கர்ப்ப கால காதல் !

| October 26, 2010 | |
        என்னதான் வாழ்க்கையில் நம்முடைய பரிமாணங்களை ஒவ்வொரு சூழலிலும் நாமே கண்டு களித்திருந்தாலும் கணவன் தான் தகப்பன் ஆவது தெரிந்து அதற்க்கு காத்திருக்கும் காலமும் மனைவி தான் தாயாகப்போகும் தருணம் வரை காத்திருக்கும் காலம் முக்கிய கால கட்டம் அந்த கால கட்டத்தில் ஒரு மனைவிக்கும் கணவனுக்கும் இடையே நடக்கும் காதல் பற்றி பார்ப்போமா?

      என்னங்க நம்ம பையன் உங்களைப்போல் சாடையாக பிறந்தால் தான் உங்க வீட்டுல எல்லாருக்கும் பிடிக்குமாம் உங்கம்மா சொல்றாங்க என்று சிணுங்கியவளை சே ! சே ! உன் சாடையா பிறந்தால் தான் எனக்கு பிடிக்கும் என்றதும் என் தோளில் கைகளை வைத்து முகம் புதைக்கிறாள் கர்ப்ப கால வெட்கத்தில்!

     நமக்கு பொறக்கப்போற பையனுக்கு என்னென்ன பொம்மையெல்லாம் வாங்கி வைக்கப்போறீங்க என்றவளிடம் அழகான பார்பி பொம்மையான நீயும் யானை பொம்மையான நானும் இருக்க தனியே வேறு பொம்மை வாங்க வேண்டுமா என்ற என் குமட்டில் தன் கைகளால் செல்லமாக இடித்து குசும்பு என்கிறாள்!

     வீட்டில் இருந்த நேரம் முழுவதும் அது இதென்று இழுத்துப்போட்டு வேலை செய்பவளிடம் ரொம்பவும் அலுத்துக்காதடி பிள்ளைக்கு ஆகாது என்றதும் அப்போ உடம்புக்கெதும் ஆனாலும் பரவாயில்லைன்றீங்களா? என்று கடிந்தவள், நான் உடம்பைத்தான் பிள்ளையென்று சொன்னேன் என்றதும் ச்சீய்ய்ய் என்கிறாள்!

     ஆமா நமக்கு பொறக்கப்போறது பையன் தான்னு எப்படி இவ்வளவு உறுதியா சொல்றீங்க? வயித்தில இருக்கும்போதே சரக்கடிச்சவனாட்டம் வாந்தியெடுக்கிறானே அதை வைத்துதான் சொன்னேன் என்றதும் ஓங்கி ஒரு குட்டு வைத்தாள் நடுமண்டையில்!

     ஏங்க நம்ம பையன் பொறந்ததும் அவனுக்கு எங்கண்ணா அஞ்சு பவுன்ல தங்கச்செயினும் எங்கப்பா தங்க மோதிரமும் வாங்கித்தர்றேன்னு சொல்லியிருக்காங்க நீங்க என்ன வாங்கித்தரபோறீங்க உங்க பையனுக்கு? ஒரு தங்கச்சி பாப்பா வாங்கித்தரலாம்ன்னு இருக்கேன் என்றுசொன்னதுதான் தாமதம் உங்கள உங்கள என்று சொன்னபடியே கையில் வைத்திருந்த தக்காளிப்பழத்தை என் மீது எறிந்தேவிட்டாள்!

