வால் மனிதன்

| January 6, 2010 | |
நம் முன்னோர்களுக்கு இருந்திருந்த நாம் இழந்த சுயம் வால் இப்போவும் நமக்கு இருந்திருந்திருந்தால் என்னவெல்லாம் நடந்திருக்கும் என்று ஒரு அலசல் :)(முதலில் உங்களுக்கு இந்த குழந்தைக்கு இருப்பது போல் வால் இருந்திருந்தால் எப்பிடியிருக்கும் என்று நினைத்துப்பார்த்து கொள்ளுங்கள் அப்புறம் பதிவு)

1.ஆஸ்பிட்டலில் உயரம்,எடை,இவற்றுடன் வாலின் நீளமும் அடையாளமாக கொடுக்க வேண்டியிருந்திருக்கும்....

2.டீச்சர் இவன் என் வால பிடிச்சு இழுத்துட்டே இருக்கான் டீச்சர் அப்பிடின்னு குழந்தைகள் வகுப்பறையில் சொல்லி கொண்டிருக்கும்....

3.சிம்பு விரல் வித்தைக்கு பதிலாக வால் வித்தை காட்டியிருப்பார்...

4.பெண்களுக்கு வாலில் அணிய கூடிய புதுவித தங்க ஆபரணம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும்.....

5.குடுமிப்பிடி சண்டைக்கு பதிலாக வால் பிடி சண்டைகள் நடந்து கொண்டிருக்கும்...

6.வால் பராமரிப்பு அழகு நிலையம் தொடங்கப்பட்டிருக்கலாம்....

7. கை வெட்டு,கால் வெட்டு இதோட வால் வெட்டும் நடந்துருக்கும்....

8. வாலில் இருக்கும் முடிக்கு தனியா பிளிச் கலரிங் பண்ண பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டிருக்கும்....9.வீட்டில் கணவன் மனைவியோட முந்தானைய பற்றி திரிவதற்க்கு பதிலாக வாலைப்பிடித்து திரிந்து கொண்டிருக்கலாம் அது மட்டுமல்லாது திருமணத்தின் போது இருவரின் வால்களையும் சேர்த்துவைத்து முடிச்சு போட்டாலும் போட்டிருப்பார்கள்.....

10. வித் வால் ஃபேண்ட், வித்தவுட் வால் ஃபேண்ட் என இருவகை ஃபேண்ட்ஸ் துணிக்கடைகளில் கிடைக்கும் .....

11.வால் ஸ்பெசலிஸ்ட் மருத்துவர்கள் இருந்திருப்பார்கள்....

12.வால் நீளமாக வளர சிறப்பு மருந்து என்ற விளம்பரங்கள் கண்ணில் தட்டு படும்......

13.விஜய் வாலை வச்சே டான்ஸ் ஒண்ணு ஆடிருப்பார்....

14.போலீஸ் மாமா லஞ்சம் வாங்க வாலை யூஸ் பண்ணிடிருப்பார்...

15. நவ யுக இளைஞிகள் வாலை ஸ்டைலாக மூஞ்சிக்கு முன்னாடி சுத்திட்டு வரவும் சான்ஸ் இருக்கு ஜடைய அப்ப அப்ப சுத்துறாங்களே அது மாதிரி....

நான் இப்போ நம்ம வடிவேலுக்கு வால் இருந்திருந்தா அதை வச்சு எப்டியெல்லாம் காமெடி பண்ணிட்டு இருப்பார்ன்னு நினைச்சு சிரிச்சுட்டு இருக்கேன்....Post Comment

65 comments:

Trackback by seemangani January 6, 2010 at 1:44 AM said...

hey.....me d 1 st...

Trackback by thenammailakshmanan January 6, 2010 at 1:49 AM said...

என்ன வால்தனமிது

ஹிஹிஹி நல்லா இருக்கு வசந்த்

Trackback by seemangani January 6, 2010 at 1:52 AM said...

மாப்ஸ் வால் கற்பனை சுப்பர்.....நான் இப்போ உனக்கு வால் இவ்ளோ நீளம் இருக்கும்னு நினைச்சு சிரிச்சுட்டு இருக்கேன்....

Trackback by seemangani January 6, 2010 at 1:56 AM said...

உன் ரூமுக்கு பக்கத்துல ஒட்டக பண்ணை எதாச்சும் இருக்கா???மாப்ஸ்...:))))

Trackback by பூங்குன்றன்.வே January 6, 2010 at 2:13 AM said...

2.டீச்சர் இவன் என் வால பிடிச்சு இழுத்துட்டே இருக்கான் டீச்சர் அப்பிடின்னு குழந்தைகள் வகுப்பறையில் சொல்லி கொண்டிருக்கும்....

