யார் மனசுல என்ன?

| February 26, 2010 | |


நிருபர் : கலைஞர் அவர்களே இந்த நிமிடம் தங்கள் மனசில் தோன்றுவதை கூற முடியுமா?

கலைஞர் : என் மகன் ஸ்டாலின் என்னை முதலமைச்சர் பதவியில இருந்து ராஜினமா செய்ய சொல்லி மிரட்டுறார் அதனால இப்போவே ராஜினாமா பண்ணிடலாமான்னு யோசிச்சுட்டு இருக்கேன்...
நிருபர் : துணை முதல்வர் அவர்களே இந்த நிமிடம் தங்கள் மனதில் தோன்றுவது என்ன?

மு.க.ஸ்டாலின் : முதலமைச்சர் ஆன பிறகு அழகிரிய கட்சியவிட்டு தூக்கிடலாமான்னு யோசிக்கிறேன்....


நிருபர் : அமைச்சர் அழகிரி அவர்களே இந்த நிமிஷம் உங்க ம்னசில என்ன நினைக்கிறீங்க?

மு.க.அழகிரி : அப்பாவுக்கு பிறகு சொத்தை மட்டும் பிரிக்கலாமா இல்லை தமிழ்நாட்டையும் சேர்த்து பிரிச்சுடலாமான்னு யோசிக்கிறேன்...


நிருபர் : செல்வி ஜெயலலிதா மேடம் இந்த நிமிடம் உங்க மனசுல என்ன நினைக்கிறீங்க?

செல்வி.ஜெயலலிதா : இப்ப இருக்குற சூழ்நிலையில அதிமுகல இருந்து நிறைய பேர் தி.மு.க.வில இணையிறதைப் பார்த்தா என்னோட நிஜ வாழ்க்கை மாதிரியே அரசியல்லயும் எனக்கு வாரிசு இல்லாம அநாதையாயிடுவேனோன்னு பயமா இருக்கு..
நிருபர் : சூப்பர் ஸ்டார் சார் இந்த நிமிடம் உங்க மனசுல என்ன நினைக்கிறீங்க...

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் : நடக்கும் மிரட்டல் அநியாயங்களை பார்த்தால் 1996ல் அரசியலுக்கு வராம போனதை நினைச்சு வருத்தப்படறேன்...

நிருபர் : விஜயகாந்த் அவர்களே இந்த நிமிடம் உங்க மனசுல என்ன நினைக்கிறீங்க?

திரு.விஜயகாந்த் : கட்சி போகிற போக்கை பார்த்தா இதுவரைக்கும் சம்பாதிச்சது எல்லாம் ஒண்ணும் மிஞ்சாது போல 2016ல கூட ஆட்சிய பிடிக்க முடியாது பேசாம எஞ்சினியரிங் காலேஜ்,திருமண மண்டபம் , நடிகர் சங்க தலைவர் இதோட இருந்திருந்திருக்கலாம்ன்னு தோணுது...

நிருபர் : அஜீத் சார் உங்க மனசில இந்த நிமிஷம் என்ன நினைக்கிறீங்க?

அஜீத்: வாய்க்கு போடுற பூட்டு எந்த கடையிலயாவது கிடைக்குமான்னு யோசிச்சுட்டு இருக்கேன்...


நிருபர் : விஜய் சார் உங்க மனசுல இந்த நிமிடம் என்ன நினைச்சுட்டு இருக்கீங்க

விஜய் : இப்போ நடிக்கிற என்னோட அம்பதாவது படம் சுறா படமாவது 50 நாள் ஓடுமா ஓடாதான்னுதான்...
இப்போ நீங்க இந்த நிமிடம் என்ன நினைக்கிறீங்கன்னு சொல்லவா? இவனெல்லாம் ஒரு ஆளு நம்ம போஸ்ட்டுக்கு வாறதுமில்ல கமெண்டும் போடறதில்ல இவனோட போஸ்ட்டுக்கு நம்ம ஓட்டும் போட்டு கமெண்டும் போடணுமாக்கும் சரிதான?

Post Comment

40 comments:

Trackback by சீமான்கனி February 27, 2010 at 2:00 AM said...

me the 1 st...

