கூட்ட, கூட்டவும்...

| December 2, 2009 | |

கூட்ட,
கூட்டவும்...

வெட்ட,
வெட்டவும்...

பறக்க,
பறக்கவும்...

கழிக்க,
கழிக்கவும்...

சுண்டலுக்கு,
சுண்டலுக்கும்...

பிணைக்கு,
பிணைதலுக்கும்,

வீட்டுக்கு,
வீட்டுக்கும்...

கண்டதுக்கு,
கண்டதுக்கும்...

வேசத்துக்கு,
வேசத்துக்கும்...

படிக்க,
படிக்கவும்...

இரத்தத்துக்கு,
இரத்தத்துக்கும்...

கும்பிட,
கும்பிடவும்...

சுகத்துக்கு,
சுகத்துக்கும்...

மணத்துக்கு,
மணத்துக்கும்,

கட்டுக்கு,
கட்டுவதற்க்கும்...

தண்ணீருக்கு,
தன் நீருக்கும்...

எல்லாமும்
எல்லாவற்றுக்கும் துட்டு...

இது 'உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது

Post Comment

54 comments:

Trackback by பிரியமுடன்...வசந்த் December 2, 2009 at 10:23 PM said...

இதற்க்கு மேல் எழுதினால் அடிப்பீங்கன்னு தெரியும் அதனால இது மாதிரியான தங்கள் மனத்திற்க்கு தோன்றிய இரட்டைகளை பின்னூட்டத்தில் தெரிவிக்கும் பொழுது பலமிழந்த இந்த கவிதைகொஞ்சம் பலம் பெறும்,,,,

ரெடி ஸ்டார்ட் மியூஜிக்...

Trackback by ஸ்வாமி ஓம்சைக்கிள் December 2, 2009 at 10:25 PM said...

கண்டிப்பா பரிசு இல்லை

பெரிய குசும்பன்

Trackback by பிரியமுடன்...வசந்த் December 2, 2009 at 11:04 PM said...

//ஸ்வாமி ஓம்சைக்கிள் said...
கண்டிப்பா பரிசு இல்லை

பெரிய குசும்பன்//

உங்க பின்னூட்டமே பரிசு தானுங்ண்ணா நன்றிங்ணா

Anonymous — December 3, 2009 at 1:07 AM said...

பின்னூட்டம் போடவும் துட்டு உண்டா?

Trackback by ஹேமா December 3, 2009 at 1:19 AM said...

வசந்த்,இன்னும் வாழ்க்கைக்கு முக்கியமான விஷயங்களைச் சேர்த்திருக்க்லாமே !வாழ்க்கை...வாழ்க்கைக்கும் !
ஏன் வாழ்வின் இறுதிக்கும் கூட !

வாழ்த்துக்கள் என் பக்கமிருந்து.

Trackback by பிரியமுடன்...வசந்த் December 3, 2009 at 3:50 AM said...

நன்றி சின்ன அம்மிணி,ஹேமா..


பணத்தின் எண்ணிக்கையை கூட்டவும்
வீட்டை கூட்டவும் பணம்,

காசு வெட்டிப்போடும் பழக்கம்
ஒருத்தன உயிரோட வெட்ட பணம்,

காற்றில் பறக்கும் பணம்,
விமானத்தில் பறக்க,

கழித்தலுக்கும்,
கழிவறைக்கும் பணம்

உதாரணத்துக்காக இவ்வரிகளின் விளக்கம்....


ஹேமா வாழ்க்கை விஷயங்களுக்காக எழுதவில்லை வார்த்தை விளையாட்டுக்காக ஒற்றை வார்த்தை தரும் இரட்டை அர்த்தங்கள் வைத்து மட்டுமே பின்னப்பட்டது வாழ்க்கைக்கு இன்றியமையாத விஷயங்கள் முக்கியமா இருக்கு...நல்லா படிச்சா புரியும்...

Trackback by T.V.Radhakrishnan December 3, 2009 at 5:51 AM said...

வாழ்த்துக்கள் வசந்த்

Trackback by யாழினி December 3, 2009 at 6:05 AM said...

