ரைடர்ஸ் கப் சிப்...

| November 4, 2009 | |
டேய் ரமேஷ் இதுமாதிரி தனித்தனியா ரைடு போறது எவ்வளவு சுகமாயிருக்கு?

ஆமாடா சுரேஷ் இரண்டு புறமும் மரங்கள் நம்ம கூடவே வருவதுமாதிரியிருக்கு..

நம்ம ரெண்டுபேரும் அச்சு பிசகாம ஒரேமாதிரி ஆளுக்கொரு நேர்கோட்டுல நிம்மதியா போயிட்டு இருக்கோம்..நமக்கு பின்னாடி வர்ற நம்ம ஃப்ரண்ட்ஸ் விஜயும் ராஜாவும் பார்த்தியா ஆளுக்கொரு ஜோடியா எவ்வளவு சந்தோசமா வர்றாங்கன்னு ...

ம் கொடுத்துவச்சவங்கடா...டேய் முன்னாடி பார்த்துப்போ பள்ளமும் மேடுமா இருக்கு..

இருக்கட்டுமேடா எல்லாம் நமக்கு மேல ஒருத்தன் இருக்கானே அவன் பார்த்துப்பான் யாரு யாருக்கு எப்ப எப்ப எது எதுக்குன்னு அவனுக்குத்தான் வெளிச்சம்

அதெப்பிடி இப்படி தத்துவமெல்லாம் பொழியுற?

அதுவா வருது மச்சி..

பின்னாடி வர்ற ஜோடி சந்தோசமா வந்தாலும் அவங்களுக்கும் நாமதானே வழிகாட்டியா கூட்டிட்டு போறோம் நாமதான் ஜாக்கிரதையா அவங்களை கூட்டிட்டு போகணும்..

ஆமா ஆமா கிரீச்ச்ச்ச்.......

டேய் நான் அப்பவே சொன்னேன் பாத்துப்போடான்னு சரியான நேரத்துல நின்னுட்ட பரவாயில்லை

எல்லாம் மேல ஒருத்தன் இருக்கான் அவன் பார்த்துப்பாண்டா நீ வா நம்ம எப்பயும் போல போயிட்டே இருப்போம்...

டேய் சுரேஷ் ரமேஷ், இருந்தாலும் நீங்க ரொம்ப ரிஸ்க் எடுக்குறீங்கடா நாங்க ரெண்டு பேரும் ஜோடியா வர்றோம்ன்னு கூட தெரியாம எங்களையும் கவுக்க பாத்தீங்களேடா

டேய் அடங்குங்கடி மாப்ளைகளா எங்களுக்கு தெரியும் உங்களை பத்திரமா எப்படி கூட்டிட்டு போறதுன்னு..அதான் போற வழியில எல்லா இடத்திலயும் நமக்கு சிகிச்சை பண்ண ஆஸ்பிட்டல் இருக்குள்ள அப்புறமென்ன?

இருக்கும்டி இருக்கும்..ஏன் பேசமாட்ட நாங்க ஜோடியா வர்றோம்ன்னு உங்களுக்கு பொறாமைடா அதான் இப்படி பேசுறீங்க..

பின்ன இருக்காதா எல்லாரும் ஒரே இடத்துக்குத்தான் போறோம் நாங்க தனியா வர்றோம் நீங்க மட்டும் சோடியா வர்றீங்க...

அடேய் அடேய் கொஞ்சம் நினைச்சுப்பாருங்கடா நம்மளை நம்பி எத்தனை பேர் இருக்காங்க நம்மளை நம்பித்தானே அவங்களும் இருக்காங்க..

அதெல்லாம் மேல ஒருத்தன் இருக்கான் அவன் பார்த்துப்பாண்டா ஒழுக்கமா நாங்க போற வழியிலே வாங்க இல்லைன்னா நீங்க சோடி போட்டு வர்றீங்களே அப்புறம் ஆளுக்கொருபக்கம் திக்கு தெரியாம போய்டுவீங்க ஜாக்கிரதை..

