அன்பினாலே உண்டாகும் இன்பநிலை..!

| December 31, 2010 | 0 comments |

இவங்கதாங்க என்னோட அம்மா அப்பா என்னடா திடீர்ன்னு அம்மா அப்பா பத்தி சொல்றேன்னு பாக்குறீங்களா விஷயம் இருக்கு படிங்க ...

எவ்வளவு சந்தோஷமா சிரிச்சுட்டு இருக்காங்க பாத்தீங்களா புகைப்படத்திற்க்காக பூத்த புன்னைகையில்லைங்க இது எப்பவுமே இப்படித்தான் சிரிச்ச முகத்தோட ரெண்டுபேருமே கலகலன்னு இருப்பாங்க. Made For Each Otherன்ற விஷயம் அழகுலயும் படிப்பிலயும் மட்டும்ன்னா அது இவங்களுக்கு கொஞ்சம் கூட பொருந்தாது.அப்பா அந்த காலத்து பி.யூ.சி.படித்தவர் . அம்மா மூன்றாம் வகுப்போடு படிப்பை நிறுத்தியவர். அப்பா நிறமானவர் அம்மா கருப்பு, அப்பா உயரமானவர் அம்மா குட்டையா இருப்பாங்க ஆனா இந்த விஷயங்களை அப்பா பெரிய வித்யாசமா எடுத்துகிட்டதில்லை .அம்மாதான் அடிக்கடி அப்பாகிட்ட நான் உங்களுக்கு பொருத்தமானவளே இல்லைங்கன்னு சொல்லி வருத்தப்படுவாங்க ஆனா அப்பா அம்மாவை ஒருநாள் கூட அப்படி சொல்லி வருத்தப்படுத்தினதே கிடையாது.மாறாக Made For Each Other ன்ற விஷயம் அன்புக்கு மட்டும்ன்னா அது இவங்களுக்கு 100% பொருந்தும்.

ஒருத்தருக்கொருத்தர் அடிச்சிக்க மாட்டாங்களே ஒழிய ஒருத்தருக்கொருத்தர் நல்லா கிண்டல்பண்ணிப்பாங்க அப்பா கோடுபோட்ட பட்டாபட்டி டவுசர் போட்டு வேஷ்டி கட்டியிருப்பார் . வேஷ்டியை தூக்கிகட்டும்பொழுது டவுசர் வெளியே தெரியும் அதனால அப்பா எங்கயாவது வெளியில் போய்ட்டு வீட்டுக்கு திரும்பி வரும்பொழுது டவுசர் பாண்டி வந்துட்டார்டான்னு அப்பாவை அம்மா கிண்டல் பண்ணுவாங்க . அப்பா இருக்காரே அம்மா வைக்கிற ஒவ்வொரு சமையலையும் கிண்டல் பண்ணிட்டே இருப்பார். ஆனா அவங்க சமைக்கிற சாப்பாடு மட்டும்தான் அவருக்கு பிடிக்கும் வெளியில எங்கயும் சாப்பிட மாட்டார். வெளிலதான் ஒருத்தருக்கொருத்தர் கிண்டல் பண்ணிப்பாங்களே ஒழிய உள்ளுக்குள்ள ஒருத்தருக்கொருத்தர் அவ்ளோ அந்நியோன்யமா இருப்பாங்க நானே நிறைய தடவை பொறாமை பட்ருக்கேன்னா பார்த்துக்கங்க...

அம்மா படிக்காதவங்கன்னாலும் அவங்களை தின நாளிதழ்கள் வாசிக்கிற அளவுக்கு படிக்க வச்சது அப்பாதான். அப்பாவோட முன்னால் காதல் அதோட தோல்வி எல்லாமே அம்மாவுக்கு தெரியும் . இருந்தாலும் அதை சொல்லி அவரை வருத்தப்படுத்தியது கிடையாது .ஆனா கிண்டல் பண்ணுவாங்க இப்போதாங்க உங்களோட பேருக்கு அர்த்தம் தெரியுதுன்னு (அப்பா பேர் தேவதாஸ்) . அதுமட்டுமில்லாம ரெண்டுபேருமே அழகா பாடுவாங்க ஒரே ஒரு ஊரிலேன்னு ஆரம்பிக்கும் படிக்காத மேதை பாடலை டூயட்டா ரெண்டு பேரும் படிப்பதை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்போலிருக்கும் .பின் அன்பினாலே உண்டாகும் இன்பநிலை என்ற பாடல், எப்பவாது சின்னதா முகம் சுளித்து இருவரும் பேசாமலிருந்தால் இந்த பாடல் அவர்களை சேர்த்துவைக்கும். ஒருத்தருக்கு உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டாலோ ஒருத்தரை ஒருத்தர் ஒரு நாள் இரண்டுநாள் பிரிந்திருக்க வேண்டியோ வரும்பொழுது அவர்கள் படும் பாட்டை சொல்லி மாளாது.எங்கப்பா ஆணாதிக்கவாதியும் இல்ல எங்கம்மா பெண்ணியவாதியும் கிடையாது ஆனாலும் இவங்க ரெண்டுபேர் வாழ்ற அந்த வாழ்க்கை அவ்ளோ அழகா போய்ட்டு இருக்கு. இதே மாதிரிதாங்க நானும் வாழணும்ன்னு ஆசப்படறேன்.தப்பா? 

எங்கப்பா மெத்தப்படித்தவர் பெரிய குடும்பத்தில் பிறந்தவர் அப்பாவுக்கு ஆறு தம்பிகள் நான்கு தங்கைகள் வீட்ல ஏதாவது ஒரு விஷேசம்ன்னா வெளியில இருந்து யாரும் வரவேண்டியதே இல்லை எங்க குடும்பம் போதும், அப்படிப்பட்ட பெரிய குடும்பத்தில் தலை மகனாய் பிறந்து தம்பிகள் அனைவருக்கும் நல்ல வாழ்க்கை அமைத்து தந்து தங்கைகளை திருமணம் முடித்து கொடுத்துன்னு வாழ்க்கையில் நிறையவே கஷ்டப்பட்டிருக்கிறார். அந்த பாடங்களையெல்லாம் நான் எப்பொழுதாவது அவரிடம் சந்தேகங்களோ விளக்கமோ கேட்கும் பொழுது சொல்லிக்கொடுப்பார். வாழ்க்கையில் நேர்மையாக வாழ்வது எப்படி, வறுமைன்னா என்ன , படிப்பறிவு எதற்க்கு ,பண்பாடுன்னா என்ன என்பதெல்லாம் நான் புத்தகங்களை படித்து கற்று கொண்டது கிடையாது. யாராவது நாம் செய்த நன்றியை மறந்து நம்மை ஒருவர் தரக்குறைவாக பேசும்பொழுது பதிலுக்கு நாமும் பழிவாங்குவிதமாக தராதரமிழந்து பேசக்கூடாது இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிட வேண்டும் என்ற குறளினை மேற்கோள் காட்டி பேசுவார்.
என்னோட அப்பா எனக்கு சிறந்த ஆசான் .செல்லமா கூட என்னை அடித்தது கிடையாது. கண்டிப்பு இருக்கும் அந்த கண்டிப்பிலும் கண்ணியம் இருக்கும்.அவர் சொல்லித்தந்ததில் நான் பின்பற்றாதது கோபப்படுவது மட்டும்தான் அதுக்குண்டான வினைகளை அறுக்கும்பொழுதுதான் அவரின் வார்த்தைகளின் அருமை தெரிகிறது.அதுமட்டுமில்லாமல் கடின உழைப்பாளி சோம்பல் எனபதே கிடையாது இப்போ வரைக்கும் எதாவது வேலைகளை இழுத்துபோட்டுக்கொண்டு செய்து கொண்டே இருப்பார்.

இன்னும் எங்கப்பா பத்தி நிறையவே சொல்லிட்டே போகலாம் (கண்டிப்பா சொல்வேன்)

இப்படியான என் அப்பா தொலைபேசியில் என்னய்யா கண்ணு என்று அழைக்க ஆரம்பிக்கும்பொழுது கண்களில் கண்ணீர் வந்துவிடுகிறது. அப்பா எவ்வளவோ கதைகள் சொல்லி வாழ்க்கை பாடத்தை புரிய வைத்த நீங்களும் அம்மாவும் நான் வாழும்காலம் வரை வரவேண்டும் என்பதுதான் என் ஆசை.
இன்றைக்கு அப்பாவின் பிறந்தநாள்.

பிறந்த நாள் வாழ்த்துகள் அப்பா.இதே புன்னகையுடனே வாழ்நாள் முழுவதும் சந்தோஷம் கிடைத்திருக்க இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்..

ப்ரியமுள்ள மகன்
வசந்தகுமார் தேவதாஸ்.

பதிவை வாசித்த அனைவருக்கும் நன்றிகள்.


Post Comment

வளந்த வெதம் அப்டி...!

| December 28, 2010 | |


பிள்ளையாரப்பா எனக்கு நல்லா பேச கத்து கொடுத்த...சிரிக்க கத்து கொடுத்த...கவிதை எழுத கத்து கொடுத்த இந்த காதல் பண்றது எப்டின்னு கத்து கொடுக்க மறந்துட்டியே பிள்ளையாரப்பா...(வேட்டைக்காரன்ல இந்த மாதிரி ஒரு சீன்லதான் தலைவரு சும்மா நச்சுன்னு டயலாக் டெலிவரியில இருந்து பாடி லாங்குவேஜ் வரைக்கும் பின்னிட்டாரு )அதான் நானும் சொல்லிப்பாத்தேன்...

