Be Careful - காதல் அணுகுண்டுகள் இருக்கின்றன

| March 24, 2011 | |

பூமிப்பந்தில் பிறந்த அழகிகளுக்கு
மத்தியில் நீயோ அழகுப்பந்தில்
பிறந்த பேரழகி..!உன்னை சுண்டினால் 
இரத்தம் வருமோ வராதோ
தெரியாது ஆனால் அழகு வரும்..!


என் இதயத்தில் 
ஓட்டை விழுவதற்கு பதில்
நீ விழுந்துவிட்டாய்..!

உனக்கு சிறுவயதில் 
காது குத்துவதற்கு பதில்
அழகை குத்திவிட்டார்கள் போல
அழகை உரித்து வைத்திருக்கிறாய்..!
தராசு தட்டிலிருக்கும் எடைக்கற்கள்
எடையை அளக்கும் என்றால்
என் மனதட்டிலிருக்கும் காதல்கற்கள்
உன் இடையை அளக்கிறது..!
உன்னிடம் என் கோபம்
பணிவன்புடன் இருப்பதற்கு
காரணம் உன் ஆணவம்
அழகன்புடன் இருக்கிறது...!பிரம்மன் உன்னை 
வரையும் பொழுது அன்புடன் என்று 
ஆரம்பித்திருப்பான் போல 
அதுதான் நீ அன்போவியமாய் இருக்கிறாய்...!சிலருக்கு பிளட் கேன்சரோ
பிரெயின் கேன்சரோ வரும்
எனக்கு ஹார்ட் கேன்சர்
வந்திருக்கிறது நீதான் காரணம்..!சாயம் போன சேலைக்கு
வர்ணம் பூசுவதைப்போல
காயமான மனதுக்கு 
அன்பை பூசுகிறாய் நீ..!என்னை இஞ்சி தின்ற மங்கி 
என்ற உன்னிடம் இல்லையில்லை
உன்னைக்கொஞ்சி தின்னும் பக்கி 
என்கிறேன் நான்..!சத்தியமா இந்த போஸ்ட்டுக்கு இவங்கதான் காரணம்

Post Comment

59 comments:

Trackback by !♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! March 24, 2011 at 6:51 AM said...

சத்தியமா இந்த போஸ்ட்டுக்கு இவங்கதான் காரணம்


this ling not work.

nnice toooo

Trackback by சேலம் தேவா March 24, 2011 at 11:36 AM said...

எல்லாக் கவிதைகளும் க்யூட்டா இருக்கு நண்பரே...தபூசங்கர் ஞாபகத்துக்கு வர்றாரு. :)

Trackback by சேலம் தேவா March 24, 2011 at 11:37 AM said...

இப்புறம் இந்த பக்கிக்கு யாராவது விளக்கம் சொன்னா தேவலை. :)

Trackback by எஸ்.கே March 24, 2011 at 12:30 PM said...

அந்த பாடலும் அருமையாக இருக்கும். உங்க கவிதையும் அந்த ஃபீல்தான் தருகிறது!

Trackback by Nagasubramanian March 24, 2011 at 2:24 PM said...

கவிதையில் தபூ ஷங்கர் டச் தெரிகிறது. அவரது பாதிப்போ?

Trackback by ரேவா March 24, 2011 at 2:24 PM said...

உன்னை சுண்டினால்
இரத்தம் வருமோ வராதோ
தெரியாது ஆனால் அழகு வரும்..!

அழகான காதல் வரிகள்...

எப்படிலாம் யோசிக்கிறேங்க?... கலக்கல்

Trackback by ரேவா March 24, 2011 at 2:27 PM said...

உன்னிடம் என் கோபம்
பணிவன்புடன் இருப்பதற்கு
காரணம் உன் ஆணவம்
அழகன்புடன் இருக்கிறது...!

அழகான அன்பால கோவம் கூட குறைஞ்சிடும்னு சூப்பர் அஹ சொல்லிருக்கேங்க.. நல்ல பக்குவப் பட்ட பார்வை..வாழ்த்துக்கள் வசந்த்

Trackback by ரேவா March 24, 2011 at 2:31 PM said...

சத்தியமா இந்த போஸ்ட்டுக்கு இவங்கதான் காரணம்...

ஹ ஹ நம்பிட்டோம்.. நம்பிட்டோம்...போங்க பாஸ்... இன்னும் சின்ன புள்ளயாவே இருக்கேங்க.....

Trackback by கத்தார் சீனு March 24, 2011 at 5:39 PM said...