//3.சிம்பு விரல் வித்தைக்கு பதிலாக வால் வித்தை காட்டியிருப்பார்...//

இரண்டும் நல்லா இருக்குப்பா.

Trackback by ஹேமா January 6, 2010 at 2:17 AM said...

வசந்து.... உங்க வாலு நீண்டுகிட்டே போகுதுப்பா.அப்பாடி.....என்ன கற்பனை !

Trackback by முகிலன் January 6, 2010 at 2:30 AM said...

தலைப்பப் படிச்சதும் நீங்களும் அவதார் படத்துக்கு விமர்சனம் எழுதுறீங்களோன்னு நினைச்சிட்டேன். நல்ல கற்பனை.

Trackback by சுசி January 6, 2010 at 2:31 AM said...

//(முதலில் உங்களுக்கு இந்த குழந்தைக்கு இருப்பது போல் வால் இருந்திருந்தால் எப்பிடியிருக்கும் என்று நினைத்துப்பார்த்து கொள்ளுங்கள்//
ஆவ்வ்வ்வவ்..

// அப்புறம் பதிவு)//
ரைட்டு.. எழுதுறத்துக்கு முன்னாடி நீங்க நினைத்துப் பார்த்தீங்களா உ பி

Trackback by சுசி January 6, 2010 at 2:33 AM said...

நான் உங்க கல்யாணத்துல வால் முடிச்சு போட்டா எப்டி இருக்கும்னு நினைச்சு

ஹிஹிஹி.. ஹாஹாஹா.. ஹோஹோஹோ..

Trackback by சுசி January 6, 2010 at 2:36 AM said...

எனக்கு மட்டும் வால் இருந்திருந்தா உங்க பதிவில என் கமன்ட காப்பி பேஸ்ட் செய்றவரை வாலாலையே அடிச்சிருப்பேன் :)))

Trackback by செந்தில் நாதன் January 6, 2010 at 4:37 AM said...

வால்பையன் எங்கிருந்தாலும் உடனடியாக மேடைக்கு வந்து "வால் மனிதர்கள்' சார்பில் வசந்த்தை உங்கள் வாலால் (வார்த்தையால்) அடிக்கும் படி கேட்டு கொள்ளப்படுகிறார்!!

Trackback by T.V.Radhakrishnan January 6, 2010 at 5:00 AM said...

சிரிச்சுட்டு இருக்கேன்....

Trackback by பலா பட்டறை January 6, 2010 at 5:24 AM said...

ரைட்டு ....::))

Trackback by Balavasakan January 6, 2010 at 5:26 AM said...

வசந்து உங்களுக்கு ரொம்பத்தான் வால் கூடிப்போச்சு...

Trackback by cheena (சீனா) January 6, 2010 at 5:29 AM said...

அன்பின் வசந்த்

அருமையான் நகைச்சுவை - கற்பனை - சிந்தித்தால், உண்மையிலேயே நமக்கு வால் இருந்தால் என்ன ஆகி இருக்கும் - இவை எல்லாம் நடக்கும்

ம்ம்ம் நல்வாழ்த்துகள் வசந்த்

Trackback by நட்புடன் ஜமால் January 6, 2010 at 5:38 AM said...

விஜய் வாலாட்டாம் ஆடியிருப்பார்


ஹா ஹா ஹா

வசந்த நீயே விஜயயை ...

Anonymous — January 6, 2010 at 5:56 AM said...

வால்தனம் :)

Trackback by றமேஸ்-Ramesh January 6, 2010 at 6:28 AM said...

வால் ரொம்பத்தான் எகுறுது வசந்.. வீட்டுக்கு போற நெனைப்பில் அதை இதை யோசித்து கொளம்பிக்காத மச்சி.... ஆனாலும் வால் நல்லா இருக்கு..

Trackback by VISA January 6, 2010 at 6:33 AM said...

கற்பனையை தூண்டி விட்டுவிட்டீர்கள் என்ன என்னமோ தோண்றது சே கர்மம். ....இதுக்கும் வால் பையனுக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கா?

Trackback by பித்தனின் வாக்கு January 6, 2010 at 6:38 AM said...

வால் குழந்தையும் உங்கள் கற்பனையும் மிக அழகு வசந்த். நன்றி.

Trackback by சந்தனமுல்லை January 6, 2010 at 6:45 AM said...

hmm..:))

Trackback by கவிக்கிழவன் January 6, 2010 at 7:05 AM said...

வால் அழகு
நல்வால்த்துகள் வசந்த்

Trackback by பின்னோக்கி January 6, 2010 at 7:33 AM said...

3ம் 4 ம் கலக்கல். சிரிப்பை அடக்க முடியவில்லை.

Trackback by ஜிஎஸ்ஆர் January 6, 2010 at 7:56 AM said...

