காக்கா பற பற...

| January 31, 2010 | |


காக்காவுக்கு சோறு வைக்கபோனேனா திடீர்ன்னு ஒரு காக்கா
என்னோட சுக துக்கமெல்லாம் கேக்க ஆளே இல்லியான்னு கரைஞ்சுகிட்டே இருந்துச்சு என்னடா காக்கா காக்கான்னுதானே கரையும் இது என்னடா புதுசா கரையுதுன்னு கிட்ட போய் பார்த்தா ஒரு காக்கா நிஜமாவே பொலம்பிட்டுத்தான் இருந்துச்சு...என்ன சிரிப்பு எனக்குத்தான் மிருக பாஷை தெரியும்ன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமே அப்புறமென்ன இளிப்பு வேண்டி கெடக்கு இளிப்பு முதல்ல என்ன நடந்துச்சுன்னு சொல்றத கேளுங்க சாமியோவ்....

அப்பிடியே அவர அமுக்கி ஒரு சேரைப்போட்டு உக்காரவச்சதும் அழுதுட்டார் ஏன்யா அழுவுறன்னு கேட்டா இம்புட்டு நாளா ஒருத்தருக்கு சேரா இருந்து இருந்து என் முதுகு உடைஞ்சதுதான் மிச்சம் இப்போ எனக்கும் ஒரு சேர் போட்டு உக்கார வச்சுருக்கீங்க ரொம்ப சந்தோசம்ன்னாரு...உங்க பேர் என்னன்னு கேட்டா "கா"னா புகழ் காக்கான்னாரு..


சரி ஏன்யா கரைஞ்சுகிட்டே இருக்கன்னு கேட்டா நான் என்ன நாக்குல போட்ட சக்கரையா கரையுறதுக்குன்னு ஒரு நக்கல் வேற...நாக்கே இல்லை உனக்கு இதுல நக்கல் வேற ஒழுக்கமா சொல்லவந்த விஷயத்தை சொல்லுங்கன்னதுதான் தாமதம் உடனே பொறிஞ்சு தள்ளிட்டாப்ல போன சென்மத்துல அப்பளமா பொறந்துருப்பார் போல..

நானே கருப்பா இருக்குறோம்ன்னு ரொம்ப வருத்தப்பட்டு இருந்தேன் போன வாரம் ஒரு வேலைக்கு (என்ன வேலைன்னெல்லாம் லாஜிக்கா கொஸ்டின் கேக்கப்படாது ஆமா ) அந்த இண்டெர்வியூ போனேனா அங்க கறுப்பு வெள்ளைல எடுத்த பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இருந்தா கொண்டுட்டு வான்னு சொன்னாய்ங்க எனக்கு ஒரே குழப்பமா போச்சு என்னடா நம்ம கறுப்பாத்தானே இருக்கோம் இவன் என்னடான்னா கறுப்பு வெள்ளையில எடுத்த பாஸ்போர்ட் போட்டோ இருந்தா எடுத்துட்டு வான்னு சொல்றான் ஏன் சொல்றான்னு யோசிச்சா ஒண்ணும் தோணலை அதனால வேலை கிடைக்காம போயிடுச்சு நானும் அந்த நாள்ல இருந்து யோசிச்சு யோசிச்சு பார்த்தேன் ம்ஹ்ஹும்...ஒரு வேளை நம்மளையும் நம்ம காலைக்கடன் கழிச்சதையும் ஒண்ணா சேர்த்து கேப்பாய்ங்க போல அப்பிடியா?அதானே என்னோட கறுப்புக்கு மேட்ச்சா வெள்ளையா இருக்கும்ன்னு கேட்டுச்சு எனக்கு அதை அப்பிடியே கொன்னே போட்ருலாம்ன்னு ஒரு வெறி....

