அப்டேட்ஸ்

| September 17, 2010 | |
கோழி அப்டேட்ஸ்

பொறிச்சது பிடிக்குமா வறுத்தது பிடிக்குமா என்றேன் கோழியிடம் இரண்டையும் கொறிப்பதுதான் பிடிக்கும் என்கிறது பொல்லாக்கோழி..

ஆடு அப்டேட்ஸ்

இப்போ எல்லாம் நீங்க எனக்கு புல் மட்டும்தான் போடறீங்க என்று கோபித்த ஆடிடம் நீ மட்டும் என்னவாம் எது கொடுத்தாலும் புழுக்கை மட்டும்தான் போடற அதான் என்றேன்..

மாடு அப்டேட்ஸ்

நீ எல்லாத்தையும்ம் முட்டுவியாமே என்னையும் முட்டிடாதே என்றேன் மாடிடம் சே சே நான் குட்டிச்சுவரையெல்லாம் முட்டுவதில்லை என்கிறது மாடு

ஈ அப்டேட்ஸ்

இந்த ரோட்டுல போற வர்றவங்க ஒருத்தர்விடாம ஒரு இடம் விடாம சுத்துறியே இது என்ன உங்க பாட்டன் போட்ட ரோடா இப்படி உரிமை எடுத்துகிற என்றேன் ஈயிடம் இல்லை இது ஈரோடென்றது ஈ

நாய் அப்டேட்ஸ்

எனக்கு எத்தனை கால்ன்னு கரெக்ட்டா சொல்லு என்ற நாயிடம் ஏன் நாலுதான் இதிலென்ன சந்தேகம் உனக்கு என்றேன் இல்லை ஒரு கால்தான் என்று இளித்தது தமிழ் படித்த நாயாய் இருக்கும்போல...

எலி அப்டேட்ஸ்

பொறியில் சிக்கிய எலியிடம் பார்த்தியா உன்னை எப்படி பொறி வச்சு பிடிச்சேன் என்றேன் பதிலுக்கு பார்த்தியா உன்னை எப்படி பொறி பிடிக்க வச்சேன் என்று சொல்லி சிரிக்கிறது எலி

குரங்கு அப்டேட்ஸ்

உனக்கும் எனக்கும் ஒரு விஷயத்தில் ஒத்துபோவதே இல்லை என்றது குரங்கு எப்படி என்றேன் உனக்கு வேடிக்கை பார்க்க பிடிக்கும் எனக்கு வேடிக்கை காட்ட பிடிக்கும் என்றது

கொசு அப்டேட்ஸ்

ஏன் இப்படி என் இரத்தத்தை உறிஞ்சி உறிஞ்சு குடிக்கிற என்றேன் கொசுவிடம் நீ சொறிஞ்சு சொறிஞ்சு சாகத்தான் என்றது கொசு...

(கீழே கோடிட்ட இடத்தை நிரப்புக)

யானை அப்டேட்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


குதிரை அப்டேட்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


புலி அப்டேட்ஸ்

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


Post Comment

47 comments:

Trackback by பன்னிக்குட்டி ராம்சாமி September 17, 2010 at 6:41 AM said...

மச்சி பாத்தியா, என்னைய விட்டுட்டியே? பன்னி அப்டேட்ஸ் போடலியா?

Trackback by பன்னிக்குட்டி ராம்சாமி September 17, 2010 at 6:47 AM said...

சரி சரி, நானே பன்னி அப்டேட்ஸ் போட்டுர்ரேன்!
உனக்குப் ரொம்பப் புடிச்சது என்ன பன்னி? ம்ம்ம்...என்ன இடிச்சா பீடைன்னு அவனவன் வண்டியக் கொண்டுபோயி எதுதாப்புல வர்ர லாரில மோதுரானுங்களே அதுதான் எனக்கு ரொம்பப் பிடிக்கும்!

Anonymous — September 17, 2010 at 6:54 AM said...

வசந்த் சிரிச்சி முடியலை....

எப்படி இப்படின்னு வசந்த் கிட்ட கேட்டேன் வார்த்தை ஜாலம் புரிவதில் வல்லரசன் நான் என்றான்.....

