காதலெனும் தேர்வெழுதி...

| February 14, 2011 | |
             
காதலன் ஒருவனுக்கு அவனுடைய காதலி காதல் தேர்வு நடத்தினால் எப்படியிருக்கும் என்று ஒரு கற்பனை...


தேர்வுக்கு செல்வோமா?


_______________________________________________________________

பாடம் : காதல் இயல் / Lovalogy

பகுதி 1

அ) சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதவும்
ஆ) மதிப்பெண்கள் :5 X1= 5 முத்தங்கள்

காதலி : காதலர் தினம் என்று கொண்டாடப்படுகிறது?

அ) பிப்ரவரி14 ஆ) ஏப்ரல்14  இ) ஆகஸ்ட்15 ஈ) மே1

காதலன் : உண்மையான காதலர் தினம் உலகத்துக்கே தெரியும் ஆனால் எனக்கு நான் உன்னிடம் நீ என்னிடமும் காதலை சொல்லிய 10 ஏப்ரல் 2012 தான் எனக்கு காதலர் தினம்.

காதலி : காதல் கடவுள் யார்?

அ) வாலண்டைன் ஆ) முருகன் இ) மன்மதன் ஈ) ஷாஜகான்

காதலன் : உன் கண்கள்தான் என் காதல் கடவுள்.

காதலி: காதல் சின்னம் எது?

அ) இதயம் ஆ) ரோஜா இ) தாஜ்மஹால் ஈ) கண்கள்

காதலன் : உன்னுடைய அன்பு தான் என் காதல் சின்னம்.

காதலி : அழியா புகழ் பெற்ற சரித்திர காதல் ஜோடி எது?

அ) ரோமியோ-ஜூலியட் ஆ) கோவலன் - மாதவி இ) பரத்-சந்த்யா ஈ) எம்ஜிஆர்-சரோஜாதேவி

காதலன் : நீயும் நானும்தான்..

காதலி: சிறந்த கவிஞர் யார்?

அ)ரஜினிகாந்த் ஆ)வைரமுத்து இ)அந்துமணி ஈ)ராகுல் காந்தி

காதலன் : சந்தேகமே இல்லாமல் உன் அப்பாதான்


பகுதி 2

அ) கோடிட்ட இடத்தை நிரப்புக

ஆ) மதிப்பெண்கள் :5 X1= 5 முத்தங்கள்

காதலி : உன் பார்வையில் நான் __________ , 


காதலன் : ''தேவதை''


காதலி : எனக்கு நீ வைத்த செல்லப்பெயர் __________ ,


காதலன் : ''குட்டிம்மா''


காதலி : நான் உன்னை அழைக்க விரும்பும் செல்லப்பெயர் __________ ,


காதலன் : ''டேய் புருஷா''


காதலி : நம் காதலுக்கு நீ வைத்த செல்லப்பெயர் __________ ,


காதலன் : ''சித்ரவதை''


காதலி : நம் எதிர்கால வாழ்க்கை  ___________ ,


காதலன் : ''அது ஒரு அழகிய நிலாக்காலம்''

பகுதி 3

அ) கேட்கப்படும் கேள்விகளுக்கு இரண்டுவரிக்கு மிகாமல் பதிலளிக்கவும்

ஆ) மதிப்பெண்கள் :5 X2= 10 முத்தங்கள்


காதலி: காதல் என்றால் என்ன?


காதலன் : காதல் என்பது என்னைப்பொருத்தவரையிலும் , ''நீ எனக்கு கிடைத்தால் என் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்பதைவிட உன்னோடுதான் என் வாழ்க்கை'' என்பதாகும்.


காதலி : உனக்கு என்மேல் எப்பொழுது காதல் வந்தது?

காதலன் : யாருக்குத்தெரியும்? நீ எப்பொழுது எனக்குள் வந்தாய் , எப்பொழுது என் வெற்று வாழ்க்கைக்கு வர்ணம் தீட்டினாய் , எப்பொழுது நான் வானத்தில் பறக்கத்தொடங்கினேன் , இன்னும் இதுக்கும் முன் நடந்திராத விசயங்கள் பலவும் எப்பொழுது நடந்தது என்று தெரியாது. ஆனால் எனக்குள் காதல் வந்தது தெரியும், நான் ஒரு அதிசயத்தோடு பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதும் தெரியும்.

காதலி : என்னைப்பற்றி சிறுகவிதை வரைக..


காதலன் : 


உடம்பில் 
எதாவது ஓர் இடத்தில் 
அலகு குத்தியிருப்பவர்களை 
பார்த்திருக்கிறேன்
முதன் முறையாக
உடம்பு முழுவதும்
'அழகு' குத்தியிருப்பவளை
இப்பொழுதுதான் பார்க்கிறேன்...


காதலி : நமக்கு திருமணம் ஆனால் நடக்கப்போகும் எதாவது ஒரு நிகழ்வை உன்பார்வையில் எழுது..


காதலன் : ஒரு நாள் உன்னுடைய அப்பா ஊருக்கு இருவரும் சென்றிருந்தோம் அங்கு ஒருநாள் இருந்துவிட்டு மறு நாள் நான் என்னோட வேலை காரணமா கிளம்ப வேண்டியிருந்தது , உன்னை உன் அப்பா இன்னும் இரு வாரங்கள் இருந்துவிட்டு போகும்படி சொல்லியிருந்ததால் நீ என்னுடன் வரவில்லை . உன் அப்பா வீட்டை விட்டு நான் கிளம்பும்பொழுது வாசலில் நின்று இந்த ரெண்டு வாரம் எப்படிங்க என்னைபிரிஞ்சு இருக்கப்போறீங்க என்றாய் , நீ இல்லாவிட்டால் என்ன உன்னுடைய வாசம் அன்பு எல்லாத்தையும்தான் நம் வீட்டுக்குள்ளும் எனக்குள்ளும் வைத்து பூட்டிவைத்திருக்கிறாயே அது ஆறுதல் கொடுக்கும் என்றேன்.உடனே வீட்டிற்க்குள் சென்று பெட்டி படுக்கையுடன் நீயும் என்னுடன் கிளம்பிவிட்டாய்.


