ஒரு சினிமா விமர்சகரின் பரிதாப வாழ்க்கை...!

| February 25, 2011 | |

மனைவி : என்னங்க நீங்கதான் சினிமாவுக்கெல்லாம் விமர்சனம் எழுதுறீங்களே திருமணத்துக்கு முன்னாடி நீங்க என்னை பொண்ணு பார்க்க வந்தப்போ என்னைப்பார்த்து விமர்சனம் எழுத சொல்லியிருந்தா எப்படி எழுதியிருப்பீங்க?

விமர்சக கணவன் : ஆவ்வ்வ்வ் சொந்த செலவுல சூனியம் வச்சிக்க சொல்றியா? 

மனைவி : இப்போ நீங்க எழுதலை இனிமேல் ஒரு வேளை சாப்பாடு கட் ஆகிடும் பரவாயில்லையா?

விமர்சக கணவன் : எழுதுனா மூணு வேளை சாப்பாடும் கட் ஆகிடுமேன்னு யோசிக்கிறேன்டி ஆவ்வ்!!!!

மனைவி :  அது உங்க விமர்சனத்தைப்பொருத்து இருக்கு இப்போ எழுதப்போறீங்களா இல்லையா?

விமர்சக கணவன் : எழுதுறேன் படி

திருமதி . சுப்புலட்சுமி ராமசாமி தயாரிப்பில் கொன்னவாய் திரு. ராமசாமி அவர்கள் இயக்கி வெளிவந்திருக்கும் மிஸ்.மோனலிசா மனிதப்படம் பற்றிய ஒரு பார்வை. இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கும் கொன்னவாய் ராமசாமி அவர்கள் ஒரு ரசனையானவர் என்பதை இப்படம் விளக்குகிறது. கண்களுக்கு கூட உயிரிருக்கும் என்பதை அவளது துறு துறு கண்கள் விளக்குகிறது.பொதுவா ''எல்லா குழந்தையும் பிறக்கும்போது அழும் ஆனா இந்த குழந்தை பிறக்கும்போதே அழகாகியிருக்கிறது''.அவ்ளோ அழகு, மீதி அழகை நீங்களே பூமித்திரையில் பார்த்துக்கொள்ளுங்கள்.பிறகு வளரும்பொழுது உடல்கதையோடு குணக்கதையும் அளவாக டைரக்டர் சேர்த்திருப்பதால் திமிர்,துடுக்குத்தனத்தை சில இடங்களில் அழகையும் மீறி ரசிக்க முடிகிறது. எனக்கே இவள் கிடத்திருப்பதால் முடிவு கொஞ்சம் சோகமானதுதான் எனக்குமட்டும் .

மனைவி : ஒகே ஒகே பரவாயில்லை மூணு வேளையும் சோறு கிடைக்கும் இந்த விமர்சனத்துக்காக தினமும் ஒரு வேளை சாப்பாட்டோட எக்ஸ்ட்ராவா ஃபில்டர் காபியும் போட்டுத்தர்றேன் . எங்கப்பாவ கொன்னவாய்ன்னு திட்டுனதுக்காக காலையில நீங்க குடிக்கிற டீய கட் பண்ணிட்டேன்.

விமர்சன கணவன் : ஹும் :(

மனைவி : சரி சரி அடுத்து இப்போ நீங்க சாப்பிட்டீங்களே தோசையும் தக்காளி சட்னியும் அதுபத்தி விமர்சனம் எழுதுங்க அந்த டீய கட் பண்றதா வேணாமான்னு யோசிக்கிறேன் .

விமர்சன கணவன் : உலக வரலாற்றிலேயே தோசைக்கு விமர்சனம் எழுதுன ஆள் நானாத்தான் இருப்பேன் போல சரி சரி எவ்ளவோ எழுதிட்டோம் இத எழுத மாட்டோமா?

