தாயமும் வாழ்க்கையும் ஒண்ணு...!

| October 6, 2010 | |



எத்தனையோ முறை
திட்டச்சொல்லியும்
திட்டவே மாட்டேன்
என்கிறது அதற்குத்தான்
எவ்வளவு நல்லமனசு
மணல்திட்டு

*****************************************

விலா எழும்பு புடைத்து
திரியும் நாய்க்கு இந்த முறையாவது
கறியை தின்று நல்லி எழும்பை
மிச்சம் வைக்கலாம் என்று பார்த்தால்
எலும்புக்கறி வாங்கத்தான்
காசிருக்கிறது

*****************************************

எப்பொழுதோ கட்டி
முடிக்கப்பட்ட படியை
படிக்கட்டு என்றழைப்பது
எந்த விதத்தில் நியாயம்?


*****************************************

பின்னோக்கி சுற்றும்
கடிகாரம் வைத்திருப்பவன்
முன்னோக்கி சுற்றும்
கடிகாரம் வைத்திருப்பவன்
இருவரின்ஆரம்பமும் ஒரே ஆரம்ப புள்ளியில்
தொடங்கினாலும் முடிவுறுகையில்
முன்னோக்கி சுற்றும் கடிகாரம்
வைத்திருப்பவன் முற்றுப்புள்ளியாகவும் 
பின்னோக்கி சுற்றும் கடிகாரம்
வைத்திருப்பவன் காற்புள்ளியாகவும்
போவதின் மர்மம் ஞான் அறியேன் பராபரமே

*****************************************

சிறகடித்துப்பறக்கும் என் 
தேவதையின் துப்பட்டா 
சிறகுகளாகிப்போவதினாலே
சில்மிச நேரங்களில்
அதை பிடுங்கியெறிய 
மனசு வருவதேயில்லை...

*****************************************

உறக்கம் தொலைந்ததும்
கனவும் தொலைந்தது
மீண்டும் வந்த உறக்கம்
தொலைந்த கனவை தேடி தேடி
தொலைந்தே போனது...


*****************************************

உன்னை தேடுவதற்க்கு
நான் அனுப்பிய தென்றல்
உன்னை கண்ட களிப்போ
இல்லை நீ தந்த கதகதப்போ
திரும்பி வந்து என்னில் தகிக்கிறது
திருப்பி அனுப்பச்சொல்லி...


*****************************************

இரவு முழுவதும்
எங்கு தேடியும் 
கிடைக்கவில்லை
நம் ஜோடி நிழல்கள் 
நம்மைப்போலவே

*****************************************























பனித்துளியுடுத்திய
ரோஜாவின் 
ஒற்றை இதழாய்
மலரும் உன் புன்னகை 
பறிக்க வந்த 
காதல் மரம் நான்

*****************************************



நீயும் நானும்
பேசாத பொழுதுகளில்
நம் இதயங்கள்
பேசும் வரம் பெற்ற
ஊமைகளாக...

*****************************************


தாயமும்
வாழ்க்கையும்
ஒன்றுதான் போல்
தாயம் எனும்
மனைவி வந்த பிறகுதான்
வாழ்க்கையும் ஆரம்பிக்கிறது
செல்லும் வழியெங்கும்
உடன் வருவோரின்
இழப்புகள் ,
நிலையில்லா இருப்பிடம்,
சொல்லி வைத்தாற்போல்
இரண்டிலும் அறுபத்தைந்தில்
முடியும் ஆட்டம்
ஆட்டம் முடிந்ததும்
முடிவில் எடுத்துச்செல்ல
ஒன்றுமில்லை
நேரம் கழிந்ததுதான்
மிச்சம் இரண்டிலும்...



*****************************************


நன்றி நன்றி



Post Comment

60 comments:

Trackback by நட்புடன் ஜமால் October 6, 2010 at 4:13 AM said...

மணல்திட்டு
படிகட்டு

வார்த்தை விளையாட்டு

நிழல் மிக அருமை ...

Trackback by Chitra October 6, 2010 at 4:34 AM said...

எப்பொழுதோ கட்டி
முடிக்கப்பட்ட படியை
படிக்கட்டு என்றழைப்பது
எந்த விதத்தில் நியாயம்?

......நியாயமான கேள்வி.

