கால் கிலோ காதல் என்ன விலை?

| November 9, 2009 | |

கால் கிலோ காதல்

என்ன விலை என்று

கடைகளில் கேட்டேன்

கிடைக்கவில்லை காதல்...


கால் வலிக்க பஸ் ஸ்டாப்பில் நின்றும்

கிடைக்கவில்லை காதல்..

பெட்ரோல் தீர மெட்ரோ பூரா சுத்தியும்

கிடைக்கவில்லை காதல்...


காற்றிடம் தெரியுமா என்று கேட்க

சுற்றிப்பார் என்று கூறி சுற்றலில் விட்டு

சுற்றி சென்றது..


சுற்றி சுற்றி கிறு கிறுத்து..

கிறுக்கனிடமும் கேட்க..

கிறுக்கிப்பார் என்று கிறுக்கினான்..

கிறுக்கி கிறுக்கி பார்த்தும்

சறுக்கி விழுந்தது தான் மிச்சம்...

கிடைக்கவில்லை காதல்...


விழுந்து எழுந்த பின் மீசையை பார்க்க

ஒட்டவில்லை மண்..

மண் ஒட்டாத மீசையையும் எடுத்து பார்த்தேன்..

ஒட்டவில்லை காதல்..


ஒட்டாத வாழ்த்து அட்டை ஒன்று அனுப்பினேன்

ஒட்டாததால் திரும்பியது..

திரும்பியதை திருப்பி அனுப்பினேன் ஒட்டாமலே

பதிவு தபாலில்...காதலுடன்..

அட்ரஸ் மாறி அண்டை தேசம்

சென்றுவிட்டது தவறுதலாய்...


அண்டை தேசத்துக்காரியா

அன்பாயிருக்கப்போகிறாள்?

அதுவும் திரும்பியது என்னிடம்

அப்பொழுதுதான் புரிந்தது

காதல் கடிதத்தின் மூலமாக ...

Post Comment

87 comments:

Trackback by சீமான்கனி November 9, 2009 at 1:54 AM said...

me the 1st..

Trackback by சீமான்கனி November 9, 2009 at 1:58 AM said...

மண் ஒட்டாத மீசை...அருமையா இருக்கே....
நன்றி வசந்த் ..நல்லவேளை தகவல் குடுத்தீங்க... இல்லனா நாங்களும் ...வீனா தேடி இருப்போம்.....

Trackback by சுசி November 9, 2009 at 2:31 AM said...

//விழுந்து எழுந்த பின் மீசையை பார்க்க
ஒட்டவில்லை மண்..//

அம்மாடியோவ்... இம்மாம் பெரிய மீசையில கூடவா???

//காதல் கடிதத்தின் மூலமாக ...//

ஓஹோ... அவங்க லெட்டர் போட்டுட்டாங்களா? நடக்கட்டும் வசந்த்.

Trackback by Unknown November 9, 2009 at 3:07 AM said...

இப்போ வசந்த் எங்கேயோ போய்க்கொண்டிருக்கிற மாதிரித் தெரியுது

Anonymous — November 9, 2009 at 5:20 AM said...

கடைசி வரைக்கும் யாரும் உங்களை காதலிக்கவேயில்லையா :)

Trackback by ராமலக்ஷ்மி November 9, 2009 at 5:24 AM said...

கிடைக்கவே கிடைக்காத பொருள் என்ன விலையாய் இருந்தால்தான் என்ன:)?
ம்ம், பாவம்தான் நீங்கள்!

Trackback by kishore November 9, 2009 at 5:31 AM said...

நல்லா இருக்கு.. ஆனா கடைசில என்ன சொல்ல வரிங்கன்னு தெரியல..

Trackback by உங்கள் தோழி கிருத்திகா November 9, 2009 at 6:26 AM said...

தப்பு பண்ரிங்க வசந்த்...
காலேஜில தேடியே கெடைக்காத நமக்கு வேற எந்த இடத்தில் கிடைக்கும்....விடுங்க இந்த ஜென்மத்துல இவ்வளவுதான் :)

Trackback by Malini's Signature November 9, 2009 at 6:49 AM said...

காதல்.....காதல்
கவிதை..கவிதை

Trackback by Malini's Signature November 9, 2009 at 6:51 AM said...

