வானவில் - (11-06-2010)

| June 10, 2010 | |இனி வாரம் ஒரு நாள் சின்ன சின்ன விஷயங்கள் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்... வானவில் தலைப்பு எப்டி?

தேவை விளக்கங்கள்


ஊருக்கு சென்றிருந்த பொழுது உறவினர் ஒருவர் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தார் . அந்த நபரின் சுற்றங்கள் நிறைய அவருக்கு மருத்துவத்திற்க்காக மருத்துவர்களை பார்த்துவிட்டனர் ஆனால் உடல் நிலை மேலும் மேலும் மோசமடைந்ததே தவிர உடல் நிலையில் முன்னேற்றம் துளியும் இல்லை. இப்படியிருந்த பொழுது மேற்படி நபரின் குடும்ப நண்பர் இவரின் உடல்நிலை மோசமாகி கொண்டே வருவது தெரிந்து அவரை உசிலம்பட்டி அருகே இருக்கும் நக்கலபட்டி எனும் இடத்திற்கு அழைத்து செல்லுங்கள் அங்கு ஒரு சாமியார் இருக்கிறார் அவரிடம் சென்றால் சரியாகிவிடும் என்று கூறியிருக்கிறார்.இவர்களும் அங்கு சென்றிருக்கின்றனர் . அங்கு சென்றபின் அந்த சாமியார் இவருக்கு வசியமருந்து வைத்திருக்கின்றனர் அந்த மருந்தை எடுக்க வேண்டுமெனில் ஒரு வாரம் நான் கொடுக்கும் மருந்து சாப்பிட்டு பின் இங்கு மீண்டும் வரவும் என்று கூறியிருக்கின்றனர் இவர்களும் அவருக்கு அந்த மருந்தை தினமும் அவர் சொன்ன படி கொடுத்து ஒரு வாரம் கழித்து மீண்டும் அங்கு அழைத்து சென்றிருக்கின்றனர் . அங்கு அந்த சாமியார் அவரின் வாயில் ஒரு குழாயை வைத்து தொண்டைவரை செலுத்தி வாயில் உறிஞ்சிய பொழுது கருப்பு நிறத்தில் கரிக்கட்டை போன்ற ஒரு பொருளை முடி முளைத்து எடுத்திருக்கின்றார். இனி சரியாகி விடும் என்றும் யார் வீட்டிலும் சாப்பிடுவதை தவிர்க்கவும் ஜாக்கிரதையாக இருக்கவும் எனவும் இங்கு வந்து சென்றதை யாரிடமும் கூற வேண்டாம் என்றும் கூறியிருக்கின்றார். இது நடந்து இரு வாரங்களில் மேற்படி நபர் மீண்டும் நல்ல உடல் நிலையுடன் பழைய நிலைக்கு திரும்பியிருக்கிறார். உற்சாகமாக இருந்தார் மனிதர்.விஞ்ஞான உலகத்தில் இன்னும் இது போன்ற வசியமருந்துகள் இருக்கின்றனவா? அப்படியிருப்பின் அவை எப்படி உருவாக்கப்படுகின்றன அவை எப்படி உடலுக்குள் சென்று மாற்றங்களை விளைவிக்கின்றன விஷயம் தெரிந்த மருத்துவர்களின் ஆலோசனை தேவை....தெரிந்து கொள்வோம்..

