சென்னை தனி மாநிலமாகிறதா?

| December 15, 2010 | |சென்னை தமிழ்நாட்டின் இதயம் என்று சொல்லும் அளவிற்க்கு தமிழ்நாட்டின் அத்தனை பகுதியிலிருந்தும் பெரும்பாலும் வீட்டிற்க்கு ஒருவராவது சென்னையில் வசிக்கும் வரம் பெற்றிருக்கின்றனர் .இந்த நகரில் விளையும் நல்லது கெட்டதுகளின் பிரதிபலிப்பை தமிழ்நாட்டின் அத்தனை ஊர்களிலும் காணலாம், சட்டமன்றம், சினிமாத்துறை,தொழில்துறை,மென்பொருள் துறை என அத்தனை விஷயங்களின் தலைமையிடமாக விளங்குகிறது.இதன் விளைவு இடப்பற்றாக்குறை, நில மற்றும் வீடு ஆகியவற்றின் விலை உயர்வு,வீட்டு வாடகை உயர்வு தண்ணீர் பற்றாக்குறை இன்னும் இன்னும் நிறைய நிறைய பிரச்சினைகள் இருந்தாலும் இவற்றையும் மீறி தினந்தோறும் சென்னை வந்து வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டேதான் செல்கிறது குறைந்த பாடில்லை...

ஏன் இந்த சென்னை மோகம் ? விமான போக்குவரத்து,கப்பல் போக்குவரத்து இந்த இரண்டு விஷயங்களினால்தான் இந்த இரண்டு விஷயங்களினாலும் தற்போது வந்திருக்கும் மென்பொருள் துறையினால் மட்டுமே சென்னையின் அத்தனை அசுர வளர்ச்சிக்கும் காரணம் என்று கூறலாம் இது இன்னும் எங்க போய் முடிய போகின்றதோ அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்


பொதுவாக ஒரு பள்ளியின் ஒரு வகுப்பில் படிக்கிற 40 மாணவர்களில் ஒருத்தன் நல்லா படிக்கின்றான் அவனுக்கு அதுக்கு தகுந்த வசதிகளும் வாய்ப்பும் இருக்கென்று வைத்து கொள்வோம் ஆசிரியரும் அந்த மாணவனை மட்டும் நீ நல்லா படிக்கிறன்னு தட்டி கொடுத்து, மற்ற பசங்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டாறென்றால் அந்த வசதியான பையன் மட்டும்தான் நல்ல மதிப்பெண் எடுப்பான் மற்றவங்க எல்லாம் ஏதோ பேருக்கு படித்தோம் என்று போய்டுவாங்க. அதுமட்டுமில்லாமல் அந்த ஒரு மாணவரின் மீது மற்ற மாணவர்களுக்கு காழ்ப்புணர்ச்சியும் வரும் அப்பொழுது அந்த ஆசிரியர் என்ன பண்ண வேண்டும் மீதியிருக்கும் மாணவர்களுக்கும் அவர்கள் படிப்பதற்க்கு தகுந்த வசதியும் ஊக்கமும் கொடுக்கும்பொழுது மற்ற மாணவர்களுக்கும் இன்னும் நல்லா படிக்கணும் என்ற ஆர்வம் வரும் அனைத்து மாணவர்களும் நல்ல முறையில் தேர்ச்சி பெற்று அந்த பள்ளிக்கே பெருமை சேர்ப்பார்கள் ஒரே ஒரு மாணவன் மட்டுமே அந்த பள்ளிக்கு பெயர் வாங்கித்தருவது எப்படியிருக்கும் அனைத்து மாணவர்களும் சேர்ந்து அந்த பள்ளிக்கு பெயர் வாங்கித்தருவது எப்படியிருக்கும்?

இதே போல்தான் தமிழ் நாட்டின் அனைத்து நகரங்களில் வசிக்கும் மக்களின் சென்னை வாழ்க்கை ஆசையானது சென்னை மீது ஒரு வித காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தும். இல்லையென்று சும்மா வார்த்தைக்கு வேண்டுமானால் சொல்லலாம் ஆனால் நிஜத்தில் நம்மால் சென்னையில் வாழ முடியவில்லை என்ற ஒரு ஏக்கம் இருக்கும் .இந்த அரசும் அரசாங்கமும் அரசியல் வாதிகளுமே சென்னையையே விரும்புகின்றனர் ஆதலால் அவர்களும் இந்த விஷயத்தை பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளாமல் பத்தோடு பதினொன்றாக ஆட்சி செய்துவிட்டு போய்விடுகின்றனர்..