ஓஓஒ இப்பதான் போட்டோ பார்த்தேன்....அவங்களா நீங்க!!!!

Trackback by ஜெட்லி... November 9, 2009 at 8:13 AM said...

வஸந்த் காதல் முத்தி போச்சா??
ஒரே கவிதை மழையா கொட்டுது

Trackback by vasu balaji November 9, 2009 at 8:15 AM said...

எதையும் ஒழுங்கா பண்ணாத. கவிதையும் பாதியில தொங்கல்ல உடுவியா.=)). நல்லாருக்கு வசந்த்.

Trackback by மேவி... November 9, 2009 at 8:19 AM said...

ithe madiri kb serial pattu onnu irukku boss....antha pattu madiriye inthuvum superaa irukku

Trackback by யோ வொய்ஸ் (யோகா) November 9, 2009 at 8:47 AM said...

me the first, nice one vasanth

Trackback by பூங்குன்றன்.வே November 9, 2009 at 9:39 AM said...

மிக விரும்பி படிக்கும் சில பதிவுகளில் உங்களின் பதிவும் முக்கியமானது.
ரொம்ப அழகா எழுதுறீங்க வசந்த்..

இந்த கால காதல் எல்லாம் நீங்க
சொல்றா மாதிரித்தான் இருக்கு..இப்ப எல்லாம் நிறைய பேர் காதல் என்கிற பேர்ல தப்புல்ல பண்றாங்க. உங்க கவிதை நல்லா இருக்கு.
poongundran2010.blogspot.com

Trackback by S.A. நவாஸுதீன் November 9, 2009 at 9:41 AM said...

வாங்குறதுதான் வாங்குறீங்க. ஒரு கிலோவா வாங்குங்க வசந்த். 4 எடத்துல யூஸ் பண்ணிக்கலாம்

Trackback by கலையரசன் November 9, 2009 at 10:00 AM said...

புரோஃபைல் பிக்ச்சர் சூப்பர் மாமே!

Trackback by பின்னோக்கி November 9, 2009 at 10:20 AM said...

ithu sumaarnga vasanth

Trackback by Anbu November 9, 2009 at 10:38 AM said...

:-))))

Trackback by அமிர்தவர்ஷினி அம்மா November 9, 2009 at 10:54 AM said...

:))

Trackback by Starjan (ஸ்டார்ஜன்) November 9, 2009 at 11:04 AM said...

நல்லாருக்கா காதல் ...

Trackback by பித்தனின் வாக்கு November 9, 2009 at 11:30 AM said...

மக்கா எங்க சுத்தறது ஒரு விவஸ்தை வேணாம். லாண்ட் மார்க், பிஸா ஹுட்டுக்கு போனா காதல் வரும். இல்லை கொஞ்சம் எத்திராஜ், ஸ்டெல்லா மாரிஸ் பக்கம் போகாம ஊரை சுத்துனா எப்படி வரும்?

இம்ம் நல்லா இருக்கு உரைனடைக் கவிதை. இன்னும் பலமா, ஆழமா குத்துங்க பாஸ். நன்றி.

Trackback by SUFFIX November 9, 2009 at 11:45 AM said...

இப்படியும் ஒர்க் அவுட் ஆவுது பாருங்கய்யா, நல்லா இருங்க வசந்த்!!

Trackback by SUFFIX November 9, 2009 at 11:46 AM said...

வரிகளின் முடிவை வைத்து அடுத்த வரியை தொடங்கியது ரசிக்க வைத்தது வசந்த்!!

Trackback by க.பாலாசி November 9, 2009 at 11:48 AM said...

//சுற்றி சுற்றி கிறு கிறுத்து..
கிறுக்கனிடமும் கேட்க..
கிறுக்கிப்பார் என்று கிறுக்கினான்..
கிறுக்கி கிறுக்கி பார்த்தும்
சறுக்கி விழுந்தது தான் மிச்சம்...
கிடைக்கவில்லை காதல்...//

பிடித்த வரிகள் நண்பா....

ஆமா கடைசியா என்ன சொல்றீங்க....

Trackback by புலவன் புலிகேசி November 9, 2009 at 4:21 PM said...

சுற்றி சுற்றி தேடியிருக்கிறீர்கள்...நன்று....

Trackback by யாழினி November 9, 2009 at 6:08 PM said...