கத்தார் திரும்புவதற்க்கு விமான டிக்கட் எடுக்க தேனியில் இருக்கும் UAE எக்சேஞ்ச் செண்டர் சென்று என்னுடைய பாஸ்போர்ட் விசா நகல்களை அங்கு பணிபுரியும் பெண்மணியிடம் கொடுத்துவிட்டு எப்போ டிக்கெட் கிடைக்கும் என்றேன் கொஞ்சம் பொறுத்திருங்கள் என்று சொல்லிவிட்டு திருச்சியில் இருக்கும் அவர்களின் தலைமை அலுவலகத்திற்க்கு தொலைபேசினார் எதிர் முனையில் ஏதோ டீடெயில் கேட்க அதற்கு இவர் விக்டர் , ஆல்ஃபா, சியரா, ஆல்ஃபா, நவம்பர் , தாங்கோ , ஹோட்டல் , ஆல்ஃபா , கிலோ , யூனிஃபார்ம் , மைக் , ஆல்ஃபா , ரோமியோ என்று கூறினார் எனக்கு ஒன்றும் புரியவில்லை மேடம் என்கிட்ட விக்டரும் இல்லை சியராவும் இல்லை அதுமட்டுமில்லாம நான் மே மாசம்தான் போறேன் நீங்க நவம்பர்ன்றீங்கன்னு சொல்லவும் அவர் சிரிச்சுட்டே இது இண்டர்னேசல் கோட் வேர்ட் என்றார்.எந்த இதுக்கு கோட் வேர்ட் என்று கேட்டதற்க்கு ABCD ஆங்கில எழுத்துக்கள் 26க்கும் தனித்தனி கோட் வேர்ட் இருப்பதாகவும் பெயரை ஆங்கிலத்தில் அப்படியே உச்சரித்தால் ஸ்பெல்லிங் மிஸ்டேக் வந்துவிடும் என்பதால் இந்த முறை அனைத்து இடங்களிலும் பயன்படுத்தப்படுவதாகவும் கூறினார் அதற்க்கப்புறமாக கூகுள் ஆண்டவரை கும்பிட்டால் கிழ்கண்ட கோட் வேர்ட்களை உதிர்த்தார் அப்புறம்தான் தெரிந்தது அந்த பெண்மணி என்னுடைய பெயரை மேற்கண்ட வார்த்தகளின் மூலம் விளக்கியிருப்பது... இதோ உங்க பெயருக்கும் இன்னா கோட் வேர்ட்ன்னு நீங்களே தெரிஞ்சுக்கங்க....

A-alpha(ஆல்ஃபா), B-bravo(ப்ராவோ) அவ்வ்...,C - charlie(சார்லி), D-delta(டெல்டா), E-echo(எக்கோ), F-foxtrat(ஃபாக்ஸ்ட்ராட்), G-golf(கோல்ஃப்), H-hotel(ஹோட்டல்), I-India(இந்தியா), J-juliot(ஜூலியட்), K-kilo(கிலோ), L-lima(லிமா), M-mike(மைக்), N-november(நவம்பர்), O-oscar(ஆஸ்கார்), P-papa(பப்பா), Q-quebec(க்யூபெக்), R-romeo(ரோமியோ), S-sierra(சியரா), T-tango(டேங்கோ), U-uniform(யூனிஃபார்ம்), V-victor(விக்டர்), W-whiskey(விஸ்கி), X-xray(எக்ஸ்ரே), Y-yankee(யங்கி), Z-zulu(ஜூலு)

நல்லா வைக்கிறாய்ங்கய்யா கோட் வேர்ட் என்கிட்ட கேட்ருந்தா நல்ல கோட்வேர்டா சொல்லிருப்போம்ல... A for ant, B for butterfly,C for cat, D for dogன்னு நாலு நல்ல பேரா என்னோட சொந்த பந்தங்கள் பெயராவும் வச்சுருப்பேன் ஹூம்...


உங்களுக்கு தெரியுமா?

கூகுளை (GOOGLE) இணையம் உபயோகிப்போர் அனைவருக்கும் தெரியும் அந்த பெயர் அதற்க்கு வந்தது எப்படின்னு தெரியுமா தெரியாதவங்களுக்காக..

ஒரு நாள் என்னுடைய வேண்டும் தமிழ் பெயர் எனும் இடுகைக்காக கூகுளை தமிழ் படுத்திப்பார்த்தால் என்ன வென்று யோசனை வந்து இணையத்தில் இருக்கும் அத்தனை டிக்‌ஷ்னரியையும் உபயோகித்துப்பார்த்தும் பலன் பூஜ்யம் , சரி கூகுள் வெப்சைட் சென்று அவர்களின் தளத்திலே எப்படி அந்த பெயர் வந்தது என்று தேடும்பொழுது ஸ்டான்போர்ட் யுனிவர்சிட்டியில் படித்த செர்ஜி பிரின், லாரி பிரிஜ் என்ற இருவர்களால் இந்த சர்ச் எஞ்சின் தொடங்கப்பட்டது சர்ச் எஞ்சினுக்கு 1க்கு அடுத்து 100 பூஜ்யங்கள் வரும் இலக்கத்தின் பெயரான googol என்று பெயரிடப்பட்டதாகவும் ( அதாவது lakhs,crore இந்த வரிசையில் வருவது) நாளடைவில் அந்த googol ஸ்பெல்லிங் மிஸ்டேக்குடன் google என்று மருவியதாகவும் கூறப்படுகிறது.

