விஜயகாந்தின் POOR PERFORMANCE !!!

| April 2, 2011 | |
தொடர்ந்து தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அவர்களின் அனுபவமில்லா அரசியல் விளையாட்டு அவரை இந்த தேர்தலில் காணாமல் போய்விடச்செய்யக்கூடிய நிலையை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.விஜயகாந்த் மீது வடிவேல் தாக்குதல் :

முன் விரோதம் காரணமாக நடிகர் வடிவேலுவிடம் செய்த தகராறு தற்பொழுது அவரை விஜயகாந்துக்கு எதிராக தண்ணியில் மிதக்கும் கப்பல்ல இருப்பவர் பெயர்தான் கேப்டன் எப்பவும் தண்ணியில் மிதப்பவர் பெயர் கேப்டன் இல்லை என்பது மாதிரியான தரக்குறைவாக பேச வைத்திருக்கிறது. பொது இடத்தில் வடிவேலுவின் இந்த வார்த்தை தாக்குதல் தவறாக பட்டாலும் அவரது  இமேஜை சிறிது காலி செய்திருக்கிறது.பிரச்சார நேரத்தில் அவரது மனவலிமையை ஆரம்பத்திலேயே காலிசெய்வதற்கு தி.மு.க. தன் தந்திரத்தை சரியாக பயன் படுத்தியிருக்கிற பௌலர்தான் வடிவேலு.விக்கெட் விழுகவில்லை என்றாலும் பேட்ஸ்மேனின் உடல் மன வலிமையை காலி செய்திருக்கிறது.கூட்டணிக்குள் ஒற்றுமையின்மை :

விஜயகாந்த் பிரச்சாரத்தின் போது அதிமுக தொண்டர்களுடன் கட்சிக்கொடி கட்டிய விவாகாரத்தில் எதிர்ப்புகாட்டியதில் இவரின் கூட்டணி ஓற்றுமை பல்லிளிக்கிறது. விக்கெட்டுகளுக்கிடையில் ஓடுவதில் விஜயகாந்தின் தவறான போக்கினால் அவரது விக்கெட்டை இழந்தார்.
வேட்பாளர் மீது தாக்குதல் :

தனது சொந்தக்கட்சியின் வேட்பாளரை பிரச்சாரத்தின்போது பொது இடத்தில் வைத்து தாக்கியிருப்பது விஜயகாந்த் மீது வடிவேலு சொன்ன கூற்று உண்மையென்பதுபோல் நிதானமிழந்து நடந்து கொண்டது அரசியலில் அவருக்கு ஒரு கட்சியின் தலைவராக இருக்க தகுதியில்லை என்பதை காட்டுகிறது. என் கட்சிகாரனை அப்படித்தான் அடிப்பேன் உதைப்பேன் என்று சவடால் பேசியிருப்பது கண்டனத்துக்குரியது. தன் தலை மீது தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொண்டிருக்கிறார் விஜயகாந்த்.பிரச்சாரத்தின் போது உளறல் :

தேர்தல் பிரச்சாரத்தின் போது அண்ணாவின் ஆவி பேசியதாக உளறியிருப்பதும் , முன்னுக்குபின்னான தவறான தகவல்களை சொல்லுவது , கண்ணீர் விட்டு கதறுவது என இவரின் உளறலை மக்கள் நம்புவதாக தெரியவில்லை.இந்த தேர்தலில் விஜயகாந்திற்கு மக்கள் சரியான பாடம் புகட்டி அவரை மூலையில் உட்கார வைப்பார்கள்.விஜயகாந்த் அவர்களே உங்களைத்தான் தமிழ்நாட்டின் எதிர்காலம் என்று நம்பிக்கொண்டிருக்கும் பொதுமக்களை தங்களின் தவறான நடத்தையினால் , செயல்களினால் அனுபவமற்ற அரசியல்தனத்தால் ஏமாற்றிவிட்டீர்கள். இனியாவாது திருந்துவீர்களா?

Post Comment

38 comments:

Trackback by சக்தி கல்வி மையம் April 2, 2011 at 7:42 AM said...

அருமையான பதிவு... காமெடியான படங்கள்... இன்னும் சிரிச்சுகிட்டே இருக்கேன்..

Trackback by ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) April 2, 2011 at 12:25 PM said...

யாரடா அவன் டாக்டர கலாய்ச்சது?

