வலைப்பதிவராகிறார் விஜய்

| January 11, 2010 | |

வணக்கம் விஜய் சார் எப்படியிருக்கீங்க?

நான் நல்லா இருக்கேன் சன் டிவி புண்ணியத்தில...


இப்போ நாங்க உங்கள ஒரு வலைப்பதிவாளரா சந்திக்கிறதுல மிக்க மகிழ்ச்சி என்ன திடீர்ன்னு வலைப்பதிவு ஆரம்பிக்கபோறேன்னு அறிக்கை விட்ருக்கீங்க என்ன சமாச்சாரம்?


நான் என் வழியில போயிட்டு இருந்தேன் இந்த வலைப்பதிவர்கள் எல்லாம் என்னை சீண்டிப்பாக்குறாங்க அதான் அவங்களுக்கு போட்டியா நானும் வந்திட்டேன்...

சரிங்க விஜய் சார் திடீர்ன்னு வலைப்பதிவாளராயிட்டீங்க இப்போ இங்க உங்களோட திறமையெல்லாம் எப்படி காட்டப்போறீங்க ?

முதல்ல மகேஷ் பாபு தெலுங்குல வலைப்பதிவு எழுதுறதா கேள்விப்பட்டேன் இப்போ முதல் வேலையா அவர் எழுதுன பதிவுகள எது அவருக்கு அதிக ஹிட்ஸ் வாங்கி கொடுத்துச்சோ அந்த பதிவ தமிழ்ல மொழிபெயர்த்து வெளியிடப்போறேன்.

இங்கேயுமா சார்?

இதுல என்ன இருக்கு அதுக்கு அவருக்கு பணம் கொடுத்து காப்பிரைட்ஸ் வாங்கிக்கப்போறோம் அவ்வளவுதானே..

படம் மாதிரியே பதிவும் ஊத்திக்கிச்சுன்னா என்னாபண்ணுவீங்க விஜய் சார்?

சும்மாவே என்னோட பேர் போட்டு இது மாதிரி ஒரு மொக்கை பதிவு போட்டாலும் 500 ஹிட்ஸ் வருதாமே, என்னோட பேரை போட்டதும் என்னைய டார் டாரா கிழிக்கிறதுக்கு ஆளிருக்கும்போது எனக்கென்ன கவலை இப்போ நானே எழுதறேன்னு சொன்னா சும்மா விடுவாங்களா என்ன ?,ரொம்ப சிம்பிள் படத்துக்கும் பதிவுக்கும் சின்ன வித்தியாசம் அங்க படம் ஓட்ட காசு கொடுப்போம் இங்க பதிவு ஓட்ட காசு கொடுப்போம் சென்னையில இருக்கிற ஒரு இருபது முப்பது பிரவுசிங் செண்டர்க்கு பணம் கொடுத்தா முடிஞ்சுச்சு ஒரு நாளைக்கு 2000 ஹிட்ஸ் கன்ஃபர்ம்...

அதானே சார் நீங்க யாரு?

நல்லவேளை சாரு நீங்க யாருன்னு கேக்காம விட்டீங்களே ...

வெள்ளித்திரையில உங்களுக்கு ஒரே ஒரு போட்டியாளர்தான் இருந்தார் ஆனா இந்த வலைப்பதிவில் நிறைய போட்டியாளர்கள் இருக்காங்களே இவங்கள எப்படி சமாளிக்க போறீங்க?

ஆளுக்கு ஒரு ஸ்டைல் வச்சு பட்டைய கிளப்புறாங்க ..இருந்தாலும் எவ்வளவோ பண்ணிட்டோம் இதப்பண்ணமாட்டோமா?

சரிவிடுங்க சினிமால இளையதளபதின்னு போட்டுட்டீங்க வலையுலகம் வந்தா உங்களுக்கு முன்னாடி என்ன அடைமொழி போட்டுக்கப்போறீங்க?

இப்போ இங்க ஃபேமஸா இருக்குறது கார்க்கிதானே அதனால இளைய கார்க்கின்னு போட்டுக்கிறேனே...

