முத்தப்பால் - முத்தக்குறள்கள் (U/A)

| April 18, 2011 | |

முத்தப்பால் 
முத்தம் முதல இன்ப மெல்லாம் காதலி
பகவன் முதற்றே உலகு

முத்தமிட சத்தமின்றி முத்தமிட்ட பின்
பெறுக அதற்கு தக

முத்தப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
காமன் அடிசேரா தார்

காதலித்த பொழுதின் பெரிதுவக்கும் தன்முத்தத்தை
முதல்முத்தம் எனக்கேட்ட காதலி,

முத்தம் உயிருக்குள் உய்க்கும் முத்தமிடாமை
உயிரையும் எடுத்து விடும்

யாகாவா ராயினும் இதழ்காக்க காவாக்கல்
சோகப்பர் கற்பிழுக்குப் பட்டு

முத்ததோடு ஒத்த கூடல் பலகற்றும்
கல்லார் அதிர்ஷ்டமிலா தார்

முத்தம் எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
துன்பம் இலாத இன்பம்

எல்லா முத்தமும் முத்தமல்ல காதலர்க்கு
இதழ் முத்தமே முத்தம்

தொட்டணைத் தூறும் முத்தம் மாந்தர்க்கு
உணர்ச்சியை தூறும் காமம்

முத்தத்துள் முத்தம் இதழ்முத்தம் அம்முத்தம்
முத்ததிற்க் கெல்லாம் தலை

இதழுக்கு முத்தமில்லாத பொழுது சிறிது
கன்னத்திற்கும் ஈயப் படும்

எம்முத்தம் யார்யார்வாய் கொடுப்பினும் அம்முத்தம்
மெய்முத்தம் காண்ப தறிவு

உடலால் ஆகாதெனினும் முத்தம் தன்
மெய்வருத்த உணர்ச்சி தரும் - முத்தள்ளுவர்
,

Post Comment

20 comments:

Trackback by Mahan.Thamesh April 18, 2011 at 4:02 AM said...

SUPPER MUTHTHA KURAL ANNNE

Trackback by சுதர்ஷன் April 18, 2011 at 5:59 AM said...

super.. :D முத்தம் உயிருக்குள் உய்க்கும் முத்தமிடாமை
உயிரையும் எடுத்து விடும் !!!!

Anonymous — April 18, 2011 at 6:40 AM said...

பெண்டாஸ்டிக் முத்தக் குறள்கள் மச்சி!
//இதழுக்கு முத்தமில்லாத பொழுது சிறிது
கன்னத்திற்கும் ஈயப் படும் //

:))

Trackback by Nagasubramanian April 18, 2011 at 8:53 AM said...

யப்பா சாமி! ரூம் போட்டு யோசிப்பீங்களோ?

Trackback by இமா க்றிஸ் April 18, 2011 at 9:05 AM said...

;))

Trackback by சுசி April 18, 2011 at 12:27 PM said...

முத்தள்ளுவரே.. பின்னிட்டேள் போங்கோ..

எல்லாமே செம :))

Trackback by ஹேமா April 18, 2011 at 2:40 PM said...

முத்தள்ளுவர் புகழ் வாழ்க வளர்க !

Trackback by பெசொவி April 18, 2011 at 5:36 PM said...

எம்முத்தம் யார்யார்வாய்க் கொடுப்பினும் அம்முத்தக்
கறைநீக்கி வீட்டுக்கு செல்
(ஏதோ என்னால முடிஞ்சா ஒரு பிற்சேர்க்கை)

Trackback by வால்பையன் April 18, 2011 at 5:41 PM said...

நல்லாயிருக்கு நண்பா!

Trackback by Unknown April 18, 2011 at 6:23 PM said...

திருவள்ளுவருக்கே போட்டியா மாறிட்டீங்க வசந்த் சார், பிரமாதம்

Anonymous — April 19, 2011 at 1:21 PM said...

முத்தள்ளுவருக்கு வாழ்த்துக்கள்..
குறள்கள் அனைத்தும் அசத்தல்..

Trackback by ப்ரியமுடன் வசந்த் April 20, 2011 at 12:34 AM said...

@ மகான் தமேஷ் எப்பூடிலாம் பேர் வைக்கிறாய்ங்கய்யா ஆவ்வ் நன்றி

@ சுதர்ஷன் நன்றிங்க :)

@ பாலா நன்றி மச்சி

@ நாகசுப்ரமணியன் பின்ன? :)))

@ நன்றி இமா

@ நன்றி சுசிக்கா எல்லாம் அவன் செயல் ஹ ஹ ஹா

@ நன்றி ஹேம்ஸ்

@ பெயர் சொல்ல விருப்பமில்லை தலீவா கலக்குறேளே

@ வால் பையன் நன்றி தல

@ இரவு வானம் அது சரி இந்த உலகம் என்னைய சும்மாவா விடும் ?? நன்றி பாஸ்

@ நன்றி இந்து..!

Trackback by sulthanonline April 20, 2011 at 5:51 AM said...

muththalluvar kural anaiththum superb nalla viththiyaasamaana muyarchi .

Trackback by Unknown April 20, 2011 at 6:12 AM said...

வாழும் வள்ளுவரே! நீர் வாழ்க!!

Trackback by ஆனந்தி.. April 20, 2011 at 10:09 AM said...

தங்கள் ப்லாக் ஐ பற்றி வலைச்சரத்தில் கூறி இருக்கிறேன்..
http://blogintamil.blogspot.com/2011/04/beautiful-blogs.html

Trackback by போளூர் தயாநிதி April 21, 2011 at 2:54 PM said...

முத்தள்ளுவருக்கு வாழ்த்துக்கள்..
குறள்கள் அனைத்தும் அசத்தல்..

Trackback by மாணவன் April 22, 2011 at 6:20 AM said...

முத்து முத்தாய் உள்ளது முத்தக்குறல்கள்....சூப்பர் :)

Trackback by செல்வேந்திரன் April 23, 2011 at 12:01 AM said...

:)) nice one

Trackback by ப்ரியமுடன் வசந்த் April 23, 2011 at 12:07 AM said...

@ நன்றி சுல்தான்

@ நன்றி கே ஆர் பி மாம்ஸ்

@ நன்றி ஆனந்தி

@ நன்றி போளூர் தயாநிதி

@ நன்றி மாணவன்

@ நன்றி செல்வேந்திரன்

Trackback by ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) April 25, 2011 at 11:04 AM said...

super machchi..