உஷா சாந்தாராம் - ஓவியர்

| April 6, 2010 | 43 comments |உஷா சாந்தாராம் கர்நாடகா பெங்களூரூவை சேர்ந்த ஃபைன் ஆர்டிஸ்ட் தற்செயலாக இவரின் ஓவியங்களை பார்க்க நேரிட்டது நான் என்னோட கிராமத்திற்க்கு போய்வந்த ஒரு உணர்வு அவ்வளவு அற்புதமாக ஓவியங்கள் வரைந்திருக்கின்றார்...

நான் ரசித்த அவரின் சில ஓவியங்கள் உங்களின் பார்வைக்கு...

இது மாதிரி பொண்ணு கிடைக்கணுங்க எவ்ளோ அழகான சிரிப்போட இருக்கும் ஒரு இளம்பெண்ணின் ஓவியம்...டபரா செட் காபி குடிக்கும் அப்பத்தா ...
கையில் முறம் வைத்து அரிசி கல் பொறுக்கும் அம்மா...அடிகுழாயில் தண்ணீர் பிடித்து துணி துவைக்கும் அம்மாயி...


இளநீர் வெட்டிகொடுக்கும் குப்புசாமி..


மாவரைக்கும் ஆட்டுரல்...


கிராமத்தில் இருக்கும் தோட்டத்தில் வெட்டிப்போட்ட தென்னை மரத்தில் உட்கார்ந்திருக்கும் பாட்டையா...


தண்ணீர் எடுக்க ஊரில் இருக்கும் தண்ணீர் தொட்டியில் தண்ணீர் பிடிக்க காலி பித்தளை குடத்துடன் நிற்கும் தங்கை...


மக் , டம்ளர் கூட இவ்ளோ அழகா?


ஹம்பி பில்லர்...


அமைதியான அழகு பதுமை...சேலை முந்தானையை ஏற்றி சொருகி துணி துவைக்கும் ஆச்சி...கிரிக்கெட் வீரர்...பள்ளியில் சைக்கிளுடன் நிற்கும் மாணவன் ....மனைவியோடு இருசக்கர வாகனத்தில் செல்லும் பக்கத்துவீட்டு அண்ணாசைக்கிளில் வைத்து இளநீர் விற்கும் ராமசாமி

இன்னும் இவரின் பல ஓவியங்கள் இந்த தளத்தில் விற்பனைக்கு கிடைக்கின்றன

இவரின் தளம் http://usha-shantharam.blogspot.com/
திருமதி உஷா சாந்தாராம்..

**********************************************************************************

ப்ரியமுடன் தொலைக்காட்சியின் அறிவிப்பு


நாளை முதல்(வியாழன்) இரண்டுமாத விடுமுறைக்கு இந்தியா செல்ல இருப்பதால் பதிவுலகத்திற்க்கு இரண்டுமாத விடுப்பு . நிறைய பேருக்கு சந்தோஷமா இருக்குமே அப்பாடா இவன் தொல்லை விட்டதுடா என்று இருக்கட்டும் இருக்கட்டும் இரண்டு மாதங்கள் மட்டும்தான் அப்புறம் மீண்டும் தொல்லை கொடுக்க வந்துவிடுவேன் இதுவரையிலும் என்னை பின் தொடரும் 307 பின்தொடர்பவர்களுக்கும் பின்னூட்டங்கள், சாட்களில் நட்பு கரம் நீட்டிய அனைவருக்கும் நன்றிகள் போய் வருகிறேன் டாட்டா பை பை...

**********


Post Comment

மாறுங்கள் இல்லை மாற்றப்படுவீர்கள் புரோகிதர்களே...

| | 64 comments |

முக்கிய குறிப்பு : இங்கு நான் எந்த மதத்தையோ அல்லது இனத்தையோ கொச்சைபடுத்த முயற்சிக்கவில்லை ...


