தல, தளபதி வெடிகள்..!

| November 4, 2010 | |

பிரபல பதிவர்கள் எல்லாம் தீபாவளி ஸ்பெசல் போஸ்ட் போட்டுட்டாங்க ஏதோ என்னால முடிஞ்ச தீபாவளி ஸ்பெசல் போஸ்ட்!


தலவெடி : இந்த வெடியை பத்தவைச்சதும் ஆரம்பத்தில் சரசர படபட என்று பயங்கர சத்தத்தோட வெடிக்க போறது மாதிரியே பெரிய ஓபனிங் கொடுக்கும் அதாங்க சீன் போடும் அப்பறம் உங்க வீட்டில் நின்று கொண்டிருக்கும் காரோ பைக்கோ அதற்கடியில் சென்று வழக்கம் போலவே புஷ்வாணமாகிவிடும். 

தளபதி வெடி : இந்தவெடி வாங்குனதுல இருந்தே முதல்ல இந்த வெடியைத்தான் வெடிக்கணும்ன்னு இருக்கும் ஏன்னா வாங்குறப்போ அவ்ளோ பில்டப் கொடுத்துருப்பாங்க. பத்த வச்சதும் சும்மா குருவி மாதிரி பறந்து பறந்து வெடிக்கும் சில நேரம் தையதக்கா தையக்கா என்று டான்ஸ் ஆடிக்கிட்டே வெடிக்கும் . சத்தம் ஊசிவெடி மாதிரி குறைவுதான் ஆனா ஊரையே கூட்டும் . குழந்தைகள் எல்லாருக்கும் பிடித்த வெடி.
ரோபோ வெடி: இந்த வெடி சந்தைக்கு புதுசா வந்துருக்குற வெடி புதுசா இதுல எவ்வளவு சத்தத்தோட வெடிக்கும் எவ்வளவு நேரம் வெடிக்கும் அப்படின்னு ப்ரொக்ராம் எல்லாம் செட் செய்துருப்பாங்க அதுமட்டுமில்லாம நீங்க சொல்ற இடத்துல போய்தான் வெடிக்கும் இந்த தீபாவளிக்கு பத்த வச்சா அடுத்த தீபாவளி வரைக்கும் கூட வெடிக்கும் , விலை அதிகம் . கேப்டன் வெடி : இந்த வெடி கொஞ்சம் பழசுதான் தனியா பத்தவச்சாத்தான் வெடிக்கும் வெடிக்குறப்போ அந்தவெடி எங்க தயாரிச்சது யார் தயாரிச்சாங்க எவ்வளவு மருந்து இருக்கு, தயாரிக்க ஆன செலவு இந்த கணக்கெல்லாம் சொல்லிக்கிட்டே வெடிக்கும்.வெடிக்கும்போது பக்கத்துல எதாவது சுவர் இருந்தா அதுல போய் மோதி வெடிக்கும்.