     என்னடி உன்னோட வயிறு பெரிசாச்சுனா என் அம்மா பார்த்து பார்த்து பூரிச்சுப்போய் ஆப்பிள் ஜூஸ் கொடுத்து பாசத்தை பொழியுறாங்க! போன வாரம் நானும் என்னோட வயிறும் பெரிசாயிட்டே போகுதுன்னு சொன்னதுக்கு வாயக்கட்டு ராஸான்னு சொல்றாங்க உனக்கொரு நியாயம் எனக்கொரு நியாமா என்று செல்லமா கேட்டதற்க்கு எனக்குள்ள இருக்கிறது வாரிசு உங்களுக்குள்ள இருக்குறது தரிசுன்னு சொல்லி சிரிக்கிறாள்  எமகாதகி!
     சமையலறையில் மிக்ஸி இருந்தாலும் கைமணம்போல் வராதென்று சொல்லி நின்று கொண்டே அம்மியில் கறி மசால் அரைத்துக்கொண்டிருந்தவள் என்னிடம் திடீரென்று நான் சாமியாம் உங்களுக்கு வரமொன்று தரலாம்ன்னு இருக்கேன் என்ன வரம் வேணும் என்று கேட்டாள் !  இவ்ளோ நாள் உன்னை மட்டும் கட்டிப்பிடிக்க என் கை போதுமானதாக இருந்தது இனி உன்னோடு நம் பிள்ளையையும் சேர்த்து கட்டிப்பிடிப்பதற்க்கு, உன் வயிறும் என் கைகளும் சேர்ந்தே வளரும் வரம் கேட்பேன் என்றதும் சிரித்துவிட்டாள்!
,

Post Comment

79 comments:

Trackback by நிலாமதி October 26, 2010 at 2:29 AM said...

அனுபவமா சார்?.............சும்மா தமாசுங்க . அழகாய் சொல்லி இருகிறீங்க உண்மையான் காதல்.
நீடூழி வாழட்டும்

Trackback by நிலாமகள் October 26, 2010 at 3:20 AM said...

அசத்திட்டிங்க போங்க!! உண்மையிலேயே வாழ்வின் உன்னதமான தருணங்களை எல்லாம் அனுபவிக்கும் முன்பே உணர்ந்திருக்கிறீர்கள்!!! வரப் போகிறவளும் வரும் சந்ததிகளும் பெருமைக்குரியவர்கள். உங்க அம்மா அப்பாவுக்கு திருஷ்டி சுத்தி போடணும்!!!!!

Trackback by எல் போர்ட்.. பீ சீரியஸ்.. October 26, 2010 at 3:24 AM said...

கற்பனைக் குடும்பம் நல்லாத்தான் இருக்கு..

Trackback by நிலாமகள் October 26, 2010 at 3:26 AM said...

//அழகான பார்பி பொம்மையான நீயும் யானை பொம்மையான நானும்//வயித்தில இருக்கும்போதே சரக்கடிச்சவனாட்டம் வாந்தியெடுக்கிறானே//எனக்குள்ள இருக்கிறது வாரிசு உங்களுக்குள்ள இருக்குறது தரிசு//
இதெல்லாம் கமெண்ட்டை அள்ளிட்டு வரப் போகுது பாருங்க...

Trackback by எல் கே October 26, 2010 at 5:12 AM said...

வசந்த் ரொம்ப அருமையா இருக்கு நண்பா. உணர்வு பூர்வமானவை

Trackback by Philosophy Prabhakaran October 26, 2010 at 5:32 AM said...

வசந்துக்கு திருமணம் ஆகிவிட்டதா என்ன...

Anonymous — October 26, 2010 at 5:48 AM said...

//நிலா மகள் said...
//அழகான பார்பி பொம்மையான நீயும் யானை பொம்மையான நானும்//வயித்தில இருக்கும்போதே சரக்கடிச்சவனாட்டம் வாந்தியெடுக்கிறானே//எனக்குள்ள இருக்கிறது வாரிசு உங்களுக்குள்ள இருக்குறது தரிசு//
இதெல்லாம் கமெண்ட்டை அள்ளிட்டு வரப் போகுது பாருங்க...//

இங்க இருந்து ஸ்டார்ட் ஆயிடுச்சு :))

Trackback by ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) October 26, 2010 at 6:35 AM said...

செம செம செம

Trackback by ஜெயந்த் கிருஷ்ணா October 26, 2010 at 7:20 AM said...

அருமை நண்பரே....

இது கற்பனையா இல்லை அனுபவமா...

Trackback by இமா க்றிஸ் October 26, 2010 at 7:39 AM said...

;))

Anonymous — October 26, 2010 at 8:02 AM said...

nice feel yar...

Trackback by சுந்தரா October 26, 2010 at 8:04 AM said...

அழகான குடும்பம்,அருமையான கற்பனை :)

ரசித்துச் சிரிக்கமுடிந்தது :)

Trackback by vinu October 26, 2010 at 8:17 AM said...

kanavugalileaayea gudithanum, pullai purapumaaa enjoyyyyyyyyyyyyyyyyyyyyyyy

Trackback by sakthi October 26, 2010 at 8:39 AM said...

