ஸ்டார் பதில்கள்..!

| December 13, 2010 | |

என்னை இந்தவார நட்சத்திரமாக தேர்ந்தெடுத்த தமிழ்மண நிர்வாகிகளுக்கு முதற்கண் நன்றிகலந்த வணக்கங்கள்..( நம்ப முடியவில்லைலைலைலை)

வணக்கம் நண்பர்களே உங்களையெல்லாம் இந்த நட்சத்திரவாரத்தில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . சும்மா நானும் ஒரு பிலாக் வச்சுருக்கேன் என்பதுமாதிரி எழுதிக்கொண்டிருக்கும் எனக்கு தமிழ்மண நட்சத்திரம் என்பதே மிகச்சிறந்த அங்கீகாரம்.இதுவரைக்கும்  பதிவெழுதி வருவதற்கான அங்கீகாரமாக இதற்கு மேல் எதையுமே நான் எதிர்பார்க்கவில்லை எதிர்பார்க்கப்போவதுமில்லை . இதுவரைக்கும் பதிவெழுதிவருவதற்க்கு நண்பர்களாகிய உங்களின் தொடர்ச்சியான ஊக்கமே முக்கியகாரணம் . எவ்வளவு மொக்கையாக எழுதினாலும் அதை சகித்துக்கொண்டு கமெண்ட் போட்டு ஆதரவு தந்ததால்தான்.(அனுபவிங்க)

வழக்கம்போல தமிழ்மண நட்சத்திரங்கள் தங்களுடைய நட்சத்திரவாரத்தில் தங்கள்  துறை சார்ந்தபதிவுகள் எழுதுவது வழக்கம் . நானும் என் சார்பில் நான் சார்ந்த துறைகளான  மொக்கைத்துறை சார்ந்த பதிவுகளும்,  காதல்துறை சார்ந்த பதிவுகளும் மட்டுமே எழுதுவதென்று உறுதிகொண்டிருக்கிறேன். (அப்போ நீ ஒரு மொக்கை நட்சத்திரம்ன்னு சொல்லு )

நட்சத்திரவாரத்தின் முதல் (மொக்கை)பதிவாக நண்பர்கள் என்னிடம் கேட்ட கேள்விகளில் சில கேள்விகளை தேர்ந்தெடுத்து என்னுடைய பதிலை எழுதி ஸ்டார் பதில்களாக தந்திருக்கிறேன்,படிக்க ரசிக்க...(யார்யா அங்க மோர் பதிலான்னு கேட்குறது)

1.மச்சி உனக்கு பதில் தெரியாத கேள்வி எது? - டெர்ரர் பாண்டியன்

எனக்கு மட்டுமல்ல இந்த உலகத்தில் வாழும் மனிதர்கள் யாரிடம் வேண்டுமானாலும்  நீங்க எப்போ இறக்கபோறீங்கன்ற கேள்வியை கேட்டுப்பாருங்கள் பதிலே கிடைக்காது (மச்சி பதில் ஒகேவா)

2.பதிவுலகம் வந்து இரண்டு வருடம் ஆகிறது என்கிறீர்கள் இதுவரை யாரிடமாவது கோபப்பட்டதுண்டா? அப்படியெனில் அதற்கான காரணம் என்ன?- ஐயையோ நான் தமிழன் ( நல்லா பேர் வைக்கிறீங்கய்யா)

கோபப்பட்டதுண்டு , காரணம் கருத்துமோதல் என்பதை தவிர வேறு எதுவுமில்லை.

3.இந்த வருடத்தில் நீங்கள் படித்ததுலயே பிடித்த பதிவு எது? - கலா நேசன்

ரைட்டர் விசாவின் ஜயன்ஜ் பிக்ஜன் (எந்திரன்) எந்திரன் படம் பார்த்துவிட்டு இந்த பதிவையும் படித்துபாருங்கள் உங்களுக்கு சிரிப்பு வராவிட்டால் ஏதோ நோய் உங்களுக்கு இருக்கிறதென்று அர்த்தம்.என்னதான் எனக்குபிடித்த இயக்குனர் படம் என்றாலும் இந்த பதிவிலிருக்கும் படத்தைப்பற்றிய கசப்பான உண்மைகளை நச்சென்று எள்ளல் கலந்து சொன்னவிதம் பிடித்திருந்தது. பதிவு மட்டுமல்ல உங்களுக்கு பிடித்த பதிவர் யார் என்று கேட்டாலும் இவரைத்தான் சொல்லியிருப்பேன்.இவர் ஒரு வருங்கால சுஜாதா...