மேதை வெடி : இந்த வெடி பச்சை மஞ்சள் சிவப்புன்னு வித விதமான கலர்ல பேக் பண்ணியிருப்பாங்க . ரொம்ப ரொம்ப பழையமாடல் வெடி , வெடிக்கும் போது பாட்டு படிக்கும். அதுமட்டுமில்லாமல் வீட்டு வாசலோ மாடியோ எங்க பத்தவச்சாலும் வெடிக்காது உங்க வீட்டு மாட்டுகொட்டகையில பத்தவச்சா மட்டுமே வெடிக்கும் .வெடிவேல் வெடி : பேர்லயே வெடியிருக்குற வெடி மார்க்கெட்ல இந்த வெடிக்குத்தான் ரொம்பவே மவுசு.வெடிக்கறப்போ நம்மள நிஜமாவே சிரிக்கவைக்கும் . குடும்பத்துல இருக்குற எல்லாருமே ஆசையா வெடிக்கிற வெடி.சொம்பு வெடி: இந்த வெடி கொஞ்சம் வித்யாசமான வெடிங்க இதை பத்தவைக்க நெருப்பு தேவையில்லை இதோட திரிக்கு நீங்க முத்தம் கொடுத்தாத்தான் வெடிக்கும் அப்படி வெடிக்குறப்போ உங்க உதட்டுக்கு சேதாரம் ஆகும் நிலையிருப்பதால் இந்த வெடியை யாரும் வாங்குவது கிடையாது மொத்தத்துல இது ஒரு போணியாகாத வெடி.ஜெ.வெடி : இந்த வெடி வெடிக்கிறப்போ பச்சைகலர்ல வெடிக்கும், உங்க வீட்டுல பத்தவச்சா உங்களுக்கு பிடிக்காத எதிர்த்த வீடு பக்கத்துவீடுன்னு எல்லாபக்கமும் போய் படபடன்னு வெடிச்சு பயமுறுத்தும், பத்தவச்ச அடுத்தசெகண்டே வெடிக்கும்.வசந்த் வெடி :________________________________ _____________________________________________
______________________________________________
______________________________________________
______________________________________________

(வழக்கம் போலவே கலாய்த்தல் உங்கள் சாய்ஸ்)

நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள் .


Click to get cool Animations for your MySpace profile
MySpace Layouts!

Post Comment

72 comments:

Trackback by kavisiva November 4, 2010 at 2:42 AM said...

வசந்த் வெடி: இது கிராஃபிக்ஸ் வெடி. பத்த வச்சதும் நம்ம தலைக்கு மேலயே கிராஃபிக்ஸ் வேலையெல்லாம் காமிச்சு கல கலன்னு வெடிக்கும் :).

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் வசந்த்!

Trackback by Philosophy Prabhakaran November 4, 2010 at 3:26 AM said...

// வெடிக்குறப்போ அந்தவெடி எங்க தயாரிச்சது யார் தயாரிச்சாங்க எவ்வளவு மருந்து இருக்கு, தயாரிக்க ஆன செலவு இந்த கணக்கெல்லாம் சொல்லிக்கிட்டே வெடிக்கும் //

இந்த இடத்தை வெகுவாக ரசிச்சேன்...

நீங்க விஜய் விசிறி போல... அதான் ரொம்ப பாலிஷா எழுதியிருக்கீங்க...

Trackback by a November 4, 2010 at 3:31 AM said...

வசந்த் வெடி: இது கொளுத்துனா வெடிக்காது அதுக்கு பதிலா வானத்துல ஆர்ட்டின் symbola மத்தப்பா தெரியும்............

தீபாவளி வாழ்த்துக்கள் ............

Trackback by Unknown November 4, 2010 at 4:28 AM said...

வசந்த் வெடி : இது வித்தியாசமான வெடி. எல்லா வெடியும் பத்த வச்சதுக்கு அப்புறம் தான் வெடிக்கும். இது வெடிச்சுட்டு அப்புறம் மற்ற வெடிகளைப் பற்ற வைக்கும். (தொடர் பதிவு).

தீபாவளி வாழ்த்துக்கள் வசந்த்.

Trackback by மாணவன் November 4, 2010 at 4:55 AM said...

வசந்த் வெடி : உங்க மனசுல எப்படி கற்பனை இருக்கோ அதுபோலவே வெடிக்கும் ரொம்ப ஸ்பெசலான வெடி....

செம சரவெடி அண்ணே,

உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் மற்றும் பதிவுலக நண்பர்கள்,வாசகர்கள் அனைவருக்கும் எனது இனிய இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்

வாழ்க வளமுடன்

நன்றி
என்றும் நட்புடன்
மாணவன்

Trackback by எல் போர்ட்.. பீ சீரியஸ்.. November 4, 2010 at 5:02 AM said...
This comment has been removed by the author.
Trackback by எல் போர்ட்.. பீ சீரியஸ்.. November 4, 2010 at 5:02 AM said...