எம்புட்டுபேரை சைட்டடிச்சுருக்கேன் சின்னவயசுல இருந்து இப்போ வரைக்கும் ம்ஹ்ஹும்...ஒண்ணு கூட செட் ஆவலை ஹா ஹா ஹா ஒண்ணாவது படிக்கும் போது கொண்டை போட்ட மேரி டீச்சர்மேல ஆசை, ஏன்னா என்னைய பிடிக்கும் அவங்களுக்கு முதன் முதல்லா நம்ம ஊர் எம்.இ.எல்.ஐ. எம். இந்த ஸ்கூலுக்கு போயி சேர்ந்ததில இருந்துன்னு வச்சுக்கோயேன் ஆமா பக்கத்துலதான் நீயும் இருந்து என்னைய வாட்ச் பண்ணிட்டே இருந்தியே அந்த ஸ்கூல்தான்...

ஸ்கூல்ல வாத்தியார் எல்லாம் நல்லாத்தான் சொல்லி கொடுப்பாங்க ஆனா நாந்தான் மரமண்டையாச்சே ம்ஹ்ஹும் ஒண்ணுகூட மண்டையில ஏறலை இதே டிசம்பர் மாசம் 1987ல 5வதுபிறந்த நாள் வந்தப்போ ஒண்ணாப்பு டீச்சர் மேரி என்னைய மடியில தூக்கிவச்சு கிஸ் பண்ணி ஹேப்பி பர்த்டே சொன்னாங்க. அப்போ இன்னும் பாசம் அதிகமாயிடுச்சு அதனாலவோ என்னவோ அடுத்த வருசத்தில இருந்து இன்னி வரைக்கும் அவங்கள பார்க்க முடியல ம் இப்போவும் சொல்றேன் ஐ லவ் யூ மேரி டீச்சர்...

அடுத்த வருசம் ரெண்டாப்புக்கு போனேன் எப்படியோ பாசாக்கி விட்டுட்டாங்க எப்படின்னு இன்னி வரைக்கும் எனக்கே தெரியல நீதான் காரணம்ன்னு நினைக்கிறேன் பின்ன தினமும் உன்னை வந்து பார்த்துட்டு தானே ஸ்கூலுக்கு போறது இதுகூட செய்யமாட்டியா என்ன? ஆங் அந்த ரெண்டாவது வகுப்பு இன்னும் ஞாபகமிருக்கு இருட்டா பயமா இருக்கும் பின்னாடி முள் காடு வேற அந்த பக்கம் ஒரு ஜென்னலு ரெண்டாப்பையும் மூணாப்பையும் மறைக்க ஒரு உடைஞ்சு போன தட்டி, கோடு விழுந்து வருசத்துக்கு ஒரு நாள் புதுசா பெயிண்ட் அடிக்கிற ப்லாக்போர்டு , ப்லாக் போர்ட் வலதுபக்க மேல் மூலையில கலர் கலர் சாக் பீஸ்ல எழுதியிருந்த வருகை நிலவரம் இன்னும் ஞாபக மிருக்கு ரூபி டீச்சர்தான் கிளாஸ் டீச்சர் , ரூபி டீச்சரும் நல்லவங்கதான் ஆனா அவங்க மேல ரெஸ்பெக்ட்தான் வந்திச்சு பாசம் வரலை..கால் பரிட்சை அரைபரிட்சை முழுப்பரிட்சை இதெல்லாம் எதுக்குன்னு கூட தெரியாம படிச்சுகிட்டு இருந்தேன் ம்ஹும் ஸ்கூலுக்கு போயிட்டு வந்துட்டு இருந்தேன்

ஆமா அங்க போய் அந்த ஸ்கூல்ல இருக்குற மரத்தை சுத்தி சுத்தி ஓடி விளையாடவும் பொன்னம்மா கடையில விக்கிற கேசரி வாங்கித்தின்னவும் கொடிக்காரம் வாங்கித்தின்னவும் மட்டும்தான் ஸ்கூலுக்கு போனேன்...ம் தின்னிப்பயலா இருந்திருக்கியேடான்னு நீ சொல்றது எனக்கு கேக்குது பிள்ளையாரப்பா நீ மட்டும் என்னவாம் தினமும் வாழைப்பழம் கொழுக்கட்டை அது இதுன்னு தின்னுட்டு வயித்த வளர்த்து வச்சுருக்கதான அப்பறமென்ன?

சொல்ல வந்தது விட்டுட்டு எங்கயோ போயிட்டேன் முழுப்பரிட்சை சமயம் பெரியம்மை போட்டுடுச்சு பரிட்சை எழுத போக முடியல அப்படி இல்லாட்டினாலும் ஒண்ணும் எழுதியிருக்க மாட்டேன்றது வேற விஷயம்...அந்த சொட்டத்தலை ஹெட் மாஸ்டர் போனா போகுதுன்னு என்னை ரெண்டாப்புல இருந்து மூணாப்புக்கு பாசாக்கிவிட்டுட்டாரு மூணாப்பு போனதும் ரொம்ப குஷி பெஞ்ச் எல்லாம் போட்ருப்பாங்க இரண்டுவருசமா தரையில உட்கார்ந்து உட்கார்ந்து சலிச்சுருந்தது , ம் மூணாப்புல நான் குட்டையா இருந்ததுனால முன்னாடி பெஞ்சில உட்கார வச்சுட்டாங்க ம் ஸ்கூலுக்கு வட்டி ஆமா வட்டிலத்தான் அப்டி வட்டி வட்டின்னு நாங்க சொல்லுவோம் பின்ன வளர்ந்து பெரியவன் ஆன பிறகுதான் வட்டிக்கும் வட்டிலுக்கும் வித்யாசம் தெரிஞ்சது . அந்த வட்டிய தவால் பைல எடுத்துட்டுத்தான் ஸ்கூலுக்கு போவோம்.

 மதியம் சோத்து மணி அடிச்சதும் அந்த வட்டிய எடுத்துகிட்டு சமையல் கார பொன்னம்மா சாப்பாட்டு அண்டாவ எடுத்து வச்சுகிட்டு இருக்குற சமையல் கூடம் ஆமா ரெண்டாப்புதான் சாப்பாடு போடுற எடம் அங்க வரிசையில நின்னு சாப்பாடு வாங்கி நம்ம ஃப்ரண்ட்ஸ் சக்திவேலு, அழகேசன், வெங்கடேஷ், வேலுச்சாமி,ஜெயக்குமாரு, முத்து இவனுங்களோட சேர்ந்து பெரிய வட்டம் போட்டு சாப்டுவோம் புதன் கிழமையாச்சுன்னா முட்டை போடுவாங்க அதை அப்டியே தோலை உரிச்சுட்டு வெள்ளைகருவ தூக்கி தூரவீசிட்டு மஞ்சள் கருவ சோத்துல போட்டு சாம்பாரோட பிசைஞ்சு சாப்பிடுவோம் எப்டியிருக்கும் தெரியுமா அந்த சாப்பாடு இப்போ நினைச்சாலும் நாக்குல எச்சிலூறுது எனக்கு .

புதன் கிழமை எப்படா வரும்ன்னு இருக்கும் ,ஆமா பின்ன இருக்காதா சுடு தண்ணியில மஞ்சள கலந்து ஊத்துன மாதிரி ஒரு சாம்பாரு இதுல கொள்ளை லாபம் அடிச்சுட்டா அந்த சமையல்காரி பொன்னம்மா இதெல்லாம் எங்கப்பாகிட்ட சொன்னப்போ சின்ன தூக்குவாளியில காலையில குழம்பு மட்டும் கொடுத்துவிட்டாங்க பின்னாடி ஒரு நாள் நம்ம வீட்டுல அம்மா நல்லாத்தானப்பா சமைக்கிறாங்க பின்ன ஏன் வீட்டுல இருந்து எனக்கு சாப்பாடு குடுத்துவிடலைன்னு அப்பாகிட்ட கேட்டப்போ நீ மட்டும் வீட்டு சாப்பாடு கொண்டுபோய் உன்னோட ஃப்ரண்ட் எல்லாம் இலவச சத்துணவு சாப்பிட்டா பின்னாடி உனக்கு தலைக்கனம் ஜாஸ்தியாயிருக்கும் உன்னோட ஃப்ரண்ட்ஸ்ம் வருத்தப்பட்ருப்பாங்களேன்னு நாலுபக்கத்துக்கு வெளக்கம் குடுத்தாரு அப்பாரு.இந்த மாதிரி சின்ன குழந்தையில நான் கேட்குற ஒவ்வொரு விஷயத்துக்கும் அவுரு எனக்கு வெளக்கம் குடுக்குறேன்னு சொல்லித்ததந்த பாடத்தையெல்லாம் எழுதணும்னா ரெண்டு மூணு மாசமாகும் அம்புட்டு இருக்கு.மத்த அப்பா மாதிரியில்ல சின்னவயசுலயே என்னை தூக்கி தோள் மேல தூக்கி போட்டு தோளுக்கு மீறினா தோழன்னு சொல்லிட்டு கெடந்தாரு எங்கப்பாரு...

அதுக்கப்புறம்.ம் ரொம்ப சந்தோஷமா போயிட்டு இருந்த இந்த மூணாப்புல ஒரு காதலும்(முளைச்சு மூணு இலை விடல காதலான்னு கேக்காத பிள்ளையாரப்பா அப்போ அந்த வயசுல அது ஒரு ஈர்ப்புன்னு சொல்லலாம்), ரெண்டு முக்கியமான விஷயமும், இரண்டு அதி பயங்கரமான விஷயமும் ரொம்பவே பாதிச்சுடுச்சு நாளைக்கு அதை சொல்றேன் இப்போ ஜூட்....

(பின்னூட்டப்பெட்டி காலவரையறையின்றி மூடிவைக்கப்பட்டுள்ளது)

,

Post Comment

Love & Love Only

| December 26, 2010 | 5 comments |
ஒரு நாள் உனக்கு ஒரு பாலிசி போட்ருக்கேன் சைன் பண்ணுடா என்றபடி என் முகத்துக்குநேரே ஒரு பாரத்தை நீட்டியவளின் கைகளிலிருந்த பாரத்தை பிரித்து பார்த்தால் MIC பாலிசி என்றிருந்தது, என்னடியிது என்றால் என் மீசைக்கு பாலிசியெடுத்திருக்கிறாளாம்...