அதுசரி சினிமால திரிஷாவோட காதல்ன்னு சொல்லி எப்படியோ காலத்த ஓட்டிட்டீங்க இங்க என்ன பண்ண போறீங்க?

இங்கயும் புதுசா ஒரு பெண்பதிவாளர மும்பையில இருந்து இறக்குமதி பண்ணி அவருக்கும் எனக்கும் காதல்ன்னு இமேஜ் கிரியேட் பண்ணி ஓட்டிட மாட்டோமா?

சரிங்க சார் ஒரு விஷயம் சினிமால இல்லாத ஓட்டுன்ற ஒருவிஷயம் இருக்கே அதுக்கு என்ன பண்ணப்போறீங்க எப்படி ஒட்டு வாங்க போறீங்க?

அரசியல்ல என்ன பண்றாங்களோ அதேதான் எனக்கு ஓட்டு போடுற பதிவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட பணம் கொடுக்கலாம்ன்னு ஐடியா இருக்கு அது எங்கப்பா பாத்துப்பார்...

இங்க கவிதை,கதை இதெல்லாம் எழுதுனாத்தான் பதிவர்ன்னு ஒத்துக்கிடுவாங்க அதுக்கு என்ன பண்ணபோறீங்க ?

சினிமாவில நடிக்காமலே நடிகர்ன்னு ஒத்துகிட்டவங்கதானே பதிவர்ன்னும் ஒத்துக்கிடுவாங்க...கதை இலாகாவா பேரரசு பாத்துப்பார், கவிதை கபிலன எழுதிகொடுக்க சொல்லிடுவோம்...

அதுகூட நீங்க சொந்தமா எழுத மாட்டீங்களா சார்?

ஹிஹிஹி எல்லாரும் சொந்தமா எழுதணும்ன்னு நினைக்கிறது சரி ஆனா எனக்கு எப்படி நடிக்க தெரியாதோ அதே போல எழுதவும் தெரியாதே அதான் இவங்களோட உதவி...

இன்னும் நிறைய விசயங்கள் பண்ணப்போறாராம்,பிறகு பின்னூட்டம் விமர்சனம் சினிமா இவை பற்றிய இந்த பேட்டியின் தொடர்ச்சி அடுத்த பதிவில்....தொடரும்...

(விஜய் ரசிகர்கள் கண்டுக்காதீங்க)
Post Comment

60 comments:

Trackback by M.S.R. கோபிநாத் January 12, 2010 at 1:45 AM said...

ஓட்டு போட்டாச்சுங்கண்ணா..

Trackback by Priya January 12, 2010 at 1:52 AM said...

wow, very intersting!
ஆனாலும் நம்ம விஜய வச்சி இப்படியெல்லாம் காமெடி பண்ணக்கூடாது:-)

Anonymous — January 12, 2010 at 2:59 AM said...

ஜிமெயில் திரும்ப கிடைச்சிருச்சா ?

Trackback by Paleo God January 12, 2010 at 3:43 AM said...

ஏன் ஏன் ஏன்...

//விஜய் ரசிகர்கள் கண்டுக்காதீங்க//

இன்னிக்கு கும்மிதான்...::))

Trackback by ஹேமா January 12, 2010 at 3:52 AM said...

வசந்து.......இனித்தான் நல்ல உதை இருக்கு உங்களுக்குப் பாருங்க.விஜய் ரசிகர்களின்னும் கவனிக்கலைங்கோ !நாளைக்கு ஒழுங்கா வேலைக்குப் போய்டுங்க.

சைட் அடிக்கிற பொண்ணை பாருங்க.அம்மாகிட்ட சொல்லிட்டீங்களா.இப்பிடி ஒரு பொண்ணுதான் வேணும்ன்னு.

Trackback by முனைவ்வ்வர் பட்டாபட்டி.... January 12, 2010 at 4:22 AM said...

இப்படி ஒரு பதிவைப்போட்டு விஜய...Sorry Sorry...."Dr.விஜய" கிழிக்கலாமுனு முடிவு பண்ணிட்டீங்களா?..