//நீங்க சொல்ற இடத்துல போய்தான் வெடிக்கும்//

உங்க அட்ரஸ் சொல்லுங்க..

மேதை வெடி - ஹாஹ்ஹா..

வசந்த் வெடி - பத்த வச்சவுடனே, நீங்க கற்பனை பண்ணி இருக்காத அளவுக்கு, விதம் விதமா வெடிக்கும்!

Trackback by ராமலக்ஷ்மி November 4, 2010 at 5:53 AM said...

கேப்டன், மேதை வெடிகள்..

"டமால் டுமீல்:)"

தீபாவளி வாழ்த்துக்கள் வசந்த்!!

Trackback by ஜெய்லானி November 4, 2010 at 5:58 AM said...

வெடின்னா இதான்பா வெடி முக்கியமான தாத்தா வெடியை விட்டுடீங்களே ஆட்டோ பயமா ..ஹா..ஹா..!! :-))

Trackback by Aathira mullai November 4, 2010 at 6:22 AM said...

வசந்த் வெடி..
இது வெடிக்கவே வெடிக்காது...

பத்தவைக்காமலேயே எல்லார் மனசிலேயும் மத்தாப்பாபூவாய் பூக்கும். கலர்ஃபுல் வெடி. வெடிக்காத வெடி..

இந்தப் பதிவை ரொம்ப ரசிச்சேன். இப்படி காமெடி கலந்த சிந்தனை எப்படித்தான் வ்ருதோ!!!!

தங்களின் முதல் (என் வலைப்பூவில்) தீபாவளி வாழ்த்துக்கு நன்றி...

என்றும் இதே சிரிப்பு, சிந்தனை சரவெடியைத் தந்து எம் மனதைக் கொள்ள என் இதயக்கனிந்த தீபாவளி நவாழ்த்துக்கள்..வசந்த்.

Anonymous — November 4, 2010 at 7:19 AM said...

வசந்த் வெச்ச வெடி எல்லாமே செம காமெடி வெடி...
.
அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

Trackback by Prathap Kumar S. November 4, 2010 at 7:54 AM said...

கேப்டன் வெடியும், ராமராஜன் வெடியும் கலக்கல்....

Trackback by சிங்கக்குட்டி November 4, 2010 at 7:56 AM said...

தீபாவளி குசி வந்துருச்சு போல...வாழ்த்துக்கள் :-).

Trackback by கார்க்கிபவா November 4, 2010 at 8:15 AM said...

வசந்த் வெடி : அப்படி ஏதும் இல்லையே. வசந்த் கடிதான் இருக்கு என்கிறார் கடைக்காரர்

சூப்பர் சகா..கலக்கல்ஸ்..

ஹேப்பி தீபாவளி.. ஆனா நமக்கு திசம்பர் 3 தான் தீபாவளி :))

Trackback by கார்த்திகைப் பாண்டியன் November 4, 2010 at 8:16 AM said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் வசந்த்..:-)))

Trackback by தமிழ் உதயம் November 4, 2010 at 9:02 AM said...

அசத்தல்.

'தீபாவளி வாழ்த்துகள்.

Trackback by Jaleela Kamal November 4, 2010 at 9:17 AM said...

sriyaana saravedi hi hi

Trackback by Starjan (ஸ்டார்ஜன்) November 4, 2010 at 10:54 AM said...

கேப்டன் வெடியும் ராமராஜன் வெடியும் டாப்பு..

என் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

Trackback by செல்வா November 4, 2010 at 10:58 AM said...

கேப்டன் வெடியப் படிச்சதுமே என்னால சிரிப்ப அடக்க முடியல ..!
நானும் ஒரு கேப்டன் வெடியாவது வாங்கி வெடிக்கனும் ..!!

Trackback by செல்வா November 4, 2010 at 10:59 AM said...

சொம்பு வெடி இப்படி கூட வெடிக்கும்னு கேள்விப்பட்டேன் ..
பத்த வச்சா உடனே விரல் வித்தை பன்னுமாம்ல ..