என்னைப்பிரிந்திருக்கும்பொழுது எப்படியிருக்கும் உனக்கு என்றவளிடம் ஒரு இமையில் தேனையும் ஒரு இமையில் வலியையும் தடவி தூங்கும்பொழுது வரும் கனவைப்போன்று இருக்கும் என்றேன்,கட்டிப்பிடித்துக்கொண்டாள்.


என்னோட அழகை வர்ணித்து சொல்லேன் என்றவளிடம் கவிஞர் கண்ணதாசன் போதையில் இருக்கும்பொழுதுதான் அருமையான கவிதைகள் எழுதுவாராம் அதுபோல பிரம்மனும் உன்னை எழுதும்போது போதையிலிருந்திருக்கவேண்டும் என்றதும் வெட்கப்பட்டு எனக்கு போதையேற்றுகிறாள்...


எப்பவும் உன்னையே பார்த்துகிட்டு இருக்குற என்னுடைய கண், உன்னோட பேரையே உச்சரித்துகொண்டிருக்கும் என் குரலைப்பற்றியும் கொஞ்சம் சொல்லேன் என்றதும் உன் குரல் மைனாகுரலென்றால்,உன் விழிகள் மைனாகுலர் என்று சொன்னதும் இன்னும் கொஞ்சம் வெட்கப்பட்டு அழகை கூட்டுகிறாள்.


உன்னோட லைஃப்ல யாரெல்லாம் இன்ஸ்பிரேசனா இருக்காங்க என்ற கேள்விக்கு , முயற்சிகளுக்கு கஜினியும், சினத்திற்க்கு கட்டபொம்மனும் ,கவிதைக்கு தபூசங்கர், முத்ததிற்க்கு மட்டும் கமலஹாசன் என்று சொன்னதும் ஒரு எட்டு பின் வைக்கிறாள்.


உனக்கு முன்னாடியே நான் செத்துப்போயிட்டா என்னடா செய்வ என்று கொஞ்சம் கூட பயமில்லாது கேட்டவளுக்கு உன்னை புதைத்த கல்லறைக்கு அருகிலே உன்னுடைய கல்லறையை பார்க்கும்படியான சாளரம் வைத்த கல்லறையை எனக்கும் கட்டி விழிமூடா சாவை எமனிடம் வாங்கிக்கொள்வேன் என்றது கண்ணீரோடு காதல் பொங்க கட்டிக்கொண்டாள்.


ஒரு நாள் உன் மடியில் படுத்து அழணும்ன்னு ஆசையா இருக்குடா என்றவளை அப்போ வா கட்டுமரம் கட்டி கடலுக்குள்ளாற கூட்டிப்போகிறேன் நல்லா அழு என்றேன் ஏன் கடலுக்குள்ள போய் அழணும் என்று எதிர் கேள்விக்கு,  இல்ல கடலுக்குள்ள உன்னுடைய கண்ணீர்த்துளி விழுந்தால் முத்தாக மாறிடும் அதையெடுத்து வித்துடலாமே அதான் என்றதும் புன்னைகைக்கிறாள்...


நான் உன் கைக்கு சிக்கிட்டா என்னை என்ன பண்ணுவ என்று ரொமாண்டிக் லுக்கோட கேள்வி கேட்டவளிடம் நான் காதலமைப்பாளர் ஆகிடுவேனே என்றதும் எப்படி எப்படின்னு பதில் கேள்விக்கு இசைய மீட்டுனா இசையமைப்பாளர்ன்னு சொல்றாங்க இல்லியா அதுமாதிரி காதலிய மீட்டுனா கதலைமப்பாளார்தானே என்றதும் ஹைய்யோ கடிக்காதாடா என்றவளின் உதட்டை கடித்து நிஜமாகவே அவளை மீட்ட ஆரம்பித்திருந்தேன்...


ஒரே காதல் மூடோடவே இருக்கியே காதல்ல எதுவும் பிஹச்டி வாங்கப்போறியா என்று எடக்கு மடக்கு கேள்விக்கு நானும் எடக்குமடக்காகவேஆம் காதல் கல்லூரியில் பேச்சலர் ஆஃப் கிஸ் எனும் பட்டப்படிப்பில் முத்தவியல் பாடத்தில் பிஹச்டி பண்ணுவதற்க்காக உன்னை ஆராய்ச்சி செய்து காதலரேட் வாங்கப்போகிறேன் என்றதும் மயக்கமடைந்துவிட்டாள்.


பதிவை வாசித்த அனைவருக்கும் மிக்க நன்றி...


பின்னூட்டப்பெட்டி காலவரையின்றி மூடிவைக்கப்படுகிறது...

Post Comment

காதற்காடு காதல்சாமி காதல்சாரத்தை கட்பண்ணிட்டாருப்பா!

| December 25, 2010 | 29 comments |
காதலியல்

காதல் சும்மா எடுத்தார் கைப்பிள்ளை மாதிரி யார்வேண்டுமானலும் காதலிக்கலாம், காதல் திருக்குறள் மாதிரி பொதுவுடைமை. ஆனால் அதை எடுப்பதற்க்கு முன்னால் அது தரக்கூடிய வலி சந்தோஷம் துக்கம் இழப்பு எல்லாத்தையுமே தாங்கிக்கொள்ளக்கூடிய மனநிலை நம்மிடம் இருக்கிறதா என்று ஒரு முறைக்கு பலமுறை காதல்மீட்டர் மூலம் அறிந்துகொண்டு எடுக்கவேண்டும்..

என்னடா இது காதல்மீட்டர் கேள்விப்படாத மீட்டரா இருக்கே அப்படின்றவங்களுக்கு இந்த மீட்டரைப்பற்றி சொல்லி விடுகிறேன்.இந்த காதல்மீட்டர்  உங்கள் உடம்பில்தான் இருக்கிறது . ஏதாவது ஒரு காதல் ஜோடியை வழியில் பார்த்ததும் உங்களுக்கும் அதே போல் காதலிக்க வேண்டும் என்ற எண்ணம் வருமாயின் காதல் மீட்டர் வொர்க் ஆகுதுன்னு அர்த்தம். மாறாக ச்சீய்ய் இதெல்லாம் ஒரு பொழப்புன்றவங்களுக்கு அந்த மீட்டரே வேலை செய்யவில்லையென்று வைத்துக்கொள்ளலாம்.

ஆனால் எனக்கு காதலர்களைப்பார்த்தால் மட்டுமில்லாமல் எதைப்பார்த்தாலும் காதல் ஃபீவர் அதிகமாகிவிடுகிறது என்னோட காதல் மீட்டர் அளவுக்கு மீறியே வேலைசெய்கிறது அதனால் ஏற்பட்ட பின்விளைவுகளே பின்வருவன.. ( முடியலைல)


பழநிக்குச்சென்று
முருக பெருமானைப்பார்த்து 
முருகா போற்றியென்று
சொல்வதற்க்கு பதில்
கவிதா போற்றியென்று
சொன்னதும் முருகன்
வேலையெடுத்து
குத்திடுவேன் ஓடிவிடு 
என்பதுமாதிரியே
போஸ் கொடுக்கிறார்..

கடைக்குப்போய் 
கால்கிலோ கத்தரிக்காய்
என்ன விலைன்னு
கேட்டு வாங்கிவாடான்னு
அம்மா சொன்னதும்
கடைக்குச் சென்று
கடைக்காரரிடம் 
கால்கிலோ காதல்
என்ன விலையென்று 
கேட்டு மானம் போகிறது...

புறநானூறு
எழுதியவர்களைப்பற்றி
பாடம் நடத்திக்கொண்டிருக்கும்
தமிழாசிரியரிடம்
ஏன் ஐயா காதல்நானூறென்று
யாரும் எழுதவில்லை
என்று கேட்டு காதலியின் முன்
ஆசிரியரிடம் குட்டு 
வாங்கியதுதான் மிச்சம்...

காதலியும் நானும்
ஒரே பேருந்தில்
அருகருகே அமர்ந்து
பயணித்து கொண்டிருக்கும்
பொழுது எங்கப்பா போகணும்
என்று கேட்டுவரும்
நடத்துனரிடம்
காதலூருக்கு ரெண்டு டிக்கெட்
என்றேன் உடனே அவர்
பயணச்சீட்டுக்கு பதில்
வசைச்சீட்டு கொடுத்து
மானத்தை பேருந்தில் ஏற்றுகிறார்...

கணக்குப்பாடத்தில்
கணக்குகளை விரைவில்
போட்டு முடிப்பதற்க்கு
கால்குலேட்டர்
இருக்கின்ற மாதிரி
என்னுடைய காதல்பாட
கணக்குகளை சீக்கிரம்
போட்டு முடிக்க ஒரு
காதல்குலேட்டர்
இருந்தா எவ்ளோ நல்லாருக்கும்டா
என்றேன் நண்பனிடம்
துப்பிவிட்டான்...

என்னுடைய பிறந்தநாளுக்கு
புத்தாடை உடுத்தி 
கொண்டாடிய நான்
என் காதல் பிறந்தநாளுக்கு
காதலுக்கு புத்தாடையெடுக்க
துணிக்கடைக்கு சென்றேன்
யாருக்கு துணி என்ன சைஸ்
என்ற சேல்ஸ்மேனிடம்
ஒரு வயது காதலுக்கு
என்றேன் சேல்ஸ்மேனும்
துப்பிவிட்டான்..

காதலியை நினைத்து
ஒரு வேலைகூட
செய்யாமல் வீட்டின்
மூலையில் உட்கார்ந்திருந்தேன்
என்னடா ஆச்சு என்று 
கேட்ட அப்பாவிடம்
காதற்காடு காதல்சாமி
காதல்சாரத்தை
கட்பண்ணிட்டார்ப்பா
அதான் உடம்பு வேலை
செய்யமாட்டேன்னுது
என்று சொன்னதும்
அவரும் அவர் பங்கிற்க்கு
துப்பிவிட்டார்...

