ப்ரிய நண்பன்...!

| June 6, 2011 | |
அவ்வப்பொழுது ஆத்ம திருப்திக்காக எழுதும் பதிவுகளில் இதுவும் ...

உன் நண்பன் யாரென்று சொல் உன்னைப்பற்றி சொல்கிறேன் என்று ஒரு பழமொழி இருக்கிறது. இப்படி யாராவது என்னிடம் வந்து கேட்டால் சட்டென்று இவன்தான் என் நண்பன் என்று சொல்வதிற்கு தகுதியானவன் இவன்.சேட்டைக்காரனா இருக்கான்ல ம்ம் என் ஃப்ரண்ட்ல அப்டித்தான் இருப்பான் , நவநீதகிருஷ்ணன் எனக்கும் இவனுக்கும் மதுரையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும்பொழுது சக அறைவாசியாகத்தான் அறிமுகம். நான் அந்த நிறுவனத்தில் சேர்வதற்கு  இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பிருந்து அந்த நிறுவனத்தில் இவன் பணிபுரிந்தான். வேலையிடத்தில் இவன் இருக்குமிடத்தில் கலகலப்பிற்கு பஞ்சமிருக்காது. எனக்கும்கூட இவனிடமிருந்துதான் இந்த நக்கல் நையாண்டி வந்திருக்கவேண்டும் அவ்வளவு நக்கல்பிடித்தவன் எதிரே பேசுபவர்களை தன்னுடைய நகைச்சுவையான பேச்சாலேயே கவர்வான், என்னையும் அப்படியே. வெளியே இவ்வளவு கலகலப்பாக பேசித்திரிபவனின் சொந்த வாழ்க்கையில் இருக்கும் சில மறக்க முடியாத வருத்தமான நிகழ்வுகள் என் போன்ற சில நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே தெரியும். 

ஆரம்பத்தில் சக தொழிலாளியாக இருந்த நாங்கள் நாட்கள் செல்ல ஒருவருக்கொருவர் எங்களுக்கிடையேயான , புத்தக வாசிப்பு , ரசனைகள் , பழக்கவழக்கங்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்து இணைபிரியாத நண்பர்களானோம். சில நேரங்களில் ஏதாவது அவசரகதியான பணிகளை முடிக்க கடினமான பணிகளை முடிக்க அரிசிமூட்டை (மேலாளருக்கு அரிசிமூட்டையென்ற பட்டப்பெயரும் வைத்தது இவன்தான்) தேடுவது எங்கள் இருவரையாகத்தான் இருக்கும் இருவருக்குமே தொழிலில் அதிகப்படியான ஆர்வம் ஆதலால் இருவருமே மிக விரைவாகவே பணி கற்றுக்கொண்டோம். இருவரும் தனித்தனியாக பணிபுரியும் பொழுது போட்டி போட்டுக்கொண்டு வேலை செய்வோம். பின்பு வார இறுதிகளில் நான் தேனியிலிருக்கும் என்வீட்டிற்கு சென்றுவிடுவேன். அவன் அருப்புக்கோட்டையிலிருக்கும் அவனுடைய வீட்டிற்கு சென்றுவிடுவான். ஆரம்பத்தில்தான் இப்படியிருந்தது நாட்கள் ஆக ஆக வீட்டிற்கு மாதமொருமுறை மட்டுமே சென்று வந்தோம் விடுமுறை நாட்களில் மதுரையிலிருக்கும் ஒவ்வொரு ஏரியாவையும் சுற்றுவது, சினிமாவுக்கு செல்வது , அரட்டையடிப்பது இப்படி மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தது.

அப்பொழுது திருப்பரங்குன்றம் தியாகராசர்கல்லூரி காம்பஸில் இருக்கும் தேன்கிணறில் பணிபுரிந்த சமயம் அருகிலிருந்த தியாகராசர்கல்லூரி பேருந்துநிலையத்தில் அமர்ந்து சைட் அடித்துக்கொண்டே அருகிலிருக்கும் டீக்கடையில் டீ சாப்பிட்டுக்கொண்டிருக்கும்பொழுது என்னுடைய டீயில் ஈ விழுந்துவிட்டது வேற டீ சொல்லவாடான்னு கேட்டான் மண்ணுல இருந்து வர்ற தண்ணியில ஏதேதோ விழுந்து கிடக்குது அதையே குடிக்கிறோம் ஆஃப்ட்ரால் ஈதானடான்னு ஈயத்தூக்கிப்போட்டு டீயகுடிக்கறதுல தப்பேயில்லையென்று லாஜிக் இல்லாமல் எதையோ சொல்லப்போக இன்றுவரைக்கும் என்னை கும்முவதற்கு அதை பயன்படுத்துகிறான். 