Trackback by அருண் பிரசாத் November 4, 2010 at 11:40 AM said...

மாமு!

செல்லாது செல்லாது!

விஜய்ய ஒழுங்கா கலாய்க்கல... இது போங்கு ஆட்டம்

Trackback by sakthi November 4, 2010 at 12:32 PM said...

அருமை வசந்த்

Trackback by 'பரிவை' சே.குமார் November 4, 2010 at 1:08 PM said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

Trackback by எஸ்.கே November 4, 2010 at 1:53 PM said...

அருமை!
தங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் என் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்...

Trackback by எம் அப்துல் காதர் November 4, 2010 at 3:08 PM said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் வசந்த்!!

Trackback by மயாதி November 4, 2010 at 3:55 PM said...

வசந்த் வெடி..
இந்த வெடியை பத்த வச்சா அது தான் வெடிக்காமல் போய் ஊரில இருக்கிற வெடியை எல்லாம் வெடிக்க வைத்துவிடும். அநேகமான வெடிகள் கன்னிப்பெண்கள்
பத்த வச்சால் மட்டுமே வெடிப்பதாக எல்லோரும் குறை படுகிறார்கள்.//

அசத்துறா மாப்பு

Trackback by மாதேவி November 4, 2010 at 3:59 PM said...

வசந்த் வெடி....சிரி...ப்...பூ.

இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள்.

Trackback by Mukil November 4, 2010 at 4:31 PM said...

நல்ல சரவெடி பதிவு...

அனைவருக்கும் தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துகள்!

Trackback by பன்னிக்குட்டி ராம்சாமி November 4, 2010 at 7:45 PM said...

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

Trackback by பன்னிக்குட்டி ராம்சாமி November 4, 2010 at 7:48 PM said...

அதென்னது தளபதி வெடி மட்டும் சரியா வெடிக்கல? இது அநியாயம், அராஜகம், அழிச்சாட்டியம்! நீங்க போடலேன்னா விட்ருவமா பங்காளி, நாங்க போடுவோம்ல?

Trackback by பன்னிக்குட்டி ராம்சாமி November 4, 2010 at 8:24 PM said...

தளபதி வெடி: வாங்கும் போதே கடைல எச்சரிக்கை பண்ணிடுவாங்க,நெறைய பின்விளைவுகள் ஏற்படும்னு! அதையும் மீறி நம்ம பங்காளி வசந்த்து மாதிரி ஆளுக வாங்கிட்டு போகும்.
இந்த வெடிய வெடிச்சா புசுபுசுன்னு கொஞ்ச நேரம் ஒதறிட்டு.. டேய்ய்ய்ய்ய்ய்ய்னு ஒரு சத்தம் போடும் அதுலேயே பாதிப்பேருக்கு புடிங்கிரும்! அப்புறமும் ஒரு சவுண்டு கொடுக்கும் பாருங்க....! சைலன்ஸ்.......ன்னு! அதுல நம்ம பங்காளி மாதிரி ஆளுகளும் தெரிச்சி ஓடிடும்! அப்புறமமந்த தெருவிலேயே 2 நாளுக்கு ஆள் நடமாட்டம் இருக்காது!

Trackback by பன்னிக்குட்டி ராம்சாமி November 4, 2010 at 11:06 PM said...

இளையதலைவலி வெடி: பத்தவெச்ச உடனே எலிபுழுக்க போட்ட மாதிரி மொண மொணன்னு சத்தம் வரும்... அப்புறம் அப்பிடியே புஸ்ஸுன்னு அப்பிடியே நமுத்துப் போயிடும்...!

Trackback by பன்னிக்குட்டி ராம்சாமி November 4, 2010 at 11:12 PM said...

இளையதலவலி வெடி: இந்த வெடி கொஞ்சம் வித்தியாசமானது, பத்த வெச்ச உடனே வெடிக்காது, பறந்து போயி சங்கவி வீட்டு பக்கத்துலதான் வெடிக்கும்!