//இதெல்லாம் ஒரு போஸ்ட் இதுக்கு நம்ம ஓட்டும் போட்டு கமெண்டும் போடணுமாக்கும் //

சே.....ச்சே.. இல்லவே இல்லையே...

Trackback by சீமான்கனி February 27, 2010 at 2:00 AM said...

me the 1 st...

//இதெல்லாம் ஒரு போஸ்ட் இதுக்கு நம்ம ஓட்டும் போட்டு கமெண்டும் போடணுமாக்கும் //

சே.....ச்சே.. இல்லவே இல்லையே...

Trackback by நசரேயன் February 27, 2010 at 2:14 AM said...

//இவனெல்லாம் ஒரு ஆளு நம்ம போஸ்ட்டுக்கு வாறதுமில்ல கமெண்டும் போடறதில்ல இவனோட போஸ்ட்டுக்கு நம்ம ஓட்டும் போட்டு கமெண்டும் போடணுமாக்கும் சரிதான?//

இல்லை.. ஆட்டோ வரதானுன்னு தைரியமா ?

Trackback by Unknown February 27, 2010 at 3:24 AM said...

நட்புடன் நான்: வசந்த் இப்ப நீங்க என்னா நினைக்கிறீங்க உங்க மனசுல

ப்ரியமுடன் நீங்க: சீக்கிரம் கல்யாணத்த செய்து வச்சா சந்தோஷமுன்னு

Trackback by சுசி February 27, 2010 at 3:29 AM said...

கண்டிப்பா அப்படி நினைக்கல உ.பி..

நாங்க வேற வேற வேற நினைக்கிறோம்.

Trackback by எல் போர்ட்.. பீ சீரியஸ்.. February 27, 2010 at 5:28 AM said...

haa haa :)))

Trackback by ஸ்ரீராம். February 27, 2010 at 5:57 AM said...

ஜெயலலிதா : நானும் பேசாம போய் தி. மு. க. ல சேர்ந்துடலாமான்னு தோணுது...ஆனா கலைஞர் வெளில வந்து அ.தி.மு.க தலைவர் ஆயிடுவாரோன்னு பயமா இருக்கு.

Trackback by சத்ரியன் February 27, 2010 at 6:02 AM said...

//நிருபர் : அமைச்சர் அழகிரி அவர்களே இந்த நிமிஷம் உங்க ம்னசில என்ன நினைக்கிறீங்க?

மு.க.அழகிரி : அப்பாவுக்கு பிறகு சொத்தை மட்டும் பிரிக்கலாமா இல்லை தமிழ்நாட்டையும் சேர்த்து பிரிச்சுடலாமான்னு யோசிக்கிறேன்...//

வசந்த்,

இதுதான்யா டாப்பு!

ஆமா தெரியாமத்தான் கேக்கறேன் மெய்யாலுமே உனக்கு ஒன்னுமேத் தெரியாதா?

அதான் தென்மாவட்டங்கள் அழகிரிக்குன்னு பங்கு பிரிச்சிட்டாய்ங்களே அப்பு.!

கெழடு மண்டைய போட்டதும்... ஸ்டாலின் மண்டலம், அழகிரி மண்டலம்னு அறிவிப்பு வரும்... அதுவரைக்கும் ’கப்சிப்”.

Trackback by cheena (சீனா) February 27, 2010 at 6:04 AM said...

அன்பின் வசந்த்

நல்லாவே இருக்கு - கொல்ஸ்ட்ரால் ஜாஸ்தின்னு நினைக்கிறேன் - ஆட்டோக்காரங்க அட்ரஸ் விசாரிக்கறாங்க - பாத்துக்கங்கப்பா

Anonymous — February 27, 2010 at 6:37 AM said...

அஜித்தும் விஜயும் கூட கலக்கறாங்கப்பா :)

Trackback by பனித்துளி சங்கர் February 27, 2010 at 7:39 AM said...

நிருபர் : ♥ப்ரியமுடன்...வசந்த் அவர்களே இந்த நிமிடம் தங்கள் மனசில் தோன்றுவதை கூற முடியுமா?

நல்லா இருக்கு நண்பரே . இப்படியெல்லாம் எழுதுவதற்கு ரூம் போட்டு யோசிப்பிங்களோ ?

Trackback by சைவகொத்துப்பரோட்டா February 27, 2010 at 7:48 AM said...

