க்ளிக்ஸ் .....

| June 5, 2010 | |


தமிழ் நாட்டில் நான் எடுத்த புகைப்படங்கள் உங்களின் பார்வைக்கு...

சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரம்


கோவிலின் உட் புறத்தில் தென் பட்ட சிறிய கோவில்


கோவிலின் நீண்ட வெளிப்புற பிரகாரம்


என் நிழல் பிரகாரத்தில்...


கோவிலில் வீற்றிருக்கும் மொட்டைத்தூண்கள் நான்கு....


என் சித்தி பையனுக்கு சுடிதார் போட்டு எடுத்த போட்டோ...இன்னொருவன் பொம்மை மாடலில் போஸ் கொடுக்கிறான்...


பழநி முருகன் கோவிலின் தோற்றம்...


மலையேறும் விஞ்ச் ....


ரொம்ப நாளுக்கு பிறகு பார்த்த குதிரை வண்டி...


நம் முன்னோர்....


நீண்ட நாளுக்கு பிறகு பார்த்த யானை...


எங்கள் ஊர் அருகே மேற்க்கு தொடர்ச்சிமலை....


மேற்க்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் நான்...


பசுமையாய் விளைந்திருக்கும் பலா...


வான் நோக்கி வீற்றிருக்கும் பனை மரம்...


சிலு சிலுவென அடிக்கும் தென் மேற்க்கு பருவக்காற்று தேனிப்பக்கம்....


நீரில்லாததால் விளையும் நிலம் விதவையாய்....


இன்னும் நம் நாட்டில் பரவலாய் காணப்படும் ரூபாய் நோட்டுக்காதல்....


சென்னை மவுண்ட் ரோட்டில் எல் ஐ சி பில்டிங் அருகே இருக்கும் கட்டிடம் இடிந்து விழும் தருவாயில் ஏன் இன்னமும் இதை இடிக்காமல் வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை எத்தனை உயிர்களை பழிவாங்கப்போகிறதோ?


இன்னும் எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது கூரையின் மேல் முளைத்திருக்கும் தாவரம்...
ஆசையாய் குடித்த கரும்பு ஜூஸ்....


ஹும் மீட்டர் இருக்குற ஆட்டோ ஒண்ணே ஒண்ணுதாங்க சென்னையில பார்த்தேன் அதும் ஓடாத மீட்டர்....


அண்ணாவையே மதிக்காத புதிய தலைமைச்செயலக கட்டிடம்....


யாரோ சொன்னாங்களாமே சர்க்கஸ் கூடாரம் என்று நிஜமாவே அப்பிடித்தாங்க இருக்கு நம்ம புதிய தலைமைச்செயலகம்....


கம்பிகளுக்கு உள்ளே தலைமைச்செயலகம்.....சபாஷ் ரயில்வே துறை தாம்பரம் முதல் கோயம்பேடு செல்லும் புதிய மெட்ரோ ரயில் புராக்ஜெக்ட்டுக்காக...விமானத்திலிருந்து எடுத்தது இன்னொரு விமானத்தை நான் பயணம் செய்யும் விமானம் முந்தி சென்ற பொழுது... ஆகாயத்திலுமா ?

மேகக்கூட்டங்கள் ...

வெளித்த வானம்....கூட விமான இறக்கையும்....

சோனி சைபர் சாட் கேமரா வைத்துக்கொண்டு அப்படின்னா என்னவென்று தெரியாமல் புகைப்படங்கள் எடுத்து கொண்டிருந்தவனுக்கு ஜமால் அண்ணா சொல்லிக்கொடுத்தது ஓடிக்கொண்டிருக்கும் மின் விசிறியை நிற்பதுபோல் படம்பிடிக்கும் என்பதால் சைபர் சாட்டாம்....

இந்த கேமராவில் இன்னொரு ஃபெசிலிட்டியும் இருக்கிறது ஸ்மைல் டிடெக்சன் புகைப்படத்திற்க்கு போஸ் கொடுப்பவர் சிரித்தால் போதும் ஆட்டோமேட்டிக்காக உடனே படம்பிடித்துவிடும் அதற்க்காக காலண்டரில் இருக்கும் முருகன் சிரிப்பதை கூட டிடெக்ட் செய்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் இதன் தொழில்நுட்பத்தை....