காதலி : என்னுடைய செயல்களில் பிடிக்காதது எது ? ஏன்?


காதலன் : எனக்கு நீ பரிசு பொருள் தருவது பிடிக்காது. ஏனென்றால் என்னுடைய எல்லா ப்ரியத்தையும் நான் உன் மீது மட்டுமே வைத்திருக்க விருப்பம், நீ பரிசு தந்த பொருள்களுக்கும் அதை பிரித்து கொடுக்க விருப்பமில்லை எனக்கு.


பகுதி 4 

அ) கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடையை 10 வரிகளுக்கு மிகாமல் எழுது..
ஆ) மதிப்பெண்கள் :3X10= 30 முத்தங்கள்காதலி : ஒரு காதல் கடிதம் வரைக..


காதலன் :


''ப்ரியமானவளே..''


நலம் நலமறிய ஆவல் என்று வழக்கம்போல் எல்லா கடிதங்களுக்கும் எழுதும் ஆரம்ப வரிகள் உனக்கு கடிதம் எழுதும் பொழுது தோன்றுவதில்லை நீதான் நலமாய் இருக்கிறாயே என்னிடம் பிறகெப்படி அந்த வரிகள் தோன்றும்?.நாம் தினமும் பார்த்து பேசிக்கொண்டிருந்தாலும் மனதில் இருப்பதை சொல்லாக சொல்லிவிடுவதைவிட எழுத்தால் எழுதுவதும் அதை எழுதும்பொழுதும் வரும் பரவசம் ஓடும் நீரில் தன் முகம் பார்க்கும் பறவையின் பரவசத்திற்க்கு இணையாகவும், எழுதி முடித்ததும் மழை பெய்து கொண்டிருக்கும்பொழுதும் தோன்றும் மஞ்சள் வெயில் போல நம்பிக்கையும், கடிதத்தை எழுதி முடித்து ஒட்டும்பொழுது வெடித்து பறக்கும் பஞ்சாய் மனமும் , அதை உனக்கு அனுப்பிவிட்டு காத்திருக்கையில் நீரைவிட்டு தரையில் விழுந்த மீனாய் மனம் துடிப்பது என்று எல்லாமே எனக்கு நரக சுகமாய்த்தானிருக்கிறது அதனாலயே உனக்கு வாரத்திற்க்கு ஒரு கடிதமாவது எழுதிவிடுகிறேன் இந்த வார கோட்டா இந்த கடிதத்துடன் முடிந்தது...நமக்கு திருமணமானாலும் கூட உனக்கு நான் கடிதம் எழுதுவதை நிறுத்தப்போவது இல்லை வர்ட்டா செல்லம்...


                                                                                                      ''ப்ரியமானவன்...''
காதலி : என் கண்கள் பற்றிய சமன்பாட்டை எழுதி விளக்குக..


காதலன் : E=Mc2 என்னடா இது நியூட்டனின் சமன்பாட்டை எழுதியிருக்கிறேன் என்று பார்க்கிறாயா ? விளக்கம் படத்தில் கொடுத்திருக்கிறேன்...


E= Eyes
Mc= McDowell Whisky
என்னடா விஸ்கி பாட்டிலை போட்டிருக்கிறானே என்று பார்க்கிறாயா? உன்னுடைய கண்களை பார்க்கும்பொழுது வரும் போதையைவேறு எப்படி விளக்குவது?
காதலி : நான்கு காதல் கவிதைகள் அழகான படங்களுடன் எழுதவும்...
காதலன்:

Behind The Postநண்பர்கள் அனைவரையும் அன்பர்கள் தினத்தில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி...காதலர் தினம் என்றதும் அந்த பெயரில் இருக்கும் திரைப்படத்தில் வரும் பாடலான ''காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்'' என்ற பாடலும் ஞாபகத்தில் வந்து சென்றது.அந்த வரிகளையே கருவாக கொண்டு உருவாக்கியதுதான் இந்த படைப்பு அல்லது காவியம் அல்லது மொக்கை என்றும் கொள்ளலாம்...அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துகள்...நன்றி..


Post Comment

95 comments:

Trackback by எஸ்.கே February 14, 2011 at 12:19 PM said...

நல்ல கற்பனை!
(பாஸாயிட்டீங்களா?:-)))

Anonymous — February 14, 2011 at 12:44 PM said...

WOWWWWWWWWWWWWWWWWWW

பதிவை பற்றி பின்னுட்டம் மாலையில்..சத்தம் இல்லாமல் இருக்கும் போதே நினைச்சேன்..ஆமா பாஸா பாஸ்..

Trackback by Unknown February 14, 2011 at 12:48 PM said...

அய்யோ... கலக்கிட்டீங்க வசந்த்..

superb superb superb...

காதலர் தின வாழ்த்துக்கள்..

Trackback by முனியாண்டி பெ. February 14, 2011 at 12:48 PM said...

Good one

Trackback by முனியாண்டி பெ. February 14, 2011 at 12:49 PM said...

Good one

Trackback by S Maharajan February 14, 2011 at 12:55 PM said...

நல்ல கற்பனை!

Superb Vasanth.........

Anonymous — February 14, 2011 at 1:23 PM said...

மச்சி கலக்கல் தேர்வு, விடையும் அட்டகாசம். மொத்த முத்தங்கள் அப்படியே உனக்கு! :)

Trackback by சீமான்கனி February 14, 2011 at 1:25 PM said...

"அலகு" கவிதை அழகு!!! மாப்பி...மத்ததெல்லாம் சொல்லவா வேணும் வித்யாசமான கற்பனை கலக்கல்...காதலர் தின வாழ்த்துகள்..

