எப்படி எப்படி சமஞ்சது எப்படி?

| October 31, 2010 | 50 comments |
கவிஞர் வாலி எழுதிய வரலாற்று புகழ் வாய்ந்த இந்த பாடலையொட்டி நடந்த விவாதங்கள்

எப்படி? எப்படி? சமஞ்சது எப்படி?
எப்படி? எப்படி? சமஞ்சது எப்படி?

சக்கரவள்ளிக் கிழங்கு மாமா சமஞ்சது இப்படி
சக்கரவள்ளிக் கிழங்கு மாமா சமஞ்சது இப்படி

முந்தா நாளு வானம் மாமோய் தூரல் போடும் நேரம்
ஊதாப்பூவப்போல பூத்து உட்கார்ந்தேனே தூரம்

அது எப்படி? எப்படி? சமஞ்சது எப்படி?
சக்கரவள்ளிக் கிழங்கு மாமா சமஞ்சது இப்படி

சந்தையில சுத்துறயே எதுக்கு?
நீயும் ஜொள்ளு விட்டு பார்த்திடணும் அதுக்காக

சில்லறைய கேக்குறயே எதுக்கு?
கடன் சொல்லிவிட்டுப் போயிடுவ அதுக்காக

என்னாட்டமா ஏழைக்கெல்லாம் ரேட்டு ரொம்ப ஜாஸ்திதான்
எல்லாத்தையும் இங்கே வுட்டா சோறு தண்ணி நாஸ்திதான்

அட வெட்டியாக என்ன பேச்சு 
வெலவாசி ஏறிப்போச்சு 
நானும்தானே வாழணும்
பக்கம் வந்த மாமா
இதுக்கு பேரம் பேசலாமா?
பாக்குப்பாய போட்டு
நீயும் பயாஸ்கோப்பு காட்டு

எப்படி? எப்படி? சமஞ்சது எப்படி?
அப்படி அப்படி சமஞ்சது அப்படி

சப்பரம் போல் ஆடுறியே எதுக்கு?
நித்தம் சாமி வந்து ஏறிடணும் அதுக்காக

தொப்புளத்தான் காட்டுறியே எதுக்கு?
மாமன் பம்பரம்தான் விட்டுடணும் அதுக்காக

சும்மானாச்சும் பாக்கும்போது சூட்டை நீயும் ஏத்துற
சாரயத்தை கண்ணு மேல வச்சு ஆளு மேல ஊத்துற

அட காய்ஞ்ச மாடு கம்புலதான்
பாய்ஞ்சது போல் தெம்புலதான் 
நீயும் மேயப்பாக்குற
மூட்டை தூக்கும் மாமோய்
அழகு மானை தூக்கலாமா?
ஹேய் மாமன் வீரம் என்ன
அதைத்தான் நானும் பார்க்கலாமா?
சங்கதியெல்லாம் தெரிஞ்சும்
ஏன்யா சொதப்புற இப்படி?
சங்கதியெல்லாம் தெரிஞ்சும்
ஏன்யா சொதப்புற இப்படி?
சொர்க்க வாசல் கதவு உனக்கு கிட்டத்தானே இருக்கு
உள்ள வந்து பாரு கிடைக்கும் தேவைப்பட்ட சரக்கு

எப்படி? எப்படி?
அது அப்படி அப்படி
எப்படி? எப்படி?
அது அப்படி அப்படிPost Comment

மெகு..மெகு..லகி..மகி..மா..

| October 30, 2010 | 24 comments |


எங்கள் வானம் எங்கள் பூமி
இப்பிரபஞ்சமே எங்களால் நிரம்பியது
நிரப்ப முடியா மடல் ஓட்டைகளையும்
நிரப்பி அவைகளுக்கு
தலையணையாய் 
நாங்கள்...

கனவுகள் வர
காரணகர்த்தா நாங்கள்
சுகத்தையும் துக்கத்தையும்
உணர்ந்து அனுபவிக்க
படைக்கப்பட்ட கிரீச் கிரீச்
நாங்கள்...

அதிர்வுகளால்
வானத்தையும் இதயத்தையும்
வலியில்லாமல்
உடைத்துப்போடும்
வலிமை எமக்குண்டு ...

உயிர் உருவாகும்போது
பிரியும்போதும் வாழும்போதும்
தேவைப்படும் காப்பீடு தேவையற்ற
களப்பணியாளர்கள்
நாங்கள்...

கோபமோ தாபமோ
எந்த உணர்வாயினும்
அதை நொடியில் 
எங்கள் வசமாய் மாற்றிவிடும்
மாற்று சக்தி நாங்கள்..

ஓராயிரம் நாளங்களுடையவனை 
படைத்தவனும் பிரம்மா!  
ஏழே ஏழு உறுப்புகளை
உடைய எம்மை 
படைத்தவனும் பிரம்மா!


எம்மை பிடிக்காதவர்கள் 
இவ்வுலகில் கிடையாது 
அப்படி பிடிக்காமல்
போயிருப்பின் அவர்கள்
உணரும் திறன் 
இழந்திருப்பவர்களாயிருக்கலாம்...