இன்னும் யோசிக்கிறேன் எப்படி பாராட்டுவதுன்னு...only u can vasanth

Trackback by பன்னிக்குட்டி ராம்சாமி September 17, 2010 at 6:59 AM said...

யானை அப்டேட்ஸ்
ஓங்குதாங்கா வளர்ந்துட்டு இப்பிடிப் பிச்சை எடுத்துப் பொழைக்கிறியே வெக்கமா இல்ல?
அடி செருப்பால, காட்டுல சுதந்திரமா திரிஞ்ச எங்கள புடிச்சி வெச்சிக்கிட்டு கேக்குர கேள்வியப் பாரு, படுவா!

குதிரை அப்டேட்ஸ்
குதிர நீ ஏதாவது கேளேன்? பிகரு கொஞ்சம் உசரமா இருந்தா உடனே குதிரன்னு சொல்லுறீங்களே, அது ஏன்யா? ஏண்டா நான் என்ன அவ்வளவு அசிங்கமாவா இருக்கேன்?

புலி அப்டேட்ஸ்
ஏண்டா என் பேரச் சொல்லி கொஞ்ச நஞ்ச பாலிடிக்சாடா பண்றீங்க?

Trackback by என்னது நானு யாரா? September 17, 2010 at 7:26 AM said...

யானை அப்டேட்ஸ்

கொசு கடிச்சா யானைகால் வியாதி வருதே, அப்போ யானை கடிச்சா கொசுக்கால் வியாதி வருமோ?

குதிரை அப்டேட்ஸ்

குதிரை... குதிரை...நீ ஏன் கொள்ளு திங்க மாட்டெங்கிற?

உன்னை கொல்லணும்னு தான். கொள்ளுயா இது? என் பல்லெல்லாம் ஆடிப்போச்சு

புலி அப்டேட்ஸ்

புலியே ஏன் இப்படி பயந்து நடுங்கற?

பின்ன என்னப்பா? "பதுங்கினா பாயும் புலின்னு" சொன்னாங்க

இப்போ ஒதுங்க கூட இடமில்லாம காட்டை எல்லாம் அழிச்சிட்டீங்களேய்யா!

Trackback by என்னது நானு யாரா? September 17, 2010 at 7:29 AM said...

நல்ல நல்ல விஷயமா அவிழ்த்து விடறீங்க அப்பா! உங்களுக்கு நம்ப பேரு இருக்கு இல்ல! அது தான் ஜமாயிக்கறீங்க!

இன்னைக்கி எழுதி இருக்கிற எல்லாமே சிரிப்பு டானிக்ப்பா!!! செம தூள்! தூள்!

Trackback by Subankan September 17, 2010 at 8:24 AM said...

கலக்கல் வசந்து :)

Trackback by ராமலக்ஷ்மி September 17, 2010 at 8:30 AM said...

அப்டேட்ஸ் அருமை:)!

குறிப்பா நாய் அப்டேட்ஸ்:))!

Trackback by Unknown September 17, 2010 at 8:32 AM said...

மாடு அப்டேட்ஸ் :)))

Trackback by வழிப்போக்கன் September 17, 2010 at 8:41 AM said...

யானை அப்டேட்ஸ்....

யானை சொன்னது..உனக்கு ஆறாம் அறிவு இருந்தென்ன பயன்??? உன்னால் என் எடையை மிஞ்ச முடிய வில்லையே??? என சிரித்தது....

உங்கள் கற்பனை சூப்பர்....வாழ்த்துகள்....

கலா — September 17, 2010 at 9:01 AM said...

யானை: ஆனைக்கும் அடி சறுக்கும் என்பார்களே
அது உண்மையா கணபதி?

ஆ {பால்}நை {ந}க்கும் விலங்குகளிடம் {நாய்.பூனை..}
கேட்க வேன்டிய கேள்வியை இந்தக் கணபதியிடம்
கேட்கலாமா.....? கொஞ்சம் வழிவிடுறயளா..
தம்பிக்கு ஏதோ தினைப்புனத்தில் {காதல்} சிக்கலாம்
என்னை உதவிக்கு அழைக்கிறான்
இதோ..இதோ..வந்துகிட்டே இருக்கேன் தம்பி.....குதிரை : உன் குணமறிந்துதான் உனக்கு கடவுள்
கொம்பு வைக்கவில்லையே என்கிறார்களே.......

