ப்ளீஸ் ! இந்த புத்தகத்தை வாங்காதீங்க ...

| May 31, 2010 | |
என்ன நண்பர்களே அனைவரும் நலமா? என்னுடைய தொல்லையில்லாமல் நிம்மதியாக இருந்திருப்பீர்கள் விட்டுடுவோமா வந்திட்டோம்ல... இப்போ விடுமுறையில் நான் வாங்கிய புத்தகங்களை உங்களோடு பகிந்து கொள்கிறேன்.....

****************************************************************************************************************
என்னமோ மாதிரியிருக்கு இந்த வார்த்தை நம்மில் பெரும்பாலானோர் பயன் படுத்தும் வார்த்தையாகிப்போய்விட்டது...

இப்படித்தான் ஒருவர் மெர்க்குரி லைட் கம்பத்தின் வெளிச்சத்தில் எதையோ தேடிக்கொண்டிருந்தார். என்ன சார் தேடுறீங்க என்றார் அங்கு வந்த மற்றொருவர்.அதற்கு முதலாமவர் கூறுகிறார் மோதிரம் கீழே விழுந்திடுச்சு அதைத்தான் தேடுறேன் என்றாராம் தொலைத்தவர்.அக்கரறையாக விசாரித்த இரண்டாமவர் எங்க தொலைச்சீங்க என்று கேட்க , வீட்டுகிட்ட என்றாராம் முதாலமவர் அதற்கு ஏன் இங்கே தேடுறீங்க என்றதற்க்கு இங்கேதான் வெளிச்சமாய் இருக்கிறது என்றாராம் தொலைத்தவர்

இப்படித்தான் என்னமோ மாதிரியிருக்கு மனசுகளும் அமைதியாக உட்கார்ந்து ஆழமாக கவனித்தால் ஓ... இதுதான் விஷயம் இதுக்குத்தான் இவ்வளவு நெருடலா இருந்ததா என்று தீர்வுக்கு வரலாம் வெளிச்சம் இருக்கிற இடமாகப்பார்த்து தேடுற இடமாகப்பார்த்து தேடுற மாதிரி கோயிலிலும் ஹோட்டலிலும் கடற்கரையிலும் அதை தேடினால் கடைசி வரை உங்கள் மோதிரம் கிடைக்கப்போவதில்லை....

என்பது தொடங்கி

நான் அசிங்கம் என்ற அபிப்ராயத்தோடு நீங்கள் இருப்பீர்களேயானால் உங்கள் சுற்றமும் உங்களைப்பற்றி அப்படித்தானே நினைக்கும் நீங்களே உங்களைப்பற்றி உங்கள் மனம் உடல் பற்றி தரக்குறைவாக நினைக்கும் பொழுது அடுத்தவர்கள் அப்படி நினப்பதில் ஆச்சரியம் என்ன?

உங்கள் அகம் புறம் இரண்டையும் அணு அணுவாக நீங்களே ரசியுங்கள் காதலியுங்கள் முதலில் நீங்கள் உங்களை கவுரவமாகப்பாருங்கள் ஆராதியுங்கள் இந்த உலகம் உங்களை எப்படி பார்க்கிறது என்பதன் ஆரம்ப புள்ளி உங்களிடம் இருந்துதான் தொடங்குகிறது என்று தனி மனித சுய கம்பீர விளக்கம்...

இன்னும் அன்பு செலுத்துதல்,பெறுதல்,வாழ்க்கைக்கு தேவையற்ற தாழ்வு மன்ப்பான்மையை களைதல்,எண்ணங்களை செயல்வடிவமாக்குதல்,புரிதல் பற்றியும் இன்னும் வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை விஷயங்களை நீயா நானா கோபிநாத் அவர்கள் இந்த புத்தகத்தில் பகிர்ந்திருக்கின்றார்...