அது சரி அதுக்கப்புறம் நம்ம மரமண்டை தமிழில் 1க்கு அடுத்து 100 பூஜ்யங்கள் வரும் இலக்கத்தின் தமிழ் பெயரை தேடிய பொழுது (நமக்குத்தான் கோடி வரைக்குத்தான தெரியும்) கிடைத்த தகவல்படி அந்த இலக்கத்திற்க்கு தமிழில் பெயரில்லை,1 போட்டு 83 பூஜ்யங்கள் போட்டால் அதற்கு வெள்ளம் எனவும் 1 போட்டு 115 பூஜ்யங்கள் போட்டால் அதற்கு வாஹினி எனவும் பெயராம் அதனால கூகுளை தமிழ் படுத்திப்பார்க்கும் என் ஆசை நிராசையாகிவிட்டது ... மேலும் தமிழ் இலக்கங்களின் பெயர் பற்றி பற்றி அறிய இங்கு சென்று பார்க்கவும்.. எனக்கு அதைப்படித்து தலை சுற்றியது உங்களுக்கும் சுற்றும்... இப்படியே ஓவ்வொன்றுக்கும் தமிழ் படுத்தி பார்க்க பார்க்க நிறைய விஷயங்கள் அறிய முடிகிறது அதற்க்காக பிளாக்கருக்கும்,இணையத்திற்க்கும் நன்றிகள்

கொசுறு: மேலும் தேடியதில் கர்நாடக மாநிலம் ரெய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தின் பெயரும் கூகுள் ஆனால் இந்த கிராமத்தில் இணைய வசதியே இல்லாத காரணத்தால் இவர்களிடம் கூகுள் என்றால் அது எங்கள் கிராமத்தின் பெயர் என்று கூறுகின்றார்களாம்... ஹும்...


நம்ம தமிழ்நாட்டில் அரசு பேருந்தில் பிரயாணம் செய்பவர்களாக இருப்பின் தற்சமயம் பேருந்தின் உட்புற வாசகங்கள் ஒன்றில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை காணலாம்,என்ன வித்யாசம் என்று கேட்பவர்களுக்கு சமீபத்தில் தமிழக அரசு உடல் ஊனமுற்றோர்களை ஊனமுற்றவர்கள் என்பதிலிருந்து மாற்றுதிறனாளிகள் என்று மாற்றி அறிவித்திருந்தது உடனே அதை செயல் படுத்தியிருக்கிறது , பேருந்தின் முன் புறமோ இடப்புறமோ ஊனமுற்றோர் மற்றும் முதியோர்களுக்கான இடம் என்று இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருக்கும். தற்பொழுதும் அதே இருக்கை ஒதுக்கப்படிருக்கிறது ஆனால் வாசகம் மாறியிருக்கிறது மாற்றுதிறனாளிகள் மற்றும் முதியோர்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது அரசு தற்சமயம் செய்த மனசாட்சி உறுத்தலில்லாத ஒரு நடவடிக்கை . இதற்க்காக தமிழக அரசுக்கும் தமிழக போக்குவரத்து துறைக்கும் மனமார்ந்த நன்றிகள் மாற்றுதிறனாளிகள் சார்பாக...

அவ்ளோதான் உலகம் (தேவை விழிப்புணர்வு)

நீங்கள் உடையணிந்திருந்தாலும் உங்களை நிர்வாணமாக காட்டும் மென்பொருள் வந்துவிட்டதாக நெட்டில் படித்து பயந்துபோய் இருக்கும்பொழுது ஒரு வீடியோவும் சேர்ந்து வந்து பயமுறுத்துகிறது கண்டிப்பாக 18+ மட்டுமே காண அனுமதி அதிச்சியூட்டும் வீடியோ இதோ இதை தடுக்க உலக அரசாங்கங்கள் நடவடிக்கை எடுக்குமா? மக்களிடம் கண்டிப்பாக விழிப்புணர்வு தேவை...

இதோ அந்த வீடியோ...

