உன்னையெல்லாம் திருத்தவே முடியாதுடா...

| November 27, 2010 | 41 comments |
எனக்கு உன் மீதான காதல் கொஞ்சம் அதிரசமும் முறுக்கும் சேர்ந்து சாப்பிடுவது போன்ற அனுபவத்தை கொடுக்கிறது என்றதும் கொல்லென சிரித்துவிட்டாள் "போடா தின்னிப்பண்டாரம்" என்றவாரே, ஆம் உன் மனசாட்சிக்கு மட்டுமே தெரியும் நான் உன்னை மட்டுமே தின்னும் தின்னிப்பண்டாரமென்று...


ஒவ்வொருநாளும் ரொம்ப அழகாகிகிட்டே வர்றியே எனக்கும் உன் அழகை கொஞ்சம் கொடுக்கமாட்டியா? என்று உன் ஆருயிர்த்தோழி உன்னிடம் கேட்டபோது பக்கத்திலிருந்த நான் உன்னுடைய கைக்குட்டையை பிடுங்கி தோழியிடம் கொடுத்து "இந்தாங்க பிடிங்க இந்த கைக்குட்டைதான் இவளோட அழகெல்லாம் சேமித்துவைத்திருக்கிற பேங்க் இதுல உங்களுக்கு எவ்வளவு அழகு வேணும்னாலும் எடுத்துகிடலாம் செக் இல்லாமலே என்றேன்" உன் தோழி என்னை திட்ட ஆரம்பித்திருந்தாள் நீ சிரிக்க ஆரம்பித்திருந்தாய்...!


கடைவீதிக்கு சென்றிருந்த போது அங்கிருந்த ஒரு புடவைக்கடையில் புடவைகட்டியிருந்த பொம்மையைப்பார்த்து அழகா இருக்குல்ல என்றாய் நீ, நான் அதன் அங்க அழகுகளை வர்ணித்து அந்த பொம்மைக்கு மட்டும் உயிர் இருந்திருந்தால் அதைத்தான் காதலித்திருப்பேன் என்றேன் நீ என்னை கெட்ட வார்த்தையில் திட்ட திட்ட சிரித்துக்கொண்டிருந்த என்னைப்பார்த்து "இவ்ளோ அசிங்கமா திட்டுறேனே உனக்கு சூடு சுரணையே இல்லையா" என்றாய் ஹும் "கெட்டவனா இருந்த என்னையே நல்லவனா மாற்றிய சக்தி உனக்கிருக்கிறப்போ நீ பேசும் கெட்ட வார்த்தைகள் மட்டும் நல்லவார்த்தையாய் மாறியிருக்காதா என்ன?" என்றேன் "உன்னையெல்லாம் திருத்தவே முடியாதுடா" என்று தலையிலடித்துக்கொண்டாய்...!


"திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன" என்று எவன் சொல்லிவிட்டுச்சென்றான் முதலில் அவனைக்கூப்பிட்டு அந்த பழமொழியை மாற்றச்சொல்லவேண்டும் என்றேன் ஏன் என்றாய்? இல்லை இல்லை "நான் ஒரு சொர்க்கத்தையே திருமணம் செய்யப்போகிறேனே" அப்போ அந்த பழமொழி தப்புத்தானே? அதான் என்றேன் வெட்கப்பட்டாய் நீ...


காலை டிபன் பரிமாறிக்கொண்டிருந்த உன்னிடம் "உனக்கு ஏன் தாலிகட்டுனேன்னு நினைச்சு நினைச்சு வருத்தமா இருக்குடி" என்றேன் நான் , "ஏன் இப்போ நான் உன்னை என்ன கொடுமை பண்ணேன்னு இவ்ளோ சலிச்சுக்கிற என்றாய்" முகவாயை சிலிப்பியபடி "இல்லை நானும் தினமும் அவுட்டாகிகிட்டே இருக்கேன் இந்த தாலி மட்டும் அவுட்டே ஆகாம நாட் அவுட் பேட்ஸ்மேனா விளையாடிகிட்டே இருக்கே அதான்" என்றேன், "ச்சீ போடா வெட்கங்கெட்டவனே" என்கிறாய்...


கவிதை எழுதி எழுதி எதுவும் சரிவராமல் அதை கசக்கி தூரத்திலிருந்த குப்பைத்தொட்டியில் போட்டுக்கொண்டிருந்தாய் நான் அதை நான் வீடியோவாக என் கேமிராவில் படம்பிடித்துக்கொண்டிருந்தேன் "ஏண்டா இதெல்லாம் படம்பிடிக்கிற"என்றாய் கொஞ்சம் சிணுங்கலாக, இல்லை "பிற்காலத்தில் நம் மகனிடம் உன்னோட அம்மா ஒரு  கவிதைப்பந்து வீராங்கனை என்று போட்டுக்காட்டவேண்டுமே அதான்" என்றேன் நீயோ "போடா பொறுக்கி" என்றாய்...

