பப்பரப்பா....ன்னு...!

| August 3, 2010 | |
மேலோகத்திற்க்கு வர்ற மக்கள் நிறைய பாவம் செய்தவங்களா மட்டுமே வருவதால் கடவுள் அவர்களுக்கு நரகத்தில் என்ன தண்டனை கொடுக்கலாம் என்பதில் குழம்பி போய் கடைசியில் பூலோகம் சென்று அவர்கள் செய்யும் பாவத்திற்கேற்ற தண்டனை கொடுக்கலாம் என்று எண்ணி பூலோகம் வர்றார்...வந்து கீழே இருக்கும் நபர்களின் நடவடிக்கைகளை கவனித்து குறிப்பெடுத்துகிடறார் அவர் எடுத்த குறிப்புகள்....

மொதவெட்டு ப.மு.க (பண முன்னேற்ற கழகம்) தலைவர் திரு.பணநாதன் மாதிரியான அரசியல் வாதிகளுக்கு  

1.இவங்களுக்கு சாப்பிட சாப்பாட்டுக்கு பதில் பணத்தை கரைச்சு கொடுக்கணும்.

2.பேச வாய்திறந்தா பாம்பு,பல்லி,கரப்பான் பூச்சி மட்டும் வாய்ல இருந்து வரணும் சத்தம் வரக்கூடாது.

3. இவங்ககிட்ட இருந்து காலையில கண்ணு முழிக்கிறது,யூரின் போறதுல ஆரம்பிச்சு தூங்கற வரைக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் ஒவ்வொரு ஸ்பூன் ரத்தம் லஞ்சமா வாங்கணும்.

4.நரகத்தில புதுசா கட்டியிருக்குற ஒரு கோடி கழிவறைக்கும் இவரை வச்சு திறப்புவிழா நடத்தணும்.(மு.குறிப்பு)திறப்பு விழாவுக்கு தொண்டர்னு எவனாவது லாரி ஏறி வந்தால் அந்தந்த கழிவறைக்கு டிஷ்யூ பேப்பர்களாக தொங்க விடப்படுவார்கள் தொண்டர்கள்.

5.முக்கியமா இவங்களுக்கு திருமணம் செய்ய தடை மீறி செய்தால் கருத்தடை செய்யப்படும்..

6. புதிதாக நரகத்திற்க்கு வரும் ஒவ்வொருத்தரையும் வரவேற்று வாழ்த்து போஸ்டர் அடித்து நரகம் முழுவதும் அவரே ஒட்டி மறு நாள் அவரே கிழித்துவிட வேண்டும்..

ரெண்டாவது வெட்டு புத்தியானந்தா மாதிரியான சாமியார்களின் நடவடிக்கை கவனித்த கடவுள் எடுத்த தண்டனை குறிப்பு

1.நரகத்தில இருக்குற எல்லார் வீட்டு கதவையும் தினமும் காலையில இவர்தான் திறந்துவிடணும்,கதவை திறக்கும்போது எட்டிப்பார்த்தால் கண்கள் பிடுங்கப்படும்..

2.சிரித்தால் முக்கியமாக நரகத்தில் இருக்கும் பெண்களை பார்த்து சிரித்தால்   நரகத்திலிருக்கும் அத்தனை சாக்கடைகளிலிருந்தும் லிங்க் இவர் வாய்க்கு விடப்படும்.

3.முக்கியமா இவர் பேச தடை விதிக்கப்படுகிறது, மீறி வாய் திறந்தால் வாயில் வைத்திருக்கும் அணு குண்டு வெடித்து வாய் பீஸ் பீஸாக சிதறிவிடும்.

மூணாவது வெட்டு பஞ்ச் வசனம் பேசும் நடிகர்களுக்கு...

1.வேளை வேளைக்கு சாப்பிட பஞ்சு மட்டுமே தரப்படும்.

2.நரகத்தில் பறக்கும் பறவைகளுக்கு பறந்து பறந்து உணவு கொடுக்க வேண்டும்.

3.நரகத்தில் யார் வீட்டில் எழவு விழுந்தாலும் அங்கு இவர் சென்று சாவாட்டம் ஆடவேண்டும்.