இதுதான் நான் வைத்திருக்கும் கேமரா இதில் எடுத்த புகைப்படங்கள்தாம் இவை...
Post Comment

61 comments:

Trackback by Prasanna June 5, 2010 at 11:45 PM said...

//கம்பிகளுக்கு உள்ளே தலைமைச்செயலகம்//

ஹா ஹா ஹா 'உள்'குத்து :) படங்கள் அருமை..

Trackback by சாந்தி மாரியப்பன் June 5, 2010 at 11:47 PM said...

தமிழக சுற்றுலா படங்கள் அருமை.

Trackback by Starjan (ஸ்டார்ஜன்) June 5, 2010 at 11:49 PM said...

அருமையான படங்கள்.. ரொம்ப நல்லாருக்கு வசந்த்.

Trackback by Menaga Sathia June 5, 2010 at 11:51 PM said...

super photos!!

Trackback by ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) June 6, 2010 at 12:01 AM said...

யோவ் ஊருக்கு போறதுக்கு முன்னால வித்தியாச பதிவு போட்டா வசந்த் எங்கய்யா காணோம்.

போட்டோ சூப்பர் நண்பா.

Trackback by சீமான்கனி June 6, 2010 at 12:17 AM said...

ரசனையான கிளிக்குகள் மாப்பி...தேனிக்காத்து வரச்சொல்லி கூப்பிடுற மாதிரி இருக்கு மாப்பி...பகிர்வுக்கு நன்றி தோகா-வையும் தொடர்ந்து கிளிக்க வாழ்த்துக்கள்...

Trackback by Priya June 6, 2010 at 12:25 AM said...

Nice Pics Vasanth.
நிழல் படம்... வித்தியாசமா இருக்கு!

சோனி சைபர் ஷாட்டா.... உண்மையிலேயே சூப்பர் கேமரா அது!அதை சரியா பயன்படுத்தி அழகிய படங்களை கொடுத்திருக்கிங்க!பாராட்டுக்கள்!

Trackback by நீச்சல்காரன் June 6, 2010 at 12:36 AM said...

நீங்க இந்த படத்துக்கொல்லாம் காப்புரிமை போடமால் வெளியிட்டு உங்கள் பெருந்தன்மையை காட்டிவிட்டீங்க போங்க. கொஞ்ச நாள்ல இவை எல்லாம் கூகுளால் மற்றவரும் பயன் படுத்து அளவிற்கு அழகு படங்கள் வரும்.

Trackback by இராகவன் நைஜிரியா June 6, 2010 at 1:19 AM said...

படங்கள் அனைத்தும் அருமை.

கலக்கறீங்க வசந்த்..

Trackback by prince June 6, 2010 at 3:14 AM said...

பசுமையாய் விளைந்திருக்கும் பலா...

பலா பட்டறை ???

படங்கள் எல்லாம் அருமை..

Trackback by நண்டு @நொரண்டு -ஈரோடு June 6, 2010 at 3:28 AM said...

ஆமா கேமிராவை எதில படம் பிடிச்சீங்கனு சொல்லல .
நல்லாயிருக்கு .

Trackback by vasu balaji June 6, 2010 at 3:50 AM said...

அந்த பில்டிங் ரயில்வேக்கு சொந்தமானது. சமீப காலம் வரை அங்கு ரிஸர்வேஷன் செண்டரும், ரயில்வே அதிகாரிகள் தங்கும் விடுதியும் இருந்தது. இப்போது ஹெரிடேஜ் பில்டிங் அந்தஸ்து இருப்பதால் இடிந்து விழாமல் பாதுகாப்பு பராமரிப்பு நடைபெறுகிறது. படங்கள் அருமை வசந்த்

Trackback by வேலன். June 6, 2010 at 4:38 AM said...

நீரில்லாததால் விளையும் நிலம் விதவையாய்...//

வரிகளும் படங்களும் அருமை...வாழ்க வளமுடன்,வேலன்.

Trackback by balavasakan June 6, 2010 at 5:18 AM said...

அருமையான படங்கள் வசந்து...எனக்கு உங்க ஊர் கோயில் எல்லாம் பாக்க ரொம்ப ஆசை அதுவும் அந்த தஞ்சை பெருங்கோயில் அடுத்த வருசம் பார்ப்பம்...