Post Comment

லிவிங் டுகெதர் கலாச்சாரம் - இதுதாண்டி விபச்சாரம்!

| November 16, 2010 | |
லிவிங் டுகெதர் என்ற ஒரு மேற்கத்திய கலாச்சாரம் நம் நாட்டிலும் பரவி வருகிறது இதை ஆதரிப்பவர்கள் நிற்க அதற்கு தக, ஆதரிக்காதவர்கள் தொடர்க அதற்கு தக...

உஷ்ஷ்.......யாருய்யாஅங்க சவுண்டு விடறது

சொக்காய பிடிச்சு தூக்கி போடுங்கடா அவன

ஒருத்தொருக்கொருத்தர் பிடிச்சுருக்குற வரைக்கும் சேர்ந்து வாழ்வோம் பிடிக்கலைன்னா பை சொல்லி பிரிஞ்சிடுவோம் இதுதான் என்னோடகொள்கை என்னோட பிள்ளைகளையும் அப்படித்தான் வாழ வைக்கப்போறேன் என்பவர்கள் கொஞ்சம் பொறுமை பொறுமையா படிங்க...
(புரியலையா மக்கள்ஸ் அதான்யா வேலுபிரபாகரனின் ரசிக குஞ்சுமணிகள் உலகம் முழுவதும் இருக்காங்களே அவங்களத்தான் என்னாது வேலு பிரபாகரன் யாரா? அவருதான்யா எல்லாரும் ட்ரெஸ் எதுவுமில்லாம ஆடலாம் திரியலாம்ன்னு சொன்ன மகா ஞானி)

லிவிங் டுகெதர்

என்னங்கடா டேய் ஃபாரின்காரன் அறிமுகப்படுத்துன சாலைவிதிகளையெல்லாம் மதிக்கவே மாட்டேன்றீங்க இந்த விஷயத்தை கப்புன்னு பிடிச்சுகிறீங்க கப்படிக்குது ராசாக்களா ஒதுங்குங்க...ஒரு நிமிஷம் சாலை விதிகளுக்கு போடப்பட்ட கோடுகள் எதற்க்கு போடப்பட்டன என்று யோசித்து பார்க்காமல் அந்த கோடுகளை மீறி அப்படித்தான் செல்லுவோம் என்பவர்கள் கண்டிப்பாய் ஒருநாள் அடிபட்டு வீழ்வார்கள்...

இன்னைக்கு ஒருத்தி நாளைக்கு ஒருத்தன் இப்படி வாழறவாழ்க்கையில சத்தியமா உண்மையான அன்பு இருக்கப்போறதில்லை காமத்துக்காக ஆணும் பணத்துக்காக பொண்ணும் போகிற தடம் புரண்ட வாழ்க்கைதான் இந்த லிவிங் டுகெதர்...

அதாவது ஒரே பெண் தரக்கூடிய சுகத்தால் அலுத்துபோய் அடுத்தடுத்தபெண்ணின் சுகத்தை தேட விரும்புவர்கள் வாழும்  வாழ்க்கை பச்சையா சொன்னா தே.......யா வாழ்க்கை..மும்பையின் ரெட் லைட் பகுதியில்  நடக்கும் ஒரு விஷயத்தை இவர்கள் இதுதான் எங்கள் புதிய கலாச்சார வாழ்க்கை என்று பேசுகிறார்கள்

டேய் நிறுத்துடா கலாச்சாரத்தை தூக்கி நிறுத்தறவனாட்டம் பேசாதன்னு சொல்றவங்களை ஒண்ணும் பண்ணிடாதீங்கப்பா ஏன்னா ரெண்டு தார வாழ்க்கை வாழற ஒரு மனிதன் ஆளும் நாட்டில்தான் நாமும் அவர்களும் இருக்கிறோம் விட்டுடுங்க பாவம்..


ஆகட்டும் சரிதான்னு வச்சுக்கோங்கய்யா நீங்க முதல்ல சேந்து வாழற வரைக்கும் இருந்த வாழ்க்கையில் பிறந்த குழந்தைகள் அதற்க்கு அடுத்து சேர்ந்து வாழற ஜோடியோடு பிறந்த குழந்தைகள் இவர்களைப்ப்ற்றி நினைத்து பார்த்தீர்களா? எல்லா குழந்தைக்கும் தனக்கு ஒரு அப்பா இருக்குறதைத்தான் விரும்புவார்கள் நிறைய அப்பாக்கள் இருந்தால் அந்த குழந்தை "சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்" அப்படின்னு அஜீத் மாதிரி பாட வேண்டியிருக்கும் ( புரியாதவர்கள் அமர்க்களம் படம் பார்க்கவும் )

இந்தியாவில் பிறந்த நான் இந்திய கலாச்சாரத்தை தமிழ் கலாச்சாரத்தை மதிக்கிறேன் அப்படி மதிக்காதவர்கள் பற்றி எனக்கொன்றும் கவலையில்லை அவர்கள் இந்தியாவில் பிறந்தவர்களாக இருக்க மாட்டார்கள் அல்லது ஒருவனுக்கு ஒருத்தி என்ற வாழ்க்கை முறையில் பிறக்காதவர்களாய் இருக்க கூடும்....