ஆமா நமக்கு பொறக்கப்போறது பையன் தான்னு எப்படி இவ்வளவு உறுதியா சொல்றீங்க? வயித்தில இருக்கும்போதே சரக்கடிச்சவனாட்டம் வாந்தியெடுக்கிறானே அதை வைத்துதான் சொன்னேன் என்றதும் ஓங்கி ஒரு குட்டு வைத்தாள் நடுமண்டையில்!

அது!!!!

வசந்த் மிக ரசித்தேன் இந்த கற்பனையை

சீக்கிரம் நிஜத்தில் நடக்கட்டும் உன் வாழ்வில் என பிரார்த்திக்கிறேன்!!!!

Trackback by சாந்தி மாரியப்பன் October 26, 2010 at 8:53 AM said...

ரொம்ப ரொம்ப ரொம்ப ரசிச்ச இடுகை இது...

Trackback by Dhanalakshmi October 26, 2010 at 8:54 AM said...

migavum azhagan kavidhai....

Trackback by Madhavan Srinivasagopalan October 26, 2010 at 10:13 AM said...

//வயித்தில இருக்கும்போதே சரக்கடிச்சவனாட்டம் வாந்தியெடுக்கிறானே அதை வைத்துதான் சொன்னேன் என்றதும் ஓங்கி ஒரு குட்டு வைத்தாள் நடுமண்டையில்!//

ஆணாதிக்கத்தின் உச்சம்.. பொட்ட புள்ள தண்ணியடிக்கக் கூடாதா ?

மத்தபடி.. ரசிக்கும்படி இருக்கிறது.

Trackback by Unknown October 26, 2010 at 10:34 AM said...

கவிதை போன்ற ஒரு பதிவு

Trackback by NaSo October 26, 2010 at 10:49 AM said...

மனதை தொட்ட கவிதை. அனுபவிச்சு எழுதியதோ?

Trackback by பவள சங்கரி October 26, 2010 at 11:31 AM said...

ஹலோ எப்படீங்க அப்படியே உண்மையை புட்டு புட்டு வைக்கறீங்க....தங்கமணிக்கு வாழ்த்துக்கள்.

Trackback by அருண் பிரசாத் October 26, 2010 at 11:34 AM said...

//கையில் வைத்திருந்த தக்காளிப்பழத்தை என் மீது எறிந்தேவிட்டாள்!//
மாப்ஸ் நல்ல வேளை கைல காய் கட் பண்ண கத்தி வெச்சி இல்ல... தப்பிச்ச...சூப்பர் பதிவு மாப்ஸ்... அடுத்து என்ன கல்யாண பத்திரிக்கைய சீக்கிரம் அனுப்பு

Trackback by Katz October 26, 2010 at 11:40 AM said...

வாழ்கையை கவிதையாக வாழ்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

Trackback by ஜெயந்தி October 26, 2010 at 11:50 AM said...

கவிதை மாதிரி இருக்கு.

Trackback by சுசி October 26, 2010 at 5:39 PM said...

//நமக்கு பொறக்கப்போற பையனுக்கு என்னென்ன பொம்மையெல்லாம் வாங்கி வைக்கப்போறீங்க என்றவளிடம் அழகான பார்பி பொம்மையான நீயும் யானை பொம்மையான நானும் இருக்க தனியே வேறு பொம்மை வாங்க வேண்டுமா என்ற என் குமட்டில் தன் கைகளால் செல்லமாக இடித்து குசும்பு என்கிறாள்!//

உண்மை என்று வந்திருக்கணுமோ??

சேர்த்துக் கேட்ட வரம் சூப்பர்.

என்னம்மோ நடக்குது.. நடக்கிறது நல்லதா நடந்தா சந்தோஷம் :)

Trackback by தேவா October 27, 2010 at 12:57 AM said...

என்ன பாஸ் போன பதிவுலதான் பொண்ணு பாக்கிறதா சொன்னீங்க?

பொண்ணு ஓகே சொல்லீடாங்களா?

Trackback by Anisha Yunus October 27, 2010 at 1:33 AM said...

