ராமு ராணி

| December 13, 2009 | |
"டேய் ராமு ராமு ஒன்னோட பென்சில் கொஞ்சம் கொடுடா எதிட்டு கொடுக்குறேன் என்னோடது ஒடஞ்சுபோச்சுடா ப்ளீஸ்டா"

"நா உங்கிட்ட அழ்ரப்பர் கேக்கும்போது நீ கொடுக்கமாட்டேன்னுட்டேல"
போ நான் உனக்கு தரமாட்டேன் போடி...

"டேய் ராமு கொடுடா உங்கிட்ட ரெண்டு இருக்குன்னுதான கேட்டேன் "டீச்சர் வரதுக்குள்ள கொடுடா ப்ளீஸ்டா வீட்டுப்பாடம் எழுதணும்டா " வீட்டுக்கு போனதும் எங்கம்மாகிட்ட சொல்லி உனக்கு புது பென்சில் வாங்கிக்கொடுக்குறேண்டா" ப்ளீஸ்டா ப்ளீஸ் ப்ளீஸ்...

"போடி தரமாட்டேன் போ "

ஏண்டா கோச்சுக்கிற சரி "இனி நீ கேக்கும்போது அழ்ரப்பர் கொடுக்குறேண்டா" இப்போ பென்சில் கொடுடா "நீ என் ஃப்ரண்ட்தான ஹெல்ப் பண்ண மாட்டியா?"

"வீட்டுக்கு போனதும் வாங்கிகொடுக்கணும் சரியா?" இந்தா வச்சுக்க...

"ஹைய்யா என் ராமுன்னா ராமுதான் இந்தா ஆரஞ்ச்மிட்டாய் எங்கண்ணே ரெண்டு கொடுத்தான் ஆளுக்கொண்ணு வச்சுக்கிடலாம்!"

ம்ம்.."ஏய் ராணி மிட்டாய் நல்லாருக்குடி நாளைக்கு வரும்போதும் இதே மாதிரி ஒண்ணு உங்கண்ணன் கிட்ட சொல்லி வாங்கிட்டு வாடி"

முடியாதுடா "எங்கண்ணன் எங்கப்பாட்ட சொல்லிக்குடுத்துடுவான் அப்புறமா எங்கப்பா என்ன அடிப்பார் தெரியுமா?" மிட்டாய் மட்டுமில்ல நான் எது கேட்டாலும் வாங்கித்தர மாட்டாரு எங்கண்ணன் இருக்கானே அவன் எது கேட்டாலும் வாங்கித்தருவார் எனக்கு அழுவையா வரும் தெரியுமா?

சீ உங்கப்பா ரொம்ப மோசம் ராணி "எங்கப்பா எவ்வளவு நல்லவரு தெரியுமா?"என்னைய அடிக்கவே மாட்டாரு நான் என்ன கேட்டாலும் வாங்கி கொடுப்பாரு எங்கக்கா சரண்யாக்கும் எல்லாம் வாங்கி கொடுப்பார் தெரியுமா ? நேத்து கூட ரிமோட் கார் நான் கேட்டதும் கடைக்கு கூடிட்டு போய் வாங்கி குடுத்தார் நாளைக்கு அத உனக்கு எடுத்துட்டு வந்து காட்டுறேன் சரியா ஏன் ராணி உங்கப்பா அப்பிடியிருக்காரு?

ஆமாடா உங்கப்பாதான் பெஸ்ட்" எனக்கென்னடா தெரியும் நான்சின்னப்புள்ளையா இருக்கும்போதிருந்தே அப்பிடித்தான் எங்கப்பா என்னைய அடிச்சுட்டே இருப்பாரு" ம்க்கும்..ம்க்கும்..ம்க்கும்..

சரி ராணி அழுவாதடி கண்ண தொடச்சுக்க "இந்தா சட்ட"
ஏன் ராணி உங்கப்பா அடிக்கும்போது உங்கம்மா தடுக்கமாட்டங்களா?