கார்ட்டூன்


.
நாங்க அப்படித்தான் வாழ்வோம் என்று சொல்பவர்கள் முருகன் அருளால் நல்லபடியா வாழ வாழ்த்துகள்!


.

Post Comment

பின்னூட்டம் போட்டு விளையாடலாம் வாங்க பாஸ்!

| November 8, 2010 | 146 comments |
நீண்ட நாட்களாக தேடி தேடி அலுத்துப்போய் கிடைக்காத ஒரு விஷயம் கிடைத்தால் வரும் புன்னகையே ப்ரொஃபைல் போட்டோவின் புன்னகைக்கு அர்த்தம்...

ஆம் நீண்ட நாட்களாக பின்னூட்டத்தில் புகைப்படங்கள் வரவைப்பது எப்படி என்று தேடி தேடி அலுத்து சேய் என்னடா இது இவ்ளோ பிரயாசப்பட்டு கிடைக்காமப்போயிடுச்சே என்று நினைத்து கொண்டிருந்தேன். நேற்று தற்செயலாக நீச்சல்காரன் (பெயரே வித்தியாசமாக இருக்கிறதல்லவா ஆம் அவரின் பதிவுகளும் கூட வித்தியாசமாகவே இருக்கும் ) பின்னூட்டத்தில் படங்கள் வேண்டுமா? என்று ஒரு பதிவெழுதியிருந்தார்.அப்பொழுது மலர்ந்த புன்னகைதான் அது.பின்ன ஆசைப்பட்டது கிடைத்தால் எவ்வளவு ஆனந்தம் .

உடனே என்னுடைய வலைப்பூவில் செயற்படுத்தி பார்க்கலாம் என்றால் நேற்று மண்டை லேப்டாப்பின் ஸ்கிரீனுக்குள் போகாததுதான் மிச்சம்.அவர் தந்த நிரலி வேலை செய்யவில்லையென்று பின்னூட்டத்தில் தெரிவித்திருந்தேன் . உடனே என்னை மெயிலில் தொடர்புகொண்டு என்னுடைய வலைப்பூவிற்கேற்ற நிரலி செய்து கொடுத்தார் இன்று வந்ததும் அதை செயல் படுத்தி பார்த்ததும் எல்லையில்லா மகிழ்ச்சியடைந்தேன்.

இந்த முறையை உங்கள் பிளாக்கிலும் செயல்படுத்த நீச்சல்காரனின் இந்த பின்னூட்டத்தில் படங்கள் வேண்டுமா லிங் சென்று பார்த்து கொள்ளுங்கள்
மிக்க நன்றி நீச்சல்காரன்...


இனி அதை இந்த பதிவின் பின்னூட்டத்தில் செயல்படுத்தி பார்க்க...

படங்கள் பின்னூட்டத்தில் வர..
[im]________[/im] கோடிட்ட இடத்தில் தங்களுக்கு தேவையான படத்தின் முகவரி கொடுக்கவும்....

எடுத்துக்காட்டாக

நட்புடன் ஜமால் - இவர் சின்ன வயசுல இப்படித்தான் இருப்பாராம் 
[im]http://img1.loadtr.com/b-411981-Funny_Baby.jpg[/im]

பன்னிக்குட்டி ராம்சாமி யாருன்னு தெரியுமோ?
[im]http://static.whatsontv.co.uk/images/07420_125735_117248.jpg[/im]


என்னை திட்டணும்னா


நன்றி சொல்ல

[im]http://2.bp.blogspot.com/_Ikqcb-p7BVE/SwPAvsla6dI/AAAAAAAAAMw/dJrTOKozyos/s1600/tamil%2Bthanks.gif[/im]

[im]http://sanbruno.ca.gov/Library/Newsletter/2008/May%25202008/thankyou.jpg[/im]

வாழ்த்துகளுக்கு 

[im]http://www.orkutpapa.com/scraps/ra-sunbird-congratulations.gif[/im]
இதே படங்கள் ஓட 
[ma][im]________[/im][/ma] கோடிட்ட இடத்தில் படத்தின் url முகவரி கொடுக்கவும்...


[ma][im]http://1.bp.blogspot.com/_TWFTNARrwjI/TNcQwdGzqbI/AAAAAAAAEZo/yLz1o4O7zyM/s1600/vas.JPG[/im][/ma]


ஓடும் எழுத்துக்களுக்கு


[ma]________[/ma] கோடிட்ட இடத்தில் தங்களுக்கு தேவையான வார்த்தைகளை சேர்க்கவும்...

