சின்ன சின்னதாய் சில...! பார்ட் 2

| December 17, 2009 | |


நானும் என்னோட மனசாட்சியும் பேசுகிட்டே இருக்கும்போது மனசாட்சி சொல்லுது நான் சொல்லுற ஒவ்வொரு பொருளுக்கும் உன்னோட கவிதை சொல்லுன்னுச்சு அதைப்பற்றி பார்ப்போமா?

**************************************************************************************

மனசாட்சி : உன்னோட கண்ணைப்பத்தி கொஞ்சம் சொல்லேன்..

நான்:

உலகத்தை காட்டி என்னை
காட்ட மறந்தவன்...!


**************************************************************************************
மனசாட்சி: சரி நட்சத்திரம் பத்தி சொல்லேன்...

நான் :

நடை பழகும் நிலாவின்
காவல்காரன்...!


***************************************************************************************

மனசாட்சி : ஓஹ்...சரி சரி அந்த மேகம் பத்தி சொல்லேன்

நான் :

நகராத வானத்தின்
நகரும் ஆடை...!

**************************************************************************************

மனசாட்சி : ஆகா இப்டி ஒண்ணு இருக்கோ அப்போ மழைக்கு என்ன சொல்லுவ?

நான் :

மண்ணுக்கு வானம்
தந்த கொடை...!


****************************************************************************************

மனசாட்சி : அருமைப்பா சரி இந்த எறும்பு பத்தி கொஞ்சம் சொல்லேன்..

நான் :

சிக்னலில்லா
ட்ராஃபிக் ரூல்ஸின்
முன்னோடி...!

***************************************************************************************

மனசாட்சி : ஓஹ் சரி இந்த சேவல் பத்தி கொஞ்சம் சொல்லேன்

நான் :

பேட்டரியில்லா
அலாரம்...!

**************************************************************************************

மனசாட்சி : ஆமாவா? அப்போ இந்த கொலுசு பத்தி கொஞ்சம் சொல்லு

நான் :

அபாயம்,அழகு
இரண்டுக்குமான முன்னெச்சரிக்கை...!

*************************************************************************************

மனசாட்சி: ஏம்பா சரி விடு கோலம் பத்தி ரெண்டு வரி சொல்லு

நான்:

சிக்கிய
சிக்கல்...!

**************************************************************************************
மனசாட்சி : நெற்றியிலிடும் குங்குமம் பத்தி கொஞ்சம் சொல்லு...

நான் :

விதவையின்
ஏக்கம்...!


*************************************************************************************
மனசாட்சி : எல்லாத்துக்கும் விடை வச்சுருக்க காக்கா பத்தி சொல்லேன்

நான் :

சனீஸ்வர
பகவானின் ஸ்கூட்டர்...!

(சிரிக்ககூடாது ஆமா)


***************************************************************************************

மனசாட்சி : ஹ ஹ ஹா சரி சரி ஓட்டு பத்தி சொல்லேன்

நான் :

நோட்டுக்கு
மட்டும்...!

**************************************************************************************

மனசாட்சி : சரி கடைசியா காதலர்கள் பத்தி சொல்லு

நான் :

அழுகிய பழத்தில்
இருக்கும் வண்டுகள்...!


**************************************************************************************

Post Comment

43 comments:

Trackback by நட்புடன் ஜமால் December 18, 2009 at 4:18 AM said...

நகரா மேகத்திற்கு நகரும் ஆடை

நல்ல சிந்தனை.

---------------

ஏதோ மிஸ்ஸிங் வசந்த் ...

Trackback by Balavasakan December 18, 2009 at 5:37 AM said...

நடை பழகும் நிலாவின்
காவல்காரன்...!

சூப்பர் பாஸ்...

Trackback by உங்கள் தோழி கிருத்திகா December 18, 2009 at 5:37 AM said...

சனீஸ்வர
பகவானின் ஸ்கூட்டர்...!/////////

மிகவும் ரசித்தேன் :)

Trackback by அண்ணாமலையான் December 18, 2009 at 6:20 AM said...

கலக்குங்க...

Trackback by நாடோடி இலக்கியன் December 18, 2009 at 7:00 AM said...

மேகம்,எறும்பு,சேவல் மிகவும் ரசித்தேன்.

ஆலங்குயில் கூவும் ரயில் மாதிரி இதுக்கும் ஒரு மெட்டு போட்டுடலாமா?

Trackback by seemangani December 18, 2009 at 7:05 AM said...

//அபாயம்,அழகு
இரண்டுக்குமான முன்னெச்சரிக்கை...!

விதவையின்
ஏக்கம்...!

நகராத வானத்தின்
நகரும் ஆடை...!//

மிகவும் ரசித்தேன்.
அருமை மாப்ஸ் ...கலக்கல்...வோட்டு போட்டுட்டேன் காசு???