//ஆமா நமக்கு பொறக்கப்போறது பையன் தான்னு எப்படி இவ்வளவு உறுதியா சொல்றீங்க? வயித்தில இருக்கும்போதே சரக்கடிச்சவனாட்டம் வாந்தியெடுக்கிறானே அதை வைத்துதான் சொன்னேன் என்றதும் ஓங்கி ஒரு குட்டு வைத்தாள் நடுமண்டையில்!//

ஆஹா... இதுக்கு இப்படியெல்லாம் கூட அர்த்தம் செய்ய முடியுமா?? பெண் பிள்ளையா இருந்தால்தான் அதிகமா வாந்தி வரும்னு சொல்வாங்க. அப்ப எப்படி dialogue மாத்துவீங்க?? நல்ல காமெடியான, அன்பை பொழியற பதிவு. :))

Trackback by கமல் October 27, 2010 at 6:26 AM said...

அருமை நண்பரே உணர்வுகள் மூலம் அனைவரும் ஒரு நாள் உணரகூடி கர்ப்ப கால காதல் !

தொடர்ந்து எழுதுங்கள் நன்றி...தொடர்கிறேன்.

Trackback by R.பூபாலன் October 27, 2010 at 7:37 AM said...

வசந்த் அண்ணா........!!!!!!! )::::::-

Trackback by Chitra October 27, 2010 at 9:14 AM said...

கலக்குறீங்க..... சூப்பர்!

Trackback by erodethangadurai October 27, 2010 at 2:48 PM said...

Supper...!

ஒரு தமிழரை - உலக நாயகன் ஆக்குங்கள் - Please vote ...!

http://erodethangadurai.blogspot.com/2010/10/please-vote.html

Trackback by Priya Magesh October 27, 2010 at 9:22 PM said...

கவித கவித

but so sweet

நிறைய எங்கயோ கேட்ட மாதிரி இருந்தாலும் கோர்வையா படிக்கும் போது அழகா தெரியுது.

Trackback by மதுரை சரவணன் October 27, 2010 at 10:28 PM said...

உணர்வுப் பூர்வமான கர்பகாலம் kaathal உங்கள் வரிகளில் கவித்துவமாக வெளிப்பட்டுள்ளது/வாழ்த்துக்கள்.

Trackback by Mahi_Granny October 27, 2010 at 10:29 PM said...

என்னமோ ஆச்சு வசந்துக்கு. ஆனாலும் ரசித்தேன்.

Trackback by R.பூபாலன் October 28, 2010 at 5:20 PM said...

எப்டி வசந்த் அண்ணா....
படிக்க படிக்க நல்லாருக்கு.... படிச்சுட்டே இருக்கணும்னு இருக்கு....

Trackback by R.பூபாலன் October 28, 2010 at 5:25 PM said...

கம்பெனிலேர்ந்து என்னை 3D cource Training அனுப்புறாங்கன்னா....
இனி வர வரைக்கும் எந்த போஸ்டும் படிக்க முடியாதே ரொம்ப feelingsna

Trackback by Thanglish Payan October 28, 2010 at 6:33 PM said...

Really Superb..

Nejama ippadi than pesuvangalo
utharana couples awesome..

Anonymous — October 29, 2010 at 7:22 AM said...

அருமை.

Trackback by 'பரிவை' சே.குமார் October 29, 2010 at 10:40 AM said...

Super....

Romba nalla irukku.

Trackback by பின்னோக்கி October 29, 2010 at 11:30 AM said...

அருமை... காதல் வடிந்தோடுகிறது ஒவ்வொரு வார்த்தைகளிலும்... :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 29, 2010 at 12:02 PM said...

//நிலாமதி said...
அனுபவமா சார்?.............சும்மா தமாசுங்க . அழகாய் சொல்லி இருகிறீங்க உண்மையான் காதல்.
நீடூழி வாழட்டும்//

நன்றி நிலாமதி சகோ!

கற்பனைதான்!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 29, 2010 at 12:05 PM said...

// நிலா மகள் said...
அசத்திட்டிங்க போங்க!! உண்மையிலேயே வாழ்வின் உன்னதமான தருணங்களை எல்லாம் அனுபவிக்கும் முன்பே உணர்ந்திருக்கிறீர்கள்!!! வரப் போகிறவளும் வரும் சந்ததிகளும் பெருமைக்குரியவர்கள். உங்க அம்மா அப்பாவுக்கு திருஷ்டி சுத்தி போடணும்!!!!!//

ரைட்டு சகோ!