இந்த வார புகைப்படம்

இதற்க்கான கமெண்ட்கள் வரவேற்கப்படுகின்றன...
இந்த வார வானவில் இடுகையாக மொஹம்மத் ஃபெரோஸின் இந்த மனிதம் மிளிர்கிறது எனும் இடுகை கண்டிப்பாக மனசு இருப்பவர்களுக்காக மட்டும்... ஒரு சிறந்த இடுகை கொடுத்ததற்க்கு வாழ்த்துகள் ஃபெரோஸ்...Post Comment

51 comments:

Trackback by சீமான்கனி June 11, 2010 at 3:53 AM said...

me the 1st....

Trackback by நண்டு @நொரண்டு -ஈரோடு June 11, 2010 at 3:57 AM said...

நல்லாயிருக்கு
தொடருங்கள்
வாழ்த்துக்கள்
பகிர்வுக்கு நன்றி

Trackback by சீமான்கனி June 11, 2010 at 4:12 AM said...

பூசாரி ,கோட்வோர்ட் ரெண்டுமே அசத்தல் மாப்பி...ஃபெரோஸின் பதிவுக்கு சிறந்த அங்கீகாரம் நன்றி மாப்பி....வானவில் அருமை...வண்ணமயமான வாழ்த்துகளுடன்....தொடரவும்....

Trackback by வேலன். June 11, 2010 at 4:13 AM said...

நண்பரே...வீடியோ அது இதுன்னு பயமுறுத்துகின்றீர்களே....உலகம் அழிவைநோக்கி சென்றுகொண்டுள்ளது.பகிர்வுக்கு நன்றி ...வாழ்க வளமுடன்,வேலன்.

Trackback by சீமான்கனி June 11, 2010 at 4:32 AM said...

//இதற்க்கான கமெண்ட்கள் வரவேற்கப்படுகின்றன...//

போட்டோ எடுத்து பிரேம் பண்ணி மாட்ட காசில்லை என்பதற்காக இப்படியா பண்றது...உச்சா வருது எறக்கிவிடுங்கபா...

Anonymous — June 11, 2010 at 4:46 AM said...

இந்த வசியம் இதெல்லாம் நம்பவும் முடியலை. நம்பாம இருக்கவும் முடியலை. வானவில் வண்ணமா இருக்கு

Trackback by T.V.ராதாகிருஷ்ணன் June 11, 2010 at 4:51 AM said...

நல்லாயிருக்கு .. வாழ்த்துகள்

Trackback by அன்புடன் அருணா June 11, 2010 at 5:02 AM said...

வண்ணங்களின் கலவை கலக்குது! கோட் வோர்ட் தகவலுக்கு நன்றி!

Trackback by iniyavan June 11, 2010 at 5:12 AM said...

வசந்த்,

ஏற்கனவே வானவில் தலைப்புல நண்பர் மோகன் குமார் எழுதிகிட்டு இருக்கார். அதனால தலைப்பை மாத்தீடுங்க.

Trackback by அன்புடன் நான் June 11, 2010 at 6:01 AM said...

சிவப்பு.....

மருந்து வைத்தால் அது உடலின் இருக்காது ... அது செரிமாணமாகி உடலில் கலந்து (வீரியத்திற்கு தகுந்தார் போல) உயிரை எடுத்து விடும்.

முருந்து எடுப்பவர்கள் எடுக்கப்படும் முருந்தை முன் கூட்டியே அதை வாயில் வைத்துக்கொண்டு செய்யும் பித்தலாட்டம்.

அந்த பெரியவர் முருந்து எடுக்கப்பட்டு விட்டது என நம்பிக்கையில் மூண்டு வந்துவிட்டார்.... அவரை ... நமக்கேதும் இனி இல்லை என்ற நம்பிக்கைத்தான் காப்பாற்றியிருக்கிறது. கவலை மனிதனுக்கு நோய்.
நிம்மதி அதற்கு மருந்து.

Trackback by ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) June 11, 2010 at 6:23 AM said...

மாப்பு கலர்புல் விசயங்கள். Google தகவல்களுக்கு நன்றி. அந்த கேமரா எங்க கிடைக்கும். ஹி ஹி

Trackback by அன்புடன் நான் June 11, 2010 at 6:24 AM said...

கருநீலம்.....

அடிங்கொய்யால... உங்க போதைக்கு நாந்தான் ஊருகாயா?
நீங்க வித்தியாசமா பிறந்தநாள் கொண்டாடுனது போதும்... ஒட்டி வைச்சத பிச்சி விடுங்கடா!

