நைனா...நறுக்குன்னு நாலு வார்த்த...

| November 27, 2009 | |
முடங்கி கிடந்த நிறுவனத்துக்கு மு.க.அழகிரி நிதி உதவியால் அந்நிறுவனம் லாபம் ஈட்டியது..

ம்க்கும்...நிதிக்குடும்பமாச்சே...அதான்...இவங்ககிட்ட இருக்குற நிதியெல்லாம் கொடுத்திருந்தால் இந்த ஒன்று போல் எத்தனை நிறுவனங்கள் லாபம் ஈட்டியிருக்கும்...

-------------------------------------------------------------------------------------------------

போலீஸ் சீருடையில் மாற்றம் செய்ய முடிவு-செய்தி

இன்னும் நாலஞ்சு பாக்கெட் சேர்த்து வச்சுருப்பாங்க போல...
-------------------------------------------------------------------------------------------------

பிரபாகரனை வாழ்த்தி நோட்டீசு-2பேர் கைது

இதே கலைஞர் கருணாநிதியவோ, அழகிரியவோ, செல்வி.ஜெயலலிதாவையோ வாழ்த்தியிருந்தா 2 ஃப்லாட் வீடு கொடுத்துருப்பாய்ங்களோ....பன்னாடைங்க...ஒரு தமிழினத் தலைவனை வாழ்த்துனதுக்கு கைது ...

-------------------------------------------------------------------------------------------------

வாஷிங்டன்: இது நாள் வரை நாம் இந்தியாவில் படித்து வேலைக்காக வெளிநாடுகளுக்குச் சென்றோம். இனி, இந்தியாவுக்குத் திரும்புங்கள் என்று நான் உங்களை அழைக்கிறேன் என பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்க வாழ் இந்தியர்களைக் கேட்டுக் கொண்டார்.

இந்தியா திரும்ப வாங்கன்னு சொன்னீங்க சரி அரசியல்வாதிகள் நீங்கள் எல்லோரும் இங்க வந்துடுங்கள் நாங்கள் அங்கு வந்துடுறோம்... -அமெரிக்க வாழ் இந்தியர்கள்...

-------------------------------------------------------------------------------------------------

சிங்கப்பூர் ஆற்றில் படகு மூலம் சென்ற துணை முதல்வர் ஸ்டாலின், ஆற்றுப் பணிகளை பார்வையிட்டார்..

ம்க்கும் இங்க இருக்குற ஆறெல்லாம் சாக்கடையா போயிட்டு இருக்கு இத கவனிக்கவே ஆளில்லை இதுல சிங்கப்பூர் போறாராம்..... சுத்திப்பாக்க போனோம்னு சொன்னா நாங்க என்ன கத்தியா வைக்கப்போறோம் கேட்டா அதுமாதிரியே இங்கயும் பண்ணப்போறோம்ன்னு சொல்லுவீங்க...இப்பிடி எத்தனைவாட்டி சொல்லிட்டீங்க இன்னும் கூவம் அப்டியேதான் இருக்கு அதே நறுமணத்தோட......எங்க இப்படி ஸ்டைலா நம்ம ஊரு கூவத்துல படகுல போய் பாக்குறது...

-------------------------------------------------------------------------------------------------

விலைவாசியை குறைக்க பதுக்கல் பேர்வழிகள் மீது கடும் நடவடிக்கையெடுங்கள் மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு...

அப்போ மத்திய அரசுக்கு யார் உத்தரவு போடுவாங்க?

ம் கடும் நடவடிக்கைன்னா எப்படி? ஏ ஸி அறையோட எல்லா வசதியும் இருக்குற சிறையில வச்சு கவனிங்கன்னு சொல்ல வர்றீங்க அதானே...சூப்பரு...

--------------------------------------------------------------------------------------------

நயன்தாரவை பார்த்து டூ பீஸ் உடையணிந்தேன் -ப்ரியாமணி .

காப்பியடிக்கிறத உடையோட நிப்பாட்டிடாதீங்க அம்மிணி இன்னும் பல(ஆ)ன எதிர்பார்க்கிறோம்...அவ்வ்வ்வ்வ்...