கவிதைகள் அனைத்தும் அழகா இருக்குங்க வசந்த்...
வாழ்த்துக்கள்..

Trackback by Chitra March 24, 2011 at 6:42 PM said...

nice... Beautiful! :-)

Anonymous — March 24, 2011 at 11:36 PM said...

பார்த்து அண்ணே... வெடித்துவிட போகிறது...

Anonymous — March 24, 2011 at 11:43 PM said...

Be careful...

நான் என்னை சொன்னேன்...

Trackback by அப்பாவி தங்கமணி March 25, 2011 at 12:15 AM said...

//சத்தியமா இந்த போஸ்ட்டுக்கு இவங்கதான் காரணம்//
நம்பிட்டோம்...:))

நல்லா இருக்குங்க எல்லாமும்... எனக்கு ரெம்ப பிடிச்சது இது...
//என் இதயத்தில்
ஓட்டை விழுவதற்கு பதில்
நீ விழுந்துவிட்டாய்..!//

Trackback by ஹேமா March 25, 2011 at 12:19 AM said...

வசந்து...அவங்கதான் இந்தப் பதிவுக்குக் காரணம்ன்னா...சத்தியமா இப்ப அவங்களுக்கு கிட்டத்தட்ட 40-45 வயசு ஆகியிருக்கும் !

குண்டுக்காதல் கவிதைகள் அந்த நாவல் நிறப்பூக்கள்போல அழகு !

Trackback by உணவு உலகம் March 25, 2011 at 4:32 AM said...

நண்பரே, இன்றுதான் உங்கள் வலைபூ பக்கம் வந்தேன். வாச மலர்களை வாரி தூற்றியுல்லீர்கள். அருமை. அருமை.

Trackback by டக்கால்டி March 25, 2011 at 5:13 AM said...

இன்னொரு தபு ஷங்கர் உருவாகிறார்...
அருமை சகா

Trackback by சக்தி கல்வி மையம் March 25, 2011 at 2:05 PM said...

அருமையான கவித்தூரல்கள் ...
தொடர்ந்து வருவேன்..

Trackback by sulthanonline March 25, 2011 at 2:17 PM said...

//சாயம் போன சேலைக்கு
வர்ணம் பூசுவதைப்போல
காயமான மனதுக்கு
அன்பை பூசுகிறாய் நீ..!//

அனைத்தும் அருமையான கவிதைகள்

சத்தியம் பன்றதே உடைக்கிறதுக்குத்தான்னு ஜூனியர் டி.ஆர் (சிம்பு) சொல்லிருக்காரு. நாங்களும் நம்பிட்டோம் பாஸூ. உங்க சத்தியத்த..!

Trackback by goma March 25, 2011 at 2:35 PM said...

அர்ச்சனைப்பூக்கள் அருமை .
அம்மன் யாரோ?

Trackback by சுசி March 25, 2011 at 4:50 PM said...

//சிலருக்கு பிளட் கேன்சரோ
பிரெயின் கேன்சரோ வரும்
எனக்கு ஹார்ட் கேன்சர்
வந்திருக்கிறது நீதான் காரணம்..!//

செம செம செமையா இருக்குப்பா..

நீங்க நடத்துங்க இளவரசரே :) அடைப்புக்குள்ள காதல்னு
சேர்க்கணுமா என்ன ;)

Trackback by Sriakila March 25, 2011 at 8:49 PM said...

//நீயோ அழகுப்பந்தில்
பிறந்த பேரழகி..!//

எனக்கு விளையாட அந்த அழகுப்பந்து கிடைக்குமா?

//உனக்கு சிறுவயதில்
காது குத்துவதற்கு பதில்
அழகை குத்திவிட்டார்கள் போல //

அழகைங்கிறத அலகைன்னு மாத்தினா சாமி வந்துரும்ல..

//என் மனதட்டிலிருக்கும் காதல்கற்கள்
உன் இடையை அளக்கிறது..!//

அப்ப அவளோட இடை கல்லு மாதிரி இருக்கும்னு சொல்றீங்க..எங்க கொஞ்சம் அந்தப் பொண்ணோட அட்ரஸ் கொடுங்க...

//சிலருக்கு பிளட் கேன்சரோ
பிரெயின் கேன்சரோ வரும்
எனக்கு ஹார்ட் கேன்சர்
வந்திருக்கிறது நீதான் காரணம்..!//

so sad! அப்போ அந்தப்பொண்ணு தப்பிச்சிட்டா...