கவிதை மாதிரி கவிதையில்லை, புதுக்கவிதை புரிஞ்சுபோச்சு! ஹி...ஹி... வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!

Trackback by ஹேமா November 9, 2009 at 6:56 PM said...

வசந்து...
பூத்த காதல்
மொட்டாய் உங்களோடு.
உங்கள் ப்ரியத்தை
புகுந்தா பார்த்திருப்பாள்.
அவளறியாக் காதலது.
எப்படி
அண்டை தேசக்காரி மேல்
அத்தனை பழியும் !

Trackback by Unknown November 9, 2009 at 9:04 PM said...

இப்ப தான் புரியுது ஒரு மாதிரி கும்ஸா...

எல்லாம் சரியாகிடம் ஒரு கால்கட்டு போட்டா.

ம்ம்ம்ம்...எல்லாம்...பிரமை...

:)

Trackback by Unknown November 9, 2009 at 9:06 PM said...

ஏன் லட்டரு திரும்பிடுச்சுன்னா... அவ ப்ரன்சு.. நீங்க தூய தமிழ்ல்ல லெட்டரு போட்டா...

அதான் வசந்த் திரும்பிடுச்சு...

Trackback by துபாய் ராஜா November 9, 2009 at 10:36 PM said...

வசீகரிக்கும் வார்த்தை விளையாட்டு நல்லாருக்கு வசந்த்....

Trackback by Prasanna November 9, 2009 at 11:42 PM said...

காதல் தோல்வி போல, காதலே கிடைக்காத தோல்வியோட வலி நல்லா இருக்கு :))

Trackback by வினோத் கெளதம் November 9, 2009 at 11:46 PM said...

எந்த ஊர்ல இருந்துக்கிட்டு இப்ப எதை எதிர்ப்பர்கிற ரஸ்க்கல்ஸ்ஸ்..:))

Trackback by T.V.ராதாகிருஷ்ணன் November 10, 2009 at 4:48 AM said...

//இப்ப தான் புரியுது ஒரு மாதிரி கும்ஸா...

எல்லாம் சரியாகிடம் ஒரு கால்கட்டு போட்டா.//

Repeateyy

Trackback by ஸ்ரீராம். November 10, 2009 at 4:57 AM said...

இல் தா கா சை ஆ?

Trackback by கவிநயா November 10, 2009 at 5:29 AM said...

அச்சோ, பா...வம் தான் :()

Trackback by அன்புடன் மலிக்கா November 10, 2009 at 7:12 AM said...

/S.A. நவாஸுதீன் said...
வாங்குறதுதான் வாங்குறீங்க. ஒரு கிலோவா வாங்குங்க வசந்த். 4 எடத்துல யூஸ் பண்ணிக்கலாம்/

நவாஸ்ண்ணா ஐடியாவா கொடுக்கிறீங்க,,,

வசந்த் புதுகவிதையா ம்ம்ம் நடக்கட்டும்
எங்கிட்டும் நல்லயிருந்தா கண்ணுக்கு அழகு...

Anonymous — November 10, 2009 at 2:44 PM said...

காதலர்களை பார்க்கமுடியும் ஆனால் காதலை பார்க்க முடியாது!

Anonymous — November 10, 2009 at 4:02 PM said...

தெரியாது தெரியாது என்று தெளிவா எழுதி விட்டீங்க ஒரு காதல் கவிதை..ஒட்டாத காதலால் வாராத கவிதை வந்தது போல...

Trackback by Kala November 10, 2009 at 4:33 PM said...

\\அப்பொழுதுதான் புரிந்தது
காதல் கடித்ததின் மூலமாக....\\\\

இப்பவாவது புரிந்ததா?தானாய் கனியும்
கனியை தட்டிக் கனிய வைக்கலாமோ!

காதல்__கடையிலும்,தெருவிலும் கூறி,கூவி
விற்கவும் முடியாது!வாங்கவும் முடியாது.

இதயம் மலரைப் போன்று மென்மையானது
தெரியாமல்,புரியாமல்,அறியாமல் பழகாமல்
இஷ்ரப்படி காதலிக்குமா?
இதழிதழாய்...பிய்த்தால்......என்ன வரும்??
பிரியம்......வருமா?இல்ல..வசந்தம்தான்
வீசுமா? பிரிய வரும்.
உங்கள் கவியின் நாயகனுக்கு...
பிரியமில்லை.....பைத்தியம்
அதுதான் அப்படி அலைய...
விட்டதா?? வசந்!!!