அந்தோ எம்மை உணர
முடியாமல் படைக்கப்பட்டவனே
இப்பிரபஞ்சத்தில் படைக்கப்பட்ட
மிகச்சிறந்த
துரதிர்ஷ்டவாதி... 
அனுதாபங்கள் அவர்களுக்கு..

உணர்ந்து அனுபவிப்பவர்களுக்கு
நாங்கள்
மெகு மெகு லகி மகி மா....
மெகு மெகு மகி லகி மா....,

Post Comment

கர்ப்ப கால காதல் !

| October 26, 2010 | 79 comments |
        என்னதான் வாழ்க்கையில் நம்முடைய பரிமாணங்களை ஒவ்வொரு சூழலிலும் நாமே கண்டு களித்திருந்தாலும் கணவன் தான் தகப்பன் ஆவது தெரிந்து அதற்க்கு காத்திருக்கும் காலமும் மனைவி தான் தாயாகப்போகும் தருணம் வரை காத்திருக்கும் காலம் முக்கிய கால கட்டம் அந்த கால கட்டத்தில் ஒரு மனைவிக்கும் கணவனுக்கும் இடையே நடக்கும் காதல் பற்றி பார்ப்போமா?


      என்னங்க நம்ம பையன் உங்களைப்போல் சாடையாக பிறந்தால் தான் உங்க வீட்டுல எல்லாருக்கும் பிடிக்குமாம் உங்கம்மா சொல்றாங்க என்று சிணுங்கியவளை சே ! சே ! உன் சாடையா பிறந்தால் தான் எனக்கு பிடிக்கும் என்றதும் என் தோளில் கைகளை வைத்து முகம் புதைக்கிறாள் கர்ப்ப கால வெட்கத்தில்!


     நமக்கு பொறக்கப்போற பையனுக்கு என்னென்ன பொம்மையெல்லாம் வாங்கி வைக்கப்போறீங்க என்றவளிடம் அழகான பார்பி பொம்மையான நீயும் யானை பொம்மையான நானும் இருக்க தனியே வேறு பொம்மை வாங்க வேண்டுமா என்ற என் குமட்டில் தன் கைகளால் செல்லமாக இடித்து குசும்பு என்கிறாள்!


     வீட்டில் இருந்த நேரம் முழுவதும் அது இதென்று இழுத்துப்போட்டு வேலை செய்பவளிடம் ரொம்பவும் அலுத்துக்காதடி பிள்ளைக்கு ஆகாது என்றதும் அப்போ உடம்புக்கெதும் ஆனாலும் பரவாயில்லைன்றீங்களா? என்று கடிந்தவள், நான் உடம்பைத்தான் பிள்ளையென்று சொன்னேன் என்றதும் ச்சீய்ய்ய் என்கிறாள்!


     ஆமா நமக்கு பொறக்கப்போறது பையன் தான்னு எப்படி இவ்வளவு உறுதியா சொல்றீங்க? வயித்தில இருக்கும்போதே சரக்கடிச்சவனாட்டம் வாந்தியெடுக்கிறானே அதை வைத்துதான் சொன்னேன் என்றதும் ஓங்கி ஒரு குட்டு வைத்தாள் நடுமண்டையில்!


     ஏங்க நம்ம பையன் பொறந்ததும் அவனுக்கு எங்கண்ணா அஞ்சு பவுன்ல தங்கச்செயினும் எங்கப்பா தங்க மோதிரமும் வாங்கித்தர்றேன்னு சொல்லியிருக்காங்க நீங்க என்ன வாங்கித்தரபோறீங்க உங்க பையனுக்கு? ஒரு தங்கச்சி பாப்பா வாங்கித்தரலாம்ன்னு இருக்கேன் என்றுசொன்னதுதான் தாமதம் உங்கள உங்கள என்று சொன்னபடியே கையில் வைத்திருந்த தக்காளிப்பழத்தை என் மீது எறிந்தேவிட்டாள்!


     என்னடி உன்னோட வயிறு பெரிசாச்சுனா என் அம்மா பார்த்து பார்த்து பூரிச்சுப்போய் ஆப்பிள் ஜூஸ் கொடுத்து பாசத்தை பொழியுறாங்க! போன வாரம் நானும் என்னோட வயிறும் பெரிசாயிட்டே போகுதுன்னு சொன்னதுக்கு வாயக்கட்டு ராஸான்னு சொல்றாங்க உனக்கொரு நியாயம் எனக்கொரு நியாமா என்று செல்லமா கேட்டதற்க்கு எனக்குள்ள இருக்கிறது வாரிசு உங்களுக்குள்ள இருக்குறது தரிசுன்னு சொல்லி சிரிக்கிறாள்  எமகாதகி!
     சமையலறையில் மிக்ஸி இருந்தாலும் கைமணம்போல் வராதென்று சொல்லி நின்று கொண்டே அம்மியில் கறி மசால் அரைத்துக்கொண்டிருந்தவள் என்னிடம் திடீரென்று நான் சாமியாம் உங்களுக்கு வரமொன்று தரலாம்ன்னு இருக்கேன் என்ன வரம் வேணும் என்று கேட்டாள் !  இவ்ளோ நாள் உன்னை மட்டும் கட்டிப்பிடிக்க என் கை போதுமானதாக இருந்தது இனி உன்னோடு நம் பிள்ளையையும் சேர்த்து கட்டிப்பிடிப்பதற்க்கு, உன் வயிறும் என் கைகளும் சேர்ந்தே வளரும் வரம் கேட்பேன் என்றதும் சிரித்துவிட்டாள்!
,

