ஊருக்கு போயிருந்த மிஸஸ் வந்துட்டாங்க...

| October 9, 2010 | |
ஊருக்கு போயிருந்த மிஸஸ் வந்துட்டாங்க...
Mr. ஸ்பிரிங் : ஹேய் போயம் இங்க வா ஆபிஸ்ல இருந்து வந்து எவ்ளோ நேரமாச்சு சூடா ஒரு கப் காபி கேட்டேனே என்னாச்சு?

Mrs ஸ்பிரிங் : இந்தா பாருங்க மாமா எங்கப்பாரு ஆச ஆசயா கவிதான்னு அழகா பேரு வச்சத இப்படி போயம்ன்னு கூப்பிடறது கொஞ்சம் கூட நல்லா இல்ல

Mr. ஸ்பிரிங் : என்னடி இது பேரு கவிதா கொவிதான்னுட்டு ஊரு உலகத்துல அவன் அவன் அவங்க பொண்ணுகளுக்கு எந்த பேர் வைக்கிறதுன்றது புத்தகம் வாங்கி அதுல இருந்து ஸ்மிதா, ஸ்வர்ணா, சொப்னான்னு அழகா பேர் வைக்கிறானுங்க உங்கப்பாரு என்னடான்னா கவிதான்னு பழைய கிழவிகளுக்கு வைக்கிற பேர் எல்லாம் வச்சிருக்காரு..

Mrs ஸ்பிரிங் : த பாருங்க மாமா இந்த ஜாட மாடயா கிழவின்னு சொல்ற வேலை வச்சுகிட்டீங்க அப்ப்பறம் தினமும் ராத்திரிக்கு பட்டினிதான் சொல்லிட்டேன் எங்கப்பாரு ஏன் எனக்கு அந்த பேர் வச்சாருன்னு தெரியுமா உங்களுக்கு?

Mr. ஸ்பிரிங் : ஆமா எதுக்கு வச்சிருக்கப்போறாரு அவரோட முதல் காதலி பேரா இருந்திருக்கும் இல்லாங்காட்டி உங்க பாட்டி பேரா இருந்திருக்கும்

Mrs ஸ்பிரிங் : வாய்யா என் மாப்ள உங்கள கவனிக்கிற விதத்துல கவனிச்சாத்தான் நீங்க சரிப்படுவீங்க ராத்திரி காலை சொரண்டுவீங்கல்ல அப்போ அந்த கெரண்ட கால கரண்டியில அடிக்கிறேன்..ஏன் எனக்கு அந்த பேர் வச்சாங்கன்னு கேளுங்கன்னா...

Mr. ஸ்பிரிங் : சரி சொல்லித்தொலை

Mrs ஸ்பிரிங் : எங்கப்பாவும் எங்கம்மாவும் காதல் செஞ்சு கல்யாணம் பண்ணிகிட்டவங்க நான் பொறந்ததும் எங்கப்பா எங்கம்மாகிட்ட எனக்கு என்ன பேர் வைக்கலாம்ன்னு கேட்ருக்கார் அதுக்கு எங்கம்மா சொன்னாங்களாம் நீங்க என்னை காதலிக்கிறப்போ எழுதுன கவிதைகள் ஒண்ணு கூட எனக்கு பிடிக்கல ஆனா கல்யாணம் ஆனப்பிறகு நீங்க எழுதுன இந்த கவிதைதான் எனக்கு ரொம்ப பிடிச்சுருக்குன்னு என்னப்பார்த்துகிட்டே சொன்னாங்களாம் அதனால எங்கப்பாரு எனக்கு கவிதான்னு பேர் வச்சுட்டாங்க மாமோய்...

Mr. ஸ்பிரிங் : மானங்கெட்ட குடும்பமா இருக்கும் போல அடச்சேய் இதெல்லாம் போய் அவங்க கிட்ட கேட்ருக்கியே உனக்கு வெட்கமா இல்ல?

Mrs ஸ்பிரிங் : அய்ய தோ பார்டா அது என் பாட்டி எனக்கு சொல்லி தெரிஞ்சுகிட்டேன்,அது இருக்கட்டும் உங்களுக்கு ஏன் அந்த பேர் வச்சாங்க?