Trackback by அன்புடன் அருணா November 10, 2009 at 6:01 PM said...

:( :)

Trackback by வெண்ணிற இரவுகள்....! November 10, 2009 at 6:36 PM said...

விழுந்தாலும் மண் ஒட்டல ...............................வசந்த் ,,,,,,,,,,,,,,,,,
ரசித்தேன் ........காதல் ஒட்டவில்லை வாழ்கை ஒட்டவில்லை ,மீசையில் மண் ஒட்டவில்லை

Trackback by பா.ராஜாராம் November 10, 2009 at 7:34 PM said...

ஹா..ஹா..

//அப்பொழுதுதான் புரிந்தது

காதல் கடிதத்தின் மூலமாக ...//

தம்பியாய்யா நீர்!டைம் ஆயிருச்சு வீட்டுக்கு பேச வேண்டியதுதான்!

Trackback by சத்ரியன் November 11, 2009 at 5:07 AM said...

/அப்பொழுதுதான் புரிந்தது

காதல் கடிதத்தின் மூலமாக ...//

வசந்த்,

இப்பவாவது புரிஞ்சதேன்னு சந்தோசப்படு (மறுபடியும் பிரியப்படாதே.புரியுதா?)

நல்லாருக்கே கவிதை...!

Trackback by தமிழ் அமுதன் November 11, 2009 at 11:03 AM said...

;;)

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 11, 2009 at 12:53 PM said...

//seemangani said...
மண் ஒட்டாத மீசை...அருமையா இருக்கே....
நன்றி வசந்த் ..நல்லவேளை தகவல் குடுத்தீங்க... இல்லனா நாங்களும் ...வீனா தேடி இருப்போம்.....//

அப்படியெல்லாம் சொல்லக்கூடாது தேடுங்க கிடைக்கும்...நன்றி சீமான்..

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 11, 2009 at 12:54 PM said...

//ஓஹோ... அவங்க லெட்டர் போட்டுட்டாங்களா? நடக்கட்டும் வசந்த்.//

லெட்டர்னா என்னன்னு கேக்குற காலமிது சுசி நன்றிப்பா...

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 11, 2009 at 12:56 PM said...

//சந்ரு said...
இப்போ வசந்த் எங்கேயோ போய்க்கொண்டிருக்கிற மாதிரித் தெரியுது//

ஆமா சந்ரு வெறுமை தேடிய பயணம் நன்றி சந்ரு

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 11, 2009 at 12:57 PM said...

//சின்ன அம்மிணி said...
கடைசி வரைக்கும் யாரும் உங்களை காதலிக்கவேயில்லையா :)//

ம்ஹ்ஹும்..

காதலிக்கவுமில்லை

காதலிக்கப்படவுமில்லை

காதலிக்க போவதுமில்லை...

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 11, 2009 at 12:58 PM said...

//ராமலக்ஷ்மி said...
கிடைக்கவே கிடைக்காத பொருள் என்ன விலையாய் இருந்தால்தான் என்ன:)?
ம்ம், பாவம்தான் நீங்கள்!//

ம்ம்..பாவம்தான் மேடம்

நன்றி ராமலக்ஷ்மி மேடம்..

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 11, 2009 at 1:03 PM said...

//KISHORE said...
நல்லா இருக்கு.. ஆனா கடைசில என்ன சொல்ல வரிங்கன்னு தெரியல..//

அடப்பாவி புரியலியே அதத்தான சொன்னேன்..

நன்றி கிஷோர்...

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 11, 2009 at 1:04 PM said...

//உங்கள் தோழி கிருத்திகா said...
தப்பு பண்ரிங்க வசந்த்...
காலேஜில தேடியே கெடைக்காத நமக்கு வேற எந்த இடத்தில் கிடைக்கும்....விடுங்க இந்த ஜென்மத்துல இவ்வளவுதான் :)//

ரொம்ப கரெக்ட்டா சொன்னீங்க கிருத்திகா இந்த ஜென்மத்துல காதலுக்கும் எனக்கும் ஒட்டு உறவே இல்லைதான்..

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 11, 2009 at 1:09 PM said...