சென்னை தவிர மற்ற நகரங்களில் வாழும் எங்களுக்கு இப்போ என்ன தேவையென்று நினைத்து பார்க்க அரசாங்கத்துக்கும் அரசியல்வாதிகளுக்கும் நேரமில்லை ஏன் தமிழ் நாட்டில் இருக்கும் மதுரை திருச்சி கோவை போன்ற நகரங்கள் இன்னும் வளரும் நகரங்களாகவே இருக்கின்றன? இந்நகரங்களிலும் சென்னையில் இருக்கும் பாதி அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களை பகிர்ந்து அந்நகர வளர்ச்சிகளுக்கும் அரசு உதவலாமே ஆனால் முயற்சி செய்ய மாட்டார்கள் அத்தனைக்கும் லஞ்சம் என்ற விஷயத்தையும் தாண்டி சுயநலம் என்ற ஒன்றும் இருக்கின்றது , முக்கிய அரசியல் தலைவர்கள் அனைவரின் வீடு நிலம் அனைத்தும் சென்னையில்தானே இருக்கின்றது இன்னும் நிறைய அரசியல் தலைவர்களின் பங்குகளும் சென்னையில் இருக்கும் தனியார் தொழில் நிறுவனங்களின் மூதலீடாய் இருக்கின்ற பொழுது அவர்கள் எப்படி சென்னையை விட்டு மற்ற நகரங்களின் வளர்ச்சியில் அக்கறை கொள்வார்கள்?

இப்படி கப்பல் துறைமுகம் இருக்கும் நகரம் மட்டும் தொழிற் புரிய வசதியென்று ஒரு நியாயம் இருக்கிறது . ஏனென்றால் உற்பத்தி செய்த பொருள்களின் ஏற்றுமதிகளுக்கும் உதிரி பாகங்களின் இறக்குமதிக்கும் சரியென்று வைத்துகொண்டாலும் மற்ற கணிணி மென்பொருள் துறையும் சென்னையிலேதான் வளர்ச்சி பெறவேண்டுமென்று விதியிருக்கிறதா என்ன? கேட்டால் கணிணி மென் பொருள் துறை வல்லுனர்கள் ஓய்வு நேரங்களை கழிக்க சிறந்த பொழுதுபோக்கு இடங்களும் இங்கே நிறைய இருப்பதால் பெரும்பாலானோர் சென்னையையே விரும்பவதாக கூறலாம் அந்த பொழுதுபோக்கு வசதிகளை தமிழ்நாட்டின் மற்ற நகரங்களிலும் ஏற்படுத்தி அந்த நகரங்களிலும் மென் பொருள் துறை வளர்ச்சியை ஏற்படுத்தலாமே இப்பொழுதும் இநநகரங்களில் மென் பொருள் நிறுவனங்கள் இயங்கினாலும் சென்னை அளவிற்க்கு வளர்ச்சியடையவில்லையென்றே கூறலாம்...

ஏன் சினிமாத்துறை சென்னையில் மட்டும் இயங்குகிறது? சினிமா தயாரிப்பதற்க்கு தேவையான மூல சாதனங்கள், ஸ்டுடியோக்கள், ரெக்கார்டிங் ஸ்டுடியோக்கள் அத்தனையும் சென்னையில் மட்டுமே இருப்பதனால் சினிமா தயாரிப்பவர்களால் சென்னையை விட்டு வெளியே வர விருப்பமில்லை அத்தனை வசதிகளையும் தமிழ்நாட்டின் பிற நகரங்களிலும் ஏற்படுத்தி அங்கேயும் திரைப்படம் எடுக்க முயற்சிக்கலாமே செலவுகளும் குறையும்,ஆனால் இதையும் கண்டுகொள்வார்களா மாட்டார்கள் ஏனென்று அவர்களுக்கும் திரைப்படத்துறையினருக்கு மட்டுமே வெளிச்சம்...

இன்னும் கல்வி,மருத்துவம் அத்தனையிலும் பிரதான நிறுவனங்கள் அனைத்தும் சென்னையில் மட்டும் இயங்குகின்றன இப்படியே போனால் சென்னை தமிழ்நாட்டிலிருந்து பிரிந்து தனி மாநிலமாக உருவெடுக்கும் நிலை வரலாம் அப்படியான சூழ்நிலையில் வளர்ச்சியடையாத நகரங்களை மட்டுமே வைத்துகொண்டு மீதியிருக்கும் நாடு பொருளாதார நிலையில் கடும் வீழ்ச்சிகளை சந்திக்கும் நிலை ஏற்படும் என்பது நிச்சயம்..இவற்றை தவிர்க்க தமிழ்நாட்டின் மற்ற நகரங்களையும் கண்டுகொள்ளுமா அரசு?

(சிறிது மாற்றத்துடன் கூடிய மீள் பதிவு)Post Comment

6 comments:

Trackback by Madhavan Srinivasagopalan December 16, 2010 at 5:48 AM said...

nalla alasal..

vadai enakke..

Trackback by இம்சைஅரசன் பாபு.. December 16, 2010 at 7:05 AM said...

நல்ல மீள் பதிவு .............

Trackback by ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) December 16, 2010 at 7:43 AM said...

நல்ல கட்டுரை மாப்பு. எதுக்கு ரெண்டு போஸ்ட் இப்போ?

Anonymous — December 16, 2010 at 8:23 AM said...

நல்ல பதிவு

Anonymous — December 16, 2010 at 8:46 AM said...

அடுத்தடுத்து ரெண்டு போஸ்ட்???

Trackback by மாதேவி December 16, 2010 at 9:32 AM said...

நல்ல பதிவு.

நீங்கள் கூறியதுபோல ஏனைய நகரங்களையும் வளர்ச்சியடையச் செய்தால் நெருக்கடியைத் தவிர்க்கலாம்.