Trackback by கமலேஷ் June 11, 2010 at 6:48 AM said...

நிறைய நல்ல பகிர்வுகள் நண்பரே....வாழ்த்துக்கள் தொடருங்கள்...

Trackback by Unknown June 11, 2010 at 6:53 AM said...

மாப்ள கலர்புல் ஆனா பவர்புல்..

அந்த மருந்து மேட்டர் பித்தலாட்டம்,
கோடு வேர்ட் அப்படிதான் பயன்படுத்தி ஆகணும், இல்லாட்டி பெயர் மிஸ்டேக் வரும்
கூகுள் கர்நாடக மாநிலத்தில் இணைய வசதி கூகுல் கிராமத்துக்கு செஞ்சு குடுங்கப்பு, பேர் கெட்டுப் போவுது பாத்தீங்களா.
அரசுக்கு வந்தனம்
அப்படி படம் எடுக்க இதுவரை வாய்ப்பில்லை..
ந்கொயாள எவன்டா என்னை தொங்கவிட்டது..
மனிதம் மிளிர்கிறது..

Trackback by ஜெய்லானி June 11, 2010 at 7:30 AM said...

கலக்கல் பதிவு

Trackback by CS. Mohan Kumar June 11, 2010 at 8:28 AM said...

ஆஹா.. நான் சொல்ல நினைச்சதை உலக நாதன் சொல்லிட்டார். வேற ஒன்னும் இல்லை. ரெண்டு பேர் ஒரே தலைப்பில் வாரா வாரம் எழுதினா குழப்பம் வரும். நம்ம ப்ளாக் பக்கமே வருவதில்லையோ? (சும்மா உரிமையில் கேட்கிறேன் நண்பா)

மற்றபடி தகவல்கள் ரொம்ப பயனுள்ளவை

Trackback by dheva June 11, 2010 at 8:42 AM said...

கலக்கல் வசந்த்...! அருமையான பதிவு...வாழ்த்துக்கள்!

Trackback by Ananthi (அன்புடன் ஆனந்தி) June 11, 2010 at 9:01 AM said...

கலர் புல்லா நல்லா இருக்கு.. :)

Trackback by மாதேவி June 11, 2010 at 9:13 AM said...

வானவில் கலக்குங்க. வாழ்த்துகள்.

Trackback by தமிழ் உதயம் June 11, 2010 at 9:16 AM said...

தலைப்பும் அழகு. தகவல்களும் தேவையானவை.

Trackback by Deepan Mahendran June 11, 2010 at 9:18 AM said...

நல்ல நல்ல தகவல்கள் மச்சான்...அந்த பில்லி சூன்யம் மேட்டர் விளக்கம் கிடைத்தால் அதையும் பகிரவும்...செம இன்டரஸ்டிங்கான டாபிக் அது !!! :)

Trackback by Chitra June 11, 2010 at 9:24 AM said...

நல்லா வைக்கிறாய்ங்கய்யா கோட் வேர்ட் என்கிட்ட கேட்ருந்தா நல்ல கோட்வேர்டா சொல்லிருப்போம்ல... A for ant, B for butterfly,C for cat, D for dogன்னு நாலு நல்ல பேரா என்னோட சொந்த பந்தங்கள் பெயராவும் வச்சுருப்பேன் ஹூம்...


........... ha,ha,ha,ha,ha,..... கண்டிப்பாக உங்க கிட்ட ஒரு வார்த்தை கேட்டு இருக்கணும்......

Trackback by Mahi_Granny June 11, 2010 at 9:38 AM said...

indeed colorful rainbow . மனிதம் மிளிர்கிறது தகவலுக்கும் நன்றி

Anonymous — June 11, 2010 at 9:58 AM said...

வானவில் ரொம்ப ரொம்ப அருமை வசந்த் .சிவப்பு என்னால் நம்பவும் முடியலே ஆனா நம்பாமலும் இருக்க முடியலே ..செமஞ்சள் ஆஹா இப்பிடி எல்லாம் கூட கோட் இருக்க முடியமா ...மொத்தத்தில் வானவில் நிறங்கள் எல்லாமே மனதில் பதிஞ்சு போச்சு .வாழ்த்துக்கள் .

Trackback by Prathap Kumar S. June 11, 2010 at 10:21 AM said...

அ்நத மொபைல் சாப்ட்வேர் உண்மைன்னு எனக்குத் தோணலைப்பா...


