தாலி கட்டிய மிஸ்..!

| January 15, 2010 | |மிஸ்டர் மனிதன் : மிஸ் .பசு உங்களுக்கு இனிய மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்


மிஸ் பசு : நன்றி மனிதா அப்புறம் ஒண்ணு கேக்குறேன் நீங்களும்தான் நேத்து உங்களுக்காக பொங்கல் வச்சீங்க அதை மட்டும் வெறும் பொங்கல்ன்னு சொல்றீங்க எங்க பொங்கல மட்டும் மாட்டுப்பொங்கல்ன்னு சொல்றீங்க அப்போ உங்களுக்கு வைக்கிற பொங்கல மனுஷ பொங்கலுன்னுதான சொல்லணும் ஏன் அப்படி சொல்லல ? என்னமோ போங்க உங்களுக்கு ஒரு ரூல்ஸ் எங்களுக்கு ஒரு ரூல்ஸா?

மிஸ்டர் மனிதன் : சரி சரி நீங்க மிஸ்ஸா? இல்ல மிஸ்ஸஸா?

மிஸ் பசு : நான் மிஸஸா ஆகுறதுக்கு எப்போ நீங்க எனக்கு கல்யாணம் பண்ணிவச்சீங்க பொறந்ததில இருந்து சாகுற வரைக்குமே மிஸ்தான்...என்ன நாங்க தாலி கட்டிய மிஸ்...மிஸ்டர் மனிதன் : ஓஹ் அது ஒரு குறையா தெரியுதா உங்களுக்கு? நல்லதுன்னு நினைச்சுக்கங்க எங்க மனிதர்களில் கல்யாணம் பண்ணிட்டு ஒவ்வொரு குடும்பத்தலைவிகளும் படுற பாடு பார்க்குறீங்கதானே...!

மிஸ் பசு : ஆமா ஆமா பாவம்பா அவங்களும் அதுவும் சரிதான்...

மிஸ்டர் மனிதன் : அது சரி இந்த மாட்டுப்பொங்கல் பத்தி என்ன நினைக்கிறீங்க?

மிஸ் பசு : என்னங்க இது வருசம் பூரா புண்ணாக்கும் , வைக்கோலும் குடுக்கிறீங்க இந்த ஒரு நாள்மட்டும் சம்பிரதாயத்துக்காக எங்களுக்குன்னு பொங்கல் வைக்கிறீங்க அதும் கொஞ்சூண்டு மீதியெல்லாம் நீங்களே சாப்ட்டுறீங்க..இருந்தாலும் நீங்க ரொம்ப மோசம் வாரம் ஒரு நாளாவது நல்ல சாப்பாடு குடுத்தா குறைஞ்சா போயிடுவீங்க? உப்பு சப்பில்லாம தின்னு தின்னு நாக்கு செத்து போய்கிடக்கு...பிறகு கொம்புல பெயிண்ட் அடிக்கிறீங்க ஏங்க அது இயற்கையா எங்களுக்கு இருக்கிறது அதுக்கு போய் ஏனுங்க பெயிண்ட் அடிச்சு நாசம் பண்றீங்க ? நீங்கதான் தலைக்கு கலர் கலரா பெயிண்ட் அடிச்சுட்டு ஃபேசன்னு திரியுறீங்கன்னா எங்களுக்குமா?மிஸ்டர் மனிதன் : பெயிண்ட் அடிச்சா கொஞ்சம் புதுசா தெரிவீங்களேன்னுதான் எல்லாம் உங்க நல்லதுக்குத்தான...

மிஸ் பசு : சரி எல்லாம் இன்னிக்கு செய்றீங்க இன்னிக்கு ஒரு நாளாவது எங்களுக்கு ஒரு புது சட்டதுணி எடுத்து போட்டுவிடணும்ன்னு தோணலியா? எத்தனை நாளைக்குத்தான் இப்பிடி சேம் சேம் பேபி சேமா திரியுறது? நீங்களும் எங்களைப்போல இருந்தீங்க பிறகு அந்த எக்ஸ்ட்ரா ஒரு அறிவ வச்சு சட்ட துணியெல்லாம் போட்டுகிட்டீங்க எங்களுக்கும் அதுபோல போட்டுவிடணும்ன்னு அந்த எக்ஸ்ட்ரா ஒரு அறிவு சொல்லலியா?மிஸ்டர் மனிதன் : அப்புறம் உங்களுக்கும் எங்களுக்கும் என்ன வித்யாசம்?

