ப்ரிய சிறைகள்..!

| September 28, 2011 | 15 comments |
 
ஒத்திகை..!


தற்சமயம் 
நமக்கான வாழ்க்கையை
நம் இருவர் மனங்களும்
ஒத்திகை
பார்த்துக்கொண்டிருக்கின்றன
நீயும் நானும் அதை வேடிக்கை
பார்த்துக்கொண்டிருக்கிறோம்..!

----------------------------


 

ப்ரிய சிறைகள்..!


உனக்கான ப்ரியங்களை
நான் என்னிடமிருந்து
விடுவித்துக்கொண்டிருக்கிறேன்
நீ மறுபடியும் உன்னிடம்
அவற்றை சிறைபிடித்துக்
கொண்டிருக்கிறாய்..!
----------------------------டிட்டோ...!

உனக்கேற்றபடி நான் 
எனக்கேற்றபடி நீ
நமக்கேற்றபடி காதல்
முதற்க்கொண்டு 
அத்தனையும்..!


( Note : இவையும் இனி வருபவையும் என் Engagementற்க்கு பிறகான கவிதைகள் ) 

Post Comment

ஜோ'வென பெய்யும் மனமழை -1

| September 18, 2011 | 6 comments |என் மனதிற்க்கு
பிடித்தவர்கள்
நிறைய பேர்
இருக்கிறார்கள்
என் மனதை பிடித்தவள்
நீ மட்டும் தான்..!

----------------------------------------அழகான வாழ்க்கை வண்டி
ஓட்டுவதற்கு தேவையான
அத்தனை விஷயங்களிலும்
நீ என் சாயலையும்
நான் உன் சாயலையும்
கொண்டிருக்கிறோம்..!

----------------------------------------ஊரே எனக்கு
வைத்திருந்த பட்டத்தை
நீயும் சொன்னபோது
அளவில்லா ஆனந்தம்
காதல் மன்னனாம் நான்..!
----------------------------------------


செடி கொடிகளுக்கு
அருகே நின்று விடாதே
தேரென்று நினைத்து
அவை உன் மீது
படர்ந்துவிடலாம்..!

----------------------------------------நீ இல்லாமலே
என்னைச்சுற்றி
லாவண்டர் வாசம்
வீசுகிறது அதுதான்
உன் வாசமாய் 
இருக்கக்கூடும்..!

----------------------------------------


உன்னை
கிளி மாதிரி
என்று சொல்லி
என்னை
ஜோசியக்காரன்
ஆக்கிவிட்டார்கள்
என் அம்மா..!

----------------------------------------


நீ பேசும்பொழுது
குயில்களும்
உடன் கூவுவது
எனக்கென்னவோ
குயில்களின்
பின்னணி இசையில்
நீ பாடுவது போன்றுதான்
இருக்கிறது..!

----------------------------------------

Post Comment