Post Comment

உடன்பேட்டை!

| October 24, 2010 | 49 comments |
என்னோட வழக்கமான போஸ்ட் எதிர் பார்க்குறவங்களுக்கு சாரிம்மா கண்ணு! இது ஆத்ம திருப்திக்காக எழுதுனது !


"என்னத்தா இன்னிக்கு இம்புட்டு சீக்கிரத்துல சமச்சுட்டீக?"


"அதொன்னியுமில்லீங்க மாமா உடன்பேட்டையில இருந்து என்ர அமச்சியும் அப்பச்சியும் வந்துருக்குறாங்க மாமோவ் அதானுங்க வெரசா சமச்சுப்போட்டு அவுகளுக்கு நம்ம ஊர சுத்தி காட்டிப்போடலாம்ன்னு இருக்கேனுங்க மாமா!"


"அதுசரி ஏன்த்தா கல்யாணமாகி புருசன் ஊருக்கு வந்து பத்து வருஷமானபிறகும் உன்னை விட்டு உன் ஊர் பாஷை போகவேமாட்டேங்குதே!"


"இதென்ன ஊரு கெரகம் புடிச்ச ஊரு கெரகம்புடிச்ச பாசை எப்ப பாருங் உப்புசமாவே இருக்கு எங்கூரு உடன்பேட்டைக்கு வந்துருக்கீங்கதானே மாமா அது மாதிரி சிலு சிலுன்னு காத்து எந்த நாட்டுல கெடைக்கும்ங்க சொல்லுங்க?"


ஆமாங்க இவங்க சொல்ற மாதிரி உடுமலைப்பேட்டை சிலு சிலுன்னு காத்து வீசிட்டெ இருக்குற ஊருங்க ! என்னோட அப்பா ஊர் தேனியா இருந்தாலும் நான் பொறந்தது எங்கம்மாவோட ஊரான உடுமலைப்பேட்டையில தான்! அந்த ஊர் பற்றிய சில ஞாபகங்கள்! 


எனக்கு விவரம் தெரிஞ்சு ஐந்தாம் வகுப்புல இருந்து ஒவ்வொரு காலாண்டு அரையாண்டு முழு ஆண்டு விடுமுறைக்கு கண்டிப்பா உடுமலைக்கு சென்றுவிடுவதுண்டு . ஒவ்வொரு விடுமுறைக்கும் அங்க இருக்குற அம்மாச்சி வீட்டுக்கு போய் எப்படியாவது ஒரு புது ஃப்ரண்ட் பிடிச்சுடுவேன்  !


சின்ன வயசுல இன்ஃபாக்சுவேசன் அப்படின்ற எதிர் பாலின ஈர்ப்பு எல்லாருக்கும் வர்றதுண்டு எனக்கும் வந்துச்சு உடுமலைப்பேட்டையை சுத்தியிருக்கும் கிராமங்கள் பெரும்பாலும் கரும்பு விவசாயம் செய்றவங்க அவங்க கரும்பை பிழிஞ்சி வெல்லமா உருட்டறதில்லை அச்சுவெல்லம் செய்வாங்க அந்த அச்சுவெல்லம் தயாரிக்க அச்சுகுழிபலகை பயன்படும் அந்த அச்சுக்குழிப்பலகை செய்யுற  பட்டறை எங்க தாத்தா வச்சுருந்தார். அப்போ அவருக்கு அந்த அச்சுக்குழிக்கு தேவையான குச்சி வீட்லயே அம்மாயி செதுக்கும் பக்கத்துல இருந்து நான் அது எத்தனை குச்சி செதுக்கியிருக்குன்னு எண்ணிட்டே இருப்பேன் அம்மாச்சி குச்சி செதுக்கி முடிச்சதும் நான் அதை வச்சு விளையாடிட்டு இருப்பேன்..!