"எங்கம்மா தடுக்க வந்தாலும் எங்கம்மாவையும் அடிப்பார்டா" பாவம் அவங்க எனக்காக அடி வாங்கிட்டு அவங்களும் அழுவாங்க எனக்கு பாவமா இருக்கும் என்னமோ ரெண்டு பேரும் பேசிக்குவாங்க "நான் பிறக்கமுன்னாடியிருந்தே எங்கப்பா ஆம்பிளப்பிள்ளை வேணும்னு சொன்னாராம் எங்கம்மா பொம்பளைப்புள்ள வேணும்ன்னு சொன்னாங்களாம்" அதே மாதிரி நானும் பொறந்துட்டேனா அது எங்கப்பாக்கு பிடிக்கலியா அதான் என்மேல அவருக்கு கோபம்.அவருக்கு "பொம்பளைப்புள்ளையே புடிக்காதாம்"

"ஆமாவா ராணி" ஆமா ஆம்புள்ளப்புள்ளைக்கும் பொம்பளைப்புள்ளைக்கும் என்ன வித்யாசம்டி? "ரெண்டுபேருமே ஒரேமாதிரிதான் சாப்டுறோம் ரெண்டுபேரும் ஒரே மாதிரிதான அழுவுறோம்,சிரிக்கிறோம்,படிக்கிறோம்" பின்ன ஏன் இதுமாதி நினைக்கிறார் உங்கப்பா?

நீயும் நானும் சின்னப்பசங்களா இருக்குறதுனால எதுவும் தெரில எனக்கும் ஆனா "இது தப்புன்னு மட்டும் தெரியுதுடா எனக்கு"..

ம்ம் சரி விடு ராணி" நானிருக்கேன் உனக்கு எதெல்லாம் வேணும்ன்னு சொல்லு எங்கப்பாட்ட சொல்லி நான் வாங்கிகொடுக்கிறேன் சரியா?"

இப்போ இப்பிடிதான் சொல்லுவ "நீயும் பெரியவனாயிட்டா இப்பிடித்தான் மாறிடுவ!"


மாட்டேன்பா ப்ராமிஸா" நான் பெரியவனானாலும் உன்னையும் சரி உன் மாதிரி பொண்ணுங்களையும் கஷ்டப்படுத்த மாட்டேன்பா" நானும் எங்கப்பா மாரியே தான் !

எவ்வளவு நல்லவன்டா நீ சரி நான் உன்ன நம்புறேன் இப்போ வா ரெண்டுபேரும் பாட்டுப்பாடிட்டே விளையாடலாம்

ம் சரிடி
நான் ரெடி
"ராணி ராணி வாடி
ராமு சொல்றான் வாடி
ராங்கு பண்ணாம வாடி
ராஜா ராணி ஆட்டம் ஆட வாடி
போங்காட்டமாடாத வாடி
போட்டிக்கு போட்டி வாடி
சேர்ந்து ஆடலாம் வாடி
வானம் தொடலாம் வாடி"

Post Comment

72 comments:

Trackback by சீமான்கனி December 14, 2009 at 1:35 AM said...

பாஸ்ட்....நான்தான்...
//எவ்வளவு நல்லவன்டா நீ சரி நான் உன்ன நம்புறேன் இப்போ வா ரெண்டுபேரும் பாட்டுப்பாடிட்டே விளையாடலாம் //

போங்காட்டம்ஆடலைதனே வசந்த்...

ம்ம்ம்ம்.....இப்டியே இருந்துட்ட எவ்ளோ நல்லா இருக்கும்....
நல்லா இருக்கு...வசந்த்

Trackback by பா.ராஜாராம் December 14, 2009 at 2:03 AM said...

ரொம்ப நல்லா இருக்கு வசந்த்.கலங்கி போகிறது..

கொஞ்சம் வேலைகள்.அதான் வர இயலாமல் போச்சு.

Trackback by சுசி December 14, 2009 at 2:28 AM said...

//மாட்டேன்பா ப்ராமிஸா" நான் பெரியவனானாலும் உன்னையும் சரி உன் மாதிரி பொண்ணுங்களையும் கஷ்டப்படுத்த மாட்டேன்பா" நானும் எங்கப்பா மாரியே தான் !//

நீங்க இவ்ளோ நல்லவரா உ பி.

நல்ல பதிவு.

Trackback by சுசி December 14, 2009 at 2:31 AM said...

ம்ஹூம்.. கந்தசாமி சொல்ற கருத்த கேக்கமாட்டோம். வசந்து சொல்றததான் கேப்போம்.

Anonymous — December 14, 2009 at 2:50 AM said...

சின்ன வயசில எந்த கபடமும் இருக்கறதில்லைதான். பெரிசானதும் வந்துருதே. நல்ல கதை வசந்த்.

Trackback by சீமான்கனி December 14, 2009 at 2:53 AM said...