//சாயம் போன சேலைக்கு
வர்ணம் பூசுவதைப்போல
காயமான மனதுக்கு
அன்பை பூசுகிறாய் நீ..!//

ஏன் மருந்து வாங்க காசில்லையா வசந்த்? ப்ச்.. பாவம்!

//என்னை இஞ்சி தின்ற மங்கி
என்ற உன்னிடம் இல்லையில்லை
உன்னைக்கொஞ்சி தின்னும் பக்கி
என்கிறேன் நான்..!//

மொத்தத்துல நல்லாருக்கு பக்கி!

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 25, 2011 at 11:46 PM said...

// தோழி பிரஷா said...
சத்தியமா இந்த போஸ்ட்டுக்கு இவங்கதான் காரணம்


this ling not work.

nnice toooo//

link ஓபன் ஆவுதே பிரஷா

நன்றி..!

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 25, 2011 at 11:48 PM said...

//சேலம் தேவா said...
எல்லாக் கவிதைகளும் க்யூட்டா இருக்கு நண்பரே...தபூசங்கர் ஞாபகத்துக்கு வர்றாரு. :)//

நம்ம தலைவராச்சே அதான் போல..!

//சேலம் தேவா said...
இப்புறம் இந்த பக்கிக்கு யாராவது விளக்கம் சொன்னா தேவலை. :)//

யாருக்கு தெரியும் எங்க ரத்தினமாலா டீச்சர் என்னைய அப்பிடித்தான் திட்டும்

நன்றி தேவா..!

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 25, 2011 at 11:49 PM said...

// எஸ்.கே said...
அந்த பாடலும் அருமையாக இருக்கும். உங்க கவிதையும் அந்த ஃபீல்தான் தருகிறது!//

அப்போ நிஜமாவே இது ஃபீல்குட் போஸ்டா ?

நன்றி எஸ்.கே.!

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 25, 2011 at 11:50 PM said...

//Nagasubramanian said...
கவிதையில் தபூ ஷங்கர் டச் தெரிகிறது. அவரது பாதிப்போ?//

பின்ன சமகால காதல் கவிகளின் முடிசூடா மன்னனாச்சே அவர் அவர் பாதிப்பில்லாமல் காதல் கவிதை எப்படி எழுதுவது?

நன்றி நாகசுப்ரமணியன்

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 25, 2011 at 11:50 PM said...

//ரேவா said...
உன்னிடம் என் கோபம்
பணிவன்புடன் இருப்பதற்கு
காரணம் உன் ஆணவம்
அழகன்புடன் இருக்கிறது...!

அழகான அன்பால கோவம் கூட குறைஞ்சிடும்னு சூப்பர் அஹ சொல்லிருக்கேங்க.. நல்ல பக்குவப் பட்ட பார்வை..வாழ்த்துக்கள் வசந்த்//

மிக்க நன்றி ரேவா..!

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 25, 2011 at 11:51 PM said...

//ரேவா said...
சத்தியமா இந்த போஸ்ட்டுக்கு இவங்கதான் காரணம்...

ஹ ஹ நம்பிட்டோம்.. நம்பிட்டோம்...போங்க பாஸ்... இன்னும் சின்ன புள்ளயாவே இருக்கேங்க.....//

ஏனுங் அம்மிணி இந்த ராங்கு ?

கிகிகிகி

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 25, 2011 at 11:52 PM said...

//கத்தார் சீனு said...
கவிதைகள் அனைத்தும் அழகா இருக்குங்க வசந்த்...
வாழ்த்துக்கள்..//

மிக்க நன்றி சீனு :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 25, 2011 at 11:53 PM said...

// Chitra said...
nice... Beautiful! :-)//

நன்றி சித்ரா மேடம்!

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 25, 2011 at 11:54 PM said...

//'அ'னா 'ஆ'வன்னா said...
பார்த்து அண்ணே... வெடித்துவிட போகிறது...//

இங்க வெடிச்சா அங்க வலிக்கும் பாஸ்

:))

நன்றி அ ஆ :))))))

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 25, 2011 at 11:54 PM said...

//அப்பாவி தங்கமணி said...
//சத்தியமா இந்த போஸ்ட்டுக்கு இவங்கதான் காரணம்//
நம்பிட்டோம்...:))

நல்லா இருக்குங்க எல்லாமும்... எனக்கு ரெம்ப பிடிச்சது இது...
//என் இதயத்தில்
ஓட்டை விழுவதற்கு பதில்
நீ விழுந்துவிட்டாய்..!////

நன்றிங் தங்க்ஸ் :)))

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 25, 2011 at 11:55 PM said...

