சென்னையில் ஓர் நட்புக்காலம்...

| June 4, 2010 | |
நண்பர்கள் - சந்திப்பு

என்னதான் வலையில் பின்னூட்டங்கள் சாட்டில் பேசிக்கொண்டாலும் இணைய நண்பர்களை நேரில் சந்திக்கும் பொழுது ஒருவித இனம்புரியாத மகிழ்ச்சி ஏற்படுவது தவிர்க்க முடியாதது...
இந்த நட்பெல்லாம் கண்டிப்பாக வலையுலகம் எனக்குத்தந்த புதையலே இதற்காகவேனும் வலையுலகை மறக்க மாட்டேன்...

சென்னையில் நண்பர்கள் சிலரை சந்தித்தது பற்றிய ஒரு இடுகை


சென்னை சென்றதும் சிங்கையில் இருந்து வந்திருந்த சகோதரர் ஜமால் அண்ணாவை சந்திக்க சென்றேன் அங்கே ஜமால் அண்ணாவுக்கு முன்பே நண்பர் பலாபட்டறை ஷங்கர் என்னை தொடர்பு கொண்டு முன்பே வந்தார் வந்ததும் எனக்கு அடையாளம் தெரியவில்லை ஏதோ படத்தோட ஹீரோதான் வந்துவிட்டார் போல என்று நினைத்தேன் பின்புதாந்தான் ஷங்கர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு பேசத்தொடங்கினார்... பின்னே வந்த ஜமால் அண்ணாவிடம் ஏன் தாமதம் என்று வினவியதற்க்கு கார் பார்க்கிங் செய்ய இடமின்றி ஒரு மணி நேரம் அலைந்ததால் சரியான நேரத்தில் வர இயலவில்லை என்றார் ( இன்னும் 5 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் மனிதனை பார்க் செய்றதுக்கும் இடமிருக்காது போல)

நட்புடன் ஜமால்.நண்பர் ஷங்கர் அண்ணாவிடம் சென்னை பதிவர் சங்கம் பற்றியும் அவரின் பலா பட்டறை பெயர் விளக்கமும் கேட்டறிந்தேன் எவ்வளவோ அவர் விளக்கியும் எனக்கு இன்னும் புரிபடவே இல்லை... பட்டறை என்றால் ஏதாவது ஒரு பொருளை பட்டை தீட்டி உருவாக்கும் இடம் உதாரணத்திற்க்கு இரும்பு பட்டறை என்றால் அங்கு கத்தி, கடப்பாரை, அருவாள் போன்ற இரும்பிலான ஆயுதங்கள் பட்டை தீட்டப்படுகிறது அதுபோல் பலா பட்டறை என்றால் பலாப்பழத்தில் ஆன பொருட்கள் பட்டை தீட்டப்படுகிறதா? ப்லா பட்டறைக்கு சரியான விளக்கம் தர ஷங்கர் அண்ணா திரும்பவும் அழைக்கப்படுகிறார்...

பலா பட்டறை ஷங்கர்
ஜமால் அண்ணா பழக உண்மையிலே மிகவும் நட்புடனும் சகோதர பாசத்துடனும் தம்பின்னு சொல்லும்போது நிறையவே உணர்ச்சிவசப்பட்டுட்டேனுங்ண்ணா... அவர் நிறைய பதிவுலகம் பற்றிய நிறைய தகவல்களையும் பின்னூட்டம் பற்றியும் என்னுடன் பகிர்ந்து கொண்டார்...

சில உங்களின் பார்வைக்கு...

1.ஜமால் அண்ணா ஒரு பெண் புனைப் பெயரிலும் எழுதுகிறார் . இது எப்டியிருக்கு?
ஜமால் அண்ணாவின் அந்த புனைப்பெயரில் இருக்கும் வலைப்பூவை கண்டு பிடிப்போர்க்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு எனக்கும் அந்த புனை பெயர் தெரியவில்லை... அண்ணா எந்த வலைப்பூங்ண்ணா? மண்டை காய விட்டுட்டீங்களேண்ணா நான் மட்டும் மண்டை காய்ஞ்சா எப்படி எல்லாரையும் கொஞ்சம் காய விடுவோம்ன்னுதான் போட்டு உடைச்சுட்டேன் சாரிங்ண்ணா... (சத்ரியன் அண்ணா உங்களுக்கு தெரிஞ்சிருக்கனுமே) அண்ணாவுக்கு சின்ன அட்வைஸ் இப்படி எழுதுறது தப்புங்ண்ணா...