4.இந்த வருடத்தில் நீங்கள் எழுதியதிலேயே பிடித்த பதிவு எது? - கலா நேசன்

பொதுவா எல்லாருக்குமே தனக்கு வரப்போகிற மனைவி இப்படித்தான் இருக்கணும் என்ற எண்ணம் இருக்கும், அதே போல எனக்கு வரப்போகும் மனைவியும் என்னைமாதிரியே கலகலவென்று என்னிடம் செல்ல சண்டை போட்டுக்கொண்டு  ஜாலியா இருக்கவேண்டும் என்பதை மனதில் வைத்து எழுதிய என் மனைவிக்கொரு கடிதம் அதோடு சேர்ந்த From Mrs.வசந்த் , ஊருக்கு போயிருந்த மிஸஸ் வந்துட்டாங்க  இந்த மூன்று பதிவுகளுமே நான் மிகவும் ரசித்து எழுதியது அந்த வகையில் இந்த மூன்று பதிவுகளுமே எனக்கு பிடிக்கும்.

5.பதிவுலகம் உங்கள் பார்வையில் - மாணவன் 

என்னைப்பொறுத்தமட்டிலும் பதிவெழுதுவதென்பது என்'ண்ணங்களை வெளிப்படுத்தும் வடிகால். நிறைய பேருக்கு இது ஒரு டயரி , பலருக்கு வெகுஜன பத்திரிக்கைகளில் எழுதுவதற்க்கான முன்னோட்டம், புதிதாக எழுதுபவர்களுக்கு இது ஒரு ரஃப் நோட் ஆதலால் இங்கே நீங்கள் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் . ஒரே வரியில் சொல்லப்போனால் பதிவுலகம் எழுத்தார்வம் மிக்கவர்களுக்கு வரப்பிரசாதம்,நேரத்தை விலையாக கொடுத்து நல்ல நட்பை வாங்கிக்கொள்ளும் நண்பர்கள் நிறைந்த ஒரு சூப்பர்மார்க்கெட்.

6.உங்களிடம் உங்களுக்கு பிடித்தது - மாணவன்

தன்னம்பிக்கை, எது செய்தாலும் அதை மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்படுத்திக் காட்டும் தனித்துவம்.(முடியல ராசா , இடையில ஒண்ணு மிஸ்ஸாவுதே)

7.எதிர்கால லட்சியம் - மாணவன்

நிஜ வாழ்க்கையில் என் தாய்தந்தையருக்கு கடைசிவரை நல்ல மகனாக ,வரப்போகிற என் மனைவிக்கு நல்ல கணவனாக,என் பிள்ளைகளுக்கு நல்ல தகப்பனாக இருந்துவிடவேண்டும் அவ்வளவுதான்.

எழுத்துலக லட்சியம் இதுதான் , இதுவும் ஒரு வகையில் நீ என்னவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிவிடுவாய் என்ற எண்ணத்தில்.... கவிதை செங்கற்களைக்கொண்டு ஒரு காதல் தொழிற்சாலை கட்டி வருகின்றேன் வாசற்கதவு தட்டும் ஓசைக்காக காத்திருக்கிறேன்.... (பில்டப்பு எல்லாம் நல்லாத்தான் இருக்கு  புத்தகம் எழுதுறதுக்கெல்லாம் தகுதி,மச்சம், ராசி வேணும் மச்சி ஒரு தடவ உன் மூஞ்சிய கண்ணாடில நீயே பார்த்துட்டு உன்னோட லட்சியத்தை சொல்லியிருக்கலாம் ப்ச்)


8. உங்களைப்பற்றி ஒரே வரியில் - மாணவன்

திமிர்,கோபம்,நக்கல்,ப்ரியம்,காதல்,கற்பனை நிறைந்த ஒரு கவிதை நான்.(காசா பணமா அடிச்சுவிடு)

9.கற்பனை காதலன் விளக்கம் தருக - பாலாஜி சரவணா & கல்பனா


கற்பனை செய்து பாருங்கள் 
சொர்க்கம் இல்லையென
நீங்கள் முயன்றால் எளிதானது
நமக்கு கீழே நரகமில்லை
நமக்கு மேலே வானம்  மட்டும்
கற்பனை செய்து பாருங்கள்
மனிதர்கள்  யாவரும்
இத் தருணத்திற்காக வாழ்கிறார்களென ...