Trackback by பனங்காட்டு நரி October 6, 2010 at 4:36 AM said...

CLASSIC !!!!!!! vasanth....,keep going on

Trackback by எல் போர்ட்.. பீ சீரியஸ்.. October 6, 2010 at 5:59 AM said...

நல்லாயிருக்கு வசந்த்.. கனவு கவித டாப்!!

Trackback by priya October 6, 2010 at 7:43 AM said...

//உன்னை தேடுவதற்க்கு
நான் அனுப்பிய தென்றல்
உன்னை கண்ட களிப்போ
இல்லை நீ தந்த கதகதப்போ
திரும்பி வந்து என்னில் தகிக்கிறது
திருப்பி அனுப்பச்சொல்லி...//....................super vasanth........u r rocking......keep going .....:)))

Trackback by தமிழ் உதயம் October 6, 2010 at 9:09 AM said...

கவிதைகள் எல்லாம் நல்லா இருக்கு.

Trackback by அமைதிச்சாரல் October 6, 2010 at 9:09 AM said...

எல்லாமே சூப்பர்.. தாயம் சூப்பரோ சூப்பர்..

Trackback by VISA October 6, 2010 at 9:34 AM said...

தலைவருக்கு லவ் மூட் ஸ்டார்ட் ஆயிடிச்சுடோய்...

Trackback by அருண் பிரசாத் October 6, 2010 at 11:02 AM said...

மாப்ள... எல்லா கவிதையும் நச்..

Trackback by எஸ்.கே October 6, 2010 at 11:28 AM said...

எல்லாக் கவிதைகளும் சிறப்பாக உள்ளன!

Trackback by ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) October 6, 2010 at 11:30 AM said...

இது face book கில் சுட்டது...

Trackback by சுசி October 6, 2010 at 11:36 AM said...

ரொம்ப நல்லா இருக்குப்பா..

வித்தியாசமா எழுதி இருக்கிங்க.

Trackback by பின்னோக்கி October 6, 2010 at 11:48 AM said...

என்னவோ.. என்ன மாயமோ தெரியலை.. வசந்துக்கு கவிதை அருவி மாதிரி கொட்டுது.. நல்லாயிருக்கு.. வேற எதாவது தகவல் இருக்கா ?

Trackback by பிரியமுடன் ரமேஷ் October 6, 2010 at 12:02 PM said...

அருமையான கவிதைகள்...தனித்தனியாக வெளியிட்டிருந்தால்..இன்னும் ரசித்திருக்கலாம் என்று தோன்றுகிறது..

Trackback by ஹேமா October 6, 2010 at 12:25 PM said...

காதல் கவிதையைவிட தத்துவக்கவிதை....
தத்துவக்கவிதையைவிட காதல் கவிதை நல்லாயிருக்க்கு.
மணல்மேடு,கடிகாரம் திரும்பத்திரும்ப சிந்திக்க வைக்கிறது.

Trackback by சி.பி.செந்தில்குமார் October 6, 2010 at 12:31 PM said...

கவிதைகள் கலக்கல் ரகம்,இதையே பிரித்து 10 பதிவாக போட்டிருக்கலாம்.

Trackback by இந்திரா October 6, 2010 at 1:25 PM said...

//உறக்கம் தொலைந்ததும்
கனவும் தொலைந்தது
மீண்டும் வந்த உறக்கம்
தொலைந்த கனவை தேடி தேடி
தொலைந்தே போனது//

ரசனைக்குரிய வரிகள்

Trackback by sakthi October 6, 2010 at 5:33 PM said...

நீயும் நானும்
பேசாத பொழுதுகளில்
நம் இதயங்கள்
பேசும் வரம் பெற்ற
ஊமைகளாக...

vasanth superb ya

Trackback by sakthi October 6, 2010 at 5:35 PM said...

/உன்னை தேடுவதற்க்கு
நான் அனுப்பிய தென்றல்
உன்னை கண்ட களிப்போ
இல்லை நீ தந்த கதகதப்போ
திரும்பி வந்து என்னில் தகிக்கிறது
திருப்பி அனுப்பச்சொல்லி.

::))))

என்ன சொல்லி பாராட்ட

Trackback by kavisiva October 6, 2010 at 5:55 PM said...