அடுத்து ஒண்ணு நாங்க எல்லாரும் எல்லா நாட்டுலயும் ஒரே மொழி பேசறோம் நீங்க என்னடான்னா ஒவ்வொரு ஊருக்கும் ஒரு மொழி பேசுறீங்க விட்டா தெருவுக்கு ஒரு மொழி பேசுவீங்க போல...எங்க எல்லாருக்கும் ஒரே மொழி இருக்குறதாலதான் ஒற்றுமையா இருக்கோம் தெரியுமா? உங்களை மாதிரி எப்போ பார் அவன் என்னைய அடிச்சுட்டான் குத்திட்டான்னு நாங்க என்னிக்காவது அப்பிடி சொல்லியிருக்கோமா? ஈவன் நீங்க போடுற சோத்துல விஷம் கண்டு கலந்து வச்சுருக்கிங்களான்னு முதல்ல எங்கள்ல ஒருத்தர் தியாகி சாப்பிட்ட பிறகுதான் மீதியிருக்குற நாங்க எல்லாம் சாப்பிடுவோம்..தெரியுமான்னு கேட்டுச்சு எனக்கு நாக்கை பிடிங்கிகிடலாமான்னு இருந்துச்சு...

பொறவு நாங்க காலையில அலாரம் கூட இல்லாம கரெக்ட்டா ஆறுமணிக்கு எந்திரிச்சு நீங்க போடுற காலை சிற்றுண்டி முடிச்சுட்டு சுறுசுறுப்பா சுத்தி வந்து தலைவர் சிலையெல்லாம் ஒரு ரவுண்ட்ஸ் போய் செக்கப்ப் பண்ணிட்டு அசந்து கொஞ்சம் தூங்கலாம்ன்னு ஒரு அரச மரம் பார்த்து வந்து உக்கார்ந்தா அதுக்கு கீழ உங்க இனத்தை சேர்ந்த பெரியவாள் அந்த மேற்க்குதெருக்காரி ஒரு மாதிரியாமே இந்த கொன்னவாயன் அவள வச்சுருக்கானாமேன்னு உலக முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் பேசிட்டு இருக்காய்ங்க இப்போ சொல்லுங்க மரத்துக்கு கீழ இருக்குற மனுசனுங்க மேல ஏன் அசிங்கம் பண்ணிவிடுறோம்ன்னு தெரியுதா? அப்பிடின்னு கேட்டுச்சு எனக்கு நாக்கு வரல.....

ஆமா நீங்க மாடு , ஆடு,கோழி,புறா,பூனை,இதெல்லாம் வளர்க்கிறீர்களே எங்கள ஏன் வளர்க்குறதில்லைன்னு தெரியுமான்னு கேட்டுச்சு எனக்கு தெரியலைன்னேன் உடனே அது நீங்க உங்களுக்குள்ளே காக்கா பிடிச்சுக்குவீங்க ஆனா நிஜமான காக்கா எங்களை பிடிக்க முடியாதே வெவ்வெவ்வே...ன்னு சொல்லிட்டு பறந்து போய்டுச்சுங்க.....Post Comment

45 comments:

Anonymous — February 1, 2010 at 1:28 AM said...

ஆபீஸ்ல ஒரு காக்கா கூட்டம் இருக்கும். மேனேஜருக்கு ஐஸ் வச்சிகிட்டு :)

Trackback by கிச்சான் February 1, 2010 at 1:54 AM said...

"அடுத்து ஒண்ணு நாங்க எல்லாரும் எல்லா நாட்டுலயும் ஒரே மொழி பேசறோம் நீங்க என்னடான்னா ஒவ்வொரு ஊருக்கும் ஒரு மொழி பேசுறீங்க விட்டா தெருவுக்கு ஒரு மொழி பேசுவீங்க போல..."

"எங்க எல்லாருக்கும் ஒரே மொழி இருக்குறதாலதான் ஒற்றுமையா இருக்கோம் தெரியுமா"


"உங்களை மாதிரி எப்போ பார் அவன் என்னைய அடிச்சுட்டான் குத்திட்டான்னு நாங்க என்னிக்காவது அப்பிடி சொல்லியிருக்கோமா?"


உங்களோட இந்த வரிகள் என் மனதில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்திவிட்டது"ஈவன் நீங்க போடுற சோத்துல விஷம் கண்டு கலந்து வச்சுருக்கிங்களான்னு முதல்ல எங்கள்ல ஒருத்தர் தியாகி சாப்பிட்ட பிறகுதான் மீதியிருக்குற நாங்க எல்லாம் சாப்பிடுவோம்.."


