டொக் - உண்மைக்கதை

| September 27, 2010 | |
சில வருடங்களுக்கு முன் என்னையும் என் சகோதரியையும் நட்டநடுத்தெருவில் என் தாய் விட்டு சென்றுவிட்டாள், எவனோ பொறம்ப்போக்கு ஒருவன் வந்தான் இவளும் அவன் பின்னாடியே சென்று விட்டாள் தாயா அவள் பேய், பின் பிறந்து மூன்றே மாதம் ஆன எங்களை விட்டுச்செல்ல அந்த கல் நெஞ்சக்காரிக்கு எப்படி மனது வந்ததென்றே தெரியவில்லை ஹும் ..

இத்தனைக்கும் நானும் என் சகோதரியும் ஒரே பிரசவத்தில் பிறந்த ட்வின்ஸ்  நிறைய பேர் ட்வின்ஸ் பிறக்கவில்லையென்று வருத்தப்படுகிறார்கள் இவள் என்னடாவென்றாள் எங்களை யாரும் இல்லாத அநாதையைப்போல் விட்டுச்சென்றுவிட்டாள்...இதுவரையிலும் அவள் ஏன் எங்களை விட்டுச்சென்றாள் என்ற காரணம் தெரியவே இல்லை...

திக்குத்தெரியாமல் நட்ட நடுத்தெருவில் நின்றுகொண்டிருந்த எங்கள் இருவரையும் கண்ட ஒரு பணக்கார மனிதர் நாங்கள் இருவரும் சாலையில் கத்திகொண்டிருப்பதை கேட்டு தன்னுடைய காரில் ஏற்றிக்கொண்டு அவருடைய வீட்டிற்க்கு கூட்டிச்சென்றார்..

அங்கு சென்றதும் அவர் எங்களை தன்னுடைய பிள்ளையைப்போல பாலுட்டி சீராட்டி வளர்த்தார் சீரும் சிறப்புமாய் நாங்கள் வளர்ந்து வந்தோம் . திடீரென்று ஒருநாள் அந்த செல்வ சீமானின் தங்கை ஒருத்தி விடுமுறைக்கென நாங்கள் வாழ்ந்து வரும் வீட்டிற்க்கு வந்தாள் அவளுக்கு என் சகோதரியை மிகப்பிடித்துப்போய்விட்டது விடுமுறை முடிந்து தன் வீட்டிற்க்கு திரும்பும் பொழுது அவளையும் தன்னோடு அழைத்து சென்றுவிட்டாள்...

தங்கையை பிரிந்த சோகம் என்னை மிகவும் வாட்டியது . பின் அத்துயரம் செல்வச்சீமான் ராஜதுரையின் மகன் ரமேஷ் மூலம் மறைந்தே போனது. அவன் என்னைவிட இரண்டோ மூன்றோ வயது மூத்தவனாய் இருக்கலாம் ரொம்பவும் அன்பாய் இருப்பான் நானென்றால் அவனுக்கு உயிர் எங்கு சென்றாலும் என்னையும் அழைத்துச்செல்வான் அவனைப்போலவே எனக்கும் உடையணிவித்து அழகு பார்ப்பான்..

ரமேஷ் ஒருநாள் ராஜதுரை அவர்களை அப்பா என்று அழைத்தபோது நானும் அவனைப்போலவே அழைக்க வாயெடுத்தபோது வெறும் சத்தம் மட்டும்தான் வந்தது பேச்சு வரவில்லை அப்பொழுதுதான் தெரிந்தது நான் ஒரு ஊமையென்று ஊமையாய் பிறத்தல் எவ்வளவு கொடுமையென்று எனக்கு அப்பொழுது தெரிந்திருக்கவில்லை...