2.பதிவு எப்படியும் எழுதி விடலாம் பின்னூட்டம் போடுவது மிகவும் கஷ்டம் என்று கூறினார் ஏன் என்று வினவியதற்க்கு...அவர் அளித்த பதில் சுவாரஸ்யம்... ஒருவர் பிறந்த நாள் போஸ்ட்டு போட்ருப்பார் அவருக்கு வாழ்த்து சொல்லணும், ஒருத்தர் சமையல் குறிப்பு எழுதியிருப்பார் அதையும் படித்துவிட்டு சூப்பர்ன்னு சொல்லிட்டு, ஒருத்தர் காதல் கவிதை எழுதியிருப்பாங்க அதையும் படிச்சு கொஞ்சம் காதல் செய்துட்டு ஒருத்தர் சோகமான கவிதை எழுதியிருப்பார் அதையும் வாசித்து கொஞ்சம் அழுதுட்டுன்னு இப்பிடி ஒரே நேரத்தில் அத்தனை பேருக்கும் வித வித உணர்வுகளோடு பின்னூட்டம் அளிப்பது சுவாரஸ்யமே தான் இனி நானும் அந்த வழியை பின்பற்றலாம் என்றிருக்கிறேன்...


சில அறிவுரைகளும் வழங்கினார்...

1. மற்ற பதிவர்களுடன் எவ்ளோ க்ளோஸ் ரிலேஷன்ஷிப் இருந்தால் அவங்களோட பதிவுக்கு போய் அதை காட்டிக்கொள்ளாதே உதாரணத்திற்க்கு போடா போடி என்று அழைப்பதை தவிர்க்க சொன்னார்...

2.பெண் பதிவர்களின் பதிவுக்கு பின்னூட்டம் இடும் பொழுது மிகவும் எச்சரிக்கையும் கவனமும் தேவை என்றார்...

3.கோபப்படுவதை உடனே பதிவில் ஏற்றாதே அது உன்னை பாதிக்கும்...

4.வலைப்பூ நமக்கு ஒரு வடிகால் அவ்வளவுதான் அதுவே வாழ்க்கையல்ல...

5. சில டெக்னிகல் அட்வைஸ்களும் அறியத்தந்தார்....


நன்றிங்ண்ணா....


அடுத்ததாக வலையில் கிடைத்த தந்தை வானம்பாடிகள் பாலாசாரை சந்தித்தேன்..மிகவும் அன்பான தந்தை , அம்மாகிட்டேயும் தங்கைகிட்டேயும் அறிமுகப்படுத்தி வைத்தார்... அம்மா அன்பாக அடை செய்து பரிமாறினார் அவர் அடை செய்ய போகும் பொழுதே நைனா அம்மாகிட்ட சொல்றார் எண்ணை குறைவாக விட்டு சுடச்சொல்லி ஏன் என்று கேட்டதற்க்கு இவனுக்கு கொஞ்சம் இல்ல நிறையவே கொழுப்பு ஜாஸ்தியா இருக்கு அதான் என்று சொன்னார்... ஆமாவா நைனா? வரும் பொழுது கி.ரா. வின் கரிசல் காட்டு கடுதாசி புத்தகத்தை பரிசாக அளித்தார்... இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை நைனா இனிதான் படிக்கணும்...இன்னும் எழுத்துக்கள் பற்றி நிறைய அறிவுரைகள் அளித்தார் என்னதான் என்னுடைய ஃபாலோவர் லிஸ்ட்ல இருந்து விலகினாலும் இன்னும் என் எழுத்துகளை படிக்கிறார் என்றதும் எனக்கு மிக்க மகிழ்ச்சியாய் இருந்தது... அன்புடன் அம்மாவும்,தங்கையும் நைனாவும் வீடு வாசல் வரை வரை வந்து விடையளித்தனர்...

வானம்பாடிகள் பாலாசாரும் நானும்அடுத்ததாக...சகோதரர் ஜீவன் என்ற தமிழ் அமுதன் அண்ணா அவர்களை அவரின் அலுவலகத்தில் வைத்து சந்தித்தேன்...அங்கு நம் ஜமால் அண்ணாவை மீண்டும் சந்திதேன்...
ஜீவன் அவர்களின் அலுவலகத்தில் தங்க நகைகள் டிசைன் கட்டிங் செய்வதைப்பற்றி பகிர்ந்து கொண்டார்... பழக மிகவும் அன்பாகவும் அமைதியானவரும் கூட.. பின் நான் ஜமால் அண்ணா ஜீவன் மூவரும் தமிழ் அமுதன் அவர்களின் மதிய உணவு விருந்தில் கலந்து கொண்டோம்.. அங்கே காடை மீன் இன்னும் நிறைய கடல் உணவுகளை ஜமால் அண்ணா உள்ளே தள்ளினார்... பின் தமிழ் அமுதன் அவர்கள் ராஜீவ் காந்தி கொலை வழக்கு எனும் புத்தகம் சிறப்பாக விறுவிறுப்பாக எழுதியிருப்பதைப்பற்றி பகிர்ந்து கொண்டார் நானும் அந்த புத்தகத்தை வாங்கி விட்டேன் ஆனால் இன்னும் படிக்கத்தான் ஆரம்பிக்கவில்லை... சிறப்பான சந்திப்பாக நிறைவு பெற்றது...