ம்ம் அதான் நீங்க பண்ற சேட்டையெல்லாம் பொறுத்துகிட்டு வர்றோம்..

டேய் சுரேஷ் ஒரு நாய் வருதுடா நிப்பாட்டுடா நிப்பாட்டு...

வவ்வ் அவ் அவ் அவ்வ்.....

ஒரு உசிரை அநியாயமா கொன்னுட்டியேடா எவ்வளவோ சொல்லியும் கேக்கலியேடா நீ?..

நான் என்னடா பண்றது நமக்கு மேல ஒருத்தன் இருக்கானே அவன் அந்த நாய்க்கு நாள் குறிச்சுட்டான் அதான் போய் சேர்ந்துடுச்சு...

நீங்க இரண்டு பேரும் திருந்தவே மாட்டீங்களாடா?

மேல ஒருத்தன் விட்ட வழி நம்ம எல்லாரும் போயிட்டு இருக்கோம்..நம்மளை மாதிரியே நிறைய பேர் அவன் மேல பாரத்தை போட்டுட்டுத்தான் போயிட்டு இருக்காங்க..

அவனே போதை மயக்கத்தில இருக்கான் அவனப்பத்திப்பேசாத என்று விஜயும் ராஜாவும் சொல்லிகொண்டு இருக்கும் பொழுதே சென்னை டூ மதுரை அரசு விரைவு போக்குவரத்து கழக ஓட்டுனர் கீழே இறங்கி வந்து 2நானும் அப்போல இருந்து பாத்துட்டு இருக்கேன் என்னடா மேல ஒருத்தன் பாத்துப்பான் மேல ஒருத்தன் பாத்துப்பான்னுட்டு ஒழுக்கமா பேசாம வாங்கடா இல்லைன்னா ஏதாவது ஒரு ஏரியிலயோ குளத்துலயோ உங்களையும் வண்டியையும் தள்ளி விட்டுடுவேன் ஜாக்கிரதை...அப்பிடின்னு ஓட்டுனர் சொல்ல முன் டயர்கள், ரமேஷ் சுரேஷ் பின் டயர்கள் விஜய்+1 ராஜா+1 ரைடர்ஸ் கப் சிப்...

(இது பத்தி எழுத நான் ஒண்ணும் ஓட்டுநர்,டயர் பத்தி எல்லாம் படிக்கலைங்க எல்லாமே கற்பனைதான் என்னடா இவன் தினமும் ஒண்ணுன்னு இடுகை போடுறானேன்னு எரிச்சலா இருக்கா கவலைப்படாதீங்க..எழுத தெரியலைன்றதா பலர் சொல்வதால்,எல்லார்கிட்டயும் சண்டை போடுவதால்,இதுவரைக்கும் பெரிசா யாரையும் இம்ப்ரெஸ் பண்ணாததால இடுகை இடுவதை நிப்பாட்ட நல்ல நாள் பார்க்கப்படுகிறது..அதுக்கப்புறம் சந்தோசமா இருங்க அதுவரைக்கும் இதுமாதிரி அரைவேக்காட்டுத்தனமா எழுதுறதை பொறுத்துக்கங்க நண்பர்களே)

Post Comment

35 comments:

Trackback by தமிழ் அமுதன் November 4, 2009 at 9:55 PM said...

me tha 1st?

Trackback by தமிழ் அமுதன் November 4, 2009 at 9:58 PM said...

//முன் டயர்கள், ரமேஷ் சுரேஷ் பின் டயர்கள் விஜய்+1 ராஜா+1 ரைடர்ஸ் கப் சிப்...//


;;)))

Trackback by Prasanna November 4, 2009 at 10:05 PM said...

Good twist :))

Trackback by Prathap Kumar S. November 4, 2009 at 10:26 PM said...

எதிர்பார்க்காதா திருப்பம்...கலக்கல் தல

Trackback by vasu balaji November 4, 2009 at 10:30 PM said...

/அதுக்கப்புறம் சந்தோசமா இருங்க அதுவரைக்கும் இதுமாதிரி அரைவேக்காட்டுத்தனமா எழுதுறதை பொறுத்துக்கங்க நண்பர்களே)/

சரிங்க.