Trackback by R.பூபாலன் February 14, 2011 at 1:40 PM said...

பேப்பர் நான் திருத்துனா பாஸ் மார்க் போட்டுருவேன்பா..

Trackback by R.பூபாலன் February 14, 2011 at 1:40 PM said...

Re- Entry இன்னும் special

Trackback by ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) February 14, 2011 at 1:50 PM said...

காதலர் தின வாழ்த்துக்கள் maappu

Trackback by மாணவன் February 14, 2011 at 1:51 PM said...

சூப்பர்...

Trackback by மாணவன் February 14, 2011 at 1:52 PM said...

இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள் அண்ணே :))

Trackback by sulthanonline February 14, 2011 at 3:00 PM said...

இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்

Trackback by sulthanonline February 14, 2011 at 3:03 PM said...

ரெஸ்ட் எடுத்துட்டு வந்து சூப்பரா எழுதியிருக்கீங்க. அண்ணா காதல் பரிட்சை சூப்பர்

Trackback by Priya February 14, 2011 at 3:15 PM said...

வித்தியாசமான கற்பனை... கலக்கலா எழுதி இருக்கீங்க!
ரசித்து படித்தேன்!
Happy valentines Day!

Trackback by Unknown February 14, 2011 at 4:10 PM said...

காலமெல்லாம் காதல்,
வாழ்க வளமுடன் !
http://aagaayamanithan.blogspot.com/2010/02/blog-post_7395.html

Anonymous — February 14, 2011 at 4:33 PM said...

வில்லங்கமான கேள்விகளுக்கு விழியால் விடைகள்..

Anonymous — February 14, 2011 at 4:34 PM said...

அப்பப்பா அசத்தல் நூற்றுக்கு நூறு வாங்கிய காதல் வினாதாள்....

Anonymous — February 14, 2011 at 4:35 PM said...

vasanth cards so cute.. happy valentines day ya..

Trackback by சுசி February 14, 2011 at 4:59 PM said...

அடடடடடா.. உ பி அசத்திட்டேள் போங்கோ..

காதல்னா என்னம்மா வருது போஸ்ட்டு..

அதுவும் அந்த உடல் முழுதும் அழகைக் குத்தினது செம..

Trackback by JK February 14, 2011 at 5:10 PM said...

பட்டைய கிளப்பிட்டீங்க வசந்த்

ஒரு கவிதை எழுதலாம் ஆனா காதலா கொட்டியிருக்கீங்க

உங்களுக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்

நன்றி வசந்த்

ஜேகே

Trackback by ஹேமா February 14, 2011 at 5:17 PM said...

வசந்து....திரும்பவும் காதலர் தினத்தில் பதிவிடத் தொடங்கியது சந்தோஷம்.வாழ்த்துக்கள் பதிவுக்கும் உங்கள் காதலுக்கும் !

கலா — February 14, 2011 at 6:35 PM said...

ஓஓஓ...காதல் தேர்வு என்பது இதுதானா வசந்த்?
இவ்வளவு பெரிதா காதல்?எழுது..எழுது இளவயசு பாத்தப்பு ..பாத்தெழுதாம
பிடிபட்டாக் கஷ்ரம் !
காட்டுக்கிப் போகிற வயசாகிறது ...இந்தக் காதல்
மட்டும் வரவேஇல்லராசா!
அதனால...ஒண்ணும் சொல்லத் தோணல‌ப்பு
காதல் வந்தால் அனுப்பி வைக்கிறேன் புள்ளி
போட்டுஅனுப்பு தங்கம்.

அதுசரி காதல்,காதல்என்று சொல்லி ,,,முகப்பில்
வில்லன் மாதிரி இருக்கும் {உங்கள் }படம் இருப்பதேன்
கொஞ்சமும் அந்த...
நான் பாக்காத காதலைக் காணோமே!!

Trackback by Unknown February 14, 2011 at 6:49 PM said...

கலைஞரின் காதல் !!!
http://aagaayamanithan.blogspot.com/2010/02/blog-post_7395.html

Trackback by மழைக்காலங்கள் February 14, 2011 at 7:09 PM said...

வணக்கம்,,,,,,,
உங்க கற்பனை அழகு.....
கலக்கிடீங்க வசந்த்..........
வாழ்த்துகள்

Trackback by பன்னிக்குட்டி ராம்சாமி February 14, 2011 at 7:39 PM said...

welcome back dear...

Trackback by பன்னிக்குட்டி ராம்சாமி February 14, 2011 at 7:40 PM said...

////காதலன் : எனக்கு நீ பரிசு பொருள் தருவது பிடிக்காது. ஏனென்றால் என்னுடைய எல்லா ப்ரியத்தையும் நான் உன் மீது மட்டுமே வைத்திருக்க விருப்பம், நீ பரிசு தந்த பொருள்களுக்கும் அதை பிரித்து கொடுக்க விருப்பமில்லை எனக்கு.////

எனக்கு ரொம்பப் பிடித்தவை, கலக்கிட்ட மச்சி.....!

Trackback by பன்னிக்குட்டி ராம்சாமி February 14, 2011 at 7:50 PM said...

டெம்ப்ளெட்டே ரொமாண்டிக் மயமா இருக்கே... நடக்கட்டும் நடக்கட்டும்...

Trackback by sakthi February 14, 2011 at 8:30 PM said...

மக்கா செம ரொமான்ஸ் கேள்விகள் + பதில்கள் அசத்தறேள் ::))))

Trackback by ராஜி February 14, 2011 at 9:30 PM said...

இந்த காதலெனும் தேர்வெழுதி கத்திருக்கும் இந்த மாணவர் தேர்வில் வெற்றி பெற்றுவிட்டார் என மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றோம். சகோதரா கலக்கிட்டே

Trackback by ராமலக்ஷ்மி February 14, 2011 at 9:31 PM said...

தேர்வில் வெற்றிதானே:)?

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 14, 2011 at 10:52 PM said...

