பிரியாணி - விமர்சனம்

| December 15, 2010 | |
பிரியாணி - விமர்சனம்

நிறைய பேர் சினிமா படத்துக்கு விமர்சனம் எழுதுறாங்க,ஒரு சேஞ்சுக்கு நாம சாப்பிடுற பிரியாணிக்கு விமர்சனம் எழுதலாம்முன்னு....

கதை: ஒரு கடையில இருந்து வாங்குன அரிசி,எப்பிடி இறைச்சிகடையில வாங்குன ஆட்டிறைச்சியோட சேர்ந்து பிரியாணி ஆகுதுன்றதுதான் கதை,

கதையோட ஹீரோ யாருன்னு பார்த்தா ஆட்டிறைச்சிதாங்க ஹீரோ,கதையோட கரு எல்லாமே ஆட்டிறைச்சிய சுத்தி சுத்திதான் நடக்குது....

மூலக்கடை செட்டியார் கடையில பிரியாணி அரிசி வாங்குறதுல இருந்து ஆரம்பிக்குது கதை,அப்படியே ராஜி கடையில வாங்குன ஆட்டிறைச்சியும்,அரிசியோட தங்க மணி பையில வாங்கிட்டு வரும்போதே தொட்டு தொட்டு பேசி உறவாடிட்டு மெல்ல காதல் வளருது,

வீட்டுக்கு வந்ததும் பிரியாணி அரிசி குளிக்க ஆரம்பிக்குது,அப்பறம் ஆட்டிறைச்சியும் குளிக்க ஆரம்பிக்குது அப்போ ரெண்டுபேருக்கும் தனித்தனி சோலோ சாங்க் ஒண்ணு வருது, அரிசிதாங்க முதல்ல தன்னோட காதல்சொல்லணும்ன்னு நல்லா விளக்கி வச்ச பாத்திரத்துல தண்ணியோட சேர்ந்து கொதிக்க ஆரம்பிக்குது.

அப்பறம் அரிசியோட காதலை புரிஞ்சுகிட்ட ஆட்டிறைச்சியும் டொபுக்குன்னு பாத்திரத்துக்குள்ள விழுந்து அரிசியோட சேர்ந்து கடபுட கடபுடன்னு ஒரு டூயட் சாங்க்ல தன்னோட காதலை சொல்லிடுது,

படத்துல தங்கமணி ஆட்டிறச்சிய துண்டு துண்டா வெட்டும்போது வர்ற ஃபைட் சீன் இதுவரைக்கும் தமிழ் சினிமா பாத்திராதது,கிராஃபிக்ஸ் காட்சியில படத்தோட டைரக்டர் தங்கமணி புகுந்து விளையாடியிருக்கார்,

அப்பறம் படத்தோட சைட் ஆர்ட்டிஸ்ட்களான தக்காளி,வெங்காயம்,பச்சைமிளகாய் வெட்டும்போது வர்ற ஃபைட் சீனும் எதார்த்தமா இருக்கு, என்ன வெங்காயத்தோட ஃபைட் சீன் வரும்போது மட்டும் நம் கண்ணில் தண்ணீர் வர்றது நிஜம்,

Then,தக்காளி,வெங்காயம் வதக்கும் சீன்ல நம் மனது அப்படியே லயித்துவிடுகிறது,இவங்கதான் இந்த மட்டன் பிரியாணி கதை சிறப்பா வர்றதுக்கு காரணம் என்பதை மறுப்பதற்க்கில்லை,

அப்பறமா பிரியாணியோட வாசனைக்கு சேர்க்கப்பட்ட புதினாவும்,பிரியாணி மசாலாவும் தங்களோட கேரக்டரை சிறப்பா செஞ்சுருக்காங்க..படத்தோட ஹீரோ ஆட்டிறைச்சியும்,ஹீரோயின் பிரியாணி அரிசியும் போட்டி போட்டு தங்களோட திறமைய வெளிப்படுத்தியிருக்காங்க...