[ma]அட்ராசக்க அட்ராசக்க அட்ராசக்க[/ma]

மேலே நீலக்கலரில் ஹைலை செய்திருக்கும் எழுத்துக்களை அப்படியே பின்னூட்டப்பொட்டியில் இடவும் .காசா பணமா பின்னூட்டம் போட்டு விளையாடுங்க ஃப்ரண்ட்ஸ் நன்றி! அதுமட்டுமில்லாம இந்த முறை எனக்கு கமெண்ட் போட்டவங்களுக்கு ஸ்பெசலா நன்றி சொல்லப்போறேன் ம்ம்!

Post Comment

தல, தளபதி வெடிகள்..!

| November 4, 2010 | 72 comments |

பிரபல பதிவர்கள் எல்லாம் தீபாவளி ஸ்பெசல் போஸ்ட் போட்டுட்டாங்க ஏதோ என்னால முடிஞ்ச தீபாவளி ஸ்பெசல் போஸ்ட்!


தலவெடி : இந்த வெடியை பத்தவைச்சதும் ஆரம்பத்தில் சரசர படபட என்று பயங்கர சத்தத்தோட வெடிக்க போறது மாதிரியே பெரிய ஓபனிங் கொடுக்கும் அதாங்க சீன் போடும் அப்பறம் உங்க வீட்டில் நின்று கொண்டிருக்கும் காரோ பைக்கோ அதற்கடியில் சென்று வழக்கம் போலவே புஷ்வாணமாகிவிடும். 

தளபதி வெடி : இந்தவெடி வாங்குனதுல இருந்தே முதல்ல இந்த வெடியைத்தான் வெடிக்கணும்ன்னு இருக்கும் ஏன்னா வாங்குறப்போ அவ்ளோ பில்டப் கொடுத்துருப்பாங்க. பத்த வச்சதும் சும்மா குருவி மாதிரி பறந்து பறந்து வெடிக்கும் சில நேரம் தையதக்கா தையக்கா என்று டான்ஸ் ஆடிக்கிட்டே வெடிக்கும் . சத்தம் ஊசிவெடி மாதிரி குறைவுதான் ஆனா ஊரையே கூட்டும் . குழந்தைகள் எல்லாருக்கும் பிடித்த வெடி.
ரோபோ வெடி: இந்த வெடி சந்தைக்கு புதுசா வந்துருக்குற வெடி புதுசா இதுல எவ்வளவு சத்தத்தோட வெடிக்கும் எவ்வளவு நேரம் வெடிக்கும் அப்படின்னு ப்ரொக்ராம் எல்லாம் செட் செய்துருப்பாங்க அதுமட்டுமில்லாம நீங்க சொல்ற இடத்துல போய்தான் வெடிக்கும் இந்த தீபாவளிக்கு பத்த வச்சா அடுத்த தீபாவளி வரைக்கும் கூட வெடிக்கும் , விலை அதிகம் . கேப்டன் வெடி : இந்த வெடி கொஞ்சம் பழசுதான் தனியா பத்தவச்சாத்தான் வெடிக்கும் வெடிக்குறப்போ அந்தவெடி எங்க தயாரிச்சது யார் தயாரிச்சாங்க எவ்வளவு மருந்து இருக்கு, தயாரிக்க ஆன செலவு இந்த கணக்கெல்லாம் சொல்லிக்கிட்டே வெடிக்கும்.வெடிக்கும்போது பக்கத்துல எதாவது சுவர் இருந்தா அதுல போய் மோதி வெடிக்கும்.


மேதை வெடி : இந்த வெடி பச்சை மஞ்சள் சிவப்புன்னு வித விதமான கலர்ல பேக் பண்ணியிருப்பாங்க . ரொம்ப ரொம்ப பழையமாடல் வெடி , வெடிக்கும் போது பாட்டு படிக்கும். அதுமட்டுமில்லாமல் வீட்டு வாசலோ மாடியோ எங்க பத்தவச்சாலும் வெடிக்காது உங்க வீட்டு மாட்டுகொட்டகையில பத்தவச்சா மட்டுமே வெடிக்கும் .வெடிவேல் வெடி : பேர்லயே வெடியிருக்குற வெடி மார்க்கெட்ல இந்த வெடிக்குத்தான் ரொம்பவே மவுசு.வெடிக்கறப்போ நம்மள நிஜமாவே சிரிக்கவைக்கும் . குடும்பத்துல இருக்குற எல்லாருமே ஆசையா வெடிக்கிற வெடி.சொம்பு வெடி: இந்த வெடி கொஞ்சம் வித்யாசமான வெடிங்க இதை பத்தவைக்க நெருப்பு தேவையில்லை இதோட திரிக்கு நீங்க முத்தம் கொடுத்தாத்தான் வெடிக்கும் அப்படி வெடிக்குறப்போ உங்க உதட்டுக்கு சேதாரம் ஆகும் நிலையிருப்பதால் இந்த வெடியை யாரும் வாங்குவது கிடையாது மொத்தத்துல இது ஒரு போணியாகாத வெடி.ஜெ.வெடி : இந்த வெடி வெடிக்கிறப்போ பச்சைகலர்ல வெடிக்கும், உங்க வீட்டுல பத்தவச்சா உங்களுக்கு பிடிக்காத எதிர்த்த வீடு பக்கத்துவீடுன்னு எல்லாபக்கமும் போய் படபடன்னு வெடிச்சு பயமுறுத்தும், பத்தவச்ச அடுத்தசெகண்டே வெடிக்கும்.வசந்த் வெடி :________________________________ _____________________________________________
______________________________________________
______________________________________________
______________________________________________