கற்பனை செய்து பாருங்கள்
எந்த நாடும் இல்லையென
இதை ( கற்பனை ) செய்வது கடினமானது அல்ல
எதன் பொருட்டும்  கொலையோ
அல்லது
மரிக்கவோ  வேண்டாம்
(மேலும் ) எந்த மதமும் இல்லை
கற்பனை செய்து பாருங்கள்
மனிதர்கள்  யாவரும்
அமைதியாய்  வாழ்கிறார்களென ........

நீங்கள் சொல்லக்கூடும்
'நான் கனவு காண்பவன் ' என
ஆனால் நான் ஒருவன் மட்டுமல்ல....
நான் நம்புகிறேன்
என்றாவது (ஒருநாள் )
நீங்கள் எங்களுடன்  சேர்வீர்களென
(அதன்முதல் )
உலகம் ஒன்றாகும்

கற்பனை செய்து பாருங்கள்
(உங்களிடம்) எதுவும் இல்லையென்று
உங்களால் அப்படி  இருக்க முடியுமாயென
நான் ஆச்சர்யபடுகிறேன்
பேராசையோ  அல்லது பட்டினியோ
தேவையில்லை
மாந்தர்களிடையே  சகோதரத்துவம்
கற்பனை செய்து பாருங்கள்
மனிதர்கள்  யாவரும்
உலகின் யாவையையும்
பகிர்வதாய்

நீங்கள் சொல்லக்கூடும்
'நான் கனவு காண்பவன் ' என
ஆனால் நான் ஒருவன் மட்டுமல்ல....
நான் நம்புகிறேன்
என்றாவது (ஒருநாள் )
நீங்கள் எங்களுடன்  சேர்வீர்களென
(அதன்முதல் )
உலகம் ஒன்றாய் வாழும்

John Lennon...

9.இந்த இரண்டு வருடத்தில் நீங்கள் சந்தித்த நெகிழ்ச்சியான மற்றும் மோசமான சம்பவங்கள் என்னென்ன? - பிரியமுடன் ரமேஷ்

நெகிழ்ச்சியான சம்பவங்கள் நிறைய நடந்திருக்கின்றன எதை விடுவது எதை குறிப்பிடுவது , மோசமான சம்பவங்கள் எதுவும் நினைவில் இல்லை.

10. உனக்கு கல்யாணம் எப்போ? - ரமேஷ் & எல் .கே.

இலியானாகிட்ட தேதி கேட்டிருக்கேன் மச்சிஸ், தேதி கிடைச்சதும் கல்யாணம்தான்.

11.பெண்களுக்கு உன்னிடம் அதிகம் பிடித்தது(உடம்பில்) - மயாதி(என்னை மாட்டிவிடறதுலயே இருடா)

மீசை 

12. ஒரே நேரத்தில் வேறு வேறு திசைகளிலிருந்து மூன்று அழகான பெண்கள் வரும்போது மூன்று பேரையும் ஒரே நேரத்தில் பார்க்கமுடியவில்லையென்று வருத்தப்படுவாயா இல்லை ஒருத்தியின் அழகை மட்டும் ரசிப்போம் என்று நினைப்பாயா? - மயாதி (உனக்கு இப்படில்லாம் கொஸ்டின் கேக்கச்சொல்லி யார் சொல்லிக்கொடுத்தா)

ஒருத்தியின் அழகை மட்டும் ரசிப்பேன் அப்படின்னு சொல்லி என்னை நல்லவனா காட்டிக்கிடறேன் . (கொஞ்சம் ஓவராத்தான் போய்க்கிட்டு இருக்கு)