கண்டிப்பாக அழகான மனம் கொண்ட மனிதனாக மாற விரும்புபவர்கள் வாங்கிப்படிக்க வேண்டிய புத்தகம்....ப்ளீஸ் ! இந்த புத்தகத்தை வாங்காதீங்க...

ஆசிரியர் : நீயா நானா கோபிநாத்

சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேசன்ஸ்
29/(7/3) 'E'பிளாக் முதல்தளம்,
மேட்லிசாலை,தி.நகர்,சென்னை - 600017

விலை : ரூ 60

புத்தகம் நியூ புக்லேண்டிலும் கிடைக்கிறது...

****************************************************************************

அடுத்ததாக ராஜ சுந்தர் ராஜன் என்பவரின் முகவீதி எனும் கவிதை தொகுப்பு...

மிகை எனும் தலைப்பில்

கேட்பதற்க்குத் துளைகள் போதும்
என்றாலும் செவி மடல்கள்
(அறுத்து விடலாமா?)

மானத்துக்கு ஆடை
அதில் ஆயிரத்தெட்டு வேலைப்பாடு.

கருக்கொண்ட பின்பும்
புணர்ச்சி

உண்டமட்டில் உயிர் தாங்காதோ
வீணையும் இசைக்கிறது...

பசித்துவம் எனும் தலைப்பில்

கன்று முட்டிப்
பால் விளைந்தது
கறவை மடியில்

பால் பறித்துப்
பணம் பண்ணின
மனித விரல்கள்

கன்றுக்காக மனமிரங்கிக்
கண்ணீர் விட வேண்டாம்

பால் தரும் வரைக்கும் பறிப்பதும்
பிறகு அப் பசுவையே கொன்று
கறி சமைப்பதும் கூட
நியாயம்தான் மனித வாழ்வில்
வயிற்றுப்பசி சாட்சியாக...

இப்படி இன்னும் நிறைய கவிதைகள் வேறொரு வடிவத்தில் கொட்டிக்கிடக்கின்றது..இழுத்து ஓங்கி கன்னத்தில் அறைகிறது இவரது கவிதைகள் கவிதையை சுவாசிப்பவர்கள் கண்டிப்பாக வாங்கிப்படிக்க வேண்டிய புத்தகம்

முக வீதி

ஆசிரியர் : ராஜ சுந்தர் ராஜன்

தமிழினி,342,டி.டி.கே சாலை

சென்னை -14

விலை : ரூ,70.00

நியூ புக்லேண்டிலும் கிடைக்கிறது...

*************************************************************************************

நீ முத்தமிட்ட
பிறகுதான்
நம்பத்தொடங்கினேன்

நீரில்
இருந்து மின்சாரம் எடுக்க முடியும்
என்பதை

---------

கேட்க திறனிழந்து
பியானோவுக்கு முன்
பீத்தோவன்

உனக்கு முன்
நான்

பியானோவிலிருந்து
வழியும் இசை
மெல்லச்சரியும்
உன் மேலாடை

--------

எதையோ நினைத்துச்
சிரித்தபடி
குளத்தில் நீ
முகம் கழுவுகிறாய்

உன் புன்னகையைப்
பொரிகளென நினைத்து
மொய்க்கின்றன
மீன்கள்

--------

என் கவிதையை விட்டு
ஓடிப்போன
வார்த்தையைத்
தேடியலைந்தேன்

மொட்டைமாடியில்
நீ பாடம் நடத்தும்
குழந்தைகளோடு உட்கார்ந்து
உன் உதடுகளையே
வேடிக்கை
பார்த்து கொண்டிருந்தது
அது


இப்படி காதல் சொட்ட சொட்ட கவிதைகளை அழகிய வண்ணப்படங்களுடன் கவிஞர்.பழநிபாரதி முத்தங்களின் பழக்கூடை எனும் புத்தகத்தில் நிறைய காதல் கவிதைகள் எழுதியிருக்கின்றார்...