Trackback by Subankan January 12, 2010 at 6:08 AM said...

டாக்டர் பாவமய்யா

ஆனாலும் எவ்வளவோ தாங்கிட்டார், இதத் தாங்கமாட்டாரா?

Trackback by cheena (சீனா) January 12, 2010 at 6:34 AM said...

அன்பின் வசந்த்

ம்ம்ம் நகைச்சுவை - இப்பொ விஜய கலாய்க்கற காலம்

ஜமாய்ங்க

நல்வாழ்த்துகள் வசந்த்

Trackback by பெசொவி January 12, 2010 at 6:52 AM said...

உங்க பேவரைட்டே பஞ்ச் டயலாக் ஆச்சே...ரெண்டு அவுத்து விடுங்க?

புத்தகத்துல போட்டா பதிப்பு........இப்ப பதிவுக்குத்தான் மதிப்பு.
பதிவை இணைக்கிறது தமிழ் மணம்.....மொக்கை போடறது என் குணம்.

Anonymous — January 12, 2010 at 7:02 AM said...

NO COMMENTS...

Trackback by Unknown January 12, 2010 at 7:12 AM said...

எதுனா சொல்லனுமா என்னா

Trackback by கலையரசன் January 12, 2010 at 7:18 AM said...

நல்லாயிருக்குப்பா... ஆனா இதை எழுதியது

நீயா?

நீயா??


நீயா????

Trackback by Unknown January 12, 2010 at 7:20 AM said...

நீங்களே ஐடியா குடுத்துடுவீங்க போலருக்கே?

Trackback by வெற்றி January 12, 2010 at 8:13 AM said...

அவர் நடிச்ச படத்தோட பேர உங்க பேருக்கு முன்னால வச்சிட்டு இப்படிலாம் பண்ணா நல்லாவா இருக்கு :)) (சும்மா)

நல்லாவே கலாய்ச்சிருக்கீங்க..
ஏங்க நடுவுல சாருவ உள்ள இழுத்து வம்பிழுக்குறீங்க..

//இப்போ இங்க ஃபேமஸா இருக்குறது கார்க்கிதானே அதனால இளைய கார்க்கின்னு போட்டுக்கிறேனே...//

:))

Trackback by Tharshy January 12, 2010 at 8:14 AM said...

எப்பிடி சார் இப்பிடியெல்லாம் யோசிக்கிறீங்க...பாவம் ஒரு மனுசன இப்பிடியா கொல்றது...ஆனாலும் அருமையான நகைச்சுவை...யாராயாவது மொக்கயாக்கினாதான் நமக்கெல்லாம் சிரிப்பே வருது...:)

Trackback by திவ்யாஹரி January 12, 2010 at 8:40 AM said...

ஏன் யாருமே பின்னூட்டமிடலன்னு யோசிச்சப்ப தான் ஒரு உண்மை புரிஞ்சிது.. ஒவ்வொரு வரியும் நல்ல இருக்கும் போது அதையே எத்தன முறை சொல்றதுன்னு யாரும் சொல்லல போல.. எப்படியோ விஜய் பேர சொன்னதால நீங்களும் நிறைய வோட்ட வாங்க வாழ்த்துக்கள்.. பாவம் விஜய்..

Trackback by திவ்யாஹரி January 12, 2010 at 8:42 AM said...

குஷி மும்தாஜ் மாதிரி "ஐயோ பாவம்.." ன்னு தான் தோணுது.

Trackback by சங்கர் January 12, 2010 at 8:42 AM said...

//இப்போ இங்க ஃபேமஸா இருக்குறது கார்க்கிதானே அதனால இளைய கார்க்கின்னு போட்டுக்கிறேனே//

:))))

Trackback by பின்னோக்கி January 12, 2010 at 8:43 AM said...

ஒருத்தரு அங்க ராமராஜன விட மாட்டேங்குறாரு. நீங்க விஜய் ?. தொடரும் வேற.. நடத்துங்க.