அந்தகுழந்தையைப்பார்க்க பாவமா இருக்கு... அதோட அட்டகாசம் பொறுக்கமுடியாம இப்படி பண்ணிட்டாங்களோ...

Trackback by Prathap Kumar S. June 11, 2010 at 10:21 AM said...

அ்நத மொபைல் சாப்ட்வேர் உண்மைன்னு எனக்குத் தோணலைப்பா...


அந்தகுழந்தையைப்பார்க்க பாவமா இருக்கு... அதோட அட்டகாசம் பொறுக்கமுடியாம இப்படி பண்ணிட்டாங்களோ...

Trackback by kavisiva June 11, 2010 at 11:38 AM said...

இதுக்கு இண்டெர்நேஷனல் கோட் எல்லாம் இருக்கா?! நாங்க அது தெரியாமலேயே ஃபோன் மூலம் டிக்கெட் புக் பண்ண A-America, B- Bangkok, C-China, D- Denmark... அப்படீன்னுல்ல சொல்லிக்கிட்டு இருக்கோம் :)

கருநீலம்:
டேய் சீக்கிரமா அவுத்து விடுங்கடா இல்லேன்னா நீங்க தூக்குல போட்டிருக்கற வாத்து செத்துப் போயிடும்டா டேய்... உள்ள போயிடுவீங்கடா...

Trackback by அமுதா கிருஷ்ணா June 11, 2010 at 12:47 PM said...

கோட்வேர்ட் தகவல் நல்லாயிருக்கு..பையன் ரொம்ப வால் போல...

Trackback by பாலராஜன்கீதா June 11, 2010 at 12:49 PM said...

இணையத்தில் வாசித்தது

http://www.gadgetcage.com/2010/02/how-popular-companies-devised-their.html

The word “Google” is a misspelling of the word “Googol”, which means a number represented by 1 followed by 100 zeros.

After founders – Stanford graduate students Sergey Brin and Larry Page presented their project to an angel investor and received a cheque made out to “Google”.

:-)

Trackback by Unknown June 11, 2010 at 2:25 PM said...

வானவீல் நீளம் அதிகம்

போட்டோ கமெண்ட்:

கட்டி போட கயிறு கிடைக்கலையா :P

மொபைல் சாஃப்ட்வேர் டூபாக்கூர்,
சில உடைகளை காட்டுது சிலதை காட்டலை - என்ன இதெல்லாம் சி.பி தனமா ;)

Trackback by பனித்துளி சங்கர் June 11, 2010 at 2:25 PM said...

பல தகவல்கள் அறிந்துகொண்டேன் நண்பரே . பகிர்வுக்கு நன்றி .


நீங்கள் அறிமுகம் செய்த மனிதம் மிளிர்கிறது அதேபதிவு என்னையும் மிகவும் பாதித்தது .பகிர்வுக்கு நன்றி .

Trackback by ஜெயந்தி June 11, 2010 at 2:58 PM said...

//சி. கருணாகரசு said...
சிவப்பு.....

மருந்து வைத்தால் அது உடலின் இருக்காது ... அது செரிமாணமாகி உடலில் கலந்து (வீரியத்திற்கு தகுந்தார் போல) உயிரை எடுத்து விடும்.

முருந்து எடுப்பவர்கள் எடுக்கப்படும் முருந்தை முன் கூட்டியே அதை வாயில் வைத்துக்கொண்டு செய்யும் பித்தலாட்டம்.

அந்த பெரியவர் முருந்து எடுக்கப்பட்டு விட்டது என நம்பிக்கையில் மூண்டு வந்துவிட்டார்.... அவரை ... நமக்கேதும் இனி இல்லை என்ற நம்பிக்கைத்தான் காப்பாற்றியிருக்கிறது. கவலை மனிதனுக்கு நோய்.
நிம்மதி அதற்கு மருந்து.//
100%

Trackback by ஹேமா June 11, 2010 at 3:11 PM said...

சிவப்பு...இப்பவும் வசியம் செய்பவர்களும் செய்துகொள்பவர்களும் நம்பிக்கையோடு இருக்கிறார்களா?அப்போ எனக்கும் வேணும்.நானும் வசியம் பண்ணப் போறேன்.