தமிழ் அமுதன் அலுவலகத்தில் ஜீவன், நான், ஜமால் அண்ணாதமிழ் அமுதன் என்ற ஜீவன்


தொப்பையை மறைக்கும் ஜமால் அண்ணா

ஜீவனும் நானும் ஜமால் அண்ணா எடுத்த போட்டோ
அடுத்ததாக விசா பக்கங்களில் எழுதி வரும் ரைட்டர் விசா என அழக்கப்படும் நண்பர் ஃப்ராங்ளின் அலெக்சாண்டர் அவர்கள் மைலாப்பூரில் டாங்க் அருகே இருக்கும் சரவணா பவனில் காலைச்சிற்றுண்டி அருந்தி கொண்டு நிறைய விஷயங்கள் பேசினோம். சிரிக்க சிரிக்க கன்னங்களில் குழிவிழுகிறது .. அவர் எப்படி கதைகள் எழுதுகிறார் என்று கேட்டு தெரிந்து கொண்டேன் அவரின் சைக்கோ கதை தொடர முடியாமல் போனதற்க்கான காரணாத்தையும் பகிர்ந்து கொண்டார் பின்பு என்னை அடையார் போலீஸ் ஸ்டேசனில் விட்டு சென்றுவிட்டார் கேமரா ஆஃப்லைனில் இருந்த்தால் இவருடன் மட்டும் புகைப்படம் எடுக்க இயலாமல் போனது இன்னமும் வருத்தமாயிருக்கிறது..

பிறகு அடையார் பஸ் டிப்போவில் இருந்து நண்பர் கார்க்கி தன்னுடைய காரில் என்னை பிக்கப் பண்ணி கொண்டு ஒரு பழரச அங்காடி இட்டு சென்றார் அங்கு அவரும் நானும் நிறைய விஷயங்கள் பேசினோம். மனிதர் மிகவும் கல கலப்பானவர் ,முக்கியமாக இருவருக்கும் பொதுவான தலைவர் இளைய தளபதி பற்றியும் , கார்க்கி எப்படி பதிவுலகிற்க்கு வந்தார் ஏழு கேரக்டர் எப்படி உருவானது என்பது பற்றி பகிர்ந்து கொண்டார். அத்தனை விஷயங்களும் கேட்க கேட்க சுவாரஸ்யமாயிருந்தது எப்பொழுது திருமணம் என்றேன் மிக விரைவில் அறிவிப்பு வெளி வரும் என்றார்.நகைச்சுவையாகவே எழுதுறீங்களே கார்க்கி சீரியஸ் விஷயங்கள் எழுத மாட்டீங்களா என்றேன் அதற்க்கு அவர் கூறினார் நகைச்சுவையா எழுதுவதையே அனைவரும் விரும்புகின்றனர் சீரியஸ் விசயங்கள் எழுதினால் இப்படி எழுதாதீங்க கார்க்கின்னு நிறைய மெயில் வருகிறதாம் நிஜமாகவே கார்க்கி சீரியஸ் விஷயங்கள் உங்களுக்கு சீரியசாக வரவில்லை நகைச்சுவையே நன்றாக எழுதுகிறீர்கள் பின்பு அங்கிருந்து அவரிடமிருந்து விடைபெற்றேன்....

கார்க்கியும் நானும்...கார்.....க்கீ
Post Comment

60 comments:

Trackback by இராகவன் நைஜிரியா June 4, 2010 at 12:02 PM said...

நல்ல சந்திப்புகள்.

சூப்பர் அப்பூ... கலக்கறீங்க

Trackback by இராகவன் நைஜிரியா June 4, 2010 at 12:03 PM said...

ஊய்....ஊய்........ஊய்..

(ஒன்னுமில்ல விசில் சத்தம்)

மீ த ஃபர்ஸ்ட்டோய்...

Trackback by shortfilmindia.com June 4, 2010 at 12:03 PM said...