Trackback by sulthanonline April 2, 2011 at 12:31 PM said...

அரசியலுக்கு இவர் சரிப்பட்டு வரமாட்டார்.

Anonymous — April 2, 2011 at 12:45 PM said...

ஆடுகளம் அமர்க்களம் வசந்த்...

Trackback by ரேவா April 2, 2011 at 2:23 PM said...

வேர்ல்ட் கப் final க்கு இன்னைக்கு ரிசல்ட் தெரிஞ்சுடும்...
-- ஆனா இவங்க ஆடுற கேம் தான் ரொம்ப குழப்பமா அஹ இருக்கு...பொறுத்திருந்து
பாக்கலாம்... பாஸ் எப்போவும் போல அசத்தல் பதிவு...வாழ்த்துக்கள்

Trackback by Unknown April 2, 2011 at 2:41 PM said...

இவர் மற்றவர்களை கண்டபடி விமர்சிக்கும் போதே இவருக்கும் இது போன்ற நிலை வரும் என நினைத்திருந்தேன் நடந்துவிட்டது, நிதானம் இல்லாதவர் நித்திரை இல்லாது போவார் :-)

Trackback by சுசி April 2, 2011 at 3:13 PM said...

கலக்கல் சிரிப்பு.

Trackback by Jey April 2, 2011 at 4:03 PM said...

வித்தியாசமான அரசியல் அலசல். பங்காளி சரியாத்தான்யா சொல்லியிருக்கே....

Trackback by பொன் மாலை பொழுது April 2, 2011 at 8:28 PM said...

// விஜயகாந்த் அவர்களே உங்களைத்தான் தமிழ்நாட்டின் எதிர்காலம் என்று நம்பிக்கொண்டிருக்கும் பொதுமக்களை தங்களின் தவறான நடத்தையினால் ,...............///

நிச்சயமாக தமிழக மக்கள் இவரை தமிழ் நாட்டின் எதிர்காலமாக என்னவே இல்லை. இவ்வாறு எதனை ஆதாரமாக வைத்து எழுதுகிறீர்கள் என்று தெரியவில்லை.வெறும்
பத்து சதவீத ஓட்டுக்களை பெற்றுவிட்டதால் மட்டும் அவர்தான் தமிழர்களின் எதிர்காலமா?? நீங்கள் எல்லாம் கூட இப்படி ஒரு கருத்தினை எழுதுவது வருத்தம் அளிக்கும் ஒன்றாகும்.அவருக்கும் ஒரு கூட்டம் இருந்தது. இருக்கிறது. அவ்வளவே அதனை தவறாக புரிந்துகொண்ட இவர் செயல்பட ஆரம்பித்தால்தான் மேலும் சரிவை சந்திப்பார். அரசியலுக்கு வர இவர்களுக்கு வெறும் ஆத்திரம் மட்டுமே போதும் என நினைக்கும் நபர்களில் இவரும் ஒருவர் வசத்.

Trackback by மாணவன் April 3, 2011 at 5:02 AM said...

super :)

Trackback by ஸ்ரீராம். April 3, 2011 at 5:16 AM said...

தமிழ்நாட்டின் எதிர்காலமாக இவரையா....இல்லை வசந்த்..நிச்சயம் அவர் மனைவியே கூட அபபடி எண்ணியிருக்க மாட்டார்! முக்கியமான நேரத்தில் முக்கிய கட்சிகளிடமிருந்து ஒன்பது அல்லது பத்து சதவிகித வாக்குகளைப் பிரிக்கும் அணி...அவ்வளவுதான்..எல்லோரும் எம் ஜி ஆர் என் டி ஆராகி விட முடியாது.

Trackback by பன்னிக்குட்டி ராம்சாமி April 3, 2011 at 8:57 AM said...

சூப்பர்யா..... கேப்டன் எல்லாத்தையுமே சினிமா ஷூட்டிங் மாதிரி நெனச்சிட்டாரு போல....!
(டெம்ப்ளேட் அசத்தல் வசந்த்!)

Anonymous — April 3, 2011 at 11:04 AM said...

Some more portion of post is accepted/agreed.
First of all.., These actors should be vanished from Politics.., then only VIJAY, SEEMAAN like people understand what is Politics?? It's not just like that an Cinema Shooting/Action..,
and just giving 10 iron boxes/3-4 three wheel rickshaws/tailoring machines., and shown they are Great PAARI/ KAARI and Kadeyezhu VALLALS.
Whose are following these IDIOTS are simply wasting their Life and destroy the SOciety.