முத்தங்களின் பழக்கூடை

ஆசிரியர் : பழநிபாரதி

விஜயா பதிப்பகம்

நியூ புக் லேண்டிலும் கிடைக்கிறது..

விலை ரூ . 70

*************************************************************************************

இன்னுமொரு முக்கிய விஷயம் சென்னையில் இருப்பவர்கள்
புத்தகங்கள் வாங்க டிஸ்கவரி புக் பேலஸ் சென்று வாங்குங்கள் 10% வரை பதிவர்களுக்கு டிஸ்கவுண்டும் கொடுக்கின்றார்கள்...

நான் சத்ரியன் அண்ணாவின் அறிமுகத்தின் பேரிலும் ஜமால் அண்ணா அறிமுகத்தின் பேரிலும் சென்றேன்.... அங்குதான் நம் பாரா அண்ணாவின் கருவேல நிழல் ,பரிசல் அண்ணாவின் டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும், கேபிள் சங்கரின் லெமன் ட்ரீயும் இரண்டு சொட்டு டக்கீலாவும் நிலா ரசிகனின் ஒரு வண்ணத்துப்பூச்சியின் கனவுகள் மற்றும் நண்பர் சகோதரர் தமிழ் அமுதனின் அறிமுகத்தின் பேரில் வாங்கிய ராஜீவ் காந்தி கொலை வழக்கு, இன்ன பிற நூல்களும் வாங்கினேன் அதன் உரிமையாளர் வேடியப்பன் மிகவும் அன்பாகவும் அழகாகவும் பழகுகிறார்...
விபரங்களுக்கு இவரின் இந்த தளத்திற்க்கு செல்லவும்...*****************************************************************************************************************

இது மட்டுமல்ல இன்னும் நிறைய புத்தகங்கள் வாங்கி படித்தேன் அது பற்றிய இடுகைகளும்,
நண்பர்கள் சந்திப்பு...நன்றாக வாசிக்கவும் நண்பர்கள் சந்திப்புதான்... பதிவர் சந்திப்பு அல்ல ஏனென்றால் மூவர் சந்தித்தால் பதிவர் சந்திப்பா என்று கேட்கும் மிக நாகரீகமான மனிதர்கள் பதிவுலகில் இருக்கின்றனர்...நண்பர்கள் சந்திப்பும் அதன் புகைப்படங்களும் அது பற்றிய பதிவும் அடுத்த இடுகையில்...


*************************************************************************************

Post Comment

47 comments:

Trackback by தமிழ் அமுதன் (ஜீவன்) May 31, 2010 at 9:51 PM said...

welcome vasanth..!

Trackback by 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ May 31, 2010 at 9:57 PM said...

நல்லா இருக்கீங்களாண்ணே!

Trackback by ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) May 31, 2010 at 9:57 PM said...

வா ராஜா வா. இந்திய நம்பர் கொடுத்தா போன் பண்ணினா எடுக்கணும். எத்தன தடவப்பா போன் பண்றது?

Trackback by கே.ஆர்.பி.செந்தில் May 31, 2010 at 10:08 PM said...

இந்தப் புத்தகங்களை எனக்கு இரவல் தருவீர்களா?

படித்துவிட்டு கண்டிப்பாக திருப்பித் தருவேன் ..

Trackback by நாஞ்சில் பிரதாப் May 31, 2010 at 10:22 PM said...

வாய்யா ராசா....ஆரம்பம்தான் உங்கிட்ட நல்லாருக்கு... போக போக... மொக்கையா போட்டுதள்ளிருவியே...நடத்து நடத்து

Trackback by செ.சரவணக்குமார் May 31, 2010 at 10:31 PM said...

வாங்க வசந்த், நல்லாயிருக்கீங்களா?

வாசித்த நூல்கள் பற்றிய பகிர்வுக்கு மிக்க நன்றி.

எனது விடுமுறையின்போது நானும் வேடியப்பனின் புத்தக நிலையத்திற்குச் சென்றிருந்தேன். நல்ல மனிதர்.