"பொம்பளைப்புள்ளையே புடிக்காதாம்" யாரு அந்த ஆசாமி...மிஸ்டர் கந்தசாமி...??
என்னையும் உங்களோடு இணைத்து(எப்படி இணைப்பது சொல்லிகுடுங்க) கொண்டதற்கு நன்றி வசந்த் மாப்ளே...(மண்வாசனை...)ப்ச்

Trackback by ஆ.ஞானசேகரன் December 14, 2009 at 4:41 AM said...

ம்ம்ம்ம்ம் நல்லாயிருக்கு

Trackback by ராமலக்ஷ்மி December 14, 2009 at 5:29 AM said...

சின்னக் குழந்தைகளின் பேச்சின் வாயிலாக அழகாகக் கொண்டு வந்து விட்டிருக்கிறீர்கள் வருந்தத்தகு நிஜங்களை. அருமை வசந்த்.

Trackback by VISA December 14, 2009 at 5:58 AM said...

இதை முற்றிலும் மழலை மொழியில் தான் மனதுக்குள் படித்தேன். ஏக்கங்களை மெலிதாக சொல்லி வலிதாக வலிக்க வைத்துவிட்டீர்கள். இது போன்ற ஸ்நேகமான நட்பெல்லாம் இப்போதுள்ள மெட்ரிகுலேஷனிலும் கான்வென்டுகளிலும் காரில் வந்திறங்கும் குழந்தைகளிடம் இருக்கிறதா?

Trackback by balavasakan December 14, 2009 at 6:10 AM said...

அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள் ... அருமை

Trackback by கலையரசன் December 14, 2009 at 8:06 AM said...

நல்லாயிருடே!!

Trackback by Rajeswari December 14, 2009 at 8:33 AM said...

ரசித்தேன்....

Trackback by S.A. நவாஸுதீன் December 14, 2009 at 10:14 AM said...

மழலையாய் மாறி வாசிக்கும்போது மிக அழகு வசந்த்.

Trackback by தமிழ் உதயம் December 14, 2009 at 11:10 AM said...

மிக எளிமையாக, மிக அழகாக குழந்தை பிராயத்தை சொன்னது அருமை, மீண்டும் நானும் குழந்தை ப்ராயத்திற்கு சென்று விட்டு வந்தேன்.

Trackback by மாதேவி December 14, 2009 at 11:16 AM said...

மழலைகளின் பேச்சினூடாக நல்ல விடயத்தைக் கையாண்டுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

Trackback by Prathap Kumar S. December 14, 2009 at 11:38 AM said...

மக்கா...அழுவாச்சி வருதே... இம்புட்டு நல்லவனா இருக்கீங்களேப்பு...

Trackback by பூங்குன்றன்.வே December 14, 2009 at 11:50 AM said...

கதை அருமை!!!

Trackback by Starjan (ஸ்டார்ஜன்) December 14, 2009 at 12:17 PM said...

சூப்பரப்பு சூப்பரப்பு ....

ஆணென்ன பெண்ணென்ன எல்லாம் ஓரினம் தான் ....

Trackback by நினைவுகளுடன் -நிகே- December 14, 2009 at 12:29 PM said...

கதை சிறப்பு
பழைய நினைவுகளை மனதில் கொண்டுவந்தது .

Trackback by ஸ்ரீராம். December 14, 2009 at 2:35 PM said...

சின்னக் குழந்தைகள்...பெரிய விஷயங்கள் நல்ல வேளை... அவங்கப்பா கள்ளிப்பால் கொடுக்காமல் போனாரே...அந்த மட்டும் நல்லவர்தான்...

Trackback by Menaga Sathia December 14, 2009 at 2:53 PM said...

ரொம்ப நல்லா இருக்கு வசந்த்.

Trackback by ஹேமா December 14, 2009 at 3:01 PM said...

வசந்து...சின்னப்பிள்ளைங்க பேசிக்கிற சாட்டில உங்க மனசைச் சொல்லியிருக்கீங்க.நல்லாருக்கு.

Trackback by Deepan Mahendran December 14, 2009 at 4:04 PM said...

//சரி ராணி அழுவாதடி கண்ண தொடச்சுக்க "இந்தா சட்ட"//

மச்சான்....கதை எழுதும்போது சின்ன புள்ளையாவே மாறிட்டியே மச்சான்... :) (இதுதான் WRITERS TOUCH-ஓ)

Trackback by SUFFIX December 14, 2009 at 5:48 PM said...

கதை நல்லா இருக்கு வசந்த்.

Trackback by Kala December 14, 2009 at 5:55 PM said...

கதை நன்றாக இருக்கின்றது
நன்றி.

Trackback by யாழினி December 14, 2009 at 7:25 PM said...