மிஸ் பசு : உங்களுக்கு இருக்கிறதும் உசிருதான் எங்களுக்கு இருக்கிறது உசிருதான் மானம்ன்றது எல்லாருக்கும் பொதுதானே...

மிஸ்டர் மனிதன் : அதுக்காக..விட்டா எங்களுக்கும் வீடு டாய்லெட் இதெல்லாம் கட்டி குடுங்கன்னு கோரிக்கை வைப்பீங்க போல..!

மிஸ் பசு : ஏன் கேட்டா என்ன தப்பு? எங்கள வச்சு காசு சம்பாரிச்சு நீங்க இருக்கிறதுக்கு வீடுகட்டி சுகமா இருக்கீங்க நாங்க கேட்டா தப்பா? அட்லீஸ்ட் டாய்லெட்டாவது கட்டி குடுக்கலாம்ல...!மிஸ்டர் மனிதன் : அதெப்பிடி உங்களுக்கு ஆர்டினரி,வெஸ்டர்ன் ரெண்டு டைப்பும் ஒத்துவராதே உங்களுக்குன்னு ஒண்ணு புதுசா கண்டுபிடிச்சாத்தான் உண்டு..

மிஸ் பசு : என்னென்னமோ எல்லாம் கண்டுபிடிக்கிறீங்க இது கண்டுபிடிக்க முடியாதா?

மிஸ்டர் மனிதன் : சரி சரி அதவிடுங்க உங்களுக்கு பிடிச்ச ஹீரோ யாருன்னு சொல்லுங்களேன்..

மிஸ் பசு : ரொம்ப முக்கியம் எங்களுக்கு ராமராஜனவிட்டா வேற யாரையும் தெரியாதுங்க...பாவம் அவர் ஒருத்தர்தான் எங்கள புரின்சுகிட்டவர் அவரையும் மூலையில உட்கார வச்சுட்டீங்க எங்களுக்கும் ஓட்டுபோடுற தகுதியிருந்திருந்தா ராமராஜனைத்தான் முதல்வராக்கியிருப்போம்....

மிஸ்டர் மனிதன் : உங்களுக்கு பிடிச்ச பழமொழி

மிஸ் பசு : ஆடுற மாட்ட ஆடி கறக்கணும் பாடுறமாட்ட பாடிக்கறக்கணும்

மிஸ்டர் மனிதன் : பாட்டுன்னதும் ஞாபகம் வருது உங்களுக்கு பிடிச்ச பாட்டு எது?

மிஸ் பசு : வந்தேண்டா பால்காரன் இந்த பாட்டுலதான் எங்களோட நிலமைய சரியா சொல்லியிருப்பாங்க...

மிஸ்டர் மனிதன் : சரிங்க உங்களை பேட்டி எடுத்ததில ரொம்ப சந்தோசம் மீண்டும் மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்...

மிஸ் பசு : மனுச பொங்கல் நாங்களும் கொண்டாடுற நாள் வரும் அன்னிக்கு வந்து திரும்ப நானே உங்களை மீட் பண்றேன்...!

Post Comment

44 comments:

Trackback by சுசி January 15, 2010 at 3:37 AM said...

மிஸ்டர் உ.பி : உங்களுக்கு இனிய மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Trackback by சுசி January 15, 2010 at 3:39 AM said...

//கல்யாணம் பண்ணிட்டு ஒவ்வொரு குடும்பத்தலைவிகளும் படுற பாடு பார்க்குறீங்கதானே...!//

குடும்பத் தலைவர்கள் பொங்கிடப் போறாங்க.. :))))

Trackback by சுசி January 15, 2010 at 3:43 AM said...

//என்னென்னமோ எல்லாம் கண்டுபிடிக்கிறீங்க இது கண்டுபிடிக்க முடியாதா?//

ஹஹாஹா..

எப்டித்தான் இப்டில்லாம் கண்டுபிடிச்சு எழுதுறீங்களோ..

Trackback by Chitra January 15, 2010 at 3:45 AM said...

மிஸ் பசு : மனுச பொங்கல் நாங்களும் கொண்டாடுற நாள் வரும் அன்னிக்கு வந்து திரும்ப நானே உங்களை மீட் பண்றேன்...!
.................மிரட்டரதுக்கு ஒரு அளவே இல்லையா? ஹா, ஹா, ஹா.....