Trackback by வரதராஜலு .பூ January 12, 2010 at 9:07 AM said...

செம கலக்கல்

விரைவில் இதன் தொடர்ச்சியினை எதிர்பார்க்கிறேன்.

Trackback by rajamelaiyur January 12, 2010 at 9:12 AM said...

//ஹிஹிஹி எல்லாரும் சொந்தமா எழுதணும்ன்னு நினைக்கிறது சரி ஆனா எனக்கு எப்படி நடிக்க தெரியாதோ அதே போல எழுதவும் தெரியாதே அதான் இவங்களோட உதவி.//

100 சதவிதம் சரி

Trackback by தமிழ் உதயம் January 12, 2010 at 9:25 AM said...

"வருங்கால முதல்வர் வலைப்பதிவாகிறார்." ன்னு தான் நீங்க சொல்லி இருக்கணும.

Trackback by pudugaithendral January 12, 2010 at 9:28 AM said...

:)))

happy pongal vasanth

Trackback by ஷாஜி January 12, 2010 at 10:01 AM said...

Good Creativity....

Trackback by முனைவர் இரா.குணசீலன் January 12, 2010 at 10:18 AM said...

முதல்ல மகேஷ் பாபு தெலுங்குல வலைப்பதிவு எழுதுறதா கேள்விப்பட்டேன் இப்போ முதல் வேலையா அவர் எழுதுன பதிவுகள எது அவருக்கு அதிக ஹிட்ஸ் வாங்கி கொடுத்துச்சோ அந்த பதிவ தமிழ்ல மொழிபெயர்த்து வெளியிடப்போறேன்.//

அடக்கொடுமையே..

வலையுலகம் மேல இவருக்கு ஏன் இவ்வளவு கோபம்..
இங்கேயுமா?

Trackback by S.A. நவாஸுதீன் January 12, 2010 at 10:35 AM said...

ஹா ஹா ஹா. வசந்த் நீங்களே உங்க தளபதியை..........

இதுக்கு தண்டனையா ஒரே நாளில் வில்லு இருமுறை, குருவி இருமுறை தொடர்ந்து பார்க்கனும் (நோ இண்டர்வெல்).

Trackback by சீமான்கனி January 12, 2010 at 10:39 AM said...

//அரசியல்ல என்ன பண்றாங்களோ அதேதான் எனக்கு ஓட்டு போடுற பதிவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட பணம் கொடுக்கலாம்ன்னு ஐடியா இருக்கு அது எங்கப்பா பாத்துப்பார்...//
இது கண்டிப்பா நடக்கும்...ஆஹா...மாப்ளே...ஏன்பா இந்த விபரீத ஆசை...ஏது ஏது சின்ன புள்ளைக சந்தோசமா இருக்குறது பிடிக்கலையாமா அவருக்கு??

Trackback by Deepan Mahendran January 12, 2010 at 10:50 AM said...

//முதல்ல மகேஷ் பாபு தெலுங்குல வலைப்பதிவு எழுதுறதா கேள்விப்பட்டேன் இப்போ முதல் வேலையா அவர் எழுதுன பதிவுகள எது அவருக்கு அதிக ஹிட்ஸ் வாங்கி கொடுத்துச்சோ அந்த பதிவ தமிழ்ல மொழிபெயர்த்து வெளியிடப்போறேன்//
- அவருக்கே இந்த ஐடியா இருந்திருக்குமான்னு தெரியல...நல்லா யோசிக்கீறீங்க மச்சான்...

மச்சான் பார்த்து இருங்க தோஹாவுக்கு ஆட்டோவுல ஆளு வருதாம்...

Trackback by Rajan January 12, 2010 at 11:03 AM said...

வணக்கம் விஜய் சார் எப்படியிருக்கீங்க?

சும்மாதான் இருக்கேன் சன் டிவி புண்ணியத்தில...


இப்போ நாங்க உங்கள ஒரு லூசா சந்திக்கிறதுல மிக்க மகிழ்ச்சி என்ன திடீர்ன்னு கரகாட்ட கம்பெனி ஆரம்பிக்கபோறேன்னு அறிக்கை விட்ருக்கீங்க என்ன சமாச்சாரம்?