Trackback by Kala June 6, 2010 at 5:35 AM said...

வசந்த்,
மொத்தத்தில் பலதும் கற்றுத்
தேறிவிட்டீர்கள் நன்றி
எங்கள் வீட்டில ஒரு விஷேசம்
வரவிருக்கிறது மண்டையைப் போட்டுக்
குழப்பிகிட்டி இருந்தேன் இப்ப விடை
கிடைத்துவிட்டது
ஒரு மிக நல்ல புகைப்பட வல்லுனரைத்தான்
தேடித் தேடி அலைந்தேன்
அப்பாடா....
கவலை விட்டுது
ஆனால் ஒன்று வசந்த்
விமானப் பயணம் முதல் அத்தனையும்
.........பயப்பட வேண்டாம்
உங்கள் செலவுடன்,சம்மதமா வாத்தியாரே!
வசந்த் மிக அருமை நேரில் பார்த்த திருப்தி
நன்றிகள் பல....

Trackback by ராமலக்ஷ்மி June 6, 2010 at 6:51 AM said...

படங்கள் யாவும் அழகு.

கடைசியில் படத்திலிருக்கும் முருகரின் புன்னகையைப் படம் பிடித்த காமிரா தகவலும் அருமை:)!

Trackback by வினோத் கெளதம் June 6, 2010 at 7:13 AM said...

Photos ellam kalakal Vasanth..

Trackback by அன்புடன் நான் June 6, 2010 at 7:17 AM said...

மிக ரசனையோட எடுத்திருக்கிங்க... அத்தனைப்படமும் மிக அழகு. பாரட்டுக்கள்.

Trackback by எல் போர்ட்.. பீ சீரியஸ்.. June 6, 2010 at 7:51 AM said...

வித்தியாசமான படங்கள் வசந்த்.. தேனி ரொம்ப அழகாயிருக்கு!

முருகனை சிரிக்கும் போது படமெடுத்த ஒரே புகைப்படக்காரர் நீங்களாய்த்தானிருக்கனும் :)))

Trackback by செ.சரவணக்குமார் June 6, 2010 at 8:00 AM said...

பகிர்வுக்கு நன்றி வசந்த்.

Trackback by நாடோடி June 6, 2010 at 8:02 AM said...

கேம‌ராவை எந்த‌ கேமாராவால் எடுத்தீங்க‌?... எல்லாம் கிளிக்ஸும் ந‌ல்லா இருக்குங்க‌..

Trackback by Unknown June 6, 2010 at 8:04 AM said...

புத்சா எதாவது வாங்கிட்டா இப்பிடித்தான்... நல்லருக்கிற போட்டோக்கள மட்டும் வச்சுக்கற பிலிம் இல்லா டிஜிட்டல் கேமரா ஒரு வரப் பிரசாதம்..
மாப்ள வாழ்த்துக்கள் ..

Trackback by சநத் June 6, 2010 at 8:39 AM said...

வசந்த் அருமையான புகைபடங்கள்
அதிகமான படங்கள் எதிர்பார்க்கிறேன்

Trackback by தமிழ் உதயம் June 6, 2010 at 9:00 AM said...

இன்னும் எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது கூரையின் மேல் முளைத்திருக்கும் தாவரம்...

தலைமை செயலகம் பணத்தின் உச்சம் என்றால், இவ்வகையான கட்டிடம் ஏழ்மையின் எச்சம்.

Trackback by ஜான் கார்த்திக் ஜெ June 6, 2010 at 9:15 AM said...

படங்கள் அனைத்தும் அருமையா இருக்கு.. குறிப்பா என் நிழல் பிரகாரத்தில்...

Trackback by SUFFIX June 6, 2010 at 9:32 AM said...

ஊருக்கு ஒரு சின்னதா டூர் போய் வந்த மாதிரி இருக்கு வசந்த். நன்றி!!

Trackback by அன்புடன் மலிக்கா June 6, 2010 at 9:32 AM said...

சகோ படங்கள் அத்தனையும் சூப்பர் அதும் நோட்டுகாதல் அருமை. கிளிக் க்கு ஒரு சபாஷ்..

Trackback by Unknown June 6, 2010 at 9:57 AM said...