நாலாவது வெட்டு சீரியல் டைரக்டருக்கு...

1.நரகத்தின் சமையல் கூடத்தில் நாள் முழுவதும் வெங்காயம் மட்டுமே உரிக்கும்,வெட்டும் வேலை ,வெங்காயத்தின் தேவையில்லாத பொழுதும் கூட, அதுமட்டுமில்லை வெங்காயத்தில் எத்தனை பார்ட் இருக்கிறது என்றும் கண்டு பிடித்து சொல்ல வேண்டும்,

அஞ்சாவது வெட்டு போலீஸ்க்கு

1,இவருக்கு நிறைய சாப்பாடு கொடுக்கப்படும் வயிறு முட்ட முட்ட சாப்பிட்டு தூங்க வேண்டும் பட் ஒரு கண்டிஷன் குப்புற படுத்து தூங்க வேண்டும்.

இவ்வளவு பேசற இத எழுதுன பிளாக்கருக்கும் வெட்டு

1. ஒரே தண்டனைதான் இவரோட கைகள் இரண்டும் வெட்டப்படும் :)))

தலைப்பு விளக்கம் : அப்பிடித்தான் யோசிச்சது

Post Comment

58 comments:

Anonymous — August 3, 2010 at 2:04 PM said...

நடிகர் டைரக்டர் போலீஸ் சரியான தீர்ப்பு நாட்டாமை.....

Anonymous — August 3, 2010 at 2:07 PM said...

//இவ்வளவு பேசற இத எழுதுன பிளாக்கருக்கும் வெட்டு

1. ஒரே தண்டனைதான் இவரோட கைகள் இரண்டும் வெட்டப்படும் :)))//

அவ்வளவெல்லாம் வேண்டாம் . கரண்ட் இல்லாம பண்ணிட்டாலே போதும் அவருக்கு. அதை விட பெரிய தண்டனை உண்டா என்ன :)

Anonymous — August 3, 2010 at 2:07 PM said...

இவ்வளவு பேசற இத எழுதுன பிளாக்கருக்கும் வெட்டு


1. ஒரே தண்டனைதான் இவரோட கைகள் இரண்டும் வெட்டப்படும் :)))


வெட்டிடுவாங்களா விட்டுடுவேனா .....

Anonymous — August 3, 2010 at 2:09 PM said...

வசந்த் பெரிய தண்டனை சொல்லவா என் பதிவை படிக்க சொல்......

Anonymous — August 3, 2010 at 2:17 PM said...

//இவ்வளவு பேசற இத எழுதுன பிளாக்கருக்கும் வெட்டு
1. ஒரே தண்டனைதான் இவரோட கைகள் இரண்டும் வெட்டப்படும் :)))//

இந்த பதிவுலையே டாப் இது தான் ப..
(தமிழரசி மன்னிப்பாராக)

Trackback by kavisiva August 3, 2010 at 2:34 PM said...

கவனம் வசந்த் கடன்பிறப்புகள் கட்டையோட வந்துடப்போறானுங்க.

ந்ம்ம ஊர்ல ப்ளாகர் கையை வெட்ட வேணாம். ஏன்னா பாற்காட்டார் துறையே அதை கவனிச்சுக்கும் கரண்டை கட் பண்ணி :-(

Trackback by நாடோடி August 3, 2010 at 2:59 PM said...

இது வ‌ச‌ந்த‌லோக‌த்தில் உள்ள‌ த‌ண்ட‌னைக‌ளா? :))))))...

Trackback by Jey August 3, 2010 at 3:08 PM said...

பஞ்சாயத்து கூட்டாம, தீர்ப்பு சொல்லிட்டியே நாட்டாமை....

பப்பரப்....பேனு யோசிச்சதுக்கே, இத்தனை தீர்ப்பா.....????

யாரும் ஆட்டோ அனுப்பிருவாங்கன்னு, தனுக்குதானே கைய வெட்டுட்னாமதிரி தீர்ப்பு சொல்லி தப்பிச்சிட்டீரு...

அசத்துங்க பங்காளி.

Trackback by பெசொவி August 3, 2010 at 3:12 PM said...