//ஹர்ஷினி அம்மா said...
காதல்.....காதல்
கவிதை..கவிதை//

நன்றி ஹர்ஷினி அம்மா

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 11, 2009 at 1:09 PM said...

//
ஜெட்லி said...
வஸந்த் காதல் முத்தி போச்சா??
ஒரே கவிதை மழையா கொட்டுது//

ஆமா சரவணன் முத்தி கெட்டுப்போச்சு

நன்றிப்பா

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 11, 2009 at 1:10 PM said...

// வானம்பாடிகள் said...
எதையும் ஒழுங்கா பண்ணாத. கவிதையும் பாதியில தொங்கல்ல உடுவியா.=)). நல்லாருக்கு வசந்த்.//

அதனாலத்தானே பலரும் மானக்கேடா திட்டுறாங்க நன்றி சார்...

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 11, 2009 at 1:11 PM said...

// டம்பி மேவீ said...
ithe madiri kb serial pattu onnu irukku boss....antha pattu madiriye inthuvum superaa irukku//

நன்றி மேவீ முதல் வருகைக்கு

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 11, 2009 at 1:11 PM said...

// யோ வாய்ஸ் (யோகா) said...
me the first, nice one vasanth//

நன்றி யோகா

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 11, 2009 at 1:12 PM said...

//பூங்குன்றன் வேதநாயகம் said...
மிக விரும்பி படிக்கும் சில பதிவுகளில் உங்களின் பதிவும் முக்கியமானது.
ரொம்ப அழகா எழுதுறீங்க வசந்த்..

இந்த கால காதல் எல்லாம் நீங்க
சொல்றா மாதிரித்தான் இருக்கு..இப்ப எல்லாம் நிறைய பேர் காதல் என்கிற பேர்ல தப்புல்ல பண்றாங்க. உங்க கவிதை நல்லா இருக்கு.
poongundran2010.blogspot.com
//

மிக்க மகிழ்ச்சி நண்பரே

நன்றியும்

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 11, 2009 at 1:14 PM said...

//S.A. நவாஸுதீன் said...
வாங்குறதுதான் வாங்குறீங்க. ஒரு கிலோவா வாங்குங்க வசந்த். 4 எடத்துல யூஸ் பண்ணிக்கலாம்//

ஒண்ணே சமாளிக்க முடியாது இதுல நாலா அவ்வ்வ்வ்வ


நன்றி நவாஸ்

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 11, 2009 at 1:14 PM said...

//கலையரசன் said...
புரோஃபைல் பிக்ச்சர் சூப்பர் மாமே!//

நன்றி மாமு...

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 11, 2009 at 1:15 PM said...

// பின்னோக்கி said...
ithu sumaarnga vasanth//

ம்ம்..தெரிஞ்சது எனக்கும்..

மிக்க நன்றி பின்னோக்கி தொடர் வருகைக்கும் ஊக்கத்துக்கும்...

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 11, 2009 at 1:16 PM said...

//Anbu said...
:-))))//

நன்றி அன்பு

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 11, 2009 at 1:16 PM said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...
:))//

நன்றி அ.அ.

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 11, 2009 at 1:17 PM said...

/Starjan ( ஸ்டார்ஜன் ) said...
நல்லாருக்கா காதல் ...//

ம்ஹ்ஹும்..

நன்றி சேக்..

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 11, 2009 at 1:18 PM said...

//பித்தனின் வாக்கு said...
மக்கா எங்க சுத்தறது ஒரு விவஸ்தை வேணாம். லாண்ட் மார்க், பிஸா ஹுட்டுக்கு போனா காதல் வரும். இல்லை கொஞ்சம் எத்திராஜ், ஸ்டெல்லா மாரிஸ் பக்கம் போகாம ஊரை சுத்துனா எப்படி வரும்?

இம்ம் நல்லா இருக்கு உரைனடைக் கவிதை. இன்னும் பலமா, ஆழமா குத்துங்க பாஸ். நன்றி.//

போதும்பா இதுக்கே நிறைய வாங்கிகட்டிக்கிட்டேன்...
நன்றி பித்தனின் வாக்கு சுதாகர்

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 11, 2009 at 1:19 PM said...

// ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...
இப்படியும் ஒர்க் அவுட் ஆவுது பாருங்கய்யா, நல்லா இருங்க வசந்த்!!
//

இல்லியே சஃபி..