அழகு வசந்த, மனதை தொட்டது உங்கள் பதிவு! :)

Trackback by வினோத் கெளதம் December 14, 2009 at 8:38 PM said...

வர வர கதையிலும் கலக்குற..:)

Trackback by jothi December 14, 2009 at 9:13 PM said...

வலியான உரையாடல்,..

Trackback by thiyaa December 14, 2009 at 10:03 PM said...

நல்ல கதையாடல்

Trackback by Thenammai Lakshmanan December 14, 2009 at 11:44 PM said...

வசந்த் 3 4 விஷயம் சொல்லணும்

ஒன்னு உங்களோட ப்ரொபைல் பிக்சர் நல்லா இருக்கு

ரெண்டு உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

மூணாவது அது என்ன ராணி யா இருந்தாலும் வாடின்னு கூப்பிடுறது அது நல்லா இல்ல தோழியா இருந்தாலும்

நாலாவது லிபின்னா மொழின்னு அர்த்தம்

Trackback by ப்ரியமுடன் வசந்த் December 15, 2009 at 12:04 AM said...

//seemangani said...
பாஸ்ட்....நான்தான்...
//எவ்வளவு நல்லவன்டா நீ சரி நான் உன்ன நம்புறேன் இப்போ வா ரெண்டுபேரும் பாட்டுப்பாடிட்டே விளையாடலாம் //

போங்காட்டம்ஆடலைதனே வசந்த்...

ம்ம்ம்ம்.....இப்டியே இருந்துட்ட எவ்ளோ நல்லா இருக்கும்....
நல்லா இருக்கு...வசந்த்
//

வாங்க மச்சான் எப்டியிருக்கீங்க..

உங்களுக்காகவே பதிவு போடலாம் போல என்ன கவிதையெல்லாம் அசத்தலா எழுதுறீங்க இங்க பின்னூட்டம் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கு...சின்னமனூர்னாலே டாவுதான் ஞாபகம் வருது அதை இப்போ கொஞ்ச நாளா மறந்திருந்தேன் இப்போ நீங்க வேற ஞாபகபடுத்துறீங்க ஏதோ விட்ட குறை தொட்ட குறை போல சின்னமனூருக்கும் எனக்கும் எக்கச்சக்கதடவை வந்துருக்கேன் மச்சான் என்னோட தங்கையும் அங்கதான் கல்யாணம் முடிச்சுருக்க்கோம்....

Trackback by ப்ரியமுடன் வசந்த் December 15, 2009 at 12:07 AM said...

// பா.ராஜாராம் said...
ரொம்ப நல்லா இருக்கு வசந்த்.கலங்கி போகிறது..

கொஞ்சம் வேலைகள்.அதான் வர இயலாமல் போச்சு.
//

நீங்க தூரமா நின்னு பாத்து வாசிச்சுட்டு திட்டுனாலோ வாழ்த்தினாலோ எனக்கு கேக்கும் அண்ணா அதனால நீங்க பின்னூட்டம் போடலை இல்ல வரலைன்னு ஒண்ணும் வருத்தம் கிடையாது..அதுகெடக்கு உங்க பாசத்துக்கு முன்னாடி அதெல்லாம் ஜுஜ்ஜுபி...

Trackback by ப்ரியமுடன் வசந்த் December 15, 2009 at 12:10 AM said...

// சுசி said...
ம்ஹூம்.. கந்தசாமி சொல்ற கருத்த கேக்கமாட்டோம். வசந்து சொல்றததான் கேப்போம்.//

சுசிக்கா எப்டியிருக்கீங்க? என்ன நார்வேல இப்போவே கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ஆரம்பிச்சுடுச்சா? ரொம்ப பிஸியாயிட்டீங்க போல இருங்க மாமனை உங்களுக்கு ஒத்தாசையா வராததுக்கு மெயில் பண்ணி திட்டுறேன்....

Trackback by ப்ரியமுடன் வசந்த் December 15, 2009 at 12:11 AM said...

//சின்ன அம்மிணி said...
சின்ன வயசில எந்த கபடமும் இருக்கறதில்லைதான். பெரிசானதும் வந்துருதே. நல்ல கதை வசந்த்.
//

அப்டியெல்லாம் எல்லாரும் இல்லைங்க அம்மிணி

உங்க பேர் சொல்ல மாட்டேன்றீங்க பாத்தீங்களா வயசுக்கு மூத்தவங்களைப்போயி இப்பிடி அம்மிணின்னு கூப்புடுறது சங்கோஜமா இருக்குங்க....