சில வருடங்களில் ரமேஷ் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தான் நான் வீட்டிலேயே முடங்கிகிடந்தேன் ரமேஷ் எப்பொழுது பள்ளிவிட்டு வருவான் என்ற ஆவலில் வீட்டு வாசலே கெதியென்று கிடந்தேன் , பள்ளி விட்டதும் துள்ளி குதித்து வரும் ரமேஷை கண்டது எனக்கு உற்சாகம் பற்றிக்கொள்ளும் நல்ல நட்பு ஒன்று வளர்ந்தது எங்களிருவருக்கும் இடையில் , துளிர்க்காமலே வெட்டுபடப்போகிறதென அறியாமல்...

ரமேஷ் மேற்படிப்பு படிக்க வெளியூர் செல்லும் வரையில் அந்த நட்பு தொடர்ந்தது ஒரு நாள் ரமேஷும் என்னை விட்டு வெளியூர் சென்றுவிட்டான் அதுவரையிலும் ரமேஷின் தோழனாகவே என்னை பார்த்த ராஜ துரை அவர்கள் அவன் போனதிலிருந்து என்னை நடத்தும் விதம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது ஆம் ராஜதுரை அவர்களின் படுக்கையில் ரமேசோடு சேர்ந்து என்னையும் தூங்கவைத்த அவர் , அவன் என்னை விட்டு பிரிந்து சென்றதிலிருந்து என்னை வீட்டுக்குள் விடுவதேயில்லை மீறி சென்றால் முதுகில் ஓங்கி ஒரு உதைவிடுவார் அந்த உதையை நினைத்தாலே நெஞ்சே பகீரென்கிறது....

இதைவிட பெரிய கொடுமை ஒருநாள் அந்த வீட்டில் அதுவரை கூர்க்காவாய் வேலைபார்த்த சொக்கனை கணக்கு செட்டில் பண்ணி அனுப்பினார் நான் ஏனென்பது மாதிரி அவரைப்பார்த்தேன் , மூன்று வேளையும் நன்றாக தின்று தெண்டச்சோறாய்த்தானே நீயிருக்கிறாய் அதனால் உனக்கு அந்த வேலையை தரப்போகிறேன் என்றார் சொன்னபடியே என்னை அந்த வீட்டு காவலாளியாக்கினார் ஊதியமில்லாத வேலைக்காரன் ஆனேன்...

நல்ல மதிய வேளையொன்றில் ராஜதுரை அவர்களுக்கு மொபைல் அழைப்பு ஒன்று வந்தது மொபைலை எடுத்து பேசியவர் விஷயத்தை கேட்டதும் பதறிப்போய் அப்படியே தலையில் கை வைத்து உட்கார்ந்தவரின் தோளைப்பிடித்து அவரின் மனைவி என்னங்க விஷயம் என்றார்..

நம்ம ரமேஷ் காலேஜ்ல தன்னோட படிக்கிற பொண்ணை கல்யாணம் செய்துகிட்டு வெளியூருக்கு ஓடிவிட்டானாம் அவனோட காலேஜ் பிரின்ஸ்பால் இப்போதான் போன்ல சொன்னார் என்று கூறிக்கொண்டே மயக்கமடைந்தார்... உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார் அவரது மனைவி...

மருத்துவ மனையிலிருந்து திரும்பி வந்த அவரின் உடல் நிலை நாளாக நாளாக கவலைக்கிடமானது ரமேஷ் அவருக்கு ஒரே மகன் என்பதால் அவனின் பிரிவு அவருக்கு மிகவும் கவலையை தந்தது. எல்லாரும் பயந்தது போலவே ஒருநாள் அவர் இவ்வுலகை விட்டு சென்றார். உடல் நடு ஹாலில் கிடத்தப்பட்டு இருந்தது அவரது மகன் ரமேஷின் வருகைக்காக அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்தனர் நேரம்தான் கழிந்ததே தவிர ரமேஷ் வரவேயில்லை அவரது இறுதிச்சடங்கிற்க்காக அவரது உடல் இடுகாட்டிற்க்கு எடுத்து செல்லப்பட்டது நானும் பின்னாடியே சென்றேன்

அவரது ஈமக்காரியங்கள் அனைத்தும் செய்து முடிக்கப்பட்டது அந்த நேரம்  அவரின் வளர்ப்பு மகன் என்ற முறையில் என்னுடைய வாலைத்தான் ஆட்ட முடிந்திருந்தது.....