அப்படித்தான் ஒரு விடுமுறைக்கு ஊருக்கு போயிருந்தப்போ அம்மாச்சி வீட்டுக்கு பக்கத்து வீட்டுல இருக்குற காமராஜ் அண்ணா வீட்டுக்கும் மஹான்னு ஒரு பொண்ணு விடுமுறைக்கு வந்துருந்துச்சு அதோட ஊர் பொள்ளாச்சி, நான் குச்சியை வச்சு விளையாடிட்டு இருக்கும்போதே அந்தபொண்ணும் பக்கத்துல வந்து உட்கார்ந்து வேடிக்கை பார்க்கும் ரெண்டு மூணு நாள்ல ரெண்டு பேரும் நல்ல ஃப்ரண்டாயிட்டோம் அந்த பொண்ணு ஊர்ல கத்துகிட்ட விளையாட்டெல்லாம் எனக்கு சொல்லிக்கொடுக்கும் ஒவ்வொரு விளையாட்டையும் இப்போ வரைக்கும் நான் ஞாபகம் வச்சிருக்கேன் நிறைய வித விதமான வளையல் துண்டுகளை உடைச்சு மொத்தமா குலுக்கி போட்டு அதை சோடி சோடியா ஒவ்வொரு துண்டையும் அலுங்காம எடுக்கணும் . நான் இதுல நல்லா விளையாட கத்துகிட்டேன் . இப்படி இன்னும் நிறைய விளையாட்டுகள் சொல்லிக்கொடுத்துச்சு அந்த பொண்ணு.அவ பேசற அந்த கோயம்புத்தூர் ஸ்லங் எனக்கும் தொத்திக்கும் விடுமுறை முடிஞ்சு ஊருக்கு போன பிறகும் ஒரு மாதத்திற்க்கு கோயம்புத்தூர் ஸ்லங்லயே  பேசிட்டு இருப்பேன்!

ரெண்டுபேரும் தேங்காய் பர்பி முட்டாய் வாங்கி சாப்பிட்டுக்கிட்டே அந்த ஊர்ல சைக்கிள் கத்துகிடறதுக்கு பேமஷான குட்டைத்திடலுக்கு போய் வாடகைக்கு ஆளுக்கொரு சைக்கிள் எடுத்து தெரு தெருவா சுத்துவோம் அந்த மஹாவை பார்க்குறதுக்காகவே ஒவ்வொரு விடுமுறையையும் ஆர்வமாய் எதிர்பார்ப்பேன் நான் அது ஏதோ இனம்புரியாதசந்தோஷம்.அப்போ எட்டாம் வகுப்பு முழுஆண்டுத்தேர்வு முடிச்சுட்டு ஊருக்கு போய்ட்டேன் மஹாவும் வந்திருந்தா ஆனா வழக்கமா என்கூட விளையாட வரலை என்னாச்சுன்னு கேட்டா நான் பெரிய பொண்ணாயிட்டேன்ன்னு சொல்லிட்டா அப்பறம் அதுக்கடுத்த விடுமுறைகளில் அவள் ஊருக்கு வருவதே இல்லை !அத்தோடு முடிந்தது அந்த சிறு வயது காதல்!


இன்னும் நான் கொஞ்சம் பெரிய பையன் ஆயிட்டேன் ப்ளஸ் டூ படிச்சுட்டு இருந்தேன்!அப்போ அந்த ஊர்ல இருக்குற மாரியம்மன் கோவில் சுத்து வட்டாரத்துல எல்லாம் ஃபேமஸ் அந்த கோவில் திருவிழாவின் போது தேரோட்டம் நடக்கும் அந்த தேரோட்டமும் அந்த குட்டை திடலில்  தான் நிறைய பொண்ணுங்க வருவாங்க அவங்களை சைட்டடிக்கிறதுக்காகவே பசங்களோட போறதுண்டு! தேரோட்டம் முடிஞ்சதும் அந்த கோவில் தெருவில் இருக்கும் தங்கநகை கடைக்காரங்க எல்லாம் வான வேடிக்கை நடத்துவாங்க அது பார்க்கிறதுக்கு கண் நூறு வேணும் அவ்ளோ அழகாஇருக்கும்...அத்தோடு சினிமா பார்த்து பழகியதும் அந்த ஊரில்தான் கல்பனா, தாஜ், லதாங்கி, அனுஷம், ப்ரவோன்னு எல்லா தியேட்டருக்கும் போய் படம் பார்ப்பேன் இதுல அனுஷம் தியேட்டர் சத்யராஜோட மாமனார் தியேட்டர் அப்படின்னு தெரிஞ்சதும் ஊர்ல போய் நான் சத்யராஜ் தியேட்டர்ல படம் பார்த்தேனேன்னு பெருமையடிச்சுகிடறதும் உண்டு...

ப்ளஸ் டூ முடிச்சுட்டு பாலி டெக்னிக் படிக்கறபோது வந்த விடுமுறைக்கு போயிருந்தப்போ அந்த ஊர்ல இருக்குற பெரிய நூலகம் அறிமுகமாச்சு நிறைய புத்தகங்கள் படிக்க ஆரம்பிச்சது அப்போதான் என்னத்த பெரிய புத்தகம் சிறுகதைகள் , கவிதைகள், நாவல்கள்ன்னு அவ்ளோதாங்க..


பிற்பாடு எனக்கு இந்து மதத்தின் மீது நிறைய நம்பிக்கை இருந்தாலும் ஒவ்வொரு விடுமுறைக்கு போகும்போதும் தளி ரோட்ல குட்டைதிடலுக்கு பக்கத்தில் இருக்குற சர்ச்சுக்கு போகாமல் வந்தது கிடையாது , ரம்ஜான் மாதத்தில் குட்டைக்கு அருகிலுருக்கும் மசூதிக்கு தினமும் சென்று நோம்புகஞ்சி வாங்கி குடிப்பது இப்போ வரைக்கும் பிடிக்கும்! 