//ஹேமா said...
வசந்து...அவங்கதான் இந்தப் பதிவுக்குக் காரணம்ன்னா...சத்தியமா இப்ப அவங்களுக்கு கிட்டத்தட்ட 40-45 வயசு ஆகியிருக்கும் !

குண்டுக்காதல் கவிதைகள் அந்த நாவல் நிறப்பூக்கள்போல அழகு !//

கவிஞர் சொன்னா சரியாத்தான் இருக்கும் நன்றி ஹேமா மேடம்..!

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 25, 2011 at 11:56 PM said...

// FOOD said...
நண்பரே, இன்றுதான் உங்கள் வலைபூ பக்கம் வந்தேன். வாச மலர்களை வாரி தூற்றியுல்லீர்கள். அருமை. அருமை.
//

தங்கள் வரவு நல்வரவாகட்டும் மிக்க நன்றி பாஸ்..!

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 25, 2011 at 11:57 PM said...

//டக்கால்டி said...
இன்னொரு தபு ஷங்கர் உருவாகிறார்...
அருமை சகா//

அட அட வேணாம் சகா ஊர் உலகம் தாங்காது கிகிகிகி

நன்றி சகா..!

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 25, 2011 at 11:57 PM said...

//!* வேடந்தாங்கல் - கருன் *! said...
அருமையான கவித்தூரல்கள் ...
தொடர்ந்து வருவேன்..//

தொடர்ந்து வாருங்கள் கருன் மிக்க நன்றி..!

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 25, 2011 at 11:58 PM said...

//வsulthanonline said...
//சாயம் போன சேலைக்கு
வர்ணம் பூசுவதைப்போல
காயமான மனதுக்கு
அன்பை பூசுகிறாய் நீ..!//

அனைத்தும் அருமையான கவிதைகள்

சத்தியம் பன்றதே உடைக்கிறதுக்குத்தான்னு ஜூனியர் டி.ஆர் (சிம்பு) சொல்லிருக்காரு. நாங்களும் நம்பிட்டோம் பாஸூ. உங்க சத்தியத்த..!//

ஹ ஹ ஹா

நல்லா சிரிச்சுட்டேன் ஏன்யா அவர இழுக்குறீங்க

நன்றி சுல்தான்..!

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 25, 2011 at 11:59 PM said...

//goma said...
அர்ச்சனைப்பூக்கள் அருமை .
அம்மன் யாரோ?//

நன்றி கோம்ஸ் மேடம்

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 26, 2011 at 12:01 AM said...

//சுசி said...
//சிலருக்கு பிளட் கேன்சரோ
பிரெயின் கேன்சரோ வரும்
எனக்கு ஹார்ட் கேன்சர்
வந்திருக்கிறது நீதான் காரணம்..!//

செம செம செமையா இருக்குப்பா..

நீங்க நடத்துங்க இளவரசரே :) அடைப்புக்குள்ள காதல்னு
சேர்க்கணுமா என்ன ;)
//

வேணாம்க்கா வேணாம் அந்த பெயர் வச்சதுக்குண்டான பலனை நல்லாவே அனுபவிச்சேன்..! இப்போ தூக்கிட்டேனே இப்போ என்னா பண்ணுவீங்க இப்போ என்னா பண்ணுவீங்க?

நன்றி சுசிக்கா :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 26, 2011 at 12:05 AM said...

//
Sriakila said...
//நீயோ அழகுப்பந்தில்
பிறந்த பேரழகி..!//

எனக்கு விளையாட அந்த அழகுப்பந்து கிடைக்குமா?//

வந்ததும் அனுப்பி வைக்கிறேன் அகிலா நல்லா விளையாண்டுட்டு தொலைச்சிடுங்க ..!//உனக்கு சிறுவயதில்
காது குத்துவதற்கு பதில்
அழகை குத்திவிட்டார்கள் போல //

அழகைங்கிறத அலகைன்னு மாத்தினா சாமி வந்துரும்ல.//

அதுகூட எழுதியிருக்கோமே எழுதியிருக்கோமே

உடலில் ஏதாவது
ஒருபாகத்தில் அலகு குத்தியிருப்பவர்களை பார்த்திருக்கிறேன் இப்பொழுதுதான் உடல் முழுதும் அழகு குத்தியிருப்பவளை பார்க்கிறேன்னு எப்பூடீ கிகிகி

//என் மனதட்டிலிருக்கும் காதல்கற்கள்
உன் இடையை அளக்கிறது..!//

அப்ப அவளோட இடை கல்லு மாதிரி இருக்கும்னு சொல்றீங்க..எங்க கொஞ்சம் அந்தப் பொண்ணோட அட்ரஸ் கொடுங்க...//

அட்ரஸ் தேடிட்டிருக்கேன் பாஸ் கிடைச்சதும் கொடுக்கிறேன்..