இவ்வளவு தூரம் வந்திட்டு என்னை
கூப்பிடாம விட்டுட்டீங்களே..:(

கேபிள் சங்கர்

Trackback by இராகவன் நைஜிரியா June 4, 2010 at 12:03 PM said...

ஜமால் அண்ணன் வார்த்தைகள் நிச்சயமாக கவனிக்கப் படவேண்டியவைகள் தான்.

Trackback by ராம்ஜி_யாஹூ June 4, 2010 at 12:23 PM said...

thanks for sharing

Trackback by ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) June 4, 2010 at 12:34 PM said...

i missed u nabaaa

Trackback by சௌந்தர் June 4, 2010 at 12:37 PM said...

இப்படி பதிவர்கள் சந்திப்பது நல்லது

Trackback by Subankan June 4, 2010 at 12:39 PM said...

:))

Trackback by எல் கே June 4, 2010 at 12:58 PM said...

நல்ல சந்திப்பு மற்றும் பதிவு. நண்பர் திரு ஜமால் சொல்லிருப்பது மிகவும் சரி

Trackback by சத்ரியன் June 4, 2010 at 12:59 PM said...

தம்பியோட அறிவுரையை ஏற்கிறேன்.

நல்ல பகிர்வு வசந்த்.

Trackback by ஹேமா June 4, 2010 at 1:31 PM said...

நல்ல மனங்களைச் சந்தித்திருக்கிறீர்கள் வசந்த்.
படங்களோடு பகிர்ந்தமைக்கு நன்றி.நீங்கள்தான் இன்னும் வளர்ந்துவிட்டீர்கள்போல !

Trackback by Unknown June 4, 2010 at 1:46 PM said...

ஹா ஹா ஹா

வசந்த் உங்களை சந்தித்த தருணங்கள் மிகவும் நெகிழ்வானவை, நண்பராய் சங்கர்-ஜீ எங்கள் இருவருக்கும் தம்பியாய் நீ. ஜீவனோடு இருக்கையிலும் எங்கள் தம்பியாய் நீ.

நிறைய பொருமை காத்தாய், நான் சொன்ன மற்றும் உளறியவற்றை பொருமையுடன் கேட்டாய்.

ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஒரு பெண்மை இருக்கு அதற்கு வடிகாலே அந்த மற்ற வலைப்பூ - என்றேனும் வெளி(யிட)ப்படும்.

நிறைய படியுங்கள்...

பொருமையை பழகுங்கள்.

அன்பு தம்பிக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்.

Trackback by உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) June 4, 2010 at 1:50 PM said...

பதிவு எப்படியும் எழுதி விடலாம் பின்னூட்டம் போடுவது மிகவும் கஷ்டம்

///////

Same Blood

Trackback by செ.சரவணக்குமார் June 4, 2010 at 2:01 PM said...

//என்னதான் வலையில் பின்னூட்டங்கள் சாட்டில் பேசிக்கொண்டாலும் இணைய நண்பர்களை நேரில் சந்திக்கும் பொழுது ஒருவித இனம்புரியாத மகிழ்ச்சி ஏற்படுவது தவிர்க்க முடியாதது...//

மிகச் சரியாக சொன்னீர்கள் வசந்த். அருமையான சந்திப்பு மற்றும் புகைப்படங்கள். நான் விடுமுறையில் சென்றிருந்தபோது பாலா சாரை சந்திக்க முடியாதது வருத்தமாக‌ இருந்தது. இந்தப் பதிவின் மூலம் அது நீங்கியது. தலைவர் புகைப்படத்தில் அசத்தலாக இருக்கிறார்.

நன்றி வசந்த்.

Trackback by பனித்துளி சங்கர் June 4, 2010 at 2:37 PM said...

//////வலைப்பூ நமக்கு ஒரு வடிகால் அவ்வளவுதான் அதுவே வாழ்க்கையல்ல...///


உண்மைதான் நானும் ஏற்றுக்கொள்கிறேன் .
நண்பர்களின் சந்திப்பை மிகவும் நேர்த்தியாக பதிவு செய்திருக்கும் விதம் ரசிக்க வைக்கிறது . புகைப்படங்கள் அனைத்தும் அருமை . பகிர்வுக்கு நன்றி நண்பரே !

Trackback by Unknown June 4, 2010 at 3:13 PM said...

மாப்ள உனக்கும் மைனஸ் ஓட்டு விழுந்துருக்கு ..

பாத்து சூதனமா இருந்துக்க... நாளைக்கு பீச்சுல பாப்போம்...