Trackback by seemangani December 18, 2009 at 7:06 AM said...

புது சட்டை நல்லாக்கு...

Anonymous — December 18, 2009 at 7:15 AM said...

மீண்டும் ஒரு வசந்த் டச்...இதை மனசாட்சி சொல்லாமல் நீயே கவிதை நடையில் சொல்லியிருந்தால் மனதில் இன்னும் ஒன்றியிருக்கும் வசந்த்.. நல்ல கவிதை வரிகளை இடையில் வந்த வசன நடையால் ஒளி ஒலி இழந்தது போல்.....

Trackback by சந்தனமுல்லை December 18, 2009 at 7:25 AM said...

புதிய முயற்சி, புது டெம்ப்லேட் - கலக்கறீங்க வசந்த்! :-))

Trackback by முரளிகுமார் பத்மநாபன் December 18, 2009 at 7:27 AM said...

நண்பா, கொலுசு மேட்டர் சூப்பரு....

Trackback by ரோஸ்விக் December 18, 2009 at 8:00 AM said...

மக்கா... ரொம்ப அருமையா இருக்கு.
எங்க என்ன பத்தி கொஞ்சம் சொல்லேன்?? :-)))

Trackback by ஆ.ஞானசேகரன் December 18, 2009 at 8:12 AM said...

அருமை எல்லாமே அருமை...

Trackback by ஜீவன் December 18, 2009 at 8:24 AM said...

பதிவும் படங்களும் அருமை ...! மழை படம் அழகு...!

Trackback by Mohan Kumar December 18, 2009 at 8:33 AM said...

என்னா செம மூடில் இருக்கீங்க போல? Good...

Trackback by கல்யாணி சுரேஷ் December 18, 2009 at 9:29 AM said...

ரொம்ப நல்லா இருக்கு வசந்த்.

//நகராத வானத்தின்
நகரும் ஆடை...!//

அருமை.

Trackback by D.R.Ashok December 18, 2009 at 9:43 AM said...

//அழுகிய பழத்தில்
இருக்கும் வண்டுகள்...!//
அழகிய தானே வசந்த் ;)

Trackback by ஷங்கி December 18, 2009 at 9:47 AM said...

நல்லாருக்கு!
எனக்கும் அசோக் சொல்ற சந்தேகம் வந்தது. அப்புறம் மனசாட்சின்னு வேற சொல்றீங்க!

Trackback by VISA December 18, 2009 at 9:55 AM said...

//நகராத வானத்தின்
நகரும் ஆடை...!//

wow wow

எப்படிப்பா இப்படி அசத்துற. கவிதைகள் சூப்பர்.

Trackback by அதி பிரதாபன் December 18, 2009 at 10:21 AM said...

கொலுசு சூப்பர்.

Trackback by க.பாலாசி December 18, 2009 at 10:24 AM said...

//நகராத வானத்தின்
நகரும் ஆடை...!//

இது அழகு....

விதவையின் ஏக்கமும் தெரிகிறது...

நல்ல இடுகை...

Trackback by tamiluthayam December 18, 2009 at 10:40 AM said...

நீங்கள் குறிப்பிட்ட ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஹைக்கூ கவிதையாக பளிச்சீட்டது.

Trackback by ராமலக்ஷ்மி December 18, 2009 at 11:12 AM said...

மனசாட்சியும் நீங்களும்..
வித்தியாசமான சிந்தனை. ரசித்தேன்.
அத்தனையும் அழகான ஹைக்கூ.
வாழ்த்துக்கள் வசந்த்.

Trackback by அமுதா கிருஷ்ணா December 18, 2009 at 11:21 AM said...

படங்களும் அருமை....

Trackback by ஹேமா December 18, 2009 at 1:09 PM said...

வசந்து....எங்க கற்பனயெல்லாம் நீங்க எடுத்துக்கிட்டா எப்பிடியப்பு !அழகா நல்லாருக்கு.டெம்லெட் ரொம்ப நல்லாருக்கு வசந்த்.

Trackback by அமிர்தவர்ஷினி அம்மா December 18, 2009 at 1:27 PM said...

எனக்கு கொலுசும், கோலமும் ரொம்ப பிடிச்சிருந்தது.

அப்புறம் இந்த ப்லாக் டெம்ப்ளேட் படிக்க வசதியாக இருக்கிறது. முந்தையதில் எழுத்துக்களே சரிவர தெரியாது (எனக்கு கண்ணு நல்லா தெரியும் :)))

Trackback by ஜெஸ்வந்தி December 18, 2009 at 1:29 PM said...

//சனீஸ்வர
பகவானின் ஸ்கூட்டர்...!/////////
Super Vasanth. very interesting.

Trackback by பா.ராஜாராம் December 18, 2009 at 1:54 PM said...

!

Trackback by ஸ்ரீராம். December 18, 2009 at 2:13 PM said...