கடைசியா எல்லாரும் சேர்ந்து எப்படி பிரியாணி சுவையா வந்துச்சுன்றது தங்கமணி பரிமாறும்போது எல்லாரும் சாப்பிட்டு தெரிஞ்சுக்கோங்க..

படத்தோட ப்ளஸ்பாயிண்டே கதை நடக்கும்போதே பக்கத்து வீட்டுக்காரர்களை நம்ம வீட்டுக்கு வரவைக்குற அளவுக்கு வாசனையா நம்ம தங்கமணியோட டச்சிங் பெர்ஃபார்மன்ஸ் பட்டைய கிளப்புது,அதிலும் அந்த உப்பு கரெக்ட்டா சேர்த்த விதத்தில டைரக்டர் தங்கமணி தான் அனுபவசாலின்னு நிரூபிச்சுடுறார்.படம் நன்றி : http://sashiga.blogspot.com


மொத்தத்தில் இந்த மட்டன் பிரியாணி சாப்பிடுற எல்லாரோட மனசையும் வயித்தையும் நிறைய வைக்குதும அப்பிடின்றதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

மட்டன் பிரியாணி-சுவையாய்...

மீண்டும் அடுத்த வாரம் ஒரு சிறந்த உணவின் விமர்சனத்தில் சந்திப்போம்....

..

Post Comment

40 comments:

Trackback by Chitra December 16, 2010 at 2:06 AM said...

கதை: ஒரு கடையில இருந்து வாங்குன அரிசி,எப்பிடி இறைச்சிகடையில வாங்குன ஆட்டிறைச்சியோட சேர்ந்து பிரியாணி ஆகுதுன்றதுதான் கதை,


.............ஜீரணிக்க கூடிய கதைதான். சூப்பர்!

Trackback by முச்சந்தி December 16, 2010 at 2:25 AM said...

//படத்துல தங்கமணி ஆட்டிறச்சிய துண்டு துண்டா வெட்டும்போது வர்ற ஃபைட் சீன் இதுவரைக்கும் தமிழ் சினிமா //

அதிரடி ராணி தங்கமணின் ஃபைட்ட ரொம்பதான் ரசிசு இருகிங்க போல :)

Trackback by cheena (சீனா) December 16, 2010 at 2:32 AM said...

அன்பின் வசந்த்

பன்முகம் காட்டும் உன் திறமை வாழ்க - பிரியாணி - திரைக்கதை விமர்சனம் நன்று நன்று - ஆமா யார் இந்த தங்கமணி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Trackback by இமா க்றிஸ் December 16, 2010 at 2:48 AM said...

;))))

ரசித்தேன். ;)

Trackback by ஹேமா December 16, 2010 at 3:18 AM said...

வசந்து....பிரியாணி சுவிஸ் வரைக்கும் வாசனை வருது.உங்க விமர்சனம் பிரியாணி சாப்பிடணும் போல இருக்கு.இங்க N.B.C - Bern சினிமா அரங்கத்தில இந்த வார விடுமுறையில பந்தி போடுறாங்களாம் !

Trackback by Philosophy Prabhakaran December 16, 2010 at 3:23 AM said...

அய்யய்யோ.... வயிற்ருக்குள் கடமுட என்று சத்தங்கள் வருகின்றனவே...

Trackback by மாணவன் December 16, 2010 at 4:11 AM said...

///மொத்தத்தில் இந்த மட்டன் பிரியாணி சாப்பிடுற எல்லாரோட மனசையும் வயித்தையும் நிறைய வைக்குதும அப்பிடின்றதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

மட்டன் பிரியாணி-சுவையாய்...

மீண்டும் அடுத்த வாரம் ஒரு சிறந்த உணவின் விமர்சனத்தில் சந்திப்போம்....//

அருமை அண்ணே,

சிறப்பாக உள்ளது இன்னும் நிறைய உணவைப் பற்றி விமர்சனம் பற்றி உங்கள் ஸ்டைலில் எழுதுங்கள்....

தொடரட்டும் உங்கள் பணி

நன்றி

Anonymous — December 16, 2010 at 5:17 AM said...