Trackback by ப்ரியமுடன் வசந்த் December 15, 2009 at 12:12 AM said...

//ஆ.ஞானசேகரன் said...
ம்ம்ம்ம்ம் நல்லாயிருக்கு
//

வாங்க சேகரன் மிக்க நன்றி

Trackback by ப்ரியமுடன் வசந்த் December 15, 2009 at 12:16 AM said...

//ராமலக்ஷ்மி said...
சின்னக் குழந்தைகளின் பேச்சின் வாயிலாக அழகாகக் கொண்டு வந்து விட்டிருக்கிறீர்கள் வருந்தத்தகு நிஜங்களை. அருமை வசந்த்.
//

எல்லாம் தங்களைப்போன்று சிறப்பா எழுதுறவங்களைப்படிச்ச்சு வந்ததுதான் மேடம் ஆனாலும் நான் இன்னும் பெட்டரா எழுதும்...மிக்க நன்றி ராமலக்ஷ்மி மேடம்

Trackback by ப்ரியமுடன் வசந்த் December 15, 2009 at 12:18 AM said...

//VISA said...
இதை முற்றிலும் மழலை மொழியில் தான் மனதுக்குள் படித்தேன். ஏக்கங்களை மெலிதாக சொல்லி வலிதாக வலிக்க வைத்துவிட்டீர்கள். இது போன்ற ஸ்நேகமான நட்பெல்லாம் இப்போதுள்ள மெட்ரிகுலேஷனிலும் கான்வென்டுகளிலும் காரில் வந்திறங்கும் குழந்தைகளிடம் இருக்கிறதா?
//

குழந்த வயசுல பணக்காரவயசு ஏழைவயசுன்னு இல்லையே விசா இப்போவும் குழந்தைகள் குழந்தைகளாத்தான் இருக்காங்க மிக்க நன்றி விசா என்னாச்சு சைக்கோ தொடர் அப்டியே நிப்பாட்டீங்க அடுத்த பார்ட் சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க சார்...

Trackback by ப்ரியமுடன் வசந்த் December 15, 2009 at 12:19 AM said...

//வBalavasakan said...
அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள் ... அருமை//

ம்ம் மிக்க நன்றி வாசு...தொடர்ந்து வாங்க

Trackback by ப்ரியமுடன் வசந்த் December 15, 2009 at 12:21 AM said...

//கலையரசன் said...
நல்லாயிருடே!!
//

நல்லாயிருக்கியாடே...நம்பர் வரலியாடே இந்தா வச்சுக்கோ 009746739789

Trackback by ப்ரியமுடன் வசந்த் December 15, 2009 at 12:22 AM said...

//Rajeswari said...
ரசித்தேன்....//

நன்றி ராஜி என்னாச்சு பதிவெதும் எழுதுற மாதிரியே தெரில முன்ன மாதிரி எழுதுங்க மேடம்...

Trackback by ப்ரியமுடன் வசந்த் December 15, 2009 at 12:23 AM said...

//S.A. நவாஸுதீன் said...
மழலையாய் மாறி வாசிக்கும்போது மிக அழகு வசந்த்.//

ம்ம் அதுவரைக்கும் உங்களையெல்லாம் மழலையா வாசிக்க வைத்தது மிக்க சந்தோசம் எனக்கு மிகுதியான நன்றி நவாஸ்...

Trackback by ப்ரியமுடன் வசந்த் December 15, 2009 at 12:25 AM said...

// tamiluthayam said...
மிக எளிமையாக, மிக அழகாக குழந்தை பிராயத்தை சொன்னது அருமை, மீண்டும் நானும் குழந்தை ப்ராயத்திற்கு சென்று விட்டு வந்தேன்.
//

பாஸ் நீங்களும் உங்க பேர் சொன்னா தெரிஞ்சுக்க வசதியா இருக்கும் மிக்க நன்றி தமிழுதயம் என்ன நண்பர்கள்கிட்ட அறிமுகப்படுத்ததான் கேட்டேன்...

Trackback by ப்ரியமுடன் வசந்த் December 15, 2009 at 12:27 AM said...

// மாதேவி said...
மழலைகளின் பேச்சினூடாக நல்ல விடயத்தைக் கையாண்டுள்ளீர்கள். பாராட்டுக்கள்.
//

ஆங்..மேடம் மறந்தே போயிட்டேன் எல்லாத்துக்கும் நீங்கதான் காரணம் ஃபாலோவர் விட்ஜெட் சேர்த்திருந்தா என்னோட டேஷ் போர்டுக்கே வரும் உங்க பதிவு அதான் உங்க பக்கம் வர முடில இதோ இப்போ வந்துட்டே இருக்கேன் சமையல் ராணிகிட்ட...

