பாடி சாஸ்திரம்

| October 3, 2009 | |
தங்கள் உடம்பு பாகங்களை அதன் பலனுக்கு ஏற்றவாறு மாற்றி வைக்க அணுகவும் பாடி சாஸ்திர நிபுணர் கிகிகிகி கிறுக்கானந்தர்

அப்படின்ற போர்ட பாத்துட்டு என்னடா இது வித்யாசமா இருக்கு வீட்டுக்குத்தான் சாஸ்திரம் சொல்வாங்கன்னு கேள்விப்பட்டுருக்கோம் இதென்னடா புதுசா உடம்புக்கு சாஸ்திரம் சொல்றோம்ன்னு போட்ருக்கே உள்ள என்ன நடக்குதுன்னு பார்ப்போமுன்னு போயி பாத்தா..

ஒரு 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ? (அதான் ராகுல் சொல்லிட்டாருல்ல) கிறுக்கானந்தாகிட்ட “சாமீ வர வர மண்டைவலி அதிகமாயிட்டே இருக்குன்னு இதை வரவிடாம பண்ண என்ன வழின்னு கேட்டார்” அதுக்கு கிறுக்கானந்தா சொல்றார் “உங்க தலை சரியான அளவுல இல்ல அதனால வீட்டு சாஸ்திரத்துல பெங்சுயி விநாயகர் படம் வைக்கிற மாதிரி தலையில எப்பவும் ஒற்றை பூசணி பூவச்சுருந்தா எல்லாம் சரியாப்போயிடும்” அப்பிடின்னு சொன்னதும் என்னால சிரிப்ப அடக்க முடியலை .(உண்மையிலே இந்த ரெண்டு நாளா ஒரு புண்ணியவதியால ஒரு நிமிஷம் கூட விடாம சிரிச்சுட்டே இருக்கேனுங்க எங்கிருந்தாலும் வாழ்க அந்த தேவதை)

அதுக்கப்பறமா ஒரு 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி கிறுக்கானந்தாகிட்ட வந்து “என்னோட மண்டையில நிறைய பேன் தொல்லையிருக்கு எத்தனையோ சாம்பூ போட்டுட்டேன் பேன் தொல்லை குறைஞ்ச பாடில்லை இந்த பேன் தொல்லை குறைய ஒரு வழி சொல்லுங்கன்னார்” கவனமா கேட்டுட்டு இருந்த கிறுக்கானந்தா சொல்றார் “ உங்க தலை முடி பாடி சாஸ்திர விதிப்படி சரியான நீளத்துல இல்லை அதனால அதை ஒரு 5 இஞ்ச் வெட்டி பாருங்க எல்லாம் சரியாப்போயிடும்னாரு”பாருங்க நான் இதுவரைக்கும் அது மாதிரி சிரிச்சதேயில்லை...

அப்பறம் வந்த 45 வயது மதிக்க தகுந்த ஒரு மனிதர் கிறுக்கானந்தாகிட்ட கேக்குறார் “சாமி எவ்ளோதான் சம்பளம் வாங்குனாலும் கையில காசு தங்க மாட்டேன்னுது ரொம்ப கஷ்டமா இருக்கு அதை மாத்துறதுக்கு வழியிருக்கான்னு?” கேட்டார்,அதுக்கு பதில் சொன்ன கிறுக்கானந்தா “ உங்க கை இப்போ இருக்குற இடம் உங்க ராசிப்படி சரியான இடத்துல இல்லை அதனால் அந்த கைய ஒரு ஒரு அடி கீழ இறக்கி ஆப்ரேசன் பண்ணுனீங்கன்னா எல்லாம் சரியாப்போயிடும்ன்னார்” குபுக்குன்னு சிரிச்சுட்டேன்...

நான் சுவாரஸ்யமா அடுத்து வர்றவர் யாருன்னு பாத்துட்டு இருக்கும் போது ஒரு மூதாட்டி “வர வர காது சரியாவே கேக்க மாட்டேன்னுது இதுக்கு உங்க பாடி சாஸ்திர விதிப்படி எதுனா பலனிருந்தா சொல்லுங்க சாமீன்னு சொல்லிச்சு” இதை கேட்டதும் கிறுக்கானந்தா சொல்றார் “உங்க காதுல போட்ருக்க தண்டட்டியோட எடைய சரியா 250 கிராமுக்க்கு போடுங்க எல்லாம் சரியாப்போயிடும்ன்னார்” :) இதையெல்லாம் எங்க போயி சொல்ல..?