தலைப்பு இலங்கை கண்டி தமிழர்கள் உதவி ம்ம்ம் அப்படித்தான் அவர்கள் என்னை அழைப்பார்கள்.....

Post Comment

45 comments:

Trackback by எல் போர்ட்.. பீ சீரியஸ்.. September 27, 2010 at 2:18 AM said...

எப்பிடிங்க இப்பிடியெல்லாம் யோசிக்க முடியுது? :))) டொக் :))

லேபில் கலக்கல் :)) ட்ரை பண்ணவே மாட்டோம் :))

அவங்களுக்கு ட்வின்ஸ் எல்லாம் கம்மி.. மூணு நாலு இப்படிதான் இருக்கும் :)

Trackback by ப.கந்தசாமி September 27, 2010 at 2:31 AM said...

ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.

Trackback by ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) September 27, 2010 at 5:58 AM said...

no comments

Trackback by சாந்தி மாரியப்பன் September 27, 2010 at 6:03 AM said...

இத்தனை நாளும் உங்க பதிவை வாசிச்சிருக்கிறோமே, லேபிளில் சொன்ன தப்பை செய்வோம்ன்னு நினைக்கிறீங்க?.. கண்டிப்பா மாட்டோம் :-)))))

Trackback by ராமலக்ஷ்மி September 27, 2010 at 6:49 AM said...

வால் ஆடிய வேளையில் வெளியானது முடிச்சு, வாயில்லா பிராணி அது என்பது. நன்று. கடைசி வரி எனக்குப் புரியவில்லை. லேபிள் புன்னகைக்க வைக்கிறது.

Trackback by சைவகொத்துப்பரோட்டா September 27, 2010 at 7:39 AM said...

லேபல் படித்த பின்னர் புரிந்தது :))

Trackback by Unknown September 27, 2010 at 9:26 AM said...

செம செம வசந்த்

எப்படித்தான் யோசிக்கிறீங்களோ

லேபில் யாரும் யாருக்குமே முயற்சிக்காமல் இருப்பதே நல்லது

Trackback by அருண் பிரசாத் September 27, 2010 at 10:05 AM said...

நான் முதல்லேயே கண்டுபிடிச்சிட்டேனே! கண்டுபிடிச்சிட்டேனே!!

Trackback by பன்னிக்குட்டி ராம்சாமி September 27, 2010 at 10:37 AM said...

லேபிலப் பாத்தே வெளங்கியிருக்கனும்!

Trackback by thiyaa September 27, 2010 at 10:49 AM said...

நல்ல கதை

Trackback by சுசி September 27, 2010 at 12:14 PM said...

இந்த தடவை மட்டும் ஆரம்பத்திலவே அவங்க ரெண்டு பேரும் யாருன்னு கண்டுபிடிச்சிட்டேனே.(இனம் இனத்தைன்னு சொல்ல மாட்டிங்க தானே உ பி)

ஒரு சின்ன விஷயம்.. பொதுவாவே நாங்க இலங்கையர்கள் 'டோக்னு' கொஞ்சம் நெடிலா தான் சொல்வோம். உங்க நண்பர்கள் கிட்ட கேட்டு பாருங்கப்பா.. :))

சாதாரண விஷயத்தை வித்தியாசமா எழுதிட்டு லேபல்ல அசத்திட்டிங்க.

Trackback by ஹுஸைனம்மா September 27, 2010 at 12:20 PM said...

எனக்கும் முதல்லயே புரிஞ்சுடுச்சே.. பள்ளிக்கூடம் அனுப்பலைன்னதும்..