அடா...இதைக் கடவுளா சொன்னாரு..?இந்த
மனிஷ ஜென்மங்கள் அப்படியொரு புரளியை
பரவ விட்டிருக்கிறார்கள்
என் பளபளக்கும் மேனி,அழகு,கம்பீரம்
என் அழகான நடை,ஓட்டம் இன்னும்.....
இவைகளைப் பார்த்த மனிதன் என் அழகை,
கெடுக்க நினைத்து போட்ட குண்டுதான்
அது.எங்கிட்ட இது வெடிக்காது....

புலி : புலி,புலியென்று வேலிபோட்டு
அடைத்து வைத்திருக்கிறார்களே
அவர்களை எப்போது எங்கள் இனத்துடன்
பழக விடுவது..?

தேர்வெழுதி தெரிவுசெய்து “அனுப்பி” வைப்பார்கள்
புலியாரே..புரியாதே!! காத்திரு,

Anonymous — September 17, 2010 at 9:09 AM said...

உஸ்ஸப்பா...

இந்தக் கொசுத் தொல்ல தாங்க முடியலடா.. மருந்தடிச்சு கொல்லுங்கடா..

Trackback by கார்க்கிபவா September 17, 2010 at 9:13 AM said...

ஆணிய புடுங்க வேணாம்.. இனிமேல நான் அப்டேட்ஸ் எழுதல :)))

Trackback by R.பூபாலன் September 17, 2010 at 9:54 AM said...

நீங்க சொல்லிப்புட்டீங்கலேன்னு
கோடிட்ட இடத்துல நிரப்புறதுக்கு
நானும் கர்சர வெச்சு type பண்ணி பார்த்தேன்
ஒரு எழுதும் வர மாட்டேன்குதே......


சின்ன பையன்னு ஏமாத்தப் பார்க்கறீங்களா ... ?????

Trackback by R.பூபாலன் September 17, 2010 at 9:55 AM said...

நிறை நிறைய சிரிச்சேன்.......


நன்றி
நன்றி....

Trackback by சசிகுமார் September 17, 2010 at 10:14 AM said...

அருமை நண்பா சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது.

Trackback by சாந்தி மாரியப்பன் September 17, 2010 at 10:47 AM said...

குதிரை அப்டேட்ஸ்
------------------

நீ நின்னுக்கிட்டே தூங்குவியாமே எப்படிப்பா என்றேன் குதிரையிடம்.. நீ ஆப்பீசில் உக்காந்துக்கிட்டே தூங்குவேயில்லையா அதைப்போலத்தான் என்று சொல்லி இளித்தது குதிரை.

*****
யானை அப்டேட்ஸ்
------------------
ஏன் இப்படி மதம்பிடித்து அட்டகாசம் செய்கிறாய் என்றேன் யானையிடம்.. எனக்காவது அவ்வப்போதுதான், உங்களுக்கு??.. என்று கேட்டு நிறுத்தியது யானை.

*****
புலி அப்டேட்ஸ்
---------------
புலி வெஜிடேரியனா மாறட்டும்.. அப்றம் கேட்டுட்டு வந்து சொல்றேன் :-)))))))))))))

Anu — September 17, 2010 at 11:30 AM said...

Appa, ippadilaam kooda mokka podamudiuma...vayiru valikka sirikka vechuteenga Vasanth...:)

Trackback by velji September 17, 2010 at 11:42 AM said...

அக்மார்க் வசந்த் அப்டேட்ஸ்.

இது உங்க பிராண்ட்...கோடிட்ட இடத்தையும் பின்னால நிரப்பிருங்க!

Trackback by அன்புடன் அருணா September 17, 2010 at 12:23 PM said...

ரொம்ப நாளைக்கு அப்புறம் படிக்கிறேன் வசந்த் அப்டேட்ஸ்! சூப்ப்ர்!

Trackback by ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) September 17, 2010 at 1:20 PM said...

/(கீழே கோடிட்ட இடத்தை நிரப்புக)//

இதுக்குதான் நான் ஸ்கூல் பக்கமே போனதில்லை...

Trackback by Gayathri September 17, 2010 at 1:27 PM said...