/எல்லார்கிட்டயும் சண்டை போடுவதால்/

ஏன். இது எப்ப?

/எழுத தெரியலைன்றதா பலர் சொல்வதால்/

ம்கும். உனக்கு.

Trackback by சுசி November 4, 2009 at 11:03 PM said...

//இடுகை இடுவதை நிப்பாட்ட நல்ல நாள் பார்க்கப்படுகிறது..//

வேற எதுக்கோ இல்ல நாள் பாத்தாச்சுன்னு நினைச்சேன்...

ஃப்ரீயா விடுங்க வசந்த்... படிக்க நாம இருக்கோம்ல...

Trackback by சாணக்கியன் November 5, 2009 at 12:08 AM said...

கொஞ்சம் மெருகேத்தினா நல்லா வந்துரும் பாஸு... தொடர்ந்து படிங்க.. எழுத்து தானா வரும்..

Trackback by ஹேமா November 5, 2009 at 2:20 AM said...

வசந்த் மனங்களின் உளட்டல்கள் எழுத்துக்களாக சொல்லிப் பாதியும் சொல்லாமல் பாதியுமாக கொஞ்சம் நகச்சுவை இனிப்புத் தோய்த்துத் தருகிறீர்கள்.எல்லாம் மேல ஒருத்தன் பாத்திருப்பான்.சும்மா இருங்க.

Trackback by பிரபாகர் November 5, 2009 at 4:44 AM said...

ஏன் தம்பி என்னாச்சு, ஏனிந்த விரக்தி?

பிரபாகர்.

Trackback by Vasudevan Letchumanan வாசுதேவன் இலட்சுமணன் November 5, 2009 at 5:15 AM said...

விளையாட்டுத்தனமா எழுதினாலும் கருத்து இருக்கிறது.
நகைச்சுவையுடன் எழுதுவது என்பது சிலருக்கு கைவந்த கலை.
வாழ்க்கை விளையாட்டில் வார்த்தை விளையாடுகிறீர்க‌ள்!

Trackback by உங்கள் தோழி கிருத்திகா November 5, 2009 at 6:07 AM said...

director touch kondu vanthuttingle kadasila...nallarukku vasanth :)

Trackback by சந்தனமுல்லை November 5, 2009 at 6:34 AM said...

:-)))

நல்லா இருக்குங்க..நச் போட்டிக்காக போல நினைச்சுக்கிட்டே படிச்சேன்!! நல்ல திருப்பம்!!

Trackback by பித்தனின் வாக்கு November 5, 2009 at 6:37 AM said...

நல்ல நகைச்சுவை, வித்தியாசமான கற்பனைக்கு ஒரு சலாம் பாஸ்.

// ..எழுத தெரியலைன்றதா பலர் சொல்வதால்,எல்லார்கிட்டயும் சண்டை போடுவதால்,இதுவரைக்கும் பெரிசா யாரையும் இம்ப்ரெஸ் பண்ணாததால இடுகை இடுவதை நிப்பாட்ட நல்ல நாள் பார்க்கப்படுகிறது //
இது எல்லாம் யார் சொன்னா? ஏன் இந்த சுயபச்சாதாபம். எல்லாரும் வந்து எழுதுங்க எழுதுங்க வசந்து சொல்லனுமா?
உங்கள் எழுத்துக்கள் மட்டும் அல்ல பின்னூட்டங்களையும் நான் படிக்கின்றேன். ஆதலால் எழுதுங்கள்.
அப்புறம் யாரது படிக்கின்றார்களா எனப் பார்த்து எழுதாதீர்கள். பாலகுமாரன் சொன்ன மாதிரி எழுத்து ஒரு தவம், அதை ஒரு வேள்வி மாதிரி எழுதுங்கள். உங்களின் எழுத்துக்களை காதலியுங்கள். அப்புறம் யார் என்ன சொன்னாலும் எழுதுவதை நிறுத்த மாட்டீர்கள். நன்றி வசந்து.

Trackback by அன்புடன் நான் November 5, 2009 at 6:38 AM said...