அடுத்து வந்தவரு ஒரு ஒல்லிப்பிச்சான் இவரு “சாமீ எவ்ளோ சாப்பிட்டாலும் உடம்பு குண்டாகவே மாட்டேன்னுது இதுக்கு எதுனா பரிகாரம் இருக்கான்னார்” கிறுக்கானந்தா சிரிச்சுட்டே “நீங்க உங்க வயித்துல இருக்குற குடல் பாடி சாஸ்திர விதிப்படி சரியான மூலையில இல்லை அதனால அந்த குடலை அக்னி மூலைன்னு வீட்டு சாஸ்திரத்துல சொல்ற மாதிரி பசி மூலைன்னு இங்க சொல்வோம் அங்க ஆபரேசன் பண்ணி மாத்தி வச்சுடுங்க எல்லாம் சரியாப்போயிடும்ன்னார்”

எனக்கு கிறுக்கு பிடிச்சுடும் போல இருந்துச்சு (இனிமேல்தான் கிறுக்கு பிடிக்கணுமா அதான் ஏற்கனவே பிடிச்சாச்சேன்னு யாரோ ஒருத்தர் என்னைய கேக்குற மாதிரி இருக்கு) நான் அந்த இடத்த விட்டு ஓடி வந்துட்டேன்...
Post Comment

42 comments:

Trackback by பீர் | Peer October 3, 2009 at 11:53 PM said...

எப்டி இப்டில்லாம்... இது உங்களால மட்டும் தான் முடியும், வசந்த். சாரி.. பிரியமுடன் வசந்த்.

Trackback by Starjan (ஸ்டார்ஜன்) October 3, 2009 at 11:58 PM said...

I am second

Trackback by பழமைபேசி October 4, 2009 at 12:23 AM said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
I am second
//

it's obvious I'm not second, and not even a minute

Trackback by பழமைபேசி October 4, 2009 at 12:23 AM said...

:-0)

Trackback by இராகவன் நைஜிரியா October 4, 2009 at 12:34 AM said...

இஃகி... இப்படி என்னையும் விடாம சிரிக்கப் பண்ணிட்டீங்களே.. இது நியாமமா..

விடமா சிரிச்சுகிட்டு இருப்பதறகு பாடி சாஸ்திரப் படி என்ன காரணம் என்பதை விசாரிச்சுப் போடுங்க..

Trackback by கலகலப்ரியா October 4, 2009 at 12:53 AM said...

superb...appu.. !

hmm.. idaila vantha devadai matrum yaarovai naan padikkalaipaa..!

Trackback by சுசி October 4, 2009 at 2:30 AM said...

இப்போதான் புரியுது வசந்த் எப்டி நீங்க இவ்ளோ அசத்தலா எழுதுறீங்கன்னு :))))

அந்த புண்ணியவதி யாருன்னு நான் கேக்கலை...

ஆனா கிறுக்கு இனிமேதான் பிடிக்கணுமான்னு ஒருவேளை கேட்டேனோ???

Trackback by ஹேமா October 4, 2009 at 2:42 AM said...

வசந்த்,தூங்கப்போற நேரத்தில மனசுக்கு கலகலப்பா இருக்கு.
மனசு விட்டுச் சிரிச்சேன்.நன்றி.

Trackback by velji October 4, 2009 at 3:05 AM said...

comical way of exposing the established frauds!
nice work!

Trackback by Suresh October 4, 2009 at 3:22 AM said...

/*இனிமேல்தான் கிறுக்கு பிடிக்கணுமா அதான் ஏற்கனவே பிடிச்சாச்சேன்னு யாரோ ஒருத்தர் என்னைய கேக்குற மாதிரி இருக்கு*/

மிக அருமை..

Trackback by ஸ்ரீராம். October 4, 2009 at 4:53 AM said...

தப்புப் பண்ணிட்டீங்க...இதைப் போடப் போறோம்னு தெரியும்...சிரிச்சா வயிறு வலிச்சு பல்லு சுளுக்கிகிட்டா என்ன செய்யணும்னும் கேட்டு முதல் விஷயமா எழுதி இருக்கணும் நீங்க...

Trackback by kishore October 4, 2009 at 5:16 AM said...

பாடி.!!!!!!!!!!? உடல்.. உடம்பு அப்படின்னு.. எவ்ளோ அழகா சொல்லலாம்...

நல்லா இருக்கு வசந்த்..