பாம்பின் கால் பாம்பறியும்னு வேணும்னா சொல்லிகோங்க.. :-))

கடைசி வரிதான் புரியாம இருந்துது, அதுவும் சசி சொன்னதுல புரிஞ்சுடுச்சு..

Trackback by ஹேமா September 27, 2010 at 1:01 PM said...

வசந்து..நேத்து இரவே பதிவு பாத்தேன்.கொஞ்சம் குழப்பம்.
கண்டித்தமிழர்களைக் குறை சொல்கிறீர்களோ என்று.இப்போதுதான் புரிந்துகொண்டேன்.எனக்கே புதிதாக இருக்கிறது"டொக்".ஆங்கில வார்த்தையை இப்படிச் சொல்கிறார்கள்போலும்,

கதையைக் கடகடவென்று சொல்லி முடித்துவிட்ட ஆசுவாசம் உங்களுக்கு.

இதில் மனிதம் மறந்தவர் அப்பாவா அவர் மகனா ?ஆனால் முதலில் இரக்கம் காட்டிக் கூட்டி வந்தவர் பிந்நாளில் மனிதம் மறந்திருக்கிறார்.அதன் பின் அவர் மகன் அவர் இறப்புக்குகூட வராமல் போனது !

ஆனால் நன்றியோடு "எங்கிருந்தோ வந்தான்"என்பதாய் வளர்ப்பு மகனாய் நன்றியோடு கதை முடிந்திருப்பது மனிதம் இன்னும் வாழ்ந்துகொண்டிருப்பதைச் சொல்கிறது.

Trackback by ராமலக்ஷ்மி September 27, 2010 at 1:46 PM said...

சுசி சொல்வது சரி. நெடிலாகப் போட்டிருந்தால் எனக்கும் உடனே புரிந்திருக்கும். ஹி.

Trackback by மாதேவி September 27, 2010 at 3:16 PM said...

லேபில் கலக்கல் :))

Anonymous — September 27, 2010 at 5:09 PM said...

பதிவை விட லேபில் தான் டாப்

Trackback by elamthenral September 28, 2010 at 7:46 AM said...

azhagaana label and kathai.... nice vasanth sir...

Trackback by என்னது நானு யாரா? September 28, 2010 at 8:03 AM said...

முதல் கமெண்ட் படிச்சப்பின்னாடி தான் லேபிலைப் பார்த்தேன். அருமை! படிக்கிறவங்க எதை எல்லாம் கூர்ந்து கவனிக்கிறாங்கன்னு புரியுது.

கதை முதலில ஒன்னும் புரியல. மத்த கமெண்ட்ஸ் படிச்சப்பின்னாடி நல்லா புரிஞ்சது. அருமை வசந்த்! வாழ்த்துக்கள் + பாராட்டுக்கள்

Trackback by 'பரிவை' சே.குமார் September 28, 2010 at 10:08 AM said...

ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.
பாராட்டுக்கள் வசந்த்.

Trackback by Jaleela Kamal September 28, 2010 at 1:10 PM said...

கதையும் , தலைப்பும் அருமை

Trackback by ஜெயந்தி September 28, 2010 at 5:00 PM said...

தலைப்புலகூட ட்விஸ்ட்டா?

Trackback by Anisha Yunus September 28, 2010 at 8:12 PM said...

//பதிவை விட லேபில் தான் டாப் //

Repeattttted!!

Trackback by பின்னோக்கி September 28, 2010 at 8:23 PM said...

வளர்ப்பு மகனாக ஒரு பைரவர். வித்தியாசமான கற்பனை.

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 28, 2010 at 10:32 PM said...

//எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
எப்பிடிங்க இப்பிடியெல்லாம் யோசிக்க முடியுது? :))) டொக் :))

லேபில் கலக்கல் :)) ட்ரை பண்ணவே மாட்டோம் :))

அவங்களுக்கு ட்வின்ஸ் எல்லாம் கம்மி.. மூணு நாலு இப்படிதான் இருக்கும் :)
//

ஹிஹிஹி அப்டி சொல்லியிருந்தா முன்னமே கண்டுபிடிச்சுருப்பீங்களே அதான் ஜொல்லவில்லை :)) நன்றி சந்தனா !!!!

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 28, 2010 at 10:35 PM said...

// DrPKandaswamyPhD said...
ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.//

ஆமாங்க சார் விலங்குகளுக்கு இருக்கும் நன்றியுணர்வுகூட மனிதனுக்கு கிடையாது இதில் சக மனிதர்களை நாய் என்று திட்டும் உரிமையை இவர்களுக்கு யார் தந்தது என தெரியவில்லை

கருத்துக்கு நன்றி மருத்துவர் ஐயா...

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 28, 2010 at 10:36 PM said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
no comments//

ஏனுங்க மாம்ஸ்? உங்க பேர் யூஸ் பண்ணிருக்கறதாலையா இல்லை புரியலையா?

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 28, 2010 at 10:38 PM said...

//அமைதிச்சாரல் said...
இத்தனை நாளும் உங்க பதிவை வாசிச்சிருக்கிறோமே, லேபிளில் சொன்ன தப்பை செய்வோம்ன்னு நினைக்கிறீங்க?.. கண்டிப்பா மாட்டோம் :-)))))//

ஹ ஹ ஹா

நான் என்னையவா சொன்னேன் ? ஆவ்வ்வ்வ்வ்....

நன்றி சாரல் மேடம்

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 28, 2010 at 10:41 PM said...

// ராமலக்ஷ்மி said...
வால் ஆடிய வேளையில் வெளியானது முடிச்சு, வாயில்லா பிராணி அது என்பது. நன்று. கடைசி வரி எனக்குப் புரியவில்லை. லேபிள் புன்னகைக்க வைக்கிறது.//

கண்டித்தமிழர்கள் டாக்கை (Dog) டொக் அ டோக் என்றழைப்பார்கள்..

//ராமலக்ஷ்மி said...
சுசி சொல்வது சரி. நெடிலாகப் போட்டிருந்தால் எனக்கும் உடனே புரிந்திருக்கும். ஹி.//

சுசி சொல்றதும் சரிதான் இப்படியும் குறிலா சொல்றவங்களும் இருக்காங்களே நன்றி மேடம்...

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 28, 2010 at 10:41 PM said...

//சைவகொத்துப்பரோட்டா said...
லேபல் படித்த பின்னர் புரிந்தது :))//

நன்றி பாஸ் :))

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 28, 2010 at 10:44 PM said...

//நட்புடன் ஜமால் said...
செம செம வசந்த்

எப்படித்தான் யோசிக்கிறீங்களோ

லேபில் யாரும் யாருக்குமே முயற்சிக்காமல் இருப்பதே நல்லது//

அதேதான் அண்ணா யாருமே யாருக்கும் முயற்சிக்காமல் இருப்பதே நலம் ஆனால் ஒருநாள் பட்டுத்திருந்துவார்கள் நன்றிண்ணா!

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 28, 2010 at 10:52 PM said...

//அருண் பிரசாத் said...
நான் முதல்லேயே கண்டுபிடிச்சிட்டேனே! கண்டுபிடிச்சிட்டேனே!!//

அருண் பொதுவா நான் சின்னதா ட்விஸ்ட் வச்சி எழுதுறது கடைசி வரைக்கும் நம்ம போஸ்ட் சுவாரஸ்யமா படிக்கணும் என்பதற்காகத்தான் அதனால கண்டுபிடிச்சது பெரிய விஷயம் தான் இதிலிருக்கும் விஷயத்தையும் கண்டுபிடித்திருப்பீர்கள் என்றே நினைக்கிறேன்.. நன்றி பாஸ்!