Trackback by Unknown April 3, 2011 at 11:36 AM said...

கிரிக்கெட் சீஸனில் கிரிக்கெட்டையே பயன்படுத்தி விஜயகாந்தின் சொதப்பல் ஆட்டத்தைப் பற்றிய ரன்னிங் கமெண்டரி நன்றாக உள்ளது.
ஏதாவது வாரப் பத்திரிகையில் வெளியாகியிருந்தால் மிகப் பிரபலமாகியிருக்கும்.

Trackback by ஜோதிஜி April 3, 2011 at 11:54 AM said...

தலைப்பு வடிவமைப்பு ரொம்ப அற்புதம்.

Trackback by Thameez April 3, 2011 at 2:28 PM said...

Whatever you write Tamilians are going to elect him it seems. How ADMK cadres work along with him when Vijayakanth cadres burnt effigy of Jayalalitha?

Trackback by Sriakila April 3, 2011 at 5:35 PM said...

உட்காந்து யோசிப்பீங்களோ...:))))

Trackback by Jayadev Das April 3, 2011 at 9:20 PM said...

கிரிக்கெட் ஜுரம் பரவியிருக்கும் நேரத்தில், அரசியல் செய்தியை இப்படி குடுத்தாத்தான் எடுபடும் என்ற உங்க ஐடியா சூப்பர்!!

Trackback by ப்ரியமுடன் வசந்த் April 3, 2011 at 10:25 PM said...

//!* வேடந்தாங்கல் - கருன் *! said...
அருமையான பதிவு... காமெடியான படங்கள்... இன்னும் சிரிச்சுகிட்டே இருக்கேன்..//

ஆக்சுவலா இந்த கார்ட்டூன்ஸ் மட்டும் போடலாம்ன்னுதான் பார்த்தேன் சிலது புரியாம போயி சிரிக்காம போயிடுவாங்கன்னுதான் சிலவரிகள் எழுதுனேன் நன்றி கருன்

Trackback by ப்ரியமுடன் வசந்த் April 4, 2011 at 12:43 AM said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
யாரடா அவன் டாக்டர கலாய்ச்சது?//

ஓஹ் உங்க தலைவரா ? என்ன மாப்பு உங்களுக்கு சென்னையில எதாவது ஒருதொகுதி கிடைக்குன்னு எதிர்பார்த்தேன் ஏமாத்திட்டாரே உங்க தலீவர் :-)))

Trackback by ப்ரியமுடன் வசந்த் April 4, 2011 at 12:45 AM said...

//sulthanonline said...
அரசியலுக்கு இவர் சரிப்பட்டு வரமாட்டார்.//

அதேதான் பாஸ் ஆனாலும் இருக்கிற தொண்டர் படைகளை தக்க வச்சிகிட இன்னும் இவர் கற்றுக்கொள்ளவேண்டும்..

நன்றி பாஸ் தொடர் ஆதரவிற்க்கு :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் April 4, 2011 at 1:22 AM said...

//தமிழரசி said...
ஆடுகளம் அமர்க்களம் வசந்த்...//

நன்றி தமிழரசி (பே.சொ.பி) கிகிகிகி

Trackback by ப்ரியமுடன் வசந்த் April 4, 2011 at 1:52 AM said...

//ரேவா said...
வேர்ல்ட் கப் final க்கு இன்னைக்கு ரிசல்ட் தெரிஞ்சுடும்...
-- ஆனா இவங்க ஆடுற கேம் தான் ரொம்ப குழப்பமா அஹ இருக்கு...பொறுத்திருந்து
பாக்கலாம்... பாஸ் எப்போவும் போல அசத்தல் பதிவு...வாழ்த்துக்கள்//

அம்மா சாரி ஆமா

நன்றி ரேவதி :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் April 4, 2011 at 1:53 AM said...

//
இரவு வானம் said...
இவர் மற்றவர்களை கண்டபடி விமர்சிக்கும் போதே இவருக்கும் இது போன்ற நிலை வரும் என நினைத்திருந்தேன் நடந்துவிட்டது, நிதானம் இல்லாதவர் நித்திரை இல்லாது போவார் :-)//

கடைசி பஞ்ச் லைனை ரசித்தேன் பாஸ் பார்ப்போம் என்ன நடக்கிறதென்று..! நன்றி இரவு வானம்

Trackback by ப்ரியமுடன் வசந்த் April 4, 2011 at 1:55 AM said...

