தோழி அப்டேட்ஸ் - Sorry கார்க்கி

| December 19, 2010 | |
நீ என்னடா படிச்சுருக்க என்று கேட்டவளிடம் நான் பி.எல். முடிச்சுருக்கேன்னு சொன்னதும் ஓஹ் வக்கீலுக்கு படிச்சுருக்கியா பேஷ் பேஷ் என்றவளிடம் பி.எல்ன்னா பேச்சலர் ஆஃப் லவ்ன்னு சொன்னேன், சைய் ரொம்ப கடிக்காதடான்னு சொல்லி என் கையப்பிடித்து கடித்து வைத்திட்டாள் கடிகாரி...


பி.எல். முடிச்சுருக்கியே உன்னோட கோர்ஸ்ல என்ன என்ன சப்ஜெக்ட்டெல்லாம் இருந்துச்சு கொஞ்சம் சொல்லேன் நான் தெரிஞ்சுக்கிறேன்னு சொன்னவளிடம் இதழியல்,இடையியல்,காதலியியல்,கண்ணியல்,கடைசியா காமவியல்ன்னு சொல்லி முடிக்கிறதுக்கு முன்னாடியே மொத்ததுல நீ ஒரு டரியல்டா சாமி ஆளவிடுன்னு ஓடியேவிட்டாள்...நான் உனக்கு புதுசா ஒரு பெயர் வச்சுருக்கேன்டின்னதும் என்ன என்ன பெயர்ன்னு குதிச்சு ஓடி வந்தவளிடம் நீ நான் எப்போ முத்தம் கேட்டாளும் தரவேமாட்டேன்றியா அதனால முத்தம்தராதவள் என்பதை சுருக்கி முத்ததாரா என்று வைத்திருக்கிறேன்னு சொன்னதும் இச்சென்று ஒரு முத்தம் தந்துவிட்டாள்...


என்னடா நானும் ரொம்ப நேரமா பாத்துகிட்டே இருக்கேன் எதோ ஒரு புக்கை அவ்ளோ இண்ட்ரெஸ்டா படிச்சுட்டு இருக்க என்ன புக் அது?.இதுவா தபூசங்கரோட வெட்கத்தை கேட்டாள் என்னதருவாய்ன்ற புக் ஆமா நீ சொல்லேன் உன்கிட்ட வெட்கத்தை கேட்டால் என்ன தருவ என்றதும் பதிலாய் அவளிடமிருந்து மௌனவெட்கம் மட்டுமே கிடைக்க சத்தம் போடாமல் எடுத்துக்கொண்டேன் நான்...


நீ ரொம்ப அழகா கவிதையெல்லாம் எழுதுவியாமே உன்னோட ஃப்ரண்ட் சொன்னான்  எங்க எனக்கு ஒரு கவிதையெழுதிக்காட்டேன் என்றவளிடம் உனக்குன்னு கவிதை எழுதுறதா இருந்தா நாம் தேனிலவு செல்லவேண்டியிருக்கும் பரவாயில்லையா என்றேன் ச்சீய் போடா லூசு எப்பப்பாரு இதே நினைப்புத்தானா வெட்கங்கெட்டவனே என்று கவிதையாய் திட்ட ஆரம்பித்திருந்தாள்....


எப்பப்பாரு மிஸ்ட் காலா குடுக்குறியே ஒரு நாளைக்காவது உன்னோட காசு  போட்டு கால் பண்ணியிருக்கியாடி நீ, சரியான கஞ்சூஸ்டி நீ என்றேன். மிஸ்ட் கால்தான பண்ணேன் மிஸ்ட் காதல் பண்ணலியே என்று சொல்லி வார்த்தை விளையாட்டு காட்டுகிறாள்...


உனக்கு சமைக்கத்தெரியுமா என்ன என்னல்லாம் சமைப்ப என்று கேட்டாள்,எதுக்கு கேட்குற என்றேன் இல்லை கல்யாணத்துக்கு அப்பறம் எனக்கு யூஸ்ஃபுல்லா இருக்குமே அதான் கேட்டேன், ஓஹ் அப்டியா இரு  சொல்றேன் எனக்கு முத்தப்பொறியல், இடைதோசை, காதல் குருமா இதெல்லாம் நல்லா சமைக்கத்தெரியும் என்றதும் உன்னையெல்லாம் எதுனாலும் பாலைவனத்துல கொண்டுபோய் விட்டாத்தாண்டா நீ திருந்துவன்றாப்பா...(இப்போ தெரியுதா நான் ஏன் பாலைவனத்துல இருக்கேன்னு ஆவ்வ்)


சாரி கார்க்கி உங்க லெவலுக்கு என்னால எழுதமுடியலை...