//எஸ்.கே said...
நல்ல கற்பனை!
(பாஸாயிட்டீங்களா?:-)))//

ரிசல்ட்டுக்கு இன்னும் ரொம்ப நாள் இருக்கு எஸ் கே நன்றி

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 14, 2011 at 10:53 PM said...

//தமிழரசி said...
WOWWWWWWWWWWWWWWWWWW

பதிவை பற்றி பின்னுட்டம் மாலையில்..சத்தம் இல்லாமல் இருக்கும் போதே நினைச்சேன்..ஆமா பாஸா பாஸ்..//

கருத்துகளுக்கு நன்றி மேடம்

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 14, 2011 at 11:10 PM said...

// ஜெ.ஜெ said...
அய்யோ... கலக்கிட்டீங்க வசந்த்..

superb superb superb...

காதலர் தின வாழ்த்துக்கள்..//

ஹலோ ஜெ நீங்க தினம் தினம் தவுசண்ட் வாலா பட்டாசு வெடிக்கிறீங்க நான் என்னிக்கோ ஒரு பொட்டு வெடி வெடிக்கிறேன் அவ்வளவுதான்.. நன்றி ஜெ.ஜெ.

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 14, 2011 at 11:11 PM said...

//முனியாண்டி said...
Good one//

நன்றி முனியாண்டி !!!

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 14, 2011 at 11:11 PM said...

//S Maharajan said...
நல்ல கற்பனை!

Superb Vasanth.........//

நன்றி மஹாராஜன்..!

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 14, 2011 at 11:14 PM said...

// Balaji saravana said...
மச்சி கலக்கல் தேர்வு, விடையும் அட்டகாசம். மொத்த முத்தங்கள் அப்படியே உனக்கு! :)//

ஹஹஹா

நன்றி மச்சி!!!

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 14, 2011 at 11:14 PM said...

//சீமான்கனி said...
"அலகு" கவிதை அழகு!!! மாப்பி...மத்ததெல்லாம் சொல்லவா வேணும் வித்யாசமான கற்பனை கலக்கல்...காதலர் தின வாழ்த்துகள்..
//

நன்றி மாப்ள..!

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 14, 2011 at 11:16 PM said...

//R.பூபாலன் said...
பேப்பர் நான் திருத்துனா பாஸ் மார்க் போட்டுருவேன்பா..//

அடப்பாவி பாஸ் மார்க் தானா அப்போ சரி நான் போய்ட்டு திரும்ப ஒரு மாசங்கழிச்சு வர்றேன் சரியா?

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 14, 2011 at 11:17 PM said...

// R.பூபாலன் said...
Re- Entry இன்னும் special//

Thank you , Thank you , Thank you

ஹெட்டர் டிசைன் பண்ணி கொடுத்ததுக்கும் மிக்க நன்றிடா செல்லம்!!!

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 14, 2011 at 11:18 PM said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
காதலர் தின வாழ்த்துக்கள் maappu//

நன்றி மாப்பி!!!

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 14, 2011 at 11:18 PM said...

//மாணவன் said...
இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள் அண்ணே :))//

நன்றி தம்பு...!!

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 14, 2011 at 11:19 PM said...

// sulthanonline said...
ரெஸ்ட் எடுத்துட்டு வந்து சூப்பரா எழுதியிருக்கீங்க. அண்ணா காதல் பரிட்சை சூப்பர்//

பரிட்சை சூப்பர் இருக்கட்டும் பாஸா பெயிலான்னு சொல்லாம விட்டுட்டீங்களே பாஸ் அவ்வ்வ்வ்

நன்றி சுல்தான்!!!

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 14, 2011 at 11:21 PM said...

// Priya said...
வித்தியாசமான கற்பனை... கலக்கலா எழுதி இருக்கீங்க!
ரசித்து படித்தேன்!
Happy valentines Day!//

என்னங்க ப்ரியா உங்க ப்லாக்ல இன்னிக்கு ஒண்ணும் காதல் கொண்டாட்டம் இல்லியா? ஏன்? நல்லா எழுதுற நீங்களாம் எழுதாம இருக்கலாமோ?

நன்றி ப்ரியா

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 14, 2011 at 11:21 PM said...

//ஆகாயமனிதன்.. said...
காலமெல்லாம் காதல்,
வாழ்க வளமுடன் !
http://aagaayamanithan.blogspot.com/2010/02/blog-post_7395.html//

ரைட்டு...!

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 14, 2011 at 11:27 PM said...

//சுசி said...
அடடடடடா.. உ பி அசத்திட்டேள் போங்கோ..

காதல்னா என்னம்மா வருது போஸ்ட்டு..

அதுவும் அந்த உடல் முழுதும் அழகைக் குத்தினது செம..//

எங்கக்கான்னா எங்கக்காதான் நான் என்ன எழுதினாலும் மொக்கையே போட்டாலும் தம்பி வருத்தப்படக்கூடாதுன்றதுக்காக கருத்து சொல்வது ம்ம் ரொம்ப ரொம்ப ரொம்ப தாங்ஸ் சுசி (புவின்னு கில்லில விஜய் சொல்வாரே அதே மாடுலேசன்)

ஹ ஹ ஹா

நன்றி சுசிக்கா!! என்னவாம் எம்மச்சானோட கோவமோ? அதான் உங்க ஆத்துக்காரரோட கோவமான்னு கேட்டேன் விசேஷம்னா தாம் தூம்ன்னு எழுதி கொண்டாடுவீங்க இன்னிக்கு மட்டும் என்னவாம் ஒண்ணும் எழுதக்காணோம்?

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 14, 2011 at 11:32 PM said...

// JK said...
பட்டைய கிளப்பிட்டீங்க வசந்த்

ஒரு கவிதை எழுதலாம் ஆனா காதலா கொட்டியிருக்கீங்க

உங்களுக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்

நன்றி வசந்த்

ஜேகே//

என்ன ஜே கே இப்படி சொல்லிட்டீங்க காதலை கொட்டுறதே காதலை எடுக்கத்தானே :)) மிக்க மகிழ்ச்சி

கருத்துக்கு நன்றி ஜெ.கே

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 14, 2011 at 11:34 PM said...