செம்மஞ்சள்....இங்கு நாங்கள் இதே கோட் வேர்ட் தான் தொலைபேசியில் உச்சரிப்புக்கள் தெளிவாய் சொல்லும் நேரங்களில் பாவிக்கிறோம்.

நீலம்...பயங்கரமான செய்திதான்.
அதுக்கும் பாதுகாப்பு வந்திடும்.பயமில்ல.

கருநீலம்...
*பயம் தவிர்த்த
குழந்தைக்குப் புரிகிறது
பாதுகாப்போடுதான்
தொங்குவதாய் !*

ஊதா...எப்பவும் எனக்குப் பிடிச்ச குளிர்மையான வண்ணம்.

Trackback by செ.சரவணக்குமார் June 11, 2010 at 5:08 PM said...

மிக நல்ல பகிர்வுகள் வசந்த்.

தொடருங்கள்.

Trackback by சிநேகிதன் அக்பர் June 11, 2010 at 5:46 PM said...

வானவில் கண்ணுக்கும் மனதுக்கும் இதமாக இருந்தது.

Trackback by Starjan (ஸ்டார்ஜன்) June 11, 2010 at 5:52 PM said...

ஒவ்வொரு கலரும் மின்னுது., கலக்கலான வானவில்.

Trackback by Menaga Sathia June 11, 2010 at 5:54 PM said...

சூப்பர்ர் வசந்த்!! வானவில் கண்ணுக்கு இதமா இருக்கு...

அப்புறம் எங்க மாமி அதாங்க என் தோழி தாமரை இந்தியாவில் போன மாதம் செட்டிலாயிட்டாங்க வசந்த்.மகனின் படிப்பிற்காக...

Trackback by அகல்விளக்கு June 11, 2010 at 6:57 PM said...

ஆஹா....

என்னோட கோட் வேர்ட்

ரோமியோ ஆல்பா ஜீலியட் ஆல்பா.. (அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...)

Trackback by சாந்தி மாரியப்பன் June 11, 2010 at 8:42 PM said...

வானவில் வண்ணமயமாக ஜொலிக்குது. பொதுவா நாங்களும் டெலிபோனில் கோட்வேர்ட்ஸ்தான் சொல்லுவோம். முக்கியமா பேரு, அட்ரஸ் சொல்லும்போது. A for apple, B for ball இப்படி :-))))

Trackback by யோ வொய்ஸ் (யோகா) June 11, 2010 at 8:58 PM said...

அண்ணா அந்த மென் பொருளை எங்கு வாங்கலாம்.


அவ்வ்வ்வ்வ்

Trackback by ஸாதிகா June 11, 2010 at 9:12 PM said...

வானவில் கலக்கல்.

Trackback by நாடோடி June 11, 2010 at 9:40 PM said...

ந‌ல்ல‌ த‌க‌வ‌ல்க‌ள் வ‌ச‌ந்த் தொட‌ருங்க‌ள்... அந்த‌ குழ‌ந்தை போட்டோ என‌து மெயிலுக்கும் வ‌ந்த‌து..

Trackback by சுசி June 12, 2010 at 1:08 AM said...

வண்ணங்கள் சூப்பர் வசந்த்.

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 12, 2010 at 1:49 AM said...

சீமான்கனி மாப்பி உன்னோட புகைப்பட கமெண்டு சூப்பரு அசத்திட்டடா...

நண்டு சார் மிக்க நன்றி

வேலன் சார் நானும் அப்டித்தான் சார்

அகிலா மேடம் மிக்க நன்றி

டி.வி.ஆர் சார் மிக்க நன்றி

பிரின்ஸ் நன்றி

உலகநாதன் தமிழ்நாட்டுல தண்ணிக்குத்தான் பஞ்சம் தலைப்புக்கு இல்ல அதனால மாத்திடறேன் வர்ணங்கள் அப்படின்னு ஓகேவா?

கருணா சார் அப்படியும் இருக்கலாம் ஆனால் எதை நம்புவது குழப்பமாகவே இருக்கிறது..

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 12, 2010 at 1:53 AM said...

ரமேஷ் நெம்ப ஆசைப்படாதடி மாப்ள...