அந்த ஊர் அம்மணிகள் தாலியை நூல் நூலா கட்டியிருக்குற ஸ்டைல் பிடிக்கும், அந்த ஊர் கொங்கு பாசை பேசறதை கேட்கவும் , பேசவும் பிடிக்கும், சுடச்சுட அங்க கிடைக்கிற தேங்காய்ப்பால் சாப்பிட பிடிக்கும்,திருமூர்த்தி டேம் போய் ஆசை தீரகுளிக்க பிடிக்கும் , அமராவதி ஆத்து தண்ணி குடிக்க நிறைய பிடிக்கும் , சர்க்கரையை அண்ணாச்சி கடையில் அஸ்கான்னு சொல்லி வாங்க பிடிக்கும்.இப்படி நிறைய என் சொந்த ஊரை விட என் மனசுக்கு பிடிச்ச ஊர் உடுமலைப்பேட்டைங்க!இப்போ விடுமுறைக்கு ஊருக்கு போயிருந்தப்போ ஆசை தீர பத்து நாள் இருந்துட்டு வந்தேன்!


இப்போவும் யாராச்சும் கோயம்புத்தூர் பாசை பேசறவங்கள பார்த்தாலே சீக்கிரமே ஒரு வித பிணைப்பு ஏற்படறதுண்டு!


இப்போ கூட பொண்ணு பார்த்துகிட்டு இருக்கற அம்மாகிட்ட ஒரு விண்ணப்பம் வச்சுருக்கேன் அது என்னான்னு சொல்லமாட்டேனே வவவ்வ்வவ்வே!
ஓவ்வொரு முறையும் ஊருக்குப்போகும் போது குட்டைத்திடலில் இருக்கும் இவரை பார்க்க மிஸ் பண்ணுனதில்லை இந்த முறையும் வழக்கம்போலவே சிறை வைக்கப்பட்டிருந்தார்!


.

Post Comment

ஹச் அம்மா! ஹச் அய்யா!

| October 20, 2010 | 101 comments | மழை நாளில்
தோன்றும் வானவில்
போலவே அழகான
காதல் நாட்களில் தோன்றும்
வானவில்லாய் நீ வருவதற்க்கு..
 சூரியனாய் எதிர் திசையில் நான்
வானமாய் நம் வீட்டு வாசல்
மழையாய் நம் காதல் !


வானம் சொய்யென்று
பெய்விக்கும் பெரு மழையில்
நனைவதை விட
 நீ பெய்விக்கும் ஜில்லென்ற
மர மழையில்
நனைவதே 
எனக்கு பிடிக்கிறது!
உன்னிடம்  
கெஞ்சி கூத்தாடி 
காதல் தவமிருந்து 
நான் பெற்ற 
வரங்களையெல்லாம்
 உன்னிடம் 
கேட்காமலே 
பெற்றுக்கொள்ளும் 
வரம் வாங்கி 
வந்திருக்கிறது மழை!


நேற்றைய மழைக்கு பின் 
முளைக்கும் இன்றைய
குப்பை காளான்கள்
மத்தியில் 
இன்று பெய்யும் மழையில் 
இன்றே ஆடும் 
நடன காளான் நீ!நம்மை 
சேர்த்து வைக்கும்
வேலையை 
மழை பார்த்து கொள்ள
சேர்ந்திருக்கும் 
வேளையை
குடை பார்த்து கொள்கிறது..!
Post Comment

யாவரும் நலம் சுசி - பிறந்தநாள் வாழ்த்துகள்...!!!

| October 17, 2010 | 27 comments |

இந்த எறும்பு பற்றி உங்களுக்கு தெரியும் செல்லும் திசையெல்லாம் ஏதாவது ஆதாரம் இருக்கும் நம்பிக்கையோடு தன் இனத்துடன் வாழ்க்கையை ரசனையோடு வாழும் அதுபோலத்தான் இவர்களும் தன் மணாளனின் குறும்புகள் பிள்ளைகளின் விளையாட்டுத்தனங்களுடன் வாழ்க்கையை ரசனையுடன் வாழ்பவர்...

எனக்கு யாரோடாவது பேசி பழகினால் குறும்புகளோ சிரிப்புகளோ கொப்பளிக்கும் ஆனால் இவர்களுடன் பழகினால் அந்த குறும்புத்தனங்கள் காணாமல் போய் சகோதர பாசம் மட்டுமே மிஞ்சுகிறது...

எழுத்துக்களை ப்ரியத்துடன் வாசிக்கும் நேசிக்கும் யாவரும் நலம் சுசி வாழ்க்கையில் எல்லா வளங்களும் பெற்று சந்தோசமுடன் வாழ வாழ்த்துகள்!!!

சுசி பிறந்த நாளுக்கு அவரின் மணாளன் ஆர்டர் செய்த கேக்தாங்க இது...அவர் ஒரு கால் பந்து ப்ரியர்.....!
சுசி எனக்கு கேக்கெல்லாம் வேண்டாம் செக் அனுப்பிடுங்க...


.

