எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ்...

| October 7, 2009 | |


சைக்கிள் , மோட்டார் சைக்கிள் , கார் இன்னும் நிறைய பொருள்கள் வாங்கும்போது எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ் வாங்கி அந்த பொருளெல்லாம் அழகுபடுத்துறோம் அது பலவிதத்துல யூஸ்ஃபுல்லா இருக்கு...

அதுமாதிரி மனிதனுக்கும் சில எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ் தேவைப்படுது..

என்ன என்னன்னு பார்ப்போமா?

பொதுவா சிலர் அதிகமான ஒலியோட பேசுவாங்க சிலர் குறைவான ஒலியோட பேசுவாங்க அப்படி சிலர் அதிகமான சவுண்டோட பேசும்போது என்னடா இவன் ஜாஸ்தி சவுண்டா பேசுறானேன்னு சிலர் நினைப்பாங்க, அப்பறம் சிலர் ரொம்ப சவுண்ட் கம்மியா என்னை மாதிரி பேசுவாய்ங்க அது அவன் காதுக்கு கூட காக்காத அளவுக்கு அது மாதிரி பேசுறதால சரியான நேரத்துல நாம பேசுறது அடுத்தவங்களை ரீச் ஆகாது, அதனால என்ன சொல்ல வர்றேன்னா நம்ம குரல் வளைக்கிட்ட ஸ்பீக்கர் சவுண்ட் கண்ட்ரோல் பண்ற வால்யூம் கண்ட்ரொல்லர் மாதிரி ஒரு எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் கிடைச்சா எவ்ளோ நல்லாயிருக்கும். சிரிக்காதீங்கப்பா சீரியசாத்தான் சொல்றேன்..
அப்பறம் தூரப்பார்வை , கிட்டப்பார்வை உடையவங்களுக்கு சரியான அளவு மூக்குகண்ணாடி கிடைக்காம அவஸ்தைப்படுறத பாத்துருப்பீங்க அவங்களுக்கு எல்லாம் நம்ம கேமராவுல ஜூம் வியூ டியூனர் மாதிரி ஒரு டியூனர் இருந்தா தேவையான போது சின்ன எழுத்துக்களை பெரிசாக்கி படிச்சுக்கிடலாம் பெரிய எழுத்த சின்னதாக்கி படிச்சுக்கிடலாம், நல்லாருக்கும்ல...அப்பறமா தலைக்கு குளிச்சுட்டு இல்லைனா குளிச்சுட்டு நம்ம உடம்புல இருக்குற தண்ணிய வெளியேத்துறதுக்கு துணியெல்லாம் கொடியில போட்டு வெயில்ல காய வைக்கிற மாதிரி நம்மளையும் கொடியில காய வைக்கிறதுக்கு ஒரு ஹூக் வேணும் அதாங்க ஹேங்கர் மாதிரி ஒரு ஹூக் நம்ம தலையோட இருக்கணும்......(அவ்வ்வ்வ்வ்...)
அப்பறம் எதுனா தேடும் போது நம்ம கை சில நேரம் எட்டுறது இல்லை உதாரணத்துக்கு பரண் மேல இருக்கும் பொருளை எடுக்கணும்னா ஸ்டூல் போட்டு ஏறி எடுக்க வேண்டியிருக்கு அதை தவிர்க்க ஒரு ஸ்பிரிங் நம்ம முழங்கையில பொருத்துனா எவ்ளோ நல்லாயிருக்கும்..வேற தப்பானதுக்கு பயன் படுத்தணும்னு நினைக்கப்படாது...முதுகு வளையாதவங்களுக்கு மிகவும் வசதியா இருக்கும்....இன்னும் நிறைய தேவைப்படுது மக்கள் இப்போவே அடிக்க வர்றாய்ங்களே நான் எஸ்கேப்பு.... முதல்ல இதெல்லாம் சாத்யமான்னு மருத்துவத்துறைய சேர்ந்தவங்க சொல்லுங்கப்பா... நன்றிகள் வாசித்த அனைவருக்கும்.....

Post Comment

56 comments:

Trackback by SUREஷ்(பழனியிலிருந்து) October 7, 2009 at 8:31 PM said...

உங்கள் சேவை நாட்டுக்குத் தேவை

Trackback by SUREஷ்(பழனியிலிருந்து) October 7, 2009 at 8:32 PM said...

லியாணர்டோ டாவின்ஸி மாதிரியே பெரிய பெரிய சிந்தனைகள்

Trackback by Jerry Eshananda October 7, 2009 at 8:33 PM said...

கையில ரிமோட்டும் கிடைச்சிட்டா பயபுள்ளைக "ஒருத்தனையும் பேசவிடாம ஆப் பண்ணி புடுவோம்ள."