ஆனால் இந்த வரிகள் கனத்த மனதிலிருந்து ஒரு மெல்லிய புன்னகையை ஏற்படுத்திவிட்டது

Trackback by ஹேமா February 1, 2010 at 2:20 AM said...

நையாண்டியா இருந்தாலும் நயமா மத்தவங்களுக்கு வலிக்காம ,சொல்ல வேண்டிய விஷயத்தை காக்கா மாதிரியே கத்திக் கத்திச் சொல்லியிருக்கீங்க வசந்து.
அசத்திட்டீங்க.உங்க சிந்தனையே சிந்தனைதான்.

Trackback by சீமான்கனி February 1, 2010 at 4:28 AM said...

நக்கல், நையாண்டி, கோக்குமாக்கு...

இண்டெர்வியூ அதுவும் எங்களுக்கு போட்டியா என்ன ஒரு வில்லத்தனம்...காகா... காகா... காகா....
(காகா பாஷை வசந்துக்கு புரியும்...)

Trackback by பெசொவி February 1, 2010 at 5:21 AM said...

காக்கா மூலமா ஒரு அருமையான சமுதாய சிந்தனையைச் சொல்லிட்டீங்க, சாமியோவ்!

(அதெல்லாம் சரி, காக்கா "கா, கா" ன்னு கத்தறதால, அத நாம காக்கான்னு கூப்பிடறோம, இல்ல நாம காக்கான்னு கூப்பிடறதால அது "கா, கா" ன்னு கத்துதா? - நன்றி இயக்குனர் பாக்கியராஜ்)

Trackback by balavasakan February 1, 2010 at 5:36 AM said...

பாவம் காக்கா...

Trackback by அண்ணாமலையான் February 1, 2010 at 6:45 AM said...

நல்ல காமெடி..

Trackback by Prathap Kumar S. February 1, 2010 at 8:06 AM said...

சூ காக்கா...
ஆமா முக்கியமான கேள்வியை விட்டுட்டியே மாப்பி... பாட்டி சுட்ட வடையை
நீ ஏன் சுட்டேன்னு கேட்கவேண்டியதுதானே??? அப்ப அதுவும் நாக்கை புடிங்கிக்கும்...

Trackback by Jackiesekar February 1, 2010 at 8:52 AM said...

கா கா கா...

Trackback by sathishsangkavi.blogspot.com February 1, 2010 at 8:57 AM said...

வித்தியாசமாக காக்கா மூலம் நல்லதத்தான் நக்கலா சொல்லி இருக்கறீங்க....

கா...கா.......கா....................

Trackback by தமிழ் உதயம் February 1, 2010 at 9:17 AM said...

நகைச்சுவையுடன் தன் நியாயத்தை கேட்டது காக்கா. நீங்க நீங்கதான். நாங்க நாங்கதான். அருமை வசந்த் அவர்களே.

Trackback by S.A. நவாஸுதீன் February 1, 2010 at 10:07 AM said...

ஹா ஹா ஹா. கலக்கலா இருக்கு இடுகை. க்ளாஸ்.

Trackback by சங்கர் February 1, 2010 at 10:23 AM said...

//ஒரு காக்கா
என்னோட சுக துக்கமெல்லாம் கேக்க ஆளே இல்லியான்னு கரைஞ்சுகிட்டே இருந்துச்சு//

நீங்க அதுமேல தண்ணி ஊத்தினீங்களா :))

Trackback by சங்கர் February 1, 2010 at 10:29 AM said...

//அந்த இண்டெர்வியூ போனேனா அங்க கறுப்பு வெள்ளைல எடுத்த பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இருந்தா கொண்டுட்டு வான்னு சொன்னாய்ங்க //

பறவைகளுக்கு பாஸ்போர்டே தேவை இல்லையே பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எதுக்கு :))

Trackback by முனைவர் இரா.குணசீலன் February 1, 2010 at 10:35 AM said...

நன்றாக உள்ளது வசந்த் ஒரு சிறு குறிப்பு காக்கை கத்துவது கா கா ன்னு ஒரே மாதிரி கேட்டாலும் அதில் நுட்பமான வேறுபாடுகள் உண்டாம் காக்கைகளுக்குள்ளும் மொழிச்சிக்கல் உண்டு என்கின்றனர் பறவை நூலார்

Trackback by ஸ்ரீராம். February 1, 2010 at 11:44 AM said...