தோசை & சட்னி விமர்சனம்

வழக்கமா எல்லாரும் சுடற மாதிரிதான் நீயும் சுட்டுருக்க. என்ன மத்தவங்க தோசைய வட்டமா சுடுவாங்க, நீ தட்டையா சுட்ருக்க இதுக்கு காரணம் யூஸ் பண்ண கரண்டியா? இல்லை உனக்கு வட்டம்னா என்னன்னு தெரியாதான்னு தெரியலை. ஆனாலும் தோசைக்கு வடிவமா முக்கியம் ருசிதான் முக்கியம்ன்ற மாதிரி தோசைக்கு ஆட்டுன மாவுல சேர்த்த உப்பு, தோசை சுடறப்போ சேர்த்த எண்ணெய் இதெல்லாம் கரெக்டா சேர்த்திருந்ததுனால தோசை ருசியா வந்திருக்கு. என்ன அதுக்கு மேட்சா வச்சிருந்த தக்காளி சட்னி தான் பொருந்தலை தோசைக்கு மட்டன்குழம்பு வச்சிருந்தா மேட் ஃபார் ஈச் அதர் அதாவது நம்மள மாதிரியே இருந்திருக்கும், ஜஸ்ட் மிஸ். ''வானத்துல இருக்குற நட்சத்திரத்தை எப்படி எண்ண முடியாதோ அது போலவே இந்த தோசையில இருக்குற ஓட்டைகளையும் எண்ண முடியாதுன்னு தத்துவமா சுட்ருக்கதுலதான்'' உன்னோட டைரக்சன் திறமைய காட்டியிருக்கடி.

மனைவி : இனி மேல் தோசைக்கு சட்னி மட்டும்தான் , மட்டன் குழம்பு வப்பேன்னு கனவுல கூட நினைச்சிடாதீங்க மட்டன் குழம்பு மட்டுமில்ல சட்னி கூட கிடையாது வெறும் தோசையதான் திங்கணும் ஆமா !!!

விமர்சன கணவன் : ஹும் இதுக்கெல்லாம் காரணம் அந்த கனவுதான் உன்னையெல்லாம் பார்க்குறதுக்கு முன்னாடியே கனவுல வந்த இலியானாவே எனக்கு மனைவியா வந்திருந்தா இதெல்லாம் நடந்திருக்காது எல்லாம் விதி வலியது.

மனைவி : ஆச தோச அப்பள  வடை இவரு பெரிய மன்மதரு இவருக்கு நான் கிடைச்சதே பெரிய விஷயம் இதுல இலியானா கேட்குதாம்ல இலியானா?. இலியானாவே கிடைச்சிருந்தாலும் உங்களுக்கு இந்நேரம் தோசை சாப்பிடவா நேரம் கிடைச்சிருக்கும் அவளுக்கு மேக் அப் போட்டு விடறதுக்கே உங்களுக்கு நேரம் சரியா போயிருந்திருக்கும்.இப்போதான தெரியுது டிவியில இலியானா பாட்டு போட்டா ஆன்னு வாய திறந்து பாக்குறது எதுக்குன்னு,''இனிமேல் மவனே டிவியில இலியானா பாட்டு ஓடுச்சு உங்களுக்கு தரிகினதரிகின நடக்கும்'' ஆமா சொல்லிட்டேன்.

விமர்சன கணவன் : இன்னிக்கு நான் முழிச்ச நேரமே சரியில்ல சினிமாக்கு போயிருந்தா இந்நேரம் ஒரு விமரசன் எழுதி என்னோட பிளாக்குக்கு பத்தாயிரம் ஹிட்ஸ் அம்பது ஓட்டு வாங்கி பொழுது நல்லா போயிருந்திருக்கும் தேவையில்லாம உனக்கும் உன் தோசைக்கும் விமர்சனம் எழுதி ''எனக்கு ஹிட்டு கிடைச்சதுதான் மிச்சம்'' . இனிமேல் சினிமாவத்தவிர எதுக்குமே விமர்சனம் எழுத மாட்டேண்டி ஆளவிடு.

மனைவி: அதெப்பிடி அவ்ளோ சீக்கிரம் விட்ருவேனா இன்னிக்கு நைட் வைக்கப்போற பிரியாணிக்கும் நீங்கதான் விமர்சனம் எழுதணும்.

விமர்சன கணவன்: என்னது பிரியாணியா ஆவ்வ்வ்வ்.எனக்கு பிரியாணி பிடிக்கும்ன்னு உன்னை அடிக்கடி பிரியாணி வைக்க சொல்றதுக்கு வைக்கப்போற ஆப்பாத்தான் தெரியுது எனக்கு ஆளா விடு தாயி நான் தியேட்டருக்கு போறேன். ஆமா நான் உன்னை விமர்சனம் பண்ணி எழுதுனேனே நீ என்னை பத்தி விமர்சனம் எழுதக்கூடாதா ?

மனைவி : எனக்கு விமர்சனம் எல்லாம் எழுத தெரியாது !!

விமர்சன கணவன் : அட்லீஸ்ட் அழகான என் பேரைப்பத்தியாவது சொல்லுடி.

மனைவி : வசந்த்ன்ற பேரெல்லாம் அழகா ? கொசந்த்ன்னு வச்சிருந்தா நல்லா இருந்திருக்கும் !!!!