வாடா இன்னிக்கு 
எங்கயாவது வெளியில போகலாம்
என்று காதலி சொன்ன சந்தோஷத்தில்
நண்பனை அலைபேசியில் அழைத்து
மச்சி இன்னிக்கு 
சரக்கடிக்கப்போறேண்டா அதனால 
காலேஜ்ல வாத்தியார் கேட்டா
நான் லீவ்ன்னு சொல்லிடு என்றேன்
எந்த பார் என்ன சரக்கு 
சைட் டிஷ் என்ன ஆர்டர் பண்ணப்போற
நானும் வர்றேன்டா என்று 
ஆவலாய் கேட்ட நண்பனிடம்
காதல் பாருக்கு போய்
காதல் பிராண்ட் சரக்கு அடிக்கப்போறேன் 
சைட் டிஷ் காதலிதாண்டா என்று
சொல்லி முடிப்பதற்க்கு முன்பே
அருகில் அமர்ந்திருந்த காதலியும்
துப்பிவிட்டாள்...

இப்படி
எதைப்பார்த்தாலும்
காதலாய் தோன்றி 
காதல்பித்து பிடித்து திரியும்
உன்னை என்ன செய்யலாமென்று
என்னிடம் கேட்ட அம்மாவிடம்
காதல்பாக்கத்திலிருக்கும்
காதல் ஆஸ்பிட்டலுக்கு
போய் செக் பண்ணிட்டு
வர்றேன்ம்மா என்றேன்
அம்மாவும் துப்பிவிட்டார்...

இப்பொழுது உங்கள் முறை வரிசையாக துப்பிவிட்டு செல்லவும்...

.


Post Comment

தோழி அப்டேட்ஸ் - Sorry கார்க்கி

| December 19, 2010 | 33 comments |
நீ என்னடா படிச்சுருக்க என்று கேட்டவளிடம் நான் பி.எல். முடிச்சுருக்கேன்னு சொன்னதும் ஓஹ் வக்கீலுக்கு படிச்சுருக்கியா பேஷ் பேஷ் என்றவளிடம் பி.எல்ன்னா பேச்சலர் ஆஃப் லவ்ன்னு சொன்னேன், சைய் ரொம்ப கடிக்காதடான்னு சொல்லி என் கையப்பிடித்து கடித்து வைத்திட்டாள் கடிகாரி...


பி.எல். முடிச்சுருக்கியே உன்னோட கோர்ஸ்ல என்ன என்ன சப்ஜெக்ட்டெல்லாம் இருந்துச்சு கொஞ்சம் சொல்லேன் நான் தெரிஞ்சுக்கிறேன்னு சொன்னவளிடம் இதழியல்,இடையியல்,காதலியியல்,கண்ணியல்,கடைசியா காமவியல்ன்னு சொல்லி முடிக்கிறதுக்கு முன்னாடியே மொத்ததுல நீ ஒரு டரியல்டா சாமி ஆளவிடுன்னு ஓடியேவிட்டாள்...நான் உனக்கு புதுசா ஒரு பெயர் வச்சுருக்கேன்டின்னதும் என்ன என்ன பெயர்ன்னு குதிச்சு ஓடி வந்தவளிடம் நீ நான் எப்போ முத்தம் கேட்டாளும் தரவேமாட்டேன்றியா அதனால முத்தம்தராதவள் என்பதை சுருக்கி முத்ததாரா என்று வைத்திருக்கிறேன்னு சொன்னதும் இச்சென்று ஒரு முத்தம் தந்துவிட்டாள்...


என்னடா நானும் ரொம்ப நேரமா பாத்துகிட்டே இருக்கேன் எதோ ஒரு புக்கை அவ்ளோ இண்ட்ரெஸ்டா படிச்சுட்டு இருக்க என்ன புக் அது?.இதுவா தபூசங்கரோட வெட்கத்தை கேட்டாள் என்னதருவாய்ன்ற புக் ஆமா நீ சொல்லேன் உன்கிட்ட வெட்கத்தை கேட்டால் என்ன தருவ என்றதும் பதிலாய் அவளிடமிருந்து மௌனவெட்கம் மட்டுமே கிடைக்க சத்தம் போடாமல் எடுத்துக்கொண்டேன் நான்...


நீ ரொம்ப அழகா கவிதையெல்லாம் எழுதுவியாமே உன்னோட ஃப்ரண்ட் சொன்னான்  எங்க எனக்கு ஒரு கவிதையெழுதிக்காட்டேன் என்றவளிடம் உனக்குன்னு கவிதை எழுதுறதா இருந்தா நாம் தேனிலவு செல்லவேண்டியிருக்கும் பரவாயில்லையா என்றேன் ச்சீய் போடா லூசு எப்பப்பாரு இதே நினைப்புத்தானா வெட்கங்கெட்டவனே என்று கவிதையாய் திட்ட ஆரம்பித்திருந்தாள்....


எப்பப்பாரு மிஸ்ட் காலா குடுக்குறியே ஒரு நாளைக்காவது உன்னோட காசு  போட்டு கால் பண்ணியிருக்கியாடி நீ, சரியான கஞ்சூஸ்டி நீ என்றேன். மிஸ்ட் கால்தான பண்ணேன் மிஸ்ட் காதல் பண்ணலியே என்று சொல்லி வார்த்தை விளையாட்டு காட்டுகிறாள்...


உனக்கு சமைக்கத்தெரியுமா என்ன என்னல்லாம் சமைப்ப என்று கேட்டாள்,எதுக்கு கேட்குற என்றேன் இல்லை கல்யாணத்துக்கு அப்பறம் எனக்கு யூஸ்ஃபுல்லா இருக்குமே அதான் கேட்டேன், ஓஹ் அப்டியா இரு  சொல்றேன் எனக்கு முத்தப்பொறியல், இடைதோசை, காதல் குருமா இதெல்லாம் நல்லா சமைக்கத்தெரியும் என்றதும் உன்னையெல்லாம் எதுனாலும் பாலைவனத்துல கொண்டுபோய் விட்டாத்தாண்டா நீ திருந்துவன்றாப்பா...(இப்போ தெரியுதா நான் ஏன் பாலைவனத்துல இருக்கேன்னு ஆவ்வ்)


சாரி கார்க்கி உங்க லெவலுக்கு என்னால எழுதமுடியலை...

*************************************************************************************

இந்த ஏழு நாளா என்னோட மொகரகட்டய பார்த்து சகிச்சுகிட்டு இருந்ததுக்கும் நான் எழுதுன மொக்கையெல்லாம் பொறுமையா படிச்சு பின்னூட்டம் போட்டமைக்கும் மிக்க நன்றி. அதே வேளையில் என்னை நட்சத்திரமா தேர்ந்தெடுத்த தமிழ்மணம் நிர்வாகத்திற்க்கு மீண்டும் ஒருமுறை நன்றி  சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.அடுத்து வரப்போகிற நட்சத்திரத்திற்க்கு வாழ்த்துகள் சொல்லிக்கொண்டு உங்களிடமிருந்து விடைபெற்றுக்கொள்கிறேன்...அதுக்கு முன்னாடி உங்ககிட்ட ஒரு விஷயம்  
தமிழ்மணம் நடத்தும் இந்தவருடத்திற்க்கான சிறந்த இடுகைகள் தேர்ந்தெடுப்பதற்க்கான தேர்தலில் என் சார்பில் நீங்கள் மிகவும் ரசித்த இடுகைகளான


ஆகிய இடுகைகள் சமர்ப்பித்திருக்கிறேன் பிடித்திருந்தால் வாக்களிக்க மறவாதீர்கள் நன்றி.


Post Comment

வாழாமலே செத்துப்போனவள்!

| December 18, 2010 | 22 comments |
ஒரு வேப்பமரத்தின் நிழலில் -2

ஒரு பதினைந்து குடும்பங்கள் வாழும் ஒரு சின்ன கிராமத்தில் நாட்டாமையாக வீற்றிருக்கும் ஒரு வேப்பமரத்தின் நிழலில் அவ்வப்போது தங்களுடைய ஆற்றாமை,வெறுப்பு,மனச்சோர்வு இவற்றை பகிர்ந்து கொள்ளும் மனிதர்களைப்பற்றிய இரண்டாவது பார்வை.

அப்பனே முருகா எல்லாரையும் காப்பாத்துப்பான்னு வேப்பமர நிழலில் காலை நீட்டிய படி உட்கார்ந்தவாறு தன்னுடைய சக தோழியைப்பற்றி மீனாச்சி வேப்பமரத்திடம் புலம்ப ஆரம்பித்திருந்தாள் .

நல்லாத்தேன் இருந்தா இந்த சம்முகம், திடீர்ன்னு நேத்து காலங்காத்தால கீழத்தெரு சின்ராசு தண்டோரா போட்டுகிட்டே வந்தப்பதான் தெரிஞ்சது சம்முகம் செத்துப்போய்ட்டான்னு.சம்முகம் யாருன்னு கேக்குறீகளா நானும் சம்முகமும் ஒரு சோட்டு வயசுக்காரிக எவீடும் அவ வீடும் ஓட்ட்டியொட்டியிருக்கும் சிறுசுல இருந்தே ரெண்டுபேரும் ஒரே பள்ளிகோடத்துல ஒரே தட்டுல சாப்ட்டு வளர்ந்தவக.இந்த சம்முகம் இருக்காளே கொஞ்ச நஞ்சமில்ல அம்புட்டு கருப்பா இருப்பா, கருப்புனாலும் கண்மைய மொகம்பூரா பூசுன மாரியொரு கருப்பு.ஆள்தான் கருப்பேயொழிய அவளோட மனசு சுத்த வெள்ள அவ அப்பங்காரன் என்ன வாங்கியாந்தாலும் எனக்கும் ஒரு பாகம் கொடுத்துட்டு திங்கிற மனசுக்காரி பாகம்பிரிக்கமுடியாத ஒத்த முட்டாயா இருந்தால் அவ சட்டையில முட்டாய சுத்தி வாயில வச்சி கடிச்சி எச்சி படாம கடிச்சு பாதியெனக்கு கொடுத்துட்டுத்தான் திம்பா.