Trackback by Unknown January 15, 2010 at 4:38 AM said...

ஹா ஹா ஹா

வசந்த் என்றால் வித்தியாசம்.

------------------

நீங்களும் எங்களைப்போல இருந்தீங்க பிறகு அந்த எக்ஸ்ட்ரா ஒரு அறிவ வச்சு சட்ட துணியெல்லாம் போட்டுகிட்டீங்க]]

இல்ல ராஸா மனுசன் மறைக்காமல் இருக்கவில்லை முன்பு - (இது என்ற நம்பிக்கைங்கோ)

Anonymous — January 15, 2010 at 4:57 AM said...

//ராமராஜனைத்தான் முதல்வராக்கியிருப்போம்.//

அவரை ரொம்ப மிஸ் பண்ணறோங்க :)

Trackback by ஸ்ரீராம். January 15, 2010 at 4:58 AM said...

நல்ல வேளை...மிஸ் பசுவுக்கு அவங்களைக் கடைசியா கேரளாவுக்கு லாரில ஏத்தி அனுப்பறது நீங்களும் கேள்வி கேக்கலை...அவங்களுக்கும் ஞாபகம் வரலை..

Trackback by சாந்தி மாரியப்பன் January 15, 2010 at 5:13 AM said...

வித்தியாசமான இண்டர்வ்யூ.... இதே போல் உங்களிடமிருந்து இன்னும்... நிறைய எதிர்பார்க்கிறோம்.

Trackback by சகாதேவன் January 15, 2010 at 6:06 AM said...

பசுமையான பேட்டி.

//ராமராஜனவிட்டா வேற யாரையும் தெரியாதுங்க.
அவர் ஒருத்தர்தான் எங்கள புரின்சுகிட்டவர் அவரையும் மூலையில உட்கார வச்சுட்டீங்க//

அருமை

Trackback by Paleo God January 15, 2010 at 6:45 AM said...

பசு நேசன்..?? ::))

Trackback by நண்டு@நொரண்டு -ஈரோடு January 15, 2010 at 7:52 AM said...

நல்ல நயம் .
வாழ்த்துக்கள்

Trackback by பின்னோக்கி January 15, 2010 at 8:10 AM said...

மாட்டுப் பொங்கல் அன்று மாட்டை கௌரவப் படுத்தியிருக்கிறீர்கள். வித்தியாசமாக அதே நேரம் சுவாரசியமாக இருந்தது. தலைப்பு அருமை.

Trackback by சங்கர் January 15, 2010 at 8:51 AM said...

//கொம்புல பெயிண்ட் அடிக்கிறீங்க ஏங்க அது இயற்கையா எங்களுக்கு இருக்கிறது அதுக்கு போய் ஏனுங்க பெயிண்ட் அடிச்சு நாசம் பண்றீங்க //

இயற்கையா இருக்கிறதை நாங்க என்னிக்கு விட்டு வச்சிருக்கோம்

Trackback by அண்ணாமலையான் January 15, 2010 at 8:56 AM said...

வாழ்த்துக்கள்...

Trackback by முனைவர் இரா.குணசீலன் January 15, 2010 at 9:33 AM said...

நன்றாகவுள்ளது வசந்த்..

Trackback by mraja1961 January 15, 2010 at 10:10 AM said...

ஹா! ஹா! ஹாஹா! வித்தியாசமான கற்பனை. எப்படி ரூம் போட்டு யோசிபிங்களோ !!!
அன்புடன்
மகாராஜா

Trackback by Prathap Kumar S. January 15, 2010 at 10:50 AM said...

எங்ககேருந்துய்யா இப்படில்லாம் கான்செப்ட் புடிக்கிற... நல்லாருக்கு...
நல்லாருடே... பொங்கல் வாழ்த்துக்கள்..

Trackback by Kala January 15, 2010 at 11:47 AM said...

வசந் இப்பதான் புரியுது
ஹேமாவின் கவிதைக்கு மிஸ்...மிஸ்
என்று பின்னோட்டம் இட்டது

ஹேமா உங்களை எப்படியெல்லாம்
கூப்பிடுகிறார் இந்த வசந்வசந்துக்கு மனிதர்களைவிட.....ஊர்வன,
பறப்பன,{நான்குகால்}நடப்பன மேல்
ரொம்ப,ரொம்ப பாசம் அதிகம் போலும்........!!!
பேசாமல் மிருகவைத்தியருக்கு மாறிவிட்டால்
நாங்கள் உங்களிடமிருந்து இன்னும்
அறிந்து கொள்ளலாம் அல்லவா!!