போட்டிக்காக எழுதப் பட்டதென்றால் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாமே வசந்த். வெற்றி பெற வாழ்த்துக்கள்! :)

Trackback by cheena (சீனா) December 3, 2009 at 6:08 AM said...

பணிக்கு
பணிக்கும்

நட்பிற்கு
நட்பிற்கும்

பரிசுக்கு
பரிசுக்கும்

நல்வாழ்த்துக்ள் வசந்த்

Trackback by VISA December 3, 2009 at 6:38 AM said...

//தண்ணீருக்கு,
தன் நீருக்கும்...//

This one is Good.

Trackback by டம்பி மேவீ December 3, 2009 at 6:57 AM said...

சினிக்கும்,
சினிமாவிற்கும்,

சமையலுக்கும்,
சமையல்காரிக்கும்.

உப்புவுகும்,
உப்புமாவிற்கும்.

தோசைக்கும்,
ஆசைக்கும்.

மீசைக்கும்,
மேஜைக்கும்.

Trackback by டம்பி மேவீ December 3, 2009 at 6:59 AM said...

நல்ல இருக்குங்க....

பின்னோட்டம் மட்டும் தான் போட வேண்டுமா ????? முன்னோட்டம் போட அனுமதி இல்லையா ??????

(எனக்கு சீரியஸ் யாக யோசிக்க தெரியாது)

Anonymous — December 3, 2009 at 7:21 AM said...

போட்டிக்காக என்பதால் இன்னும் சிரத்தை எடுத்து இருக்கலாம்..ஆனால் இதிலும் புதுமையை புகுத்தியிருக்க வசந்த் வாழ்த்துக்கள்...

Trackback by ஆ.ஞானசேகரன் December 3, 2009 at 7:32 AM said...

எளிமை ஆனாலும் அருமை

Trackback by ராமலக்ஷ்மி December 3, 2009 at 7:41 AM said...

முடித்தவிதம் நச். வாழ்த்துக்கள் வசந்த்.

//உங்க பின்னூட்டமே பரிசு தானுங்ண்ணா நன்றிங்ணா//

அப்படிப் போடுங்க:)!

Trackback by கலையரசன் December 3, 2009 at 7:45 AM said...

super machi :-)

Trackback by வானம்பாடிகள் December 3, 2009 at 7:55 AM said...

ம்ம்

Trackback by ஈரோடு கதிர் December 3, 2009 at 8:04 AM said...

//வானம்பாடிகள் said...
ம்ம்//

ரிப்பீட்டு....

இல்லாட்டி அப்பீட்டு

Trackback by கமலேஷ் December 3, 2009 at 8:08 AM said...

எடுத்துக்கிட்ட கவிதை தளம் ரொம்ப நல்லா இருக்கு...என்ன
இன்னும் கொஞ்சம் அதிக கவனம் செலுத்தி இருக்கலாமோன்னு
தோணுது...ஆனாலும் நல்ல முயற்சி வசந்த்....வாழ்த்துக்கள்...

Trackback by tamiluthayam December 3, 2009 at 8:16 AM said...

போட்டிக்காக என்பதால் இன்னும் சிரத்தை எடுத்து இருக்கலாம்..எளிமை ஆனாலும் அருமை. முடித்தவிதம் நச். வாழ்த்துக்கள் வசந்த்.

Trackback by Vidhoosh December 3, 2009 at 9:25 AM said...

:) ! ஆனா போட்டிக்கு? ஏன்ன்ன்?

Trackback by Vidhoosh December 3, 2009 at 9:25 AM said...

வேற கவிதை எழுதி இதை மாத்திருங்க வசந்த். கொஞ்சம் உக்காந்து யோசிங்க.
--வித்யா

Trackback by S.A. நவாஸுதீன் December 3, 2009 at 9:35 AM said...

போட்டிக்காகவேண்டி உங்க பாணியை மாத்தாமல் இருந்தது பிடிச்சிருக்கு வசந்த்.

சொல்லிய விஷயம் ஸ்ட்ராங்கா இருக்கான்னு இன்னொரு முறை படிச்சிட்டு சொல்றேன் நண்பா.

Trackback by பேநா மூடி December 3, 2009 at 9:54 AM said...