//மூணாவது வெட்டு பஞ்ச் வசனம் பேசும் நடிகர்களுக்கு...

1.வேளை வேளைக்கு சாப்பிட பஞ்சு மட்டுமே தரப்படும்.//

இது டாப்!

அற்புதமா எழுதற எழுத்தாளருக்கு மோதிரம் பரிசா தரலாமான்னு யோசிச்சுகிட்டிருக்கும்போது,

// இவரோட கைகள் இரண்டும் வெட்டப்படும் //

இப்படி எழுதிட்டீங்களே, பாஸ்!

:)))))))))))))

Trackback by Prathap Kumar S. August 3, 2010 at 3:25 PM said...

/மூணாவது வெட்டு பஞ்ச் வசனம் பேசும் நடிகர்களுக்கு...//

இதைத்தாம்யா உடனடியா அமுல்படுத்தனும்... தக்காளி தாங்கமுடியலடா சாமி....

Trackback by Ramesh August 3, 2010 at 3:37 PM said...

//2.பேச வாய்திறந்தா பாம்பு,பல்லி,கரப்பான் பூச்சி மட்டும் வாய்ல இருந்து வரணும் சத்தம் வரக்கூடாது.

அவங்க பேசினாலே தாங்க முடியாது..இதுல இதெல்லாம் வேற வருமா.....ரொம்ப பப்பரப்பேன்னு யோசிச்சிட்டீங்க போல...

புத்தியானந்தா மாதிரியான சாமியார்களின் நடவடிக்கை கவனித்த கடவுள் எடுத்த தண்டனை குறிப்புகள் எல்லாமே..செம..........!

Trackback by ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) August 3, 2010 at 4:16 PM said...

//அஞ்சாவது வெட்டு போலீஸ்க்கு//

maappu naan illiye?

Trackback by தமிழ் நாடன் August 3, 2010 at 4:59 PM said...

ரூம் போட்டு யோசிப்பயலா?
அது சரி உங்களோட ”செம்மொழியான தமிழுக்காக பிரபலங்களின் அர்ப்பணிப்பு....” அப்படீங்கற பதிவு மின்னஞ்சல்ல உலகம் பூரா சுத்துது தெரியுமா? எனக்கும் நாலு பயபுள்ளைக அனுப்பினாங்க? அட இது வசந்த் பதிவாச்சேன்னு கீழே உங்க பேர் இருக்கான்னு பார்த்தேன். கானும். சுட்டுட்டாங்க போல!

Anonymous — August 3, 2010 at 5:24 PM said...

செம்ம கலக்கல் போஸ்ட் வசந்த் ..இது படிப்பர்வர்கள்கு என்ன தண்டனை கிடைக்கும் அது சொல்ல மறந்திடிங்களை ....
போலீஸ் +பஞ்சு வசனம் பேசும் நடிகர்கள் இது ரெண்டு சூப்பர்.

Trackback by எல் போர்ட்.. பீ சீரியஸ்.. August 3, 2010 at 6:03 PM said...

மூணு, நாலு, அஞ்சு டாப் :))

கடைசி.. போனாப் போவுது.. பொழச்சுப் போவட்டும்.. விட்டுடலாம்.. :))

Trackback by ஜெயந்த் கிருஷ்ணா August 3, 2010 at 6:45 PM said...

எல்லா வெட்டும் கலக்கலா இருக்கு அண்ணா..

Trackback by Chitra August 3, 2010 at 7:02 PM said...

அஞ்சாவது வெட்டு போலீஸ்க்கு

1,இவருக்கு நிறைய சாப்பாடு கொடுக்கப்படும் வயிறு முட்ட முட்ட சாப்பிட்டு தூங்க வேண்டும் பட் ஒரு கண்டிஷன் குப்புற படுத்து தூங்க வேண்டும்.

......செம...... சான்சே இல்லை!

Trackback by Riyas August 3, 2010 at 7:07 PM said...

ம்ம்ம்ம் கலக்கல்..

Trackback by Unknown August 3, 2010 at 7:32 PM said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)

Trackback by a August 3, 2010 at 7:59 PM said...

