விசேஷம்....

| November 1, 2009 | |


அட போன வருஷம் நம்ம கூட நிலசொத்துக்காக சண்டை போட்ட சித்தப்பா மகன் செல்வம் வந்துருக்கான்..வாடா வாடா..

பார்டா நம்ம கிட்ட காசு வாங்கிகிட்டு டிமிக்கி குடுத்துட்டு இருந்த அய்யாசாமியும் வந்துருக்கார்..வாங்க வாங்க..

ஆகா..வரதட்சணையில் கொஞ்சம் குறை வச்சுட்டேன்னு ஒருவருசமா வீட்டுப்பக்கம் கூட வராம இருந்த சம்பந்தியும் வந்துருக்கார்..வாங்க சம்பந்தி...

சொத்து பிரிச்சு கொடுத்ததில் குறைச்சலா குடுத்துட்டேன்னு போடா வாடான்னு பேசிட்டு போன மூத்தவன் பாண்டியும் வந்துருக்கான்..வாடா செல்லம்...

மொய் ஒரு ஆயிரம் ரூவா குறைச்சலா செஞ்சுட்டேன்னு ஊர் முழுக்க பேசி மானத்தை வாங்கின தங்கச்சி சொர்ணமும் வந்துருக்கா.. வா சொர்ணம்...

மளிகை கடை பாக்கி காசு கொடுக்கலைன்னு அவமானப்படுத்துன கணேசன் செட்டியாரும் வந்துருக்கார்..வாங்கண்ணே...

சுவத்துல ஆணி அடிச்சதுக்காக வீட்டை காலி பண்ணிட்டு போன்னு சொல்லி விரட்டுன பழைய வாடகை வீட்டின் சொந்தக்காரர் சீனியும் வந்துருக்கார்.... வாங்க சீனி..

அவசர காலத்துக்கு ஒரு பத்தாயிரம் கொடுத்து உதவலைன்னு ஆறுமாசமா பேசாம இருந்த நண்பன் விஜயனும் வந்துருக்கான்..வாடா விஜயா...

தன்னோட மகனுக்கு எம்பொண்ணை கொடுக்கலைன்றதுக்காக வீடேறி சண்டை போட்டுட்டு இனிமேல் உன் வீட்டு வாசப்படி கூட மிதிக்க மாட்டேன்னு சொல்லிட்டு போன மச்சான் ஆறுமுகமும் வந்துருக்கார்..வாங்க மச்சான்...

தெருக்குழாயில ஒரு குடம் தண்ணீர் ஜாஸ்தியா பிடிச்சதுக்காக மூஞ்சி தூக்கிவச்சுட்டு திரிஞ்ச எதிர் வீட்டு மாமி கோகிலாவும் வந்துருக்கா..வாங்க மாமி..

முதலாளிகிட்ட சொல்லி தன்னோட மகனுக்கு வேலை வாங்கித்தரமாட்டேன்னுட்டியெ நீயெல்லாம் ஒரு பெரிய மனுஷனான்னு திட்டிட்டு போன குப்புசாமியும் வந்துருக்கான்... வாடா குப்பு சாமி...

இப்படி இருக்கும் போது சண்டைபோட்ட சொந்தபந்தமெல்லாம் என்னோட இறப்புக்கு வந்ததில எல்லாருக்கும் நன்றின்னு சொல்லி பறந்து சென்றது சொற்ப நேரத்துக்கு முன்னாடி மாரடைப்பில் காலமான மாணிக்கத்தின் ஆவி தன்னோட மனைவியின் குங்குமத்தையும் பூவையும் சந்தோசத்தையும் எடுத்துக்கொண்டு...


Post Comment

39 comments:

Trackback by vasu balaji November 1, 2009 at 11:53 PM said...

படுபாவி. அருமையா எழுதியிருக்க. சூப்பர்ப்.

Trackback by ஹேமா November 2, 2009 at 12:18 AM said...

வசந்து....கல்யாண வீட்டிலஒண்ணு சேராட்டிலும் செத்த வீட்ல ஒண்ணும் சேரணும்ன்னு சொல்லுவாங்களே.
அதுவா இது !எப்பிடி இயல்பு வாழ்வுக்குள்ளேயே விசேஷங்கள் சேகரிக்கிறீங்க வசந்த் !

Trackback by இராகவன் நைஜிரியா November 2, 2009 at 12:27 AM said...

Super...