-------------------------------------------------------------------------------------------------

எதற்காக புடவை கட்டி நடிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை?' என்றால், எனக்கு புடவைன்னா ரொம்ப இஷ்டம்; ஆனால், நான் புடவை கட்டினால், ரொம்ப கவர்ச்சியாக தெரிவேன். அதைப் பார்த்து, நம்ம தமிழ்நாட்டு மச்சான்ஸ் கெட்டுப் போயிடுவாங்க. ஆம்பிளைங்க கெட்டுப் போகாமல் தடுக்கத்தான் நான் புடவை கட்டி நடிப்பதில் ஆர்வம் காட்டுவதேஇல்லை - நமீதா

எவ்ளோ "பெரிய" தங்கமனசு உங்களுக்கு ....-------------------------------------------------------------------------------------------------
டிஸ்கி :என்னோட நைனா கேட்டுக்கிட்டதுக்காக இந்த தொடர் பதிவு நான் அவர் மாதிரியே எழுதி அவர டரியலாக்குனாலும் அவர் கோச்சுக்கிடமாட்டாரு ஏதோ கொஞ்சமாச்சும் அவர மாதிரி எழுதியிருக்கேனான்னு பாத்து சொல்லுங்க..சாமியோவ் ...இதே போல் பதிவுலகசூப்பர்ஸ்டார் கதிரும் ,லேடி சூப்பர் ஸ்டார் கலகலப்ரியாவும்அவங்களுக்கு பிடிச்சவங்க மாதிரி எழுதணும்ன்னு பணிவோட கேடுக்கிறேன் ஏற்கனவே என்னோட தொடர் பதிவ ரெண்டுபேரும் தவிர்த்துட்டீங்க இதையாச்சும் எழுதுங்க இது என்னோட ஆசையில்ல என் நைனாவோட ஆசை..

Post Comment

37 comments:

Trackback by vasu balaji November 27, 2009 at 2:42 PM said...

அடங்கொன்னியா. கொன்னுட்ட போ. கடைசி ரெண்டு தவிர மிச்சமெல்லாம் தூள். அது ரெண்டும் எனக்கு அவுட் ஆஃப் சிலபஸ்.

Trackback by Anbu November 27, 2009 at 3:05 PM said...

:-)

Trackback by Prathap Kumar S. November 27, 2009 at 3:25 PM said...

முதல் ரெண்டும் டாப் கிளாஸ் தல....

Trackback by Unknown November 27, 2009 at 3:27 PM said...

கலக்கிடிங்க போங்க...

Trackback by இராகவன் நைஜிரியா November 27, 2009 at 3:27 PM said...

தூள் கிளப்பிடீங்க தம்பி..

பிரமாதமா இருக்கு. இனிமே நீங்களே இதை எழுதலாம் போலிருக்கு..

கும்மி அடிக்க ஆசையா இருக்கு..

உங்களுக்கு பிடிக்காது என்பதால் அடிக்கவில்லை..

Trackback by இராகவன் நைஜிரியா November 27, 2009 at 3:28 PM said...

// வானம்பாடிகள் said...
அடங்கொன்னியா. கொன்னுட்ட போ. கடைசி ரெண்டு தவிர மிச்சமெல்லாம் தூள். அது ரெண்டும் எனக்கு அவுட் ஆஃப் சிலபஸ். //

அவுட் ஆஃப் சிலபஸ் எனச் சொல்லி தப்பிச்சுக்க முடியாது..

Trackback by நையாண்டி நைனா November 27, 2009 at 3:29 PM said...

நான் எப்ப உங்க கிட்டே சொன்னேன்.... ஆவ்வ்வ்

Trackback by க.பாலாசி November 27, 2009 at 3:34 PM said...

sabaash sariyana potti.

kalakkal. (except namithaaaaaa)

Trackback by தமிழ் அமுதன் November 27, 2009 at 3:37 PM said...