நன்றி மாட்டுக்காரரே!

Trackback by Radhakrishnan January 15, 2010 at 1:18 PM said...

மிகவும் அசத்தலாக இருந்தது. ஒரு உயிரின் உணர்வை படம்பிடித்த விதம் அட்டகாசம்.

இனிய மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துகள்.

Trackback by *இயற்கை ராஜி* January 15, 2010 at 1:39 PM said...

வாழ்த்துக்கள்

Trackback by பா.ராஜாராம் January 15, 2010 at 2:03 PM said...

:-)))

Trackback by Thenammai Lakshmanan January 15, 2010 at 2:23 PM said...

பாட்டுன்னதும் ஞாபகம் வருது உங்களுக்கு பிடிச்ச பாட்டு எது?


மிஸ் பசு : வந்தேண்டா பால்காரன்

superb vasanth
eppadi ippadi ellam idea varuthoooo????

:-)))))))))

Trackback by ஹேமா January 15, 2010 at 2:44 PM said...

வசந்து....வர வர மூளை விருத்தியடைஞ்சுகிட்டே போகுது.
ம்க்கும் ...மாட்டை புரிஞ்சுக்கிட்ட அளவுக்கு சரியா மனுசங்களைப் புரிஞ்சுக்கல நீங்க !

நான் நினச்சிட்டே படிக்கிறேன்.கலா சொல்லியிருக்கா.

(டேய்)இந்தப் பதிவை மனசில வச்சுக்கிட்டா என் பதிவில
மிஸ் ன்னு பின்னூட்டம்.
இருக்கட்டும் இருக்கட்டும்.
நானும் கவனிச்சுக்கிறேன்.

Anonymous — January 15, 2010 at 4:11 PM said...

வசந்த் யாரோ பேசராங்கன்னு வந்தேன்.. உன்னை பேட்டி எடுத்த அந்த மனிதனை பாராட்டணும்...

ஹாப்பி பொங்கல்...(உன்) :))

Trackback by Unknown January 15, 2010 at 4:35 PM said...

என்னங்க இது வருசம் பூரா புண்ணாக்கும் , வைக்கோலும் குடுக்கிறீங்க இந்த ஒரு நாள்மட்டும் சம்பிரதாயத்துக்காக எங்களுக்குன்னு பொங்கல் வைக்கிறீங்க அதும் கொஞ்சூண்டு மீதியெல்லாம் நீங்களே சாப்ட்டுறீங்க.
/////

ha haa nice

Trackback by Starjan (ஸ்டார்ஜன்) January 15, 2010 at 5:44 PM said...

பொங்கல் வாழ்த்துக்கள்..

Trackback by அன்புடன் அருணா January 15, 2010 at 6:01 PM said...

இனிய மனுஷப் பொங்கல் + மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்!

Trackback by சீமான்கனி January 15, 2010 at 6:36 PM said...

வாஹ ... மாப்ளே....அருமை கற்பனை....நியாயமான ஆசைகள்...அடுத்து மாட்டுக்கு டிரஸ் டிசைன் பண்ணும் படலாமா கலக்கல்....இனிய வசந்த் பொங்கல் வாழ்த்துகள் ...

Trackback by ஜான் கார்த்திக் ஜெ January 15, 2010 at 9:02 PM said...

//சரி எல்லாம் இன்னிக்கு செய்றீங்க இன்னிக்கு ஒரு நாளாவது எங்களுக்கு ஒரு புது சட்டதுணி எடுத்து போட்டுவிடணும்ன்னு தோணலியா? //

கலக்கிடீங்க.. பொங்கல் வாழ்த்துக்கள்!

Trackback by balavasakan January 16, 2010 at 12:20 AM said...

வசந்துக்கு இனிய மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்...ஹ..ஹி..

Trackback by தாராபுரத்தான் January 16, 2010 at 4:17 AM said...

விவரமான பேட்டிதான்.நல்லமாட்டுக்கு ஒரு ..டு..

Trackback by ஜெட்லி... January 16, 2010 at 5:12 AM said...

நல்ல கற்பனை நண்பா...

Trackback by vivasayi January 16, 2010 at 6:40 AM said...