//வரிகளின் முடிவை வைத்து அடுத்த வரியை தொடங்கியது ரசிக்க வைத்தது வசந்த்!!//

நன்றி சஃபி தங்கள் தொடர் வருகைக்கும் ஊக்கத்திற்க்கும்..

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 11, 2009 at 1:21 PM said...

//க.பாலாசி said...
//சுற்றி சுற்றி கிறு கிறுத்து..
கிறுக்கனிடமும் கேட்க..
கிறுக்கிப்பார் என்று கிறுக்கினான்..
கிறுக்கி கிறுக்கி பார்த்தும்
சறுக்கி விழுந்தது தான் மிச்சம்...
கிடைக்கவில்லை காதல்...//

பிடித்த வரிகள் நண்பா....

ஆமா கடைசியா என்ன சொல்றீங்க....//

புரியலையோ அப்போ எனக்கு சொல்லத்தெரியலைன்னு நினைக்கிறேன்..

நன்றி பாலாஜி

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 11, 2009 at 1:23 PM said...

//புலவன் புலிகேசி said...
சுற்றி சுற்றி தேடியிருக்கிறீர்கள்...நன்று....//

நன்றி புலிகேசியாரே..

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 11, 2009 at 1:23 PM said...

//யாழினி said...
கவிதை மாதிரி கவிதையில்லை, புதுக்கவிதை புரிஞ்சுபோச்சு! ஹி...ஹி... வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!//

நன்றி யாழினி..நன்றி..

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 11, 2009 at 1:25 PM said...

//ஹேமா said...
வசந்து...
பூத்த காதல்
மொட்டாய் உங்களோடு.
உங்கள் ப்ரியத்தை
புகுந்தா பார்த்திருப்பாள்.
அவளறியாக் காதலது.
எப்படி
அண்டை தேசக்காரி மேல்
அத்தனை பழியும் !//

அதானே..சரியா சொன்னீங்க..
நன்றி ஹேமா தொடர் வருகைக்கும் ஊக்கத்திற்க்கும்...

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 11, 2009 at 1:26 PM said...

// D.R.Ashok said...
ஏன் லட்டரு திரும்பிடுச்சுன்னா... அவ ப்ரன்சு.. நீங்க தூய தமிழ்ல்ல லெட்டரு போட்டா...

அதான் வசந்த் திரும்பிடுச்சு...//

அடப்பாவிகளா ஏன் ஃப்ரன்சுல தமிழ்க்காரி இருக்க கூடாதா என்ன?

நன்றி அசோக்கு...

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 11, 2009 at 1:27 PM said...

//துபாய் ராஜா said...
வசீகரிக்கும் வார்த்தை விளையாட்டு நல்லாருக்கு வசந்த்....//

நன்றி ராஜா

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 11, 2009 at 1:27 PM said...

//பிரசன்ன குமார் said...
காதல் தோல்வி போல, காதலே கிடைக்காத தோல்வியோட வலி நல்லா இருக்கு :))//

சரியா புரிஞ்சுட்டீங்க பிரசன்னா நன்றிப்பா

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 11, 2009 at 1:29 PM said...

//வினோத்கெளதம் said...
எந்த ஊர்ல இருந்துக்கிட்டு இப்ப எதை எதிர்ப்பர்கிற ரஸ்க்கல்ஸ்ஸ்..:))
//

எந்த ஊர்ல இருந்துன்னா பாக்குது காதல்..

நன்றி கெளதம்

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 11, 2009 at 1:30 PM said...

//T.V.Radhakrishnan said...
//இப்ப தான் புரியுது ஒரு மாதிரி கும்ஸா...

எல்லாம் சரியாகிடம் ஒரு கால்கட்டு போட்டா.//
//

ம்ம்..போடப்போறாங்க..

நன்றி சார்

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 11, 2009 at 1:31 PM said...

//ஸ்ரீராம். said...
இல் தா கா சை ஆ?
//

ஹேய்.. இது தலைவர் ஸ்டைல் ஆச்சே நான் எப்பிடி இதை மறந்தேன்..

நன்றி ஸ்ரீராம்

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 11, 2009 at 1:32 PM said...

//கவிநயா said...
அச்சோ, பா...வம் தான் :()
//

உங்களுக்கு தெரியுது..ம்ம்..அவங்களுக்கு தெரியலியே...