(வழக்கம் போலவே கலாய்த்தல் உங்கள் சாய்ஸ்)

நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள் .


Click to get cool Animations for your MySpace profile
MySpace Layouts!

Post Comment

நீயா நானா கோபிநாத்துடன் பெட்ஸ்!

| November 2, 2010 | 57 comments |
                      வெல்கம் டூ லயன் டேட்ஸ் சிரப்பின் நீயா நானா கோபிநாத்தின் அன்பு வணக்கங்கள் . அதாவது இந்த உலகம் நமக்கானதே என்ற ஒப்பீனியன் நமக்கு எப்பொழுதுமே இருந்தது உண்டு.நம்ம ஜெனரல்லா என்ன நினைக்கிறோம்ன்னா நம்ம மட்டும்தான் இங்க வாழ்றதுக்காக இருக்கிறோம் அப்டின்னு சொல்லி நம்ம தேவைக்கு என்ன என்ன வேண்டுமோ அதெல்லாத்தையுமே செய்யுறோம் , காட்டை அழிக்கிறோம்,பூமியை தோண்டுறோம்,ஆனா இந்த உலகத்தில் மனிதனைத்தவிர வாழ்றதுக்கு எல்லா ஜீவராசிகளுக்கும் உரிமை இருக்கிறது அதிகாரம் இருக்குன்றதை நாம மறக்கிறது இல்லை அப்படிப்பட்ட அந்த ஜீவராசிகள் மனிதனிடம் வளர்ப்பு பிராணிகளாக இருப்பதே சிறந்தது என்று வாதாட ஒரு சாரரும் ( வெடக்கோழி வெண்மதி, மீசைக்காரன் பூனை, கெடா கஜா,பசு பானு, நாய் நாதன் ) இல்லையில்லை நாங்கள் நாங்களாவே வாழறதுதான் சிறந்தது என்று வாதாட ஒருதரப்பினரும்( சிங்கம் சீனி, புலி புல்லட்,கொசு கோவிந்தன்,நரி நம்பி, மங்கி பிங்கி) வந்திருக்கின்றனர்..
கோபிநாத் : வந்திருப்பவர்கள் அனைவரும் தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள்.

வெடக்கோழி வெண்மதி : நான் வெடக்கோழி வெண்மதிங்க கோழிபுரத்தில இருந்து வந்திருக்கேன்.

மீசைக்காரன் பூனை : நான் மீசைக்காரன் பூனைங்க உங்க வீட்டுல இருந்துதான் வந்திருக்கேன்.

கோபிநாத் : ஆஹா வாங்க சார் நான் கூட வழிதெரியாம வராம போய்டுவீங்களோன்னு நினைச்சேன்!

மீசைக்காரன் பூனை : உங்க அளவுக்கு இல்லைனாலும் கொஞ்சூண்டு மூளை எனக்கும் இருக்கே நீங்க புறப்படும்போதே உங்க கார் பேக் சீட்ல ஒளிஞ்சுகிட்டேனே!

கோபிநாத் : அது சரி!!!

கெடா கஜா : நான் கெடா கஜாங்க ஆட்டுக்கார அலமேலு வீட்ல இருந்து வந்திருக்கேன்.

பசு பானு : நான் பசு பானுங்க ராமராஜன் வீட்ல இருந்து வந்திருக்கேன்.!

நாய் நாதன் : நான் நாய் நாதன் நாதன் நாதன் கடிபுரத்திலிருந்து வந்திருக்கேன்.!

கோபி நாத் : நாய் நாதன் உங்க பெயர் வித்யாசமா இருக்கே ஏன் இந்த பெயர் ?

நாய் நாதன் : நாதனை திருப்பி போட்டீங்கன்னா தன்நா நாக்கு இல்லாம நானில்லை இதுதான் என் பெயருக்கு விளக்கம்.

கோபி நாத் : ரொம்ப அழகா சொன்னீங்க நாய் நாதன், எதிர் தரப்பும் தங்களை அறிமுகப்படுத்திக்கங்க.