//சுசி said...
கலக்கல் சிரிப்பு.//

எப்படி இது சாத்தியம் ? நான் ஒன்றும் சிரிப்பை மிக்ஸியில் அரைத்துகொடுக்கவில்லையே சுசிக்கா :-)))))

Trackback by ப்ரியமுடன் வசந்த் April 4, 2011 at 1:56 AM said...

//ey said...
வித்தியாசமான அரசியல் அலசல். பங்காளி சரியாத்தான்யா சொல்லியிருக்கே....//

நன்றி பங்காளி ஊர்பக்கம் யார்கிட்டயும் போட்டுக்குடுத்துடாத பங்காளி போட்டுத்தள்ளிடுவாய்ங்க ஈப்பினாலு மச்சிவாண்டுலுகாது ம்ம் :))

Trackback by ப்ரியமுடன் வசந்த் April 4, 2011 at 2:00 AM said...

//கக்கு - மாணிக்கம் said...
// விஜயகாந்த் அவர்களே உங்களைத்தான் தமிழ்நாட்டின் எதிர்காலம் என்று நம்பிக்கொண்டிருக்கும் பொதுமக்களை தங்களின் தவறான நடத்தையினால் ,...............///

நிச்சயமாக தமிழக மக்கள் இவரை தமிழ் நாட்டின் எதிர்காலமாக என்னவே இல்லை. இவ்வாறு எதனை ஆதாரமாக வைத்து எழுதுகிறீர்கள் என்று தெரியவில்லை.வெறும்
பத்து சதவீத ஓட்டுக்களை பெற்றுவிட்டதால் மட்டும் அவர்தான் தமிழர்களின் எதிர்காலமா?? நீங்கள் எல்லாம் கூட இப்படி ஒரு கருத்தினை எழுதுவது வருத்தம் அளிக்கும் ஒன்றாகும்.அவருக்கும் ஒரு கூட்டம் இருந்தது. இருக்கிறது. அவ்வளவே அதனை தவறாக புரிந்துகொண்ட இவர் செயல்பட ஆரம்பித்தால்தான் மேலும் சரிவை சந்திப்பார். அரசியலுக்கு வர இவர்களுக்கு வெறும் ஆத்திரம் மட்டுமே போதும் என நினைக்கும் நபர்களில் இவரும் ஒருவர் வசத்.//

இல்லை மாணிக்கம் சார் தி.மு.க. மற்றும் அ.தி.மு.கவிற்கு மாற்றாக இவர் இருப்பார் என்றுதானே மக்கள் இவரின் முதல் தேர்தலில் சில ஆயிரம் ஓட்டுக்கள் இட்டனர். ஒரு வேளை இவர் வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தவர்கள்தானே ஓட்டுப்போட்டிருக்கின்றனர்.அதைத்தான் சொன்னேன். ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பதற்கும் இவர் சரியான உதாரணாம்

நன்றி மாணிக்கம் சார்

Trackback by ப்ரியமுடன் வசந்த் April 4, 2011 at 2:00 AM said...

//மாணவன் said...
super :)//

நன்றி மாணவன் :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் April 4, 2011 at 2:02 AM said...

//ஸ்ரீராம். said...
தமிழ்நாட்டின் எதிர்காலமாக இவரையா....இல்லை வசந்த்..நிச்சயம் அவர் மனைவியே கூட அபபடி எண்ணியிருக்க மாட்டார்! முக்கியமான நேரத்தில் முக்கிய கட்சிகளிடமிருந்து ஒன்பது அல்லது பத்து சதவிகித வாக்குகளைப் பிரிக்கும் அணி...அவ்வளவுதான்..எல்லோரும் எம் ஜி ஆர் என் டி ஆராகி விட முடியாது.//

எம்ஜிஆர் நடிக்கும்பொழுதே பல அரசியல் மேடைகள் கண்டவர் அண்ணாவின் கொள்கைகளை மதித்து அதன்படி நடந்தவர் . இந்த வி.காந்துக்கு திராவிடம் என்றால் என்னவென்றாவது தெரியுமா ? ஹும் :(

நன்றி ஸ்ரீராம்

Trackback by ப்ரியமுடன் வசந்த் April 4, 2011 at 2:04 AM said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
சூப்பர்யா..... கேப்டன் எல்லாத்தையுமே சினிமா ஷூட்டிங் மாதிரி நெனச்சிட்டாரு போல....!
(டெம்ப்ளேட் அசத்தல் வசந்த்!)//

ஹ ஹ ஹா சினிமா சூட்டிங்கிலாவது மெத்தப்படித்த டைரக்டர்கள் சொற்படி நடக்க இயலும் இங்கு இவர் தாந்தோன்றிதனமாக ஆட்டம் போடுகிறார்

நன்றி மாம்ஸ் :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் April 4, 2011 at 2:07 AM said...