*************************************************************************************

இந்த ஏழு நாளா என்னோட மொகரகட்டய பார்த்து சகிச்சுகிட்டு இருந்ததுக்கும் நான் எழுதுன மொக்கையெல்லாம் பொறுமையா படிச்சு பின்னூட்டம் போட்டமைக்கும் மிக்க நன்றி. அதே வேளையில் என்னை நட்சத்திரமா தேர்ந்தெடுத்த தமிழ்மணம் நிர்வாகத்திற்க்கு மீண்டும் ஒருமுறை நன்றி  சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.அடுத்து வரப்போகிற நட்சத்திரத்திற்க்கு வாழ்த்துகள் சொல்லிக்கொண்டு உங்களிடமிருந்து விடைபெற்றுக்கொள்கிறேன்...அதுக்கு முன்னாடி உங்ககிட்ட ஒரு விஷயம்  
தமிழ்மணம் நடத்தும் இந்தவருடத்திற்க்கான சிறந்த இடுகைகள் தேர்ந்தெடுப்பதற்க்கான தேர்தலில் என் சார்பில் நீங்கள் மிகவும் ரசித்த இடுகைகளான


ஆகிய இடுகைகள் சமர்ப்பித்திருக்கிறேன் பிடித்திருந்தால் வாக்களிக்க மறவாதீர்கள் நன்றி.


Post Comment

33 comments:

Trackback by Ramesh December 19, 2010 at 1:50 AM said...

Arumai nanba.
Neenga palaivanathula irukaradhukkana karanam super. Wow..

Trackback by Ramesh December 19, 2010 at 1:51 AM said...

Namma blog vanga. Oru kadhai yeludhiruken

Trackback by Philosophy Prabhakaran December 19, 2010 at 4:12 AM said...

// மிஸ்ட் கால்தான பண்ணேன் மிஸ்ட் காதல் பண்ணலியே //

சமாளிபிகேஷன்...

Trackback by சுசி December 19, 2010 at 4:15 AM said...

ஹேய்.. ரொம்ப நல்லாருக்குப்பா..

கண்டிப்பா ஓட்டுப் போட்டுடலாம் :)

Trackback by சி.பி.செந்தில்குமார் December 19, 2010 at 5:12 AM said...

mudha முத வெட்டு

Trackback by சி.பி.செந்தில்குமார் December 19, 2010 at 5:12 AM said...

7 நாளா கலகீட்டீங்க ,வாழ்த்துக்கள்

Trackback by சீமான்கனி December 19, 2010 at 5:14 AM said...

மாப்பி காதல் கல்லுரி தொடங்கி உன்னை முதல்வரா போடலாம் போல இருக்கே...ஆமாம் இப்பலாம் காதலோட சேர்த்து சமையல் வாடையும் அதிகம் வருதே எதுக்கோ ரெடியாகுற மாதிரி தெரியுது...
ம்ம்ம்ம்..ரசித்தேன் ...சரி அப்படியே இங்க வந்து இந்த தொடரையும் இனிதே ஆரம்பித்து விடு...

http://ganifriends.blogspot.com/2010/12/blog-post_19.html

Trackback by ஜெயந்த் கிருஷ்ணா December 19, 2010 at 6:03 AM said...

தோழி அப்டேட்ஸ் ரொம்ப நல்லாயிருக்கு..

தமிழ்மண போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

Anonymous — December 19, 2010 at 7:12 AM said...

எல்லாம் செல்லமாய் சினுங்குவதாய் கவிதை சொல்லாமல் காதல் சொல்லும் நவீன நயம் அத்தனை அழகு வசந்த்..

Trackback by பெசொவி December 19, 2010 at 7:23 AM said...

ரொம்ப அருமை, வசந்த்!

//இதழியல்,இடையியல்,காதலியியல்,கண்ணியல்,கடைசியா காமவியல்ன்னு சொல்லி முடிக்கிறதுக்கு முன்னாடியே மொத்ததுல நீ ஒரு டரியல்டா சாமி ஆளவிடுன்னு ஓடியேவிட்டாள்.//


இது சூப்பர்!

Trackback by சாந்தி மாரியப்பன் December 19, 2010 at 7:32 AM said...

நடக்கட்டும் :-)))))

Trackback by கருடன் December 19, 2010 at 8:37 AM said...

@வசந்த்

மச்சி எப்படிடா இப்படி புழிய புழிய காதலிக்கறிங்க. பொறாமையா இருக்கு. நான் எழுதனும் நினைச்சாலெ வர மொதல் லைன்.. எண்டா நாதாரி நாயே... இதுக்கு சும்மா இருக்கதே நல்லது சொல்லி கமெண்ட் போட்டு திறியறேன்... :(

Trackback by தேவன் மாயம் December 19, 2010 at 8:55 AM said...

வாழ்த்துகள் வசந்த்!

Trackback by Unknown December 19, 2010 at 9:44 AM said...

வர வர தேர்தல் போல ஆயிடுச்சு ... யோவ் மாப்ள உங்க பதிவு தரமா இருந்தா ஓட்டு போட மாட்டோமா?

அப்புறம் புதுசா காதல் மொளைசிருக்கு போல, வாழ்த்துக்கள் ...