13.நான் கேட்கும் கேள்விக்கு தெரியாது என்று பதில் சொல்லக்கூடாது, தெரியும் என்ற வார்த்தைக்கு எதிர் கருத்தென்ன? - யோ வாய்ஸ் யோகா ( நீ அறிவாளி மச்சி)

Don't Know (நீ தமிழ்லதான் விடை சொல்லணும்ன்னு சொல்லலியேலியேலியேயே)

14. நீ இதுவரைக்கும் காதலித்த பெண்களின் எண்ணிக்கை - மயாதி


அசின்,த்ரிஷா,சுனைனா,இலியானான்னு நாலு பேர் மச்சி ( சாவித்ரி சரோஜாதேவியெல்லாம் விட்டுட்ட ஏன்)

15.தமிழில் உங்களுக்கு பிடிக்காத வார்த்தை எது? - நாஞ்சில் மனோ

கோழை ( பயந்து பயந்து வாழ்வதைவிட செத்துவிடுவது மேல்)
கோழை (பயந்து பயந்து முழுங்குவதைவிட துப்பிவிடுவது மேல்)

16.விஜய் நடிச்ச ப்ரியமுடன் வசந்துக்கும் இந்த ப்ரியமுடன் வசந்துக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா? - வெறும்பய

அந்தப்படத்துல நடிக்கிறப்போ அவரும் பேச்சலர் இந்த ப்லாக்ல எழுதுற நானும் பேச்சலர் என்ற சம்பந்தத்தை தவிர்த்து நான் அவரின் தீவிர ரசிகர் என்ற சம்பந்தமும் இருக்கிறது...


17.நீங்க எழுதியதிலேயே அடடா இன்னும் கொஞ்சம் வித்தியாசமா எழுதியிருக்கலாமே என்று யோசிக்கவைத்த பதிவு எது? - அமைதிச்சாரல்

நான் எழுதிய எல்லாமே கொஞ்சம் வித்தியாசம்தான் இருந்தாலும் நீங்கள் சொன்னதுபோல் இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக யோசித்து எழுதியிருக்கலாம் என்று நினைத்த பதிவு சின்ன வயசுல இருந்தே திங் பண்ணுனது இன்னும் கொஞ்சம் நல்லா திங் பண்ணியிருந்தா எக்ஸ்ட்ராஃபிட்டிங்ஸ்  நிறை(வா)ய வந்திருக்கும்.(ப்ளீஸ் அந்த பதிவப்போய் பார்த்து வயிறைக்காணோம் உசிரைக் காணோம்ன்னா நான் பொறுப்பில்ல)

18. குண்டக்கான்னா என்ன மண்டக்கான்னா என்ன? - ஹரீஷ் & சக்தி

குண்டக்கா - குண்டு அக்கா , மண்டக்கா - மண்டு அக்கா ( ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா ஓவர் மொக்கைடா )

19. ப்ரியமுடன் வசந்த்ன்னு சொல்றாங்களே அது யாரு - பாலாஜி சரவணா(நல்லா கேக்குறாய்ங்கயா கொஸ்டீனு)`


அவன் ஒரு அரைவேக்காடுங்க ( ஓஹ் எப்ப வேவாரு)


20. அவ்ளோதானா ? இன்னும் இருக்கா? - தங்கம் பழனி


கொல வெறியில இருந்திருக்கீங்க... அவ்ளோதாங்க முடிஞ்சது ( அப்பாடா ஆள விட்டாண்டா சாமி)


                                        
,

Post Comment

64 comments:

Trackback by பெசொவி December 13, 2010 at 9:12 AM said...

Great!

Trackback by பெசொவி December 13, 2010 at 9:12 AM said...

ai, enakkuthaan vadai!

Trackback by Subankan December 13, 2010 at 9:14 AM said...

நட்சத்திர வாழ்த்துகள் வசந்த் :)

Trackback by Ahamed irshad December 13, 2010 at 9:15 AM said...

வாழ்த்துக்க‌ள் வ‌ச‌ந்து..

Trackback by ஆர்வா December 13, 2010 at 9:17 AM said...

வாழ்த்துகள் வசந்த்.. கேள்விபதில் எல்லாம் நச்.. தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே..

