தக்கர் தக்க தக்க தும் - வேலாயுதம் பாடல் விமர்சனம்

| August 31, 2011 | |
வெளியிட்ட ஒரு மணி நேரத்தில் அத்தனை சிடிக்களும் விற்றுத்தீர்ந்து சாதனை படைத்திருக்கிறது வேலாயுதம் படத்தின் பாடல் சிடிக்கள்.

ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில், ஜெயம் ராஜா இயக்கத்தில் இளையதளபதி விஜய் , ஜெனிலியா , ஹன்சிகா, சந்தானம் நடிப்பில் , இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் இசையில்,தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் வேலாயுதம் திரைப்படத்தின் பாடல்கள் பற்றிய ஒரு பார்வை.
1.இரத்தத்தின் இரத்தமே 
''இரத்தத்தின் இரத்தமே
என் இனிய உடன்பிறப்பே
சொந்தத்தின் சொந்தமே
நான் இயங்கும் உடன் பிறப்பே..!''

அண்ணன் தங்கைக்கிடையேயான சகோதர பாசத்தை விளக்கும் பாடல், ஹரிச்சரண் , மதுமிதா பாடியிருக்கிறார்கள் , கவிஞர் அண்ணாமலை பாடலை எழுதியிருக்கிறார் விஜய் ரசிகர்களுக்கு என்று எழுதப்பட்ட பாடலைப்போல் இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறலாம் , உணர்ச்சிவசமான பாடல்.

Rating : 4.5/5-------------------------------------------------------------

2. முளைச்சு மூணு இலைய விடல

''முளைச்சு மூணு இலைய விடல
தருவேன் ஒலக அழகி மெடல
வெரலு வெண்டக்காய்
உன்காது அவரைக்காய்
மூக்கு மொளகாய் மூக்குத்தி கடுகாய்
கனிந்த காய்த்தோட்டம் நீதானா ?''

ரசித்து எழுதியிருக்கிறார் கவிஞர் விவேகா , பிரசன்னா , சுப்ரியா ஜோஷி பாடியிருக்கிறார்கள் , மெலடி ரகம் யாராக இருந்தாலும் முதல் தடவை கேட்டதும் மிகப் பிடித்துப்போகும் , மெலடி பாடல் விரும்பிகள் ரிப்பீட்டடடா கேட்டுக்கிட்டே இருக்கப்போறாங்க குடும்பத்திலுள்ள அனைவராலும் விரும்பி கேட்கப்படும் பாடலாக அமையும் எனபதில் சந்தேகமில்லை.

பாடலில் பிடித்த வரி

''மேடான பள்ளத்தாக்கே 
மிதமான சூறைக்காற்றே 
முடியாத எல்லைக்கோடே 
முத்தச்சூடே..!''


''முழுசு முழுசா
என்னை முழுங்க நினைக்கிறியே
உடம்ப முறுக்கி வளையலை நொறுக்கி
கதைய முடிக்கிறியே..!''

Rating :5/5-------------------------------------------------------------3.சில்லாக்ஸ் 

''மஞ்சநெத்தி மரத்துக்கட்ட
மைய வச்சு மயக்கிப்புட்ட
நாட்டுக்கட்ட டவுனுக்கட்ட
ரெண்டும் கலந்த செமகட்ட
கையிரண்டும் உருட்டுக்கட்ட
கண்ணு ரெண்டும் வெட்ட வெட்ட
நெஞ்சுக்குள்ள ரெத்தம் சொட்ட
எதுக்கு வர்ற கிட்ட''


''சில்லாக்ஸ் சில்லாக்ஸ் சில்லாக் சில்லாக் சில்லாக்ஸ்''