முன்னோர் - இதில் ஒப்புதல் இல்லை

-----------------------

விதவை நிலம் - நல்ல சமூக பார்வை

தலைமை செயலகம் - என்னத்த சொல்ல

ஸ்மைல் டிடெக்‌ஷன் அருமையான ஆப்ஷன்

பார்க்க பார்க்க பசுமையாக நாம் சந்தித்த தருணங்களே நினைவில் வருகின்றன.

Trackback by பொன் மாலை பொழுது June 6, 2010 at 10:29 AM said...

நல்ல ரசனையுள்ளவ்ர்தான் நீங்கள்.
படங்களும் அவற்றின் துணுக்குகளும்
ரசிக்கும்படி உள்ளன.
'காதல்" வழியும் பெயரும் கூட.
well Done

Trackback by சிநேகிதன் அக்பர் June 6, 2010 at 10:57 AM said...

அனைத்து படங்களும் அருமை.

இப்படி சுத்தி சுத்தி கருத்துட்டிங்களே பாஸ். :)

Trackback by Veliyoorkaran June 6, 2010 at 11:06 AM said...

எலேய் மாப்ள...எப்டிரா இருக்க...அயோக்ய வடுவா... ஊர்லேர்ந்து வந்தத சொல்லவே இல்ல...ராஸ்கோலு....! ஊர்ல பிகருங்க போடோவ விட்டுடியேடா எடுபட்ட பயலே...! அந்த கேமராவையே அசிங்கபடுதிட்ட போ...! :)

Trackback by தேவன் மாயம் June 6, 2010 at 12:00 PM said...

வசந்த் !!!தலைமைச் செயலகத்தின் மேல் தாக்குதலா?
விமானம் என்றாலே பயமா இருக்கு !!

Trackback by அப்துல்மாலிக் June 6, 2010 at 12:58 PM said...

அருமை, கடைசியில் நானும் கேமரா வெச்சிருக்கேன் என்பதை சொல்லிட்டீங்க வாழ்த்துக்கள் உமது புகைப்பட திறன்

Trackback by Subankan June 6, 2010 at 1:03 PM said...

Nice :)

Trackback by அ. முஹம்மது நிஜாமுத்தீன் June 6, 2010 at 1:04 PM said...

//முன்னோர் - இதில் ஒப்புதல் இல்லை//

மற்றபடி, அனைத்தும் அருமை.
அதிலும் அந்த, கருப்பு-வெள்ளையில்
கடைசி ஃபோட்டோ, மிக அருமை!

Trackback by ஜெய்லானி June 6, 2010 at 2:32 PM said...

நல்லா இருக்கு :-)

Trackback by மாதேவி June 6, 2010 at 2:49 PM said...

தமிழகத்தைச் சுற்றிப்பார்த்துவிட்டோம். படங்கள் அருமை.

Trackback by அத்திரி June 6, 2010 at 2:59 PM said...

படங்கள் அருமை.

Trackback by பின்னோக்கி June 6, 2010 at 3:12 PM said...

தென் மேற்கு மலைத்தொடர் - மிக அருமையான இடம். குடுத்து வைத்தவர் நீங்கள். புகை வண்டி பயணத்தில் பார்த்து மகிழும் மலைத்தொடர்களின் அருகே இருந்திருக்கிறீர்கள்.

சுடிதார் பையன் வெட்கம் அருமை.

தலைமைச் செயலக கமெண்ட் :)

நல்ல காமிரா நீங்க வெச்சுருக்குறது. என்கிட்ட ஒலிம்பஸ்.

Trackback by ஸ்ரீராம். June 6, 2010 at 3:23 PM said...

ஊர் வந்ததில் இருந்து திரும்பிய வரை படங்கள்...அருமை...

Trackback by தமிழ் மதுரம் June 6, 2010 at 3:35 PM said...

சைபர் சொட்...அருமை வசந்.. ஓடுற மின் விசிறியை நிற்க வைத்ததை விட ஓடுற விமானத்தை நிற்கவைத்த சொட்.. அபாரம்.. நல்ல புகைப் படங்கள்.

Trackback by சுசி June 6, 2010 at 5:52 PM said...

ரொம்ப நல்லா இருக்கு வசந்த்..

Trackback by சௌந்தர் June 6, 2010 at 5:58 PM said...