எதிர்தரப்பு கோஷ்டியினரில் புலி புல்லட் "எங்களைப்பார்த்தாலே எல்லாருக்கும் தெரியும் அதனால அறிமுகம் தேவையில்லையென்று நினைக்கிறோம் இல்லையா சிங்கம்?" என்று தன் கோஷ்டியைப்பார்த்து கேட்க அனைவரும் கோரஷாக ஆமாம் என்றனர்

கோபி நாத் : ஆஹா என்ன ஒரு ஓற்றுமை எதிர் பார்ட்டிகள் கொஞ்சம் உஷாராவே இருங்கப்பா! சரி விஷயத்திற்க்கு வருவோம் நீங்க சொல்லுங்க வெடக்கோழி வெண்மதி வீட்டில் வளர்ப்பு பிராணியா வளர்வதில் தங்களுக்கு இதுவரை எந்த ஒரு சங்கடமான , வருத்தமான சூழலே வரவில்லையா?

வெ.வெண்மதி : 99% எங்களுக்கு வளர்ப்பு பிராணியாக வளர்வதில் எந்த ஒரு சங்கடமும் ஏற்படுவதில்லை பொதுவாக சொல்லப்போனால் காட்டில் தேடி தேடி உணவுகளை உண்ணுவது மிக கஷ்டம் அதையும் மீறி ஏதாவது ஒரு விளை நிலத்தில் நாங்கள் போய் இரை தேடப்போகையில் தோட்டத்துக்காரனிடம் பிடிபட்டால் அவன் எங்களை அடித்து குழம்பு வைத்துவிடுவான் அதுதான் கஷ்டப்பட்டு ஏன் உயிரை விட வேண்டும் இஷ்டப்பட்டு உயிரை விடுவோமே என்ற எண்ணம்தான் .அந்த ஒரு பர்சண்டேஜ் தொந்தரவு பக்கத்துவீட்டில் வளரும் சேவல் சேனாதிபதிகளால் ஏற்படுவது அது சகஜம்தானே!

கோபி நாத் : அப்போ உயிர் போனாலும் வளர்ப்பு பிராணியா வளர்ந்து உயிரை விடறதுல உங்களுக்கு இஷ்டம்ன்னு சொல்றீங்க சரி மிஸ்டர் புலி புல்லட் , வெடக்கோழி வெண்மதியோட கருத்துக்கு உங்க பதிலென்ன?

புலி புல்லட் : அந்த வெடக்கோழி வெண்மதிய நீங்க இல்லாட்டி இப்பவே இங்கயே கடிச்சு சாப்பிட்டுடுவேன் ஏதோ நீங்க இருக்கீங்கன்றதால விடறேன் அவங்க சொல்றாங்க கஷ்டப்பட்டு உயிரை விடறத விட இஷ்டப்பட்டு உயிரை விடறதுதான் சரின்னு, வீட்டுல வளர்றதால நிறைய தமிழ் படம் பார்க்குறாங்க போல அதான் சூர்யா கஜினி படத்துல சொல்ற டயலாக்கெல்லாம் வருது அவங்களோட கருத்து முற்றிலும் தவறுங்க கஷ்டப்பட்டு நமக்கு நாமே உணவு தேடி அதை உண்டு வாழ்றதுதாங்க மிகவும் மகிழ்ச்சியானது அது மட்டுமில்லாம யாருக்கும் அடிமையா வாழறதுல எனக்கு சுத்தமா இஷ்டம் இல்லீங்க.

கோபிநாத் : சபாஷ் புலி புல்லட் மிகவும் அழகான ஒரு கருத்தை சொன்னீங்க. ஆமா அவங்க வீட்டுல வளர்ந்ததால கஜினி படம் பார்த்தாங்க நீங்க கஜினி படம் பார்த்தீங்க?

புலி புல்லட் : உலகம் முழுவதும் வெற்றிகரமான நூறாவதுநாள்ன்னு தானே போஸ்டர் அடிக்கிறாங்க ஹிஹிஹி

கோபி நாத் : குசும்பு பிடிச்சவரா இருப்பீங்க போலயே புலி புல்லட் ?!! சரி மிஸ்டர் மீசைக்காரன் பூனை, புலி புல்லட் அருமையா அவரோட விவாதத்தை ஆரம்பிச்சு வச்சுருக்கார் அதுக்கு உங்களுடைய வாதம் என்ன?

மீ.கா.பூனை : அடடா நடிப்புல சிவாஜிகணேஷன் தோத்துடுவார் போங்க இந்த புலி புல்லட்டும் அவனோட சாதிக்கார பயலுகளும் பண்ற அட்டகாசம் தாங்க முடியாம மனிதர்கள்கிட்ட வளர்ப்பு பிராணியா இருக்குறதுன்னு முடிவு பண்ணுனேமே!