அந்த போட்டோவில் உள்ள குழந்தையின் வால் உண்மையானதா? ஒருவேளை உண்மையாகயிருப்பின் உவமைக்காக தந்துள்ள போட்டோவை தயவு செய்து நீக்கிவிடுங்கள் அடுத்தவர்கள் குறையை எள்ளி நகையாடுவதுபோல் உள்ளது தங்களின் பல படைப்புகளையும் வாசித்திருக்கிறேன் எல்லவற்றையும் விரும்பி ரசித்திருக்கிறேன் ஆனால் இதை என்னால் ரசிக்க முடியவில்லை.

வாழ்க வளமுடன்

என்றும் அன்புடன்
ஞானசேகர்

Trackback by D.R.Ashok January 6, 2010 at 8:28 AM said...

:))) நடத்துங்க...

Trackback by Vidhoosh January 6, 2010 at 8:51 AM said...

:)) சிரிப்போ சிரிப்புங்க.

-வித்யா

Trackback by ஜிகர்தண்டா Karthik January 6, 2010 at 9:01 AM said...

காதலியின் வாலழகைப் பார்த்து காதலன் பாடுவான்,

உன்னிடம் எனக்கு
பிடித்தது வால்
நாம ரெண்டுபேரும்
சேர்ந்துபோகலாம் மால்

Trackback by tamiluthayam January 6, 2010 at 10:25 AM said...

அழகான வால் போட்டி நடக்குமா

Trackback by ஜெட்லி January 6, 2010 at 11:12 AM said...

பார்த்துப்பா அஜித் கோச்சிக்க போறாரு....
மச்சினியே சைட் அடிக்காதே!!

Trackback by ஜெட்லி January 6, 2010 at 11:12 AM said...

பார்த்துப்பா அஜித் கோச்சிக்க போறாரு....
மச்சினியே சைட் அடிக்காதே!!

Trackback by முனைவர்.இரா.குணசீலன் January 6, 2010 at 11:15 AM said...

நன்றாகவுள்ளது..

.சிம்பு விரல் வித்தைக்கு பதிலாக வால் வித்தை காட்டியிருப்பார்...

4.பெண்களுக்கு வாலில் அணிய கூடிய புதுவித தங்க ஆபரணம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும்.....

5.குடுமிப்பிடி சண்டைக்கு பதிலாக வால் பிடி சண்டைகள் நடந்து கொண்டிருக்கும்.//

நல்லவேளை வால் இல்லை..

Trackback by Starjan ( ஸ்டார்ஜன் ) January 6, 2010 at 11:38 AM said...

நீங்க வால்பையனா ...

சேட்டை தாங்க முடியல...

Trackback by வால்பையன் January 6, 2010 at 11:55 AM said...

இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை!

Trackback by கலையரசன் January 6, 2010 at 12:15 PM said...

இப்பயும்தான் இருக்கு மச்சி... ஆனா? சொன்னா திட்டுவ..

Trackback by S.A. நவாஸுதீன் January 6, 2010 at 12:18 PM said...

உங்க வால்தனத்துக்கும் இன்னும் அளவில்லாம போயிருக்கும் வசந்த். எல்லாமே கலக்கல்.

Trackback by கண்மணி January 6, 2010 at 12:36 PM said...

ரொம்ப ஓவராத்தான் போய்கிட்டிருக்கு....கற்பனை அடுத்து என்ன கொம்பா?

Trackback by கடைக்குட்டி January 6, 2010 at 3:02 PM said...

9 த் சூப்பர்..

Trackback by " உழவன் " " Uzhavan " January 6, 2010 at 3:27 PM said...

இந்தக் கான்செப்டை வச்சிக்கிட்டு ஒரு நல்ல நகைச்சுவையான கதை எழுதுங்க வசந்த். நல்லா வரும்

Trackback by அன்புடன் அருணா January 6, 2010 at 3:40 PM said...

ஆனாலும் வால் ரொம்ப அதிகம் உங்களுக்கு!

Trackback by அன்புடன் அருணா January 6, 2010 at 3:40 PM said...

ஆனாலும் வால் ரொம்ப அதிகம் உங்களுக்கு!

Trackback by Kala January 6, 2010 at 4:49 PM said...

நலமா?
நானும் நினைத்துப் பார்த்தேன்!!
சிரிப்புத் தாங்கமுடியவில்லை!!

என்ன தெரியுமா?
வசந்துக்கு ஒரு வால் ,மனைவிக்கு
இருவால் ,பிள்ளைக்கு மூன்றுவால்
இருந்தால் எப்படி?எப்படி??
சமாளிப்பீர்கள் என்று நினைத்துப்
பார்த்தேன்

Trackback by சத்ரியன் January 6, 2010 at 4:50 PM said...

வால்பையன் சொன்னது...
//இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை!//

படிக்கும்போதே நெனைச்சிக்கிட்டு படிச்சேன். பின்னூட்டத்துல தெளிவு படுத்திட்(டார்)ட வாலு.