ஒரு நாள் மொபைலில் யாரையோ சத்தமாக திட்டிக்கொண்டிருந்தான் யார்டா அது ஏன் திட்டறன்னு கேட்டால் அது தன்னுடைய மாமன் மகளென்றும் அவள் தன்னை காதலிப்பதாகவும், அது தனக்கு பிடிக்கவில்லையெனவும் அதனால்தான் திட்டினேன் என்றான். சின்னக்குழந்தையில நான் தூக்கி வைத்து விளையாடிய பொண்ணுடா காதலியா பார்க்க மனசு வரலை அதான் நல்லா திட்டிவிட்டுட்டேன்னு சொன்னான். நாளாக நாளாக அந்தப்பெண் இவனுக்கு தரும் அன்புத்தொல்லைகள் அதிகமாகிக்கொண்டேதான் சென்றதே தவிர குறையவேயில்லை இவனும் மசியவில்லை.அந்தப்பெண்ணிடம் என்னைப்பற்றி கூறியிருப்பான் போலும் ஒரு நாள் இந்தாடா உன்கிட்ட பேசணுமாம் பேசு என்று மொபைலை என்கையில் கொடுத்துவிட்டான் பேசிய அந்தப்பெண் அண்ணா நான் தான் சரண்யா பேசறேண்ணா அவருக்கு நீங்களாவது எடுத்துச் சொல்லக்கூடாதா நான் அவங்கள விரும்புறேன் அண்ணா அவங்களை எப்படியாவது சம்மதிக்க வைங்களேன் என்று கூறினாள்.

இதுவரையிலும் அவனை எங்குமே நவநீ நவநீ என்று அழைத்துவந்த நான் அந்தப்பெண் என்னை அண்ணாவென்று கூறியதிலிருந்து அவனை மாப்ள என்று அழைக்கலானேன். மாப்ள ஏண்டா ஒரு பொண்ணு இம்புட்டு தூரம் உன்மேல ப்ரியம் வச்சிருக்கா நீ என்னடான்னா அதை உதாசீனம் பண்ற ஆனாலும் உனக்கு இம்புட்டு வீம்பு ஆகாதுடான்னு மட்டுமே சொல்ல முடிந்தது, அவனுடைய மனசை மாற்றமுடியவில்லை. ஒருநாள் பழங்காநத்தத்திலிருக்கும் ஜெயம் தியேட்டரில் நான் இவன் இன்னொரு நண்பன் மூவரும் சேர்ந்து பருத்திவீரன் படத்திற்கு சென்றிருந்தோம். படம் முடிந்து வந்ததிலிருந்து இவனுடைய நடவடிக்கைகளில் சில மாற்றங்கள் தெரிந்தது. மாப்ள ஒகே சொல்லிட்டேண்டா என்று சில நாட்கள் கழித்து அவன் சொன்னதும் மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தது . எப்படிடா மாப்ள என்றதும் பருத்திவீரன் படம் பார்த்ததிலிருந்து ஒரு மாதிரியாகிடுச்சுடா மாப்ள அதான்ன்னு வழிஞ்சான். இப்பவும் பருத்திவீரன் படமோ பாடல்களோ பார்க்கும்பொழுது இவனுடைய அந்த வழியல் ஞாபகம் வந்து எனக்குள்ளே நமுட்டு சிரிப்பு சிரித்துக்கொள்வேன். திரைப்படங்கள் மனித மனங்கள் வரை ஊடுருவிச்செல்லும் என்பது அப்பொழுதுதான் எனக்கு தெரிந்தது. அதற்கு பிறகு மாப்ளையின் மொபைல் பில்லோடு சேர்ந்து காதலும் செழித்து வளர்ந்தது.