ஒரு நா பள்ளிக்கோடம் போய்ட்டு வீட்டுக்கு வந்துகிட்டிருக்கையிலயே அடியே மீனாச்சி எனக்கு கண்ணு கொஞ்சம் மங்களா தெரியுதுடி என்னனே தெரியலைன்னு கண்ணக்கசக்கிகிட்டே வந்தா நானும் எதோ தூசுதுரும்பு கண்ணுக்குள்ளாற விழுந்துபோயிருக்கும்டி இரு நான் ஊதிவிடறேன்னு சொல்லி கண்ணாம்பட்டைய மேலதூக்கிபிடிச்சு ஊதிவிட்டேன் அப்போவும் அவ இல்லடி இன்னும் அப்படியேத்தான் இருக்குடின்னு சொன்னா. வீட்டுக்கு போனதும் அவங்கப்பங்காரன்கிட்டயும் ஆத்தாக்காரிகிட்டயும் சொல்லியிருக்கா அவங்களுக்கு இவ மேல அக்கறையே இல்லன்றதால அவ சொல்றத காதுலயே வாங்கிக்கவேயில்ல அப்படியே விட்டுட்டாங்க கொஞ்ச நாள்லயே கண்ணுல பூவிழுந்திடுச்சு வீட்டை விட்டு வெளியவே வர முடியாத அளவுக்கு கண்ணு மங்கிப்போச்சு.பள்ளிக்கோடத்துக்கு வர்றதையும் நிப்பாட்டிட்டாங்க.

நா பள்ளிக்கோடம் விட்டு எப்போ வாறேன்னு எதிர்பார்த்துகிட்டேயிருப்பா நான் வந்ததும் அன்னிக்கு பூரா அவ ஆத்தாக்காரி திட்டுனதையெல்லாம் சொல்லி சொல்லி அழுவா. பொண்ணு சமஞ்சா சந்தோசப்படற பெத்தவுக இருக்குற ஒலகத்துல இவ சமஞ்ச விசயத்துக்காக அவ அப்பனும் ஆத்தாளும் இவளப்போட்டு அடியடின்னு அடிச்சுருக்காக.அதுக்கப்பறம் கொஞ்ச நாளைக்கு இவளை வெளியவே விடலை . அவளுக்கு ஒரு தம்பிக்காரன். அவனை டவுன்ல இருக்குற கான்மெண்ட் பள்ளிக்கோடத்துல சேத்து படிக்கவச்சு அவனை ஒரு ராசாவாவும் இவளை தீண்டத்தாகதவ மாதிரியும் நடத்துனாக அவக அப்பனும் ஆத்தாளும் வீட்ல.நெசமாலுமே சம்முகம் பாவப்பட்ட பெறவி.

நாளும் வருசமும் வெரசா ஓடிப்போச்சு நானும் உள்ளூர் மைனர் ஒருத்தருக்கு வாக்கப்பட்டேன். எனக்கும் நாலஞ்சு புள்ளகுட்டிங்க ஆயிப்போச்சு என்னோட ஒவ்வொரு சீமந்தத்துக்கும் என் ஆத்தாக்காரி வீட்டுக்கு போறப்போ சம்முகம் என்கிட்ட வந்து எனக்கும் உன்னமாதிரியே புள்ளதச்சியா ஆவணும்போல இருக்குன்னு சொல்லியழுவா . கஷ்டமாத்தேன் இருக்கும் என்ன செய்ய விதி அவளை ஆண்டவன் அஷ்டகோணலா படைச்சுட்டான். ஒரு நாள் அவளோட ஆத்தாக்காரியோட தம்பி சம்முகத்தோட மாமங்காரன் இவளோட பாவாட சாக்கெட்டெல்லம் கிழிச்சு அசிங்கம் பண்ண பாத்திருக்கிறான் அந்த நேரம் இவளோட தம்பிக்காரன் வந்து ரெண்டு அறை விட்டு காப்பாத்திப்போட்டான் இல்லைனா பாவம் ஏற்கனவே நாறி நமுத்துப்போன இவ இன்னும் அழுகி சின்னாபின்னமாயிருப்பா.பாவம் அவ அப்பங்காரனும் ஆத்தாக்காரியும் செத்துப்போனபெறகு இவ தம்பிக்காரந்தான் இவளுக்கு கஞ்சியூத்திகிட்டு கெடந்தான்.

ஒரு நா நான் வீட்ல இருக்கறப்போ பூனக்குட்டிகனக்கா மொல்லமா நடந்து வந்தவ சொன்னத கேட்டதும் எனக்கு தூக்கிவாரிப்போட்டுச்சு.கொஞ்சம் சோறு இருந்தா போடுடின்னா என்னடி ஒன்னோட நாத்தனாக்காரி சோறுதண்ணி கொடுக்கரதில்லையான்னு கேட்டதும் அழுதிட்டா அதுயேண்டி கேக்குற முந்தாநாளு ஆக்குன சோத்த புழுவச்சத வக்கிறா வாய்ல வக்க முடியல குருட்டுச்சிறுக்கிதான எதப்போட்டாலும் தின்னுடுவான்ற நப்பாசை போல தம்பிகிட்ட சொன்னா நீ வாழ்றதே வீண் இதுல வீணாப்போனத தின்னா குறைஞ்சா போய்டுவன்னு சொல்லி கேலிபேசறான் நான் என்னடி பாவம் பண்ணேன் ஏன் எனக்கும் உன்னைமாதிரி கல்யாணம் காட்சி ஆயிருந்தா இந்த சிறுக்கி மவகிட்ட எல்லாம் வசவு வாங்கணும்ன்ற அவசியமும் அவ போடற சோத்ததின்னுட்டு உயிர் வாழணும்ன்ற அவசியமும் எனக்கிருந்திருக்காதுடின்னு அழ ஆரம்பிச்சா..

ஏண்டி எனக்கு இன்னும் கல்யாணம் ஆவலைன்னு சொல்லி கேட்டவளுக்கு என்னால பதிலே சொல்லத்தெரியலை அதுக்கப்பறம் அவ நாத்தனாக்காரி கொடுமை இன்னும் அதிகமாயி அந்த வீட்டுக்குள்ளாறயே தெனமும் நொந்து நொந்து செத்துக்கெடந்தவ நேத்தைக்கு நெசமாலுமே செத்துப்போயிட்டா நீயே சொல்லு ஏன் அவளுக்கு கண்ணு போச்சு? ஏன் அவளுக்கு கல்யாணம் காட்சி ஆகலை இது ரெண்டுத்துக்கும்  நீதான் பதில் சொல்லணும்..

வேப்பமரம் தன்னுடைய கிளையிலிருந்து பசுமையான இரண்டு இலைகளை உதிரவிட்டது...


.

Post Comment

எனக்கு வந்த லவ் லெட்டர்!

| December 17, 2010 | 28 comments |
இந்த கடிதம் வர்றதுக்கு முதல் நாள் தோழி ஒருவரிடம் ப்லாக் எழுதுறதை நிப்பாட்டிடலாம்ன்னு சொல்லிகிட்டு இருந்தேன் . ஆனா இது மாதிரி லெட்டர் எழுதி அந்த ஆசையில மண்ணள்ளிப்போட்டுட்டான் இந்த படுபாவி பய...


(ரொம்பவே அழகான கையெழுத்துல்ல) இது மாதிரி ஹேண்ட் ரைட்டிங்லயே பதிவு போடணும்ன்னு நினைச்சுகிட்டு இருக்கேன் முடிய மாட்டேன்னுது... சீக்கிரமா அதுக்கு அடுத்த மாசம் பென் மவுஸ்ன்ற சாஃப்ட்வேர் வாங்கிடுவேன் எதிர் பாருங்க என்னுடைய ஹேண்ட் ரைட்டிங் கவிதைகளையும், ஓவியங்களையும்...


இந்த லெட்டருக்கு எதிர் லெட்டர் எழுத ரொம்பவே பிரியப்பட்டு ரமேஷ் ( ரொம்ப நல்லவன் சத்தியமா) அவர்களைவேண்டி விரும்பி கேட்டுகொள்கிறேன் ஏன்னா என்னைய யாராச்சும் கிண்டல் பண்ணா சிரிச்சு ரசிக்கிற சுய எள்ளல் மிகுந்தவன் நான். அதனால இவர் மட்டுமில்ல இன்னும் இதுக்கு பாட்டியோ பேரனோ லார்டோ லபக்கோ பேர் வச்சு பஸ்லயும் லாரியிலயும் கிண்டல் பண்றவங்களும் தயவு செய்து அந்த லிங்கை இங்கே தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் . நம்ம ஆட்கள்தான் யாரையாச்சும் கிண்டல் பண்ணா கூடி சேர்ந்து கும்மியடிக்கிறவங்களாச்சே அதான் அந்த சந்தோஷத்தை இங்கயும் பகிர்ந்துக்கங்க...

நன்றி இது வரைக்கும் நம்ம பேரை கும்மியடிச்சவங்களுக்கும் கும்மியடிக்கப்போற்வங்களுக்கும்.....

Post Comment

பிரியாணி - விமர்சனம்

| December 15, 2010 | 40 comments |
பிரியாணி - விமர்சனம்

நிறைய பேர் சினிமா படத்துக்கு விமர்சனம் எழுதுறாங்க,ஒரு சேஞ்சுக்கு நாம சாப்பிடுற பிரியாணிக்கு விமர்சனம் எழுதலாம்முன்னு....