படங்கள் அனைத்தும் சூப்பர்

Trackback by ஸாதிகா June 6, 2010 at 6:03 PM said...

//எல் ஐ சி பில்டிங் அருகே இருக்கும் கட்டிடம் இடிந்து விழும் தருவாயில் // எங்கள் கண்களிலே மாட்டாமல் உங்அக்ல கண்களுக்கு மட்டும் எப்படி மாட்டியது?சைபர் ஷாட் என்ரால் என்ன என்று இப்பொழுது நானும் தெரிந்து கொண்டேன்.நன்றி.

Trackback by தமிழ் அமுதன் June 6, 2010 at 6:56 PM said...

///நீரில்லாததால் விளையும் நிலம் விதவையாய்....//

இதுதான் வசந்த்..!

Trackback by தமிழார்வன் June 6, 2010 at 9:05 PM said...

வணக்கம் வசந்த்,
புகைப்படங்கள் நன்றாக உள்ளன.

Trackback by ஹேமா June 6, 2010 at 10:24 PM said...

அத்தனை படங்களும் அருமை வசந்த்.ஓடும் விமானம்,பறக்கும் விசிறியும்கூட கட்டுப்படுகிறதே உங்களுக்கு.எல்லாவற்றையும் விட "மனதை மயக்கும் இசை"மயக்கிக் கொண்டிருக்கிறது.

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 6, 2010 at 11:43 PM said...

பிரசன்னா சரியா புரிஞ்சுட்டீங்க மிக்க நன்றி

சாரல் மேடம் நன்றிங்க

ஸ்டார்ஜன் நன்றிப்பா

மேனகா மேடம் மிக்க நன்றி

ரமேஷ் பொறுமை கடலினும் பெரிது ஆமா சொல்ட்டேன் ...

சீமான்கனி மாப்ள எப்போ ஊருக்கு போறீங்க?

ப்ரியா மிக்க நன்றிங்க

நீச்சல்காரன் போனா போகட்டும் பயன்படுத்திட்டுபோகட்டும்,, நன்றிங்க

ராகவன் அண்ணா மிக்க நன்றிண்ணா

ப்ரின்ஸ் மிக்க நன்றி நண்பா

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 6, 2010 at 11:48 PM said...

நண்டு சார் நன்றி சார் அது இணையத்தில் எடுத்தது...

வானம்பாடிகள் பாலா சார் தகவலுக்கு நன்றி நீங்களே சொல்லுங்க அந்த கட்டிடத்தை இடிச்சுடுறதுதானே நல்லது?

வேலன் சார் நன்றி சார்

வாசு நலமா? கண்டிப்பா பாருங்க அது எல்லாம் மிக வரலாற்று சிறப்பு வாய்ந்த கோவில்கள்...

கலா பாட்டி உங்களுக்கு வர வர லொள்ளு ஜாஸ்தியாயிடுச்சு ....

ராமலக்ஷ்மி மேடம் மிக்க நன்றி

வினோத் நன்றிடா மச்சி

கருணாகரசு சார் மிக்க நன்றி

சந்தனா ஹா ஹா ஹா ஆமா சும்மா செக் பண்ணுனேன் ஆனா அதுவும் சரியா முருகனை எடுத்துடுச்சு நன்றிப்பா...

சரவணக்குமார் நன்றிண்ணா

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 6, 2010 at 11:52 PM said...

நாடோடி நண்பா நன்றிப்பா...

செந்தில் ஆமா ஆமா ஆனா நான் எடுத்ததில் எதுவும் சோடைபோகலை எல்லாமே நன்றாகத்தான் வந்தது... நன்றி மாப்ள...

நவநீ நன்றிடா மாப்பி...

தமிழ் உதயம் நன்றி நண்பா

ஜான் நன்றி நண்பா

சஃபி சந்தோஷம் நண்பா

மலிக்கா நன்றி சகோ

ஜமால் அண்ணா அப்போ டார்வினின் கூற்று பொய்ன்னு சொல்றீங்களாண்ணா?

கக்கு மாணிக்கம் நன்றி நண்பா

அக்பர் ஆமா பாஸ் இங்கே ஏசில குளிர் காய்ஞ்சு அங்க போய் வெயில் வாட்டியெடுத்துடுச்சே...