Trackback by 'பரிவை' சே.குமார் December 19, 2010 at 12:38 PM said...

தோழி அப்டேட்ஸ் ரொம்ப நல்லாயிருக்கு..

தமிழ்மண போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

Trackback by Deepa December 19, 2010 at 1:16 PM said...

இந்த ஏழு நாளான்னு ஆரம்பிக்கிற‌ கடைசி பாராவுக்காகவே என் ஓட்டு!
:)

Trackback by Unknown December 19, 2010 at 4:36 PM said...

நல்லாயிருக்குங்க... தமிழ் மணத்தில் தேர்வாக வாழ்த்துக்கள்..

Trackback by ஹேமா December 19, 2010 at 5:11 PM said...

கண்டிப்பா தமிழ்மணத்தில விருதுதான்.வாழ்த்துகள் வசந்து !

Trackback by கார்க்கிபவா December 19, 2010 at 6:59 PM said...

எதுக்கு வசந்த் சாரியெல்லாம்?/ :(((

ஒரு வாரம் நிஜமா சிரத்தையெடுத்து எழுதியிருக்கிங்க. 2,3 பதிவு ரொம்ப நல்லா இருந்துச்சு..

நான் சொல்றத நம்பித்தான் ஆகணும்.. உன் ரசிகர்கள், நண்பர்கள் எண்ணிக்கை ரொம்ப அதிகம் ஆயிடுச்சு.. தமிழ்மணத்துல ஒரு பரிசு கன்ஃபார்ம் :)

Trackback by VISA December 19, 2010 at 7:36 PM said...

கார்க்கி லெவுலுக்கு இல்லேன்னாலும் கலக்கல்

Trackback by cheena (சீனா) December 20, 2010 at 4:22 AM said...

கலக்கல் வசந்த் = தூள் கெள்ப்பிட்டாப்ல இருக்கு - நல்வாழ்த்துகள் - தமிழ் மணத்தில் நட்சத்திரமாக ஒரு வாரம் ஜொலித்ததற்கு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Anonymous — December 20, 2010 at 6:36 AM said...

மச்சி அசத்திட்ட போ! :)

Trackback by வெளங்காதவன்™ December 20, 2010 at 12:03 PM said...

வசந்து,
அசத்தலோ அசத்தல்...

Trackback by R.பூபாலன் December 20, 2010 at 1:03 PM said...

நல்ல வேளை. ஒரு வாரம்தாம்பா...

இல்லேன்னா இன்னும் இந்த கொடுமையெல்லாம் அனுபவிக்க வேண்டியிருக்குமே....

Trackback by R.பூபாலன் December 20, 2010 at 1:08 PM said...

ஏழு நாட்களும்
7 -Shot பட்டாசு வெடிச்ச மாதிரி
பதிவுகளை போட்டு கொளுத்திய
வசந்த் அண்ணாவுக்கு
வாழ்த்துக்கள்.....
வாழ்த்துக்கள்.....
வாழ்த்துக்கள்.....

Trackback by யோ வொய்ஸ் (யோகா) December 20, 2010 at 8:54 PM said...

கலக்கல் மாப்ள

Trackback by சத்ரியன் December 21, 2010 at 3:48 PM said...

வசந்த்,

பாலையில இருக்க காரணம் இதுதானா? அப்படின்னா டபுள் ஓகே.

Trackback by ? December 21, 2010 at 4:15 PM said...

http://www.vinavu.com/2010/12/21/chennai-book-fair/

கீழைக்காற்று: வினவு-புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா!

நூல் வெளியிடுவோர்:
ஓவியர் மருது
மருத்துவர் ருத்ரன்

சிறப்புரை: “படித்து முடித்த பின்…”
தோழர் மருதையன், பொதுச் செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு

நாள்: 26.12.2010

நேரம்: மாலை 5 மணி

இடம்: செ.தெ. நாயகம் தியாகராய நகர் மேல்நிலைப்பள்ளி, வெங்கட் நாராயணா சாலை, தியாகராய நகர், சென்னை


அனைவரும் வருக !

Trackback by R.பூபாலன் December 21, 2010 at 7:23 PM said...

எனக்கு ஓட்டுப் போட சொல்லித்தரவே இல்லையே......
எனக்கும் பதினெட்டு வயசாகிடுச்சுப்பா...

Anonymous — December 22, 2010 at 11:02 AM said...

தொடர்ந்து பாலைவனத்தில் இருக்க வாழ்த்துக்கள் வசந்த்

Anonymous — December 22, 2010 at 11:02 AM said...

முத்ததாரா..

அருமையான அர்த்தமுள்ள பெயர்.

ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்

Trackback by R.பூபாலன் December 22, 2010 at 6:17 PM said...

inaiku otu potu palakitenpa....
(Ayaiyo..!publica sollitene...)

(nalla velai vasanthukkuthan ottu potenu sollala...)

Trackback by தமிழ் December 25, 2010 at 2:48 PM said...

வாழ்த்துகள்