Post Comment

மனசெல்லாம் மார்கழி...! தெருவெல்லாம் கார்த்திகை...!

| October 14, 2010 | 85 comments |


          
             இருபத்தேழை நானும் இருபத்தைந்தை நீயும் கடந்த பிறகு இதுவரைக்கும் நமக்குள் வராத காதல் எப்படி வந்தது என்று நான் கேட்டதற்க்கு, பல வருடங்களாக குழந்தையில்லாதவர்கள் ஒரு குழந்தையை தத்தெடுத்து கொள்வது போல  நாம் காதலை தத்தெடுத்திருக்கிறோம் என்கிறாய் நீ...!

            காதலை காட்டியோ, இதயத்தை காட்டியோ நான் கேட்ட எத்தனையோ கேள்விகளுக்கு பெரும்பாலும் மவுனத்தையே பதிலாய் தரும் நீ, பேருந்தில் பயணித்து கொண்டிருக்கும்பொழுது முச்சந்தி பிள்ளையாரையோ, வேப்பமரத்து காளியையோ காட்டி கேள்வி கேட்கும் ஆட்காட்டிவிரலுக்கு மட்டும் முத்தங்கள் தருகிறாய் ஏன்?

            ஒரு மார்கழி மாத அதிகாலையில் அரிசி மாவுக்கோலம் போட்டுக் கொண்டிருந்தபொழுது ஆவென கதறிய உன்னிடம் என்னாச்சு என்றேன் ? மாவுக்கும் காலுக்கும் வித்தியாசம் தெரியாத ஐந்தறிவு ஜந்தான எறும்பு என் காலை கடித்து விட்டது என்ற உனக்கு தெரியாதா எறும்புக்கு இனிப்பறிவு இருப்பது?

            உன் காதல் எப்படியிருக்கும் ? என்றாய் , ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்க்கு கம்பி வழிச்செல்லும் மின்சாரம், அதே கம்பியை உரசி செல்லும் காற்று இவற்றை கேட்டு தெரிந்து கொள் என்றேன் அதெல்லாம் கண்ணுக்கு தெரியாதே பிறகெப்படி கேட்பது என்றாய் அப்படியென்றால் மின்சாரத்தில் இயங்கும் இசைக்கருவி , தலையசைத்து ஆடும் மலர் இவைகளிடம் உணர்ந்துபார் என் காதலை.

            ஒரு நாள் நாம் இருவரும் பாட்டுக்கு பாட்டு போல் ஒருவர் பாடி முடித்த பாடல் வரியின் இறுதி வார்த்தையை அடுத்தவர் அடுத்த பாடலுக்கான ஆரம்ப வரியாய்கொண்டு பாடல் பாட வேண்டும் என்று விதி முறை வைத்து விளையாடினோம் நீ முத்தம் என்ற வார்த்தையுடன் பாடலை முடிக்க நான் அதே வார்த்தையை கொண்டு பாடலை ஆரம்பித்தேன் நீயோ இசைக்க ஆரம்பித்திருந்தாய்...
           
            மற்றொரு நாள் வீட்டு வாசலை தெளித்து கொண்டிருந்தாய் எதற்க்கு வீட்டு வாசலை தெளிக்கிறார்கள் என்ற என் கேள்விக்கு தேவதைகள் நம் வீட்டிற்க்குள் வருவதற்க்குத்தான் என்றாய் அப்போ ஏற்கனவே இருக்கும் தேவதையை என்ன செய்ய என்றேன் நான் நீயோ கீழ் உதட்டை கடித்து ராஸ்கல் என்கிறாய்...            பிரசவ வலி வந்து உன்னை மருத்துவமனையில் சேர்த்தபிறகு, பிரசவ அறையின் உள்ளே நீ வெளியே  நான்,  பிரசவ நேரத்தில் வெளிப்பட்ட உன்னுடைய உச்சகட்ட அலறலை கேட்டதிலிருந்து செழித்த மரத்தில் இருந்து உடைந்த கிளையாய் என் காமம், மண்ணில் இன்னும் நீண்டு செல்லும் ஆணிவேராய்  என் காதல்.
,


Post Comment

ரொமான்ஸ் - (U/A)

| October 11, 2010 | 77 comments |

Love and Love Only..!


Post Comment

ஊருக்கு போயிருந்த மிஸஸ் வந்துட்டாங்க...

| October 9, 2010 | 74 comments |
ஊருக்கு போயிருந்த மிஸஸ் வந்துட்டாங்க...
Mr. ஸ்பிரிங் : ஹேய் போயம் இங்க வா ஆபிஸ்ல இருந்து வந்து எவ்ளோ நேரமாச்சு சூடா ஒரு கப் காபி கேட்டேனே என்னாச்சு?