Trackback by சத்ரியன் January 6, 2010 at 4:51 PM said...

வசந்த்,

புது வருசமும் அதுவுமா ஏன் இந்த “வாலு” த்தனம்.?

சிரிச்சேன் சிரிச்சேன்...!

Trackback by வினோத்கெளதம் January 6, 2010 at 5:02 PM said...

வாலை ஒட்ட நறுக்கனும்..:)

Trackback by ரோஸ்விக் January 6, 2010 at 5:57 PM said...

வால் வலுவடைய ஒரு பிரத்தியேக உடற்பயிற்சி சொல்லித் தருவாங்கய்யா....

இதைப் பெருசாக்காலாம்னு ஒரு கூட்டம் லேகியம் விக்க கிளம்பீரும்.... உஷாரு ராசா... :-))

Trackback by Subankan January 6, 2010 at 6:11 PM said...

நல்ல வால்தனமான பதிவு வசந்த்

Trackback by காதல் கவி January 6, 2010 at 7:24 PM said...

:))

Trackback by அக்பர் January 6, 2010 at 8:06 PM said...

நல்ல கற்பனை.

ஆமா அந்த குழந்தைக்கு உண்மையிலேயே வால் இருக்கா.

Trackback by ஸ்ரீராம். January 6, 2010 at 8:41 PM said...

சுழற்றி அடிச்சுட்டீங்க....

Trackback by thenammailakshmanan January 6, 2010 at 9:34 PM said...

ஷாலினியை சைட் அடிக்கும் வால்பையன் வாழ்க

Trackback by ஹுஸைனம்மா January 6, 2010 at 11:44 PM said...

சரியான வாலுதான் நீங்க..

Anonymous — January 7, 2010 at 6:53 AM said...

ஹைய்யோ ஹைய்யோ......

Trackback by பட்டாபட்டி.. January 7, 2010 at 2:36 PM said...

வாளு.. வாளுன்னு வாலப்பத்தி சொல்றாங்களே..
எந்த வாலு அப்பு..?

Trackback by Sathish January 7, 2010 at 4:23 PM said...

superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr(ithuvum vaaluthaan..he he)

Trackback by henry J January 7, 2010 at 5:16 PM said...

தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. http://simplygetit.blogspot.com/2009/12/make-money-online-100-orginal-ptc-site.html

Trackback by கல்யாணி சுரேஷ் January 8, 2010 at 6:16 PM said...

:)))))))))..................

Trackback by சிங்கக்குட்டி January 8, 2010 at 8:09 PM said...

சரியான வாலு வசந்த் :-)

Trackback by பலா பட்டறை January 8, 2010 at 9:12 PM said...

என்னாச்சு வசந்த்..போட்டோல்லாம் மாத்தி... சைடுல சைட்டு கிளியராயிடிச்சா..??

இருந்தாலும் அந்த போட்டோதான் டாப்பு::))

Trackback by ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) January 8, 2010 at 11:26 PM said...

nee oru vaalpaiyan paaa

Trackback by தேவன் மாயம் January 9, 2010 at 7:14 PM said...

புத்தாண்டு ’வால்’த்துக்கள் வசந்த்!!

Trackback by பட்டாபட்டி.. January 9, 2010 at 7:22 PM said...

அப்பு.. எல்லோரும் 2010 க்கு வந்துட்டோம்..
சீக்கரம் ஒரு மொக்க பதிவப் போடுங்க ராசா..

Trackback by விஜய் January 9, 2010 at 10:29 PM said...

பயன்கள்

கொசு விரட்ட பயன்படும்

வாலுக்கென புதிய வால்மார்ட் முளைக்கும்

இரு கைகளில் வேலை செய்து கொண்டிருந்தாலும் பிள்ளைகளை, மனைவியை அடிக்க பயன்படும் (திருப்பி வாங்குவது வேறு)

மனைவிமார்கள் கணவனின் வாலுக்கு போட்டு வைத்து வணங்குவார்கள்

எதிர் பயன்கள்

தீபிடிக்க நேரும்

டூ வீலர் ஓட்டுவது சிரமம்

அடிகடி மிதிபடும்

விஜய்

Trackback by Rajalakshmi Pakkirisamy January 10, 2010 at 10:08 AM said...

ha ha ha :)

Trackback by சிவன். January 10, 2010 at 9:08 PM said...

என்ன மச்சான் ரொம்ப பிசி ஆயிட்டாரோ ...???

Trackback by seemangani January 11, 2010 at 12:54 AM said...

ஆமா ரெம்ப பிஸி...எப்ப பார்த்தாலும் கேம் மூட்ல பிஸியாவே இருக்காரு...வசந்து மாப்ளே...ஏதும் விசேசமா....???