அழகான வார்த்தைகள்..., பாராட்டுக்கள்...,

Trackback by பூங்குன்றன்.வே December 3, 2009 at 11:03 AM said...

வாழ்த்துக்கள் வசந்த் !!!

Trackback by Starjan ( ஸ்டார்ஜன் ) December 3, 2009 at 11:53 AM said...

வாழ்த்துக்கள் வசந்த் !!!

Trackback by ரோஸ்விக் December 3, 2009 at 12:09 PM said...

..கும்....கும்....கும்-னு எழுதீருக்கீங்க...ம்...ம்...ம்...னு சொல்லீட்டு போறோம். :-)

Trackback by பா.ராஜாராம் December 3, 2009 at 1:20 PM said...

எனக்கு பிடிச்சிருக்கு வசந்த்.வெற்றி பெற வாழ்த்துக்கள்!

Trackback by ஸ்ரீராம். December 3, 2009 at 2:11 PM said...

கவிதைகள் எனக்கு கஷ்டப் படுவதால் அர்த்தம் சொன்னால்தான் விளங்குது...நல்லாருக்கு...

Trackback by சுசி December 3, 2009 at 2:28 PM said...

போட்டிக்கு?

ஆனா இதுவும் ரொம்ப வித்யாசமா நல்லாத்தான் இருக்கு.

வெற்றி பெற வாழ்த்துக்கள் உபி.

Trackback by சுசி December 3, 2009 at 2:29 PM said...

//இதற்க்கு மேல் எழுதினால் அடிப்பீங்கன்னு தெரியும்இதற்க்கு மேல் எழுதினால் அடிப்பீங்கன்னு தெரியும்//

ஹிஹிஹி.... உஷாராதான் இருக்கீங்க உபி

Trackback by சுசி December 3, 2009 at 2:31 PM said...

//தங்கள் மனத்திற்க்கு தோன்றிய இரட்டைகளை பின்னூட்டத்தில் தெரிவிக்கும் பொழுது பலமிழந்த இந்த கவிதைகொஞ்சம் பலம் பெறும்,,,,//

அவ்வ்வ்வ்..... முடியல.....

Trackback by Mrs.Menagasathia December 3, 2009 at 4:39 PM said...

வாழ்த்துக்கள்!!

Trackback by பின்னோக்கி December 3, 2009 at 5:12 PM said...

வித்தியாசமான கவிதை

Trackback by அறிவு GV December 3, 2009 at 5:21 PM said...

நன்றாக உள்ளது வசந்த். இன்னும் கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருக்கலாமோ..! வெற்றிபெற வாழ்த்துக்கள்.
என் வலைப்பூவில் பின்னூட்டமிட்டமைக்கு நன்றி. அடிக்கடி வாங்க.

Trackback by அன்புடன் அருணா December 3, 2009 at 5:30 PM said...

ஆட்டோ அனுப்பிர வேண்டியதுதான்!

Trackback by தேவன் மாயம் December 3, 2009 at 7:09 PM said...

நீங்க ரொம்ப நல்லவருங்கோ!! வாழ்த்துக்கள்!1

Trackback by கோபிநாத் December 3, 2009 at 7:12 PM said...

வாழ்த்துக்கள் வசந்த்

Trackback by seemangani December 3, 2009 at 10:53 PM said...

ஓட்டுக்கு
ஓட்டுக்கும்.
வெட்டு
வெட்டுக்கும்....
காட்டுக்கு
காட்டுக்கும்..
ஜூட்டு
ஜுட்டுக்கும்
ஆஹா...அருமையா இருக்கு....ரசித்தேன்....

Trackback by seemangani December 3, 2009 at 10:54 PM said...

இப்படிதான இருக்கும் எங்களுக்கும்....

Trackback by சத்ரியன் December 4, 2009 at 3:43 AM said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...... வசந்த் இப்ப நான் உங்களை முறைச்சு பாக்கிறேன்னு அர்த்தம்.

Trackback by வெண்ணிற இரவுகள்....! December 4, 2009 at 8:06 AM said...

வித்யாசம் என்றால் வசந்த்

Trackback by Kala December 4, 2009 at 9:19 AM said...