உங்களுக்குன்னு தனி பாதை இருக்கு போயிட்டே இருங்க... நாங்க உங்க மேல நம்பிக்கையோட வறோம்...

Trackback by கலையரசன் November 5, 2009 at 7:34 AM said...

மெறுகு கூடிகிட்டே போகுது மச்சி... உன் எழுத்துல!!

Trackback by ரோஸ்விக் November 5, 2009 at 8:24 AM said...

எல்லாத்துக்கும் மேல ஒருத்தன் இருக்கான் அவன் பார்த்துப்பான் மச்சி. :-) கலக்குங்க.

Trackback by ஆ.ஞானசேகரன் November 5, 2009 at 8:32 AM said...

// ரோஸ்விக் said...

எல்லாத்துக்கும் மேல ஒருத்தன் இருக்கான் அவன் பார்த்துப்பான் மச்சி. :-) கலக்குங்க.//

ரிபீட்ட்ட்

Trackback by அன்புடன் மலிக்கா November 5, 2009 at 8:48 AM said...

நகைசுவையில் கலக்குறீங்க வசந்த்

உங்களை பத்துக்கு பத்து தொடர் இடுகைக்கு அழைத்துள்ளேன்http://niroodai.blogspot.com/2009/11/blog-post_04.html
வசந்த்...

Trackback by பின்னோக்கி November 5, 2009 at 9:10 AM said...

கடைசி வரை சஸ்பென்ஸ் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு எழுதியிருக்குறது நல்லாயிருந்துச்சு. டயர்ன்னு தெரிஞ்சவுடன் திருப்பி படிச்சாலும் எல்லா வர்ணனைகளும் பொருந்திவருது. கிரேட்.

Trackback by கவி அழகன் November 5, 2009 at 11:20 AM said...

வாசிக்க வாசிக்க சுவாரசியமா போகுது

Trackback by ஜெட்லி... November 5, 2009 at 11:30 AM said...

//இடுகை இடுவதை நிப்பாட்ட நல்ல நாள் பார்க்கப்படுகிறது..//


சும்மா தானே??

Trackback by S.A. நவாஸுதீன் November 5, 2009 at 12:58 PM said...

எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான் வசந்த். நீங்க எழுதுங்க ராசா

Trackback by தீப்பெட்டி November 5, 2009 at 1:55 PM said...

//எழுத தெரியலைன்றதா பலர் சொல்வதால்,எல்லார்கிட்டயும் சண்டை போடுவதால்,இதுவரைக்கும் பெரிசா யாரையும் இம்ப்ரெஸ் பண்ணாததால இடுகை இடுவதை நிப்பாட்ட நல்ல நாள் பார்க்கப்படுகிறது..//

என்ன வசந்த் இது?.. உங்களோட தனித்திறமை யாருக்கும் இல்லாதது..
தொடர்ந்து எழுதுங்க.. எழுத எழுத இன்னும் எழுத்து வளமாகும்..

நீங்க உங்கள தாழ்த்திக்கிறதென்பது உங்க 170 folowersவோட ரசனையையும் தாழ்த்துவதாகாதா?

இடுகையிடவதை நிப்பாட்டும் நாள் வரவே கூடாது சரியா..

Trackback by SUREஷ்(பழனியிலிருந்து) November 5, 2009 at 2:03 PM said...

ஜெனரல் டயர் தெரியுமில்ல தல..,

அவரப்பத்திக்கூட நீங்க எழுதுங்க.

ஆறு டயருக்கும் பேருவைங்க..,

அப்புறம் உள்ள இருக்கற ட்யூப்புக்கும் பேர் வைங்க..,

அதில் இருக்கற ஆவிக்கும் பேர் வைங்க..,

பெரிய ஆன்மிக வாதி ஆயிடுவீங்க..,

Trackback by thiyaa November 5, 2009 at 2:04 PM said...

நகைசுவையில் கலக்குறீங்க வசந்த்

பேசாம வடிவேலுவ வீட்டுக்கு அனுப்புவோமா?