Mr. ஸ்பிரிங் : இது இப்போ ரொம்ப முக்கியமா?

Mrs ஸ்பிரிங் : அப்பறம் நீங்க என் பேரை டேமேஜ் பண்ணுனதுல பாதியாச்சும் உங்க பேரை நான் டேமேஜ் பண்ணலைன்னா நான் ஜக்கம்மா பரம்பரையில வந்தவளே இல்லை. சொல்லுங்க என் செல்லம்ல சொன்னீங்கன்னாத்தான் காபி கிடைக்கும் ஆமா!

Mr. ஸ்பிரிங் : அது நான் வசந்த காலத்துல பிறந்ததால வசந்த்ன்னு பேர் வச்சாங்கன்னு எங்கப்பா சொல்லியிருக்கார்..

Mrs ஸ்பிரிங் : அடடடா நீங்க குளிர் காலாத்துலயும் கோடை காலத்துலயும் பொறக்காம போய்ட்டீங்களே மாமா!

Mr. ஸ்பிரிங் :  ஏன்?

Mrs ஸ்பிரிங் : இல்லை குளிர் காலத்துல பொறந்திருந்தா குளிர்குமாருன்னும், கோடை காலத்துல பொறந்திருந்தா கோடைகுமாருன்னும் பேர் வச்சுருப்பாங்க இல்லயா அதச்சொன்னேன்..


Mr. ஸ்பிரிங் : அட அட எம்புட்டு அறிவுடி உனக்கு உன்னை உங்கப்பாரு சுடுக்காட்டுதலையன் பெத்தாரா இல்லை கடையில செஞ்சு வாங்குனாரா?

Mrs ஸ்பிரிங் : என்னை திட்ட உங்களுக்கு உரிமை இருக்கு எங்கப்பாவ திட்டுற வேலை வச்சுகிட்டீங்கன்னா கணவன் தூங்கும் பொழுது கல்லை தூக்கி போட்டு கொன்ற மனைவின்னு நூஸ் வரும் பரவாயில்லையா?

Mr. ஸ்பிரிங் : கவிதை சரியீல்லைன்னா அதையெழுதுனவனத்தானடி திட்ட முடியும் கவிதையவா திட்ட முடியும் ? எப்பிடி உன்னோட ஸ்டைல்லயே உன்னை கவுத்துனேனா இல்லியா?

Mrs ஸ்பிரிங் : இருங்க என் ஸ்டைல் என்னான்னு காட்டறேன் ( சமையல் அறைக்கு சென்று காபி எடுக்க போகிறார் ஒரு கப்பில் காபியை எடுத்துகொண்டு வருகிறார் வந்ததும்  Mr. ஸ்பிரிங் ன் முஞ்சியில் ஊற்றி விடுகிறார்)

Mr. ஸ்பிரிங் :  அய்யோ அம்மாஆஆஆஆ

Mrs ஸ்பிரிங் : எப்பிடி மாமா நம்ம ஸ்டைலு? இதுதான் கவிதா ஸ்டைல் ஜாக்கிரத...

(இவர்களைப்பற்றி அறியாதவர்கள் கலாட்டா 1, கலாட்டா 2 , வாசிக்கவும்)

Post Comment

74 comments:

Trackback by எல் போர்ட்.. பீ சீரியஸ்.. October 9, 2010 at 3:45 AM said...

//குளிர் காலத்துல பொறந்திருந்தா குளிர்குமாருன்னும், கோடை காலத்துல பொறந்திருந்தா கோடைகுமாருன்னும் பேர் வச்சுருப்பாங்க//

// கவிதை சரியீல்லைன்னா அதையெழுதுனவனத்தானடி திட்ட முடியும் கவிதையவா திட்ட முடியும் ?//

ஒருத்தருக்கொருத்தர் நல்லா கால வாரிக்கறீங்க :))

Trackback by Unknown October 9, 2010 at 3:55 AM said...

அடி வாங்கி வாங்கி உடம்ப ஸ்பிரிங் மாதிரி வசிருக்கிறதுனால உங்க பேர் MR ஸ்பிரிங்கோ.....