இந்த பாடலை எழுதியவர் அண்ணாமலை , கார்த்திக்கும் ,சாருலதா மணியும் இணைந்து பாடியிருக்கிறார்கள்.வழக்கம்போலவே விஜய் ஆண்டனியின் குத்துப்பாடல்கள் ஆட்டம்போடவைக்கும் , அதில் இந்தப்பாடலில் விஜயும் சேர்ந்து இருப்பதால் குத்துப்பாடல் விரும்பிகளுக்கு மிகப்பிடித்தமானதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை , தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகள், திருவிழா மேடை நடனங்களில் இந்தப்பாடல் அதிகம் இடம்பெறலாம், குழந்தைகள் இனி சில்லாக்ஸ் என்ற வார்த்தையை அடிக்கடி உபயோகிப்பதை பார்க்கலாம்.இந்தப்பாடலில் கொஞ்சம் வேட்டைக்காரன் கரிகாலன் பாடல் வாசம் வீசுகிறது..!

Rating : 4.5/5-------------------------------------------------------------4.மாயம் செய்தாயோ''தக்கர் தக்க தக்க தும்
மாயம் செய்தாயோ
நெஞ்சை காயம் செய்தாயோ
கொல்ல வந்தாயோ
பதில் சொல்லவந்தாயோ''

என்று ஆரம்பிக்கும் இந்தப்பாடலை எழுதியவர் கவிஞர் விவேகா, சங்கீதா ராஜேஸ்வரன் தனது ரொமாண்டிக்கான குரலில் பாடியிருக்கிறார் வசியம் செய்கிறது இவரது குரல் , எந்தப்பாடல் மாதிரியும் இல்லாமல் புதுவிதமாகவே இருக்கிறது , இளைஞர்கள் இளைஞிகளுக்கு மிகப்பிடிக்கும் எஃப் எம் , இசைச்சேனல்களில் அதிகமுறை இடம்பெற்று சாதனை புரியலாம்.

பாடலில் பிடித்த வரிகள் .

''நாணச்செடி வளரும் தோட்டமானேன்
யானை வந்து போன சோலையானேன்''

Rating : 5/5


-------------------------------------------------------------


5. சொன்னாப்புரியாது ''சொன்னாப்புரியாது சொல்லுக்குள்ள அடங்காது
நீங்கள்லாம் எம்மேல வச்ச பாசம்
ஒண்ணா பொறந்தாலும் இதுபோல இருக்காது
நான் உங்கக மேல எல்லாம் வச்ச நேசம்''

விஜயோட ஓபனிங் பாடல் எப்பவுமே மாஸ் ஹிட் ஆகும் அந்த வரிசையில் இந்தப்பாடலையும் சேர்த்துக்கொள்ளலாம் பாடலை சிவ சண்முகம் எழுதியிருக்கிறார் ரசிகர்கள் தியேட்டரில் ஆட்டம் போடவைக்கும் குத்துப்பாடல்.பாடலை விஜய் ஆண்டனி பாடியிருக்கிறார், வீர சங்கர் பாடலின் ஆரம்பத்தில் பாடியிருக்கிறார் அந்த இடத்தில் ரசிகர்களுக்கு விஜய் சாமி பிடித்து ஆடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை..!

பாடலில் பிடித்த வரிகள்

''தலையில் ஆடும் கரகம் இருக்கும்
தலையில கனந்தான் இருந்ததில்லை''


''தாரை தப்பு ஆட்டம் தான் இருக்கும்
தப்பான ஆட்டந்தான் போட்டதில்லை''

Rating : 5/5

6.வேலா வேலா வேலாயுதம் என்ற தீம் சாங்கும் கேட்க நன்றாக இருக்கிறது இதை விஜய் ஆண்டனி பாடியிருக்கிறார் .

-------------------------------------------------------------

இசை வெளியீட்டுவிழா ஒரு பார்வை..!