மிக்க நன்றி!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 29, 2010 at 12:05 PM said...

//எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
கற்பனைக் குடும்பம் நல்லாத்தான் இருக்கு..//

நன்றி சந்தனா!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 29, 2010 at 12:06 PM said...

// LK said...
வசந்த் ரொம்ப அருமையா இருக்கு நண்பா. உணர்வு பூர்வமானவை
//

மிக்க நன்றி கார்த்திக் :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 29, 2010 at 12:07 PM said...

// philosophy prabhakaran said...
வசந்துக்கு திருமணம் ஆகிவிட்டதா என்ன...//

இன்னும் இல்ல ராஸா!

கல்யாணம் ஆனாத்தான் இப்படி எழுதணுமா என்ன?

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 29, 2010 at 12:08 PM said...

//Balaji saravana said...
//நிலா மகள் said...
//அழகான பார்பி பொம்மையான நீயும் யானை பொம்மையான நானும்//வயித்தில இருக்கும்போதே சரக்கடிச்சவனாட்டம் வாந்தியெடுக்கிறானே//எனக்குள்ள இருக்கிறது வாரிசு உங்களுக்குள்ள இருக்குறது தரிசு//
இதெல்லாம் கமெண்ட்டை அள்ளிட்டு வரப் போகுது பாருங்க...//

இங்க இருந்து ஸ்டார்ட் ஆயிடுச்சு :))
//

நன்றி பாலாஜி

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 29, 2010 at 12:08 PM said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
செம செம செம
//

நன்றி மாம்ஸ்

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 29, 2010 at 12:09 PM said...

// வெறும்பய said...
அருமை நண்பரே....

இது கற்பனையா இல்லை அனுபவமா...
//

கற்பனைதான் ஜெ!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 29, 2010 at 12:10 PM said...

// இமா said...
;))
//

நன்றி டீச்சர் :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 29, 2010 at 12:10 PM said...

//தமிழரசி said...
nice feel yar...
//

நன்றி மேடம்!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 29, 2010 at 12:11 PM said...

// சுந்தரா said...
அழகான குடும்பம்,அருமையான கற்பனை :)

ரசித்துச் சிரிக்கமுடிந்தது :)
//

நிஜமும் அப்படியே இருக்க வேண்டும் என்ற கற்பனைதான் !!நன்றி சுந்தரா மேடம்!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 29, 2010 at 12:12 PM said...

//vinu said...
kanavugalileaayea gudithanum, pullai purapumaaa enjoyyyyyyyyyyyyyyyyyyyyyyy
//

thanks vinu!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 29, 2010 at 12:13 PM said...

//sakthi said...
ஆமா நமக்கு பொறக்கப்போறது பையன் தான்னு எப்படி இவ்வளவு உறுதியா சொல்றீங்க? வயித்தில இருக்கும்போதே சரக்கடிச்சவனாட்டம் வாந்தியெடுக்கிறானே அதை வைத்துதான் சொன்னேன் என்றதும் ஓங்கி ஒரு குட்டு வைத்தாள் நடுமண்டையில்!

அது!!!!

வசந்த் மிக ரசித்தேன் இந்த கற்பனையை

சீக்கிரம் நிஜத்தில் நடக்கட்டும் உன் வாழ்வில் என பிரார்த்திக்கிறேன்!!!!
//

பிரார்த்தனைக்கு நன்றி சகோ!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 29, 2010 at 12:14 PM said...

//அமைதிச்சாரல் said...
ரொம்ப ரொம்ப ரொம்ப ரசிச்ச இடுகை இது...//

ரொம்ப ரொம்ப நன்றி சாரல் மேடம்!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 29, 2010 at 12:14 PM said...

//gunalakshmi said...
migavum azhagan kavidhai....
//

நன்றிங்க தனலட்சுமி!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 29, 2010 at 12:21 PM said...