//
ஒரு கண்டிஷன் குப்புற படுத்து தூங்க வேண்டும்
//

இதுக்கு ஏதும் ஸ்பெஷல் காரணம் உண்டா....

Trackback by senthil velayuthan August 3, 2010 at 8:11 PM said...

எல்லா வெட்டும் கலக்கலா இருக்கு

Trackback by Unknown August 3, 2010 at 8:21 PM said...

வாங்க சித்திர குப்தரே...

Trackback by சீமான்கனி August 3, 2010 at 8:38 PM said...
This comment has been removed by the author.
Trackback by சீமான்கனி August 3, 2010 at 8:42 PM said...

சாமியார், போலிசு, பஞ்ச் நடிகர்க்கு வெட்டுன வெட்டு சூப்பர்...எல்லோரையும் வெட்டியாச்சுனா அப்போ உன் கைய வெட்டுறதுக்கு ஆளு இருக்காதுன்னு தானே கடைசி வெட்டு???? வித்யாசமான பிரம்மிக்க பகிர்வு வைக்கிறது...வாழ்த்துகள் மாப்பி

Trackback by aavee August 3, 2010 at 8:51 PM said...

நல்ல வேளை! இந்த ப்ளாக்-ஐ படிப்பவர்களுக்கு வெட்டு எதும் இல்லை!!!

Trackback by ஹேமா August 3, 2010 at 9:15 PM said...

//இவ்வளவு பேசற இத எழுதுன பிளாக்கருக்கும் வெட்டு
ஒரே தண்டனைதான் இவரோட கைகள் இரண்டும் வெட்டப்படும்..//

ஏன் வசந்து ...
இது வேணாம்.மாத்திக்கலாம் !

Trackback by Gayathri August 3, 2010 at 9:31 PM said...

ஆஹா என் இந்த கொலை வெறி...லாஸ்ட் வெட்டு மட்டும் வேண்டாமே...

Trackback by சுசி August 4, 2010 at 1:18 AM said...

அச்சச்சோ.. இது மட்டும் வேண்டாம் அவருக்கு..

அப்புறம் பதிவுலகம் என்னாகும்.

Trackback by ஸ்ரீராம். August 4, 2010 at 4:54 AM said...

//".......மறு நாள் அவரே கிழித்துவிட வேண்டும்"//

இது சூப்பருங்க...!

Trackback by Unknown August 4, 2010 at 5:27 AM said...

கலக்கல்....

Trackback by சாந்தி மாரியப்பன் August 4, 2010 at 6:02 AM said...

எல்லா வெட்டும் சூப்பர்.. கடைசி வெட்டு???

ஏன்..ஏன்..ஏன்.. ஏன் இந்த கொ.வெ?????

Trackback by சேலம் தேவா August 4, 2010 at 9:18 AM said...

வித்யாசமான சிந்தனை.

Trackback by சிநேகிதன் அக்பர் August 4, 2010 at 11:59 AM said...

வழக்கம்போலவே அசத்தல் வசந்த்.

Trackback by R.பூபாலன் August 4, 2010 at 1:51 PM said...

மறுபடியும் ஒரு முறை வயிறு வலிக்க சிரிக்க வாய்த்த வசந்த் அண்ணாவுக்காக,

இவ்வளவு பேசற இத எழுதுன பிளாக்கருக்கும் வெட்டு

1. ஒரே தண்டனைதான் இவரோட கைகள் இரண்டும் வெட்டப்படும் :)))


நாட்டாமை தீர்ப்ப மாத்திச் சொல்லு

Trackback by R.பூபாலன் August 4, 2010 at 1:57 PM said...

உங்களோட ஒவ்வொரு பதிவையும் படிச்சுட்டு உங்களிடம் எபோதும் கேட்பார்களே ஒரு கேள்வி,

"" ரூம் போடு யோசிப்பீங்களோனு ""

ஆனா நான் கண்டுபிடிசுட்டேன்பா

"" நீங்க ஒவொரு பதிவுக்குமே பப்பரப்பானுதான யோசிக்கிறீங்க.

Trackback by Unknown August 4, 2010 at 2:25 PM said...

ayyo..! ivlo kodumaiya...venaam vitrunga....pa...lasta ean apdi....appo padikravangaluku....?