ஒரு சிறு இடைவெளிக்குப் பின்னர் உங்கள் பதிவு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தொடர்ந்து நிறைய எழுதுங்கள் நண்பரே.

Trackback by seemangani May 31, 2010 at 10:52 PM said...

வரவு நல்லவரவு மாப்பி...நல்ல புத்தகங்களின் அறிமுகம் மாப்பி நானும் கோபிநாத்தின் புத்தகம் வாங்கி அனுப்ப சொல்லி இருக்கிறேன் மாப்பி...இனி நம்ம பட்டறை கலைகட்டும்...பயண களைப்பும் படித்த களைப்பும் தீர நல்லா ஓய்வேடு வரட்டா...

Trackback by கார்க்கி May 31, 2010 at 10:55 PM said...

செட்டில் ஆயாச்சா?

நடக்கட்டும்

Trackback by எல் போர்ட்.. பீ சீரியஸ்.. May 31, 2010 at 10:55 PM said...

வாங்க வசந்த்.. ஆரம்பிங்க கச்சேரிய..

Trackback by உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) May 31, 2010 at 11:26 PM said...

நல்வரவு

Trackback by ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ May 31, 2010 at 11:36 PM said...

வாங்க நண்பரே நல்வரவு ! வந்ததும் முதல் பதிவெ மிகவும் சிறப்பாக தந்து இருக்கிறீர்கள் . நானும் குறித்து வைத்துக்கொள்கிறேன் இந்த புத்தகங்களை விரைவில் வாங்கிப் படிக்கிறேன் . பகிர்வுக்கு நன்றி !

Trackback by சுசி June 1, 2010 at 12:33 AM said...

வந்துட்டிங்களா வசந்த்..

வந்ததுமே அசத்தலா..

இந்தியா போனா கண்டிப்பா போறேன். நானும் வாங்கறேன்.

Trackback by ஹேமா June 1, 2010 at 12:51 AM said...

வசந்து...வந்தாச்சா.சுகம்தானே !

புத்தகங்கள் கொண்டு வந்திருந்தால் இரவல் தாங்க.கண்டிப்பாத் திருப்பி அனுப்புவேன் !

Trackback by Mrs.Menagasathia June 1, 2010 at 2:08 AM said...

welcome back!!

Trackback by ஸ்ரீராம். June 1, 2010 at 4:52 AM said...

ஓ..விடுமுறை முடிந்து திரும்பி வந்தாச்சா...வருக...எப்படிக் கழிந்தன விடுமுறை நாட்கள்? கோபிநாத் புத்தகம் நான் கூட ஒரு பயணத்தின்போதுதான் வாங்கிப் படித்தேன்.. கலக்க ஆரம்பிங்க...

Trackback by Balavasakan June 1, 2010 at 5:14 AM said...

வரும்போதே அட்டகாசமா வந்திருக்கீங்க எங்க வசந்து போயிருயந்தீங்க ??? வெல்கம் !!

Trackback by சி. கருணாகரசு June 1, 2010 at 6:20 AM said...

வருக வருக.... நல்லதகவல்... ஆகட்டும்.

Trackback by MANO June 1, 2010 at 7:30 AM said...

வாங்க வசந்த்,

நல்லா இருக்கீங்களா?

இந்த புத்தகத்தை பத்தி நானும் எழுத நினைத்தேன். ரொம்ப அருமையான புத்தகம்.

மனோ

Trackback by மாதேவி June 1, 2010 at 7:34 AM said...

புத்தகப் பகிர்வுக்கு நன்றி வசந்த்.

Trackback by நட்புடன் ஜமால் June 1, 2010 at 7:35 AM said...

உன்னை நீ கவுரமா நினைக்கனும் - அருமை வசந்த்.

முத்தம் - மின்சாரம் - அட!

தங்களை சந்தித்ததில் மெத்த மகிழ்ச்சி கொண்ட மனுஷர்களில்(பதிவரல்ல) நானும் ஒருவன்.