சீ...பாவம்...(மும்தாஜ் குரலில் படிக்கவும்)
அவங்கவங்க நியாயம் அவங்கவங்களுக்கு...

Trackback by பித்தனின் வாக்கு February 1, 2010 at 11:51 AM said...

நல்ல காக்கா பதிவு,வித்தியாசமான சிந்தனை,நல்ல கருத்துகள். இன்னும் எதிர்பாக்கின்றேம். இதை நான் காக்கா பிடிப்பதற்க்காக சொல்லவில்லை கா கா

Trackback by ராமலக்ஷ்மி February 1, 2010 at 12:06 PM said...

சிந்தனை நன்று.

Trackback by நாஸியா February 1, 2010 at 12:15 PM said...

நாங்க அண்ணன்னு சொல்றதுக்கு பதிலா காக்கான்னு தான் சொல்லுவோம் தெரியுமா :))

Trackback by கே. பி. ஜனா... February 1, 2010 at 12:17 PM said...

காக்காவைக் காக்கா பிடிக்க நல்ல முயற்சி! தமாஷா இருந்திச்சு.

Trackback by கே. பி. ஜனா... February 1, 2010 at 12:17 PM said...

காக்காவைக் காக்கா பிடிக்க நல்ல முயற்சி! தமாஷா இருந்திச்சு.

Trackback by Subankan February 1, 2010 at 12:51 PM said...

:)

கலக்கல்!

Trackback by கண்மணி/kanmani February 1, 2010 at 12:53 PM said...

ம்ம் ஒன்னும் சொல்றதுக்கில்லே....இப்படியெல்லாம் யோசிச்சா:))

அய்ய் காக்கா இங்கிலீசு,தங்கிலீசு எல்லாம் பேசுதுங்கோ.

Trackback by Kala February 1, 2010 at 1:18 PM said...

அண்டங்காக்கா கொண்டைக்காரியே!

உன் துணையோட இம்மை தாங்க முடியல....
இரண்டு காலையும் கட்டிப் பறக்க
விடாமல் பாத்துக்க..!

நீ கறுப்பென்று தள்ளி வைத்துவிட்டு
வெள்ளையாய்... இருக்கும் கொக்குத்
தேடிப் போனாலும் போவார் கறுப்பு,வெள்ளையாய்
குழந்தை பெற்றெடுக்க...!
அப்புறம்....
மயில் அழகில் மயங்குவார்
அப்புறம்.....
கிளி................போய்க் கொண்டே இருக்கும்

அதனால,,,...அதனால.. குடிக்கிற தண்ணில
கொஞ்சமாக மயக்க மருந்து போட்டுக் கொடுத்து
அந்த நேரத்தில.....சட்டுப்புட்டென்னு ஒரு தாலியை
கட்டிவிடு...இல்லையென்றா..நீ அம்போதான்!!

அப்புறம் இப்படித்தான் பாடவேண்டும் ....

நம்பினால் கெடுவதில்லை ஆண்டவனே
உனை
நம்பி நான் வாழ்வதில்லை காதலனே..

ஆண்டவனுக்கொரு மனசு
ஆண்களுக்கிரு மனசு
இன்னுமொரு
பெண் மனதை எண்ண வைத்து
ஏய்க்காதே...!!

Trackback by Thenammai Lakshmanan February 1, 2010 at 1:44 PM said...

கலா சுப்பர் கலா
வசந்த் என்ன இப்படி உங்கள கலாய் கலாய்னு கலாய்குறாங்க கலா ...

நல்ல இருக்கு வசந்த் காக்கா..!!!

Trackback by ஜெயா February 1, 2010 at 2:31 PM said...

இவ்வளவு கேள்வி கேட்ட வாயாடிக்காக்காவிடம் பாட்டி சுட்ட வடையை நீங்க ஏன் சுட்டிங்க என்று நாக்க பிடுங்கிற மாதிரி ஒரு கேள்விய கேட்டு இருக்கலாமே வசந்த்..