நான் என் வழியில போயிட்டு இருந்தேன் இந்த சபா காரங்க எல்லாம் என்னை சீண்டிப்பாக்குறாங்க அதான் அவங்களுக்கு போட்டியா நானும் வந்திட்டேன்...

சரிங்க விஜய் சார் திடீர்ன்னு கரகாடக் காரராயிட்டீங்க இப்போ இங்க உங்களோட திறமையெல்லாம் எப்படி காட்டப்போறீங்க ?

முதல்ல ராம ராஜன் இன்னும் தனியா ஆடறதா கேள்விப்பட்டேன் இப்போ முதல் வேலையா அவர் ஆடுன ஸ்டெப்புகள்ள எது அவருக்கு அதிக ஹிட்ஸ் வாங்கி கொடுத்துச்சோ அந்த ஸ்டெப்ப உல்டா பண்ணி ஆடப் போறேன்.

இங்கேயுமா சார்?

இதுல என்ன இருக்கு அதுக்கு அவருக்கு பணம் கொடுத்து காப்பிரைட்ஸ் வாங்கிக்கப்போறோம் அவ்வளவுதானே..

படம் மாதிரியே ஆட்டமும் ஊத்திக்கிச்சுன்னா என்னாபண்ணுவீங்க விஜய் சார்?

சும்மாவே என்னோட பேர் போட்டு இது மாதிரி ஒரு மொக்கை டான்சு போட்டாலும் 500 செருப்பு வருதாமே, என்னோட பேரை போட்டதும் என்னைய டார் டாரா கிழிக்கிறதுக்கு ஆளிருக்கும்போது எனக்கென்ன கவலை இப்போ நானே ஆடறேன்னு சொன்னா சும்மா விடுவாங்களா என்ன ?,ரொம்ப சிம்பிள் படத்துக்கும் கரகத்துக்கும் சின்ன வித்தியாசம் அங்க படம் ஓட்ட காசு கொடுப்போம் இங்க கூட்டம் செக்க காசு கொடுப்போம் கோவைல இருக்கிற ஒரு இருபது முப்பது ஊர்ப் பஞ்சாயத்துகளுக்கு பணம் கொடுத்தா முடிஞ்சுச்சு ஒரு நாளைக்கு 2000 ஹிட்ஸ் கன்ஃபர்ம்...

அதானே சார் நீங்க யாரு?

நல்லவேளை சாரு நீங்க யாருன்னு கேக்காம விட்டீங்களே ...

வெள்ளித்திரையில உங்களுக்கு ஒரே ஒரு போட்டியாளர்தான் இருந்தார் ஆனா இந்த கரகத்துல நிறைய போட்டியாளர்கள் இருக்காங்களே இவங்கள எப்படி சமாளிக்க போறீங்க?

ஆளுக்கு ஒரு ஸ்டைல் வச்சு பட்டைய கிளப்புறாங்க ..இருந்தாலும் எவ்வளவோ பண்ணிட்டோம் இதப்பண்ணமாட்டோமா?

சரிவிடுங்க சினிமால இளையதளபதின்னு போட்டுட்டீங்க கரகாட்டத்துக்கு வந்தா உங்களுக்கு முன்னாடி என்ன அடைமொழி போட்டுக்கப்போறீங்க?

இப்போ இங்க ஃபேமஸா இருக்குறது ராம ராஜன் தானே அதனால இளைய ராம ராஜன் ன்னு போட்டுக்கிறேனே...

அதுசரி சினிமால திரிஷாவோட காதல்ன்னு சொல்லி எப்படியோ காலத்த ஓட்டிட்டீங்க இங்க என்ன பண்ண போறீங்க?

இங்கயும் கனகா ,கோவை சரளா ன்னு இறக்குமதி பண்ணி அவங்களுக்கும் எனக்கும் காதல்ன்னு இமேஜ் கிரியேட் பண்ணி ஓட்டிட மாட்டோமா?