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 6, 2010 at 11:59 PM said...

வாங்க வெளியூர்க்காரன் மாப்ள என்னடி போஸ்ட் ஒண்ணும் புதுசா போடக்காணோம் சீக்கிரம் எதுனாலும் எழுது....

தேவா சார் நன்றி சார்

அபு நன்றி

சுபா நன்றி நண்பா

நிஜாமுதீன் நன்றி நண்பா

ஜெய்லானி நன்றிங்க

மாதேவி என்னங்க மேடம் புது சமையல் போஸ்ட் ஒண்ணும் எழுதக்காணோம் சுற்றுலா கட்டுரையும் காணோம் சீக்கிரம் எழுதுங்க நன்றிங்க

அத்திரி சார் நன்றி

பின்னோக்கி சார் மிக்க நன்றி சார்
ஒலிம்பஸும் என்கிட்ட இருக்கு சார் ...

ஸ்ரீராம் மிக்க நன்றிப்பா..

கமல் நன்றி சகோதரா

சுசிக்கா மிக்க நன்றி பிஸியா இருக்கீங்க போல...

சவுந்தர் நன்றிப்பா...

ஸாதிகா நன்றி சகோ

ஜீவன் அண்ணா மிக்க சந்தோஷம்...

தமிழார்வன் நன்றிப்பா

ஹேமா நன்றிப்பா...
அந்த மியூசிக் போட்டு மூணு மாசமாச்சு இப்போதான் கவனிக்க நேரம் கிடைச்சுருக்கு போல...

Trackback by அருண். இரா June 7, 2010 at 2:12 AM said...

நல்ல படங்கள் வசந்த் !!
எளிமையா ஆனா நறுக்குன்னு வந்திருக்கு!
-- மச்சான்ஸ்

Trackback by cheena (சீனா) June 7, 2010 at 4:14 AM said...

அன்பின் வசந்த்

தாயகம் வந்து சைபர் ஷாட்டினால் ( சாட் எனில் நன்றாக இல்லை ) பௌகைப்படங்கள் எடுத்துத் தள்ளி விட்டீர்கள் - அத்தனையும் ஒரு திறமையான புகைப்படக் கலைஞரை உலகிற்கு அறிமுகம் செய்திருக்கின்றன.

நல்வாழ்த்துகள் வசந்த்
நட்புடன் சீனா

Trackback by kavisiva June 7, 2010 at 8:09 AM said...

படங்கள் அனைத்தும் அருமை!

Trackback by Unknown June 7, 2010 at 6:10 PM said...

Hi vasanth! How r u?
Ur photos r superb. I really enjoy the photos about our native.

Trackback by Unknown June 8, 2010 at 8:11 AM said...

சித்தி பையனுக்கு சுரிதார் - வித்யாசமான ரசனைங்க உங்களுக்கு :))
காமிரா பயணம் நல்லாயிருக்கு!
காலண்டர் முருகரைக் க்ளிக்கியிருப்பதில் இருந்து நீங்க(ளும்) ஒரு ஞான பண்டிதர்னு அறிய முடியுது :))))

Trackback by பனித்துளி சங்கர் June 8, 2010 at 10:01 PM said...

புகைப்படங்களும் அதற்கு தகுந்த வர்ணனைகளும் மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி நண்பரே

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 9, 2010 at 12:59 AM said...

நன்றி அருண்

நன்றி சீனா ஐயா...

நன்றி கவி...

நன்றி சித்ராம்மா...

நன்றி சங்கர்

நன்றி ஜெகா.. :))))

Trackback by goma June 25, 2010 at 8:38 PM said...

சர்க்கஸ் கூடாரம் என்றாலும் கூட ஓகே.
ரயில் நிலையத்தில் தண்ணீர் டாங்க்,டீசல் டாங்க் மாதிரிதான் என் கண்ணில் பட்டதும், மனதில் பட்டது

Trackback by Unknown December 28, 2010 at 5:14 AM said...

தமிழ்மணம் விருது முதல் சுற்றில் தேர்வாகியிருப்பதற்கு வாழ்த்துக்கள்...

Trackback by ஜோதிஜி January 3, 2011 at 3:17 PM said...

ஒவ்வொரு படத்தையும் வைத்து கவிதை எழுத முடியும்.