Trackback by Mukil October 9, 2010 at 4:35 AM said...

Kavitha,

pesama, neenga unga mama va "uncle" nu koopdunga...

antha englipish kum, intha englipish kum sariya poyidum... :-)

Nice post!

Trackback by அப்பாதுரை October 9, 2010 at 4:57 AM said...

அட்டகாசம்! ரசித்துப் படித்தேன்.
/கல்யாணம் ஆனப்பிறகு நீங்க எழுதுன இந்த கவிதைதான் எனக்கு ரொம்ப பிடிச்சுருக்குன்னு//
அழகோ அழகு..

Trackback by ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) October 9, 2010 at 5:48 AM said...

மாப்பு இப்ப உடம்பு எப்டி இருக்கு. காபி சூடு அதிகமோ?

Trackback by சாந்தி மாரியப்பன் October 9, 2010 at 6:17 AM said...

படமே ஆயிரம் விஷயங்களை சொல்லிவிட்டது. எதுக்கும் இனிமே கொஞ்சநாளுக்கு,.. சூடா காபி வேணும்ன்னு கேக்காதீங்க.ஒரு தற்காப்புக்காகத்தான் :-))))))

Trackback by ராமலக்ஷ்மி October 9, 2010 at 6:24 AM said...

நல்ல கலாட்டா:)!

Trackback by எல் கே October 9, 2010 at 6:34 AM said...

ஆணாதிக்கவாதி வசந்த்

Trackback by erodethangadurai October 9, 2010 at 6:44 AM said...

நல்ல பதிவு... மேலும், உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி, தொடர்ந்து வருகை தாருங்கள்.. !

Trackback by பவள சங்கரி October 9, 2010 at 6:55 AM said...

ரொம்ப நல்லாயிருக்குங்க.....இரசிச்சு படிச்சேன்....கவிதாகிட்டே சொல்லாதீங்க.....திட்டப் போறாங்க....ஹ...ஹா......

Trackback by எஸ்.கே October 9, 2010 at 8:00 AM said...

இனிமை! இனிமை!

Trackback by தமிழ் உதயம் October 9, 2010 at 8:24 AM said...

எவ்வளவு நேரந்தான்கூடல்ல இருப்பது. கொஞ்சம் ஊடலும் இருக்கட்டுமே.

Trackback by மங்குனி அமைச்சர் October 9, 2010 at 8:51 AM said...

Mrs ஸ்பிரிங் : அடடடா நீங்க குளிர் காலாத்துலயும் கோடை காலத்துலயும் பொறக்காம போய்ட்டீங்களே மாமா!////

ரெண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்து இருந்தால் என்ன பேர் வச்சு இருப்பாங்க ????

Trackback by அகல்விளக்கு October 9, 2010 at 8:57 AM said...

இப்போதைக்கு ஆடுங்க....

கலியாணத்துக்கப்புறம் இருக்கு மவனே....

Trackback by elamthenral October 9, 2010 at 8:58 AM said...

நகைசுவையாய் இருக்கிறது போங்கோ!!! அருமை வசந்த்..

Trackback by Unknown October 9, 2010 at 9:04 AM said...

interesting vasanth

அவங்க பேரு கவிதாவா :P

Anonymous — October 9, 2010 at 9:10 AM said...

ஸ்பிரிங் உங்களுக்கு எப்ப காபி கொடுக்க ஆள் வரப்போகுதோ...

Trackback by நர்சிம் October 9, 2010 at 9:24 AM said...

;);)

Trackback by Chitra October 9, 2010 at 9:25 AM said...

கவிதை சரியீல்லைன்னா அதையெழுதுனவனத்தானடி திட்ட முடியும் கவிதையவா திட்ட முடியும் ?


......எப்படிங்க இப்படி? புல்லரிச்சு போச்சு!

Trackback by Jaleela Kamal October 9, 2010 at 10:45 AM said...

ஒரு காப்பிக்கா இத்தனை ஆர்பாட்டம்.

Trackback by taaru October 9, 2010 at 11:53 AM said...

நான் ரொம்ப எதிர் பாத்துட்டேன்!!! :(

Trackback by பன்னிக்குட்டி ராம்சாமி October 9, 2010 at 12:50 PM said...