புரோகிதர்களுக்கு மட்டும் எழுதிக்கொள்வது (அவர்கள் சார்ந்த சமுதாயத்திற்க்கு அல்ல)

காலம் காலமாக திருமணத்திற்க்கு புரோகிதர்களை வைத்து திருமணம் செய்வது நமது தமிழ் கலாச்சாரத்தில் ஊறிப்போய் இருக்கிறது.திருமணம் மட்டுமின்றி ஏனைய சடங்குகள் அனைத்திற்க்கும் புரோகிதர்களை வைத்து மந்திரம் ஓதி சடங்குகள் செய்து கொள்வது வழக்கமாகிவிட்டது...

எத்தனை பேர் அந்த மந்திரங்களை அர்த்தம் புரிந்து சொல்லியிருக்கிறோம் என்று தெரியவில்லை.ஒருவேளை அந்த மந்திரங்கள் புரிந்தவர்கள் சமஸ்கிருதம் அறிந்தவர்களாக இருக்கலாம்...ஆனால் சமஸ்கிருதமே என்னவென்று தெரியாத பாமர மக்கள் வீட்டு சடங்குகளிலும் இன்னும் இந்த சமஸ்கிருத மந்திரங்கள் சொல்வது ஏன்?

தமிழ் நாட்டில் தமிழர்கள் ஆளும் தமிழர்கள் வாழும் ஊரில் இன்னமும் சமஸ்கிருதத்திலயே மந்திரங்கள் ஓதப்படுவது ஏன் ஓய்?

இது மாற்றாததற்க்கு காரணம் இன்னும் தானே உசத்தியென்றும் தாங்கள் சொல்வதைத்தான் மற்றவர்கள் கேட்கவேண்டும் என்ற ஆணவமா? இல்லை மரபாக வந்ததை மாற்ற இயலாது என்று சாக்கு போக்கா? என்ன என்னவோ கண்டுபிடிச்சாச்சு இந்த விஞ்ஞான உலகத்தில் இந்த சமஸ்கிருதத்திற்க்கு தமிழ் அர்த்தம் கண்டு பிடிக்காமலா இருந்திருப்பார்கள்?

கண்டுபிடிச்சுருக்கான்யா தமிழன் நான் படிச்சதை சொல்றேன் கேளுங்க...சோமஹ ப்ரதமோ விவிதே கந்தர்வோ
விவித உத்ரஹ த்ரியோ அக்னிஸ்டே பதி
துரியஸ்தே மனுஷ்ய ஜாஹ

இந்த மந்திரத்தை திருமணம் நடத்திவைக்கிற புரோகிதர் மணப்பெண்ணை நோக்கி சொல்றார்.இதுக்கு அர்த்தம் சொன்னா இந்த மந்திரங்கள் சொல்லி திருமணம் முடிந்த மணப்பெண்களுக்கு வருத்தமாய்த்தான் இருக்கும் சொல்லித்தான் ஆகவேண்டியிருக்கிறது இந்த மணப்பெண் முதலில் சந்திரன் எனும் சோமனுக்கு மனைவியாய் இருந்தாள் இரண்டாவதாக கந்தர்வனுக்கு மனைவியாய் இருந்தாள் மூன்றாவதாக அக்னிக்கு மனைவியாய் இருந்தாள் நான்காவதாக இந்த பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் மணமகனுக்கு மனைவியாகப்போகிறாய்...

கேட்டீங்களாப்பா என்னதான் அவங்க எல்லாரும் கடவுள்களாக இருந்தாலும் மூன்றுபேருக்கு மனைவியாய் இருந்த ஒருவளை எப்படி ஒரு தன்மானம் உடைய மணமகன் திருமணம் முடிப்பது ? பிறந்ததிலருந்து பொத்தி பொத்தி பாதுகாத்து வளர்த்து எந்த களங்கமும் இல்லாத தன்னோட பொண்ணை ஒருத்தனுக்கு திருமணம் நடத்திவைக்கும் பெற்றோர்களுக்கு இதன் அர்த்தம் தெரிந்தால் கொதித்து போய்விடமாட்டார்களா ஓய்? இதைவிட இவ்வளவு வருடங்கழித்து எந்த ஆடவரின் இச்சைக்கும் அடிபணியாத முதல் முதலாக ஒரு ஆடவனுக்கு மனைவியாகப்போகிறவளுக்கு இதன் அர்த்தம் தெரிந்தால் அவ்வளவுதான் எரிந்து கொண்டிருக்கும் அதே அக்னியில் அந்த புரோகிதனை பொசுக்கிவிடமாட்டாளா?