//Sai Gokul - வேலைவாய்ப்பு தகவல்கள் said...
Some more portion of post is accepted/agreed.
First of all.., These actors should be vanished from Politics.., then only VIJAY, SEEMAAN like people understand what is Politics?? It's not just like that an Cinema Shooting/Action..,
and just giving 10 iron boxes/3-4 three wheel rickshaws/tailoring machines., and shown they are Great PAARI/ KAARI and Kadeyezhu VALLALS.
Whose are following these IDIOTS are simply wasting their Life and destroy the SOciety.//

பொத்தாம் பொதுவாய் இலவசங்கள் மக்களுக்கு வழங்குவதை தவறாக எடுக்க இயலாது கோகுல் அதாவது செய்கிறார்களே ஆட்சியில் இருப்பவர்களைப்போல் மக்கள் பணத்திலிருந்து மக்களுக்கே இலவசமாய் கொடுக்கும் சூட்சுமத்திற்கு இது எவ்வளவோ மேல் ..

நன்றி கோகுலகிருஷ்ணா

Trackback by ப்ரியமுடன் வசந்த் April 4, 2011 at 2:08 AM said...

//r.selvakkumar said...
கிரிக்கெட் சீஸனில் கிரிக்கெட்டையே பயன்படுத்தி விஜயகாந்தின் சொதப்பல் ஆட்டத்தைப் பற்றிய ரன்னிங் கமெண்டரி நன்றாக உள்ளது.
ஏதாவது வாரப் பத்திரிகையில் வெளியாகியிருந்தால் மிகப் பிரபலமாகியிருக்கும்.//

நன்றி செல்வா சார்

நானும் பிராயசப்பட்டுக்கொண்டுதான் ஒவ்வொருமுறையும் கார்ட்டுன்கள் வடிவமைத்துக்கொண்டிருக்கிறேன் பதிவுகளும் கூட ஆனால் ஒன்று கூட பத்திரிக்கையில் வருவது போல் இல்லை

Trackback by ப்ரியமுடன் வசந்த் April 4, 2011 at 2:09 AM said...

//ஜோதிஜி said...
தலைப்பு வடிவமைப்பு ரொம்ப அற்புதம்.//

நன்றி ஜோதிஜி :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் April 4, 2011 at 2:11 AM said...

// Thameez said...
Whatever you write Tamilians are going to elect him it seems. How ADMK cadres work along with him when Vijayakanth cadres burnt effigy of Jayalalitha?//

:-))))))))

எதுவேணும்னாலும் நடக்கலாம் பார்க்கலாம்

Trackback by ப்ரியமுடன் வசந்த் April 4, 2011 at 2:11 AM said...

//Sriakila said...
உட்காந்து யோசிப்பீங்களோ...:))))//

இல்லை அகில் நடந்துகிட்டே ரோசிச்சது :))

Trackback by ப்ரியமுடன் வசந்த் April 4, 2011 at 2:12 AM said...

//Jayadev Das said...
கிரிக்கெட் ஜுரம் பரவியிருக்கும் நேரத்தில், அரசியல் செய்தியை இப்படி குடுத்தாத்தான் எடுபடும் என்ற உங்க ஐடியா சூப்பர்!!//

போங்க பாஸ் எனக்கு வெட்கமா இருக்கு
:))

நன்றி பாஸ்

Trackback by உணவு உலகம் April 4, 2011 at 5:23 AM said...

வலைப்பூவின் வடிவமைப்பு அருமையாக இருக்கிறது

Trackback by VISA April 4, 2011 at 2:05 PM said...

அரசியல் சாணக்கியத்தனம் என்று ஒன்று இருப்பதாக விஜயகாந்த் இன்னும் உணர்ந்ததாக தெரியவில்லை. கொஞ்ச நாள் ஆகலாம்.