எப்படி இப்படிலாம் யோசிக்குறீங்க??/ ரூம் போட்டு இல்ல வீடு கட்டி யோசிக்குரீன்களோ

Trackback by சுசி September 17, 2010 at 1:47 PM said...

வசந்து வார்த்தையே வரலப்பா.. சிரிச்சுட்டே இருக்கேன்..

ஆனா பதிவோட நோக்கம் சக்சஸ் போல :))

Trackback by Unknown September 17, 2010 at 1:53 PM said...

அருமை வசந்த்

இதைத்தவிர உன் இடுக்கைகளுக்கு என்ன சொல்றதுன்னே தெர்லைப்பா

Trackback by Thenammai Lakshmanan September 17, 2010 at 2:23 PM said...

நீ எல்லாத்தையும்ம் முட்டுவியாமே என்னையும் முட்டிடாதே என்றேன் மாடிடம் சே சே நான் குட்டிச்சுவரையெல்லாம் முட்டுவதில்லை என்கிறது மாடு//

ஹாஹாஹா சுப்பர் வசந்த..

Trackback by Thenammai Lakshmanan September 17, 2010 at 2:24 PM said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
யானை அப்டேட்ஸ்
ஓங்குதாங்கா வளர்ந்துட்டு இப்பிடிப் பிச்சை எடுத்துப் பொழைக்கிறியே வெக்கமா இல்ல?
அடி செருப்பால, காட்டுல சுதந்திரமா திரிஞ்ச எங்கள புடிச்சி வெச்சிக்கிட்டு கேக்குர கேள்வியப் பாரு, படுவா!

குதிரை அப்டேட்ஸ்
குதிர நீ ஏதாவது கேளேன்? பிகரு கொஞ்சம் உசரமா இருந்தா உடனே குதிரன்னு சொல்லுறீங்களே, அது ஏன்யா? ஏண்டா நான் என்ன அவ்வளவு அசிங்கமாவா இருக்கேன்?

புலி அப்டேட்ஸ்
ஏண்டா என் பேரச் சொல்லி கொஞ்ச நஞ்ச பாலிடிக்சாடா பண்றீங்க?//

இதுவும் சூப்பர் வசந்த .. ராமசாமி..:))

Trackback by மாதேவி September 17, 2010 at 3:03 PM said...

சிரித்து முடியலை.

Trackback by அருண் பிரசாத் September 17, 2010 at 4:40 PM said...

வாவ், சூப்பர் அப்டேட்ஸ் வசந்த்

Trackback by வால்பையன் September 17, 2010 at 5:39 PM said...

கடி கடி கடி கடி
கொசுக்கடி
கடிக்க வந்தா அதை
நசுக்கடி!

Trackback by சிநேகிதன் அக்பர் September 17, 2010 at 5:43 PM said...

எப்படி இப்படியெல்லாம்...

அருமை வசந்த்.

Trackback by யோ வொய்ஸ் (யோகா) September 17, 2010 at 6:25 PM said...

கலக்கல் மாமு... யாருக்குமே வராத கிரியேட்டிவிட்டி

Trackback by Anisha Yunus September 17, 2010 at 6:49 PM said...

//நீ எல்லாத்தையும்ம் முட்டுவியாமே என்னையும் முட்டிடாதே என்றேன் மாடிடம் சே சே நான் குட்டிச்சுவரையெல்லாம் முட்டுவதில்லை என்கிறது மாடு
//

வெவரமான மாடுங்ணா!!

Trackback by அப்பாவி தங்கமணி September 17, 2010 at 11:29 PM said...

அடக்கொடுமையே... ஏதோ ஜூவுகுள்ள வந்துட்டோம் போல இருக்கே... ஹா ஹா ஹா

Trackback by தெய்வசுகந்தி September 18, 2010 at 12:19 AM said...

ha ha ha!!!

Trackback by எஸ்.கே September 18, 2010 at 1:59 AM said...

செம காமெடி!

Trackback by தமிழ் September 18, 2010 at 6:09 AM said...

நல்ல கற்பனை

Trackback by ஜெயந்தி September 18, 2010 at 4:16 PM said...

பன்னிக்குட்டி ராமசாமி அப்டேட்சும் ரொம்ப சிரிக்க வைத்தது.