Trackback by சத்ரியன் November 5, 2009 at 2:57 PM said...

வசந்த்,

உலகத்துல எதுக பேசினாலும் உனக்கு புரிஞ்சிடுது. நீங்க ஒரு பன்மொழி வித்தகர்ண்ணே!

"U"டர்ன் எல்லாம் பயங்கரமா அடிக்கறீங்கண்ணே!

Trackback by Menaga Sathia November 5, 2009 at 4:42 PM said...

நகைசுவையில் கலக்குறீங்க வசந்த்

Trackback by சீமான்கனி November 5, 2009 at 5:36 PM said...

வித்யாசமான சிந்தனை....ரூம் போட்டு யோசிபின்களோ...மேல ஒருத்தன் இருக்கானே அவனுக்குத்தான் வெளிச்சம்...
கலக்குறீங்க வசந்த்...

Trackback by கடைக்குட்டி November 5, 2009 at 5:54 PM said...

முதலில் படிக்கும் போது விட்டு விட்டு படிச்சேன்...

முடிவை படித்தது முழுசா படிச்சேன்,.

கலக்குறீங்க :-)

Trackback by Starjan (ஸ்டார்ஜன்) November 5, 2009 at 6:06 PM said...

என்னாச்சு வசந்த் , ஏன் இப்படி

கலக்குங்க வசந்த் ...

Trackback by "உழவன்" "Uzhavan" November 6, 2009 at 9:54 AM said...

ரூம் போட்டு யோசிப்பீங்களோ :-)))

Trackback by அன்புடன் அருணா November 6, 2009 at 5:06 PM said...

:)

Anonymous — November 6, 2009 at 6:00 PM said...

நான் எல்லாத்துக்கும் மேல இருக்கிற ஆண்டவன நெனச்சு படிச்சிட்டு வ்ந்து பாத்தா டயரும்,டயரும் பேசிக்குதுங்க!
நல்லா போச்சு.

Trackback by creativemani November 6, 2009 at 9:49 PM said...

கடைசி twist ரசிக்கும்படி இருந்தது...

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 6, 2009 at 10:54 PM said...

நன்றி ஜீவன்

நன்றி பிரசன்ன குமார் முதல் வருகைக்கும்

நன்றி பிரதாப்

நன்றி பாலா சார்

நன்றி சுசி ரொம்ப சந்தோசமா இருக்கு

நன்றி சாணக்யன் சரிங்க

நன்றி ஹேமா மகிழ்ச்சி

நன்றி பிரபாண்ணே (சும்மாண்ணே)

நன்றி வாசுதேவன் முதல் வருகைக்கும்

நன்றி கிருத்திகா மகிழ்ச்சி தங்கள் வரவு

நன்றி சந்தனமுல்லை

நன்றி பித்தன் சார் உங்கள் பின்னூட்டம் படித்த பின்புதான் புரிந்தது புரிய வச்சதுக்கு நன்றி
இனி பாருங்க கலக்குவோம்ல,,

நன்றி கருணாகரசு மிக்க சந்தோசமா இருக்குங்க

நன்றி கலையரசன் இவன் கிட்ட பாராட்டு வாங்குறதே பெரிய விஷயமா இருக்கு எனக்கு

நன்றி ரோஸ்விக்

நன்றி ஞானசேகரன்

நன்றி மலிக்கா

நன்றி பின்னோக்கி

நன்றி யாதவன்

நன்றி ஜெட்லி ஆமா சரவணன்

நன்றி நவாஸ் சரி நவாஸ்

நன்றி தீப்பெட்டி (பிரிய வைத்தமைக்கு நன்றி)

நன்றி தல (குசும்பு)`

நன்றி தியா

நன்றி சத்ரியன் வரம் வாங்கிவந்தவன் நான்

நன்றி மேனகா மேடம்

நன்றி சீமாங்கனி`

நன்றி கடைக்குட்டி

நன்றி ஸ்டார்ஜன்

நன்றி உழவன்

நன்றி பிரின்ஸ்

நன்றி திருமதி ஜெயசீலன்

நன்றி மணிகண்டன்