Trackback by கார்த்திகைப் பாண்டியன் December 13, 2010 at 9:25 AM said...

வாழ்த்துகள்..:-))

Trackback by அருண் பிரசாத் December 13, 2010 at 9:53 AM said...

வாழ்த்துக்கள் மாம்ஸ்.... தெரியாம போச்சு இல்லைனா நாக்கு புடுங்கற மாதிரி 4 கேள்வி கேட்டு இருப்பேன்...

1. நக்கு புடுங்குறது எப்படி?
2. நக்கு புடுங்குறது எப்படி?
3. நக்கு புடுங்குறது எப்படி?
4. நக்கு புடுங்குறது எப்படி?

சரி, இப்போ கேட்டுடேன் பதில் சொல்லு

Trackback by நண்டு @நொரண்டு -ஈரோடு December 13, 2010 at 10:05 AM said...

வாழ்த்துகள் வசந்த் .

Trackback by ராமலக்ஷ்மி December 13, 2010 at 10:07 AM said...

நட்சத்திர வாழ்த்துக்கள் வசந்த்:)!

Trackback by arasan December 13, 2010 at 10:15 AM said...

உங்களுக்கு முதலில் ஒரு பெரிய நட்சத்திர வாழ்த்துக்கள்..

அப்புறம் உங்கள் கேள்வி பதில் நல்லா இருக்குங்க

Trackback by பன்னிக்குட்டி ராம்சாமி December 13, 2010 at 10:16 AM said...

நல்லா வெளையாடுங்கப்பா!

Trackback by மாணவன் December 13, 2010 at 10:20 AM said...

அண்ணே முதலில் தமிழ்மணம் நட்சத்திரமாக தேர்வானதுக்கு பாராட்டுகளும் எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துக்களும்....

தொடர்ந்து கலக்குங்க.......

Trackback by கோவி.கண்ணன் December 13, 2010 at 10:29 AM said...

வாழ்த்துகள் !

Trackback by துளசி கோபால் December 13, 2010 at 10:31 AM said...

நட்சத்திர வாழ்த்து(க்)கள்.

Trackback by மாணவன் December 13, 2010 at 10:49 AM said...

நான் கேட்ட கேள்விக்கு கலக்கலாக பதில் சொல்லி அசத்திட்டீங்க அருமை அண்ணே,

நண்பர்கள் கேட்ட அனைத்து கேள்விக்குமே பதில்கள் உங்கள் ஸ்டைலில் அருமை....

ரொம்ப நன்றி அண்ணே

தொடரட்டும் உங்கள் பணி

Trackback by sathishsangkavi.blogspot.com December 13, 2010 at 11:03 AM said...

வாழ்த்துகள் வசந்த்.....

Trackback by துமிழ் December 13, 2010 at 11:04 AM said...

நீ இதுவரைக்கும் காதலித்த பெண்களின் எண்ணிக்கை - மயாதி


அசின்,த்ரிஷா,சுனைனா,இலியானான்னு நாலு பேர் மச்சி ( சாவித்ரி சரோஜாதேவியெல்லாம் விட்டுட்ட ஏன்)//

அப்பா நீ எனக்கு சகலையா மாப்பு ?

வாழ்த்துக்கள் வசந்து

Trackback by Chitra December 13, 2010 at 11:10 AM said...

தமிழ்மண நட்சத்திரம் - வாழ்த்துக்கள்!

Trackback by pudugaithendral December 13, 2010 at 11:19 AM said...

தமிழ்மண நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்.

கேள்விகளும் பதில்களும் டெர்ரராத்தான் இருக்கு.:))

Trackback by ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) December 13, 2010 at 11:27 AM said...

நட்சத்திர வாழ்த்துகள் வசந்த் :)

Copy & Paste. hehe

Trackback by sakthi December 13, 2010 at 11:37 AM said...

தமிழ் மண நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள் மக்கா!!!!

Trackback by ஜெயந்த் கிருஷ்ணா December 13, 2010 at 11:51 AM said...

தமிழ்மண நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்.