வசந் ..பணத்தின் பலத்தை
தராசில் ஏற்ற முடியுமோ!!??
ஆம்!சில இடங்களில் மலசலகூடத்துக்குள்
நுழைவதாயின் {சில்லறை}கொடுத்தால்தான்
முடியும்.
பணத்தின் வீரியம் கவிதையில்......நன்று.
{சில நேரங்களில் வலைப் பக்கம் வர
முடிவதில்லை}அதுதான் காரணம் மன்னிக்கவும்.
உங்கள் தேடலுக்கு நன்றி.

Trackback by பிரியமுடன்...வசந்த் December 4, 2009 at 12:25 PM said...

நன்றி டி.வி.ஆர்

நன்றி யாழினி அட ஆமல்ல சரி விடுங்க அடுத்தவாட்டி பாத்துக்கிடலாம்..

நன்றி சீனா ஐயா

நன்றி விசா

நன்றி டம்பி மேவீ ரசித்தேன்

நன்றி தமிழரசி அவ்வ்வ்

நன்றி ஞானசேகரன்

நன்றி ராமலக்ஷ்மி மேடம்

நன்றி கலையரசன் மாப்பு

நன்றி வானம்பாடிகள் :(

நன்றி கதிர் :)

Trackback by பிரியமுடன்...வசந்த் December 4, 2009 at 12:26 PM said...

நன்றி கமலேஷ்

நன்றி வித்யா எப்பிடி உக்கார்ந்து யோசிச்சாலும் உங்கள மாதிரி எழுத வர மாட்டேன்னுதே..

நன்றி நவாஸ்

நன்றி பேநாமூடி

நன்றி பூங்குன்றன்

நன்றி ஸ்டார்ஜன்

நன்றி ரோஸ்விக்

Trackback by பிரியமுடன்...வசந்த் December 4, 2009 at 12:31 PM said...

நன்றி பா.ரா.

நன்றி ஸ்ரீராம்

நன்றி சுசிக்கா முடியல அவ்வ்வ்வ்

நன்றி மேனகா மேடம்

நன்றி பின்னோக்கி

நன்றி அறிவுஜீவி

நன்றி அருணா மேடம் அனுப்பித்தான் பாருங்களேன் ஆட்டோவ முடிஞ்சா :)))

நன்றி கோபி

நன்றி சீமாங்கனி அவ்வ்வ்

நன்றி சத்ரியன் நீங்களுமா அவ்

நன்றி வெண்ணிற இரவுகள்

நன்றி கலா :))

Trackback by D.R.Ashok December 4, 2009 at 2:29 PM said...

இது....

கவிதை.... :)

Trackback by angelintotheheaven December 5, 2009 at 7:43 AM said...

kadhalukum
kadhalipatharkum

ennuvatharkum (thinking)
enuvatharkum (counting)

thn i too wrote a poem for tht

http://mythinkingforsharing.blogspot.com/2009/12/blog-post.html

Trackback by thenammailakshmanan December 6, 2009 at 4:21 PM said...

நல்லா இருக்கு வசந்த்

வெற்றி பெற வாழ்த்துக்கள்

Trackback by சக்தி த வேல் December 10, 2009 at 10:14 PM said...

நல்லா இருக்கு..! நண்பரே...!

Trackback by அரவிந்தன் December 13, 2009 at 10:42 AM said...

எளிமையா இருக்கு நண்பரே ! வெற்றி பெற வாழ்த்துக்கள் :)

Trackback by நாவிஷ் செந்தில்குமார் January 10, 2010 at 2:06 PM said...

வெற்றி பெற வாழ்த்துகள்!

Trackback by வெ.இராதாகிருஷ்ணன் January 13, 2010 at 1:58 PM said...

இந்த கருவினை எடுத்துக் கொண்டு 'ம்' கொட்ட துட்டு என முடித்த விதம் அருமை.

வெற்றி பெற வாழ்த்துகள் வசந்த்.

Trackback by padma January 14, 2010 at 3:46 PM said...

சுருக்கமாய் அழகாய்....
எங்கும் வ்யாபித்து இருக்கும் கடவுளைப் போல் துட்டு
வாழ்த்துக்கள்
பத்மா