Trackback by பன்னிக்குட்டி ராம்சாமி November 4, 2010 at 11:15 PM said...

இளையதலைவலி வெடி: இது பத்தவெச்ச உடனே ஒரு சுத்து சுத்தும், அப்பிடியே காத்தடிச்சு குப்பைய பறத்தி தீப்பொறி பறக்க பாய்ந்துவரும், ஏதாவது ஷட்டர், கதவு, கேட்டு இருந்தா துளைத்து கட் பண்ணிட்டு வந்து ..... புஸ்ஸூன்னு விழுந்துடும்! அப்பவும் வெடிக்காது, நீங்க கை தட்டனும் அப்போதான் வெடிக்கும்!

Trackback by பன்னிக்குட்டி ராம்சாமி November 4, 2010 at 11:18 PM said...

வசந்த் வெடி: பத்த வெச்ச உடனே ஏதாவது அழகான பொண்ணுங்க வருதான்னு பாக்கும், வந்த உடனே கலர் கலரா பூப்பூவா சொறியும்....!

Trackback by பன்னிக்குட்டி ராம்சாமி November 4, 2010 at 11:21 PM said...

வசந்த் வெடி: பத்த வெச்ச உடனே வெடிக்காது, யாராவது வந்து கவிதை படிச்சாதான் வெடிக்கும், அதுவும் சத்தமா வெடிக்காது, யாரோ சிணுங்கி சிரிக்கிறமாதிரிதான் இருக்கும்!

Trackback by Unknown November 4, 2010 at 11:21 PM said...

கலக்கல்..

happy diwali

Trackback by பன்னிக்குட்டி ராம்சாமி November 4, 2010 at 11:24 PM said...

வசந்த் வெடி: இதவும் பத்த வெச்ச உடனே வெடிக்காது, இளைய தளபதி விஜய் படம் வந்துடுச்சுன்னு யாராவது சொன்னாத்தான் வெடிக்கும்!

Trackback by பன்னிக்குட்டி ராம்சாமி November 4, 2010 at 11:26 PM said...

வசந்த் வெடி: இது பத்த வெச்ச உடனே இளைய தளபதி விஜய் வாழ்கன்னு கத்திட்டு புஸ்ஸூன்னு போய்டும்!

Trackback by சுசி November 5, 2010 at 2:20 AM said...

வசந்து.. தளபதி வெடி எனக்கு ஒரு பார்சேல்ல்ல்ல்ல்ல்..

சூப்பர் தான் போங்க..

என்னா மூளையோ.. இப்டி சிந்திக்குது :))

Trackback by சுசி November 5, 2010 at 2:21 AM said...

உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் உ பி.

Trackback by பவள சங்கரி November 5, 2010 at 4:11 AM said...

சூப்பர் தீபாவளி.....கலக்குங்க...வாழ்த்துக்கள்.

Anonymous — November 5, 2010 at 6:40 AM said...

கலக்கல் பதிவு வசந்த்! :)
உங்களுக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!

Trackback by venkat November 5, 2010 at 7:10 AM said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Trackback by பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி November 5, 2010 at 7:30 AM said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

Trackback by ஜெயந்த் கிருஷ்ணா November 5, 2010 at 12:20 PM said...

தங்களுக்கும், நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் என் இதயங்கனிந்த திபாவளி நல்வாழ்த்துக்கள்....

Trackback by இமா க்றிஸ் November 5, 2010 at 2:06 PM said...

;))

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் வசந்த் சார்.

அன்புடன் இமா

Trackback by Paul November 5, 2010 at 2:29 PM said...

நல்ல எழுதி இருக்கீங்க வசந்த்!! தீபாவளி வாழ்த்துக்கள்..!! :)

Trackback by Unknown November 5, 2010 at 2:30 PM said...