கதை: ஒரு கடையில இருந்து வாங்குன அரிசி,எப்பிடி இறைச்சிகடையில வாங்குன ஆட்டிறைச்சியோட சேர்ந்து பிரியாணி ஆகுதுன்றதுதான் கதை,

கதையோட ஹீரோ யாருன்னு பார்த்தா ஆட்டிறைச்சிதாங்க ஹீரோ,கதையோட கரு எல்லாமே ஆட்டிறைச்சிய சுத்தி சுத்திதான் நடக்குது....

மூலக்கடை செட்டியார் கடையில பிரியாணி அரிசி வாங்குறதுல இருந்து ஆரம்பிக்குது கதை,அப்படியே ராஜி கடையில வாங்குன ஆட்டிறைச்சியும்,அரிசியோட தங்க மணி பையில வாங்கிட்டு வரும்போதே தொட்டு தொட்டு பேசி உறவாடிட்டு மெல்ல காதல் வளருது,

வீட்டுக்கு வந்ததும் பிரியாணி அரிசி குளிக்க ஆரம்பிக்குது,அப்பறம் ஆட்டிறைச்சியும் குளிக்க ஆரம்பிக்குது அப்போ ரெண்டுபேருக்கும் தனித்தனி சோலோ சாங்க் ஒண்ணு வருது, அரிசிதாங்க முதல்ல தன்னோட காதல்சொல்லணும்ன்னு நல்லா விளக்கி வச்ச பாத்திரத்துல தண்ணியோட சேர்ந்து கொதிக்க ஆரம்பிக்குது.

அப்பறம் அரிசியோட காதலை புரிஞ்சுகிட்ட ஆட்டிறைச்சியும் டொபுக்குன்னு பாத்திரத்துக்குள்ள விழுந்து அரிசியோட சேர்ந்து கடபுட கடபுடன்னு ஒரு டூயட் சாங்க்ல தன்னோட காதலை சொல்லிடுது,

படத்துல தங்கமணி ஆட்டிறச்சிய துண்டு துண்டா வெட்டும்போது வர்ற ஃபைட் சீன் இதுவரைக்கும் தமிழ் சினிமா பாத்திராதது,கிராஃபிக்ஸ் காட்சியில படத்தோட டைரக்டர் தங்கமணி புகுந்து விளையாடியிருக்கார்,

அப்பறம் படத்தோட சைட் ஆர்ட்டிஸ்ட்களான தக்காளி,வெங்காயம்,பச்சைமிளகாய் வெட்டும்போது வர்ற ஃபைட் சீனும் எதார்த்தமா இருக்கு, என்ன வெங்காயத்தோட ஃபைட் சீன் வரும்போது மட்டும் நம் கண்ணில் தண்ணீர் வர்றது நிஜம்,

Then,தக்காளி,வெங்காயம் வதக்கும் சீன்ல நம் மனது அப்படியே லயித்துவிடுகிறது,இவங்கதான் இந்த மட்டன் பிரியாணி கதை சிறப்பா வர்றதுக்கு காரணம் என்பதை மறுப்பதற்க்கில்லை,

அப்பறமா பிரியாணியோட வாசனைக்கு சேர்க்கப்பட்ட புதினாவும்,பிரியாணி மசாலாவும் தங்களோட கேரக்டரை சிறப்பா செஞ்சுருக்காங்க..படத்தோட ஹீரோ ஆட்டிறைச்சியும்,ஹீரோயின் பிரியாணி அரிசியும் போட்டி போட்டு தங்களோட திறமைய வெளிப்படுத்தியிருக்காங்க...

கடைசியா எல்லாரும் சேர்ந்து எப்படி பிரியாணி சுவையா வந்துச்சுன்றது தங்கமணி பரிமாறும்போது எல்லாரும் சாப்பிட்டு தெரிஞ்சுக்கோங்க..

படத்தோட ப்ளஸ்பாயிண்டே கதை நடக்கும்போதே பக்கத்து வீட்டுக்காரர்களை நம்ம வீட்டுக்கு வரவைக்குற அளவுக்கு வாசனையா நம்ம தங்கமணியோட டச்சிங் பெர்ஃபார்மன்ஸ் பட்டைய கிளப்புது,அதிலும் அந்த உப்பு கரெக்ட்டா சேர்த்த விதத்தில டைரக்டர் தங்கமணி தான் அனுபவசாலின்னு நிரூபிச்சுடுறார்.படம் நன்றி : http://sashiga.blogspot.com


மொத்தத்தில் இந்த மட்டன் பிரியாணி சாப்பிடுற எல்லாரோட மனசையும் வயித்தையும் நிறைய வைக்குதும அப்பிடின்றதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

மட்டன் பிரியாணி-சுவையாய்...

மீண்டும் அடுத்த வாரம் ஒரு சிறந்த உணவின் விமர்சனத்தில் சந்திப்போம்....

..

Post Comment

சென்னை தனி மாநிலமாகிறதா?

| | 6 comments |சென்னை தமிழ்நாட்டின் இதயம் என்று சொல்லும் அளவிற்க்கு தமிழ்நாட்டின் அத்தனை பகுதியிலிருந்தும் பெரும்பாலும் வீட்டிற்க்கு ஒருவராவது சென்னையில் வசிக்கும் வரம் பெற்றிருக்கின்றனர் .இந்த நகரில் விளையும் நல்லது கெட்டதுகளின் பிரதிபலிப்பை தமிழ்நாட்டின் அத்தனை ஊர்களிலும் காணலாம், சட்டமன்றம், சினிமாத்துறை,தொழில்துறை,மென்பொருள் துறை என அத்தனை விஷயங்களின் தலைமையிடமாக விளங்குகிறது.இதன் விளைவு இடப்பற்றாக்குறை, நில மற்றும் வீடு ஆகியவற்றின் விலை உயர்வு,வீட்டு வாடகை உயர்வு தண்ணீர் பற்றாக்குறை இன்னும் இன்னும் நிறைய நிறைய பிரச்சினைகள் இருந்தாலும் இவற்றையும் மீறி தினந்தோறும் சென்னை வந்து வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டேதான் செல்கிறது குறைந்த பாடில்லை...

ஏன் இந்த சென்னை மோகம் ? விமான போக்குவரத்து,கப்பல் போக்குவரத்து இந்த இரண்டு விஷயங்களினால்தான் இந்த இரண்டு விஷயங்களினாலும் தற்போது வந்திருக்கும் மென்பொருள் துறையினால் மட்டுமே சென்னையின் அத்தனை அசுர வளர்ச்சிக்கும் காரணம் என்று கூறலாம் இது இன்னும் எங்க போய் முடிய போகின்றதோ அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்


பொதுவாக ஒரு பள்ளியின் ஒரு வகுப்பில் படிக்கிற 40 மாணவர்களில் ஒருத்தன் நல்லா படிக்கின்றான் அவனுக்கு அதுக்கு தகுந்த வசதிகளும் வாய்ப்பும் இருக்கென்று வைத்து கொள்வோம் ஆசிரியரும் அந்த மாணவனை மட்டும் நீ நல்லா படிக்கிறன்னு தட்டி கொடுத்து, மற்ற பசங்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டாறென்றால் அந்த வசதியான பையன் மட்டும்தான் நல்ல மதிப்பெண் எடுப்பான் மற்றவங்க எல்லாம் ஏதோ பேருக்கு படித்தோம் என்று போய்டுவாங்க. அதுமட்டுமில்லாமல் அந்த ஒரு மாணவரின் மீது மற்ற மாணவர்களுக்கு காழ்ப்புணர்ச்சியும் வரும் அப்பொழுது அந்த ஆசிரியர் என்ன பண்ண வேண்டும் மீதியிருக்கும் மாணவர்களுக்கும் அவர்கள் படிப்பதற்க்கு தகுந்த வசதியும் ஊக்கமும் கொடுக்கும்பொழுது மற்ற மாணவர்களுக்கும் இன்னும் நல்லா படிக்கணும் என்ற ஆர்வம் வரும் அனைத்து மாணவர்களும் நல்ல முறையில் தேர்ச்சி பெற்று அந்த பள்ளிக்கே பெருமை சேர்ப்பார்கள் ஒரே ஒரு மாணவன் மட்டுமே அந்த பள்ளிக்கு பெயர் வாங்கித்தருவது எப்படியிருக்கும் அனைத்து மாணவர்களும் சேர்ந்து அந்த பள்ளிக்கு பெயர் வாங்கித்தருவது எப்படியிருக்கும்?

இதே போல்தான் தமிழ் நாட்டின் அனைத்து நகரங்களில் வசிக்கும் மக்களின் சென்னை வாழ்க்கை ஆசையானது சென்னை மீது ஒரு வித காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தும். இல்லையென்று சும்மா வார்த்தைக்கு வேண்டுமானால் சொல்லலாம் ஆனால் நிஜத்தில் நம்மால் சென்னையில் வாழ முடியவில்லை என்ற ஒரு ஏக்கம் இருக்கும் .இந்த அரசும் அரசாங்கமும் அரசியல் வாதிகளுமே சென்னையையே விரும்புகின்றனர் ஆதலால் அவர்களும் இந்த விஷயத்தை பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளாமல் பத்தோடு பதினொன்றாக ஆட்சி செய்துவிட்டு போய்விடுகின்றனர்..

சென்னை தவிர மற்ற நகரங்களில் வாழும் எங்களுக்கு இப்போ என்ன தேவையென்று நினைத்து பார்க்க அரசாங்கத்துக்கும் அரசியல்வாதிகளுக்கும் நேரமில்லை ஏன் தமிழ் நாட்டில் இருக்கும் மதுரை திருச்சி கோவை போன்ற நகரங்கள் இன்னும் வளரும் நகரங்களாகவே இருக்கின்றன? இந்நகரங்களிலும் சென்னையில் இருக்கும் பாதி அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களை பகிர்ந்து அந்நகர வளர்ச்சிகளுக்கும் அரசு உதவலாமே ஆனால் முயற்சி செய்ய மாட்டார்கள் அத்தனைக்கும் லஞ்சம் என்ற விஷயத்தையும் தாண்டி சுயநலம் என்ற ஒன்றும் இருக்கின்றது , முக்கிய அரசியல் தலைவர்கள் அனைவரின் வீடு நிலம் அனைத்தும் சென்னையில்தானே இருக்கின்றது இன்னும் நிறைய அரசியல் தலைவர்களின் பங்குகளும் சென்னையில் இருக்கும் தனியார் தொழில் நிறுவனங்களின் மூதலீடாய் இருக்கின்ற பொழுது அவர்கள் எப்படி சென்னையை விட்டு மற்ற நகரங்களின் வளர்ச்சியில் அக்கறை கொள்வார்கள்?