Trackback by சத்ரியன் February 1, 2010 at 2:32 PM said...

வசந்த்,

இந்த தலைவருங்க சிலைமேல காக்கா “கக்கா” போவறது ஏன் -னு சொல்லாம விட்டுட்டீங்களே சாமீ...ய்ய்ய்ய்ய்ய்!

Trackback by Kala February 1, 2010 at 2:36 PM said...

உஸ்உஸ்ஸஸ.........சத்தமாகப் பேசாதங்க....
சகோதரி,....
அதுக்குப் பாம்புக் காது

ஐந்தறிவுதானே!! அதனால உறைக்காது
ஏனென்றால் ருசிக்க நாக்குமில்லை...
உறைக்க.. மிளகாயும் சாப்பிடாது.

உங்கள் இரசனைக்கு நன்றிங்க.

Trackback by க.பாலாசி February 1, 2010 at 3:09 PM said...

கற்பனைகளும், சிந்தனையும் கலந்துரைக்கும் இடுகை... நன்று...

Trackback by நாணல் February 1, 2010 at 4:59 PM said...

:)

Trackback by ஸாதிகா February 1, 2010 at 7:20 PM said...

ஹாஸ்யத்துடன் ஒரு சுவாரஷ்யம்

Trackback by Menaga Sathia February 1, 2010 at 7:29 PM said...

மொக்கை ரொம்ப சுவராஸ்யமா இருந்தது.

Trackback by அன்புடன் அருணா February 1, 2010 at 7:56 PM said...

நல்லா காக்கா!

Trackback by கயல் February 1, 2010 at 8:22 PM said...

சூப்பரப்பூ! மனுசங்களுக்கு காக்கா பிடிக்க தெரியுறது தான் சாமர்த்தியம் சாமி! தத்துவம்... தத்துவம்..... காக்கா சரியாத்தேன் சொல்லிருக்கு... :)))

Trackback by கார்த்திகைப் பாண்டியன் February 1, 2010 at 8:59 PM said...

வசந்த் பிராண்ட்.. அருமை..:-)

Trackback by திவ்யாஹரி February 1, 2010 at 10:38 PM said...

//ஒண்ணு நாங்க எல்லாரும் எல்லா நாட்டுலயும் ஒரே மொழி பேசறோம் நீங்க என்னடான்னா ஒவ்வொரு ஊருக்கும் ஒரு மொழி பேசுறீங்க விட்டா தெருவுக்கு ஒரு மொழி பேசுவீங்க போல...எங்க எல்லாருக்கும் ஒரே மொழி இருக்குறதாலதான் ஒற்றுமையா இருக்கோம் தெரியுமா? உங்களை மாதிரி எப்போ பார் அவன் என்னைய அடிச்சுட்டான் குத்திட்டான்னு நாங்க என்னிக்காவது அப்பிடி சொல்லியிருக்கோமா? ஈவன் நீங்க போடுற சோத்துல விஷம் கண்டு கலந்து வச்சுருக்கிங்களான்னு முதல்ல எங்கள்ல ஒருத்தர் தியாகி சாப்பிட்ட பிறகுதான் மீதியிருக்குற நாங்க எல்லாம் சாப்பிடுவோம்..தெரியுமா//

நல்ல பதிவு வசந்த்.. எப்படி சொல்றதுன்னு தெரியல.. தொடருங்கள்..

//கீழ உங்க இனத்தை சேர்ந்த பெரியவாள் அந்த மேற்க்குதெருக்காரி ஒரு மாதிரியாமே இந்த கொன்னவாயன் அவள வச்சுருக்கானாமேன்னு உலக முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் பேசிட்டு இருக்காய்ங்க இப்போ சொல்லுங்க மரத்துக்கு கீழ இருக்குற மனுசனுங்க மேல ஏன் அசிங்கம் பண்ணிவிடுறோம்ன்னு தெரியுதா?//

நிறைய பெண்களுக்கும், சில ஆண்களுக்கும் கூட இந்த மாதிரி பின்னாடி பேசுற பழக்கம் இருக்கு.. நாம சொன்னா யாரும் கேட்க மாட்டேன்றாங்க.. காக்கா சொல்லியாவது கேட்குறாங்கலான்னு பார்ப்போம்..