நான் இந்த ஆட்டத்துக்கு வரல. எங்கூர்ல பனி பெய்யுது. அதோட இங்க பட்டாசு வெடிச்சா உள்ள பொய் களி திங்கணும் மூணு மாசத்துக்கு.

என் தளத்துக்கு வந்த வராத மற்றும் நான் ஓட்டு போட்டும் எனக்கு ஓட்டு போடாத நல்லவர்களுக்கும்

தீபாவளி வாழ்த்துக்கள்

Trackback by Unknown November 5, 2010 at 5:52 PM said...

சரவெடி நக்கல் .. கலக்குங்க மாப்பு ..

Trackback by Ravi kumar Karunanithi November 5, 2010 at 6:23 PM said...

very nice joke pa.. thanks 4 sharing...

Trackback by Unknown November 5, 2010 at 6:49 PM said...

Nice!

Trackback by சாந்தி மாரியப்பன் November 5, 2010 at 9:01 PM said...

கலக்கல் வெடிகள் :-))))

வசந்த் வெடி: பத்த வெச்சா, மாத்தி மாத்தி யோசிச்சு,.. டிசைன் டிசைனா வெடிக்கும். எப்படி வெடிக்கும்ன்னு எதிர்பார்க்கவே முடியாது :-))

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Trackback by smart November 5, 2010 at 11:27 PM said...

வசந்த் வெடி:பிடிக்காத கமெண்ட் போட்டா டெலிட் பண்ணிட்டு வெடிக்கும்

Anonymous — November 6, 2010 at 8:32 PM said...

[ma]super[/ma]

Trackback by நீச்சல்காரன் November 6, 2010 at 10:21 PM said...

[im]http://3.bp.blogspot.com/_e_TNZOEzeAo/TNWcTZdGTiI/AAAAAAAAAZo/N8a6qabxS6E/s320/laugh.gif[/im]

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 6, 2010 at 10:26 PM said...

@ நீச்சல் காரன் பாஸ் அந்தகோட்ஸ் HTML
ல போய் சேர்த்தும் எனக்கு வரலியே நான் என்ன செய்ய ரொம்ப பிரயாசப்பட்டேன் பாஸ் ப்ச் :(

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 6, 2010 at 10:49 PM said...

@ கவி சிவா திரும்பவும் ஃபுல்ஃபார்ம்க்கு வந்துட்டீங்க போல நன்றிங்க :)))

@ பிரபாகரன் யெஸ் நான் விஜய்ரசிகன் தான் பாஸ் நன்றி!

@ யோகேஷ் ரைட்டு பாஸ்! :))))))

@ கலா நேசன் ரொம்பவும் சரி நன்றிங்க
:))

@ மாணவன் மிக்க நன்றி தலைவா !தீபாவளிக்கு சைட்டெல்லாம் சைட்டடிச்சீங்களா?

@ சந்தனா கிர்ர்ர்ர்ர் எனக்கே வெடி வைக்குறீங்களா? நடக்கட்டும் :))

@ ராமலக்ஷ்மி மேடம் மிக்க நன்றி !

@ ஜெய்லானி வாங்க ஃப்ரண்ட் ஆட்டோ அனுப்பித்தான் பார்க்கட்டுமே!

@ ஆதிரா ஆஹா நல்லா சந்தோஷமா கொண்டாடினீங்களா ஆதிரா?

@ தமிழரசி மேடம் நிஜம்தானே சொல்றீங்க அப்றம் போன்ல மிரட்டாதீங்க தாயி!

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 6, 2010 at 11:01 PM said...

@ பிரதாப் நன்றி மாப்பு :))

@ சிங்ககுட்டி நன்றி பாஸ் :)

@ கார்க்கி :))))))) கடிக்கிற பழக்கம் உங்ககிட்ட இருந்து பழகுனதுதானே சகா :) யெஸ் டிசம்பர்தான் தளபதிதீபாவளி!