Trackback by தமிழ் அமுதன் October 7, 2009 at 9:04 PM said...

எக்ஸ்ட்ரா பிட்டிங் ...? எனக்கு என்னென்னமோ ....தோனுது ..!!;;)))

Trackback by வால்பையன் October 7, 2009 at 9:16 PM said...

இப்படியெல்லாம் யோசிக்கிறதுக்கு எக்ஸ்ட்ரா பிட்டிங்க்ஸ் மூளை எதாவது வச்சிருக்கிங்களா தல!

Trackback by அ. முஹம்மது நிஜாமுத்தீன் October 7, 2009 at 9:46 PM said...

ஐடியாக்கள் + படங்கள்
= கலக்கல்!

Trackback by Starjan (ஸ்டார்ஜன்) October 7, 2009 at 10:23 PM said...

நமக்கு தேவையானது தான் ...

Trackback by Starjan (ஸ்டார்ஜன்) October 7, 2009 at 10:24 PM said...

நான் 7 வ்தும் 8 வதும் கமெண்ட்

Trackback by Malini's Signature October 7, 2009 at 10:56 PM said...

எதாவது மாயஜால படம் பாத்தீங்களா?

Trackback by இராகவன் நைஜிரியா October 7, 2009 at 11:00 PM said...

ஆண்டவா... தாங்கமுடியலடா சாமி.... காப்பாத்துடா சாமி...

Trackback by கலகலப்ரியா October 7, 2009 at 11:14 PM said...

chance-eh illa vasanthu.. unnoda brain-a museumlathaan vaikkanum.. avvvv..

Trackback by सुREஷ் कुMAர் October 7, 2009 at 11:26 PM said...
This comment has been removed by the author.
Trackback by सुREஷ் कुMAர் October 7, 2009 at 11:27 PM said...

ஜெட்டிக்ஸ்ல அங்கிள் கேட்ஜெட் பாத்துட்டு வாங்க.. இந்தமாதிரி விசயங்களுக்கு ஒரு நல்ல ஐடியா கெடைக்கும்..

Trackback by வினோத் கெளதம் October 7, 2009 at 11:28 PM said...

யோவ் எங்க இருந்து உனக்கு ஆண்டவன் மூளைய படைச்சான்..:))

Trackback by ஹேமா October 7, 2009 at 11:50 PM said...

வசந்து.... சிரிக்காதீங்கப்பா சீரியசாத்தான் சொல்றேன்...ன்னு சொல்ல முன்னமே
நான் சிரிச்சிட்டேன்.என்னமா கற்பனை.அப்பா....இதுக்கே ஒரு ஆஸ்காருக்கு பரிந்துரை செய்யலாம்.

Trackback by velji October 8, 2009 at 2:22 AM said...

இப்படி எக்குத்தப்பா யோசிக்காம இருக்க ஒரு கன்ட்ரோல் இருந்தா நல்லது!

Anonymous — October 8, 2009 at 2:57 AM said...

//velji said...

இப்படி எக்குத்தப்பா யோசிக்காம இருக்க ஒரு கன்ட்ரோல் இருந்தா நல்லது//

ஹிஹி, இடுகையும் அதற்கு பின்னூட்டங்களும் :)

Trackback by பிரபாகர் October 8, 2009 at 4:10 AM said...

யோசனைகளை அருமை வசந்த். ஓட்டுக்களும் போட்டாச்சு. காய வெக்க ஹூக் கொஞ்சம் ஓவர்....(மத்ததெல்லாம் கஅம்மியன்னு கேக்காதீங்க, சொல்லிபுட்டேன் ஆமாம்).

பிரபாகர்.

Trackback by ஸ்ரீராம். October 8, 2009 at 4:46 AM said...

எனக்கு அந்தப் பிரச்னை நிறையவே உண்டு. என் நண்பன் ஒருத்தன் பேசறது அவனுக்கே சரியா கேட்குமாங்கறது சந்தேகம்தான்... "என்னடா இப்படி சொல்லிட்டே?" என்று எப்போதாவது நாம் கேட்டால் கூட, "சாரிடா, நான் பேசினது எனக்கு சரியாக் கேக்காததால அப்படிப் பேசிட்டேன்" என்று சொல்வானோ என்று எண்ணியதுண்டு... இன்னும் இரண்டு மூன்று பேர் பேசினால் பத்தடி பின்னால் சென்று நின்றுதான் கேட்க வேண்டும்! அல்லது உங்கள் யோசனைப் படி இதற்கும் காதிற்குப் பின்னால் ஒரு Controller வைக்க வேண்டியதுதான்.

Trackback by kishore October 8, 2009 at 4:51 AM said...

எப்பா முடியலடா சாமி..

Trackback by ஜெட்லி... October 8, 2009 at 5:22 AM said...