//சிலருக்கு பிளட் கேன்சரோ
பிரெயின் கேன்சரோ வரும்
எனக்கு ஹார்ட் கேன்சர்
வந்திருக்கிறது நீதான் காரணம்..!//

so sad! அப்போ அந்தப்பொண்ணு தப்பிச்சிட்டா...//

வவ்வவ்வவ்வே

//சாயம் போன சேலைக்கு
வர்ணம் பூசுவதைப்போல
காயமான மனதுக்கு
அன்பை பூசுகிறாய் நீ..!//

ஏன் மருந்து வாங்க காசில்லையா வசந்த்? ப்ச்.. பாவம்!//

ம்ம் :)))))

//என்னை இஞ்சி தின்ற மங்கி
என்ற உன்னிடம் இல்லையில்லை
உன்னைக்கொஞ்சி தின்னும் பக்கி
என்கிறேன் நான்..!//

மொத்தத்துல நல்லாருக்கு பக்கி!
//

மிக்க நன்றி அகிலா..!

Trackback by Unknown March 26, 2011 at 8:11 AM said...

//உன்னிடம் என் கோபம்
பணிவன்புடன் இருப்பதற்கு
காரணம் உன் ஆணவம்
அழகன்புடன் இருக்கிறது...!//

நல்லா இருக்கு நண்பா!

Trackback by ஸ்ரீராம். March 26, 2011 at 9:15 AM said...

மாறிய டெம்ப்ளேட் அழகு. மாறாத திறமை அழகு. பொத்தி வச்சிக்காம வெளியில சொல்லிட்டீங்க...!

Trackback by Jey March 26, 2011 at 9:43 AM said...

பங்காளி நீயே யோசிச்சி எழுதினதா, சுட்டதா?. எல்லாமே நல்லாருக்கு.

( என்னோட பிளாக் டைடிலுக்கு ஒரு டெம்ப்ளேட் கேட்டு மெயில் அடுப்பிருந்தேன் இன்னும் அனுப்பலியே பங்கு)

Anonymous — March 26, 2011 at 10:13 AM said...

காரணம் யாராய் இருப்பினும் வண்ணம் வாங்கிய கவிதைப்பூக்கள் கதம்பமாய் வாசம் வீசுகிறது வசந்த்..

Anonymous — March 26, 2011 at 10:14 AM said...

காரணம் யாராய் இருப்பினும் வண்ணம் வாங்கிய கவிதைப்பூக்கள் கதம்பமாய் வாசம் வீசுகிறது வசந்த்..

Anonymous — March 26, 2011 at 10:14 AM said...

காரணம் யாராய் இருப்பினும் வண்ணம் வாங்கிய கவிதைப்பூக்கள் கதம்பமாய் வாசம் வீசுகிறது வசந்த்..

Anonymous — March 26, 2011 at 1:48 PM said...

ஹையையோ ..,அயோக்ய ராஸ்கல்ஸ் ..,இந்த வெறும்பய ,வசந்த் சாக அடிக்குறாங்க ....,வசந்த் மக்கா உயிரை குழைத்து எழுதியிரக்கே மக்கா ..,

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 27, 2011 at 1:41 AM said...

//யோவ் said...
//உன்னிடம் என் கோபம்
பணிவன்புடன் இருப்பதற்கு
காரணம் உன் ஆணவம்
அழகன்புடன் இருக்கிறது...!//

நல்லா இருக்கு நண்பா!//

நன்றி யோவ் :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 27, 2011 at 1:42 AM said...

//ஸ்ரீராம். said...
மாறிய டெம்ப்ளேட் அழகு. மாறாத திறமை அழகு. பொத்தி வச்சிக்காம வெளியில சொல்லிட்டீங்க...!//

ஹ ஹ ஹா அப்டில்ல ஸ்ரீராம் இதுவே நிஜமா இருந்தா பொத்திதான் வச்சிருப்பேனோ என்னவோ

நன்றி ஸ்ரீராம்..!

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 27, 2011 at 1:43 AM said...