ரொம்ப ரொம்ப நல்லாருக்கு வசந்த். எதிர்கவுஜைதான் எழுத முடியல:(

Trackback by Kala October 6, 2010 at 6:12 PM said...

உங்கள் எண்ண ஆவியில் வேகவைத்து
எடுத்துப் போட்டிருந்தால்.....
மிக,மிக அருமையான படை{யல்}ப்பு,

யாராவது சுட்டதை ! சுடவில்லையே!!!

இவ்வளவு அழகாகக் கவிதை வருமாஆஆஆஆஆஆ...
ஒரு சந்தேகம் தான்.........
சும்மா..சும்மா...

Trackback by கே.ஆர்.பி.செந்தில் October 6, 2010 at 7:36 PM said...

கவிஞர் வசந்த் ...

Trackback by தமிழரசி October 7, 2010 at 7:31 AM said...

என் கமெண்ட காணோம்..எங்கே போச்சு?

Trackback by நிலா மகள் October 7, 2010 at 10:10 AM said...

முதல் மூன்றும் . படித்து புன்னகைத்தேன் . நான்கும் கடைசியும் சிந்தை கிளர்த்தும் தத்துவம். மீதமான காதல் கவிதைகளில் தேர்ச்சி தெரிகிறது.

Trackback by ப.செல்வக்குமார் October 7, 2010 at 2:52 PM said...

எல்லாமே கலக்கலா இருக்குங்க .
அதிலும் மணல்திட்டு , படிக்கட்டு அருமை ..
அப்புறம் நிழல் கலக்கல் ..

Trackback by ராமலக்ஷ்மி October 7, 2010 at 6:10 PM said...

அத்தனையும் அருமை வசந்த். நிழல்கள் ரொம்பப் பிடித்தது.

Trackback by சீமான்கனி October 7, 2010 at 9:24 PM said...

ஒரு பதிவில் இத்தனை விருந்துகளா!!!!சிலவை முன்பே படித்தாலும் படிக்க படிக்க ஆசையா இருக்கு...வாழ்த்துகள் நன்றி மாப்பி...

Trackback by ஜெயந்தி October 7, 2010 at 10:21 PM said...

கவிதைகள் நல்லாயிருக்கு.

Trackback by ஜிஜி October 8, 2010 at 5:13 AM said...

கவிதைகள் எல்லாமே சூப்பர்..

//உறக்கம் தொலைந்ததும்
கனவும் தொலைந்தது
மீண்டும் வந்த உறக்கம்
தொலைந்த கனவை தேடி தேடி
தொலைந்தே போனது...//

வரிகள் நல்லாயிருக்கு.

Trackback by ஸ்ரீராம். October 8, 2010 at 11:15 AM said...

உறக்கம் தொலைத்த கனவு ரசிக்க வைத்தது. திட்டாத மணலும் அழகு.

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 8, 2010 at 4:24 PM said...

நட்புடன் ஜமால் said...
மணல்திட்டு
படிகட்டு

வார்த்தை விளையாட்டு

நிழல் மிக அருமை ...
//

இன்னும் நிறைய வார்த்தைகளை வைத்து விளையாட ஆசைதான் வார்த்தைகள் சிக்க மாட்டேன்னுது மிக்க நன்றிண்ணா ம்ம் :)))

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 8, 2010 at 4:28 PM said...

//Chitra said...
எப்பொழுதோ கட்டி
முடிக்கப்பட்ட படியை
படிக்கட்டு என்றழைப்பது
எந்த விதத்தில் நியாயம்?

......நியாயமான கேள்வி.
//

ம்ம் நன்றி சித்ராம்ம்மா!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 8, 2010 at 4:29 PM said...

//பனங்காட்டு நரி said...
CLASSIC !!!!!!! vasanth....,keep going on//

உள் கடி எதுவும் இல்லியே நரி ஹ ஹ ஹா நன்றி ராசா!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 8, 2010 at 4:30 PM said...

//எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
நல்லாயிருக்கு வசந்த்.. கனவு கவித டாப்!!//

நன்றி சந்தனா!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 8, 2010 at 4:31 PM said...

//priya said...
//உன்னை தேடுவதற்க்கு
நான் அனுப்பிய தென்றல்
உன்னை கண்ட களிப்போ
இல்லை நீ தந்த கதகதப்போ
திரும்பி வந்து என்னில் தகிக்கிறது
திருப்பி அனுப்பச்சொல்லி...//....................super vasanth........u r rocking......keep going .....:)))//

ஓ ப்ரியா ப்ரியா ஆவ்வ்வ் நன்றிங்க!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 8, 2010 at 4:31 PM said...