கோபிநாத் : இதென்ன புதுக்கதை புலிபுல்லட் என்ன பண்ணுனார்?

மீ.கா.பூனை : அதை எப்படி என் வாயால சொல்லுவேன் அதோ அங்க ஒழிஞ்சு நின்னு பாத்துகிட்டு இருக்குற கஸ்தூரி மான் கிட்ட கேளுங்க அவங்களே சொல்லுவாங்க!

கோபிநாத் : மைக்க கஸ்தூரி மான்கிட்ட கொடுங்க.

கஸ்தூரி மான் : ஆமாங்க காட்டுல இந்த புலி குரூப் பண்ற அட்டகாசத்துல என்னோட சொந்தபந்தம் நிறையபேரை நான் இழந்துட்டேன் இவன் இங்க வந்து நடிக்கிறான் இவனோட பொழுதுபோக்கே தன்னோட காட்டுல வாழுற தன்னைவிட வலிமை குறைந்த மிருகங்கள அடிச்சு சாப்பிடறதுதான் இவன் எல்லாம் வீரத்தப்பத்தி பேசவந்துட்டான் பெருசா தூ!

கோபிநாத் : அட டா ப்ச் என்ன புலி இவ்ளோ மோசமானவரா நீங்க? உங்ககிட்ட பேசறதே தப்பு போல அடுத்து மிஸ்டர் நரி நம்பி அவர்களே, கஸ்தூரிமான் இவ்ளோ கொடுமையா உங்க குரூப்னால பாதிக்கப்பட்டுருக்காங்களே சக இனத்தவர்களை நீங்களே கொடுமைப்படுத்துவது எந்தவிதத்தில் நியாயம்?

நரி நம்பி : அது வந்து சார் நான் என்ன சொல்ல வர்றேனா நீங்க முதல்ல யோக்கியமா உங்க சக மனிதர்களில் பணவசதி குறைந்தவனை பணக்காரர்கள் அடிமைப்படுத்துவது, சுகத்துக்காக கணவனையே விஷம் வச்சு கொல்றது ,  பணத்துக்காக குழந்தைன்னு கூட பார்க்காம கொல்றது இதைவிட நாங்கள் செய்வதொன்றும் பெரிய கொடுமையில்லையே?

கோபிநாத் : மிஸ்டர் நரி நீங்கள் டாபிக்கை திசை திருப்புறீங்க ! உங்க தந்திர புத்தியை காட்டிட்டீங்களே! ம்ம்ம்ம் மிஸ்டர் கெடா கஜா நரியுடைய வாதத்திற்க்கு உங்களுடைய கருத்து என்ன?

கெடா கஜா: அந்த நரிப்பய வடைக்காக காக்கவ ஏமாத்துனவன்தானே இதவிட இன்னும் தந்திரமாவே பேசுவான்!

கோபிநாத் : ஹ ஹ ஹா! சூப்பர் கஜா! மிஸ்டர் .கொசு கொவிந்தன் நீங்க என்னசொல்லப்போறீங்க?

கொசு கோவிந்தன் : எனக்கு இந்த வளர்ப்பு பிராணியா இருக்க விருப்பம்தான் ஆனா வளர்ப்பு பிராணியா வளர்க்க நீங்க ரெடியா?

கோபிநாத் : ஆவ்வ்வ்வ் நீங்க எவ்வளவு போராட்டம் பண்ணுனாலும் அதுமட்டும் முடியவே முடியாது தல நீங்க உங்க விருப்பப்படியே இருங்க வீணா உங்களை வளர்ப்பு பிராணியா வளர்க்கலாம்ன்னு அட்வைஸ் பண்ணி ஊர் மக்கள்கிட்ட அவமானப்பட நான் விரும்பல இவ்ளோ நேரம் பொறுமையா நீங்க உட்கார்ந்ததுக்கே பெரிய கும்புடுண்ணே!

கொசு கோவிந்தன் : பார்த்தீங்களா நான் அளவுல சிறியவன் தான் ஆனா உங்களையே பயமுறுத்தி வச்சுருக்கெனே இதுதான் எனக்கு கிடைச்ச வெற்றி !

கோபிநாத் : அது சரி ! யாருப்பா அங்க ஸ்டேஜ் உதவியாளர் அந்த டார்டாய்ஸ் எடுத்து கொளுத்துங்களேன்! அடுத்து மிஸ்டர் பசு பானு இவ்ளோ அமைதியா உட்கார்ந்திருக்கீங்களே உங்களுடைய கருத்துகளை பகிருங்களேன்!