சரிங்க சார் ஒரு விஷயம் சினிமால இல்லாத ஓட்டுன்ற ஒருவிஷயம் இருக்கே அதுக்கு என்ன பண்ணப்போறீங்க எப்படி ஒட்டு வாங்க போறீங்க?

அரசியல்ல என்ன பண்றாங்களோ அதேதான் எனக்கு ஓட்டு போடுற பதிவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட பணம் கொடுக்கலாம்ன்னு ஐடியா இருக்கு அது எங்கப்பா பாத்துப்பார்...

இங்க ரோஸ் பவுடர் லிப்ச்டிக்லாம் போட்டாதான் ஒத்துக்கிடுவாங்க அதுக்கு என்ன பண்ணபோறீங்க ?

நாம சினிமாலையே ரோஸ் பவுடர் லிப்ச்டிக்லாம் போட்ட வங்கதானே

அதுகூட நீங்க சொந்தமா வாங்க மாட்டீங்களா சார்?

ஹிஹிஹி எல்லாரும் சொந்தமா வாங்கணும் ன்னு நினைக்கிறது சரி ஆனா எனக்கு எப்படி நடிக்க தெரியாதோ அதே போல வாங்கவும் தெரியாதே அதான் இவங்களோட உதவி...

இன்னும் நிறைய விசயங்கள் பண்ணப்போறாராம்,பிறகு பின்னூட்டம் விமர்சனம் சினிமா இவை பற்றிய இந்த பேட்டியின் தொடர்ச்சி அடுத்த பதிவில்....தொடரும்...

(விஜய் ரசிகர்கள் கண்டுக்காதீங்க)

Trackback by Raju January 12, 2010 at 11:12 AM said...

Template அருமையா இருக்கு தலைவா..!

Trackback by கடைக்குட்டி January 12, 2010 at 11:20 AM said...

ம்ம்ம்.. பவங்கண்ணா அவரு..

Trackback by விக்னேஷ்வரி January 12, 2010 at 11:44 AM said...

இளைய கார்க்கின்னு போட்டுக்கிறேனே... //
இதெல்லாம் ஓவருங்க. எவ்வளவு பணம் அனுப்பினாரு கார்க்கி உங்களுக்கு.... :)

விஜய்யை இவ்வளவு கிழிக்குறீங்க. சூப்பருங்க.

ஆனா, இப்படியே தொடர்ந்தா உங்களுக்கு ஆட்டோ தான்.

Trackback by ஸ்ரீராம். January 12, 2010 at 1:03 PM said...

ஆஹா..மாடரேஷன் எனேபில் பண்ணிட்டீங்களா.
விஜய்யை வச்சி பதிவும் போடணும். வித்யாசமாவும் இருக்கணும்...
ஜெயிச்சிட்டீங்க..

Trackback by சிநேகிதன் அக்பர் January 12, 2010 at 1:45 PM said...

வசந்த் நீங்களா.

கலக்கல் போங்க.

Trackback by சிநேகிதன் அக்பர் January 12, 2010 at 1:46 PM said...

இப்பதான் நடிகரை வைத்து ஒரு இடுகை போட்டேன். இங்க வந்து பார்த்த நீங்களும் ம்ம்ம் கலக்குங்க.

Trackback by SUREஷ்(பழனியிலிருந்து) January 12, 2010 at 2:09 PM said...

சைலன்ஸ்.........,

Trackback by ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) January 12, 2010 at 2:14 PM said...

நான்தான் முதல்ல. கலக்கிட்ட நண்பா. விஜயோட பதிவுல இருந்து ஒரு கேள்வி கேட்டு சரியா பதில் சொன்னா டீலா நோ டீலா ல கலந்துக்கலாமா?????????????????

Trackback by அத்திரி January 12, 2010 at 4:15 PM said...

அடப்பாவி ஏன் இப்படி????///...................

Trackback by வினோத் கெளதம் January 12, 2010 at 6:13 PM said...