தமிழ் திரைப்படத்தின் இசை வெளியீட்டுவிழா முதன் முறையாக மதுரையில் ரசிகர்கள் முன்னிலையில் ரசிகர்களாலே வெளியிடப்பட்டது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியது.வெறும் இசை வெளியீடாக மட்டுமின்றி ஏழை எளியவர்களுக்கு இலவச கணிப்பொறி, தையல் மெஷின்கள், பசு என்று நலத்திட்ட உதவிகளும் விஜயின் மக்கள் இயக்கம் சார்பாக நடைபெற்றது.வரப்ப மிதிச்சு ராப்பகலா உழைச்சு 
வாழற ஜனங்க நம்ம கட்சி
இவங்க மனச சந்தோஷப்படுத்த
தப்பு நீ செஞ்சாலும் ரைட்டு மச்சி..!
Courtesy : http://www.facebook.com/VijayTheActor
Post Comment

12 comments:

Trackback by ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) August 31, 2011 at 6:46 PM said...

வாழ்த்துக்கள்

Trackback by பன்னிக்குட்டி ராம்சாமி August 31, 2011 at 7:11 PM said...

வாழ்த்துக்கள்

Trackback by Prabu Krishna August 31, 2011 at 7:21 PM said...

ம்‌ம் எனக்கு சில்லாக்ஸ், மாயம் செய்தாயோ இரண்டும் பிடித்துள்ளது. #நானும் விஜய் ஃபேன் ஆக இருந்தேன். ஆனால் சில காரணத்தால் இப்போது இல்லை.

Trackback by ஜானகிராமன் August 31, 2011 at 7:44 PM said...

அதான் அரசியலுக்கு வரப்போறாருல்ல... இது போல ரசிகர்களை கவர்பண்ணுவது போல சீன் போட்டாதானே வேலைக்காகும். பாடல்களில் முன்னெப்போதும் இல்லாத அளவு எம்ஜிஆர் தனம். ரசிகர்கள் தவிர்த்து பொதுமக்கள் இதனை விரும்பமாட்டார்கள் என்றே தோன்றுகிறது.

Trackback by வால்பையன் August 31, 2011 at 8:41 PM said...

நீங்க அந்த மொக்கபய ரசிகரா, அய்யய்யோ எனக்கு தெரியாம போச்சே தல!

Trackback by Philosophy Prabhakaran September 1, 2011 at 2:19 AM said...

தல அஜித்குமார் வாழ்க...

Trackback by ஸ்ரீராம். September 1, 2011 at 4:41 AM said...

இப்போதெல்லாம் பாடல்கள் ஒரே மாதிரி இருப்பது போல ஒரு ஃபீலிங்கி வசந்த்! ஆனாலும் சில்லக்ஸ் பாடல் கவர்கிறது. தக்கத்துமா...கேட்டுப் பார்க்கணும். உங்கள் சிபாரிசாச்சே...!

Trackback by சுசி September 1, 2011 at 1:41 PM said...

எல்லா பாடல்களும் நல்லா இருந்தாலும் மாயம் செய்தாயோ அள்ளுது..

நல்ல விமர்சனம் உ பி :)

Trackback by 'பரிவை' சே.குமார் September 1, 2011 at 2:33 PM said...

மாடெல்லாம் அம்மா குடுக்குமுன்ன தளபதி கொடுத்துருக்காரு... அம்மாவின் ஆசி இன்னும் நிறைய வேண்டும் என்பதாலா...

Trackback by அத்திரி September 1, 2011 at 4:01 PM said...

மாயம் செய்தாயோ ஓகே..................................... மற்றது படம் வந்தப்புறம் பார்க்கலாம்

Trackback by Unknown September 1, 2011 at 7:10 PM said...

போட்டி?
ஆனா ரொம்பவே மெனக்கெட்டுயிருக்கீங்க... letz see வேலாயுதம்.. எல்லாமே freshaயிருக்கு போட்டோ மொதகொண்டு :)

Trackback by Thanglish Payan September 28, 2011 at 1:57 PM said...

Type Google in the address bar

Then Type "Comedy piece"

Now Check it.

LOL ... ?????????????