Trackback by துமிழ் December 13, 2010 at 12:28 PM said...

http://konjumkavithai.blogspot.com/2010/12/blog-post.html

Trackback by துமிழ் December 13, 2010 at 12:30 PM said...

neenga avvalau periya aalaa akiddeenga ponga ...
congrats

Trackback by Madhavan Srinivasagopalan December 13, 2010 at 12:38 PM said...

//வாழ்த்துக்கள் மாம்ஸ்.... தெரியாம போச்சு இல்லைனா நாக்கு புடுங்கற மாதிரி 4 கேள்வி கேட்டு இருப்பேன்...

1. நக்கு புடுங்குறது எப்படி?
2. நக்கு புடுங்குறது எப்படி?
3. நக்கு புடுங்குறது எப்படி?
4. நக்கு புடுங்குறது எப்படி?

சரி, இப்போ கேட்டுடேன் பதில் சொல்லு //

எலேய்.. புடுங்கனுமா? நக்கனுமா ? அதென்ன 'நக்கு புடுங்குறது' ?

Trackback by Prathap Kumar S. December 13, 2010 at 12:49 PM said...

எலே.... நல்ல கேக்கறாங்கய்யா டீட்டெய்ல்லு...... :))
தமிழ்மண நட்சத்திர வாழ்த்துக்கள் மாப்பி...

Trackback by கார்க்கிபவா December 13, 2010 at 1:44 PM said...

வாழ்த்துக‌ள் ந‌ட்ச‌த்திர‌ம்..

இதே மாதிரி இன்னொரு விஜ‌ய் ர‌சிக‌ரும் ந‌ட்ச‌த்திர‌ம் ஆன‌ப்ப‌ கேள்வி ப‌திலோட‌த்தான் தொட‌ங்கினார். யாருன்னு தெரியுமா?

Anonymous — December 13, 2010 at 1:51 PM said...

//குண்டக்கா - குண்டு அக்கா , மண்டக்கா - மண்டு அக்கா//

ரூம் போட்டு யோசிப்பாங்களோ???

Trackback by Vaitheki December 13, 2010 at 2:02 PM said...

வாழ்த்துக்கள்!!

Trackback by cheena (சீனா) December 13, 2010 at 2:10 PM said...

அன்பின் வசந்த்

அருமையான அறிமுகம் - லெட்சுமிபுரம் தானா - நான் அடிக்கடி சென்று வந்த ஊராச்சே ! ம்ம்ம் - எல்லாக் கேள்விகளூகு சூப்பர் பதில்கள். தமிழ்மண நடசத்திரத்திற்கு நல்வாழ்த்துகள் வசந்த். நட்புடன் சீனா

Trackback by சிவசங்கர். December 13, 2010 at 2:26 PM said...

வசந்து-
ஒரு கேள்வி இருக்கு!
ஆனா பப்ளிக்கா வேணாம்னு பாக்குறேன்..

:)

Trackback by சாந்தி மாரியப்பன் December 13, 2010 at 2:59 PM said...

twinkle twinkle vasanth star :-))

(sorry.. no tamil fonts)

Trackback by T.V.ராதாகிருஷ்ணன் December 13, 2010 at 3:00 PM said...

நட்சத்திர வாழ்த்துகள்

Trackback by அதிர்ஷ்டரத்தினங்கள் December 13, 2010 at 3:17 PM said...

நட்சத்திர வாழ்த்துகள் வசந்த் :)

Trackback by நசரேயன் December 13, 2010 at 4:23 PM said...

நட்சத்திர வாழ்த்துகள்

Trackback by sriram December 13, 2010 at 4:39 PM said...

வாழ்த்துக்கள் வசந்த்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Trackback by vijayakumar December 13, 2010 at 5:06 PM said...

Wishes Vasanth...Fill this week with your funny writings....Cheers!!!!

Trackback by எஸ்.கே December 13, 2010 at 5:20 PM said...

இனிய மனமார்ந்த வாழ்த்துக்கள்!

Trackback by Thanglish Payan December 13, 2010 at 5:41 PM said...

Ji , ennoda kelvi pathi sollave illa...
kelvi ye mokkai ya irukkutho?

Anyway , its good.

Trackback by VISA December 13, 2010 at 5:41 PM said...