Trackback by Menaga Sathia June 4, 2010 at 3:16 PM said...

நல்ல இனிமையான சந்திப்பு,படங்களுடன் பகிர்ந்து கொண்டதற்க்கு நன்றி!!ம்ம்ம் நீங்க எப்போ கல்யாண சாப்பாடு போட போறீங்க சகோ????

Trackback by பின்னோக்கி June 4, 2010 at 3:19 PM said...

படங்களுடன் சந்திப்பு நன்றாக இருந்தது. போட்டோவில், கார்க்கியும், பலா பட்டறை சங்கரும், அவர்களது வலைத்தளத்திலிருக்கும் போட்டாவை விட வித்தியாசமாக இருக்கிறார்கள்.

Trackback by மாயாவி June 4, 2010 at 3:57 PM said...

அருமையான சந்திப்பு....பகிர்வுக்கு நன்றி.....

Trackback by Kala June 4, 2010 at 4:00 PM said...

வசந்த் எல்லோருடனும் ஒரு
கலக்கு கலக்கி விட்டீர்கள்
போலும்!!
தங்கமாய் வந்து...
சொக்கத் தங்கமாய்
மாறி இருக்கிறீர்கள்
புகைப்படம் மிக அழகு,அருமை
நன்றி

Trackback by vasu balaji June 4, 2010 at 4:31 PM said...

நன்றி வசந்த். ஜீவனை சந்திப்பது எனக்குத் தெரியாது. என் வீட்டிற்கு மிக அருகில் வந்தும் எனக்கு நீ சொல்லவில்லை என்பதிலிருந்தே.. நீங்க சொல்லுங்க மக்கா..இவனுக்கு கொழுப்பா இல்லையா?

Trackback by கார்த்திகைப் பாண்டியன் June 4, 2010 at 4:34 PM said...

ஊருக்கு வந்ததை சொல்லாமக் கொள்ளாம ஓடிப் போயிட்டு இப்போ சந்திச்ச மக்கள பத்தி பதிவு வேறயா? என்னுடைய தீவிரமான கண்டனங்கள் நண்பா..:-(((

Trackback by தமிழ் அமுதன் June 4, 2010 at 4:42 PM said...

வசந்த்..! ஜமாலையும் ,உங்களையும் சந்தித்தது என் மகிழ்வான தருணங்களில் ஒன்று..!

இடுகை மகிழ்ச்சி அளிக்கிறது...!

நன்றி...! நம் சந்திப்பின் என் இடுகை
இங்கே..!

http://pirathipalippu.blogspot.com/2010/05/blog-post.html

Trackback by தமிழ் அமுதன் June 4, 2010 at 4:54 PM said...

///Blogger வானம்பாடிகள் said...

நன்றி வசந்த். ஜீவனை சந்திப்பது எனக்குத் தெரியாது. என் வீட்டிற்கு மிக அருகில் வந்தும் எனக்கு நீ சொல்லவில்லை என்பதிலிருந்தே.. நீங்க சொல்லுங்க மக்கா..இவனுக்கு கொழுப்பா இல்லையா?///


அண்ணே..!அப்பொ உங்களுக்கு போன் பண்ணலாம்னு இருந்தோம்
அது உங்க அலுவல் நேரம் அதான் போன் பண்ணாம இருந்துட்டோம்..! ;)

Trackback by அன்புடன் அருணா June 4, 2010 at 5:15 PM said...

பகிர்ந்தமைக்கு நன்றி.

Trackback by தேவன் மாயம் June 4, 2010 at 5:40 PM said...

நான் சிங்கப்பூரில் தேடிய ஜமால் சென்னையிலா? ஜமால் இது சரியா!!

Trackback by ஜெய்லானி June 4, 2010 at 6:33 PM said...

சந்திப்பை ருசிபட விவரித்த அழகு இனிமையா இருக்கு.

Trackback by அன்புடன் நான் June 4, 2010 at 6:47 PM said...

”வசந்தத்தின்” வருகைக்கு .... வணக்கம். பகிர்வுக்கு நன்றி.

Trackback by cheena (சீனா) June 4, 2010 at 7:16 PM said...

அன்பின் வசந்த்

நல்ல நண்பர்கள் சந்திப்பு - வாழ்க - நல்வாழ்த்துகள்

ஆமாம் மதுரைக்கு வந்தீர்களா என்ன ?

ம்ம்ம்ம் ந்லலதோர் இடுகை - பாலா ஜமால் ஜீவன் - அனைவரையும் சந்திக்க ஆசை தான்

நல்வாழ்த்துகள் வசந்த்
நட்புடன் சீனா

Trackback by திவ்யாஹரி June 4, 2010 at 8:10 PM said...

welcome!