"நகராத வானத்தின் நகரும் ஆடை..."

டாப்.

(தோற்றம் மாறி 'ஜம்'முனு இருக்கு..?)

Trackback by சி. கருணாகரசு December 18, 2009 at 3:10 PM said...

கொலுசு...
கோலம்...
மேகம்...
கண்....
மிக ரசித்தேன்.

Trackback by Sivaji Sankar December 18, 2009 at 4:09 PM said...

:) :) :) Good thought..!

Trackback by Priya December 18, 2009 at 5:04 PM said...

சூப்பரா இருக்கு...போட்டோஸும் ரொம்ப அழகு!

Trackback by தியாவின் பேனா December 18, 2009 at 5:15 PM said...

அருமை

Trackback by கோபிநாத் December 18, 2009 at 6:55 PM said...

கற்பனைக் கவிதை சூப்பர்

Trackback by Patta Patti December 18, 2009 at 7:11 PM said...

சூப்பர்

Trackback by T.V.Radhakrishnan December 18, 2009 at 7:23 PM said...

அருமை

Trackback by பூங்குன்றன்.வே December 18, 2009 at 7:34 PM said...

இப்படியா ஒரு மனுஷன் கவிதை,மனசாட்சின்னு ரவுண்டு கட்டி அடிக்கிறது..டையார்டா இல்ல நண்பா :)

ரொம்பவும் ரசிச்சேன்.

Trackback by அன்புடன் அருணா December 18, 2009 at 8:01 PM said...

ம்ம்ம் கலக்குங்க!

Trackback by thenammailakshmanan December 18, 2009 at 9:00 PM said...

வசந்த் ப்ளாக் டெம்ப்லேட் அற்புதம்

நகரா வானத்தின் நகரும் ஆடை., சனீஸ்வர பகவானின் ஸ்கூட்டர் அற்புதம்

ஆனா கடசீலதான் உண்மை இல்லை

மனசாட்சி யார் மேலேயோ கோபமா இருக்கு

Trackback by றமேஸ்-Ramesh December 18, 2009 at 9:58 PM said...

கொலுசு என்னைக் கொல்லுது வசந்

Trackback by பிரியமுடன்...வசந்த் December 19, 2009 at 12:59 AM said...

நன்றி ஜமால் அண்ணா நானும் யோசிச்சேன் ஏதோ ஒண்ணு மிஸ்ஸிங்க்

நன்றி வாசு :)

நன்றி கிருத்திகா

நன்றி அண்ணாமலையான்

நன்றி நாடோடி இலக்கியன்

நன்றி மாப்பு சீமான் கனி

நன்றி தமிழரசி அப்பிடின்னா எல்லாரையும் மாதிரி ஆயிடுமே...!

நன்றி சந்தனமுல்லை

நன்றி முரளி :)

நன்றி ரோஸ்விக்
ரோஜா சவுரி ஹ ஹ ஹா

நன்றி ஞான சேகரன்

நன்றி ஜீவன்

நன்றி மோகன் குமார்

நன்றி கல்யாணிசுரேஷ்

நன்றி ஷங்கி

நன்றி அஷோக் அழுகியபழமேதான் :)

நன்றி விசா சார்

நன்றி அதிபிரதாபன்

நன்றி பாலாசி

நன்றி தமிழுதயம்

நன்றி ராமலக்ஷ்மி மேடம் :)

நன்றி அமுதாகிருஷ்ணா

நன்றி அமித்து அம்மா :)

நன்றி ஹேமா :)

நன்றி ஜெஸ்ஸம்மா :)

நன்றி பாரா

நன்றி ஸ்ரீராம்

நன்றி கருணாகரசு

நன்றி சிவாஜிசங்கர்

நன்றி பிரியா

நன்றி தியா

நன்றி கோபிநாத்

நன்றி பட்டாபட்டி

நன்றி டி,வி.ஆர்

நன்றி பூங்குன்றன்

நன்றி அருணா மேடம் :)

நன்றி தேனக்கா :)

நன்றி ரமேஷ்

Trackback by S.A. நவாஸுதீன் December 19, 2009 at 10:40 AM said...

வாவ். எல்லாமே அருமையா இருக்கு வசந்த்.

காக்கா மேட்டர் - ஹா ஹா ஹா. இவரையும் விடலையா நீங்க.

Trackback by பின்னோக்கி December 21, 2009 at 11:48 AM said...

அழகான ஹைக்கூக்கள்.

எறும்பு கற்பனை அருமை.

Trackback by ரேவா March 19, 2011 at 8:04 PM said...

கொலுசு
நான் :

அபாயம்,அழகு
இரண்டுக்குமான முன்னெச்சரிக்கை...!

மேகம்
நான் :

நகராத வானத்தின்
நகரும் ஆடை...!

சூப்பர் வசந்த் சார்... நல்ல கற்பனை மனசாட்சியோடு...