பங்காளி டீசர்ட் பாத்திருக்கேன், காபி சர்ட் இப்போதான் பாக்குறேன்!, அப்புறம் காபி நல்லா இருந்துச்சா?

Trackback by பன்னிக்குட்டி ராம்சாமி October 9, 2010 at 12:53 PM said...

///மங்குனி அமைசர் said...
Mrs ஸ்பிரிங் : அடடடா நீங்க குளிர் காலாத்துலயும் கோடை காலத்துலயும் பொறக்காம போய்ட்டீங்களே மாமா!////

ரெண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்து இருந்தால் என்ன பேர் வச்சு இருப்பாங்க ????///

இடைக்கால குமார் என்று வைத்திருப்பார்கள் அமைச்சரே. நீர் மங்குனியென்று அடிக்கொருதரம் நிரூபித்டுக் விடுகிறீர்!

Trackback by சத்ரியன் October 9, 2010 at 5:18 PM said...

//ராத்திரி காலை சொரண்டுவீங்கல்ல //

வசந்த்,

யெப்பா...! பட்டைய கெளப்பறாளே மிஸஸ்.ஸ்பிரிங்....!

(இதுல இருக்கிறது ராத்திரியா? காலையா?)

Trackback by சுசி October 9, 2010 at 5:30 PM said...

என்ன இருந்தாலும் வசந்த்குமார் மாதிரி வருமாஆஆஆஆவ்வ்வ்..

இது ஆ க..

Trackback by மாதேவி October 9, 2010 at 5:45 PM said...

செம கலாட்டா.

Trackback by sakthi October 9, 2010 at 9:26 PM said...

பெண்ணியவாதி கவிதா வாழ்க !!!

Trackback by sakthi October 9, 2010 at 9:28 PM said...

சிலருக்கு மட்டுமே நகைச்சுவை உணர்வு
அபரிதமாக இருக்கும் உங்களின் பதிவுகள் அனைத்தும் மனதில் இருக்கும் ரணங்களை சற்று நேரம் மறக்கடிக்க செய்யும் வலிமையுடையவை வசந்த்!!!
தொடருங்கள்!!!
வாழ்த்துகள்!!!

Trackback by அருண் பிரசாத் October 9, 2010 at 9:30 PM said...

get well soon vasant

Trackback by ஹேமா October 9, 2010 at 10:15 PM said...

வசந்து...மனம் பாரமாக இருக்கும்போது உங்க பதிவின் பக்கம் வந்தாலே போதும்.சிரிக்க வைக்கும் எழுத்தும் உணர்வும்.நன்றி.

Trackback by 'பரிவை' சே.குமார் October 9, 2010 at 11:19 PM said...

அட்டகாசம்! ரசித்துப் படித்தேன்.

Trackback by சீமான்கனி October 10, 2010 at 2:13 AM said...

மாப்ளே அம்பூட்டையும் ஒரு புக்கா போட்டு அருக்கனிக்கு அனுப்பி வைக்கிறேன்...

பெயர் காரணம்:அருக்காணி ஸ்ப்ரிங் ஜடை...

Trackback by பின்னோக்கி October 10, 2010 at 11:08 AM said...

சிரிப்பா எழுதியிருக்கீங்க..

எனக்கொரு உண்மை தெரிஞ்சாவனும். என்ன நடக்குது... கொஞ்ச நாளா குடும்ப பதிவாவே வருதே... ம்ம்ம்ம் :)

Trackback by Sindhu October 10, 2010 at 11:36 AM said...

ஹாஹஹஹஹஹஹஹஹஹஹஹஹா

Trackback by ஜெயந்தி October 10, 2010 at 3:20 PM said...

அது என்ன ஸ்பிரிங்? நல்லா சிரிக்க வைத்தது பதிவு.

Trackback by நிலாமகள் October 10, 2010 at 10:06 PM said...

சக்தியையும் ஹேமாவையும் வழிமொழிகிறேன்.

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 11, 2010 at 2:25 AM said...