இதுக்கு பதிலாக

இன்னார் மகளாய் பிறந்த இன்ன பெயருடைய நீ இன்னாருக்கு பிறந்த இன்ன பெயருடைய ஒருத்தருக்கு மனைவியாகப்போகிறாய் என்று கூறினால் போதாதா ஓய்?

நோக்கு எப்டி தெரியுன்றவாளுக்கு சொல்றேன் கேளுங்க...

விளக்க?உரை பெயர் : விவாஹ மந்த்ராத்த போதினி

எழுதியவர் : கீழாத்தூர் ஸ்ரீநிவாச ஆச்சாரியார் (பெயருக்கு பின்னால் சாதி பெயர் போடுறவங்களுக்கு முதலில் கருட புராண தண்டணை கொடுக்கணும் ஓய்)

பக்கம் : 22....

இதைவிட கொடுமை

தாய் தகப்பனுக்கு திவசம் கொடுக்கப்படும்பொழுது சொல்லப்படும் மந்திரம்...

தகப்பனுக்குதிவசம் கொடுக்கும்பொழுது சொல்ற மந்திரம்

யன்மே மாதா பிரலுலோப சரதி அனனு விருதா
தன்மே ரேதஹ பிதா விருங்க்தா ஆபுரண் யோப
பத்யதாம் ரங்கராஜ சர்மணே ஸ்வாஹா
ரங்கராஜ சர்மணே அஸ்மது பித்ரே இதம் நமம
கிருஸ்ண கிருஸ்ண கிருஸ்ண…

இதுக்கு அர்த்தம்

என்னோட அம்மா பத்தினியா இல்லாமல் வேறொருத்தருக்கு என்னை பெற்றிருந்தால் இந்த திவசத்திற்க்கு உரிமை கோரி உண்மையான என்னுடைய தகப்பன் வருவார் அப்படியில்லையென்றால் என்னுடைய அம்மாவின் கணவர் இந்த திவசத்தை பெற்றுக்கொள்ளட்டும்.. என்ன கரும மந்திரம்டா இது அப்பன் பேர் தெரியாதவன்னு அசிங்கப்படுத்துற மாதிரியில்ல இருக்கு...

இதுக்கு பதிலா அப்பா நான் இதுவரைக்கும் உன்னை இகழ்ந்து பேசியிருந்தாலோ இல்லை உனக்கு அவமானம் தரக்கூடிய வகையில் நடந்திருந்தாலோ அதற்க்காக என்னை மன்னித்து இந்த திவசத்தை ஏற்றுக்கொள்வாயாகன்னு சொன்னா போதுமே ஓய்...


அம்மாவுக்கு கொடுக்கிற திவசத்தில் சொல்ற மந்திரம் இது

என்மே மாதா ப்ரவது லோபசரதி
அன்னவ் வ்ரதோ தன்மே ரேதஹ
பிதா வ்ருந்த்ததாம் ஆபுரண்யஹா
அவபத்ய நாம….

என்னுடைய அம்மா என்னை யாருக்கு பெற்றாளோ தெரியவில்லை ஒரு நம்பிக்கையில் தான் அவளை என்னுடைய தகப்பனின் மனைவியாக கருதுகிறேன் அந்த அம்மாவிற்க்கு இந்த திவசம் போய் சேரட்டும் மானங்கெட்ட மந்திரம்டா இது சொல்றதுக்கே வாய் கூசுது...

இதுக்கு பதிலா அம்மா என்னை பத்து மாசம் சுமந்து பெற்றதற்க்கு ஈடு இணையாக நான் எதுவும் செய்யவில்லை அதற்க்காக என்னை மன்னித்து இந்த திவசத்தை ஏற்றுக்கொள்வாயாக இப்படி சொன்னால் போதாதா ஓய்...