விமர்சன கணவன் :ஙே...!!!!!!!!!!!!!

Post Comment

32 comments:

Trackback by ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) February 25, 2011 at 1:54 PM said...

நடக்கட்டும் நடக்கட்டும்

Trackback by jothi February 25, 2011 at 2:26 PM said...

பாவம் வசந்த் நீங்க,.. என்னமோ கல்யாணத்திற்கு பின் வீட்டுக்காரம்மாதான் சமைப்பாங்கன்னு நினைச்சுகிட்டு இருக்கீங்க,..

இருந்தாலும் பதிவு ரொம்ப சுவாரஸ்யம்,..

Trackback by எஸ்.கே February 25, 2011 at 2:42 PM said...

கற்பனையும் விமர்சனங்களும் ரொம்ப நல்லா இருந்தன!

Trackback by மயாதி February 25, 2011 at 3:14 PM said...

உனக்கு குசும்பு கூடிப் போயிட்டு மாப்ள

Trackback by Sriakila February 25, 2011 at 3:31 PM said...

விமர்சனம் நல்லா இருக்கு கொசந்த்(ஹி..ஹி..!) சாரி வசந்த்!

Trackback by சீமான்கனி February 25, 2011 at 4:11 PM said...

//கொசந்த்ன்னு வச்சிருந்தா நல்லா இருந்திருக்கும் !!!!//

அட நல்லாத்தே இருக்கு!!! விடு மாப்பள அந்தப்புள்ளையும் வித்யாசமா யோசிச்சுட்டு போகட்டும்.....

Trackback by இமா க்றிஸ் February 25, 2011 at 5:26 PM said...

முடியல வசந்த். ;))))

Trackback by ரேவா February 25, 2011 at 5:32 PM said...

''எல்லா குழந்தையும் பிறக்கும்போது அழும் ஆனா இந்த குழந்தை பிறக்கும்போதே அழகாகியிருக்கிறது''

ஹ ஹ வசந்த் ஐயோ சாரி கொசந்த்... சூப்பர் விமர்சனம்....இந்த விமர்சன நாயகி போல உங்கள் துணைவி
அமைய வாழ்த்துக்கள்...ஹ ஹா ஹா ஏதோ நம்மாளால முடிஞ்சது...

Trackback by R.பூபாலன் February 25, 2011 at 6:36 PM said...

கொசந்து.......

Anonymous — February 25, 2011 at 7:26 PM said...

ஹா ஹா.. மச்சி சூப்பர்டா.. :)

Trackback by Chitra February 25, 2011 at 8:00 PM said...

எனக்கே இவள் கிடத்திருப்பதால் முடிவு கொஞ்சம் சோகமானதுதான் எனக்குமட்டும் ........ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா... சோகம் என்றாலும் சிரிப்பு.... செம காமெடி பதிவு!

Trackback by மாணவன் February 26, 2011 at 4:40 AM said...

கற்பனையும் விமர்சனமும் சூப்பர் படிக்கும்போதே ரொம்ப சுவாரசியமா இருந்தது...

நீங்கள் நினைத்ததுபோலவே உங்களுக்கு துணைவி அமைய வாழ்த்துக்கள் :))

Trackback by Philosophy Prabhakaran February 26, 2011 at 5:13 AM said...

இருந்தாலும் நீங்க சிபி செந்திலை இப்படி எல்லாம் கலாய்க்க கூடாது...

Trackback by middleclassmadhavi February 26, 2011 at 7:55 AM said...

விமர்சனம் எழுத training?!!

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 26, 2011 at 10:07 PM said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நடக்கட்டும் நடக்கட்டும்//

ம்க்கும் உனக்கும் நான் ஹிட்டு வாங்கணும்ன்னு ஆசதான் போல மாப்பு நன்றி..

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 26, 2011 at 10:08 PM said...

//jothi said...
பாவம் வசந்த் நீங்க,.. என்னமோ கல்யாணத்திற்கு பின் வீட்டுக்காரம்மாதான் சமைப்பாங்கன்னு நினைச்சுகிட்டு இருக்கீங்க,..

இருந்தாலும் பதிவு ரொம்ப சுவாரஸ்யம்,..//

அதுக்குத்தானே முன்கூட்டியே சமையல் கத்து வச்சிருக்கோம் எல்லா தற்காப்புகலைகளும் முன்னாடியே கத்துவச்சிட்டேன் ஜோதி :))

நன்றி பாஸ்

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 26, 2011 at 10:09 PM said...

//மயாதி said...
உனக்கு குசும்பு கூடிப் போயிட்டு மாப்ள//

உனக்கு இப்போதான் தெரியுமா மாப்ள?