Mrs ஸ்பிரிங் : இந்தா பாருங்க மாமா எங்கப்பாரு ஆச ஆசயா கவிதான்னு அழகா பேரு வச்சத இப்படி போயம்ன்னு கூப்பிடறது கொஞ்சம் கூட நல்லா இல்ல

Mr. ஸ்பிரிங் : என்னடி இது பேரு கவிதா கொவிதான்னுட்டு ஊரு உலகத்துல அவன் அவன் அவங்க பொண்ணுகளுக்கு எந்த பேர் வைக்கிறதுன்றது புத்தகம் வாங்கி அதுல இருந்து ஸ்மிதா, ஸ்வர்ணா, சொப்னான்னு அழகா பேர் வைக்கிறானுங்க உங்கப்பாரு என்னடான்னா கவிதான்னு பழைய கிழவிகளுக்கு வைக்கிற பேர் எல்லாம் வச்சிருக்காரு..

Mrs ஸ்பிரிங் : த பாருங்க மாமா இந்த ஜாட மாடயா கிழவின்னு சொல்ற வேலை வச்சுகிட்டீங்க அப்ப்பறம் தினமும் ராத்திரிக்கு பட்டினிதான் சொல்லிட்டேன் எங்கப்பாரு ஏன் எனக்கு அந்த பேர் வச்சாருன்னு தெரியுமா உங்களுக்கு?

Mr. ஸ்பிரிங் : ஆமா எதுக்கு வச்சிருக்கப்போறாரு அவரோட முதல் காதலி பேரா இருந்திருக்கும் இல்லாங்காட்டி உங்க பாட்டி பேரா இருந்திருக்கும்

Mrs ஸ்பிரிங் : வாய்யா என் மாப்ள உங்கள கவனிக்கிற விதத்துல கவனிச்சாத்தான் நீங்க சரிப்படுவீங்க ராத்திரி காலை சொரண்டுவீங்கல்ல அப்போ அந்த கெரண்ட கால கரண்டியில அடிக்கிறேன்..ஏன் எனக்கு அந்த பேர் வச்சாங்கன்னு கேளுங்கன்னா...

Mr. ஸ்பிரிங் : சரி சொல்லித்தொலை

Mrs ஸ்பிரிங் : எங்கப்பாவும் எங்கம்மாவும் காதல் செஞ்சு கல்யாணம் பண்ணிகிட்டவங்க நான் பொறந்ததும் எங்கப்பா எங்கம்மாகிட்ட எனக்கு என்ன பேர் வைக்கலாம்ன்னு கேட்ருக்கார் அதுக்கு எங்கம்மா சொன்னாங்களாம் நீங்க என்னை காதலிக்கிறப்போ எழுதுன கவிதைகள் ஒண்ணு கூட எனக்கு பிடிக்கல ஆனா கல்யாணம் ஆனப்பிறகு நீங்க எழுதுன இந்த கவிதைதான் எனக்கு ரொம்ப பிடிச்சுருக்குன்னு என்னப்பார்த்துகிட்டே சொன்னாங்களாம் அதனால எங்கப்பாரு எனக்கு கவிதான்னு பேர் வச்சுட்டாங்க மாமோய்...

Mr. ஸ்பிரிங் : மானங்கெட்ட குடும்பமா இருக்கும் போல அடச்சேய் இதெல்லாம் போய் அவங்க கிட்ட கேட்ருக்கியே உனக்கு வெட்கமா இல்ல?

Mrs ஸ்பிரிங் : அய்ய தோ பார்டா அது என் பாட்டி எனக்கு சொல்லி தெரிஞ்சுகிட்டேன்,அது இருக்கட்டும் உங்களுக்கு ஏன் அந்த பேர் வச்சாங்க?

Mr. ஸ்பிரிங் : இது இப்போ ரொம்ப முக்கியமா?

Mrs ஸ்பிரிங் : அப்பறம் நீங்க என் பேரை டேமேஜ் பண்ணுனதுல பாதியாச்சும் உங்க பேரை நான் டேமேஜ் பண்ணலைன்னா நான் ஜக்கம்மா பரம்பரையில வந்தவளே இல்லை. சொல்லுங்க என் செல்லம்ல சொன்னீங்கன்னாத்தான் காபி கிடைக்கும் ஆமா!

Mr. ஸ்பிரிங் : அது நான் வசந்த காலத்துல பிறந்ததால வசந்த்ன்னு பேர் வச்சாங்கன்னு எங்கப்பா சொல்லியிருக்கார்..

Mrs ஸ்பிரிங் : அடடடா நீங்க குளிர் காலாத்துலயும் கோடை காலத்துலயும் பொறக்காம போய்ட்டீங்களே மாமா!

Mr. ஸ்பிரிங் :  ஏன்?

Mrs ஸ்பிரிங் : இல்லை குளிர் காலத்துல பொறந்திருந்தா குளிர்குமாருன்னும், கோடை காலத்துல பொறந்திருந்தா கோடைகுமாருன்னும் பேர் வச்சுருப்பாங்க இல்லயா அதச்சொன்னேன்..


Mr. ஸ்பிரிங் : அட அட எம்புட்டு அறிவுடி உனக்கு உன்னை உங்கப்பாரு சுடுக்காட்டுதலையன் பெத்தாரா இல்லை கடையில செஞ்சு வாங்குனாரா?