//நீங்க உங்களுக்குள்ளே காக்கா பிடிச்சுக்குவீங்க ஆனா நிஜமான காக்கா எங்களை பிடிக்க முடியாதே வெவ்வெவ்வே...ன்னு சொல்லிட்டு பறந்து போய்டுச்சுங்க....//

நல்ல காக்காவா இருக்கு வசந்த். பிடிங்க அதை.. விட்டுடாதீங்க.. நிறைய பேச விடுங்க..

Trackback by M.S.R. கோபிநாத் February 2, 2010 at 5:14 AM said...

வழக்கம் போல அருமை வசந்த்.

Trackback by ஜீவன்சிவம் February 2, 2010 at 9:26 AM said...

நல்ல சிந்தனை..

உண்மையிலேயே... "கா கா கா" இல்லை

Trackback by ஆ.ஞானசேகரன் February 2, 2010 at 10:38 AM said...

சுவாராஸியமாக ....

Trackback by இளமுருகன் February 2, 2010 at 2:17 PM said...

காக்கா நிறம்தான் கருப்பு ஆனால் அதான் மனசு வெள்ளை என அழகாக விளக்கி உள்ளீர்கள்.
நல்ல பதிவு.

Trackback by பனித்துளி சங்கர் February 2, 2010 at 3:19 PM said...

{{{{{{ அடுத்து ஒண்ணு நாங்க எல்லாரும் எல்லா நாட்டுலயும் ஒரே மொழி பேசறோம் நீங்க என்னடான்னா ஒவ்வொரு ஊருக்கும் ஒரு மொழி பேசுறீங்க விட்டா தெருவுக்கு ஒரு மொழி பேசுவீங்க போல...எங்க எல்லாருக்கும் ஒரே மொழி இருக்குறதாலதான் ஒற்றுமையா இருக்கோம் தெரியுமா? உங்களை மாதிரி எப்போ பார் அவன் என்னைய அடிச்சுட்டான் குத்திட்டான்னு நாங்க என்னிக்காவது அப்பிடி சொல்லியிருக்கோமா? ஈவன் நீங்க போடுற சோத்துல விஷம் கண்டு கலந்து வச்சுருக்கிங்களான்னு முதல்ல எங்கள்ல ஒருத்தர் தியாகி சாப்பிட்ட பிறகுதான் மீதியிருக்குற நாங்க எல்லாம் சாப்பிடுவோம்..தெரியுமான்னு கேட்டுச்சு எனக்கு நாக்கை பிடிங்கிகிடலாமான்னு இருந்துச்சு... }}}}}}}


ஆஹா இப்பதாய்யா தெரியுது இந்த பறவைகள் , மிருகங்கள் எல்லாம் பேச ஆரம்பித்தால் நாம எல்லோரும் அவளவுதான் சாமியோவ் !

நாம் அறிந்தே செய்யும் பல தவறுகளை காக்கைக் கதையின் மூலமாக ஆணி அடித்தாற்போல் சொல்லி இருக்கீங்க வாழ்த்துக்கள் நண்பரே !

Anonymous — February 2, 2010 at 8:41 PM said...

வசந்த் அவர்களே வணக்கம்...
இத்தனை நாள் உங்கள் பதிவுக்கு வராமல் இருந்ததற்கு ஒரு மன்னிப்பு.
மெல்லிய சிரிப்பு உதட்டில் ஓட படித்து முடித்தேன்...
நிறைய விஷயங்களை எவ்வளவு நாசூக்காக குத்துறீங்க !

Trackback by சுசி February 2, 2010 at 11:59 PM said...

இது உங்களால மட்டும்தான் முடியும் உ.பி.

அத்தனை விஷயமும் உண்மை..

அதுங்கள மனுஷங்க வளர்க்காததும் நல்லத்துக்குத்தான்.. அப்புறம் அதுங்களும் குணம் மாறிடப் போதுங்க..

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 3, 2010 at 12:50 AM said...

அகிலா மேனஜருக்கு மட்டுமா காக்கா பிடிக்கிறாங்க பக்கத்து சீட்டு ஃபிகருக்கும் தானே? நன்றிங்க தொடர் வருகைக்கும் கருத்துக்கும்...