Trackback by Vidhoosh October 4, 2009 at 6:15 AM said...

///நீங்க உங்க வயித்துல இருக்குற குடல் பாடி சாஸ்திர விதிப்படி சரியான மூலையில இல்லை அதனால அந்த குடலை அக்னி மூலைன்னு வீட்டு சாஸ்திரத்துல சொல்ற மாதிரி பசி மூலைன்னு இங்க சொல்வோம் அங்க ஆபரேசன் பண்ணி மாத்தி வச்சுடுங்க எல்லாம் சரியாப்போயிடும்ன்னார்///

haa. haa. superb. This is medically called as Bariatric surgery. :))

vidhya

Trackback by SUREஷ்(பழனியிலிருந்து) October 4, 2009 at 6:47 AM said...

//“உங்க தலை சரியான அளவுல இல்ல அதனால வீட்டு சாஸ்திரத்துல பெங்சுயி விநாயகர் படம் வைக்கிற மாதிரி தலையில எப்பவும் ஒற்றை பூசணி பூவச்சுருந்தா எல்லாம் சரியாப்போயிடும்” //


துளசி செடி அல்லது துளசிப் பூங்கா???

Trackback by SUREஷ்(பழனியிலிருந்து) October 4, 2009 at 6:48 AM said...

// உங்க தலை முடி பாடி சாஸ்திர விதிப்படி சரியான நீளத்துல இல்லை அதனால அதை ஒரு 5 இஞ்ச் வெட்டி பாருங்க எல்லாம் சரியாப்போயிடும்னாரு”//

1 இன்ஞ் மட்டும் விட்டு வெட்டினால் கண்டிப்பாக சரியாகிவிடும்

Trackback by SUREஷ்(பழனியிலிருந்து) October 4, 2009 at 6:49 AM said...

//“உங்க காதுல போட்ருக்க தண்டட்டியோட எடைய சரியா 250 கிராமுக்க்கு போடுங்க எல்லாம் சரியாப்போயிடும்ன்னார்” //

சரிதானே தல..,

Trackback by கலையரசன் October 4, 2009 at 7:26 AM said...

இனிமேதான் புடிக்கனுமா மச்சி?

Trackback by ராமலக்ஷ்மி October 4, 2009 at 7:39 AM said...

விவேக்கின் காமெடி ட்ராக் போல் கலகல:))!

Trackback by ஈரோடு கதிர் October 4, 2009 at 8:16 AM said...

கிறுக்கானந்தாவ படிச்சு கிறுக்கு புடிச்சமாதிரி இருக்கு

செம கலக்கல் வசந்த்

//பழமைபேசி said...
it's obvious I'm not second, and not even a minute//

may be hour... (iஃkiஃki)

Trackback by பாலா October 4, 2009 at 8:17 AM said...

மாப்ள ரூம் போட்டு யோச்சியோ??

Trackback by VISA October 4, 2009 at 8:30 AM said...

// உங்க தலை முடி பாடி சாஸ்திர விதிப்படி சரியான நீளத்துல இல்லை அதனால அதை ஒரு 5 இஞ்ச் வெட்டி பாருங்க எல்லாம் சரியாப்போயிடும்னாரு//

இஞ்ச் முடியோட நுனி பகுதியிலயா வேர் பகுதியிலயான்னு சொல்லவேயில்லயே பாஸ். பதிவு அருமை. எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க?

Trackback by vasu balaji October 4, 2009 at 9:39 AM said...

அந்த நிபுணர் தப்பா சொல்லிட்டாருன்னு மாத்தி மாத்தி ஒரு வழி பண்ணிடுவானுங்க.ஐடியா குடுக்கிறீங்களா?

Trackback by S.A. நவாஸுதீன் October 4, 2009 at 9:39 AM said...
This comment has been removed by the author.
Trackback by S.A. நவாஸுதீன் October 4, 2009 at 9:39 AM said...

கலகலப்புக்கு மட்டும் இல்லாம அதுல ஒரு நல்ல கருத்தும் வைப்பது உங்களுக்கு கைவந்த கலை வசந்த், வழக்கம்போலவே

Trackback by Suresh Kumar October 4, 2009 at 10:01 AM said...

தங்கள் உடம்பு பாகங்களை அதன் பலனுக்கு ஏற்றவாறு மாற்றி வைக்க அணுகவும் பாடி சாஸ்திர நிபுணர் கிகிகிகி கிறுக்கானந்தர் ////////


ஆகா இப்படி வேற சாஸ்திரம் இருக்கா ?