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 28, 2010 at 10:54 PM said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
லேபிலப் பாத்தே வெளங்கியிருக்கனும்!
//’

ஹ ஹ ஹா .. எப்படியோ விளங்குச்சா இல்லியா மாம்ஸ்? நன்றியோ நன்றி. :))

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 28, 2010 at 10:55 PM said...

//தியாவின் பேனா said...
நல்ல கதை//

நன்றிங்க தியா :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 28, 2010 at 10:58 PM said...

//சுசி said...
இந்த தடவை மட்டும் ஆரம்பத்திலவே அவங்க ரெண்டு பேரும் யாருன்னு கண்டுபிடிச்சிட்டேனே.(இனம் இனத்தைன்னு சொல்ல மாட்டிங்க தானே உ பி)

ஒரு சின்ன விஷயம்.. பொதுவாவே நாங்க இலங்கையர்கள் 'டோக்னு' கொஞ்சம் நெடிலா தான் சொல்வோம். உங்க நண்பர்கள் கிட்ட கேட்டு பாருங்கப்பா.. :))

சாதாரண விஷயத்தை வித்தியாசமா எழுதிட்டு லேபல்ல அசத்திட்டிங்க.//

டொக் , ஒயில் , ஒபிஸ், செர் இப்படி குறில்லதான் இங்க இருக்கிற நிறைய பேர் பேசறாங்க சுசி

ரொம்ப நாளா எனக்கு லேபில் நச்சுன்னு எழுதணும்ன்னு ஆசை இத்தனை போஸ்ட்டுக்கு அப்பறம் இந்த போஸ்ட்லதான் அது வாச்சிருக்கு நன்றி சுசி...

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 28, 2010 at 11:02 PM said...

// ஹுஸைனம்மா said...
எனக்கும் முதல்லயே புரிஞ்சுடுச்சே.. பள்ளிக்கூடம் அனுப்பலைன்னதும்..

பாம்பின் கால் பாம்பறியும்னு வேணும்னா சொல்லிகோங்க.. :-))

கடைசி வரிதான் புரியாம இருந்துது, அதுவும் சசி சொன்னதுல புரிஞ்சுடுச்சு..
//

சுசிய சசியாக்கிட்டீங்களே ஹுசைனம்மா (ரொம்பநாளா ஹுசைன் எனும் பையனோட அம்மான்னுதான்னு நினைச்சிருந்தேன் உங்க கவுண்டரம்மா பெயர்விளக்கம் படிச்சேனுங்க எம்புட்டு டெக்னிக்கு உங்களுக்கு


//பாம்பின் கால் பாம்பறியும்னு வேணும்னா சொல்லிகோங்க.. :-))//

ஹ ஹ ஹா இங்கேயும் உங்க டெக்னிக்க யூஸ் பண்ணியிருக்கீங்க விலங்கை விலாங்காலே அட்ச்சிருக்கீங்க.. ஹ ஹ ஹா நன்றி ஹுசைனம்மா...

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 28, 2010 at 11:06 PM said...

// ஹேமா said...
வசந்து..நேத்து இரவே பதிவு பாத்தேன்.கொஞ்சம் குழப்பம்.
கண்டித்தமிழர்களைக் குறை சொல்கிறீர்களோ என்று.இப்போதுதான் புரிந்துகொண்டேன்.எனக்கே புதிதாக இருக்கிறது"டொக்".ஆங்கில வார்த்தையை இப்படிச் சொல்கிறார்கள்போலும்,

கதையைக் கடகடவென்று சொல்லி முடித்துவிட்ட ஆசுவாசம் உங்களுக்கு.

இதில் மனிதம் மறந்தவர் அப்பாவா அவர் மகனா ?ஆனால் முதலில் இரக்கம் காட்டிக் கூட்டி வந்தவர் பிந்நாளில் மனிதம் மறந்திருக்கிறார்.அதன் பின் அவர் மகன் அவர் இறப்புக்குகூட வராமல் போனது !