Trackback by ப்ரியமுடன் வசந்த் December 15, 2009 at 12:28 AM said...

// நாஞ்சில் பிரதாப் said...
மக்கா...அழுவாச்சி வருதே... இம்புட்டு நல்லவனா இருக்கீங்களேப்பு...
//

அடப்பாவி மக்கா இப்பிடி நல்லவன்னாவே நம்பிட்டிங்களா பிரதாப் அப்டியெல்லாம் நம்பிடாதீங்கப்பு..

நன்றி பிரதாப்

Trackback by ப்ரியமுடன் வசந்த் December 15, 2009 at 12:31 AM said...

// பூங்குன்றன்.வே said...
கதை அருமை!!!//

நன்றி பூங்குன்றன்

Trackback by ப்ரியமுடன் வசந்த் December 15, 2009 at 12:31 AM said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
சூப்பரப்பு சூப்பரப்பு ....

ஆணென்ன பெண்ணென்ன எல்லாம் ஓரினம் தான் ....
//

நன்றி பாஸ்

Trackback by ப்ரியமுடன் வசந்த் December 15, 2009 at 12:32 AM said...

//
நினைவுகளுடன் -நிகே- said...
கதை சிறப்பு
பழைய நினைவுகளை மனதில் கொண்டுவந்தது .//

ஆங்...வாங்க நிகே மகிழ்ச்சி தொடர்ந்து வாங்க...

Trackback by ப்ரியமுடன் வசந்த் December 15, 2009 at 12:34 AM said...

//ஸ்ரீராம். said...
சின்னக் குழந்தைகள்...பெரிய விஷயங்கள் நல்ல வேளை... அவங்கப்பா கள்ளிப்பால் கொடுக்காமல் போனாரே...அந்த மட்டும் நல்லவர்தான்...//

ஆமா ஸ்ரீராம் ஆமா ஒண்ணே ஒண்ணு எங்கள் பிளாக்ல இருக்குற மத்தவங்க எல்லாம் உங்களைத்தவிர யாரும் வெளியுலகம் வர்ற பழக்கமில்லியா அவங்களையெல்லாமும் கேட்டதா சொல்லுங்க எனக்கென்னவோ நீங்க மட்டும்தான் தெரியும் மத்தவங்க எழுதும் போது அழையா விருந்தாளியா வர்ற மாதிரி ஒரு ஃபீல் மச்சி....நன்றி ஸ்ரீராம்

Trackback by ப்ரியமுடன் வசந்த் December 15, 2009 at 12:36 AM said...

// Mrs.Menagasathia said...
ரொம்ப நல்லா இருக்கு வசந்த்.
//

மிக்க நன்றிக்கா ஆரம்பத்தில இருந்து எனக்கு தொடர்ச்சியா ஆதரவும் ஊக்கமும் கொடுத்துட்டு வர்றீங்க நான் நிறைய நன்றிகடன் பட்டிருக்கேன் உங்களுக்கு..நன்றிக்கா...

Trackback by ப்ரியமுடன் வசந்த் December 15, 2009 at 12:38 AM said...

//ஹேமா said...
வசந்து...சின்னப்பிள்ளைங்க பேசிக்கிற சாட்டில உங்க மனசைச் சொல்லியிருக்கீங்க.நல்லாருக்கு.
//

ஏதோ மனசுக்குள்ள போயி படிச்சமாதிரி சொல்லுறீக அப்டியெல்லாம் இல்லீங்கோ.. நேத்தைக்கு தோணுனது எழுதுனேன்..மிக்க நன்றி ஹேமா(சுவிஸ்) தொடர்ச்சியான ஊக்கத்திற்க்கும்....

Trackback by ப்ரியமுடன் வசந்த் December 15, 2009 at 12:41 AM said...

// சிவன். said...
//சரி ராணி அழுவாதடி கண்ண தொடச்சுக்க "இந்தா சட்ட"//

மச்சான்....கதை எழுதும்போது சின்ன புள்ளையாவே மாறிட்டியே மச்சான்... :) (இதுதான் WRITERS TOUCH-ஓ)
//

வாங்க மச்சான் எப்பிடியிருக்கிங்க என்ன என்னையப்போயி ரைட்டருன்றீங்க அப்டியெல்லாம் சொல்லி உசுப்பேத்திவிடாதீங்க இதுக்கே ரணகளம் போர்க்களமா இருக்கு அப்பா சாமிகளா...