நன்றி கவிநயா...

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 11, 2009 at 1:33 PM said...

//அன்புடன் மலிக்கா said...
/S.A. நவாஸுதீன் said...
வாங்குறதுதான் வாங்குறீங்க. ஒரு கிலோவா வாங்குங்க வசந்த். 4 எடத்துல யூஸ் பண்ணிக்கலாம்/

நவாஸ்ண்ணா ஐடியாவா கொடுக்கிறீங்க,,,

வசந்த் புதுகவிதையா ம்ம்ம் நடக்கட்டும்
எங்கிட்டும் நல்லயிருந்தா கண்ணுக்கு அழகு...
//

ம்ம் மறக்காம சீர் செய்ய வந்துடுங்க..

நன்றி மலிக்கா..

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 11, 2009 at 1:34 PM said...

//Thirumathi JayaSeelan said...
காதலர்களை பார்க்கமுடியும் ஆனால் காதலை பார்க்க முடியாது!//

ம்ம் கரெக்ட்டு காத்து மாதிரி..

நன்றிங்க மேடம்..

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 11, 2009 at 1:36 PM said...

//தமிழரசி said...
தெரியாது தெரியாது என்று தெளிவா எழுதி விட்டீங்க ஒரு காதல் கவிதை..ஒட்டாத காதலால் வாராத கவிதை வந்தது போல...
//

வாங்க வாங்க எங்க போயிருந்தீங்க ஊருக்கா? நன்றி மேடம்...

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 11, 2009 at 1:38 PM said...

//Kala said...
\\அப்பொழுதுதான் புரிந்தது
காதல் கடித்ததின் மூலமாக....\\\\

இப்பவாவது புரிந்ததா?தானாய் கனியும்
கனியை தட்டிக் கனிய வைக்கலாமோ!

காதல்__கடையிலும்,தெருவிலும் கூறி,கூவி
விற்கவும் முடியாது!வாங்கவும் முடியாது.

இதயம் மலரைப் போன்று மென்மையானது
தெரியாமல்,புரியாமல்,அறியாமல் பழகாமல்
இஷ்ரப்படி காதலிக்குமா?
இதழிதழாய்...பிய்த்தால்......என்ன வரும்??
பிரியம்......வருமா?இல்ல..வசந்தம்தான்
வீசுமா? பிரிய வரும்.
உங்கள் கவியின் நாயகனுக்கு...
பிரியமில்லை.....பைத்தியம்
அதுதான் அப்படி அலைய...
விட்டதா?? வசந்!!!//

கண்டிப்பா காதல் தானா வரணும்ன்னு புரிஞ்சுட்டேன்..

பைத்தியம்தான் அரைப்பைத்தியம்..

முட்டாள்ன்னு கூட சொல்றாங்க..

நன்றி கலா தொடர்ந்து வாங்க..

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 11, 2009 at 1:39 PM said...

//அன்புடன் அருணா said...
:( :)//

நன்றி பிரின்ஸ்

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 11, 2009 at 1:39 PM said...

//வெண்ணிற இரவுகள்....! said...
விழுந்தாலும் மண் ஒட்டல ...............................வசந்த் ,,,,,,,,,,,,,,,,,
ரசித்தேன் ........காதல் ஒட்டவில்லை வாழ்கை ஒட்டவில்லை ,மீசையில் மண் ஒட்டவில்லை//

நன்றி வெண்ணிற இரவுகள்

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 11, 2009 at 1:40 PM said...

// பா.ராஜாராம் said...
ஹா..ஹா..

//அப்பொழுதுதான் புரிந்தது

காதல் கடிதத்தின் மூலமாக ...//

தம்பியாய்யா நீர்!டைம் ஆயிருச்சு வீட்டுக்கு பேச வேண்டியதுதான்!//

ம்ம் பேசி முடிங்க சீக்கிரம்..

நன்றி பா.ரா.

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 11, 2009 at 1:41 PM said...

//நல்லாருக்கே கவிதை...!//

நன்றி சத்ரியன்

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 11, 2009 at 1:41 PM said...

//ஜீவன் said...
;;)//

நன்றி ஜீவன்..

Trackback by முனைவர் இரா.குணசீலன் November 11, 2009 at 2:34 PM said...

அட!

கவிதையும் நன்றாகவுள்ளதே..