கிச்சான் மிக்க நன்றிங்க ரசனைக்கும் முதல் வருகைக்கும்

ஹேமா ம்ம் நன்றிங்க :)

சீமான் கனி மாப்ள நக்கலு இருடி...மாப்ள நன்றிடா...

பெயர் சொல்லவிரும்பவில்லை சார் நன்றி சார் :)))))))

வாசு நன்றிப்பா

மல நன்றிங்க

பிரதாப்பு ஆஹா இந்த ஐடியா தோணலியே எனக்கு? நன்றி மாப்பி

ஜாக்கி சேகர் சார் மிக்க சந்தோஷம்

நன்றி சங்க கவி

நன்றி தமிழுதயம் :))

நன்றி நவாஸ் :))

சங்கர் இல்ல காக்கா தண்ணிக்குள்ள விழ்ந்துடுச்சே... பாஸ்போர்ட் ம்ம் நியாயமான கேள்விதான்... ஆனா போற போக்கில் அதுகளுக்கும் பாஸ்போர்ட் கேக்குற நிலமை வரலாம்...

குணா அதுபற்றிய லிங் குடுங்களேன் பறவை நூலார் பற்றி...

ஸ்ரீராம் அக்கடா ஆஹா :)))

பித்தனின் வாக்கு அப்பிடியா சொல்றீங்க சுதாகர் சரி தொடர்ந்திடுவோம்

நன்றி ராமலக்ஷ்மி மேடம் :)

நன்றி காகா நாஸியா) நாங்க சகோவையெல்லாம் காக்கான்னுதான் கூப்பிடுவோமாக்கும்...

ஜனார்த்தனன் நன்றிங்க

சுபா நன்றிப்பா

கண்மணி ம்ம் கவர்ன்மெண்ட் ஸ்கூல்ல படிச்ச காக்கா போல...நன்றிங்க

கலா எப்படித்தான் வாசம் சிங்கப்பூருக்கு வீசுதோ தெரியலை உங்க மூக்கு பொல்லாதமூக்கா இருக்கும்போலயே...ஏய்ப்பது ஆண்கள் இல்லைங்க என்னைப்பொருத்த மட்டும் பெண்கள்தான் ஆனா என்னை யாரும் ஏமாத்தவுமில்ல நானும் யாரையும் ஏமாத்தவுமில்லை நல்லாவே போயிட்டு இருக்கு கூடிய சீக்கிரம் சுபம்...

நன்றி கலா பாட்டீய்ய்ய்ய்ய்ய்ய்

நன்றி தேனம்மா

நன்றி ஜெயா மேடம் ம்ம் கேட்ருக்கலாம் நாந்தான் மறந்துட்டேன்
முதல் வருகைக்கும் கருத்துக்கும் சந்தோஷம் மேடம்

நன்றி சத்ரியன் ஒரு வேளை தன்னை மாதிரியே சிலையும் கருப்பா இருக்குன்ற பொறாமையோ என்னவோ?

நன்றி பாலாசி

நன்றி நாணல்

நன்றி ஸாதிகா

நன்றி மேனகா மேடம்

நன்றி அருணா பிரின்ஸ்

நன்றி கயலு ஆமாவா அய்யய்யோ...

கார்த்தி நன்றி ஆசிரியரே

நன்றி திவ்யா ம்ம் நல்ல காக்காவா அப்பிடியா இருங்க பிடிச்சுட்டு வந்து பேசுறேன்...

கோபி நன்றிப்பா

ஜீவன் சிவம் நன்றிங்க

சேகர் நன்றிப்பா

இளா சந்தோசம் நன்றிங்க

சங்கர் நன்றி நன்றி

அட சரவணன் அப்பிடியெல்லாம் சொல்லப்படாது வந்துட்டீங்கள்ள இனி தொடர்ந்து வரவைக்க வேண்டியது இனி என் பொறுப்பு

சுசிக்கா கோச்சுட்டீங்களா? நன்றிக்கா...

Trackback by Matangi Mawley February 3, 2010 at 10:23 AM said...

good one there!