Trackback by தமிழ் உதயம் June 4, 2010 at 8:33 PM said...

படிக்க சந்தோஷமாக இருந்தது வசந்த்.

Trackback by ஜோதிஜி June 4, 2010 at 8:40 PM said...

வலைப்பூ நமக்கு ஒரு வடிகால் அவ்வளவுதான் அதுவே வாழ்க்கையல்ல...

சிறப்பு

Trackback by சீமான்கனி June 4, 2010 at 9:24 PM said...

ரெம்ப சந்தோசம் மாப்பி...உண்மையிலேயே இப்படிப்பட்ட சந்திப்பு புதுசாவும் படிக்க மகிழ்ச்சியாவும் இருக்கு...ஜமால் அண்ணா நிறைய அனுபவம் படித்து இருக்கார் அதை நமக்கும் பகிர்ந்ததிற்கு நன்றி...நமக்கும் இந்த வாய்ப்புலாம் கிடைக்குமா தெரியல???
நன்றி மாப்பி.

Trackback by Prasanna June 4, 2010 at 10:29 PM said...

ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கு..

Trackback by prince June 5, 2010 at 2:21 AM said...

பெங்களூர் பக்கம் வந்திருந்தால் என்னையும் பார்த்திருக்கலாம்.. அப்படியே கொஞ்சம் ஊரையும் சுற்றி காட்டிஇருப்பேன்...மிஸ் பண்ணிட்டீங்களே!!

Trackback by பா.ராஜாராம் June 5, 2010 at 2:42 AM said...

தம்பு,

வந்தாச்சா? யாவரும் நலமா?

அருமையான பகிர்வு. ராஜசுந்தரராஜன் அண்ணனின் முகவீதி தொடங்கி, நம் நண்பர்களின் புகைப் படம் வரையில். யோவ்..

யார் யார் என்ன பெயர் என்பதில் நிறைய குழப்பம்.. :-))

Trackback by ஸ்ரீராம். June 5, 2010 at 5:40 AM said...

நல்ல நட்புகள்..நல்ல அனுபவங்கள்...

Trackback by நண்டு @நொரண்டு -ஈரோடு June 5, 2010 at 5:51 AM said...

தங்களின் பாணியில் அருமையாக சொல்லியிருக்கீங்க .
நல்ல நண்பர்கள் சந்திப்பு .
வாழ்த்துக்கள் .
பகிர்வுக்கு நன்றி .

Trackback by வினோத் கெளதம் June 5, 2010 at 7:39 AM said...

Romba santhosham.

Trackback by நாஸியா June 5, 2010 at 8:57 AM said...

nice to know :)

Trackback by Thenammai Lakshmanan June 5, 2010 at 10:00 AM said...

பதிவர்கள் ஒற்றுமை ஓங்கட்டும் உங்கள் அன்புக்கு தலை வணங்குகிறேன் வசந்த்

Trackback by Thenammai Lakshmanan June 5, 2010 at 10:00 AM said...

பதிவர்கள் ஒற்றுமை ஓங்கட்டும் உங்கள் அன்புக்கு தலை வணங்குகிறேன் வசந்த்

Trackback by Thenammai Lakshmanan June 5, 2010 at 10:00 AM said...

பதிவர்கள் ஒற்றுமை ஓங்கட்டும் உங்கள் அன்புக்கு தலை வணங்குகிறேன் வசந்த்

Trackback by Thenammai Lakshmanan June 5, 2010 at 10:00 AM said...

பதிவர்கள் ஒற்றுமை ஓங்கட்டும் உங்கள் அன்புக்கு தலை வணங்குகிறேன் வசந்த்

Trackback by Thenammai Lakshmanan June 5, 2010 at 10:00 AM said...

பதிவர்கள் ஒற்றுமை ஓங்கட்டும் உங்கள் அன்புக்கு தலை வணங்குகிறேன் வசந்த்

Trackback by Thenammai Lakshmanan June 5, 2010 at 10:00 AM said...

பதிவர்கள் ஒற்றுமை ஓங்கட்டும் உங்கள் அன்புக்கு தலை வணங்குகிறேன் வசந்த்

Trackback by Thenammai Lakshmanan June 5, 2010 at 10:00 AM said...

பதிவர்கள் ஒற்றுமை ஓங்கட்டும் உங்கள் அன்புக்கு தலை வணங்குகிறேன் வசந்த்

Trackback by Thenammai Lakshmanan June 5, 2010 at 10:00 AM said...