//இப்படியெல்லாம் யோசிக்கிறதுக்கு எக்ஸ்ட்ரா பிட்டிங்க்ஸ் மூளை எதாவது வச்சிருக்கிங்களா தல!

//

ரீப்பிட்டே...:)

Trackback by VISA October 8, 2009 at 6:16 AM said...

பிளாகுல ஓட்டு போடுற இடத்துக்கு பக்கத்துல குத்து போடுற இடமுன்னு ஒண்ணு வைக்கணும். நாங்க இங்க ஒரு குத்து கிளிக் பண்ணினா உங்களுக்கு லேப்டாப் ஒரு குத்துவிடணும். இந்த மாதிரி எல்லாம் யோசிச்சா இப்படி தான் குத்துவோம்......
ஹீ ஹீ ஹீ.

Trackback by கலையரசன் October 8, 2009 at 7:35 AM said...

டேய்! ரொம்ப யூஸ் பண்ணாதடா... அப்புறம் பார்த்திபன் மாதிரி ஆகிட போற!

Trackback by யோ வொய்ஸ் (யோகா) October 8, 2009 at 8:09 AM said...

தலைக்கு மேல் கொக்கி இருந்தால் யோசிச்சி பார்த்தேன் சிரிப்பு தாங்க முடியல..

Trackback by vasu balaji October 8, 2009 at 9:00 AM said...

வயிறு வலிக்காம சிரிக்க ஏதாவது எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க்ஸ் இருக்கா வசந்த்?

Anonymous — October 8, 2009 at 9:17 AM said...

இதுக்கு முடிவேயில்லையா??

Trackback by பித்தனின் வாக்கு October 8, 2009 at 9:37 AM said...

ஆகா ஒரு வளரும் விஞ்னானி வந்துட்டாருப்பா சாப்பிட பேர் அடிக்குது அதுக்கும் ஒரு செட் அப் கண்டுபுடிங்க எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ் கண்டுபுடிச்ச உங்களுக்கு செட் அப் செல்லப்பா விருது கொடுத்தால் என்ன?

Trackback by கபிலன் October 8, 2009 at 9:37 AM said...

எப்படி எல்லாம் திங்க் பண்றாங்கய்யா...
நல்லாத் தான்யா இருக்கும் இந்த எக்ஸ்ட்ரா பிட்டிங்க்ஸ் எல்லாம் இருந்தால்......

Trackback by S.A. நவாஸுதீன் October 8, 2009 at 9:51 AM said...

ஹா ஹா ஹா. யப்பா, ராசா, தங்கம், எங்கேர்ந்துய்யா உங்களுக்கு இந்த மாதிரி யோசனையெல்லாம் வருது. ஆஃபிஸ்ல சிரிச்சா எல்லாரும் ஒரு மாதிரியா பாக்குராங்கய்யா. இதுக்காகவாவது வால்யூம் கண்ட்ரோல் கண்டிப்பா வேணும்யா.

Trackback by அமிர்தவர்ஷினி அம்மா October 8, 2009 at 11:15 AM said...

பொழுதன்னிக்கும் யோசிப்பீங்களோ :))))))))

Trackback by பழமைபேசி October 8, 2009 at 2:35 PM said...

அஃகஃகா!

Trackback by கண்மணி/kanmani October 8, 2009 at 2:53 PM said...

:))

Trackback by விஜய் October 8, 2009 at 2:55 PM said...

மனம் விட்டு சிரித்தேன் வசந்த்.

Trackback by எஸ்.ஏ.சரவணக்குமார் October 8, 2009 at 4:11 PM said...

Roompodu yosichchinglalo? Super

Trackback by Unknown October 8, 2009 at 4:32 PM said...

எதிர்காலத்துல இதெல்லாம் நடக்க வாய்ப்பிருக்கு. சொந்த சரக்கா இருந்தா பதிவு பண்ணி வச்சுக்கோங்க.

Trackback by யாழினி October 8, 2009 at 4:48 PM said...

வசந்த் உங்களின் சிந்தனை நல்லா இருந்தது. சிரிப்பை வரவழைத்தது பதிவு! :))

Trackback by உங்கள் தோழி கிருத்திகா October 8, 2009 at 4:54 PM said...

kali muthipochu

Trackback by சுசி October 8, 2009 at 4:58 PM said...

//சிலர் ரொம்ப சவுண்ட் கம்மியா என்னை மாதிரி பேசுவாய்ங்க//

எலே யாருலே அது பொய் பேசுறது... எடுலே அந்த எக்ஸ்ரா பிட்டிங்க.. அவன் வாய் மேலேயே பிக்ஸ் பண்ணிடுலே...

Trackback by சுசி October 8, 2009 at 4:59 PM said...