கமலேஷ் நன்றிங்க

செந்தில் கருத்துகளுக்கு நன்றி மாப்ள

ஜெய்லானி நன்றிங்க பாஸ்

மோகன் குமார் ராயல்டி வச்சுருக்கீங்களா? சும்மா மாத்திடலாம் பாஸ்

தேவா நன்றிப்பா

ஆனந்தி நன்றிங்க

மாதேவி மேடம் மிக்க நன்றி

ரமேஷ் சார் மகிழ்ச்சி

மச்சான் அருண் யாரும் விளக்கம் சொல்லலியேப்பா? :(

சித்ரா மேடம் நன்றி

மஹி நன்றிங்க

பிரதாப் அப்படித்தான் நானும் வேண்டிக்கிறேன் மாப்ள

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 12, 2010 at 1:59 AM said...

கவி கமெண்ட் சூப்பர்..

அமுதா மேடம் மிக்க நன்றி

பாலராஜன் கீதா :)

ஜமால் அண்ணா அடுத்தவாட்டி எடிட் செய்திடலாம்ண்ணா..

சங்கர் நன்றி

ஜெயந்தி மேடம் ம் அப்படியும் இருக்க கூடும்

ஹேமா ஆமாவா? நன்றிப்பா

சரவணக்குமார் அண்ணா நன்றிண்ணா

அக்பர் மிக்க நன்றிங்க

ஸ்டார்ஜன் மிக்க நன்றிப்பா

மேனகா மேடம் அப்படியா ஒருவார்த்தை கூட சொல்லாம போய்ட்டாங்க இருக்கட்டும் இருக்கட்டும்

அகல்விளக்கு ராஜாவா நீங்க?

சாரல் மேடம் மிக்க நன்றிங்க

யோகா பிள்ளை பூச்சிக்கு ஆசையப்பாரு ஹ ஹ ஹா நன்றி மச்சி..

ஸாதிகா சகோ நன்றிங்க

நாடோடி பாஸ் மிக்க நன்றியும் அன்பும்...

Trackback by நாஸியா June 12, 2010 at 9:45 AM said...

ஐயோ அந்த பிள்ளை பாவம்!!!

உங்க வானவில் இடுகை சூப்பர் சகோதரர்!

Trackback by Deepan Mahendran June 12, 2010 at 6:16 PM said...

வசந்த மச்சான்....அருண் ஐரோப்பாவில் ஐக்கியமாகிவிட்டார், இது சிவன் (எ) தீபன்.
:)

Trackback by எல் போர்ட்.. பீ சீரியஸ்.. June 13, 2010 at 8:50 AM said...

வானவில்.. நல்லாயிருக்கு.. நீளம் கொஞ்சம் அதிகம்..

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 14, 2010 at 3:43 AM said...

நாஸியா சகோதரி மிக்க நன்றி.. பிரியாணி என்னாச்சு ஃப்ரிட்ஜ்க்குள்ளாற வச்சுட்டீங்களா?

சந்தனா பூங்கதிர் தேசம் போஸ்ட்ஸ் நான் வந்ததுல இருந்து ஒண்ணு கூட அப்டேட் ஆவலை என்னாச்சு?

தீபன் மச்சான் ஆமாவா என்கிட்ட சொல்லவே இல்லை இருக்கட்டும் இருக்கட்டும் ஒபாமாகிட்ட சொல்லி காதை கடிச்சு வைக்க சொல்றேன்...

Trackback by பா.ராஜாராம் July 3, 2010 at 11:07 PM said...

நல்ல பகிர்வு வசந்த்!

//என். உலகநாதன்.

வசந்த்,

ஏற்கனவே வானவில் தலைப்புல நண்பர் மோகன் குமார் எழுதிகிட்டு இருக்கார். அதனால தலைப்பை மாத்தீடுங்க//

//மோகன் குமார்
ஆஹா.. நான் சொல்ல நினைச்சதை உலக நாதன் சொல்லிட்டார். வேற ஒன்னும் இல்லை. ரெண்டு பேர் ஒரே தலைப்பில் வாரா வாரம் எழுதினா குழப்பம் வரும். நம்ம ப்ளாக் பக்கமே வருவதில்லையோ? (சும்மா உரிமையில் கேட்கிறேன் நண்பா//

//வசந்த்
உலகநாதன் தமிழ்நாட்டுல தண்ணிக்குத்தான் பஞ்சம் தலைப்புக்கு இல்ல அதனால மாத்திடறேன் வர்ணங்கள் அப்படின்னு ஓகேவா//

very good! இதுதான் வசந்த்!! வர்ணங்கள் நல்லாருக்கு வசந்த்!