உறவினர்கள் மற்றும் நண்பர்களின் கிண்டல்களுக்கும் கேலிகளுக்கும் குறைவில்லை..!


அம்மாவும் அப்பாவும் இத்திருமணத்தினால் அதிக மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள் என்பது மட்டும் அவர்கள் தங்களுக்குள் செய்துகொள்ளும் கிண்டல் கேலிகளை என்னிடம் பகிர்ந்துகொள்ளும் தொணியிலே தெரிந்துவிட்டது..ஆனால் இருவருக்கும் திருமணத்திற்க்கு பிறகு நான் அவர்களை விட்டு பிரிந்துவிடுவேனோ என்ற பயமும் வந்திருப்பது அவர்களின் பேச்சில் அப்பட்டமாக தெரிகிறது..நான் அப்படியெல்லாம் உங்களை விட்டு போக மாட்டேன் என்பது போன்ற மறைமுக உத்திரவாதம் அளிக்கும்பொழுதுதான் ஓரளவு மனதிருப்தியடைகிறார்கள்..! நானிருக்க பயமேன்?


மிஸஸ்..வசந்த்


இவங்களைப்பற்றி என்ன கூறுவது ? சின்ன சின்ன கவிதைகளும் கதைகளும் கூறும்பொழுது சிரிப்பார், சில சமயம் நான் சொன்ன எளிய கவிதைகளுக்கு இரண்டு மணி நேர விளக்கம் கொடுக்க வேண்டியிருக்கிறது..ஆரம்பத்தில் பேசுவதற்க்கு மிகவும் கூச்சப்பட்டவர்கள் நாளாக நாளாக பேசுவதில் அதிக ஈடுபாடு காட்ட ஆரம்பித்திருக்கிறார்,விளைவு சென்ற மாத சம்பளத்தில் பாதி தொலைபேசி பில் தின்று தீர்த்துவிட்டது, ஒன்றைப்பெற மற்றொன்றை இழக்கத்தானே வேண்டும் ஆதலால் அதுபற்றியெல்லாம் இப்பொழுது கவலையில்லை என்னை பொறுத்தமட்டிலும் என் அளவுக்கு சரிசமமாக பேசவோ என்னை கிண்டல் செய்யும் அளவிற்க்கோ கொண்டுவந்துவிட்டு விடவேண்டும் அவ்வளவுதான்.. கிட்டத்தட்ட பேச ஆரம்பித்து ஒருமாத காலம் ஆகியிருக்கும் நிலையில் ஒரு கவிதை ஒன்று எழுதியிருக்கிறார்கள்..


''இதயம் துடிப்பதற்க்கு மறக்கலாம்
ஞாபகங்கள் மனதிலிருந்து விலகலாம்
பாலைவனம் கூட நதியாக மாறலாம்
உன் முகம் என் கண் முன் தோன்றும்போது வரும்
புன்னகையை எதனாலும் தடுக்க முடியவில்லை..!'' - ஜோ

இதுதான் அவர்கள் எனக்கு எழுதிய முதல் கவிதை.. கவிஞி இருக்க பயமேன்?


வேலை


திருமணம் பேசுவதற்க்கு முன்பே எடுத்த முடிவுதான் , திருமணத்திற்க்கு பின்பு இந்தியாவில்தான் பணிபுரியவேண்டுமென்று ஆதலால்  பணியை ராஜினாமா செய்ய இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில் நான்கு வருடங்களாக என்னிடம் பணிபுரிந்த தொழிலாளர்களிடம் இதுவரை காட்டிவந்த அந்நியோன்யத்தை குறைக்க ஆரம்பித்திருக்கிறேன்,ஏனென்றால் அவர்களைவிட்டு பிரியும்பொழுது என்னால் அவர்களோ ,அவர்களால் நானோ வருத்தமடைந்துவிடக்கூடாது என்பதனால் சிறிது விலகியே இருக்கிறேன்...அதற்க்கு முன் இங்கு இதுவரை வாங்கிய நற்பெயரால் என்னுடைய ராஜினாமாவை நூறுசதவீதம் ஏற்கமாட்டார்கள் கிட்டதட்ட நான்கைந்து மேலதிகாரிகளை பேசி சம்மதிக்கவைக்க வேண்டும் அவர்களை எப்படியெல்லாம் சொல்லி சம்மதிக்க வைப்பது என்பதில்தான் இப்பொழுது ஒரே சிந்தனையாய் இருக்கிறது. திருமண நாள் குறித்து திருமண மஹால் முன்பதிவு செய்தாகிவிட்டது பிரச்சினை எதுவும் இல்லாமல் அவர்கள் என்னை பணியிலிருந்து விடுவிக்க வேண்டும் இறைவா என்பதும் தின வேண்டுதலாகிவிட்டது.திருமணத்திற்க்கு பின்பு இந்தியாவில் பணிபுரிய வேண்டும் என்பதால் இந்தியாவில் இருக்கும் நல்ல கம்பெனிகளுக்கு விண்ணப்பங்கள் அளித்து காத்திருக்கிறேன் பார்க்கலாம்..திறமையிருக்க பயமேன்..?


உடல் நிலை..


இப்பொழுதெல்லாம் இரண்டு மூன்று மணி நேரம் கணிணியை பார்த்தாலே கண் சிவந்து தூக்கம் வந்துவிடுகிறது அல்லது கண் எரிய ஆரம்பித்துவிடுகிறது கணிணியை ஆன் பண்ணியபடி ஷட்டவுன் செய்யாமலே தூங்கிவிடுகிறேன்..முடிந்தவரையில் கணிணியை தவிர்க்க முயற்சித்துவருகிறேன் ஊருக்கு சென்றுதான் நல்ல கண் மருத்துவரை கலந்தாலோசித்து கண்ணை காக்கவேண்டும்..


காதிலோ மூக்கிலோ மயிருள்ளவர்களை பார்த்தால் எனக்கு ஒருவிதமான முகச்சுளிப்பு ஏற்படும் இப்பொழுது எனக்கும் காதில் நீண்ட மயிர் முளைக்க ஆரம்பித்திருக்கிறது எது நமக்கு வேண்டாமென்று விலகுகிறோமோ அதுதான் நம்மை ப்ரியத்துடன் ஆட்கொள்கிறது என்ன செய்ய? கத்தரிக்கோல் இருக்க பயமேன்? கட் த மயிர்..மயிரைப்போலவே பொறாமையோ காழ்ப்புணர்ச்சியோ உள்ள நட்புகளையும், உறவுகளையும் வெட்டிவிட புதுவித கத்தரிக்கோல் இருந்தால் தேவலாம்..!
சுபம்..!Post Comment