ரைட்டு.. மச்சி நைட்டு பிரியாணி சாப்பிடும்போது தோணுச்சோ?
நானெல்லாம் சாப்பிடும்போது எப்படி செஞ்சாங்கன்னு கூட யோசிக்கிறதில்ல, நீ விமர்சனம் எழுதுற அளவுக்கு போய்ட்ட.. ம் ம்..
டேஸ்டா தான் இருக்கு இதுவும் :)

Trackback by aj December 16, 2010 at 5:26 AM said...

Buriyani super..!!! nalla katpanai

http://tamilnovelsonline.blogspot.com

Trackback by வைகை December 16, 2010 at 6:40 AM said...

வீட்டுக்கு வந்ததும் பிரியாணி அரிசி குளிக்க ஆரம்பிக்குது,அப்பறம் ஆட்டிறைச்சியும் குளிக்க ஆரம்பிக்குது ///////


இப்பிடியெல்லாம் வரவும் கதை எங்கயோ போகுதுன்னு பயந்துட்டேன்(?!!!!) நல்ல வேளை அப்படி எதுவும் நடக்கல!

Trackback by வைகை December 16, 2010 at 6:41 AM said...

இன்ட்லில இணைக்கலையா?!

Trackback by shortfilmindia.com December 16, 2010 at 7:11 AM said...

நட்சத்திர வாழ்த்துகள்

cable sankar

Trackback by ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) December 16, 2010 at 7:41 AM said...

மச்சி இதை உங்க பிளாக்குல ஏற்கனவே படிச்ச மாத்ரி இருக்கே

Trackback by ஜெயந்த் கிருஷ்ணா December 16, 2010 at 7:52 AM said...

மட்டன் பிரியாணிக்கு மட்டும் தான் விமர்சனம் போடுவீங்களா...

Trackback by Ananthi (அன்புடன் ஆனந்தி) December 16, 2010 at 8:03 AM said...

படம்.. மசாலா படமா இருந்தாலும்.. 100 நாள் ஓடும் போல இருக்கே?? செம.. விமர்சனம்.. :-)

Trackback by சௌந்தர் December 16, 2010 at 8:14 AM said...

நல்ல விமர்சனம் மசாலா படம்....வர சண்டே பார்க்கணும்

Trackback by கருடன் December 16, 2010 at 8:24 AM said...

மச்சி!! யாரையோ செருப்பால அடிச்சி இருக்க மாதிரி தெரியுது?? இல்லையா... :))

Anonymous — December 16, 2010 at 8:24 AM said...

ரொம்ப taste ah இருக்கே பதிவு .....

Trackback by Unknown December 16, 2010 at 8:28 AM said...

enna thambi kalaila biriyaniya pathi peasi pasi eduka vechuta super biriyani rate yenna 5 Rupeesa

Trackback by kousalya raj December 16, 2010 at 8:28 AM said...

இனி பிரியாணி சாப்பிடும் போதெல்லாம் இந்த விமர்சனம் தான் நினைவுக்கு வரும் போல...
இந்த மாதிரி விமர்சனம் தொடரும்னு வேற சொல்றீங்க....ம்...நடத்துங்க....

:)))

Anonymous — December 16, 2010 at 8:45 AM said...

இந்த பிரியாணி படத்தை பாக்க ஐ மீன் படிக்க வர்றவங்களுக்கு பார்சல் கிடைக்குமா??

Trackback by Unknown December 16, 2010 at 9:10 AM said...

வீட்டுல செஞ்ச பிரியாணியா? உவ்வே ...

Trackback by தமிழ் உதயம் December 16, 2010 at 9:15 AM said...

பிரியாணி திரைப்படத்துக்கு மதிப்பெண்ணும் போட்டிருக்கலாம்.

Trackback by 'பரிவை' சே.குமார் December 16, 2010 at 10:27 AM said...

ஜீரணிக்க கூடிய கதைதான். சூப்பர்!