மிக்க நன்றி சிவன்..உன்னோட பேர் சொல்லிடு மச்சான் அடுத்த தடவை

Trackback by ப்ரியமுடன் வசந்த் December 15, 2009 at 12:41 AM said...

//SUFFIX said...
கதை நல்லா இருக்கு வசந்த்.
//

நன்றி சஃபி

Trackback by ப்ரியமுடன் வசந்த் December 15, 2009 at 12:42 AM said...

// Kala said...
கதை நன்றாக இருக்கின்றது
நன்றி.//

கலாவ பாத்திட்டேனே ஹெட்போன் பிக்சரோட ம்ம் அறிவிப்பாளரா கலா நீங்க?

நன்றி கலா...

Trackback by ப்ரியமுடன் வசந்த் December 15, 2009 at 12:44 AM said...

//யாழினி said...
அழகு வசந்த, மனதை தொட்டது உங்கள் பதிவு! :)
//

வாங்க யாழினி நல்ல சுகம்தானே என்னாச்சு ரொம்ப நாளா ஒரு பதிவும் போடாமலயே இருக்கீங்க சீக்கிரம் எழுதுங்க யாழினி..`

நன்றிப்பா...

Trackback by ப்ரியமுடன் வசந்த் December 15, 2009 at 12:45 AM said...

//வினோத்கெளதம் said...
வர வர கதையிலும் கலக்குற..:)
//


என்னதான் எழுதுனாலும் உன்னை மாதிரி கதை எழுத முடியலியேடா என்னடா எதுவும் எழுதமாட்டேன்ற முன்ன மாதிரி பிஸியாயிட்டீகளோ..!

நன்றி வினு

Trackback by ப்ரியமுடன் வசந்த் December 15, 2009 at 12:47 AM said...

// jothi said...
வலியான உரையாடல்,..
//

மிக்கநன்றி ஜோதி எங்க ரொம்ப நாளா ஆளையே காணோம் இப்போ பார்க்க முடியுது பிஸியா?

ஒரு நாள் சந்திக்கலாம் இங்கதானே நானே போன் பண்றேன் இப்போ ஓவர் டைட்டா பிழிஞ்செடுக்குறானுக கத்தார் சிட்டி செண்டர் ஓகேவா?

Trackback by ப்ரியமுடன் வசந்த் December 15, 2009 at 12:48 AM said...

//தியாவின் பேனா said...
நல்ல கதையாடல்
//

நன்றி தியா

Trackback by ப்ரியமுடன் வசந்த் December 15, 2009 at 12:51 AM said...

தேனக்கா

முதலுக்கும் இரண்டுக்கும் பாசத்துக்கும் நன்றி

மூன்றாவது நான் அப்படியே சாகோதரி சகோதரர்கள் தோழிகள் நண்பர்கள் அனைவரையும் ரொம்ப நானே உரிமையெடுத்துக்குவேன் பழகிடுச்சு போங்க வாங்கன்னா ரொம்ப தூரமா இருக்குற மாதிரியிருக்குதே..

நாலாவதுக்கு விளக்கம் அறிந்துகொண்டேன் இப்ப்போதான் கேக்க்குறேன் இந்த வார்த்தையை..

மிக்க நன்றி தேனக்கா

Trackback by cheena (சீனா) December 15, 2009 at 2:37 AM said...

அன்பின் வசந்த்

சின்னப்புள்ள மாதிரியே நினைச்சிக்கிட்டுப் படிச்சேன் - அருமை அருமை - சொல்லவெண்டியத சரியாச் சொல்லீட்டிங்க

நல்வாழ்த்துகள் வசந்த்

Trackback by Unknown December 15, 2009 at 5:38 AM said...

எப்படித்தான் இப்படி எல்லாம் உங்களால எழுத முடிஇதோ தெரியல.

கலக்கல் வசந்த்..

Trackback by Chitra December 15, 2009 at 6:16 AM said...

மாட்டேன்பா ப்ராமிஸா" நான் பெரியவனானாலும் உன்னையும் சரி உன் மாதிரி பொண்ணுங்களையும் கஷ்டப்படுத்த மாட்டேன்பா" நானும் எங்கப்பா மாரியே தான் ! .........ரொம்ப முக்கியமான promise. அருமை.

Trackback by விக்னேஷ்வரி December 15, 2009 at 11:43 AM said...

Nice Concept.

Trackback by ஸ்ரீராம். December 15, 2009 at 12:54 PM said...