இல்லவே இல்லை, நான் கமெண்ட் & ஓட்டு ரெண்டுமே போட்டாச்சு :))

Trackback by எல் கே February 27, 2010 at 8:15 AM said...

நிருபர் : ♥ப்ரியமுடன்...வசந்த் அவர்களே இந்த நிமிடம் தங்கள் மனசில் தோன்றுவதை கூற முடியுமா?

வசந்த் : எந்த நிமிஷம் ஆட்டோ வரும்னு தெரியலையே

Trackback by VISA February 27, 2010 at 8:27 AM said...

முக்கியமான ஆள விட்டுட்டீங்களே ராமதாஸ். எவன் வீட்டு பாத்ரூமில் எல்லாம் புகை வருகிறது என்று பார்த்து அங்கு போய் சிகிரெட் புடிப்பவர்களை கையும் களவுமாக பிடித்து எப்படியாவது சிகிரெட் அரசியல் செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருப்பார்.

Trackback by ஜெட்லி... February 27, 2010 at 9:02 AM said...

சுறாவை பத்தி அவர் ஏன் கவலை படனும்...
பார்க்குற நாம தான் கவலை படனும்...:((

Trackback by தமிழ் உதயம் February 27, 2010 at 9:17 AM said...

ப்ரியமுடன் வசந்தக்கு நிகர் ப்ரியமுடன் வசந்தே.

Trackback by Mouthayen Mathivoli February 27, 2010 at 10:01 AM said...

vadiveluvai vittutteengale?

Trackback by Unknown February 27, 2010 at 10:08 AM said...

சீ சீ..., இல்லங்க

Trackback by Prathap Kumar S. February 27, 2010 at 10:17 AM said...

////இவனெல்லாம் ஒரு ஆளு நம்ம போஸ்ட்டுக்கு வாறதுமில்ல கமெண்டும் போடறதில்ல இவனோட போஸ்ட்டுக்கு நம்ம ஓட்டும் போட்டு கமெண்டும் போடணுமாக்கும் சரிதான?//

அது எப்படி ராசா கரிட்டா கண்டுபிடிச்ச...

பார்த்து சூதனமா இருந்துக்கப்பு...அவ்ளோதான் சொல்லுவேன்...

Trackback by க.பாலாசி February 27, 2010 at 10:18 AM said...

உண்மையாவே... இப்டித்தாங்க நெனப்பாங்க.... விஜயகாந்தும், ஜெ...வும்... நச்...

Trackback by Kala February 27, 2010 at 10:26 AM said...

பிரியமானவன்
நிருபர் : ஏன் இன்னும் கல்யாணம்
ஆகாமல்.......!!!???
உங்களை ஏமாற்றிய பெண்
நீங்கள் ஏமாறிய பெண் என்று
யாரவது உண்டா ஜயா?


ஜயா வசந்த் : அதெல்லாம் நேரம்
காலம் வரும் போது
தானாக வந்து காலில்
விழும்,நான் விழுவதற்கு
நேரமில்லை....

ஏமாந்துமிருக்கலாம்.....
ஏமாற்றியுமிருக்கலாம்....
நான் நொந்து போய்
இருக்கின்றேன் இந்தக்
கேள்வியெல்லாம்
தேவையா?

Trackback by அண்ணாமலையான் February 27, 2010 at 10:44 AM said...

ரைட்டு

Trackback by rajamelaiyur February 27, 2010 at 11:27 AM said...

ஜாகுவார் தங்கம் : ஓவரா பில்ட் அப் குடுத்தும் popular அகமுடியலையே ..

திருமாவளவன் : அஜித் பிரச்னை ய வச்சு கொஞ்சநாள் ஓட்டலாம் னு பாத்தா முதல்வர் கெடுதுடர்யே..

Trackback by ஹேமா February 27, 2010 at 1:00 PM said...

வசந்து...யார் மனசில என்ன ?தலைப்பே அசத்தல்.ஆனாலும் உலகத்திலேயே பெரிய கஸ்டமான வேலை இது !மனசுக்குள்ள புகுந்து கிளறினாலும் சிடைக்காத ஒண்ணு !சும்மா நீங்க ஒண்ணு சொல்ல சம்பந்தப்பட்டவங்க வேற ஒண்ணுதான் நினைச்சிருப்பாங்க !