இப்படி கப்பல் துறைமுகம் இருக்கும் நகரம் மட்டும் தொழிற் புரிய வசதியென்று ஒரு நியாயம் இருக்கிறது . ஏனென்றால் உற்பத்தி செய்த பொருள்களின் ஏற்றுமதிகளுக்கும் உதிரி பாகங்களின் இறக்குமதிக்கும் சரியென்று வைத்துகொண்டாலும் மற்ற கணிணி மென்பொருள் துறையும் சென்னையிலேதான் வளர்ச்சி பெறவேண்டுமென்று விதியிருக்கிறதா என்ன? கேட்டால் கணிணி மென் பொருள் துறை வல்லுனர்கள் ஓய்வு நேரங்களை கழிக்க சிறந்த பொழுதுபோக்கு இடங்களும் இங்கே நிறைய இருப்பதால் பெரும்பாலானோர் சென்னையையே விரும்பவதாக கூறலாம் அந்த பொழுதுபோக்கு வசதிகளை தமிழ்நாட்டின் மற்ற நகரங்களிலும் ஏற்படுத்தி அந்த நகரங்களிலும் மென் பொருள் துறை வளர்ச்சியை ஏற்படுத்தலாமே இப்பொழுதும் இநநகரங்களில் மென் பொருள் நிறுவனங்கள் இயங்கினாலும் சென்னை அளவிற்க்கு வளர்ச்சியடையவில்லையென்றே கூறலாம்...

ஏன் சினிமாத்துறை சென்னையில் மட்டும் இயங்குகிறது? சினிமா தயாரிப்பதற்க்கு தேவையான மூல சாதனங்கள், ஸ்டுடியோக்கள், ரெக்கார்டிங் ஸ்டுடியோக்கள் அத்தனையும் சென்னையில் மட்டுமே இருப்பதனால் சினிமா தயாரிப்பவர்களால் சென்னையை விட்டு வெளியே வர விருப்பமில்லை அத்தனை வசதிகளையும் தமிழ்நாட்டின் பிற நகரங்களிலும் ஏற்படுத்தி அங்கேயும் திரைப்படம் எடுக்க முயற்சிக்கலாமே செலவுகளும் குறையும்,ஆனால் இதையும் கண்டுகொள்வார்களா மாட்டார்கள் ஏனென்று அவர்களுக்கும் திரைப்படத்துறையினருக்கு மட்டுமே வெளிச்சம்...

இன்னும் கல்வி,மருத்துவம் அத்தனையிலும் பிரதான நிறுவனங்கள் அனைத்தும் சென்னையில் மட்டும் இயங்குகின்றன இப்படியே போனால் சென்னை தமிழ்நாட்டிலிருந்து பிரிந்து தனி மாநிலமாக உருவெடுக்கும் நிலை வரலாம் அப்படியான சூழ்நிலையில் வளர்ச்சியடையாத நகரங்களை மட்டுமே வைத்துகொண்டு மீதியிருக்கும் நாடு பொருளாதார நிலையில் கடும் வீழ்ச்சிகளை சந்திக்கும் நிலை ஏற்படும் என்பது நிச்சயம்..இவற்றை தவிர்க்க தமிழ்நாட்டின் மற்ற நகரங்களையும் கண்டுகொள்ளுமா அரசு?

(சிறிது மாற்றத்துடன் கூடிய மீள் பதிவு)Post Comment

Kiss & Kiss Only (Strictly 18+ youths Only Allowed)

| | 44 comments |
கிஸ் & கிஸ் ஒன்லி வயது(க்கு) வந்தோருக்கானது 
Post Comment

ஸ்டார் பதில்கள்..!

| December 13, 2010 | 64 comments |

என்னை இந்தவார நட்சத்திரமாக தேர்ந்தெடுத்த தமிழ்மண நிர்வாகிகளுக்கு முதற்கண் நன்றிகலந்த வணக்கங்கள்..( நம்ப முடியவில்லைலைலைலை)

வணக்கம் நண்பர்களே உங்களையெல்லாம் இந்த நட்சத்திரவாரத்தில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . சும்மா நானும் ஒரு பிலாக் வச்சுருக்கேன் என்பதுமாதிரி எழுதிக்கொண்டிருக்கும் எனக்கு தமிழ்மண நட்சத்திரம் என்பதே மிகச்சிறந்த அங்கீகாரம்.இதுவரைக்கும்  பதிவெழுதி வருவதற்கான அங்கீகாரமாக இதற்கு மேல் எதையுமே நான் எதிர்பார்க்கவில்லை எதிர்பார்க்கப்போவதுமில்லை . இதுவரைக்கும் பதிவெழுதிவருவதற்க்கு நண்பர்களாகிய உங்களின் தொடர்ச்சியான ஊக்கமே முக்கியகாரணம் . எவ்வளவு மொக்கையாக எழுதினாலும் அதை சகித்துக்கொண்டு கமெண்ட் போட்டு ஆதரவு தந்ததால்தான்.(அனுபவிங்க)

வழக்கம்போல தமிழ்மண நட்சத்திரங்கள் தங்களுடைய நட்சத்திரவாரத்தில் தங்கள்  துறை சார்ந்தபதிவுகள் எழுதுவது வழக்கம் . நானும் என் சார்பில் நான் சார்ந்த துறைகளான  மொக்கைத்துறை சார்ந்த பதிவுகளும்,  காதல்துறை சார்ந்த பதிவுகளும் மட்டுமே எழுதுவதென்று உறுதிகொண்டிருக்கிறேன். (அப்போ நீ ஒரு மொக்கை நட்சத்திரம்ன்னு சொல்லு )

நட்சத்திரவாரத்தின் முதல் (மொக்கை)பதிவாக நண்பர்கள் என்னிடம் கேட்ட கேள்விகளில் சில கேள்விகளை தேர்ந்தெடுத்து என்னுடைய பதிலை எழுதி ஸ்டார் பதில்களாக தந்திருக்கிறேன்,படிக்க ரசிக்க...(யார்யா அங்க மோர் பதிலான்னு கேட்குறது)

1.மச்சி உனக்கு பதில் தெரியாத கேள்வி எது? - டெர்ரர் பாண்டியன்

எனக்கு மட்டுமல்ல இந்த உலகத்தில் வாழும் மனிதர்கள் யாரிடம் வேண்டுமானாலும்  நீங்க எப்போ இறக்கபோறீங்கன்ற கேள்வியை கேட்டுப்பாருங்கள் பதிலே கிடைக்காது (மச்சி பதில் ஒகேவா)

2.பதிவுலகம் வந்து இரண்டு வருடம் ஆகிறது என்கிறீர்கள் இதுவரை யாரிடமாவது கோபப்பட்டதுண்டா? அப்படியெனில் அதற்கான காரணம் என்ன?- ஐயையோ நான் தமிழன் ( நல்லா பேர் வைக்கிறீங்கய்யா)

கோபப்பட்டதுண்டு , காரணம் கருத்துமோதல் என்பதை தவிர வேறு எதுவுமில்லை.

3.இந்த வருடத்தில் நீங்கள் படித்ததுலயே பிடித்த பதிவு எது? - கலா நேசன்

ரைட்டர் விசாவின் ஜயன்ஜ் பிக்ஜன் (எந்திரன்) எந்திரன் படம் பார்த்துவிட்டு இந்த பதிவையும் படித்துபாருங்கள் உங்களுக்கு சிரிப்பு வராவிட்டால் ஏதோ நோய் உங்களுக்கு இருக்கிறதென்று அர்த்தம்.என்னதான் எனக்குபிடித்த இயக்குனர் படம் என்றாலும் இந்த பதிவிலிருக்கும் படத்தைப்பற்றிய கசப்பான உண்மைகளை நச்சென்று எள்ளல் கலந்து சொன்னவிதம் பிடித்திருந்தது. பதிவு மட்டுமல்ல உங்களுக்கு பிடித்த பதிவர் யார் என்று கேட்டாலும் இவரைத்தான் சொல்லியிருப்பேன்.இவர் ஒரு வருங்கால சுஜாதா...

4.இந்த வருடத்தில் நீங்கள் எழுதியதிலேயே பிடித்த பதிவு எது? - கலா நேசன்

பொதுவா எல்லாருக்குமே தனக்கு வரப்போகிற மனைவி இப்படித்தான் இருக்கணும் என்ற எண்ணம் இருக்கும், அதே போல எனக்கு வரப்போகும் மனைவியும் என்னைமாதிரியே கலகலவென்று என்னிடம் செல்ல சண்டை போட்டுக்கொண்டு  ஜாலியா இருக்கவேண்டும் என்பதை மனதில் வைத்து எழுதிய என் மனைவிக்கொரு கடிதம் அதோடு சேர்ந்த From Mrs.வசந்த் , ஊருக்கு போயிருந்த மிஸஸ் வந்துட்டாங்க  இந்த மூன்று பதிவுகளுமே நான் மிகவும் ரசித்து எழுதியது அந்த வகையில் இந்த மூன்று பதிவுகளுமே எனக்கு பிடிக்கும்.