பதிவர்கள் ஒற்றுமை ஓங்கட்டும் உங்கள் அன்புக்கு தலை வணங்குகிறேன் வசந்த்

Trackback by Jaleela Kamal June 5, 2010 at 10:39 AM said...

படிக்கவே ரொம்ப சந்தோஷமாய் இருக்க/

பதிவர்க்ள் ஒற்றுமை ஓங்கட்டும்

அருமையான அறிவுரைகள்.
வாழ்த்துக்கள்.
ஹை டீ கடையில பின்னாடி பாட்டிலில் பட்டர் பிஸ்கேன் என்க்கு ரொம்ப பிடிக்கும்.

//ஒருவர் பிறந்த நாள் போஸ்ட்டு போட்ருப்பார் அவருக்கு வாழ்த்து சொல்லணும், ஒருத்தர் சமையல் குறிப்பு எழுதியிருப்பார் அதையும் படித்துவிட்டு சூப்பர்ன்னு சொல்லிட்டு, ஒருத்தர் காதல் கவிதை எழுதியிருப்பாங்க அதையும் படிச்சு கொஞ்சம் காதல் செய்துட்டு ஒருத்தர் சோகமான கவிதை எழுதியிருப்பார் அதையும் வாசித்து கொஞ்சம் அழுதுட்டுன்னு இப்பிடி ஒரே நேரத்தில் அத்தனை பேருக்கும் வித வித உணர்வுகளோடு பின்னூட்டம் அளிப்பது சுவாரஸ்யமே தான் இனி நானும் அந்த வழியை பின்பற்றலாம் என்றிருக்கிறேன்...//மிகச்சரியே நானும் இதை பற்றி பதிவில் சொல்லி இருக்கேன்.


http://allinalljaleela.blogspot.com/2010/06/blog-post_01.html

Trackback by Jaleela Kamal June 5, 2010 at 10:42 AM said...

முகம் தெரியாத வலை உலக நட்புக்களை சந்திக்கும் போது ரொம்ப வே குதுகலமாக இருக்கும்/

Trackback by SUFFIX June 5, 2010 at 11:32 AM said...

அருமையான சந்திப்பு, எங்களுக்கும் மகிழ்ச்சியா இருக்கு வசந்த்.

Trackback by நீச்சல்காரன் June 5, 2010 at 12:29 PM said...

பூனேவுக்கு ஏன் வரவில்லை? சரிவிடுங்க நல்லொரு சந்திப்பு

Trackback by சாந்தி மாரியப்பன் June 5, 2010 at 6:24 PM said...

குதூகலமான சந்திப்புகள்தான்.ஆமா.. இதுக்குமா மைனஸ் குத்து :-((

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 5, 2010 at 9:13 PM said...

ராகவன் அண்ணா மிக்க நன்றிண்ணா...

கேபிள் சார் அடுத்த முறை கண்டிப்பா சந்திக்கிறேன் சார்...

ராம்ஜி யாஹூ.. நன்றிங்ண்ணா...

ரமேஷ் நானும்....

சவுந்தர் மிக்க நன்றிப்பா...

சுபா நன்றி...

எல் . கே நன்றிங்க

சத்ரியன் அண்ணா உங்களை சொல்லலை ஜமால் அண்ணாவ சொன்னேன்...

ஹேமா ம்ம் வளர்ந்து ரொம்ப நாளாச்சுங்க,...

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 5, 2010 at 9:35 PM said...

ஜமால் அண்ணா உங்கள் வார்த்தைகள் இங்க அனைவராலும் விரும்பப்பட்டிருக்கிறது பார்த்தீர்களா? நன்றிங்ண்ணா...

உலவு நன்றிங்க

சரவணக்குமார் மிக்க மகிழ்ச்சி

சங்கர் நன்றிப்பா

மாப்ள செந்தில் பீச்சுன்னு சொன்னீகளே கத்தார் பீச்சா இல்லை மெரீனா பீச்சா?

மேனகா மேடம் மிக்க நன்றி :))) இன்னும் நாளிருக்கு மேடம்...

பின்னோக்கி சார் மிக்க நன்றி சார் உங்களின் வலைத்தளம் திறக்க மிகவும் அதிக நேரம் பிடிக்கிறது என்னவென்று பாருங்கள் சார்...

மாயாவி நன்றிப்பா...

கலா பாட்டி உங்களுக்கு நிறைய லொல்லு...

பாலா சார் மிக்க நன்றி... கொழுப்பா அது எப்டியிருக்கும்?