யாரையோ திட்டி பதிவு போடுறதுக்கு முன்னாடி இது ஒரு சாம்பிள் மாதிரி தெரியுதே..:)

Trackback by சுசி January 12, 2010 at 7:44 PM said...

//இருந்தாலும் எவ்வளவோ பண்ணிட்டோம் இதப்பண்ணமாட்டோமா?//

அதானே.. நீங்க யாரு..

Trackback by சுசி January 12, 2010 at 7:47 PM said...

//இப்போ இங்க ஃபேமஸா இருக்குறது கார்க்கிதானே அதனால இளைய கார்க்கின்னு போட்டுக்கிறேனே...//

கிகிகி.. பாவம் கார்க்கி.

Trackback by சுசி January 12, 2010 at 7:51 PM said...

//(விஜய் ரசிகர்கள் கண்டுக்காதீங்க)//

கண்டுக்கலை.. கண்டுக்கலை..
நீங்க தொடர்ந்து ஜமாய்ங்க உ.பி.

Trackback by Unknown January 12, 2010 at 8:00 PM said...

//இங்கேயுமா சார்?//
இங்கயே சிரிக்க ஆரம்பிச்சுட்டேன்... வரவர தேறிட்டீங்க தம்பி :)

Trackback by உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) January 12, 2010 at 8:43 PM said...

இனிய தமிழர் திருநாள் நல்வாழ்துக்கள்

Trackback by அப்துல்மாலிக் January 12, 2010 at 10:10 PM said...

பதிவர் சந்திப்பின்போது கடுப்பாகிடப்போறார்......

Trackback by Starjan (ஸ்டார்ஜன்) January 12, 2010 at 10:21 PM said...

வசந்தா .. விஜயை கலாய்க்கிறது

Trackback by ஜெஸ்வந்தி - Jeswanthy January 13, 2010 at 2:19 AM said...

கலக்கல் வசந்த். ரசித்துப் படித்தேன்.

Trackback by யோ வொய்ஸ் (யோகா) January 13, 2010 at 7:36 AM said...

என்னா வசந்த் கட்சி மாறீட்டீங்களர்?

Trackback by balavasakan January 13, 2010 at 11:45 AM said...

இன்னா வசந்து கொஞ்ச காலமா ஒரே கலகலப்பா இருக்கீக... கலக்குங்க..

Trackback by Kala January 13, 2010 at 1:56 PM said...

வசந் ஏன்? இவ்வளவு நெருக்கம்
விஜய்யோடு அப்படி என்ன செய்தார்??
பாவம் அவர்.
கோட்டுக்கு இழுக்கப் போகிறார்
கவனம்!!

Trackback by அன்புடன் நான் January 13, 2010 at 4:56 PM said...

பதிவு வழக்கம் போல நல்லாயிருக்குங்க..... நீண்ட நாள் வர இயலவில்லை......

தங்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள்.

Trackback by ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) January 13, 2010 at 5:33 PM said...

பொங்கல் வாழ்த்துக்கள்

Trackback by சிநேகிதன் அக்பர் January 13, 2010 at 6:48 PM said...

இனிய பொங்கல் வாழ்த்துகள் வசந்த்.

முந்தைய பின்னூட்டம் தவறுதலாக வந்துவிட்டது ஹி.ஹி.ஹி.

Trackback by Chitra January 14, 2010 at 2:50 AM said...

நல்ல நகைச்சுவை கற்பனை.

Trackback by goma January 14, 2010 at 10:13 AM said...

நிஜமாலுமே இந்த குட்டி எம்.ஜி.ஆர்.,சின்னக்கலைவாணன்[இந்த புனிதமான பட்டத்தை விவேக்குக்கு யார்தான் வழங்கினாரோ],காதல் இளவரசன்கள் எல்லாருக்கும் பிளாக்னாலே ஒரு கிலியாத்தான் இருக்கும்

Trackback by மாதேவி January 14, 2010 at 11:02 AM said...

விஜயின் அடுத்த படத்தில் நடிக்க அழைப்பு வரும் என்ற நினைப்பு வசந்துக்கு :)))

இனிய தைத்திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள்.