நானும் இந்துமதத்தை சேர்ந்தவன்தான் இல்லையென்று சொல்லவில்லை அதற்க்காக இப்படி அபத்தமான மந்திரங்களை சொல்ல தன்மானம் இடங்கொடுக்கவில்லை முற்றிலும் சமஸ்கிருத மந்திரம் ஓதுவதை தவிருங்கள் ஓய்..இல்லை இந்த மந்திரங்களுக்கு வேறு அர்த்தங்கள் வைத்திருப்பீர்களானால் அதையே தமிழ் படுத்தி கூறுவதில் என்ன நஷ்டம் வந்துவிடப்ப்போகிறது உங்களுக்கு? இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இந்த சமஸ்கிருதத்தையே பிடிச்சு தொங்கிண்டு இருப்பேள் ஓய் ஒழுக்கமாக மரியாதையாக கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்வதை போலவே சடங்குகள் சம்பிரதாயத்திற்க்கும் தமிழில் மந்திரம் ஓதவும்... இல்லையேல் தமிழ் நாட்டை விட்டே ஒதுக்கி வைக்கப்படும் நிலைக்கு ஆளாகும் நிலை வெகு தூரம் இல்லை...நீங்கள் இல்லாமலே திருமணங்கள் நடக்கும் சூழ்நிலைகள் உருவாகலாம் ஓய்....உங்களுக்கு சமஸ்கிருதம் தெரியும் என்பதற்க்காக மற்றவர்கள் மீதும் அதை திணிக்காதீர்கள்...

மாறுங்கள் இல்லை மாற்றப்படுவீர்கள் புரோகிதர்களே...Post Comment

ஒருத்தியின் நிஜக்கதை...

| April 2, 2010 | 33 comments |
அனைவருக்கும் வணக்கம் என் பெயர் பொன்னி நான் பிறந்தது ரொம்ப பெரிய இடத்திலங்க எனக்கு எங்கூர்ல இருந்து 320 கி.மீட்டர் தள்ளி இருக்குற வேற இனத்தை சேர்ந்த ஊர்க்காரன் மேல காதல் வந்துடுச்சு அதனால ஓடி வந்துட்டேங்க..எங்க ஊரை விட இங்க என்னோட புகுந்த வீட்டுக்காரங்களும் அந்த ஊர் சனங்களும் என்னைய அன்பா கவனிச்சுகிட்டாங்க..ரொம்ப பாசமானவங்க நானும் அவங்களை அதே பாசத்தோட ரொம்பவும் சந்தோஷமா வச்சுட்டேங்க அதனால என்னைய அவங்களுக்கு ரொம்ப பிடிச்சுபோச்சு கோவில் கட்டாத குறையா என்னைய அன்போட பாத்துகிட்டாங்க....

நான் இங்க ஓடிவந்தது என்னோட பிறந்த வீட்டுக்காரவங்களுக்கும்,என்னோட இனத்துக்கும் பிடிக்கலை நான் இங்க வந்ததுல இருந்து அவங்க செலவம் குறைய ஆரம்பிச்சுடுச்சுன்னு பொலம்பினாங்க இதுக்காக என்னைய எப்படியாவது அவங்களோட மட்டுமே வச்சுக்கிடணும்ன்னு நினைச்சாங்க எங்க பிறந்த வீட்டு பெரியவனுங்க ரெண்டுபேரும் எப்பவும் அடிச்சுக்குவானுங்க ரெண்டு பேருக்கும் ஆகவே ஆகாது ஆனா என்னைய அவனுகளோட அவங்க வீட்லயே வச்சுகிடணும்ன்றதுல ரெண்டுபேரும் ஒரே குறிக்கோளா திரியுறானுங்கன்னா பாத்துக்கோங்க என் மேல எம்புட்டு பாசம் வச்சுருக்கானுங்கன்னு.....

