மெகு..மெகு..லகி..மகி..மா..

| October 30, 2010 | |


எங்கள் வானம் எங்கள் பூமி
இப்பிரபஞ்சமே எங்களால் நிரம்பியது
நிரப்ப முடியா மடல் ஓட்டைகளையும்
நிரப்பி அவைகளுக்கு
தலையணையாய் 
நாங்கள்...

கனவுகள் வர
காரணகர்த்தா நாங்கள்
சுகத்தையும் துக்கத்தையும்
உணர்ந்து அனுபவிக்க
படைக்கப்பட்ட கிரீச் கிரீச்
நாங்கள்...

அதிர்வுகளால்
வானத்தையும் இதயத்தையும்
வலியில்லாமல்
உடைத்துப்போடும்
வலிமை எமக்குண்டு ...

உயிர் உருவாகும்போது
பிரியும்போதும் வாழும்போதும்
தேவைப்படும் காப்பீடு தேவையற்ற
களப்பணியாளர்கள்
நாங்கள்...

கோபமோ தாபமோ
எந்த உணர்வாயினும்
அதை நொடியில் 
எங்கள் வசமாய் மாற்றிவிடும்
மாற்று சக்தி நாங்கள்..

ஓராயிரம் நாளங்களுடையவனை 
படைத்தவனும் பிரம்மா!  
ஏழே ஏழு உறுப்புகளை
உடைய எம்மை 
படைத்தவனும் பிரம்மா!


எம்மை பிடிக்காதவர்கள் 
இவ்வுலகில் கிடையாது 
அப்படி பிடிக்காமல்
போயிருப்பின் அவர்கள்
உணரும் திறன் 
இழந்திருப்பவர்களாயிருக்கலாம்...

அந்தோ எம்மை உணர
முடியாமல் படைக்கப்பட்டவனே
இப்பிரபஞ்சத்தில் படைக்கப்பட்ட
மிகச்சிறந்த
துரதிர்ஷ்டவாதி... 
அனுதாபங்கள் அவர்களுக்கு..

உணர்ந்து அனுபவிப்பவர்களுக்கு
நாங்கள்
மெகு மெகு லகி மகி மா....
மெகு மெகு மகி லகி மா....,

Post Comment

24 comments:

Trackback by எல் போர்ட்.. பீ சீரியஸ்.. October 30, 2010 at 2:07 AM said...

பிடிச்ச பாட்டு.. இப்ப கேட்கப் போறேன்.. நினைவு படுத்தினதுக்கு நன்றி வசந்த்.. :)

Trackback by Unknown October 30, 2010 at 4:21 AM said...

இசைக் குறிப்புகள் இனிமை

Trackback by Chitra October 30, 2010 at 4:49 AM said...

nice. :-)

Trackback by Philosophy Prabhakaran October 30, 2010 at 4:59 AM said...

எப்போதிலிருந்து ஜப்பானிய மொழியில் கவிதை எழுத ஆரம்பித்தீர்கள் நண்பா...

Trackback by நிலாமகள் October 30, 2010 at 5:13 AM said...

//காப்பீடு தேவையற்ற களப்பணியாளர்கள் நாங்கள்// நல்லாயிருக்கு வசந்த்...

Trackback by நிலாமகள் October 30, 2010 at 5:13 AM said...
This comment has been removed by the author.
Trackback by மாணவன் October 30, 2010 at 5:16 AM said...

///உணர்ந்து அனுபவிப்பவர்களுக்கு
நாங்கள்
மெகு மெகு லகி மகி மா....
மெகு மெகு மகி லகி மா....///

அருமை

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

என்றும் நட்புடன்
மாணவன்

Trackback by ராமலக்ஷ்மி October 30, 2010 at 5:43 AM said...

அருமை வசந்த்.

Trackback by ஜெயந்த் கிருஷ்ணா October 30, 2010 at 6:32 AM said...

NIce..

Anonymous — October 30, 2010 at 7:07 AM said...

அழகிய வார்த்தை வடிவமைப்பு படிக்க சுகமாயிருந்தது வசந்த்..

Trackback by நர்சிம் October 30, 2010 at 7:07 AM said...

nice one

Trackback by ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) October 30, 2010 at 7:09 AM said...

ம்ம் கலக்கு மாப்பு

Trackback by சாந்தி மாரியப்பன் October 30, 2010 at 8:27 AM said...

அருமை..

Trackback by sakthi October 30, 2010 at 10:17 AM said...

வசந்த் அருமை பா !!!!

Trackback by taaru October 30, 2010 at 10:29 AM said...

//துரதிர்ஷ்டவாதி...
அனுதாபங்கள் அவர்களுக்கு//
ஆமா.. பாவம்... அவிங்களுக்கு அனுதாபங்கள்..
பின்றீங்க வசந்த்...

Trackback by Unknown October 30, 2010 at 12:19 PM said...

அருமை..:-)

Trackback by Unknown October 30, 2010 at 1:15 PM said...

:)

Trackback by சத்ரியன் October 30, 2010 at 1:21 PM said...

வசந்த்,

என்ன சொல்லி பாடுவதோ....

Trackback by Prasanna October 30, 2010 at 7:14 PM said...

Nice :)

Trackback by R.பூபாலன் October 30, 2010 at 7:31 PM said...

உணர்ந்து அனுபவிப்பவர்களுக்கு
நாங்களும்தான்பா....
மெகு மெகு லகி மகி மா....
மெகு மெகு மகி லகி மா...இன்னைக்கு கிளாஸ் சீக்ரமே முடிச்சுட்டு இந்த ( ..............-Fill In the Blank) போஸ்ட்ட படிக்க Browsing Centre- க்கு வந்தேன்ப்பா

Trackback by அந்நியன் October 31, 2010 at 12:23 AM said...

பதிவுலகை பற்றிய பரபரப்பு தொடர் அந்நியனின் முதல் அத்யாயம்..

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 31, 2010 at 3:21 AM said...

அனைவருக்கும் மிக்க நன்றிகள்!

Trackback by elamthenral November 3, 2010 at 8:34 AM said...

//எம்மை பிடிக்காதவர்கள்
இவ்வுலகில் கிடையாது
அப்படி பிடிக்காமல்
போயிருப்பின் அவர்கள்
உணரும் திறன்
இழந்திருப்பவர்களாயிருக்கலாம்...

அந்தோ எம்மை உணர
முடியாமல் படைக்கப்பட்டவனே
இப்பிரபஞ்சத்தில் படைக்கப்பட்ட
மிகச்சிறந்த
துரதிர்ஷ்டவாதி...
அனுதாபங்கள் அவர்களுக்கு..

உணர்ந்து அனுபவிப்பவர்களுக்கு
நாங்கள்//
nice lines vasanth...
wish you a very happy Diwali....

Trackback by T.V.ராதாகிருஷ்ணன் November 8, 2010 at 3:58 AM said...

:)))