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 26, 2011 at 10:09 PM said...

///எஸ்.கே said...
கற்பனையும் விமர்சனங்களும் ரொம்ப நல்லா இருந்தன!//

நன்றி எஸ்.கே.

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 26, 2011 at 10:10 PM said...

//Sriakila said...
விமர்சனம் நல்லா இருக்கு கொசந்த்(ஹி..ஹி..!) சாரி வசந்த்!//

ஹிஹி நன்றி அகிலா ..

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 26, 2011 at 10:10 PM said...

// சீமான்கனி said...
//கொசந்த்ன்னு வச்சிருந்தா நல்லா இருந்திருக்கும் !!!!//

அட நல்லாத்தே இருக்கு!!! விடு மாப்பள அந்தப்புள்ளையும் வித்யாசமா யோசிச்சுட்டு போகட்டும்.....//

அடப்பாவி :))

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 26, 2011 at 10:11 PM said...

//இமா said...
முடியல வசந்த். ;))))//

சிரிக்க முடியலயா அழுகமுடியலா டீச்சர்?

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 26, 2011 at 10:12 PM said...

//ரேவா said...
''எல்லா குழந்தையும் பிறக்கும்போது அழும் ஆனா இந்த குழந்தை பிறக்கும்போதே அழகாகியிருக்கிறது''

ஹ ஹ வசந்த் ஐயோ சாரி கொசந்த்... சூப்பர் விமர்சனம்....இந்த விமர்சன நாயகி போல உங்கள் துணைவி
அமைய வாழ்த்துக்கள்...ஹ ஹா ஹா ஏதோ நம்மாளால முடிஞ்சது...
//

ம்ம் கிடைச்சா சந்தோஷம்தான் பார்க்கலாம் நன்றி ரேவதி

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 26, 2011 at 10:12 PM said...

//R.பூபாலன் said...
கொசந்து.......//

:)

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 26, 2011 at 10:13 PM said...

//Balaji saravana said...
ஹா ஹா.. மச்சி சூப்பர்டா.. :)//

நன்றி மச்சி :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 26, 2011 at 10:14 PM said...

//Chitra said...
எனக்கே இவள் கிடத்திருப்பதால் முடிவு கொஞ்சம் சோகமானதுதான் எனக்குமட்டும் ........ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா... சோகம் என்றாலும் சிரிப்பு.... செம காமெடி பதிவு!//

நன்றி சித்ரா மேடம் :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 26, 2011 at 10:14 PM said...

//மாணவன் said...
கற்பனையும் விமர்சனமும் சூப்பர் படிக்கும்போதே ரொம்ப சுவாரசியமா இருந்தது...

நீங்கள் நினைத்ததுபோலவே உங்களுக்கு துணைவி அமைய வாழ்த்துக்கள் :))
//

நன்றி மாணவன் :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 26, 2011 at 10:15 PM said...

//
Philosophy Prabhakaran said...
இருந்தாலும் நீங்க சிபி செந்திலை இப்படி எல்லாம் கலாய்க்க கூடாது...//


ஹிஹிஹி நன்றி பிரபா :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 26, 2011 at 10:16 PM said...

//middleclassmadhavi said...
விமர்சனம் எழுத training?!!//

ஹிஹிஹி இல்லையே

நன்றி மாதவி மேடம் :)

Trackback by பன்னிக்குட்டி ராம்சாமி February 26, 2011 at 10:33 PM said...

என்னமோ நடக்குது............

Trackback by பன்னிக்குட்டி ராம்சாமி February 26, 2011 at 10:34 PM said...

அந்த விமர்சகர் யாரு? இலியானாவை வேற புடிக்கும்னு சொல்லி இருக்காரு? சிபிக்கு நமீதாவத்தவிர யாரையும் புடிக்காதே......? அப்போ வேற யாரா இருக்கும்?

Trackback by VISA February 27, 2011 at 7:31 PM said...

சூப்பர் கான்செப்ட் இன்னும் கலாய்த்திருக்கலாம்.

Trackback by Anisha Yunus March 3, 2011 at 2:56 AM said...

//மனைவி : வசந்த்ன்ற பேரெல்லாம் அழகா ? கொசந்த்ன்னு வச்சிருந்தா நல்லா இருந்திருக்கும் !!!!

விமர்சன கணவன் :ஙே...!!!!!!!!!!!!!//

இவ்ளோ நேரம் கலாய்ச்சிட்டு கடசில சட்டுன்னு உண்மைய சொல்லிட்டீங்க... ஒ ஓ... :)