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
//குளிர் காலத்துல பொறந்திருந்தா குளிர்குமாருன்னும், கோடை காலத்துல பொறந்திருந்தா கோடைகுமாருன்னும் பேர் வச்சுருப்பாங்க//

// கவிதை சரியீல்லைன்னா அதையெழுதுனவனத்தானடி திட்ட முடியும் கவிதையவா திட்ட முடியும் ?//

ஒருத்தருக்கொருத்தர் நல்லா கால வாரிக்கறீங்க :))//

ஆமாங்க அதானே சந்தோஷம்...சும்மா ஒருத்தர் மூஞ்ச ஒருத்தர் பார்த்துட்டு இருந்தா நல்லாவா இருக்கும்?
நன்றி சந்தனா!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 11, 2010 at 2:41 AM said...

//கலாநேசன் said...
அடி வாங்கி வாங்கி உடம்ப ஸ்பிரிங் மாதிரி வசிருக்கிறதுனால உங்க பேர் MR ஸ்பிரிங்கோ.....//

அப்படித்தான்னு கூட வச்சிக்கலாம் நேசன் நன்றிப்பா!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 11, 2010 at 2:44 AM said...

// Mukilarasi said...
Kavitha,

pesama, neenga unga mama va "uncle" nu koopdunga...

antha englipish kum, intha englipish kum sariya poyidum... :-)

Nice post!//

ரைட்டுங்க..!

சப்போர்ர்ட்டு ம்ம்

நன்றி மேடம்!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 11, 2010 at 2:48 AM said...

// அப்பாதுரை said...
அட்டகாசம்! ரசித்துப் படித்தேன்.
/கல்யாணம் ஆனப்பிறகு நீங்க எழுதுன இந்த கவிதைதான் எனக்கு ரொம்ப பிடிச்சுருக்குன்னு//
அழகோ அழகு..//

நன்றிங்க அப்பாத்துரை :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 11, 2010 at 2:49 AM said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மாப்பு இப்ப உடம்பு எப்டி இருக்கு. காபி சூடு அதிகமோ?//

ம்ம் பரவாயில்ல நன்றி மாம்ஸ்!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 11, 2010 at 2:50 AM said...

//அமைதிச்சாரல் said...
படமே ஆயிரம் விஷயங்களை சொல்லிவிட்டது. எதுக்கும் இனிமே கொஞ்சநாளுக்கு,.. சூடா காபி வேணும்ன்னு கேக்காதீங்க.ஒரு தற்காப்புக்காகத்தான் :-))))))//

கேட்கவே மாட்டேனுங்க ..
நன்றி சாரல் மேடம்!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 11, 2010 at 2:50 AM said...

// ராமலக்ஷ்மி said...
நல்ல கலாட்டா:)!//

நன்றி மேடம் :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 11, 2010 at 2:51 AM said...

//LK said...
ஆணாதிக்கவாதி வசந்த்//

யோவ் ஒருத்தன் அடி வாங்குனா ஆணாதிக்கவாதியா? அடிகொடுத்தா ஆணாதிக்கவாதியா எனக்கொரு உண்ம தெரிஞ்சாகணும்!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 11, 2010 at 2:52 AM said...

//ஈரோடு தங்கதுரை said...
நல்ல பதிவு... மேலும், உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி, தொடர்ந்து வருகை தாருங்கள்.. !//

ரைட்டுங்க!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 11, 2010 at 2:53 AM said...

// நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
ரொம்ப நல்லாயிருக்குங்க.....இரசிச்சு படிச்சேன்....கவிதாகிட்டே சொல்லாதீங்க.....திட்டப் போறாங்க....ஹ...ஹா......//

ம்ஹ்ஹும் சொல்லமாட்டேனே

நன்றிங்க நித்திலம்!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 11, 2010 at 2:53 AM said...

//எஸ்.கே said...
இனிமை! இனிமை!//

நன்றி எஸ். கே! :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 11, 2010 at 2:54 AM said...

தமிழ் உதயம் said...
எவ்வளவு நேரந்தான்கூடல்ல இருப்பது. கொஞ்சம் ஊடலும் இருக்கட்டுமே.

//

ஊடல் கூடல் ரெண்டும் வேற வேறயா? சார்?

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 11, 2010 at 3:04 AM said...