//ஹேமா said...
வசந்து....திரும்பவும் காதலர் தினத்தில் பதிவிடத் தொடங்கியது சந்தோஷம்.வாழ்த்துக்கள் பதிவுக்கும் உங்கள் காதலுக்கும் !//

அப்பாடாடாடாடா

ம்ம் நன்றிங்கோ ஹேமா

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 14, 2011 at 11:38 PM said...

//கலா said...
ஓஓஓ...காதல் தேர்வு என்பது இதுதானா வசந்த்?
இவ்வளவு பெரிதா காதல்?எழுது..எழுது இளவயசு பாத்தப்பு ..பாத்தெழுதாம
பிடிபட்டாக் கஷ்ரம் !
காட்டுக்கிப் போகிற வயசாகிறது ...இந்தக் காதல்
மட்டும் வரவேஇல்லராசா!
அதனால...ஒண்ணும் சொல்லத் தோணல‌ப்பு
காதல் வந்தால் அனுப்பி வைக்கிறேன் புள்ளி
போட்டுஅனுப்பு தங்கம்.

அதுசரி காதல்,காதல்என்று சொல்லி ,,,முகப்பில்
வில்லன் மாதிரி இருக்கும் {உங்கள் }படம் இருப்பதேன்
கொஞ்சமும் அந்த...
நான் பாக்காத காதலைக் காணோமே!!
//

வாங்க பாட்டி பயணம் எல்லாம் நல்லபடியா முடிந்ததா? தாத்தா சவுக்கியமா இருக்காரா? பேரப்புள்ளைகளையெல்லாம் பார்த்தீங்களா?

//காட்டுக்கிப் போகிற வயசாகிறது ...இந்தக் காதல்
மட்டும் வரவேஇல்லராசா!//

பாவம் தாத்தா...

//வில்லன் மாதிரி இருக்கும் {உங்கள் }படம் இருப்பதேன்//

உஷ் காதைக்கொடுங்க எல்லாம் காரண காரியமாத்தான் அடுத்து திரைப்படத்தில் வில்லனா நடிக்கப்போறேனாம் அதுக்கு முன்னோட்டம் ... வவ்வவ்வவ்வே

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 14, 2011 at 11:38 PM said...

//ஆகாயமனிதன்.. said...
கலைஞரின் காதல் !!!
http://aagaayamanithan.blogspot.com/2010/02/blog-post_7395.html//

ஆஹா..!!

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 14, 2011 at 11:41 PM said...

//மழைக்காலங்கள் said...
வணக்கம்,,,,,,,
உங்க கற்பனை அழகு.....
கலக்கிடீங்க வசந்த்..........
வாழ்த்துகள்//

அவ் உங்க ப்ரொஃபைல் ஓபன் ஆவ மாட்டேன்னுது...

சரி சரி ப்ரோஃபைலா முக்கியம் கருத்துக்கள்தான் முக்கியம் மிக்க நன்றி மழைக்காலங்கள்!!!

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 14, 2011 at 11:42 PM said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
welcome back dear...//

Thank you Dear..

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 14, 2011 at 11:43 PM said...

//////காதலன் : எனக்கு நீ பரிசு பொருள் தருவது பிடிக்காது. ஏனென்றால் என்னுடைய எல்லா ப்ரியத்தையும் நான் உன் மீது மட்டுமே வைத்திருக்க விருப்பம், நீ பரிசு தந்த பொருள்களுக்கும் அதை பிரித்து கொடுக்க விருப்பமில்லை எனக்கு.////

எனக்கு ரொம்பப் பிடித்தவை, கலக்கிட்ட மச்சி.....!//

:) நன்றி மச்சி

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 14, 2011 at 11:43 PM said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
டெம்ப்ளெட்டே ரொமாண்டிக் மயமா இருக்கே... நடக்கட்டும் நடக்கட்டும்...//

என்ன மாம்ஸ் டெம்ப்ளேட் மாத்துனது ஒரு குத்தமாய்யா? ஆவ்

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 14, 2011 at 11:46 PM said...

// sakthi said...
மக்கா செம ரொமான்ஸ் கேள்விகள் + பதில்கள் அசத்தறேள் ::))))//

சேர்க்கை சரியில்ல வேறென்னாத்த சொல்வேனுங்கோ...

நன்றி சக்திக்கா!!

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 14, 2011 at 11:47 PM said...

//
ராஜி said...
இந்த காதலெனும் தேர்வெழுதி கத்திருக்கும் இந்த மாணவர் தேர்வில் வெற்றி பெற்றுவிட்டார் என மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றோம். சகோதரா கலக்கிட்டே//

வணக்கம் சகோதரம் இன்னிக்கு காத்தாலயே ச்சீ காலையிலயே உங்க வரவேற்பு கமெண்ட் பார்த்து சந்தோஷமா இருந்துச்சு இப்பவும் அதே சந்தோஷம் தான்

நன்றி சகோதரம்...

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 14, 2011 at 11:48 PM said...

//ராமலக்ஷ்மி said...
தேர்வில் வெற்றிதானே:)?//

ஐய்யய்யோ இல்லீங்க ராமலக்ஷ்மி மேடம்

நன்றி மேடம் வருகைக்கு!!!

Trackback by Philosophy Prabhakaran February 15, 2011 at 3:51 AM said...

மீள் வருகைக்கு வாழ்த்துக்கள் தல... உங்க புண்ணியத்துல பிரபா ஒயின்ஷாப் களை கட்டுது...

Trackback by எல் போர்ட்.. பீ சீரியஸ்.. February 15, 2011 at 7:09 AM said...