Trackback by இராகவன் நைஜிரியா November 2, 2009 at 12:29 AM said...

அருமையான இடுகை... ஒரே வார்த்தையில் பின்னூட்டம் போடணும் அப்படின்னு நினைச்சேன்...

அதான் அப்படி போட்டேன்..

திரும்பவும் சொல்லுகின்றேன்..

Super...

Trackback by பழமைபேசி November 2, 2009 at 12:35 AM said...

யெப்பா சாமி, என்னை வாங்கன்னு மட்டும் சொல்லிப்புடாதீங்க....

Trackback by T.V.ராதாகிருஷ்ணன் November 2, 2009 at 12:43 AM said...

அருமையான இடுகை

Trackback by சகாதேவன் November 2, 2009 at 2:00 AM said...

ஹாலோவீன் பற்றி நேற்றுதான் எனக்கு தெரியும். ஒபாமா கூட மிஷேலுடன் சேர்ந்து வெள்ளை மாளிகையில் குழந்தைகளுக்கு கேன்டி கொடுத்து கொண்டாடியிருக்கிறார்.

சகாதேவன்

Trackback by சுசி November 2, 2009 at 2:56 AM said...

ஹாப்பி ஹாலோவீன் டே வசந்த்... நேத்து வந்திருந்தா உங்களுக்கும் கான்டீஸ் குடுத்திருப்பேன்...

அருமையா எழுதி இருக்கீங்க.

Trackback by சீமான்கனி November 2, 2009 at 4:09 AM said...

அருமை...வசந்த்
அருமையா சொல்லி இருக்கீங்க...
வித்யாசமா இருக்கு வாழ்த்துகள்...

Trackback by பிரபாகர் November 2, 2009 at 4:35 AM said...

நல்லா சொல்லியிருக்கீங்க.... பாஸ், மூணாவது பாராவிலேயே எழவுக்குன்னு கண்டுபிடிச்சிட்டேன்...

பிரபாகர்.

Trackback by Thenammai Lakshmanan November 2, 2009 at 5:00 AM said...

பிரியமுடன் ...வசந்த்

எனக்குத் தெரியப்படுத்தியமைக்கு நன்றி
முன்பே எழுதி உள்ளது பார்த்தேன்
நன்றக உள்ளது
வாழ்த்துக்கள்

Trackback by Thenammai Lakshmanan November 2, 2009 at 5:00 AM said...

manikkathin aavi yaa

nalla irukku vasanth

Trackback by velji November 2, 2009 at 5:17 AM said...

வாழும் போது எல்லா தரப்பிலும் பிரச்சனை இருக்கிறது என்பதையும் சொல்லியிருக்கிறீர்கள்.
நல்ல பதிவு.

Trackback by Unknown November 2, 2009 at 5:26 AM said...

எளிமையா அழகா சொல்லிருக்கீங்க வசந்த்!

Trackback by ஆ.ஞானசேகரன் November 2, 2009 at 7:29 AM said...

எளிமையா, அழகா... அருமையா இருக்கு நண்பா...

Trackback by சுந்தரா November 2, 2009 at 7:46 AM said...

மரணம் எல்லாவற்றையும் மறக்கடித்துவிடுகிறது...இதை,ரொம்ப அழகா, வித்தியாசமா சொல்லியிருக்கீங்க.

வாழ்த்துக்கள்!

Trackback by சங்கர் November 2, 2009 at 8:16 AM said...

நல்லா இருக்கு

Trackback by கலையரசன் November 2, 2009 at 8:24 AM said...

அருமையா இருக்குடா மச்சி..

Trackback by தீப்பெட்டி November 2, 2009 at 8:36 AM said...

நல்லாயிருக்கு வசந்த்

Trackback by ராமலக்ஷ்மி November 2, 2009 at 10:00 AM said...

இருக்கும் போது இனிமை காட்டியிருக்கலாமோ.. என இதில் மறைந்து கிடக்கும் ஒரு சேதி அற்புதமாய் தோன்றுகிறது எனக்கு. வாழ்த்துக்கள் வசந்த்.

Trackback by அன்புடன் மலிக்கா November 2, 2009 at 10:07 AM said...

ரொம்ப நல்ல இருக்கு வசந்த். தொடர்ந்து தொடருங்கள்..

Trackback by ஈரோடு கதிர் November 2, 2009 at 10:15 AM said...

அருமையான இடுகை வசந்த்...

வாழும்போது வரமாட்டாய்ங்க.... செத்துப்போன பின்புதான்....