//Madhavan said...
//வயித்தில இருக்கும்போதே சரக்கடிச்சவனாட்டம் வாந்தியெடுக்கிறானே அதை வைத்துதான் சொன்னேன் என்றதும் ஓங்கி ஒரு குட்டு வைத்தாள் நடுமண்டையில்!//

ஆணாதிக்கத்தின் உச்சம்.. பொட்ட புள்ள தண்ணியடிக்கக் கூடாதா ?

மத்தபடி.. ரசிக்கும்படி இருக்கிறது.
//

யார் வேணாம்ன்னா அடிக்கட்டுமே!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 29, 2010 at 12:22 PM said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
கவிதை போன்ற ஒரு பதிவு
//

நன்றி சதீஸ் குமார்!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 29, 2010 at 12:22 PM said...

// நாகராஜசோழன் MA said...
மனதை தொட்ட கவிதை. அனுபவிச்சு எழுதியதோ?//

ஆமாங்ண்ணா!

நன்றிங்ண்ணா!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 29, 2010 at 12:23 PM said...

//நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
ஹலோ எப்படீங்க அப்படியே உண்மையை புட்டு புட்டு வைக்கறீங்க....தங்கமணிக்கு வாழ்த்துக்கள்.//

வாழ்த்தை சேவ் பண்ணிட்டேங்க வரும்போது சொல்லிடறேன் நன்றிங்க!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 29, 2010 at 12:24 PM said...

//அருண் பிரசாத் said...
//கையில் வைத்திருந்த தக்காளிப்பழத்தை என் மீது எறிந்தேவிட்டாள்!//
மாப்ஸ் நல்ல வேளை கைல காய் கட் பண்ண கத்தி வெச்சி இல்ல... தப்பிச்ச...சூப்பர் பதிவு மாப்ஸ்... அடுத்து என்ன கல்யாண பத்திரிக்கைய சீக்கிரம் அனுப்பு//

அனுப்பிடலாம் மாம்ஸ்!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 29, 2010 at 12:24 PM said...

// Katz said...
வாழ்கையை கவிதையாக வாழ்கிறீர்கள். வாழ்த்துக்கள்.//

அதேதானுங் நன்றிங்க!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 29, 2010 at 12:31 PM said...

// ஜெயந்தி said...
கவிதை மாதிரி இருக்கு.//

அதான் லேபிள் வசனகவிதைன்னு போட்ருக்கேனே! நன்றி மேடம்!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 29, 2010 at 12:32 PM said...

// ஜெயந்தி said...
கவிதை மாதிரி இருக்கு.//

அதான் லேபிள் வசனகவிதைன்னு போட்ருக்கேனே! நன்றி மேடம்!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 29, 2010 at 12:33 PM said...

//சுசி said...
//நமக்கு பொறக்கப்போற பையனுக்கு என்னென்ன பொம்மையெல்லாம் வாங்கி வைக்கப்போறீங்க என்றவளிடம் அழகான பார்பி பொம்மையான நீயும் யானை பொம்மையான நானும் இருக்க தனியே வேறு பொம்மை வாங்க வேண்டுமா என்ற என் குமட்டில் தன் கைகளால் செல்லமாக இடித்து குசும்பு என்கிறாள்!//

உண்மை என்று வந்திருக்கணுமோ??

சேர்த்துக் கேட்ட வரம் சூப்பர்.

என்னம்மோ நடக்குது.. நடக்கிறது நல்லதா நடந்தா சந்தோஷம் :)
//

ஒண்ணும் நடக்கல சுசி!

நடக்க போகுது!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 29, 2010 at 12:38 PM said...

//தேவா said...
என்ன பாஸ் போன பதிவுலதான் பொண்ணு பாக்கிறதா சொன்னீங்க?

பொண்ணு ஓகே சொல்லீடாங்களா?
//

இன்னும் பார்க்கலை பாஸ் பாத்திட்டே இருக்காங்க! நன்றி தேவா

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 29, 2010 at 12:40 PM said...