Trackback by அன்புடன் மலிக்கா January 14, 2010 at 12:50 PM said...

அம்மாடியோ என்னப்பா சகோ இப்படியெல்லாம் எங்கிருந்து ராசா இப்படியெல்லாம் கத்துக்கின்னீங்க.

அதவிடுங்க

அதாரு அந்தபொண்ணு அம்மாக்கிட்ட சொல்லியாச்சா இல்லா நான் சொல்லிடட்டா.

சகோகிட்டேயே மறைக்கக்கூடாது சரியா..

Trackback by ப்ரியமுடன் வசந்த் January 14, 2010 at 11:11 PM said...

கோபிநாத் நன்றிங்க

பிரியா நன்றி

அகிலா கிடைச்சுச்சுங்க

ஷங்கர் நன்றி

ஹேமா நன்றி

பட்டாபட்டி நன்றி

சுபா நன்றிப்பா

சீனா ஐயா நன்றிங்க

பெ.சொ.வி.இ.நன்றிங்க

தமிழ் நன்றி

ஜமாலண்ணா பிடிச்சிருந்தா எதுனாலும் சொல்லுங்கண்ணா பிடிக்கலண்ணா ஒண்ணும் சொல்லவேணாம்ணா...
:)

கலை நானேதாண்டா

முகிலன் ம்..நன்றி

வெற்றி நம்ம தலைவர்தானே கோச்சுக்கிடமாட்டார்

கொற்றவை என்னோட ப்லாகெல்லாம் படிக்கிறீங்க பரவாயில்லியே நன்றிப்பா

திவ்யாஹரி நன்றிங்க

சங்கர் நன்றி

பின்னோக்கி நன்றிங்க

வரதராஜுலு நன்றி

ராஜா நன்றிப்பா

தமிழுதயம் நன்றிங்க

ஷாஜி நன்றிங்க

குணா நன்றி நண்பா

நவாஸ் கண்டுக்காதீங்க..

சீமான்கனி நன்றி மாப்பி

சிவன் நன்றி மச்சான்

ராஜன் ராதாமணாளன் புகுந்து கரகமாடிட்டீங்களே தல நன்றி

நன்றி ராஜு

நன்றி கடைக்குட்டி

நன்றி விக்கி

நன்றி ஸ்ரீராம்

நன்றி அக்பர்

நன்றி தல

நன்றி ரமேஷ்

நன்றி அத்திரி உங்க ஆச தீர்ந்திடுச்சா?

நன்றி வினோத் இல்லடா

நன்றி சுசிக்கா

நன்றி அஷோக் அண்ணா

நன்றி உலவு

நன்றி சேக்

நன்றி ஜெஸ்ஸம்மா

நன்றி யோகா

நன்றி வாசு

நன்றி கலா மேடம்

நன்றி ரமெஷ் மீண்டும்

நன்றி அக்பர் வாழ்த்துகளுக்கு

நன்றி சித்ரா

நன்றி கோமா மேடம்

நன்றி மாதேவி

நன்றி சகோ

Trackback by Unknown January 15, 2010 at 4:42 AM said...

ஜமாலண்ணா பிடிச்சிருந்தா எதுனாலும் சொல்லுங்கண்ணா பிடிக்கலண்ணா ஒண்ணும் சொல்லவேணாம்ணா...]]

உன் பதிவு பிடிக்காம போகுமா தம்பி

அட நாம ஏன் உங்க தளபதியை கலாய்ப்பானேன்னு தான் ...

Trackback by Prathap Kumar S. January 15, 2010 at 10:45 AM said...

என்ன மாப்பு ஆப்போசிட் டைடுல கோல்போடுற... அப்ப நம்ம நம்மகூட்டத்துல ஐக்கியமாயிட்டயாப்பு...

ஆனா செம காமெடிப்பா...பின்னிட்ட..

ஏய் யாருப்பா இந்த கான்செப்டல எங்க தலைவர் ராமராமனை ஓட்டுறது... நல்லதுக்கில்ல சொல்லிப்புட்டேன்....