என்னது ஒரே பதிவு இவ்வளவு நீளமா? அடுத்த ரெண்டு வருஷத்துக்கும் சேர்த்து எழுதிட்டீங்களா?

//10 ஏப்ரல் 2012// அதுக்குள்ளேயே பலிக்க வாழ்த்துக்கள்..

Anonymous — February 15, 2011 at 10:05 AM said...

நீஈஈஈஈஈஈஈளமான பதவா எழுதிட்டீங்க..

காதலர்தின வாழ்த்துக்கள் வசந்த்..

Trackback by 'பரிவை' சே.குமார் February 15, 2011 at 10:08 AM said...

கலக்கிடீங்க வசந்த்.

Trackback by Unknown February 15, 2011 at 10:24 AM said...

ஹலோ ஜெ நீங்க தினம் தினம் தவுசண்ட் வாலா பட்டாசு வெடிக்கிறீங்க நான் என்னிக்கோ ஒரு பொட்டு வெடி வெடிக்கிறேன் அவ்வளவுதான்.. நன்றி ஜெ.ஜெ./////////////

அட... உங்கள விடவா என்னால நல்லா எழுதிட முடியும்??

தபூ சங்கருக்கு அப்பறம் நான் விரும்பி படித்தது உங்களுடைய எழுத்துக்களைத்தான்..

Trackback by செல்வா February 15, 2011 at 2:42 PM said...

அண்ணா உங்க தேர்வில் நீங்க நூறு மார்க் வாங்கிட்டீங்க ..
எனக்கு அந்த இரண்டு மார்க் கேள்வில வந்த கவிதை ரொம்ப பிடிச்சிருக்கு ..

//உடம்பு முழுவதும்
'அழகு' குத்தியிருப்பவளை
இப்பொழுதுதான் பார்க்கிறேன்...//

அதே மாதிரி மத்த எல்லாமே சூப்பர் ..
கூட தாஜ்மகால் கட்டப் போவதில்லை கவிதையும் நல்லா இருக்கு .ஆனா நான் அதுக்கு வேற மாதிரி எழுதிருக்கேன் .

நான் உனக்காக தாஜ்மகால் கட்டப்போவதில்லை ,
நாமிருவர் நமக்கிருவராய் வாழ அழகிய வீடு கட்டுவேன்.!

இப்படி எழுதிருக்கேன்..!!

Trackback by தமிழ் February 15, 2011 at 3:56 PM said...

/உடம்பில்
எதாவது ஓர் இடத்தில்
அலகு குத்தியிருப்பவர்களை
பார்த்திருக்கிறேன்
முதன் முறையாக
உடம்பு முழுவதும்
'அழகு' குத்தியிருப்பவளை
இப்பொழுதுதான் பார்க்கிறேன்...


/

அழகு

Trackback by Sriakila February 15, 2011 at 3:57 PM said...

Super imagination.

Trackback by ராஜி February 15, 2011 at 4:53 PM said...

Thanks brother,
call me akka

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 15, 2011 at 7:33 PM said...

//Philosophy Prabhakaran said...
மீள் வருகைக்கு வாழ்த்துக்கள் தல... உங்க புண்ணியத்துல பிரபா ஒயின்ஷாப் களை கட்டுது...//

ம்ம நானும் படிக்கிறேனாக்கும்...

நன்றி பிரபா!!!

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 15, 2011 at 7:43 PM said...

//எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
என்னது ஒரே பதிவு இவ்வளவு நீளமா? அடுத்த ரெண்டு வருஷத்துக்கும் சேர்த்து எழுதிட்டீங்களா? //

சில பதிவுகள் எழுதுறப்போ நான் காம்ப்ரமைஸ் செய்துகிடறதில்லை சந்தனா இந்த பதிவுக்கும் நானும் அதேபோலதான் நீளமாக இருக்கு என்று நினைத்தேன் நீளத்தை குறைத்திருந்தால் கேள்வி பதில்களை குறைக்க வேண்டியிருக்கும் ஒரிஜினாலிடி போய்ருக்கும் அதனால அப்படியே விட்டுட்டேன்

என்னோட போஸ்ட் எல்லாம் கருவாட்டு கொழம்பு மாதிரி மூணு நாளைக்கு சுட வச்சு சாப்பிடலாம்...
ஹ ஹ ஹா...

//10 ஏப்ரல் 2012// அதுக்குள்ளேயே பலிக்க வாழ்த்துக்கள்..//

ரைட்டு நன்றிங்க மேடம்

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 15, 2011 at 7:48 PM said...

//இந்திரா said...
நீஈஈஈஈஈஈஈளமான பதவா எழுதிட்டீங்க..

காதலர்தின வாழ்த்துக்கள் வசந்த்..//

நன்றிங்க ரைட்டர் இந்திரா !!!

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 15, 2011 at 7:48 PM said...

// சே.குமார் said...
கலக்கிடீங்க வசந்த்.//

நன்றி குமார்

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 15, 2011 at 7:50 PM said...

//ஜெ.ஜெ said...
ஹலோ ஜெ நீங்க தினம் தினம் தவுசண்ட் வாலா பட்டாசு வெடிக்கிறீங்க நான் என்னிக்கோ ஒரு பொட்டு வெடி வெடிக்கிறேன் அவ்வளவுதான்.. நன்றி ஜெ.ஜெ./////////////

அட... உங்கள விடவா என்னால நல்லா எழுதிட முடியும்??

தபூ சங்கருக்கு அப்பறம் நான் விரும்பி படித்தது உங்களுடைய எழுத்துக்களைத்தான்..//

ஆஹா ஜெ.ஜெ.வொய் இந்த கொலவெறி??

மிக்க மகிழ்ச்சி ஜெ.

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 15, 2011 at 7:51 PM said...

//கோமாளி செல்வா said...
அண்ணா உங்க தேர்வில் நீங்க நூறு மார்க் வாங்கிட்டீங்க ..
எனக்கு அந்த இரண்டு மார்க் கேள்வில வந்த கவிதை ரொம்ப பிடிச்சிருக்கு ..