வாழ்த்துக்கள் வசந்த்!!!

Trackback by VISA December 13, 2010 at 5:45 PM said...

எனய்யா அந்நியாயத்துக்கு என்ன பத்தி எழுதியிருக்க பாவம்ய்யா நானு :))

Trackback by தினேஷ்குமார் December 13, 2010 at 5:59 PM said...

நல்லாருக்கு காதல் தொழிற்சாலை ஓனர் அவர்களே அசாத்தியமா அசத்தியிருகீங்க

இந்த வரிசையை மட்டும் சரி பண்ணுங்க எண்ணிக்கையில்

"9."கற்பனை காதலன் விளக்கம் தருக - பாலாஜி சரவணா & கல்பனா

"9."இந்த இரண்டு வருடத்தில் நீங்கள் சந்தித்த நெகிழ்ச்சியான மற்றும் மோசமான சம்பவங்கள் என்னென்ன? - பிரியமுடன் ரமேஷ்

Trackback by Ravichandran Somu December 13, 2010 at 6:52 PM said...

நட்சத்திர வாழ்த்துகள்!

Trackback by ச.செந்தில்வேலன் / S.Senthilvelan December 13, 2010 at 7:11 PM said...

நட்சத்திர வாழ்த்துகள் வசந்த் :)

Trackback by மயாதி December 13, 2010 at 7:18 PM said...

நீ ரொம்ப நல்லவன்டா

வாழ்த்துக்கள் வசந்த்

Trackback by அ. முஹம்மது நிஜாமுத்தீன் December 13, 2010 at 7:40 PM said...

வாழ்த்துக்கள் வசந்த்!

//நிஜ வாழ்க்கையில் என் தாய்தந்தையருக்கு கடைசிவரை நல்ல மகனாக ,வரப்போகிற என் மனைவிக்கு நல்ல கணவனாக,என் பிள்ளைகளுக்கு நல்ல தகப்பனாக இருந்துவிடவேண்டும் அவ்வளவுதான்//

உங்க நல்ல மனசுக்கு எல்லாம்
நன்மையாகவே அமையும். வாழ்த்துக்கள்!!

Trackback by சௌந்தர் December 13, 2010 at 8:18 PM said...

அருண் பிரசாத் said...
வாழ்த்துக்கள் மாம்ஸ்.... தெரியாம போச்சு இல்லைனா நாக்கு புடுங்கற மாதிரி 4 கேள்வி கேட்டு இருப்பேன்...////
அப்போ கேக்க வில்லை என்றால் என்ன இப்போ கேட்கிறேன்

உங்கள் முதல் காதல் எது அது வெற்றி யா தோல்வியா...காரணங்களும்....?

இதற்கு பதில் சொல்லவில்லை என்றால் கழுகுகில் பேட்டி எடுக்கும் போது இதே கேள்வி கேட்கப்படும்...!

Trackback by அப்பாவி தங்கமணி December 13, 2010 at 8:22 PM said...

//அந்த வகையில் இந்த மூன்று பதிவுகளுமே எனக்கு பிடிக்கும்//
ச்சே...ச்சே...என்னா விளம்பரம்...ஹி ஹி ஹி...

//இலியானாகிட்ட தேதி கேட்டிருக்கேன் மச்சிஸ், தேதி கிடைச்சதும் கல்யாணம்தான்//
இந்த மேட்டர் இலியானாவுக்கு தெரியுமா...ஓ...அதான் அவங்க தற்கொலை முயற்சினு பேப்பர்ல போட்டு இருந்ததா...ஹா ஹா

//நீ தமிழ்லதான் விடை சொல்லணும்ன்னு சொல்லலியேலியேலியேயே//
ஹா ஹா...இது சூப்பர்...

//அசின்,த்ரிஷா,சுனைனா,இலியானான்னு நாலு பேர் மச்சி //
ஆஹா...இதை தான் நாலும் தெரியணும்னு சொல்றாங்களோ... ஹும்...

இறுதியா ஆனா உறுதியா... தமிழ்மணம் நட்சத்திர வாழ்த்துக்கள் வசந்த்...கலக்குங்க...

Trackback by வினோ December 13, 2010 at 9:07 PM said...