// மங்குனி அமைசர் said...
Mrs ஸ்பிரிங் : அடடடா நீங்க குளிர் காலாத்துலயும் கோடை காலத்துலயும் பொறக்காம போய்ட்டீங்களே மாமா!////

ரெண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்து இருந்தால் என்ன பேர் வச்சு இருப்பாங்க ????
//

ங்கொய்யான்னு...

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 11, 2010 at 3:05 AM said...

//அகல்விளக்கு said...
இப்போதைக்கு ஆடுங்க....

கலியாணத்துக்கப்புறம் இருக்கு மவனே....
//

அப்பறமும் இப்படித்தான் ஆடுவோமாக்கும் ...

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 11, 2010 at 3:25 AM said...

// புஷ்பா said...
நகைசுவையாய் இருக்கிறது போங்கோ!!! அருமை வசந்த்..
//

நன்றி புஷ்பா!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 11, 2010 at 3:28 AM said...

நட்புடன் ஜமால் said...
interesting vasanth

அவங்க பேரு கவிதாவா :P
//

ஹ ஹ ஹா கற்பனைங்ண்ணா!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 11, 2010 at 3:28 AM said...

//தமிழரசி said...
ஸ்பிரிங் உங்களுக்கு எப்ப காபி கொடுக்க ஆள் வரப்போகுதோ...//

ம்ம்.. நன்றி மேடம்

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 11, 2010 at 3:29 AM said...

// நர்சிம் said...
;);)
//

நன்றி நர்சிம் அண்ணா :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 11, 2010 at 3:29 AM said...

//Chitra said...
கவிதை சரியீல்லைன்னா அதையெழுதுனவனத்தானடி திட்ட முடியும் கவிதையவா திட்ட முடியும் ?


......எப்படிங்க இப்படி? புல்லரிச்சு போச்சு!
//

ஹிஹிஹி நன்றி சித்ராம்மா!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 11, 2010 at 3:30 AM said...

//Jaleela Kamal said...
ஒரு காப்பிக்கா இத்தனை ஆர்பாட்டம்.
//

ஆமாங்க சகோ!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 11, 2010 at 3:31 AM said...

// taaru said...
நான் ரொம்ப எதிர் பாத்துட்டேன்!!! :(
//

ஏன் மாம்ஸ் இன்னும் நிறைய அடி வாங்குவேன்னு எதிர்பார்த்தீங்களா?

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 11, 2010 at 3:31 AM said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
பங்காளி டீசர்ட் பாத்திருக்கேன், காபி சர்ட் இப்போதான் பாக்குறேன்!, அப்புறம் காபி நல்லா இருந்துச்சா?
//

லொல்லு !

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 11, 2010 at 3:33 AM said...

//சத்ரியன் said...
//ராத்திரி காலை சொரண்டுவீங்கல்ல //

வசந்த்,

யெப்பா...! பட்டைய கெளப்பறாளே மிஸஸ்.ஸ்பிரிங்....!

(இதுல இருக்கிறது ராத்திரியா? காலையா?)
//

ஆஹா இந்தமாதிரில்லாம் கேள்வி கேட்டீங்கன்னா கவிதாகிட்ட சொல்லி வீட்டுக்கு வரும்போது காபி கொடுக்க சொல்லிருவேன் சூடா ஆமா’!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 11, 2010 at 3:33 AM said...

//சுசி said...
என்ன இருந்தாலும் வசந்த்குமார் மாதிரி வருமாஆஆஆஆவ்வ்வ்..

இது ஆ க..
//

ஆனந்த கண்ணீரா சுசி..!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 11, 2010 at 3:34 AM said...

//மாதேவி said...
செம கலாட்டா.//

நன்றி மேடம்!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 11, 2010 at 3:35 AM said...

//sakthi said...
பெண்ணியவாதி கவிதா வாழ்க !!!
//

யக்கா பதிவுலகத்துல இருக்குற கவிதான்ற பதிவர்கள் எல்லாம் வந்து என்னைய கும்முறதுக்கா ஆவ்வ்வ்வ்...

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 11, 2010 at 3:36 AM said...