பசு பானு :  எனக்கு இந்த சண்டை இரத்தம் இதெல்லாம் பிடிக்காதுங்க என்னை வளர்க்குறவங்களுக்கு எந்த துன்பமும் நான் கொடுக்குறது கிடையாது நானுண்டு புல்லுண்டுன்னு இருக்கேன் எனக்கும் அவங்க தொந்தரவு கொடுக்குறது இல்லை அதுமட்டுமில்லாம வருடம் முழுதும் அவங்களுக்கு பண்ற உதவிக்காக வருடத்தில் ஒருநாள் எங்களை கொண்டாடுறாங்க அந்த சந்தோஷம் போதும்ங்க எனக்கு வளர்ப்பு பிராணியா வளர்றதுலதான் இஷ்டம்!

கோபிநாத் மற்றும் பசுபானு குரூப் அனைவரும் கைதட்டுகின்றனர்.

கோபிநாத் :மிக சிறப்பான கருத்து பானு சபாஷ்! ம்ம்ம் அடுத்து இந்த எதிர் கோஷ்டிக்கு மட்டுமில்ல காட்டுக்கே ராஜாவான சிங்கம் சீனி உங்களுடைய கருத்தைத்தான் எல்லாரும் எதிர்பார்த்துகிட்டு இருக்கோம் ம்ம் சொல்லுங்க!

சிங்கம் சீனி : இந்த நிகழ்ச்சியோட ஸ்பான்ஸர் யாரு சார்?

கோபிநாத் : லயன் டேட்ஸ்

சிங்கம் சீனி : டேட்ஸ் மனிதர்கள் சாப்பிடறது மனிதர்கள் சாப்பிடற டேட்ஸ்க்கே என்னுடைய லோகோ தேவைப்படற அளவுக்கு என்னுடைய வலிமை இருக்கு . இந்த வலிமை எங்க இருந்து வந்தது? காட்டுல தனியா அலைஞ்சு ஓடியாடி திரிஞ்சதுனால வந்ததுதான் இதே நானும் வீட்டுல வளர்க்குற பிராணியா இருந்திருந்தா இந்த பசு பானு மாதிரி உணர்ச்சியில்லா ஜடமாத்தான் இருந்திருப்பென் எனக்கு வீட்டுல வளர்ற பிராணிகளைப்பார்த்து பரிதாபம்தான் வருது சார் அவங்க எல்லாருக்கும் ராஜா என்ற முறையில் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து என்னுடைய விவாதத்தை முடித்து கொள்கிறேன்.

கோபிநாத் : மிகவும் அழகாக ராஜாவிற்கே உரிய துடுக்குடன் பேசினீர்கள் சிங்கம் சீனி சபாஷ்! இறுதியாக நாய் நாதன் உங்களுடைய கருத்தையும் பதிவு செய்யுங்க..

நாய் நாதன் : என்ன சார் சொல்ல சொல்றீங்க இன்னைக்கு மதியம் என்னை விட்டுப்போட்டு ஊருக்கு போயிட்டார் என்னோட எஜமான். நீங்க கூப்பிட்டீங்கன்னு நான் வீட்டை விட்டுட்டு இங்க வந்துட்டேன் எனக்கு இப்போ ஒரே கவலை வீட்டுல யாரும் புகுந்து எதையும் திர்டிடுவாங்களோ இல்லையோன்னு என்னை விட்டுடுங்க சார் எனக்கு விசுவாசத்தை விட வேற ஒண்ணும் தெரியாது நான் ஒண்ணும் ஏமாத்தியோ அடுத்தவங்க வயித்துல அடிச்சோ வாழலை சாப்பாடு போடறாங்க அதுக்கேத்த மாதிரி நான் அவங்களோட உடைமைகளை பாதுகாப்பா பார்த்துகிடறேன் சுருக்கமா சொன்னா உழைச்சு சாப்பிடறேன் சார் எனக்கு இது பிடிச்சிருக்கு .ஒண்ணே ஒண்ணு சொல்றேன் எங்க வாழ்றோம்ன்றது முக்கியமில்ல சார் எப்படி வாழ்றோம்ன்றதுதான் முக்கியம் நன்றி சார்

கோபிநாத் மற்றும் சிங்கம் குரூப் நாய் குரூப் அனைவரும் பலமாக கைதட்டுகின்றனர் .

கோபிநாத் : அட்டகாசம் நாய் நாதன் பார்த்தீங்களா சிங்கம் சீனி உங்களையே ஆச்சரியப்படுத்திட்டார் இதுதானுங்க உண்மை.  வளர்ப்பு பிராணியா இருக்கீங்களோ இல்லையோ வாழ்றதுல ஒரு நேர்மை வேண்டும்.அதுமட்டுமின்றி எங்கு வாழுகிறோம் என்பது முக்கியமல்ல எப்படி வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம் என்பதை தெரிவித்துகொண்டு . மிகச்சிறப்பாக விவாதம் செய்த நாய் நாதனுக்கு வசந்த் & கோ வழங்கும் ஒரு மினி டாய்லெட் பரிசளிக்கப்படுகிறது வாழ்த்துகள் நாய் நாதன்.

முற்றும்

,

Post Comment