;;))

Trackback by Unknown November 27, 2009 at 3:38 PM said...

நமிதாவ பாத்து உள்ள வந்தா மேட்டரும் நல்லாதான்யிருக்கு.. வசந்த் பயங்கர பொறுப்பாலியா ஆகிட்டப்பா....

Trackback by ஹேமா November 27, 2009 at 3:49 PM said...

வசந்து.....கலக்கிறீங்க.நிறைய எழுத நேரம் குறைவாயிருக்கு.வீட்ல ஆளுங்கப்பா !

Trackback by ஈரோடு கதிர் November 27, 2009 at 3:54 PM said...

//வானம்பாடிகள் said...
அது ரெண்டும் எனக்கு அவுட் ஆஃப் சிலபஸ்.//

க்கும்... அட...


வசந்து...
பாலா உங்களுக்கு ஆப்பு வச்சாரு.. நீங்க திருப்பிட்டீங்க... அது ஏன் ரெண்டு பேரும் சேர்ந்து எனக்கு வைக்றீங்க....

அட பாவம்யா நானு..

ஆனா... நல்லாத்தான் உல்டா பண்றீங்க

Trackback by பிரபாகர் November 27, 2009 at 4:06 PM said...

கடைசி ரெண்டும் இல்லன்னா கண்டிப்பா அப்படியே அய்யாவோடது தான், அசத்துற தம்பி.... ரொம்ப நல்லாருக்கு.

பிரபாகர்.

Trackback by அகல்விளக்கு November 27, 2009 at 4:20 PM said...

அட

இப்படி வேற கிளம்பிட்டீங்களா !!!

சூப்பரு போங்க...

நமிதா போட்டோ fake தான !!

:-)

Trackback by Beski November 27, 2009 at 4:44 PM said...

சூப்பர் வசந்த்.

Trackback by Unknown November 27, 2009 at 4:48 PM said...

இப்பிடி ஒரு தொடர் பதிவா.. அடங்கொன்னியா..

Trackback by யூர்கன் க்ருகியர் November 27, 2009 at 5:12 PM said...

நல்லாத்தான் நறுக்கி இருக்கீங்க .... தொடரவும் ... !!

Trackback by சங்கர் November 27, 2009 at 5:16 PM said...

//இதே கலைஞர் கருணாநிதியவோ, அழகிரியவோ, செல்வி.ஜெயலலிதாவையோ வாழ்த்தியிருந்தா 2 ஃப்லாட் வீடு கொடுத்துருப்பாய்ங்களோ...//


என்ன வசந்த் இப்படி பச்சைப்புள்ளையா இருக்கீங்க? போஸ்டர் ஓட்டுறவன் ஒட்டிக்கிட்டே தான் இருப்பான் இவுங்க கோடிகோடியா முழுங்குவாங்க,

Trackback by ஸ்ரீராம். November 27, 2009 at 5:56 PM said...

போலீஸ் சீருடை கமெண்ட் டாப்

Trackback by angel November 27, 2009 at 7:27 PM said...

இந்தியா திரும்ப வாங்கன்னு சொன்னீங்க சரி அரசியல்வாதிகள் நீங்கள் எல்லோரும் இங்க வந்துடுங்கள் நாங்கள் அங்கு வந்துடுறோம்... -அமெரிக்க வாழ் இந்தியர்கள்...


sir neenga america poringals?

coz political leaders ah kindal adichu eluthringa nan neenga pudusa political party start pona poringa nu ninaichen

Trackback by சீமான்கனி November 27, 2009 at 7:46 PM said...

சில இடங்களில் நறுக்கு தெரிசுருக்கு...வசந்த் ...ம்ம்ம் நீங்களுமா???
கலக்குங்கள்..

Trackback by சிநேகிதன் அக்பர் November 27, 2009 at 8:22 PM said...

நல்லாயிருக்கு.

டரியலாக்கிட்டிங்க.

Trackback by Starjan (ஸ்டார்ஜன்) November 27, 2009 at 9:18 PM said...