//sakthi said...
சிலருக்கு மட்டுமே நகைச்சுவை உணர்வு
அபரிதமாக இருக்கும் உங்களின் பதிவுகள் அனைத்தும் மனதில் இருக்கும் ரணங்களை சற்று நேரம் மறக்கடிக்க செய்யும் வலிமையுடையவை வசந்த்!!!
தொடருங்கள்!!!
வாழ்த்துகள்!!!
//

எல்லாம் உங்க ஆசிர்வாதம் தான் சகோ மிக்க சந்தோஷம் நன்றி நன்றி!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 11, 2010 at 3:37 AM said...

//அருண் பிரசாத் said...
get well soon vasant
//

ஆகட்டும் தோ வர்றேண்டி மாம்ஸ்!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 11, 2010 at 3:37 AM said...

//ஹேமா said...
வசந்து...மனம் பாரமாக இருக்கும்போது உங்க பதிவின் பக்கம் வந்தாலே போதும்.சிரிக்க வைக்கும் எழுத்தும் உணர்வும்.நன்றி.
//

அப்படியா ஜொள்ளவேயில்ல நன்றி ஹேமா! :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 11, 2010 at 3:38 AM said...

//சே.குமார் said...
அட்டகாசம்! ரசித்துப் படித்தேன்.
//

நன்றி

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 11, 2010 at 3:39 AM said...

//சீமான்கனி said...
மாப்ளே அம்பூட்டையும் ஒரு புக்கா போட்டு அருக்கனிக்கு அனுப்பி வைக்கிறேன்...

பெயர் காரணம்:அருக்காணி ஸ்ப்ரிங் ஜடை...
//

அடப்பாவி இன்னும் நீ அருக்காணிய மறக்கலையா?

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 11, 2010 at 3:40 AM said...

//பின்னோக்கி said...
சிரிப்பா எழுதியிருக்கீங்க..

எனக்கொரு உண்மை தெரிஞ்சாவனும். என்ன நடக்குது... கொஞ்ச நாளா குடும்ப பதிவாவே வருதே... ம்ம்ம்ம் :)
//

அதானுங்க சார் எனக்கும் தெரியலை! :)))

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 11, 2010 at 3:40 AM said...

ஜெயந்தி said...
அது என்ன ஸ்பிரிங்? நல்லா சிரிக்க வைத்தது பதிவு.
//

ஸ்பிரிங் - வசந்தகாலம்

நன்றி மேடம்

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 11, 2010 at 3:41 AM said...

//நிலா மகள் said...
சக்தியையும் ஹேமாவையும் வழிமொழிகிறேன்.//

அப்படியா அப்படின்னா அவங்களுக்கு சொன்னதேதான் உங்களுக்கும் நன்றி சகோ!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 11, 2010 at 3:45 AM said...

//priya said...
ஹாஹஹஹஹஹஹஹஹஹஹஹஹா/

நன்றி ப்ரியா!

Trackback by NaSo October 11, 2010 at 8:08 AM said...

///Mrs ஸ்பிரிங் : என்னை திட்ட உங்களுக்கு உரிமை இருக்கு எங்கப்பாவ திட்டுற வேலை வச்சுகிட்டீங்கன்னா கணவன் தூங்கும் பொழுது கல்லை தூக்கி போட்டு கொன்ற மனைவின்னு நூஸ் வரும் பரவாயில்லையா?///

இந்த நியூஸ எப்ப எதிர்பார்க்கலாம் Mr ஸ்ப்ரிங்?

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 13, 2010 at 12:42 AM said...

/////Mrs ஸ்பிரிங் : என்னை திட்ட உங்களுக்கு உரிமை இருக்கு எங்கப்பாவ திட்டுற வேலை வச்சுகிட்டீங்கன்னா கணவன் தூங்கும் பொழுது கல்லை தூக்கி போட்டு கொன்ற மனைவின்னு நூஸ் வரும் பரவாயில்லையா?///

இந்த நியூஸ எப்ப எதிர்பார்க்கலாம் Mr ஸ்ப்ரிங்?
//

அது என் கையில இல்லியே!

Trackback by இமா க்றிஸ் October 21, 2010 at 3:45 AM said...

;)