நிறைய புத்தகங்களோடு பரிச்சியம் இருக்கு உங்களுக்கு மிக்க சந்தோஷம், நிறைய படிங்க

-------------------

அடுத்த முறை இந்தியா வந்தால் நோ எஸ்கேப் ;)

Trackback by அமைதிச்சாரல் June 1, 2010 at 7:38 AM said...

Welcome back.

Trackback by சத்ரியன் June 1, 2010 at 7:51 AM said...

வசந்த்,

நலமா?

வந்ததும் பரபரவென ஒரு இடுகை. அதில் என்னை அண்ணனாக்கி பார்ப்பதில் உனக்குள்ள மகிழ்ச்சி... வாசிப்பு பழக்கத்தை நேசிக்கத்தூண்டும் விதத்தில் புத்தகங்களின் அறிமுகம்... என அமர்க்களப் படுத்துகிறாய்.

நண்பன் Discovery Book Palace வேடியையும் அறிமுகப்படுத்தியிருப்பது பெருமகிழ்ச்சி.

Trackback by நாடோடி June 1, 2010 at 8:22 AM said...

வாங்க‌ வ‌ச‌ந்த்.. தொட‌ர்ந்து எழுதுங்க‌... புத்த‌க‌ங்க‌ளின் விம‌ர்ச‌ன‌ம் அருமை..

Trackback by தமிழ் உதயம் June 1, 2010 at 8:52 AM said...

பகிர்வுக்கு நன்றி. விலையை பார்த்து, தேவைகளை பார்த்து- தேவையான புத்தகங்களை வாங்குவோம்.

Trackback by SUFFIX June 1, 2010 at 9:33 AM said...

வருக வருக வசந்த், நலமா? பல நல்ல புத்தகங்கள் கூட தான் வந்திருக்கீங்க, இனி கவிதைகள் அடிக்கடி வெளியிடப்படுமா?

Trackback by மதி.இண்டியா June 1, 2010 at 9:50 AM said...

கோபியின் புத்தகம் செம கடிங்க, மீடியாவில் முகம் தெரியும் புகழை வைத்து என்ன வேண்டுமானாலும் எழுதினால் விற்க்கும் போல

Trackback by D.R.Ashok June 1, 2010 at 10:30 AM said...

leavல enjoyயா? இனி வலையுலகம் களைகட்டும்... welcome back vasanth :)

Trackback by ஜெட்லி June 1, 2010 at 10:48 AM said...

வரேன்னு சொன்னீங்க....ஆளே காணோம்...??

Trackback by Starjan ( ஸ்டார்ஜன் ) June 1, 2010 at 11:34 AM said...

வசந்த், நலமா.. ஊரில் எல்லோரும் நல்லாருக்காங்களா... விசாரித்ததாக சொல்லவும். புத்தக வரவேற்பரை ரொம்ப நல்லாருக்கு..

Trackback by நாஸியா June 1, 2010 at 11:47 AM said...

Welcome back! :)

Trackback by narumugai June 1, 2010 at 11:52 AM said...

கோபி புத்தகம் 1001 அவ்ளோதான்


www.narumugai.com

Trackback by VISA June 1, 2010 at 12:16 PM said...

ம்..ம்..ம்... வந்தாச்சா வெல்கம் பேக்.

Trackback by Kala June 1, 2010 at 2:07 PM said...

வசந்த் வந்தாச்சா?
உங்கள் குடும்பதார் நலமா?

அது சரி இவ்வளவு கஷ்ரப்பட்டு விடுமுறைக்குப்
போய் புத்தகம் வாங்கிப் படிக்க மட்டும் தானா?
வேறெதுவும் நடக்கவில்லையா?

மிக்க நன்றி உங்கள் ஆர்வத் தகவல்களுக்கு
டா .....பேராண்டி.

Trackback by ராமலக்ஷ்மி June 1, 2010 at 2:11 PM said...