நல்ல கமெண்ட்ஸ்

Trackback by ரோஸ்விக் November 27, 2009 at 9:40 PM said...

"அடங்கொன்னியா" - இதுவும் நல்லத்தான் இருக்கு....:-))

Trackback by கடைக்குட்டி November 27, 2009 at 10:12 PM said...

ப்ரியாமணி பேட்டர் தூள்...

கலக்குறேள்..

வயசானாலும் உங்க அழகும் ஸ்டைலும் உங்கள விட்டு போகல...:-)

Trackback by கலகலப்ரியா November 27, 2009 at 11:41 PM said...

அட அட... நறுக்கிட்டா...

ஆனா என்னையும் சேர்த்து நறுக்குவான்னு நினைக்கலப்பு.... பார்க்கலாம்... ம்ம்...

Trackback by ஜெஸ்வந்தி - Jeswanthy November 27, 2009 at 11:43 PM said...

சூப்பர் வசந்த். கலக்குப்பா.

Trackback by அத்திரி November 28, 2009 at 5:08 AM said...

கலக்கல்

Trackback by velji November 28, 2009 at 10:55 AM said...

success!

imitation is good!

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 28, 2009 at 12:24 PM said...

நன்றி வானம்பாடிகள் பாலாசார் (ஆமா நான் யூத் அப்டித்தான் எழுதுவேன்)

நன்றி அன்பு

நன்றி பேநாமூடி

நன்றி நைஜீரியா ராகவன் சார் (ஹ ஹ ஹா)

நன்றி நையாண்டி நைனா(அவ்வ்வ்)

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 28, 2009 at 12:31 PM said...

நன்றி பாலாஜி

நன்றி ஜீவன்

நன்றி அசோக் சார்

நன்றி ஹேமா

நன்றி கதிர் சார்

நன்றி பிரபாகர் சார்

நன்றி அகல் விளக்கு கார்த்திக்

நன்றி அதி பிரதாபன்

நன்றி முகிலன்

நன்றி யூர்கன் கிருகியர்

நன்றி சங்கர்

நன்றி ஸ்ரீராம்

நன்றி ஏஞ்சல்(வயசுக்கேத்த லொல்லப்பாரு)

நன்றி சீமாங்கனி

நன்றி அக்பர்

நன்றி ஸ்டார்ஜன்

நன்றி ரோஸ்விக்

நன்றி கடைக்குட்டி

நன்றி ப்ரியாக்கா

நன்றி ஜெஸ்ஸம்மா

நன்றி அத்திரி

நன்றி வேல்ஜி

Trackback by பின்னோக்கி November 28, 2009 at 6:13 PM said...

வானம்பாடி அய்யாவின் ப்ளாக் உலக வாரிசு என நிரூபித்துவிட்டீர்கள்.

Trackback by ஆ.ஞானசேகரன் November 29, 2009 at 5:16 AM said...

அசத்தல்...

Trackback by பெசொவி November 29, 2009 at 7:31 AM said...

//போலீஸ் சீருடையில் மாற்றம் செய்ய முடிவு-செய்தி

இன்னும் நாலஞ்சு பாக்கெட் சேர்த்து வச்சுருப்பாங்க போல...
//
ஆயின்மென்ட் இருந்தா அனுப்புப்பா......விழுந்து விழுந்து சிரிச்சேன்....அடி பட்டிடுச்சு!

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 30, 2009 at 12:47 AM said...

நன்றி பின்னோக்கி

நன்றி சேகரன்

நன்றி பெ.சொ.வி.வி. :)))

Trackback by வால்பையன் December 1, 2009 at 9:25 PM said...

சூப்பரு தல!

Trackback by ஜோதிஜி December 19, 2009 at 6:05 PM said...

இந்தியா திரும்ப வாங்கன்னு சொன்னீங்க சரி அரசியல்வாதிகள் நீங்கள் எல்லோரும் இங்க வந்துடுங்கள் நாங்கள் அங்கு வந்துடுறோம்... -அமெரிக்க வாழ் இந்தியர்கள்.

சிரிக்க சிந்திக்க நன்றி