//தமிழரசி said...
காரணம் யாராய் இருப்பினும் வண்ணம் வாங்கிய கவிதைப்பூக்கள் கதம்பமாய் வாசம் வீசுகிறது வசந்த்..//

நன்றி கவிஞரே!!!

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 27, 2011 at 1:44 AM said...

//தமிழரசி said...
காரணம் யாராய் இருப்பினும் வண்ணம் //

இதிலிருக்கும் அரசியலை வன்மையாக கண்டிக்கிறேன்..! ஹிஹிஹி

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 27, 2011 at 1:45 AM said...

// Jey said...
பங்காளி நீயே யோசிச்சி எழுதினதா, சுட்டதா?. எல்லாமே நல்லாருக்கு.

( என்னோட பிளாக் டைடிலுக்கு ஒரு டெம்ப்ளேட் கேட்டு மெயில் அடுப்பிருந்தேன் இன்னும் அனுப்பலியே பங்கு)//

பங்காளி எனக்கு சுட்டுப்பழக்கம் இல்ல சுட்டதை வேணும்னா சாப்பிடுவேன் கிகிகிகி

நீ முதல்ல எழுத ஆரம்பி அப்பறம் தினம் ஒண்ணு அனுப்புறேன் பங்கு

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 27, 2011 at 1:47 AM said...

//பனங்காட்டு நரி said...
ஹையையோ ..,அயோக்ய ராஸ்கல்ஸ் ..,இந்த வெறும்பய ,வசந்த் சாக அடிக்குறாங்க ....,வசந்த் மக்கா உயிரை குழைத்து எழுதியிரக்கே மக்கா ..,//

நல்ல வேளை சிமிண்ட குழைச்சு எழுதியிருக்கேன்னு சொல்லாம விட்ட நீ இப்போ நல்லா காதல் ஜுரத்துல இருக்கன்னு நினைக்கிறேன் என்சாய் மாடி மச்சி..!

நன்றிடா :))

Trackback by நிலாமகள் March 27, 2011 at 10:03 PM said...

//பணிவன்புடன்... அழகன்புடன்...//

//இஞ்சி தின்ற மங்கி ... கொஞ்சி தின்னும் பக்கி...//

வயசுப் புள்ள ... ம்ம்ம் ... நடக்கட்டும் ... நல்ல ரசனைக்காரனப்பா நீ... பார்த்து... பத்திரம்...!

Trackback by நிலாமகள் March 27, 2011 at 10:05 PM said...

டெம்ப்ளேட் பிரமாதம்.

Trackback by 'பரிவை' சே.குமார் March 28, 2011 at 9:53 AM said...

அழகான காதல் வரிகள்.

Trackback by நிழற்குடை March 29, 2011 at 2:39 PM said...

சின்ன சின்ன வரிகளில்
சிலிர்ப்பூட்டும் காதல் ரசங்கள்
உணர்ச்சியில் நெக்குருகி - எங்களை
மலர்ச்சியில் ஆழ்த்தியுள்ள வசந்திற்கு‍
நன்றிகள் பல.

(ஆ......கமெண்டே கவிதயா வந்திடுத்தே......)

Trackback by ப்ரியமுடன் வசந்த் April 4, 2011 at 2:24 AM said...

//Trackback by நிலாமகள் — March 27, 2011 10:03 PM said...
//பணிவன்புடன்... அழகன்புடன்...//

//இஞ்சி தின்ற மங்கி ... கொஞ்சி தின்னும் பக்கி...//

வயசுப் புள்ள ... ம்ம்ம் ... நடக்கட்டும் ... நல்ல ரசனைக்காரனப்பா நீ... பார்த்து... பத்திரம்...!//

நன்றி D/o MOON :))

Trackback by ப்ரியமுடன் வசந்த் April 4, 2011 at 2:25 AM said...

//சே.குமார் said...
அழகான காதல் வரிகள்.//

நன்றி குமார் :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் April 4, 2011 at 2:26 AM said...

//நிழற்குடை said...
சின்ன சின்ன வரிகளில்
சிலிர்ப்பூட்டும் காதல் ரசங்கள்
உணர்ச்சியில் நெக்குருகி - எங்களை
மலர்ச்சியில் ஆழ்த்தியுள்ள வசந்திற்கு‍
நன்றிகள் பல.

(ஆ......கமெண்டே கவிதயா வந்திடுத்தே......)//

அருமை பாஸ்

மிக்க மகிழ்ச்சி அடுத்து கவிதை போஸ்ட் தான் மறக்காமல் வந்துவிடுங்கள் காதல் விருந்துக்கு :)