No Feelings வசந்த்...எங்கள் ப்ளாக்ல வித்யாசமே கிடையாது...ஒரு வகைல எங்கள் ப்ளாக் னு நீங்க சொல்லும்போது அது உங்கள் ப்ளாக் ஆயிடுது பாருங்க...நீங்க, நாங்க, இன்னும் எல்லா தமிழ்ப் பதிவர்களும் ஒன்றுக்குள் ஒன்று. கையைக் கொத்துக் கொண்டு உலா வருவோம்...நன்றி.

Trackback by malar December 15, 2009 at 1:08 PM said...

எல்லாரும் எல்லாமும் எழுதிவிட்டார்கள் அதனால் உள்ளேன் ஐயா !

Trackback by அன்புடன் மலிக்கா December 15, 2009 at 7:04 PM said...

அச்சோ அழகு சகோ ..சின்னக்குழந்தையாட்டம் சிறிதுநேரம் மனம் விளையாடிப்பார்த்தது படிக்கும் போது
முடித்ததும் மனம் வருத்தமானது அந்த நாள் போச்சேன்னு.. சூப்பராக இருக்கு கதை..

Trackback by ப்ரியமுடன் வசந்த் December 15, 2009 at 10:03 PM said...

//cheena (சீனா) said...
அன்பின் வசந்த்

சின்னப்புள்ள மாதிரியே நினைச்சிக்கிட்டுப் படிச்சேன் - அருமை அருமை - சொல்லவெண்டியத சரியாச் சொல்லீட்டிங்க

நல்வாழ்த்துகள் வசந்த்
//

ரொம்ப சந்தோஷமா இருக்கு சீனா ஐயா தங்களின் தொடர் வருகைக்கு மிக்க அன்புகலந்த நன்றிகள்...!

Trackback by ப்ரியமுடன் வசந்த் December 15, 2009 at 10:04 PM said...

//சந்ரு said...
எப்படித்தான் இப்படி எல்லாம் உங்களால எழுத முடிஇதோ தெரியல.

கலக்கல் வசந்த்..
//

மிக்க நன்றி சந்ரு சார்...

Trackback by ப்ரியமுடன் வசந்த் December 15, 2009 at 10:05 PM said...

// Chitra said...
மாட்டேன்பா ப்ராமிஸா" நான் பெரியவனானாலும் உன்னையும் சரி உன் மாதிரி பொண்ணுங்களையும் கஷ்டப்படுத்த மாட்டேன்பா" நானும் எங்கப்பா மாரியே தான் ! .........ரொம்ப முக்கியமான promise. அருமை.
//

மிக்க நன்றி சித்ரா மேடம்

Trackback by ப்ரியமுடன் வசந்த் December 15, 2009 at 10:06 PM said...

// ஸ்ரீராம். said...
No Feelings வசந்த்...எங்கள் ப்ளாக்ல வித்யாசமே கிடையாது...ஒரு வகைல எங்கள் ப்ளாக் னு நீங்க சொல்லும்போது அது உங்கள் ப்ளாக் ஆயிடுது பாருங்க...நீங்க, நாங்க, இன்னும் எல்லா தமிழ்ப் பதிவர்களும் ஒன்றுக்குள் ஒன்று. கையைக் கொத்துக் கொண்டு உலா வருவோம்...நன்றி.
//

புரிந்தது ஸ்ரீராம் புரிய வைத்தமைக்கு மிக்க நன்றி ஸ்ரீராம் அசத்துவோம்...

Trackback by ப்ரியமுடன் வசந்த் December 15, 2009 at 10:06 PM said...

//malar said...
எல்லாரும் எல்லாமும் எழுதிவிட்டார்கள் அதனால் உள்ளேன் ஐயா !
//

மிக்க நன்றி மலர் முதல் வருகைக்கும் கருத்துகளுக்கும்...

Trackback by ப்ரியமுடன் வசந்த் December 15, 2009 at 10:07 PM said...

//அன்புடன் மலிக்கா said...
அச்சோ அழகு சகோ ..சின்னக்குழந்தையாட்டம் சிறிதுநேரம் மனம் விளையாடிப்பார்த்தது படிக்கும் போது
முடித்ததும் மனம் வருத்தமானது அந்த நாள் போச்சேன்னு.. சூப்பராக இருக்கு கதை..
//

மிக்க நன்றியும் அன்பும் சகோ...

Trackback by கௌதமன் December 16, 2009 at 5:43 PM said...

I am also reading your blogs regularly from engalblog. From our editors group, we always request Sriram to comment on our behalf.
Best wishes...