Trackback by அமுதா கிருஷ்ணா February 27, 2010 at 1:18 PM said...

கரெக்டான கணிப்பு....

Trackback by பா.ராஜாராம் February 27, 2010 at 2:41 PM said...

:-))

Trackback by சிநேகிதன் அக்பர் February 27, 2010 at 5:31 PM said...

அருமை வசந்த்.

நான் வேற ஒன்னு நினைக்கிறோம். நீங்க சொன்ன மாதிரி இல்லை.

Trackback by வெற்றி February 27, 2010 at 6:26 PM said...

//இப்போ நீங்க இந்த நிமிடம் என்ன நினைக்கிறீங்கன்னு சொல்லவா? இவனெல்லாம் ஒரு ஆளு நம்ம போஸ்ட்டுக்கு வாறதுமில்ல கமெண்டும் போடறதில்ல இவனோட போஸ்ட்டுக்கு நம்ம ஓட்டும் போட்டு கமெண்டும் போடணுமாக்கும் சரிதான?//

இதுவரை நினைக்கல..இப்போ நினைக்க ஆரம்பிச்சுட்டேன்..இனிமேல் நீங்க என் ஒவ்வொரு பதிவுக்கும் கமெண்ட்,ஓட்டு போட்டால் மட்டுமே உங்களுக்கு பிரதி உபகாரம் செய்யப்படும் :)

Trackback by தேவன் மாயம் February 27, 2010 at 7:26 PM said...

வசந்துக்கு நான் என்ன சொல்ல?

Trackback by அன்புடன் நான் February 27, 2010 at 7:55 PM said...

சரியாத்தான்... சொல்லுறிக

Trackback by ஸாதிகா February 27, 2010 at 9:47 PM said...

அபாரமான கறபனை!

Trackback by சாந்தி மாரியப்பன் February 27, 2010 at 11:05 PM said...

வசந்த்.. நல்ல கற்பனை வளம் உங்களுக்கு..

எதுக்கும் ஜாக்கிரதையா இருந்துக்கங்க :-))))

Trackback by Starjan (ஸ்டார்ஜன்) February 27, 2010 at 11:46 PM said...

கரெக்டா சொல்லிருக்கீங்க வசந்த் . நான் உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்.

கிரிக்கெட் - தொடர்பதிவு ...

Trackback by புலவன் புலிகேசி February 28, 2010 at 6:14 AM said...

//சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் : நடக்கும் மிரட்டல் அநியாயங்களை பார்த்தால் 1996ல் அரசியலுக்கு வராம போனதை நினைச்சு வருத்தப்படறேன்...//

ஹா ஹா ஹா...இவுரு ஒரு காமெடி பீசுங்க...

Trackback by settaikkaran February 28, 2010 at 8:43 AM said...

நல்லாத்தானே போயிட்டிருக்கு??????

(இந்த மாதிரி பதிவுலே ஒரு பின்னூட்டம் போட்டு, ஓட்டையும் குத்திரலாம். பின்னாலே உதவும்) -
இது நான் நினைச்சதுங்க! நெசமா....! ;-)))

Trackback by அத்திரி February 28, 2010 at 3:59 PM said...

பாரினுக்கு ஆட்டோ வராதுன்ற தைரியம்..........

கலக்கல்

Trackback by திவ்யாஹரி February 28, 2010 at 5:24 PM said...

//நிருபர் : சூப்பர் ஸ்டார் சார் இந்த நிமிடம் உங்க மனசுல என்ன நினைக்கிறீங்க...

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் : நடக்கும் மிரட்டல் அநியாயங்களை பார்த்தால் 1996ல் அரசியலுக்கு வராம போனதை நினைச்சு வருத்தப்படறேன்...//

இது தாங்க உண்மையா கலக்கல்..

Trackback by விக்னேஷ்வரி February 28, 2010 at 9:19 PM said...

ஹாஹாஹா... எல்லாரோட மைண்ட் வாய்ஸும் நல்லாருக்கு வசந்த்.

Trackback by Thenammai Lakshmanan February 28, 2010 at 10:39 PM said...

வெளி நாட்டுல இருகோம்னு தைரியமா வசந்த்

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 1, 2010 at 1:30 AM said...

நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றிகள்.....!