//உடம்பு முழுவதும்
'அழகு' குத்தியிருப்பவளை
இப்பொழுதுதான் பார்க்கிறேன்...//

அதே மாதிரி மத்த எல்லாமே சூப்பர் ..
கூட தாஜ்மகால் கட்டப் போவதில்லை கவிதையும் நல்லா இருக்கு .ஆனா நான் அதுக்கு வேற மாதிரி எழுதிருக்கேன் .

நான் உனக்காக தாஜ்மகால் கட்டப்போவதில்லை ,
நாமிருவர் நமக்கிருவராய் வாழ அழகிய வீடு கட்டுவேன்.!

இப்படி எழுதிருக்கேன்..!!
//

நான் உனக்காக தாஜ்மகால் கட்டப்போவதில்லை ,
நாமிருவர் நமக்கிருவராய் வாழ அழகிய வீடு கட்டுவேன்.!

வாழ்த்துகள்டா செல்வா !!!

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 15, 2011 at 7:51 PM said...

//திகழ் said...
/உடம்பில்
எதாவது ஓர் இடத்தில்
அலகு குத்தியிருப்பவர்களை
பார்த்திருக்கிறேன்
முதன் முறையாக
உடம்பு முழுவதும்
'அழகு' குத்தியிருப்பவளை
இப்பொழுதுதான் பார்க்கிறேன்...


/

அழகு
//

நன்றி திகழ்!!!

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 15, 2011 at 7:52 PM said...

//Sriakila said...
Super imagination.//

அதான் அகிலா என்னோட ஸ்டைல் நன்றி அகிலா..

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 15, 2011 at 7:53 PM said...

// ராஜி said...
Thanks brother,
call me akka//

அப்படியே ஆகட்டும் அக்கா!!

Trackback by அப்பாவி தங்கமணி February 15, 2011 at 10:54 PM said...

// சந்தேகமே இல்லாமல் உன் அப்பாதான்//
இங்க தான் வசந்த் நிக்கறார்...ஹா ஹா...:)

//சித்ரவதை//
ahaa...mmm...

//உடனே வீட்டிற்க்குள் சென்று பெட்டி படுக்கையுடன் நீயும் என்னுடன் கிளம்பிவிட்டாய்//
செம.... (அப்போ தங்கமணி என்ஜாய் சொல்ல சான்சே இல்லை போல... ஹா ஹா...)

// E=Mc2 //
நல்லவேள நியுட்டன் செத்து போய்ட்டார்...இருந்துருந்தா கொலை கேஸ்ல நீங்க மாட்டி இருப்பீங்க...:)))

Trackback by Jaleela Kamal February 16, 2011 at 9:16 AM said...

இது பெரிய தேர்வு போல..

Trackback by Unknown February 16, 2011 at 10:51 AM said...

ஆஹா ஜெ.ஜெ.வொய் இந்த கொலவெறி??////

உண்மைய சொன்னா நம்பனும் வசந்த் :)

நான் உங்களின் மிக பெரிய ரசிகை..

Trackback by Thanglish Payan February 16, 2011 at 7:25 PM said...

Superbbbbbbbbbbb

Trackback by சுசி February 16, 2011 at 8:04 PM said...

//நன்றி சுசிக்கா!! என்னவாம் எம்மச்சானோட கோவமோ? அதான் உங்க ஆத்துக்காரரோட கோவமான்னு கேட்டேன் விசேஷம்னா தாம் தூம்ன்னு எழுதி கொண்டாடுவீங்க இன்னிக்கு மட்டும் என்னவாம் ஒண்ணும் எழுதக்காணோம்?//

உ பி.. மூன்று பதில்களில் சரியானதை கண்டு பிடிக்கவும்..

1.ஹிஹிஹி.. எழுதி இருக்கிறதையும் எதுக்கு கெடுக்கனும்னு தான்..

2.ஹிஹிஹி.. அதான் எனக்கும் சேர்த்து நீங்க எழுதிட்டிங்களே..

3.ஹிஹிஹி.. நான் ரொம்ப பிசி..

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 16, 2011 at 10:38 PM said...

//அப்பாவி தங்கமணி said...
// சந்தேகமே இல்லாமல் உன் அப்பாதான்//
இங்க தான் வசந்த் நிக்கறார்...ஹா ஹா...:)//

ha ha ha சே சே நான் எங்கயுமே நிக்கலை...

//சித்ரவதை//
ahaa...mmm...

ம்ம்

//உடனே வீட்டிற்க்குள் சென்று பெட்டி படுக்கையுடன் நீயும் என்னுடன் கிளம்பிவிட்டாய்//
செம.... (அப்போ தங்கமணி என்ஜாய் சொல்ல சான்சே இல்லை போல... ஹா ஹா...)

யெஸ்ஸு

// E=Mc2 //
நல்லவேள நியுட்டன் செத்து போய்ட்டார்...இருந்துருந்தா கொலை கேஸ்ல நீங்க மாட்டி இருப்பீங்க...:)))

மாட்டேன் மாட்டேன் அவரோட சேர்ந்து புதுசு புதுசா நிறைய கண்டுபிடிச்சுருப்பேன் ...

நன்றி அப்பாவி தங்ஸ்...

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 16, 2011 at 10:39 PM said...

//Jaleela Kamal said...
இது பெரிய தேர்வு போல..//

ஆமா சகோ...!!

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 16, 2011 at 10:41 PM said...

//ஜெ.ஜெ said...
ஆஹா ஜெ.ஜெ.வொய் இந்த கொலவெறி??////

உண்மைய சொன்னா நம்பனும் வசந்த் :)

நான் உங்களின் மிக பெரிய ரசிகை..//

அப்போ பாலாபிஷேகம் கட் அவுட், பேனர் , கொடிகட்டுறது, இதெல்லாம் செய்ங்க ... அப்போதான் நம்புவேன்

ஹ ஹ ஹா

ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி ஜெ..