எனக்கும் என்னோட புகுந்த வீட்டுக்காரங்க ஏன் என் மேல இவ்ளோ பாசம் வச்சுருக்கானுங்கன்னு தெரியலை ஆனா ஏதோ காரணம் இருக்குன்னு தெரிஞ்சுச்சு கொஞ்ச நாள் கழிச்சு அதுவும் தெரிஞ்சுச்சு இங்க நான் வந்த பிறகு இவங்களோட செல்வமும் கணிசமா சுபிட்சமாயி இருக்கு அதனாலதான் என் மேல ரொம்ப ரொம்ப அன்பா இருக்குறானுங்கன்னு தெரிஞ்சுட்டேன்..நான் ஒரு நாள் என் புகுந்த வீட்டுக்காரவங்க கிட்ட என் பொறந்த வீட்டுக்கு போகணும்ன்னு சொன்னேங்க முடியாதுன்னுட்டாங்க அவங்க .. நானும் சொல்லி சொல்லி பார்த்தேன் கேட்கலை விட்டா ஓடிடுவேன்னு என்னைய ஒரு பெரிய பாசக்கார இடத்துல வச்சு கட்டிப்போட்டானுங்க...இது தெரிஞ்ச என் பொறந்த வீட்டுக்காரவங்க புகுந்த வீட்டுக்காரவங்க மேல கோர்ட்ல கேஸ் போட்டுட்டாங்கங்க...

இன்னும் கேஸ் முடியலைங்க ரெண்டு வீட்டுக்காரய்ங்களும் ரொம்ப செல்வாக்கானவங்களா இருக்குறதால ரொம்ப நாளா இந்த கேஸ் நடந்துட்டு இருக்குங்க இன்னும் முடிஞ்ச பாடு இல்ல...எனக்கும் என்னோட புகுந்த வீடு மேல கோபம் இருந்தாலும் அந்த ஊர்க்காரவங்க என்மேல மரியாதை வச்சுருந்ததுனால எனக்கு பிடிச்சப்போ மட்டும் போய் பார்த்துட்டு வர்றது உண்டு கொஞ்ச நாள்மட்டும் தான் பிறகு இங்கயே இருந்திடுவேன்...ஆனா எங்க புகுந்த வீட்டு இனத்துக்காரங்க என்னோட பொறந்த ஊர்லயும் கொஞ்சம் பேர் இருக்காங்க..பொழைக்க வந்தவங்க போல பாவம் என்னோட புகுந்த வீட்டுக்காரவங்க செய்த தப்புக்கு அந்த ஊர்ல பொறந்தவங்களும் சேர்த்து தண்டனை அனுபவிக்கிறாங்க நிறைய பேரோட உசிரே போயிடுச்சு...அந்த அளவுக்கு என் பொறந்த வீட்டுக்க்ரவனுங்க கோபக்காரனுங்களா இருந்தாலும் மூளையில்லாத பசங்க, என் புகுந்த வீட்டுக்கார பசங்களுக்கு அறிவு ஜாஸ்தின்றதாலதான் இங்க வேலைக்கு வச்சுருக்கானுங்க...


கொஞ்ச நாள் மட்டுமே வந்து போறதாலும் என்னோட புகுந்த வீட்டு செல்வம் குறைஞ்சு போச்சுனதும் புகுந்த வீட்ட சேர்ந்த பெரியவர் உண்ணாவிரதமே இருந்தார்ன்னா பாத்துக்கங்க ... எனக்கும் புகுந்த வீட்டுக்கு போன பொறவு பிறந்த வீட்லயே இருக்குறது தப்புன்னு தெரியுது..இப்போ எனக்கு ஒரே குழப்பமா இருக்குங்க நான் புகுந்த வீட்லயே இருந்திடறதா இல்லை பொறந்த வீட்டுக்கே போயிடறதான்னு...நீங்களே ஒரு முடிவை சொல்லுங்க கோர்ட் இப்போதைக்கு தீர்ப்பு சொல்லபோறதில்லை..பாவம் என் புகுந்த வீட்டுகாரவங்களும் அந்த ஊர் சனங்களும் என்னோட பாசம் கிடைக்காம தவிச்சுபோய் கிடக்காங்க....

காவிரிக்கு பொன்னின்ற பெயரும் இருக்குன்னு உங்களுக்கு சொல்லணுமா என்ன?

Post Comment