எனக்கு ஒரு zoom tuner அனுப்புங்க வசந்த்....

அந்த ஹேங்கர் செம...

கலக்கல் வசந்த்..... சிரிக்க வச்சத்துக்கு நன்றி.

Trackback by Unknown October 8, 2009 at 6:28 PM said...

ஜூமரு மேட்டரு நெம்ப பிடிச்சுருக்குப்பா

Trackback by Unknown October 8, 2009 at 7:40 PM said...

இன்னைக்கு உங்களால ஒரு கீபோர்டு நஷ்டம்,காபி குடுச்சுகிட்டே உங்க பதிவு படிச்சா காபி கொட்டிபோச்சு(சிரிக்கும்போது).. ரொம்ப நாள் அப்புறம் பதிவு எழுதலாம்னு நினைச்சேன்,இப்படி தனியா பொலம்ப வச்சிட்டீங்க வசந்த்!! கிளீன் பண்றது பெரிய வேலையால இருக்கு!!உங்க ஐடியா எல்லாம் நல்லா இருக்கு, இப்போ இத கிளீன் பண்ண ஏதாவது ஒரு வசதி இருக்குமா?!

Trackback by பாலா October 8, 2009 at 8:09 PM said...

உனக்கு மூளை மூக்கு கிட்ட இருக்குயா இப்படி வழியுது

Trackback by பாலா October 8, 2009 at 8:10 PM said...

உனக்கு மூளை மூக்கு கிட்ட இருக்குயா இப்படி வழியுது

Anonymous — October 9, 2009 at 7:18 AM said...

வழக்கம் போலவே.........

Trackback by ஆர்வா October 9, 2009 at 9:05 AM said...

அசத்தல் கண்டுபிடிப்புகள். இப்படி எல்லாம் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும். சூப்பர் வசந்த்.

Trackback by கார்த்திகைப் பாண்டியன் October 9, 2009 at 1:06 PM said...

நல்ல யோசனைகள் நண்பா :-))))))))

Trackback by Menaga Sathia October 9, 2009 at 2:53 PM said...

உங்கள் சிந்தனை நல்லாயிருக்கு.எப்படி வசந்த் உங்களால் இப்படிலாம் யோசிக்கமுடியுது.இப்பலாம் உங்க எழுத்துல முன்னேற்றம் இருக்கு.கீப் இட் அப்!!

Anonymous — October 9, 2009 at 3:20 PM said...

எடிசன் இப்ப இருந்திருந்தா உங்கள வச்சே பல கண்டுபிடிப்புகள் நடத்தியிருப்பார். வளர்க உங்கள் சிந்தனை.

Trackback by சந்தான சங்கர் October 10, 2009 at 8:11 AM said...

பயபுள்ள எப்டியெல்லாம் யோசிக்கிது

பெரிய்ய ஆளா வருவாம்ப்பா....

Trackback by முனைவர் இரா.குணசீலன் October 10, 2009 at 8:25 AM said...

ஆமா
வசந்த்..
இப்படி பல உறுப்புகள் தேவை தான்
அறிவியல் போகும் போக்கில் இவையெல்லாம் நடந்தாலும் வியப்பதற்கி்ல்லை.

Trackback by சிங்கக்குட்டி October 10, 2009 at 12:46 PM said...

எப்படி வசந்த் எப்படி?

இன்னுமா உங்கள ஹாலிவூட் அள்ளிகிட்டு போகல?

Trackback by SUFFIX October 10, 2009 at 11:36 PM said...

எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ராவா சிரிக்க வச்சுட்டிங்க வசந்த்!! நண்பர்களோட பதிகல படிக்க எக்ஸ்ட்ரா நேரம் இருந்தா நல்லா இருக்கும்!!

Trackback by சந்தான சங்கர் October 11, 2009 at 9:24 AM said...

தேவதையின்
வரமிட்டிருக்கின்றேன்
உங்கள்
கரமிட்டுச்செல்லுங்கள்..

Trackback by அன்புடன் மலிக்கா October 11, 2009 at 3:05 PM said...

ஏன் ஏன் ஏன்
எங்கிருந்து வருது இப்படியெல்லாம் யோசிக்க,
இப்ப புரிஞ்சிபோச்சி எக்ஸ்ட்ரா மண்டைக்குள் எதுவோ வச்சிறிக்கீங்கதானே

Trackback by ஆப்பு October 11, 2009 at 5:17 PM said...

ஐ எம் பேக்!! (*****ஆப்பு*****)
http://evandapirabalam.blogspot.com/2009/10/blog-post.html

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 11, 2009 at 11:29 PM said...

பின்னூட்டம் அளித்து ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..

மிகுதியான பணிச்சுமையால் தனித்தனியாக நன்றி சொல்ல இயலவில்லை மன்னிக்கவும்.....