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 16, 2011 at 10:42 PM said...

//Thanglish Payan said...
Superbbbbbbbbbbb//

Thankyou Thankyou Thankyou

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 16, 2011 at 10:46 PM said...

//சுசி said...
//நன்றி சுசிக்கா!! என்னவாம் எம்மச்சானோட கோவமோ? அதான் உங்க ஆத்துக்காரரோட கோவமான்னு கேட்டேன் விசேஷம்னா தாம் தூம்ன்னு எழுதி கொண்டாடுவீங்க இன்னிக்கு மட்டும் என்னவாம் ஒண்ணும் எழுதக்காணோம்?//

உ பி.. மூன்று பதில்களில் சரியானதை கண்டு பிடிக்கவும்..

1.ஹிஹிஹி.. எழுதி இருக்கிறதையும் எதுக்கு கெடுக்கனும்னு தான்..

2.ஹிஹிஹி.. அதான் எனக்கும் சேர்த்து நீங்க எழுதிட்டிங்களே..

3.ஹிஹிஹி.. நான் ரொம்ப பிசி..//

தோ பார்டா அக்காவ

எனக்கே ஆப்சன் கொடுக்கறாங்க..

முதல் ஆப்சன் - ஏத்துகிடமுடியாது

ரெண்டாவது ஆப்சன் -பதிவு நீளமா இருக்குடான்னு மறைமுக தாக்குதல் ரைட்டு ரைட்டு அதான் சொல்லிட்டேன்ல என்னோட போஸ்ட் கருவாட்டு கொழம்புமாதிரி மூணு நாளைக்கு சுட வச்சு சுட வச்சு சாப்பிடலாம்ன்னு..

மூணாவது ஆப்சன் - சரி இப்போல்லாம் நீங்க ரொம்ப பிஸியாயிட்டீங்கக்கா...

Trackback by Unknown February 17, 2011 at 9:51 AM said...

அப்போ பாலாபிஷேகம் கட் அவுட், பேனர் , கொடிகட்டுறது, இதெல்லாம் செய்ங்க ... அப்போதான் நம்புவேன்///


அய்யோ... இதுக்கு தான் உண்மையே பேச கூடாதுனு சொல்றது..

ஒரு ரசிகையா இருக்க இதெல்லாம் செய்யனுமா என்ன??

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 18, 2011 at 10:25 AM said...

//ஒரு ரசிகையா இருக்க இதெல்லாம் செய்யனுமா என்ன??//

சே,,சே இல்லீங்க நான் சும்மா காமெடிக்கு சொன்னேன் தப்பா எடுத்துக்காதீங்க..

Trackback by எவனோ ஒருவன் February 18, 2011 at 11:51 AM said...

இப்படி ஒரு அழகான பதிவை கடைசியாக படித்தவன் நானாகத் தான் இருப்பேன். என்ன காரணமோ, காதலர் தினத்தன்று காதலைப் பற்றி படிக்க மனம் வர வில்லை.

பதிவு அருமை நண்பரே. குறிப்பாக இந்த வரிகள்

////காதலி: காதல் என்றால் என்ன?


காதலன் : காதல் என்பது என்னைப்பொருத்தவரையிலும் , ''நீ எனக்கு கிடைத்தால் என் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்பதைவிட உன்னோடுதான் என் வாழ்க்கை'' என்பதாகும்.////

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 19, 2011 at 12:12 AM said...

//எவனோ ஒருவன் said...
இப்படி ஒரு அழகான பதிவை கடைசியாக படித்தவன் நானாகத் தான் இருப்பேன். என்ன காரணமோ, காதலர் தினத்தன்று காதலைப் பற்றி படிக்க மனம் வர வில்லை.//

ஓஹ் ஏன் காதலின் மீது வெறுப்பா?

பதிவு அருமை நண்பரே. குறிப்பாக இந்த வரிகள்

////காதலி: காதல் என்றால் என்ன?


காதலன் : காதல் என்பது என்னைப்பொருத்தவரையிலும் , ''நீ எனக்கு கிடைத்தால் என் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்பதைவிட உன்னோடுதான் என் வாழ்க்கை'' என்பதாகும்.////
//

உங்களின் பாராட்டே எனக்கு பூஸ்ட் குடிச்ச மாதிரி இருக்கு நன்றி பாஸ் அடுத்த சில பதிவுகளில் நான் முன்பே கூறிய படி உங்களின் டயரி பதிவும் இருக்கிறது எதிர்பார்த்திருங்கள்...

Trackback by ரேவா February 21, 2011 at 3:58 PM said...

உடம்பில்
எதாவது ஓர் இடத்தில்
அலகு குத்தியிருப்பவர்களை
பார்த்திருக்கிறேன்
முதன் முறையாக
உடம்பு முழுவதும்
'அழகு' குத்தியிருப்பவளை
இப்பொழுதுதான் பார்க்கிறேன்...

சூப்பர் வசந்த்,,,,,

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 24, 2011 at 12:48 AM said...

//ரேவா said...
உடம்பில்
எதாவது ஓர் இடத்தில்
அலகு குத்தியிருப்பவர்களை
பார்த்திருக்கிறேன்
முதன் முறையாக
உடம்பு முழுவதும்
'அழகு' குத்தியிருப்பவளை
இப்பொழுதுதான் பார்க்கிறேன்...

சூப்பர் வசந்த்,,,,,/

நன்றி ரேவதி.

Trackback by Unknown March 4, 2011 at 9:07 AM said...

arumaiyana puthu muyarchikku vaalthukkal .. paaraattukal.... vasanth..

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 4, 2011 at 11:56 PM said...

//GOBI GA said...
arumaiyana puthu muyarchikku vaalthukkal .. paaraattukal.... vasanth..//

வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி கோபி.GA

Trackback by avvavm June 19, 2012 at 3:57 PM said...

கலக்கிடீங்க பாஸ்