Mrs ஸ்பிரிங் : என்னை திட்ட உங்களுக்கு உரிமை இருக்கு எங்கப்பாவ திட்டுற வேலை வச்சுகிட்டீங்கன்னா கணவன் தூங்கும் பொழுது கல்லை தூக்கி போட்டு கொன்ற மனைவின்னு நூஸ் வரும் பரவாயில்லையா?

Mr. ஸ்பிரிங் : கவிதை சரியீல்லைன்னா அதையெழுதுனவனத்தானடி திட்ட முடியும் கவிதையவா திட்ட முடியும் ? எப்பிடி உன்னோட ஸ்டைல்லயே உன்னை கவுத்துனேனா இல்லியா?

Mrs ஸ்பிரிங் : இருங்க என் ஸ்டைல் என்னான்னு காட்டறேன் ( சமையல் அறைக்கு சென்று காபி எடுக்க போகிறார் ஒரு கப்பில் காபியை எடுத்துகொண்டு வருகிறார் வந்ததும்  Mr. ஸ்பிரிங் ன் முஞ்சியில் ஊற்றி விடுகிறார்)

Mr. ஸ்பிரிங் :  அய்யோ அம்மாஆஆஆஆ

Mrs ஸ்பிரிங் : எப்பிடி மாமா நம்ம ஸ்டைலு? இதுதான் கவிதா ஸ்டைல் ஜாக்கிரத...

(இவர்களைப்பற்றி அறியாதவர்கள் கலாட்டா 1, கலாட்டா 2 , வாசிக்கவும்)

Post Comment

தாயமும் வாழ்க்கையும் ஒண்ணு...!

| October 6, 2010 | 60 comments |எத்தனையோ முறை
திட்டச்சொல்லியும்
திட்டவே மாட்டேன்
என்கிறது அதற்குத்தான்
எவ்வளவு நல்லமனசு
மணல்திட்டு

*****************************************

விலா எழும்பு புடைத்து
திரியும் நாய்க்கு இந்த முறையாவது
கறியை தின்று நல்லி எழும்பை
மிச்சம் வைக்கலாம் என்று பார்த்தால்
எலும்புக்கறி வாங்கத்தான்
காசிருக்கிறது

*****************************************

எப்பொழுதோ கட்டி
முடிக்கப்பட்ட படியை
படிக்கட்டு என்றழைப்பது
எந்த விதத்தில் நியாயம்?


*****************************************

பின்னோக்கி சுற்றும்
கடிகாரம் வைத்திருப்பவன்
முன்னோக்கி சுற்றும்
கடிகாரம் வைத்திருப்பவன்
இருவரின்ஆரம்பமும் ஒரே ஆரம்ப புள்ளியில்
தொடங்கினாலும் முடிவுறுகையில்
முன்னோக்கி சுற்றும் கடிகாரம்
வைத்திருப்பவன் முற்றுப்புள்ளியாகவும் 
பின்னோக்கி சுற்றும் கடிகாரம்
வைத்திருப்பவன் காற்புள்ளியாகவும்
போவதின் மர்மம் ஞான் அறியேன் பராபரமே

*****************************************

சிறகடித்துப்பறக்கும் என் 
தேவதையின் துப்பட்டா 
சிறகுகளாகிப்போவதினாலே
சில்மிச நேரங்களில்
அதை பிடுங்கியெறிய 
மனசு வருவதேயில்லை...

*****************************************

உறக்கம் தொலைந்ததும்
கனவும் தொலைந்தது
மீண்டும் வந்த உறக்கம்
தொலைந்த கனவை தேடி தேடி
தொலைந்தே போனது...


*****************************************

உன்னை தேடுவதற்க்கு
நான் அனுப்பிய தென்றல்
உன்னை கண்ட களிப்போ
இல்லை நீ தந்த கதகதப்போ
திரும்பி வந்து என்னில் தகிக்கிறது
திருப்பி அனுப்பச்சொல்லி...


*****************************************

இரவு முழுவதும்
எங்கு தேடியும் 
கிடைக்கவில்லை
நம் ஜோடி நிழல்கள் 
நம்மைப்போலவே

*****************************************பனித்துளியுடுத்திய
ரோஜாவின் 
ஒற்றை இதழாய்
மலரும் உன் புன்னகை 
பறிக்க வந்த 
காதல் மரம் நான்

*****************************************நீயும் நானும்
பேசாத பொழுதுகளில்
நம் இதயங்கள்
பேசும் வரம் பெற்ற
ஊமைகளாக...

*****************************************


தாயமும்
வாழ்க்கையும்
ஒன்றுதான் போல்
தாயம் எனும்
மனைவி வந்த பிறகுதான்
வாழ்க்கையும் ஆரம்பிக்கிறது
செல்லும் வழியெங்கும்
உடன் வருவோரின்
இழப்புகள் ,
நிலையில்லா இருப்பிடம்,
சொல்லி வைத்தாற்போல்
இரண்டிலும் அறுபத்தைந்தில்
முடியும் ஆட்டம்
ஆட்டம் முடிந்ததும்
முடிவில் எடுத்துச்செல்ல
ஒன்றுமில்லை
நேரம் கழிந்ததுதான்
மிச்சம் இரண்டிலும்...*****************************************


நன்றி நன்றிPost Comment