//தமிழ் உதயம் said...
கவிதைகள் எல்லாம் நல்லா இருக்கு.//

நன்றி ரமேஷ் சார்

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 8, 2010 at 4:32 PM said...

//அமைதிச்சாரல் said...
எல்லாமே சூப்பர்.. தாயம் சூப்பரோ சூப்பர்..//

நன்றி சாரல் மேடம் அதாலதான் ஹெட்டிங் அது !

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 8, 2010 at 4:34 PM said...

// VISA said...
தலைவருக்கு லவ் மூட் ஸ்டார்ட் ஆயிடிச்சுடோய்...//

ஹ ஹா இல்லீங்ணா !

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 8, 2010 at 4:36 PM said...

//அருண் பிரசாத் said...
மாப்ள... எல்லா கவிதையும் நச்..//

நன்றி மாம்ஸ் ஐ இன்னொரு மாமா ! மாம்ஸ் களோட எண்ணிக்கை ஜாஸ்தியாகிட்டே இருக்கு சாக்கிரத வசந்த் சாக்கிரத வசந்து...

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 8, 2010 at 4:37 PM said...

//எஸ்.கே said...
எல்லாக் கவிதைகளும் சிறப்பாக உள்ளன!//

மிக்க நன்றி எஸ் கே :)!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 8, 2010 at 4:41 PM said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இது face book கில் சுட்டது...//

ங்கொய்யால என்னோட ஃபேஸ்புக்ல நான் போட்டத எடுத்து ப்ளாக்ல நானே போட்டா சுட்டதா?
சூ சூ மாரி...

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 8, 2010 at 4:41 PM said...

// சுசி said...
ரொம்ப நல்லா இருக்குப்பா..

வித்தியாசமா எழுதி இருக்கிங்க.//

நன்றி சகோ!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 8, 2010 at 4:42 PM said...

//பின்னோக்கி said...
என்னவோ.. என்ன மாயமோ தெரியலை.. வசந்துக்கு கவிதை அருவி மாதிரி கொட்டுது.. நல்லாயிருக்கு.. வேற எதாவது தகவல் இருக்கா ?
//

அப்டில்லாம் ஒண்ணும் இல்லை தலைவா அப்டியிருந்தா கண்டிப்பா சொல்லிடுறேன் ம்ம் நன்றி சார்

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 8, 2010 at 4:43 PM said...

//பிரியமுடன் ரமேஷ் said...
அருமையான கவிதைகள்...தனித்தனியாக வெளியிட்டிருந்தால்..இன்னும் ரசித்திருக்கலாம் என்று தோன்றுகிறது..//

தனித்தனியா போட்டிருக்கலாம்தான் ம்ம் நன்றி ரமேஷ்!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 8, 2010 at 4:44 PM said...

//ஹேமா said...
காதல் கவிதையைவிட தத்துவக்கவிதை....
தத்துவக்கவிதையைவிட காதல் கவிதை நல்லாயிருக்க்கு.
மணல்மேடு,கடிகாரம் திரும்பத்திரும்ப சிந்திக்க வைக்கிறது.//

ம்ம் நன்றி கவி தலைவியே!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 8, 2010 at 4:46 PM said...

// சி.பி.செந்தில்குமார் said...
கவிதைகள் கலக்கல் ரகம்,இதையே பிரித்து 10 பதிவாக போட்டிருக்கலாம்.//

ஆவ்வ்வ் தலைவா ஹிட்டுக்காக எழுதலையே ... நன்றி

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 8, 2010 at 4:47 PM said...

//இந்திரா said...
//உறக்கம் தொலைந்ததும்
கனவும் தொலைந்தது
மீண்டும் வந்த உறக்கம்
தொலைந்த கனவை தேடி தேடி
தொலைந்தே போனது//

ரசனைக்குரிய வரிகள்//

நன்றி இந்திரமீன்!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 8, 2010 at 4:48 PM said...