Trackback by Unknown August 4, 2010 at 2:27 PM said...

ayyo..! ivlo kodumaiya...venaam vitrunga....pa...lasta ean apdi....appo padikravangaluku....?

Trackback by 'பரிவை' சே.குமார் August 4, 2010 at 3:11 PM said...

செம கலக்கல்...

Trackback by கார்த்திகைப் பாண்டியன் August 4, 2010 at 9:28 PM said...

நச்..:-)))

Trackback by புலவன் புலிகேசி August 5, 2010 at 6:28 AM said...

:))

Trackback by Unknown August 5, 2010 at 7:15 AM said...

I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

Trackback by Guruji August 5, 2010 at 6:02 PM said...

குறிப்புகள் பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் எனது வலைபக்கத்தை காண அழைகின்றேன் http://ujiladevi.blogspot.com/

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 5, 2010 at 9:58 PM said...

@ தமிழரசி நன்றி மேடம் :))))))))

@ இந்திரா அவங்க ஒண்ணும் சொல்ல மாட்டாங்க பயப்படாதீங்க நன்றி

@ கவி ஹ ஹ ஹா போட்டுகுடுத்துட்டீங்களே அம்மிணி

@ ஸ்டீபன் சே சே வசந்தலோகத்தின் தண்டனைகளே வேற நன்றி பாஸ்

@ ஜே பங்கு யோவ் கால வாரிட்டியே பங்காளி...!

@ பெ.சொ.வி சார் மோதிரமா எங்கே எங்கே ஹ ஹ ஹா நன்றி சார்

@ நாஞ்சில் மாப்ள இவனுங்க பஞ்ச் கேட்க முடியலய்யா அதான் நன்றி பிரதாப்

@ ரமேஷ் அதான் தலைப்புலே சொல்லிட்டேனே அப்பிடித்தான்

@ ரமேஷ் மாம்ஸ் ஹ ஹா அது போலீஸ்க்கு மாமு சிரிப்பு போலீஸ்க்கு இல்ல நன்றி

@ தமிழ் நாடன் ஹைய்யா ஹ ஹ ஹா ஆமா பாஸ் அந்த போஸ்ட் மட்டுமில்ல என்னுடைய நிறைய போஸ்ட் மெயில்ல சுத்துதுன்னு எனக்கே அந்த மெயில் திரும்ப வரும்போதுதான் தெரியுது வாழ்க்கை ஒரு வட்டம் பாஸ் ... பொழச்சு போகட்டும் விட்டுடலாம்.. தடுக்க வழியே இல்லாதப்போ நாம் என்ன பண்றது? நன்றி

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 5, 2010 at 10:03 PM said...

@ சந்த்யா நன்றிங்க படிக்கிறவங்களுக்கு படிக்கிறதே பெரிய தண்டணைதான் நன்றி

@ L Board be Series நன்றி பாஸ் :))

@ வெறும்பய நன்றி தல

@ சித்ராம்மா மிக்க நன்றி

@ ரியாஸ் நன்றி பாஸ்

@ ஸ்வேதா முடில

@ யோகேஷ் உங்களுக்கு தொப்பையிருந்தா குப்புறபடுத்து பாருங்க பாஸு...

@ செந்தில் நன்றிங்க

@ செந்தில் மாம்ஸ் ஹும் இதென்ன எம புராணமா?

@ சீமான்கனி நன்றி மாப்ள

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 5, 2010 at 10:18 PM said...

@ கோவை ஆவி போனா போகுது பொழச்சு போங்க :))) நன்றி

@ ஹேமா ம்ம் நன்றிங்க

@ காயத்ரி சரிங் அம்மிணி நன்னி :)

@ சுசி பதிவுலகம் நல்லாகும் :)) நன்றி

@ ஸ்ரீராம் நன்றிங்க

@ கலா நேசன் நன்றி

@ சாரல் மேடம் நன்றி சே சே கையெடுக்குறதுன்னு சொன்னது மேலோகம் போன பின்னாடியாக்கும் அவ்ளோ சீக்கிரம் உங்க எல்லாரைய்ம் நிம்மதியா இருக்க விட்ருவேனா?