//அன்னு said...
//ஆமா நமக்கு பொறக்கப்போறது பையன் தான்னு எப்படி இவ்வளவு உறுதியா சொல்றீங்க? வயித்தில இருக்கும்போதே சரக்கடிச்சவனாட்டம் வாந்தியெடுக்கிறானே அதை வைத்துதான் சொன்னேன் என்றதும் ஓங்கி ஒரு குட்டு வைத்தாள் நடுமண்டையில்!//

ஆஹா... இதுக்கு இப்படியெல்லாம் கூட அர்த்தம் செய்ய முடியுமா?? பெண் பிள்ளையா இருந்தால்தான் அதிகமா வாந்தி வரும்னு சொல்வாங்க. அப்ப எப்படி dialogue மாத்துவீங்க?? நல்ல காமெடியான, அன்பை பொழியற பதிவு. :))
//

ஆமாவா? நன்றிதங்கச்சி!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 29, 2010 at 12:43 PM said...

// கமல் said...
அருமை நண்பரே உணர்வுகள் மூலம் அனைவரும் ஒரு நாள் உணரகூடி கர்ப்ப கால காதல் !

தொடர்ந்து எழுதுங்கள் நன்றி...தொடர்கிறேன்.//

நன்றி நண்பரே தொடருங்கள்!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 29, 2010 at 12:44 PM said...

//R.பூபாலன் said...
வசந்த் அண்ணா........!!!!!!! )::::::-//

என்னடா இது ராக்கெட்டல்லாம் விடற?

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 29, 2010 at 12:44 PM said...

//Chitra said...
கலக்குறீங்க..... சூப்பர்!//

நன்றி சித்ரா மேடம்

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 29, 2010 at 12:45 PM said...

//ஈரோடு தங்கதுரை said...
Supper...!

ஒரு தமிழரை - உலக நாயகன் ஆக்குங்கள் - Please vote ...!

http://erodethangadurai.blogspot.com/2010/10/please-vote.html
//

ரைட்டு!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 29, 2010 at 12:45 PM said...

// பிரியா said...
கவித கவித

but so sweet

நிறைய எங்கயோ கேட்ட மாதிரி இருந்தாலும் கோர்வையா படிக்கும் போது அழகா தெரியுது.
//

எங்க கேட்டீங்கன்னு சொன்னீங்கன்னா நல்லாருக்கும்!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 29, 2010 at 12:46 PM said...

// மதுரை சரவணன் said...
உணர்வுப் பூர்வமான கர்பகாலம் kaathal உங்கள் வரிகளில் கவித்துவமாக வெளிப்பட்டுள்ளது/வாழ்த்துக்கள்.
//

நன்றி சரவணன்!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 29, 2010 at 12:47 PM said...

// Mahi_Granny said...
என்னமோ ஆச்சு வசந்துக்கு. ஆனாலும் ரசித்தேன்.//

ஒண்ணும் ஆகல மேடம் ரசனைக்கு நன்றி! :))

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 29, 2010 at 12:47 PM said...

// R.பூபாலன் said...
எப்டி வசந்த் அண்ணா....
படிக்க படிக்க நல்லாருக்கு.... படிச்சுட்டே இருக்கணும்னு இருக்கு....
//

படி யார் வேணாம்னா?

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 29, 2010 at 12:48 PM said...

//R.பூபாலன் said...
கம்பெனிலேர்ந்து என்னை 3D cource Training அனுப்புறாங்கன்னா....
இனி வர வரைக்கும் எந்த போஸ்டும் படிக்க முடியாதே ரொம்ப feelingsna
//

சந்தோஷமா போய்ட்டு வாங்க பூபாலன்!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 29, 2010 at 12:49 PM said...

//Thanglish Payan said...
Really Superb..

Nejama ippadi than pesuvangalo
utharana couples awesome..
//

ம்ம் பேசலாம்!

நன்றி தங்லீஷ் பையன்

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 29, 2010 at 12:49 PM said...

//Thirumathi JayaSeelan said...
அருமை.
//

நன்றி சகோ!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 29, 2010 at 12:50 PM said...

// சே.குமார் said...
Super....

Romba nalla irukku.
//

நன்றிங்க குமார்!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 29, 2010 at 12:50 PM said...

// பின்னோக்கி said...
அருமை... காதல் வடிந்தோடுகிறது ஒவ்வொரு வார்த்தைகளிலும்... :)
//

வாங்க சார் எப்படியிருக்கீங்க?

நன்றி சார்!

Trackback by கதிர்கா October 29, 2010 at 7:53 PM said...

பின்னி எடுக்கிறீங்க. கலக்கல்.