Trackback by Deepan Mahendran November 2, 2009 at 11:16 AM said...

வசந்த் மச்சான், முடிவ எதிர் பார்க்கல... எப்படி உங்களால மட்டும் இப்படி வித்தியாச வித்தியாசமா யோசிக்க முடியுது...???

Trackback by S.A. நவாஸுதீன் November 2, 2009 at 12:23 PM said...

அருமை வசந்த்.

Trackback by கலகலப்ரியா November 2, 2009 at 12:50 PM said...

ithu top...! superb..!

Trackback by VISA November 2, 2009 at 12:54 PM said...

pinnal.....pinreenga poanga.

Trackback by தமிழ் November 2, 2009 at 1:38 PM said...

அருமை நண்பரே

Trackback by பின்னோக்கி November 2, 2009 at 2:06 PM said...

நல்ல கருத்துங்க.

ஆனா 3 வது வரி படிக்கும் போதே யூகிக்கமுடிஞ்சது.

கதையின் நோக்கம் அது இல்லைங்கறதால நல்லாயிருந்துச்சு

Trackback by ஜெட்லி... November 2, 2009 at 2:42 PM said...

கதை சூப்பர் வஸந்த்....

Trackback by ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) November 2, 2009 at 5:25 PM said...

manasa thottuta machi

Trackback by Menaga Sathia November 2, 2009 at 6:04 PM said...

அருமை வசந்த்.

Trackback by RAMYA November 2, 2009 at 9:28 PM said...

ஆஹா! நிறைய பேரை அறிமுகப் படுத்த நம்ம அருமை நண்பர்
வசந்த் வந்திருக்காக.

நிறைய பேரை வித்தியாசமா அறிமுகப் படுத்தியிருக்காக!

இடுகை அருமை நல்லா இருக்கு :-)

Trackback by வெண்ணிற இரவுகள்....! November 2, 2009 at 10:21 PM said...

மனதை உருக்கி விட்டீர்கள் வசந்த் ....முடிவு அற்புதம் ....அனைவருக்கும் முடிவு ஒரு நாள் நிச்சயம் உண்டு .....பதிவிலே நகைச்சுவையுடன் கூடிய வலி இருந்தது

Trackback by Starjan (ஸ்டார்ஜன்) November 2, 2009 at 11:01 PM said...

super vasanth

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 3, 2009 at 3:18 AM said...

நன்றி பாலா சார்

நன்றி ஹேமா

நன்றி ராகவன் சார்

நன்றி பழமை பேசி ஐயா

நன்றி டிவிஆர்

நன்றி சகாதேவன்

நன்றி சுசி(அப்பிடின்னா)

நன்றி சீமாங்கனி

நன்றி பிரபாண்ணா

நன்றி தேனம்மை

நன்றி வேல்ஜி

நன்றி தாமரை மேடம்

நன்றி சுந்தரா

நன்றி ஞானசேகரன்

நன்றி சங்கர்

நன்றி கலையரசன்

நன்றி தீப்பெட்டி

நன்றி ராமலக்ஷ்மி மேடம்

நன்றி மலிக்கா

நன்றி கதிரண்ணே

நன்றி சிவன்

நன்றி நவாஸ்

நன்றி பிரியாக்கா

நன்றி விசா

நன்றி திகழ்

நன்றி பின்னோக்கி

நன்றி ஜெட்லி

நன்றி ரமேஷ்

நன்றி மேனகா மேடம்

நன்றி ரம்யாக்கா

நன்றி வெண்ணிற இரவுகள்

நன்றி ஸ்டார்ஜன்

Trackback by முனைவர் இரா.குணசீலன் November 3, 2009 at 8:34 AM said...

எதிர்பாராத முடிவு..
நன்றாகவுள்ளது வசந்த்..

Trackback by jgmlanka November 4, 2009 at 11:28 AM said...

வாவ்... கலக்கிட்டீங்க வசந்..
முடிவு வலிக்குது.. யதார்த்தம் இனிக்குது

Trackback by Prasanna November 4, 2009 at 11:01 PM said...

செத்த பெறகு கூட பய புல்ல நல்ல விஷயமா யோசிக்கிதா பாரு.. அதான் மனுஷ பய புத்தி போல.. நல்ல கதை :))

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 7, 2009 at 12:30 AM said...

நன்றி குணா

நன்றி பூங்கோதை

நன்றி பிரசன்னகுமார்