5.பதிவுலகம் உங்கள் பார்வையில் - மாணவன் 

என்னைப்பொறுத்தமட்டிலும் பதிவெழுதுவதென்பது என்'ண்ணங்களை வெளிப்படுத்தும் வடிகால். நிறைய பேருக்கு இது ஒரு டயரி , பலருக்கு வெகுஜன பத்திரிக்கைகளில் எழுதுவதற்க்கான முன்னோட்டம், புதிதாக எழுதுபவர்களுக்கு இது ஒரு ரஃப் நோட் ஆதலால் இங்கே நீங்கள் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் . ஒரே வரியில் சொல்லப்போனால் பதிவுலகம் எழுத்தார்வம் மிக்கவர்களுக்கு வரப்பிரசாதம்,நேரத்தை விலையாக கொடுத்து நல்ல நட்பை வாங்கிக்கொள்ளும் நண்பர்கள் நிறைந்த ஒரு சூப்பர்மார்க்கெட்.

6.உங்களிடம் உங்களுக்கு பிடித்தது - மாணவன்

தன்னம்பிக்கை, எது செய்தாலும் அதை மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்படுத்திக் காட்டும் தனித்துவம்.(முடியல ராசா , இடையில ஒண்ணு மிஸ்ஸாவுதே)

7.எதிர்கால லட்சியம் - மாணவன்

நிஜ வாழ்க்கையில் என் தாய்தந்தையருக்கு கடைசிவரை நல்ல மகனாக ,வரப்போகிற என் மனைவிக்கு நல்ல கணவனாக,என் பிள்ளைகளுக்கு நல்ல தகப்பனாக இருந்துவிடவேண்டும் அவ்வளவுதான்.

எழுத்துலக லட்சியம் இதுதான் , இதுவும் ஒரு வகையில் நீ என்னவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிவிடுவாய் என்ற எண்ணத்தில்.... கவிதை செங்கற்களைக்கொண்டு ஒரு காதல் தொழிற்சாலை கட்டி வருகின்றேன் வாசற்கதவு தட்டும் ஓசைக்காக காத்திருக்கிறேன்.... (பில்டப்பு எல்லாம் நல்லாத்தான் இருக்கு  புத்தகம் எழுதுறதுக்கெல்லாம் தகுதி,மச்சம், ராசி வேணும் மச்சி ஒரு தடவ உன் மூஞ்சிய கண்ணாடில நீயே பார்த்துட்டு உன்னோட லட்சியத்தை சொல்லியிருக்கலாம் ப்ச்)


8. உங்களைப்பற்றி ஒரே வரியில் - மாணவன்

திமிர்,கோபம்,நக்கல்,ப்ரியம்,காதல்,கற்பனை நிறைந்த ஒரு கவிதை நான்.(காசா பணமா அடிச்சுவிடு)

9.கற்பனை காதலன் விளக்கம் தருக - பாலாஜி சரவணா & கல்பனா


கற்பனை செய்து பாருங்கள் 
சொர்க்கம் இல்லையென
நீங்கள் முயன்றால் எளிதானது
நமக்கு கீழே நரகமில்லை
நமக்கு மேலே வானம்  மட்டும்
கற்பனை செய்து பாருங்கள்
மனிதர்கள்  யாவரும்
இத் தருணத்திற்காக வாழ்கிறார்களென ...

கற்பனை செய்து பாருங்கள்
எந்த நாடும் இல்லையென
இதை ( கற்பனை ) செய்வது கடினமானது அல்ல
எதன் பொருட்டும்  கொலையோ
அல்லது
மரிக்கவோ  வேண்டாம்
(மேலும் ) எந்த மதமும் இல்லை
கற்பனை செய்து பாருங்கள்
மனிதர்கள்  யாவரும்
அமைதியாய்  வாழ்கிறார்களென ........

நீங்கள் சொல்லக்கூடும்
'நான் கனவு காண்பவன் ' என
ஆனால் நான் ஒருவன் மட்டுமல்ல....
நான் நம்புகிறேன்
என்றாவது (ஒருநாள் )
நீங்கள் எங்களுடன்  சேர்வீர்களென
(அதன்முதல் )
உலகம் ஒன்றாகும்

கற்பனை செய்து பாருங்கள்
(உங்களிடம்) எதுவும் இல்லையென்று
உங்களால் அப்படி  இருக்க முடியுமாயென
நான் ஆச்சர்யபடுகிறேன்
பேராசையோ  அல்லது பட்டினியோ
தேவையில்லை
மாந்தர்களிடையே  சகோதரத்துவம்
கற்பனை செய்து பாருங்கள்
மனிதர்கள்  யாவரும்
உலகின் யாவையையும்
பகிர்வதாய்

நீங்கள் சொல்லக்கூடும்
'நான் கனவு காண்பவன் ' என
ஆனால் நான் ஒருவன் மட்டுமல்ல....
நான் நம்புகிறேன்
என்றாவது (ஒருநாள் )
நீங்கள் எங்களுடன்  சேர்வீர்களென
(அதன்முதல் )
உலகம் ஒன்றாய் வாழும்

John Lennon...

9.இந்த இரண்டு வருடத்தில் நீங்கள் சந்தித்த நெகிழ்ச்சியான மற்றும் மோசமான சம்பவங்கள் என்னென்ன? - பிரியமுடன் ரமேஷ்

நெகிழ்ச்சியான சம்பவங்கள் நிறைய நடந்திருக்கின்றன எதை விடுவது எதை குறிப்பிடுவது , மோசமான சம்பவங்கள் எதுவும் நினைவில் இல்லை.

10. உனக்கு கல்யாணம் எப்போ? - ரமேஷ் & எல் .கே.

இலியானாகிட்ட தேதி கேட்டிருக்கேன் மச்சிஸ், தேதி கிடைச்சதும் கல்யாணம்தான்.

11.பெண்களுக்கு உன்னிடம் அதிகம் பிடித்தது(உடம்பில்) - மயாதி(என்னை மாட்டிவிடறதுலயே இருடா)

மீசை 

12. ஒரே நேரத்தில் வேறு வேறு திசைகளிலிருந்து மூன்று அழகான பெண்கள் வரும்போது மூன்று பேரையும் ஒரே நேரத்தில் பார்க்கமுடியவில்லையென்று வருத்தப்படுவாயா இல்லை ஒருத்தியின் அழகை மட்டும் ரசிப்போம் என்று நினைப்பாயா? - மயாதி (உனக்கு இப்படில்லாம் கொஸ்டின் கேக்கச்சொல்லி யார் சொல்லிக்கொடுத்தா)

ஒருத்தியின் அழகை மட்டும் ரசிப்பேன் அப்படின்னு சொல்லி என்னை நல்லவனா காட்டிக்கிடறேன் . (கொஞ்சம் ஓவராத்தான் போய்க்கிட்டு இருக்கு)

13.நான் கேட்கும் கேள்விக்கு தெரியாது என்று பதில் சொல்லக்கூடாது, தெரியும் என்ற வார்த்தைக்கு எதிர் கருத்தென்ன? - யோ வாய்ஸ் யோகா ( நீ அறிவாளி மச்சி)

Don't Know (நீ தமிழ்லதான் விடை சொல்லணும்ன்னு சொல்லலியேலியேலியேயே)

14. நீ இதுவரைக்கும் காதலித்த பெண்களின் எண்ணிக்கை - மயாதி


அசின்,த்ரிஷா,சுனைனா,இலியானான்னு நாலு பேர் மச்சி ( சாவித்ரி சரோஜாதேவியெல்லாம் விட்டுட்ட ஏன்)

15.தமிழில் உங்களுக்கு பிடிக்காத வார்த்தை எது? - நாஞ்சில் மனோ

கோழை ( பயந்து பயந்து வாழ்வதைவிட செத்துவிடுவது மேல்)
கோழை (பயந்து பயந்து முழுங்குவதைவிட துப்பிவிடுவது மேல்)

16.விஜய் நடிச்ச ப்ரியமுடன் வசந்துக்கும் இந்த ப்ரியமுடன் வசந்துக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா? - வெறும்பய

அந்தப்படத்துல நடிக்கிறப்போ அவரும் பேச்சலர் இந்த ப்லாக்ல எழுதுற நானும் பேச்சலர் என்ற சம்பந்தத்தை தவிர்த்து நான் அவரின் தீவிர ரசிகர் என்ற சம்பந்தமும் இருக்கிறது...


17.நீங்க எழுதியதிலேயே அடடா இன்னும் கொஞ்சம் வித்தியாசமா எழுதியிருக்கலாமே என்று யோசிக்கவைத்த பதிவு எது? - அமைதிச்சாரல்

நான் எழுதிய எல்லாமே கொஞ்சம் வித்தியாசம்தான் இருந்தாலும் நீங்கள் சொன்னதுபோல் இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக யோசித்து எழுதியிருக்கலாம் என்று நினைத்த பதிவு சின்ன வயசுல இருந்தே திங் பண்ணுனது இன்னும் கொஞ்சம் நல்லா திங் பண்ணியிருந்தா எக்ஸ்ட்ராஃபிட்டிங்ஸ்  நிறை(வா)ய வந்திருக்கும்.(ப்ளீஸ் அந்த பதிவப்போய் பார்த்து வயிறைக்காணோம் உசிரைக் காணோம்ன்னா நான் பொறுப்பில்ல)

18. குண்டக்கான்னா என்ன மண்டக்கான்னா என்ன? - ஹரீஷ் & சக்தி

குண்டக்கா - குண்டு அக்கா , மண்டக்கா - மண்டு அக்கா ( ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா ஓவர் மொக்கைடா )

19. ப்ரியமுடன் வசந்த்ன்னு சொல்றாங்களே அது யாரு - பாலாஜி சரவணா(நல்லா கேக்குறாய்ங்கயா கொஸ்டீனு)`


அவன் ஒரு அரைவேக்காடுங்க ( ஓஹ் எப்ப வேவாரு)


20. அவ்ளோதானா ? இன்னும் இருக்கா? - தங்கம் பழனி


கொல வெறியில இருந்திருக்கீங்க... அவ்ளோதாங்க முடிஞ்சது ( அப்பாடா ஆள விட்டாண்டா சாமி)


                                        
,

Post Comment