:-))))

Trackback by சிங்கக்குட்டி January 16, 2010 at 10:11 AM said...

எப்படி வசந்த் உங்களால மட்டும் இப்படி எல்லாம் வித்தியாசமாக சிந்திக்க முடிகிறது? :-)....

சூப்பரூ :-)

Trackback by S.A. நவாஸுதீன் January 16, 2010 at 10:21 AM said...

ஹா ஹா ஹா. இனிய மனுஷ/மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள் வசந்த்.

Trackback by சிநேகிதன் அக்பர் January 16, 2010 at 11:14 AM said...

நல்லாயிருக்கு வசந்த்.

மாட்டுக்குன்னு தனிப்பட்ட குணம் இருக்கு. மனசனுக்கு அது இல்லை. இல்லையா.

Trackback by கமலேஷ் January 16, 2010 at 1:07 PM said...

intresting தலை...திருநாள் வாழ்த்துக்கள்...

Trackback by ஜெஸ்வந்தி - Jeswanthy January 16, 2010 at 2:30 PM said...

வந்தேன். படித்தேன்.சிரித்தேன்.

Trackback by Ananya Mahadevan January 16, 2010 at 6:19 PM said...

அட்றா சக்கை. வித்தியாசத்திற்கு ஒரு வஸ்ந்த். well done.

Trackback by ப்ரியமுடன் வசந்த் January 17, 2010 at 5:40 AM said...

சுசிக்கா மிக்க நன்றி சிரிக்கவச்சுட்டேனே...

சித்ரா நன்றிங்க

ஜமாலண்ணா ரொம்ப நன்றி அப்போ இந்த போஸ்ட் உங்களுக்கு பிடிச்சிருக்கே.....

அகிலா ஆமாவா? அவ்.. நன்றி அகிலா...

அது கூட முன்னமே சொல்லிட்டாருங்க அவர் ஸ்ரீராம் இதோ இங்க http://priyamudanvasanth.blogspot.com/2009/09/blog-post_08.html
நன்றி ஸ்ரீராம்

அமைதிச்சாரல் தலைவியே வருக வருக நன்றி...

சகாதேவன் நன்றிங்க

ஷங்கர் நல்லவேளை பசுமட்டும் சொன்னேன் அவ்வ் நன்றி ஷங்கர்

நண்டு சார் நன்றி சார்

பின்னோக்கி நன்றி தல

சங்கர் ம்ம் நன்றிங்க

அண்ணாமலையான் நன்றி மல...

குணா நன்றி நண்பா

ராஜா நன்றிங்க மகாராஜா

நாஞ்சில் நன்றிடே

கலா எனக்குமட்டும் ஆங்கில கலா ஹேமாக்கு மட்டும் தமிழ் கலாவா உங்க கூட கா....

நன்றி ராதாகிருஷ்ணன் சார்

நன்றி ராஜி டீச்சர்......

நன்றி பாரா

நன்றி தேனம்மா

நன்றி ஹேம்ஸ் அங்கசொன்னதுக்கு அர்த்தம் வேற ஹேமா நன்றி

மயிலக்கா ம்ம் நன்றிக்கா

பிரபு நன்றிப்பா

ஷேக் நன்றி

அருணா பிரின்ஸ் நன்றி

சீமான்கனி நன்றி மாப்ள

ஜான் கார்த்திக் நன்றிங்க தல

வாசு நன்றிப்பா

தாராபுரத்தான் நன்றிங்கய்யா

ஜெட்லி நன்றி

ராஜா நன்றி

சிங்ககுட்டி நன்றி

நவாஸ் ஹா ஹா ஹா நன்றிங்க

நன்றி அக்பர்

நன்றி கமலேஷ்

நன்றி ஜெஸ்ஸம்மா

நன்றி அநன்யா மகாதேவன்

Anonymous — January 17, 2010 at 9:41 AM said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...

Trackback by Ammu Madhu January 20, 2010 at 2:41 AM said...

Happy new year vasanth.sweet parcel anuppiyaachu ungalukku.

Trackback by சநத் January 20, 2010 at 12:03 PM said...

dai mappu
velai illaiya
ennakum illai
konjam ennoda account poi
eppadi page create pannrathunu sollouda
i am waiting for your acton

Trackback by shaki January 20, 2010 at 9:48 PM said...

nice matu ponkal not for masap pnkal