Trackback by ஹுஸைனம்மா September 19, 2010 at 12:35 PM said...

அப்டேட்ஸ் எழுதுறவங்களுக்கு ஆப்பு வச்சுட்டீங்க!! கலக்ஸ்!!

Trackback by 'பரிவை' சே.குமார் September 19, 2010 at 9:35 PM said...

அருமை நண்பா சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது.

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 19, 2010 at 10:35 PM said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி அதான் நீங்களே வந்துட்டீங்களே நல்ல அப்டேட்ஸ் சிரிச்சேன் நல்லா! நன்றி ராம்சாமி :)))

@ தமிழரசி ஹிஹிஹி நோ நோ பேட்வேர்ட்ஸ் நன்றி மேடம் :)

@ வசந்த் தூள் அப்டேட்ஸ் கொசு :))))) நன்றி வசந்த்

@ சுபா ரொம்ப நன்றி மச்சி :)

@ ராமலக்ஷ்மி மேடம் நன்றிங்க :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 19, 2010 at 11:50 PM said...

@ அஷோக் அண்ணா நன்றிண்ணா

@ வழிப்போக்கன் :)))))))) நன்றி பாஸ்

@ கலா உங்கள் பாஷையில பேசியிருக்கீங்க எனக்குத்தான் புரியவே இல்லை ஹிஹிஹி :))))

@ இந்திரா ஒரு கொசுவர்த்தி பொருத்திக்கோங்க...

@ கார்க்கி தலைவா ஏன் நீங்க கோச்சுக்கிறீங்க? நான் உங்க தோழி அப்டேட்ஸ்க்கு பரமரசிகன் தலைவா அப்டேட்ஸ் போடலைன்னா தீக்குளிப்பு போராட்டம் நடத்துவேன் ஆமா சொல்ட்டேன் :(

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 19, 2010 at 11:53 PM said...

@ பூபாலன் நன்றி தம்பி

@ சசிக்குமார் நன்றி பாஸ்

@ சாரல் மேடம் குதிரை அப்டேட்ஸ் கலக்கல் மேடம் நல்லா விழுந்து விழுந்து சிரிச்சேன் நன்றி மேடம்

@ வேல்ஜி நன்றி தலைவா ஹ ஹ ஹா ம்ம் ட்ரை பண்றேன் தலைவா!

@ ப்ரின்ஸ் ரொம்ப சந்தோஷம் மேடம் :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 19, 2010 at 11:56 PM said...

@ ரமேஷ் மாம்ஸ் தெரியுது மாம்ஸ் உங்களை பார்த்தாலே:)))

@ காயத்ரி ம்ம் நன்றிங்க

@ சுசி :(

@ ஜமால் அண்ணா மிக்க சந்தோஷம்ண்ணா :))

@ தேனம்மா நன்றி :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 19, 2010 at 11:59 PM said...

@ மாதேவி மேடம் மிக்க நன்றி :)

@ அருண்பிரசாத் நன்றி பாஸ் :)

@ வால் கிகிகிகி :))))

@ அக்பர் அண்ணா நன்றிண்ணா :)

@ யோகா மிக்க நன்றி மாமு :)))

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 20, 2010 at 12:03 AM said...

@ அன்னு நன்றி சகோ அதேதான் :)

@ அப்பாவி தங்ஸ் நன்றிங்க கிகிகிகி :))))

@ தெய்வசுகந்தி நன்றிங்க :)

@ எஸ்கே நன்றி பாஸ் :)

@ திகழ் நன்றிங்க :)

@ ஜெயந்திமேடம் நன்றிங்க :)

@ ஹூசைனம்மா சே சே அப்டில்லாம் இல்லீங்க ஆவ்வ்வ் நன்றிங்க மேடம் :)

@ சே குமார் நன்றிங்க :)

Trackback by எல் போர்ட்.. பீ சீரியஸ்.. September 20, 2010 at 1:51 AM said...

:)) எல்லாரையும் சிரிக்க வச்சே ஆகணும்ன்ர முடிவோட இருக்கீங்க.. ஹாஹ்ஹா..

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 21, 2010 at 6:10 AM said...

@ நன்றி சந்தனா யெஸ் யெஸ் :))