//sakthi said...
நீயும் நானும்
பேசாத பொழுதுகளில்
நம் இதயங்கள்
பேசும் வரம் பெற்ற
ஊமைகளாக...

vasanth superb ya
//

நன்றி சகோ :))

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 8, 2010 at 4:49 PM said...

//kavisiva said...
ரொம்ப ரொம்ப நல்லாருக்கு வசந்த். எதிர்கவுஜைதான் எழுத முடியல:(//

ஹ ஹ ஹா கவியே இப்டி சொல்லலாமா? நன்றிங்க !

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 8, 2010 at 4:50 PM said...

//Kala said...
உங்கள் எண்ண ஆவியில் வேகவைத்து
எடுத்துப் போட்டிருந்தால்.....
மிக,மிக அருமையான படை{யல்}ப்பு,

யாராவது சுட்டதை ! சுடவில்லையே!!!

இவ்வளவு அழகாகக் கவிதை வருமாஆஆஆஆஆஆ...
ஒரு சந்தேகம் தான்.........
சும்மா..சும்மா...//

வட சுடற பழக்கம் மட்டும்தான் இருக்குங்கோவ்வ்வ்..... நன்றி கலா

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 8, 2010 at 4:50 PM said...

//கே.ஆர்.பி.செந்தில் said...
கவிஞர் வசந்த் ...//

நன்றி மாம்ஸ்:)

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 8, 2010 at 4:51 PM said...

//தமிழரசி said...
என் கமெண்ட காணோம்..எங்கே போச்சு?
// காக்கா தூக்கிட்டு போச்சி :))

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 8, 2010 at 4:51 PM said...

//நிலா மகள் said...
முதல் மூன்றும் . படித்து புன்னகைத்தேன் . நான்கும் கடைசியும் சிந்தை கிளர்த்தும் தத்துவம். மீதமான காதல் கவிதைகளில் தேர்ச்சி தெரிகிறது.
//

மிக்க மிக்க நன்றி சகோ இப்பத்தான் கவிதைகள் எழுதிப்பழகிட்டு இருக்கேன் ம்ம் :))

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 8, 2010 at 4:52 PM said...

//ப.செல்வக்குமார் said...
எல்லாமே கலக்கலா இருக்குங்க .
அதிலும் மணல்திட்டு , படிக்கட்டு அருமை ..
அப்புறம் நிழல் கலக்கல் ..//

நன்றி மாப்ஸ்!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 8, 2010 at 4:53 PM said...

//ராமலக்ஷ்மி said...
அத்தனையும் அருமை வசந்த். நிழல்கள் ரொம்பப் பிடித்தது.//

மிக்க நன்றி ராமலஷ்மி மேடம்!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 8, 2010 at 4:53 PM said...

//சீமான்கனி said...
ஒரு பதிவில் இத்தனை விருந்துகளா!!!!சிலவை முன்பே படித்தாலும் படிக்க படிக்க ஆசையா இருக்கு...வாழ்த்துகள் நன்றி மாப்பி...
//

நன்றி மாப்ள!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 8, 2010 at 4:54 PM said...

//ஜெயந்தி said...
கவிதைகள் நல்லாயிருக்கு.
//

நன்றி ஜெ மேடம் ! :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 8, 2010 at 4:54 PM said...

//ஜிஜி said...
கவிதைகள் எல்லாமே சூப்பர்..

//உறக்கம் தொலைந்ததும்
கனவும் தொலைந்தது
மீண்டும் வந்த உறக்கம்
தொலைந்த கனவை தேடி தேடி
தொலைந்தே போனது...//

வரிகள் நல்லாயிருக்கு.
//

நன்றிங்க ஜிஜி!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 8, 2010 at 4:55 PM said...

//ஸ்ரீராம். said...
உறக்கம் தொலைத்த கனவு ரசிக்க வைத்தது. திட்டாத மணலும் அழகு.
//

மிக்க நன்றி ஸ்ரீராம் ...

Trackback by அப்பாவி தங்கமணி October 8, 2010 at 7:04 PM said...

//எவ்வளவு நல்லமனசு
மணல்திட்டு//
வாவ்... என்ன ஒரு சிந்தனை? Seriously ....

//எப்பொழுதோ கட்டி
முடிக்கப்பட்ட படியை
படிக்கட்டு என்றழைப்பது
எந்த விதத்தில் நியாயம்?//
அதானே.. இது அநியாயமா இல்ல?