காதல்னா எதிர்ப்பு இருக்கத்தானே செய்யும் இவர்கள் காதலுக்கும் எதிர்ப்பு இருந்தது, இவன் வீட்டில் எந்தபிரச்சினையும் இல்லை அந்தப்பெண் வீட்டில் கடும் எதிர்ப்பு . இவனும் அவர்கள் வீட்டில் சொன்ன அந்தஸ்து பிரச்சினைக்காகவே வெளிநாடு சென்று நல்ல ஒரு நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் பணிபுரிந்தான். அதற்குபிறகும் அவர்கள் வீட்டில் எதிர்ப்பு சொல்லியே வந்தனர். அவர்களிடம் நேரில் சென்று பேசிப்பார்த்துவிடுவது அதாவது இரண்டில் ஒரு முடிவு தெரிந்து கொள்வதற்கு ஊருக்கு சென்று எப்படியோ அவர்கள் வீட்டில் சம்மதம் வாங்கிவிட்டான். இதோ இன்று அவனுக்கு திருமணம் என்னால் மாப்பிள்ளை தோழனாக கூட இருக்கமுடியவில்லை. என் வாழ்க்கையில் நான் இழந்த மிக முக்கியமான தருணங்களில் இதுவும் ஒன்று.கண்ணீர் வரத்தான் செய்கிறது அது இயலாமையால் வந்தது அல்ல நாம பார்த்து வளர்ந்த காதல் வெற்றிபெற்று கல்யாணத்தில் முடியுறப்போ கூடவே இல்லாமல் போய்விட்டோமே என்ற ஆதங்கம் கேவல் அவ்வளவே மற்றபடி இந்த திருமணத்தால் அளவுகடந்த  ஆனந்தமடைந்தவன் என்ற முறையில் பெருமையெனக்கு. என் வாழ்த்துகளை என் அம்மா அப்பா உன்னிடம் சேர்த்துவிடுவார்கள் ஏற்றுக்கொள்டா மாப்ள..!

சரண்யா நீ நினைச்சத சாதிச்சிட்ட பார்த்தியா இதேமாதிரியே எல்லா விஷயத்திலும் மன உறுதியோடு இருந்தா கண்டிப்பா வெற்றி நிச்சயம். மாப்ளைய கண்கலங்காம பார்த்துக்கம்மா ...!

சரண்யாநவநீதகிருஷ்ணன் இருவருக்கும் இல்லறம் சிறக்க , இன்பங்கள் வந்திட துன்பங்கள் பறந்திட மனம் நிறைந்த மணநாள் வாழ்த்துகள் நீங்கள் இருவரும் இன்று போலவே என்றும் மகிழ்ச்சியுடன் இருக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். GOD BLESS YOU..!


Post Comment

27 comments:

Trackback by அகல்விளக்கு June 6, 2011 at 10:07 AM said...

இல்லற வாழ்வு சிறக்கட்டும்...

திருமண வாழ்த்துக்கள்...

Trackback by ரேவா June 6, 2011 at 10:20 AM said...

கமெண்ட் பாக்ஸ் ஓபன் பண்ணிட்டேங்க போல.....

Trackback by ரேவா June 6, 2011 at 10:23 AM said...

என்னுடைய வாழ்த்துக்களையும் இணைத்துக்கொள்ளுங்கள் வசந்த்...மணமக்கள் பல்லாண்டு, குறைவின்றி வாழ, அன்பெனும் ஆண்டவனை வேண்டிக்கொள்ளகிறேன்....

திருமண வாழ்த்துக்கள் :-)

அதோடு நட்பை பற்றிய பகிர்தலும், உங்கள் புரிதலும், ஏக்கமும் பதிவில் அழகாய் தெரிகிறது...

Trackback by நிலாமகள் June 6, 2011 at 10:40 AM said...

நெகிழ்வான‌ ந‌ட்பு! ம‌கிழ்வுட‌ன் வாழ்க‌!! ந‌வ‌நீக்கும் ச‌ர‌ண்யாவுக்கும் எங்க‌ள் அன்பும் ஆசியும்!!

Trackback by ஹேமா June 6, 2011 at 12:54 PM said...

ஒற்றை நட்பானாலும் இப்படிப்பட்ட உண்மையாண நட்புக் கிடைக்கவும் ஒரு அதிஸ்டம் வேணும்.உங்கள் நண்பணுக்கும் அவர் துணைக்கும் என் வாழ்த்துகள்.சேர்த்துவிடுங்கள் வசந்த் !

Trackback by ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) June 6, 2011 at 1:09 PM said...

திருமண வாழ்த்துக்கள்...

Anonymous — June 6, 2011 at 4:03 PM said...

வாழ்க பல்லாண்டு உங்கள் நட்பும் அவர்களின் திருமண பந்தமும்..

Trackback by valli June 6, 2011 at 7:22 PM said...