@ கார்திகேயபாண்டியன் நன்றி தல :)

@ தமிழுதயம் நன்றி சார் :)

@ ஜலீலா நன்றி சகோ :)

@ ஸ்டார்ஜன் நன்றி நண்பா :)

@ செல்வக்குமார் கேப்டன்வெடி கிடச்சதா இல்லியா? :)))) நன்றி பாஸ்

@ அருண்பிரசாத் விஜயை கலாய்ச்சே ஃபேமஸாகலாம்ன்னு ஒரு குரூப் கிளம்பியிருக்கே அது பத்தலியா மாம்ஸ்? நன்றி மாம்ஸ் :)))

@ சக்தி நன்றி சகோ :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 6, 2010 at 11:07 PM said...

@ குமார் நன்றிங்க :)

@ எஸ் கே நன்றி பாஸ் :))

@ அப்துல்காதர் நன்றி நண்பா :)

@ மயாதி அதானே தண்ணியகுடிடா தண்ணியகுடி :)

@ மாதேவி மேடம் நன்றிங்க :)

@ முகிலரசி நன்றி மேடம் :)

@ பன்னிக்குட்டி ராமசாமி பேரும் மொக்கை ஆளும் மொக்கை பின்னூட்டம் அதவிட மொக்கை போங்க போய் ஜெலுசில் வாங்கி சாப்பிடுங்க பாசு...

@ சுசி நன்றிங்க :)

@ நித்திலம் நன்றிங்க :)

@ மீனாக்ஷி தீபாவளி அங்க எப்படி கொண்டாடுனீங்க? நன்றிங்க :))

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 6, 2010 at 11:17 PM said...

@ வெங்கட் நன்றி பாஸ் :)

@ ப.மா.மே.ப.நரி ஸ்ஸ்ஸ்ஸப்பா இன்னாங்கபாஸ் இது உங்களுக்கே அடுக்குமா? நீங்க என்ன செய்வீங்க எல்லாம் என் மாப்ள வெளியூர் உங்கள கெடுத்து வச்சுருக்கான் அவனச்சொல்லணும் நன்றி பாஸ் :))

@ ஜெயந்த் மிக்க நன்றி தல!:))

@ இமா நன்றி ரீச்சர் நியூஸில எப்படி தீபாவளி கொண்டாடுனீங்க?

@ பால் நன்றி பாஸ் :))

@ விக்கி உலகம் நான் மட்டும் என்னவாம் வெளியில வெடிச்சா போலீஸ் புடுச்சுடுவான்னுதான தினமும் ப்ளாக்ல வெடிக்கிறேன் சிரிப்பு வெடி :)) நன்றி தல !

@ செந்தில் மாம்ஸ் நன்றி மாம்ஸ் :))

@ தோசை நன்றிங்க :)

@ ஜீ நன்றி பாஸ் :)

@ சாரல் மேடம் ஹஹஹா நன்றி சகோ :))

@ ஸ்மார்ட் இதுபோல பேர் வச்சு கமெண்ட் போட்டீங்கன்னா ஏன் டெலிட் பண்றோம் அனானியா கமெண்ட் போட்டா அப்படித்தான் டெலிட் பண்ணுவேன் போதுமா போய்யா போ...

@ தமிழ் வாழ்க நன்றிங்க அந்த கோட்ஸ் எனக்கு வொர்க் ஆவல :(

@ நீச்சல்காரன் எனக்கு எப்படியாவது அந்த கோட் வேலை செய்ய வச்சு கொடுங்க பாஸ் சின்ன ரிக்கொஸ்ட் :))

Trackback by நீச்சல்காரன் November 7, 2010 at 12:12 AM said...