Trackback by எம் அப்துல் காதர் December 16, 2010 at 10:33 AM said...

இந்த படத்தோட DVD எங்க பாஸ் கிடைக்கும். வித்தியாசமான கற்பனை!!

Trackback by Unknown December 16, 2010 at 3:11 PM said...

சூப்பர் பிரியாணி..

Trackback by சுசி December 16, 2010 at 3:31 PM said...

ஏவ்வ்வ்வ்வ்.. சமிச்சு போச்சு வசந்த் :))

Trackback by செ.சரவணக்குமார் December 16, 2010 at 4:12 PM said...

வாவ்.. வசந்த். கலக்குறீங்க. நட்சத்திர வாழ்த்துகள் சகோதரா. (இணைய இணைப்பு இல்லாததால் கொஞ்சம் தாமதமாக எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.)

Trackback by யோ வொய்ஸ் (யோகா) December 16, 2010 at 6:32 PM said...

எப்படி வசந்த் இப்படி எல்லாம் யோசிக்க முடியுது

Trackback by பன்னிக்குட்டி ராம்சாமி December 16, 2010 at 7:06 PM said...

மொத்ததில் இந்த பிரியாணி நல்ல மாசாலா....!

Trackback by பன்னிக்குட்டி ராம்சாமி December 16, 2010 at 7:08 PM said...

வழக்கமான கதை என்றாலும், இயக்குனர் சரியான இடத்தில் சரியான மசாலா சேர்த்திருப்பதால் படம் பாஸ் ஆகிறது!

Trackback by அப்பாவி தங்கமணி December 16, 2010 at 7:11 PM said...

ஹா ஹா ஹா... சிரிச்சு முடிச்சுட்டு வந்து மீதி கமெண்ட் போடறேன்... (எப்படி இப்படிலாம்... தனியா எதாச்சும் கோச்சிங் க்ளாஸ் இருக்கோ...ஹா ஹா ஹா)

Trackback by Vaitheki December 16, 2010 at 7:20 PM said...

ரொம்ப வித்தியாசமா நல்லா இருக்கு

Trackback by ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் December 16, 2010 at 7:27 PM said...

இந்தப்படம் எப்பவுமே நல்லாஇருக்கும். அதிலேயும் எங்க ஆம்பூரில் வந்துப் பாத்தீங்கன்னா இன்னும் சூப்பர் ! புதுமையான விமரிசனம்! வாழ்த்துக்கள் வசந்த்!

Trackback by Thenammai Lakshmanan December 16, 2010 at 8:38 PM said...

வசந்த் உண்மையை சொல்லுங்க.. இது போன வருடமே நான் படிச்சதாச்சே.. சசிகாவோட போன வருட பிரியாணியை சூடு பண்ணி போட்டுட்டீங்க.. உண்மைதானே..:))

Trackback by Mahi_Granny December 16, 2010 at 8:53 PM said...

இந்த தங்கமணி எங்கு இருக்காங்க என்று தெரியணுமே பிரியாணி செய்ய வேறு தெரிந்து இருக்கனுமே . சிரமம் தான் . சீக்கிரம் ஆகட்டும்

Anonymous — December 17, 2010 at 10:45 AM said...

ப்ரியமுடன் வசந்த்பிரியாணி - விமர்சனம்
சென்னை தனி மாநிலமாகிறதா?
ஒபாமா & ஒசாமா - வலைத்தளம் ஒரு பார்வை!

இந்த வார நட்சத்திரம் - ஓர் அறிமுகம் ////


வாழ்த்துக்கள்

Trackback by செந்தில்குமார் December 17, 2010 at 12:46 PM said...

பிரியாணி ம்ம்ம்ம்...

Trackback by மாதேவி December 17, 2010 at 3:20 PM said...

அரிசியும் ஆட்டிறைச்சியும் டூயட்டா...:)

Trackback by சாந்தி மாரியப்பன் December 17, 2010 at 4:33 PM said...

மணமான பிரியாணி.. சூடு பண்ணினாலும் சுவை குறையாமல் :-)))