கார்த்திகைப்பாண்டியன் மதுரை வர இயலவில்லை நண்பா நேரமின்மை காரணம் கண்டிப்பாக அடுத்தமுறை வரும் பொழுது உங்களையெல்லாம் சந்திப்பேன்...

தமிழ் அண்ணா மிக்க மகிழ்ச்சி அண்ணா...

பிரின்ஸ் மிக்க மகிழ்ச்சி நன்றி...

ஜெய்லானி நன்றி நண்பா

தேவா சார் நன்றிங்க சார்

சீனை ஐயா அடுத்த முறை கண்டிப்பாக மதுரை வந்து உங்களையெல்லாம் சந்திக்கிறேன்...

திவ்யா எங்க ஆளே காணோம்?

தமிழ் உதயம் நன்றி நண்பா

ஜோதிஜி அவர்களே மிக்க நன்றி

சீமான்கனி நன்றி மாப்ள...

பிரசன்னா நன்றி

ப்ரின்ஸ் பெங்களூரா நீங்க? நன்றி...

பாரா அண்ணா மிக்க சந்தோஷம் அண்ணா...

ஸ்ரீராம் மிக்க நன்றிப்பா

நண்டு நன்றி நண்பா

வினோத் நன்றிடா மச்சி

நாஸியா நன்றி சகோ...

தேனம்மை லக்‌ஷ்மணன் நன்றிங்க...

ஜலீலா குசும்பு நன்றி சகோ...

சஃபி நன்றி நண்பா நலமாயிருக்கிறீர்களா?

நீச்சல்காரன் பூனாவா?நன்றி நண்பா

சாரல் மேடம் நன்றிங்க...

Trackback by எல் போர்ட்.. பீ சீரியஸ்.. June 6, 2010 at 8:06 AM said...

கேள்விப்பட்ட பெயர்கள்.. அறியா முகங்கள்.. இன்று காணக்கிடைத்தன.. நன்றி வசந்த்..

Trackback by வசந்தவாசல் அ.சலீம்பாஷா June 6, 2010 at 8:50 PM said...

வலை பதிவர்கள் குழுமம்.. ஒரு நட்புறவாய் மட்டுமின்றி.. நல்ல குடும்பங்களாய் சிறப்பது கண்டு மகிழ்ச்சி.. உங்களுடன் அந்த சந்திப்பில் நான் இல்லையே என என்னும் போது வருத்தம்(கொஞ்சம் பொறாமையும் கூடத்)தான். என்ன செய்ய பிழைப்புத்தேடி துபாய்க்கு அல்லவா வந்தாச்சு. வருவேன் வசந்த். (இன்ஷா அல்லாஹ்) நானும் கண்டிப்பாய் இந்த வனவாச வாழ்வைவிட்டு நம் தாயகம் வருவேன். அப்போது என் தமிழ்(வலை) உறவுகளோடு நிச்சயம் கலந்துரையாடி தாங்கள் பெற்ற இன்பம் யாமும் பெற நீங்களும் பிரார்த்தியுங்கள் வசந்த். மகிழ்சி நன்றி!

Trackback by வசந்தவாசல் அ.சலீம்பாஷா June 6, 2010 at 8:50 PM said...

வலை பதிவர்கள் குழுமம்.. ஒரு நட்புறவாய் மட்டுமின்றி.. நல்ல குடும்பங்களாய் சிறப்பது கண்டு மகிழ்ச்சி.. உங்களுடன் அந்த சந்திப்பில் நான் இல்லையே என என்னும் போது வருத்தம்(கொஞ்சம் பொறாமையும் கூடத்)தான். என்ன செய்ய பிழைப்புத்தேடி துபாய்க்கு அல்லவா வந்தாச்சு. வருவேன் வசந்த். (இன்ஷா அல்லாஹ்) நானும் கண்டிப்பாய் இந்த வனவாச வாழ்வைவிட்டு நம் தாயகம் வருவேன். அப்போது என் தமிழ்(வலை) உறவுகளோடு நிச்சயம் கலந்துரையாடி தாங்கள் பெற்ற இன்பம் யாமும் பெற நீங்களும் பிரார்த்தியுங்கள் வசந்த். மகிழ்சி நன்றி!

Trackback by VISA June 7, 2010 at 10:12 AM said...

//அடையார் போலீஸ் ஸ்டேசனில் விட்டு சென்றுவிட்டார் //

ada paavi :)

Trackback by அமுதா கிருஷ்ணா June 11, 2010 at 1:00 PM said...

பொறாமையா இருக்கு..ஜாலியா அனைவரையும் சந்தித்தது..அதை பகிர்ந்துக் கொண்டது ...வாழ்க மக்களே...