வசந்த்,
ஒரு வழியாக கண்டு பிடித்துவிட்டேன். உங்கள் ப்ளாக் templateல் உள்ள மிக சிறிய மாற்றமே இதற்கு காரணம்
உங்களுக்கான தீர்வுகள் இரண்டு
1. உங்கள் templateல் சென்று 'comment-body ' இதை தேடுங்கள் ஒன்றே ஒன்று தான் இருக்கும் அதில் உள்ள இடை வெளியை[space] அழிக்கவும்.[or replace with 'comment-body']
2. கண்டுபிடிக்க முடியாவிட்டால் சொல்லவும் எனது ஸ்கிரிப்ட்டில் கூடுதலாக சில வரிகளை சேர்த்துக் கொள்கிறேன்.
நாளை உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன்.

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 7, 2010 at 6:05 AM said...

நீச்சல்காரன் பாஸ் இல்லியே நீங்க சொல்றமாதிரி இல்லியே:(

dd class='comment-body collapseable'

இப்பிடித்தான் ஒண்ணு இருக்கு இதை என்னசெய்யணும்?

Trackback by நிலாமகள் November 7, 2010 at 1:32 PM said...

தீபாவளிக்கு நாங்க வாங்கி வெடிச்சதை விட உங்க ப்ளாக்-ல வெடிச்ச வெடிகள் தான் செம சவுண்ட் தம்பி...

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 7, 2010 at 7:50 PM said...

@ நீச்சல்காரன் பாஸ் ரொம்ப ரொம்ப நன்றி பாஸ் திரும்ப நீங்க எனக்கு மெயில்ல அனுப்பிய கோட் வொர்க் ஆவுது

நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன் பாஸ் Once Again Thank You Very much Boss

[im]http://3.bp.blogspot.com/_TWFTNARrwjI/TNbKPo3469I/AAAAAAAAEZQ/f23IA5uhvCE/s1600/thank.JPG[/im]

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 7, 2010 at 8:02 PM said...

@ நிலா மகள்

சகோ இது நீங்களான்னு செக் பண்ணிக்கோங்க :)))))

[im]http://www.dezignwithaz.com/images/moon-girl-wall-decals.png[/im]

Trackback by erodethangadurai November 7, 2010 at 8:17 PM said...

உங்க கவிதைகள் தான் கலக்கல் என்று நினைத்தால் , உங்கள் காமெடி அனைத்தும் சரவெடியாக உள்ளது...! வாழ்த்துக்கள்..!

Trackback by கதிர்கா November 8, 2010 at 6:54 PM said...

/*வெடிக்கும்போது பக்கத்துல எதாவது சுவர் இருந்தா அதுல போய் மோதி வெடிக்கும்*/

ஹா..ஹா... அருமை

Anonymous — November 10, 2010 at 6:08 AM said...

இங்க என்ன பெரிய தீபாவளி வசந்த், ஒண்ணுமில்லை. :(
அட! ப்ரியமுடன் வசந்த், புன்னகை வசந்த் ஆயிட்டாரே! நல்லா இருக்கு! :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 13, 2010 at 8:32 PM said...

//ஈரோடு தங்கதுரை said...
உங்க கவிதைகள் தான் கலக்கல் என்று நினைத்தால் , உங்கள் காமெடி அனைத்தும் சரவெடியாக உள்ளது...! வாழ்த்துக்கள்..!//

நன்றி தங்கதுரை

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 13, 2010 at 8:33 PM said...

//கதிர்கா said...
/*வெடிக்கும்போது பக்கத்துல எதாவது சுவர் இருந்தா அதுல போய் மோதி வெடிக்கும்*/

ஹா..ஹா... அருமை
//

நன்றி கதிர்கா (பாஸ் பெயர் விளக்கம் ப்ளீஸ்)

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 13, 2010 at 8:34 PM said...

//மீனாக்ஷி said...
இங்க என்ன பெரிய தீபாவளி வசந்த், ஒண்ணுமில்லை. :(
அட! ப்ரியமுடன் வசந்த், புன்னகை வசந்த் ஆயிட்டாரே! நல்லா இருக்கு! :)
//

நன்றி மீனாக்ஷி ஏன் புது ட்ரெஸ்ஸாவது எடுத்திருப்பீங்களே!