Trackback by Rekha raghavan October 4, 2009 at 10:30 AM said...

புதுசா ஒரு தொழிலுக்கு வழி காட்டிட்டீங்களா. போச்சு! எத்தனை பேர் இந்நேரம் போர்டு எழுத கிளம்பிட்டாங்களோ? எல்லாம் எங்களோட போதாத நேரம் சாமி.

ரேகா ராகவன்.

Trackback by தீப்பெட்டி October 4, 2009 at 10:47 AM said...

:)))

Trackback by தீப்பெட்டி October 4, 2009 at 10:48 AM said...

:)))

Anonymous — October 4, 2009 at 11:02 AM said...

ஹேய் வசந்த் உனக்கும் கிறுக்கானந்த சுவாமி ஏதோ வாஸ்து மாத்தி வச்சார் போல அதான் இப்படி புதுசு புதுசா யோசிக்கிற,,,,,,சாமியார் முகவரி தாயேன் ப்ளீஸ்...

Trackback by துபாய் ராஜா October 4, 2009 at 11:24 AM said...

:))

Trackback by அக்னி பார்வை October 4, 2009 at 12:04 PM said...

///தங்கள் உடம்பு பாகங்களை அதன் பலனுக்கு ஏற்றவாறு மாற்றி வைக்க அணுகவும் பாடி சாஸ்திர நிபுணர் கிகிகிகி கிறுக்கானந்தர்//

ituvee suppar.. oru sooru patham

Trackback by அ. முஹம்மது நிஜாமுத்தீன் October 4, 2009 at 1:35 PM said...

இதை எழுதியவர்
'வசந்த் சிரிப்பானந்தா'தானே?

Trackback by Beski October 4, 2009 at 2:24 PM said...

ஹி ஹி ஹி ஹி...
கடைசி மேட்டர் நமக்கு.

Trackback by Unknown October 4, 2009 at 3:13 PM said...

:)

Trackback by அப்துல்மாலிக் October 4, 2009 at 5:07 PM said...

good to laugh

Trackback by லோகு October 4, 2009 at 5:40 PM said...

அந்த நிபுணர் எப்போ திருப்பூர் விஜயம்... எந்த லாட்ஜ் ன்னு சொல்லுங்க போய் பார்க்கணும்..

Trackback by அன்புடன் அருணா October 4, 2009 at 6:27 PM said...

கலக்கல்ஸ்!!!!

Trackback by ரவி October 4, 2009 at 6:53 PM said...

டெம்ப்ளேட் கலக்கல்...!!!

Trackback by அன்புடன் மலிக்கா October 5, 2009 at 9:07 AM said...

முடியலங்கப்பா சிரிப்புதாங்க முடியல

Trackback by யோ வொய்ஸ் (யோகா) October 5, 2009 at 9:19 AM said...

:)))

Trackback by SUFFIX October 5, 2009 at 6:07 PM said...

புது டெம்ப்ளேட் வாஸ்த்து பார்த்து மாத்தியதா?

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 5, 2009 at 11:04 PM said...

நன்றி பீர் தல

நன்றி ஸ்டார்ஜன்

நன்றி பழமை பேசி ஐயா (ஆங்கில விளக்கமுமா?)

நன்றி ராகவன் சார் :)))

நன்றி ப்ரியாக்கா :)))

நன்றி சுசி :)))

நன்றி ஹேமா

நன்றி வேல்ஜி

நன்றி சுரேஷ்பாபு

நன்றி ஸ்ரீராம்

நன்றி கிஷோர்

நன்றி வித்யா

நன்றி தல :)))

நன்றி கலையரசன் :(((

நன்றி ராமலஷ்மி மேடம்

நன்றி கதிர்

நன்றி பாலா

நன்றி விசா

நன்றி பாலா சார்

நன்றி நவாஸ்

நன்றி சுரேஷ்குமார்

நன்றி ராகவன்

நன்றி தீப்பெட்டி

நன்றி தமிழரசி (வவ்வவவ்வே)

நன்றி துபாய்ராஜா

நன்றி அக்னி

நன்றி நிஜாமுதீன் :))))

நன்றி எவனோ ஒருவன்

நன்றி அஷோக்

நன்றி அபு

நன்றி லோகு

நன்றி அருணா

நன்றி ரவி

நன்றி மலிக்கா

நன்றி யோகா

நன்றி சஃபி