மீண்டும் வசந்த்:)!

வருக!!

Trackback by Kala June 1, 2010 at 2:13 PM said...

வந்ததும் பரபரவென ஒரு இடுகை.
அதில் என்னை அண்ணனாக்கி

பார்ப்பதில் உனக்குள்ள மகிழ்ச்சி... \\\\

ஹேமா அண்ணன் என்று உண்மையைச்
சொன்னதுக்கு அவரால் தாங்க முடியவில்லை

அவர்மட்டும் உங்களை ஆன்டி சொல்லலாமா??
வசந்த அங்கிள் என்று சொல்லி இருந்தால்
இதயமே நின்றிருக்குமோ!!

Trackback by Discovery book palace June 1, 2010 at 2:16 PM said...

வணக்கம் ப்ரியமுடன் வசந்த் அவர்களே.. புத்தகம் வாங்கியதும் படித்துவிட்டு அதை பதிவிலும் கொண்டுவந்து மற்றவர்களும் படிக்க துணை புரியும் ஊக்குவிப்பு அற்புதம். தங்கள் பாரட்டும், டிஸ்கவரி புக் பேலஸ் பற்றிய அறிமுகமும் எனக்கு மிகுந்த உட்சாகத்தை கொடுக்கிறது. நன்றி... தொடர்வோம்.

Trackback by Subankan June 1, 2010 at 2:56 PM said...

Welcome back Thala :)

இப்படியான புத்தகங்களெல்லாம் இலங்கைக்கு வருவதேயில்லை :(. ஆ.வியும் குமுதமும்தான் புத்தக்ககடைகளில் கிடக்கின்றன :((

Trackback by Priya June 1, 2010 at 2:58 PM said...

வாங்க வசந்த், நலமா?

Trackback by பிரசன்னா June 1, 2010 at 3:10 PM said...

Welcome back அண்ணே..

Trackback by பாலா June 1, 2010 at 4:19 PM said...

ஊருக்கு போறதுக்கு முன்னாடி இருந்த உனக்கும்( உன் எழுத்துக்கும்) இப்போ உள்ள உனக்கும்(உன் எழுத்துக்கும்) ஏக வித்தியாசம் ? காரணம் என்ன வோ?

Trackback by Nanum enn Kadavulum... June 1, 2010 at 10:49 PM said...

welcome back ! Vasanth .

Trackback by ப்ரின்ஸ் June 2, 2010 at 1:35 AM said...

பகிர்வுக்கு நன்றி!!

Welcome back

Trackback by அன்புடன் மலிக்கா June 2, 2010 at 7:56 AM said...

வந்தாச்சா சகோ எப்படியிருக்கீங்க. வீட்டில் எல்லாரும் சுகமா.

பகிவு சூப்பர்.. அசத்துங்க...

Trackback by Discovery book palace June 3, 2010 at 8:47 AM said...

இப்போ எங்க இருக்கீங்க வசந்த். ஒரு நாளக்கு ஒரு ஊர் காட்டுது என்னோட ஹிட் லிஸ்ட்ல.

நண்பர் Subankan அவர்களுக்கு புத்தகம் சம்மந்தமாக என்னால் உதவ முடியும் . அவருக்கு சரியான லிங்க் கொடுக்கவும்.

நண்பர் சத்ரியன் காட்டும் மிகையான அன்பு மகிழ்ச்சியளிக்கிறது. என்னை பற்றி நீங்கள் எழுதியதற்கு அவரின் சந்தோஷத்தை பார்த்தீர்கள் அல்லவா.

Trackback by அக்பர் June 3, 2010 at 12:42 PM said...

நல்லதொரு புத்தக விமர்சனம் வசந்த்.

Trackback by அன்புடன் அருணா June 4, 2010 at 7:11 AM said...

Welcome back vasanth!

Trackback by ப்ரியமுடன்...வசந்த் June 4, 2010 at 11:42 AM said...

நலம் விசாரித்த அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்...