வாழ்த்துக்கள் வசந்த்..

பதில்கள் எல்லாம் நல்லா இருக்கு..

Trackback by Starjan (ஸ்டார்ஜன்) December 13, 2010 at 9:20 PM said...

நட்சத்திர வாழ்த்துகள் வசந்த்.

Trackback by ஜோதிஜி December 13, 2010 at 9:24 PM said...

வாழ்த்துகள்.

Trackback by யோ வொய்ஸ் (யோகா) December 13, 2010 at 9:35 PM said...

நட்சத்திர வாழ்த்துக்கள் மச்சி... இனி அடித்து தூள் கிளப்பு

Trackback by Ramesh December 13, 2010 at 9:43 PM said...

பதில்கள் எல்லாமே நச்சுன்னு இருக்கு.. ரசிச்சுப் படிச்சேன்.. முதல் கேள்விக்கான பதில்... சான்சே இல்லை... சூப்பர்...


தமிழ்மண நட்சத்திரமா வாழ்த்துக்கள் மச்சி..

Trackback by சுசி December 14, 2010 at 2:24 AM said...

நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்.

அசத்துங்க வசந்த்.

//திமிர்,கோபம்,நக்கல்,ப்ரியம்,காதல்,கற்பனை நிறைந்த ஒரு கவிதை நான்//
:))))))))))))))))))))

Trackback by ஹேமா December 14, 2010 at 2:28 AM said...

எப்போதுமே நடசத்திரமாய் வாழ்ந்திட வாழ்த்துகள் வசந்து....!

அரசியல்ல குதிக்கமாட்டீங்களோ.அதான் நான் கேட்ட கேள்விக்குப் பதிலில்லை !

Trackback by அப்பாதுரை December 14, 2010 at 4:52 AM said...

வாழ்த்துக்கள்!

குண்டக்கா - இத்தனை நாள் அர்த்தம் தெரியாமல் தவித்த தவிப்பு இருக்கிறதே.. தீர்த்து வைத்த உங்களுக்கு சனிமண்டல பதிவாளர்னு பட்டம் கொடுத்தாலும் தகும்.. (அப்படின்னு எங்க அக்கா சொல்லச் சொன்னாங்க)

Trackback by நீச்சல்காரன் December 14, 2010 at 6:36 AM said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் மற்றும் நட்சத்திர வாழ்த்துக்கள் சகா.
என்னுடைய கேள்வி.
கேள்விகள் கேட்கமுடியாமல் தாமதமாகிப்போன நபர்களுக்கு நீங்கள் தரும் பதில் என்ன? [நாமளும் கேள்வி கேட்டாச்சு]

Trackback by விஜி December 14, 2010 at 7:33 AM said...

டமில் மணத்துக்கு இப்படி ஒரு சோதனை வரும்னு நினைச்சுப்பார்க்கலை :)))

Trackback by நிலாமகள் December 14, 2010 at 5:57 PM said...

தம்பியா கொக்கா?! evergreen star ஆகவே இருக்க வாழ்த்துகள் வசந்த்!!

Trackback by சீமான்கனி December 14, 2010 at 10:07 PM said...

இதெல்லாம் உன்னால மட்டுமே முடியும் மாப்பி....என்னையும் எதாச்சும் கேக்க சொல்லிருக்கலாம்...ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....

Trackback by Paul December 15, 2010 at 7:14 AM said...

சூப்பர்.. வாழ்த்துக்கள் வசந்த்..!!

Anonymous — December 15, 2010 at 9:57 AM said...

வாழ்த்துக்கள் மச்சி. சாரி நான் கொஞ்சம் லேட் ;)

Trackback by வல்லிசிம்ஹன் December 16, 2010 at 6:36 AM said...

மிக மிக நல்ல வாரமாக நட்சத்திர வாரம் ஆரம்பித்துவிட்டது. வசந்துக்குப் பிரியமுடன் வாழ்த்துகள்.

Anonymous — December 19, 2010 at 7:06 AM said...

தாமதமா வாழ்த்துக்கள் வசந்த். நல்லாயிருக்கு வித்தியாசமா சிரிக்கும்படியா இருந்தது கேள்வி பதில்...