@ சேலம் தேவா நன்றிங்க

@ அக்பர் அண்ணா நன்றி

@ பூபாலன் உங்க போஸ்ட் படிச்சேன் ப்ச் சான்சே இல்ல வாழ்த்துக்கள் வளமான எதிர்காலம் இருக்கு...

@ ஹலிம் நன்றி பாஸ் :)

@ சே குமார் நன்றி தல

@ கா.பா. நன்றி தல

@ புலவன் புலிகேசி நன்றி

@ ஸ்வேதா ஆத்தா உங்களுக்கு ஸ்பெசல் போஸ்ட் போட்டாத்தான் சரி வருவீங்க போல..

@ உஜிலா தேவி நன்றி

@

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 5, 2010 at 10:21 PM said...

@ அகிலா மேடம் ஹ ஹ ஹா செம்ம உங்க கமெண்ட் தான் டைமிங்க் கமெண்ட் ரியலி உங்களுக்கு ஹுயூமர் சென்ஸ் நிறைய இருக்குன்னு நினைக்கிறேன்...!நன்றி மேடம்

Trackback by vanathy August 6, 2010 at 5:47 AM said...

வசந்த், நல்ல கற்பனை உங்களுக்கு. நல்லா இருக்கு.

Trackback by 'பரிவை' சே.குமார் August 6, 2010 at 5:52 PM said...

நல்ல கற்பனை... நல்லா இருக்கு...

Trackback by 'பரிவை' சே.குமார் August 6, 2010 at 5:52 PM said...

நல்ல கற்பனை... நல்லா இருக்கு...

Trackback by அப்பாவி தங்கமணி August 6, 2010 at 6:30 PM said...

//ஒரே தண்டனைதான் இவரோட கைகள் இரண்டும் வெட்டப்படும் :)))//

இதுவரைக்கும் நல்லாதானேங்க போச்சு... ஏன் ஏன் இந்த கொலை வெறி?

ஹ ஹ ஹ..சூப்பர் கற்பனை...

Trackback by Thenammai Lakshmanan August 6, 2010 at 9:15 PM said...

வெங்காயத்தில் எத்தனை பார்ட் இருக்கிறது என்றும் கண்டு பிடித்து சொல்ல வேண்டும்//

ஹா ஹா ஹா வசந்த் ஏன் இந்தக் கொலை வெறி..

Trackback by R.பூபாலன் August 6, 2010 at 10:27 PM said...

வசந்த் அண்ணா ,
அடுத்த (கட்ட) பஞ்சாயத்துக்காக காத்திருக்கின்றேன்..

Trackback by R.பூபாலன் August 6, 2010 at 10:29 PM said...

மூன்று நாளைக்கு ஒரு முறைதான் பதிவிடுவீர்களா வசந்தா..?

கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்களேன் இடைவெளியை...

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 7, 2010 at 1:19 AM said...

@ நன்றி வாணி

@ சே குமார் திரும்பவும் நன்றி நண்பரே

@ நன்றி தேனம்மை லக்ஷ்மணன்

@ நன்றி பூபாலன் நேரமில்லையே பூபாலன் :((((((((

Trackback by Unknown August 7, 2010 at 4:19 AM said...

:) entha 5 satangalum epo amulpaduthaporenga...

seikram...

but 5vathu konjam adikam so athaikonjam kuraithu..avarai internet ellatha ulagathuku anupidalam.

Trackback by ராமலக்ஷ்மி August 9, 2010 at 4:55 PM said...

பப்பரப்பான்னு யோசிச்சவருக்கு தண்டனை வேண்டாமே, ப்ளீஸ் :)!

Trackback by ராமலக்ஷ்மி August 9, 2010 at 4:59 PM said...

ஊருக்குப் போய் வந்து பார்த்தாலும் ஒவ்வொரு பதிவும் ஒரு சிக்ஸராய்:))!

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 9, 2010 at 9:42 PM said...

@ சிவா அன்புக்கு நன்றி பாஸ்

@ ராமலக்ஷ்மி மேடம் அப்படியே ஆகட்டும் மேடம் மன்னிச்சு விட்டுட்டாங்க.. நன்றி மேடம் :)