ஆனால் நன்றியோடு "எங்கிருந்தோ வந்தான்"என்பதாய் வளர்ப்பு மகனாய் நன்றியோடு கதை முடிந்திருப்பது மனிதம் இன்னும் வாழ்ந்துகொண்டிருப்பதைச் சொல்கிறது//

ஆவ்வ்வ்வ்வ்வ் ஹேமா கண்டித்தமிழர்களை நான் எப்போ குறை சொன்னேன் அவங்க யூஸ் பண்ற ஒரு வார்த்தைய யூஸ் பண்ணுனது தப்பா மற்றபடி இன்னும் புரியாத உங்களுக்கு இங்க சொல்லியிருக்கிறது நன்றிக்கடனும் பெற்றகடனும் நாயையும் மனிதனையும் வச்சு பின்னினதாக்கும் ம்ம் நன்றி ஹேமா :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 28, 2010 at 11:13 PM said...

//மாதேவி said...
லேபில் கலக்கல் :))//

நன்றி மேடம் எல்லாம் எல்போர்ட் மாட்டிக்கொண்டிருக்கும் சந்தனாவின் கிருபை ஹிஹிஹி அவங்களோட லேபில் ஸ்டைலே தனி என்னான்னு லேபிள் பண்ணன்னு லேபிள் போட்ருப்பாங்க ஸ்டைலா ம்ம்

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 28, 2010 at 11:14 PM said...

//இந்திரா said...
பதிவை விட லேபில் தான் டாப்//

நீங்க இந்திராவா இந்திரனா ? # டவுட்டு டவுட்டேய்....

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 28, 2010 at 11:15 PM said...

//புஷ்பா said...
azhagaana label and kathai.... nice vasanth sir...//

அவ்வ்வ்வ்..

நன்றி புஷ்பா :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 28, 2010 at 11:18 PM said...

//
என்னது நானு யாரா? said...
முதல் கமெண்ட் படிச்சப்பின்னாடி தான் லேபிலைப் பார்த்தேன். அருமை! படிக்கிறவங்க எதை எல்லாம் கூர்ந்து கவனிக்கிறாங்கன்னு புரியுது.

கதை முதலில ஒன்னும் புரியல. மத்த கமெண்ட்ஸ் படிச்சப்பின்னாடி நல்லா புரிஞ்சது. அருமை வசந்த்! வாழ்த்துக்கள் + பாராட்டுக்கள்//

ம்ம் படிக்கிறவங்க அதுவும் பொதுவிலன்னு வந்ததுக்கப்பறம் கூர்ந்து கவனிக்கிறாங்கறாங்க வசந்த் அதனால ஒரு ஒரு வார்த்தையும் மிக கவனமா எழுதோணுமாக்கும்.... நன்றி வசந்த்

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 28, 2010 at 11:19 PM said...

//சே.குமார் said...
ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.
பாராட்டுக்கள் வசந்த்.
//

நன்றி குமார்

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 28, 2010 at 11:19 PM said...

//Jaleela Kamal said...
கதையும் , தலைப்பும் அருமை
//

மிக்க நன்றி ஜலீலா மேடம் :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 28, 2010 at 11:21 PM said...

//ஜெயந்தி said...
தலைப்புலகூட ட்விஸ்ட்டா?
//

ம்ம் இன்னும் லேபில்ல கூட எப்படி ட்விஸ்ட் வைக்கலாம்ன்னு யோசிக்கிறேன் மேடம் நன்றி..

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 28, 2010 at 11:22 PM said...

அன்னு said...
//பதிவை விட லேபில் தான் டாப் //

Repeattttted!!//

நன்றி தங்காச்சி... :)))

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 28, 2010 at 11:23 PM said...

//பின்னோக்கி said...
வளர்ப்பு மகனாக ஒரு பைரவர். வித்தியாசமான கற்பனை.//

மிக்க நன்றி சார் :)