ரொம்ப தைரியம்! உங்க தங்கைக்கு

வாழ்த்துகள்! மணமக்களுக்கு

Trackback by சுபத்ரா June 6, 2011 at 9:27 PM said...

அழகான எழுத்துநடை வசந்த். உங்கள் நண்பருக்கும் தங்கைக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்! God Bless Them!!

Trackback by உணவு உலகம் June 7, 2011 at 3:35 AM said...

அழகாய் எடுத்துரைத்த விதம் அருமை. எனது வாழ்த்துக்கள்: உங்கள் நட்பிற்கும், நண்பரின் மண வாழ்க்கைக்கும்.

Trackback by சுசி June 7, 2011 at 4:05 PM said...

அழகான, நெகிழ்வான வாழ்த்து வசந்த்.

மணமக்கள் இருவருக்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்.

Trackback by kishore June 7, 2011 at 7:34 PM said...

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.. உங்க தங்கச்சியையும் மாப்பிளையும் விசாரிச்சதா சொல்லுங்க..

Trackback by அப்பாவி தங்கமணி June 7, 2011 at 8:00 PM said...

வாவ்...சூப்பர் காதல் கதை... கதையல்ல நிஜம்னு புரியுதுங்க... உங்கள் நண்பருக்கு வாழ்த்துக்கள்

Anonymous — June 9, 2011 at 3:56 PM said...

வாழ்த்துக்கள் உங்கள் நண்பனுக்கு...

Trackback by Rishi June 13, 2011 at 12:24 PM said...

நண்பர்களே! எமது கவிதைகளையும் பார்வையிட வந்தால் மிக மகிழ்வேன்..
http://rishisanthoshi.wordpress.com/

Trackback by Sadhu June 14, 2011 at 9:10 AM said...

மேலும் வாசிக்க....

Do Visit

http://www.verysadhu.blogspot.com/

Trackback by 'பரிவை' சே.குமார் June 14, 2011 at 12:34 PM said...

இல்லற வாழ்வு சிறக்கட்டும்...

Trackback by Unknown June 14, 2011 at 3:12 PM said...

இப்படியான நல்ல நட்பு கிடைப்பது மிக மிக அரிது...

இல்லறம் சிறக்க வாழ்த்துகின்றேன்இ

Trackback by கௌதமன் June 16, 2011 at 6:20 AM said...

மணமக்களுக்கு எங்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாழ்க வளமுடன், வாழ்க பல்லாண்டு.

Trackback by jithkamaljewelss June 24, 2011 at 7:12 PM said...

அதனாலதான் சொல்றேன்....வெளிநாடு போய்தான் சம்பாதிக்கணுமா....?

அப்புறம் இந்த மாதிரி சந்தோஷமான தருணங்களை நிச்சயமா இழந்து ஆக வேண்டி இருக்கு பார்த்திங்களா....

Trackback by jithkamaljewelss June 24, 2011 at 7:13 PM said...

உங்க நண்பருக்கு திருமண நல்வாழ்த்துக்கள் பல..........

Trackback by ஸ்ரீராம். June 26, 2011 at 2:22 PM said...

உங்கள் நட்புக் குறிப்புகள் அருமை, இனிமை. எல்லோர் வாழ்விலும் இப்படி இனிய தருணங்களும் நினைவுகளும் உண்டு. உங்கள் நண்பருக்கும் காதலில் ஜெயித்த அவர் காதலி/மனைவிக்கும் எங்கள் வாழ்த்துகள்.

Anonymous — July 9, 2011 at 8:28 AM said...

திருமண நல்வாழ்த்துக்கள் பல ....... Gayathri.M

Trackback by Dhanalakshmi July 16, 2011 at 11:01 AM said...

ungal natpu melum sezhikkattum....
thangal nanbaruku iniya thiurmana vazhthukkal....

Trackback by KRICONS July 23, 2011 at 8:52 PM said...

நண்பேன்டா.....

Anonymous — July 26, 2011 at 8:46 AM said...

என்னுடைய வாழ்த்துக்களையும் இணைத்துக்கொள்ளுங்கள்...

முதல் முதலாய் நுழைகிறேன்...அருமை நண்பரே..

Trackback by இந்திரா August 3, 2011 at 8:53 AM said...

திருமண வாழ்த்துக்கள்.

உங்கள் நட்பும் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

அப்புறம்ம்ம்...
ஏதோ சொல்ல நெனச்சேனே..
ம்ம்ம்.. ஞாபகம் வந்திடுச்சு..

”நண்பேன்டா..”